Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. திருத்தக்கத்தேவர் எந்த அரச குலம் மற்றும் சமயத்தைச் சார்ந்தவர்?
Q2. பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எவை?



1. தாய்மையன்பிறனை = தாய்மையன் + பிறனை



2. நாடகம் = நாடு+கம்



3. தேம்பாவணி = தேன்+பா+அணி



4. தாய்மையன்பு = தாய்மை + அன்பு
Q3. பின்வரும் கூற்றுக்களில் தவறானவை எவை?


1. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார்.


2. காந்தியடிகளால் த்த்தெடுக்கப்பட்ட மகள் அஞ்சலையம்மாள்.


3. தென்னாட்டின் ஜான்சிராணி - அம்புஜத்தம்மாள்.


4. நான் கண்ட பாரதம் - அம்புஜத்தம்மாள்.
Q4. அசலாம்பிகை அம்மையார் குறித்த கூற்றுக்களில் தவறானவை எவை?

1. அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஔவையார் என்று திரு.வி.க. பாராட்டியுள்ளார்.

2. நானூற்று ஒன்பது பாடல்களைக் கொண்ட இராமலிங்க சாமிகள் சரிதம் எனும் செய்யுள் நூலை இயற்றியவர்.

3. காந்திபுராணம் ஈராயிரத்து முந்நூற்று நான்கு பாடல்களைக் கொண்டது.

4. திண்டிவனத்திற்கு அருகில் உள்ல இரட்டணையில் பிறந்தவர்.
Q5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் மூன்றாம் வேற்றுமைத் தொகையோடு பொருந்துவது எது?
1. பால் பருகினான்
2. தலை வணங்கினான்.
3. ஊர் நீங்கினான்.
4. கை தொழுதான்.
Q6. தொகை நிலைத் தொடர்களுடன் தொடர்புடையவை எவை?
1. தொகைய் நிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
2. இரு சொற்களுக்கிடையே வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றின் உருபுகள் மறைந்து வருவது தொகை நிலைத் தொடர்.
3. பவளவாய் பேசினான், மதிமுகம், குகைப்புலி ஆகிய சொற்கள் தொகை நிலைத்தொடர் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
Q7. வீரமாமுனிவர் எழுதாத நூலைத் தேர்க.
1. திருக்காவலூர் கலம்பகம்.
2. இலக்கண விளக்கம்.
3. ஞானோபதேசம்.

4. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி.
Q8. பொருத்துக.
A) நூலிரண்டு 1. வினைத்தொகை
B) செய்தொழில் 2. அன்மொழித்தொகை
C) கயல்விழி வந்தாள் 3. உம்மைத்தொகை
D) மதிமுகம் 4. உவமைத்தொகை
Q9. கொடை, பகை, நட்பு, தகவு ஆகிய பொருள்களில் வரும் வேற்றுமை எது?
Q10. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியானதைத் தேர்வு செய்க.
பட்டியல் 1 பட்டியல் 2
A) நாடக உலகின் இமயமலை 1. பாவாணர்
B) தமிழ் நாடகத் தந்தை 2. சங்கரதாஸ் சுவாமிகள்
C) தமிழ்ப்பெருங்காவலர் 3. பம்மல் சம்பந்தனார்
D) தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை 4. மறைமலையடிகள்
Q11. திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே - என்ற கூற்றிற்கு உரியவர் யார்?
Q12. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2
A) கதிரவா வா! 1. வினையெச்சத் தொடர்
B) கண்டேன் சீதையை 2. வினைமுற்றுத்தொடர்
C) விழுந்த மரம் 3. பெயரெச்சத்தொடர்
D) வந்து போனான் 4. விளித்தொடர்
Q13. வழுவுச் சொற்களை நீக்கி எழுதுக.
Q14. பின்வருவனவற்றுள் சரியானது எது/எவை?
1. பரிதிமாற் கலைஞர் செய்யுள் வடிவில் இயற்றிய நூல் நாடகத்தமிழ்.
2. நாட்டியம், நாடகம் இரண்டிற்கும் பொதுவான சொல் நடனம்.
3. டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவ நாதர்.
4. மதுரையில் 1942ஆம் ஆண்டில் புலமைக் கடலான தமிழ் மூதாட்டி ஔவையார் நாடகம் அரங்கேறியது.
Q15. பின்வருவனவற்றை கவனி :
கூற்று (A) : அடுக்குத்தொடர்க்கு எடுத்துக்காட்டு - பளபள,கலகல, குளுகுளு.
காரணம் (R) : விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள் காரணமாக வருவது
அடுக்குத்தொடர் எனப்படும்.
Q16. பின்வருவனவற்றை கவனி :

கூற்று (A) : முற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு பெறு, தபு, திரு, உருமு, முள்ளு, கதவு. காரணம் (R) : தனிக்குறிலை அடுத்து வரும் வல்லின உகரம், சொல்லின் இறுதியில் மெல்லின, இடையின, மெய்யின் மேல் உகரம் எறி வருவது முற்றியலுகரமாகும்.
Q17. பின்வருவனவற்றுள் சரியானது எது?
1. புதியதோர் உலகம் செய்வோம் - பாரதியார்.
2. கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி - என்று கூறியவர் பாரதிதாசன்.
3. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்.
4. மேவிய ஆறு பலவோட த் திருமேனி செழித்த தமிழ் நாடு - பாரதிதாசன்.
Q18. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே சலவரைச் சாரா விடுதல் இனிதே - இதில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு பொருந்துவது...
Q19. சின்னச்சீறா இந்நூலை எழுதியவர் யார்?
Q20. பொருளுக்கேற்ற வினைமரபுகளில் சரியானவற்றுள் தவறானதைத் தேர்க.
1. சோற்றை உண்டு பழத்தை சாப்பிட்டான்.
2. இராமன் பாலைக் குடித்துவிட்டு தயிரை பிசைந்தான்.
3. பாரதியார் கவிதை இயற்றினார்.
4. மாலா நீர் குடித்துவிட்டு கோலம் இட்டாள்.
Q21. ஊண் மிக விரும்பு; தையலைப் போற்று - இக்கூற்று யாருடையது?
Q22. பொருத்துக :
A) முயல், மான், புலி 1. பறை
B) புலி, கரடி, சிங்கம் 2. பூ
C) அகில், வேங்கை 3. மரம்
D) முல்லை, தோன்றி 4. முல்லைத்திணை
E) நெல்லரி கிணை 5. குறிஞ்சித்திணை
Q23. முதலிலார்க்கு ஊதியமில்லை; மதலை யாம் சார்பிலார்க் கில்லை நிலை - இதில் உள்ள அணியைச் சுட்டுக.
Q24. அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் - இவ்வரிகள் எதில் இடம் பெறுகிறது?
Q25. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q26. சைவ சித்தாந்தம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்
Q27. தைரியநாதசுவாமி என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q28. பக்தி இயக்க காலம் என அழைக்கப்படுவது எது?
1. சேரர் காலம்
2. சோழர் காலம்
3. பல்லவர் காலம்
4. பாண்டியர் காலம்
Q29. கூற்றுகளை ஆய்க:
1. வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர் - கணியன் பூங்குன்றனார்.
2. பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தைப் பாடியவர் - கபிலர்.
3. ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் - சேரல் இரும்பொறை.
4. உம்பற்காட்டு வாரியை பரிசாக பெற்றவர் - கபிலர்.
Q30. எரிமருள் வேங்கை யிருந்த தோகை இழையணி மடந்தையிற் றோன்று நாட! என்ற கூற்றிற்கு உரியவர் யார்?
Q31. நலங்கிள்ளிக்கும் ஆமூர்மல்லனுக்கும் இடையில் நடந்த போரை விவரிக்கும் நூல் எது?
Q32. படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் யாவை?
Q33. நான்முகனார் -- இச்சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q34. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி:

கூற்று 1 : மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட ஐங்குறு நூறு ஐ ந் நூறு பாடல்களைக் கொண்ட்து.

கூற்று 2 : ஐங்குறு நூற்றை தொகுப்பித்தவர் இரும்பொறை.
Q35. ஆண்பாற் கூற்றும் பெண்பாற் கூற்றும் இடம்பெறும் திணைகள்
Q36. கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் -எனக்கூறும் நூல் எது?
Q37. காமராசர் தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட நூலகம் எது?
Q38. தமிழ் நாட்டின் ஜேன் ஆஸ்டின் என புகழ் பெற்றவர்?
Q39. தற்கால அகத்தியர் எனப் புகழப்படுபவர் யார்?
Q40. கீழ்க்கண்ட எந்த நூல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருதை பெற்றது?
Q41. உயிர் நெடில், உயிர் மெய் நெடில் -- ஒலிக்கும் மாத்திரையில் அளவு என்ன?
Q42. கீழ்க்கண்டவற்றில் எது சுந்தர ராமசாமி எழுதிய புதினம்?
1. ஒரு புளிய மரத்தின் கதை
2. ஜே.ஜே. சில குறிப்புகள்
3. குழந்தைகள், பெண்கள், ஆண்கள்
4. மலரும் சருகும்
Q43. இளங்கோவைப் பற்றி மக்கள் அறிய ஆரம்பித்துவிட்டால் கம்பனுக்கும் கம்பராமாயணத்துக்கும் அவ்வளவு மதிப்பு இராது என கூறிய அறிஞர்?
Q44. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை ..............
Q45. கீழ்க்கண்டவற்றில் வள்ளலார் பதிப்பித்த நூல்கள் :
1. சின்மய தீபிகை
2. ஒழிவிலொடுக்கம்
3. தொண்ட மண்டல சதகம்
Q46. திவ்ய கவி இச்சிறப்புப் பட்டத்துக்குரியவர் யார்?
Q47. சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை முதன் முதலில் எந்த நூலில் பரிதிமாற்கலைஞர் என பெயர்மாற்றம் செய்தார்?
Q48. யாப்பு என்பதன் பொருள் என்ன?
Q49. சுகுண விலாச சபை - என்ற நாடக சபையை உருவாக்கியவர் யார்?
Q50. தமிழன் என்றோர் இனமுண்டு -- இப்பாடலுக்குரியவர் யார்?