Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. (1,2), (-3,4), (-5,-6) ஆகிய புள்ளிகளை உச்சிகளாக உடைய முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
Q2. சாலை சமப்படுத்துவானின் நீளம் மற்றும் விட்டம் முறையே 120 செ.மீ. 84 செ.மீ. ஒரு விளையாட்டுத் திடலை சமப்படுத்த 500 சுழற்சிகள் எடுத்துக் கொள்கிறது. சதுர மீட்டருக்கு 75 பைசா செலவு ஆனால் அந்த விளையாட்டு திடலை சமப்படுத்த எவ்வளவு செலவாகும்?
Q3. திண்ம அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு 675∏ செ.மீ². எனில் அதன் வளைபரப்பைக் காண்க.
Q4. நேர்வட்ட கூம்பின் உயரம் மற்றும் அடிப்பரப்பு முறையே 5 செ.மீ, 48 ச.செ.மீ எனில் அதன் கன அளவைக் காண்க.
Q5. வீச்சுக் கெழுவைக் காண்க : 43, 24, 38, 56, 22, 39, 45.
Q6. அடக்க விலையானது விற்ற விலையில் ⅖ பங்கு எனில் கிடைக்கும் இலாப (அ) நட்ட % ஐக் காண்க.
Q7. அடக்க விலையானது விற்ற விலையில் 80% எனில் கிடைக்கும் இலாப (அ) நட்ட % ஐக் காண்க.
Q8. 44 மீ துணியை விற்கும்போது கிடைக்கும் இலாபமானது 11 மீ துணியின் விற்பனை விலைக்கு சம ம் எனில் இலாப சதவீத த்தைக் காண்க?
Q9. 5 கி பழத்தை விற்கும்போது கிடைக்கும் இலாபமானது 2 கி பழத்தின் விற்பனை விலைக்கு சம ம் எனில் இலாப சதவீத த்தைக் காண்க.
Q10. ஒரு பேனாவை ரூ. 15 க்கு விற்கும்போது ஏற்படும் நட்டமானது அதன் அடக்க விலையில் 1/16 பங்கு எனில் அப்பேனாவின் அடக்கவிலையைக் காண்க.
Q11. ஒரு பேனாவை ரூ. 72 க்கு விற்கும்போது ஏற்படும் நட்டமானது அதன் அடக்க விலையில் 5/17 பங்கு எனில் அப்பேனாவின் அடக்கவிலையைக் காண்க.
Q12. விற்ற விலையில் 10% நட்டம் என்பது அடக்க விலையில் எத்தனை சதவீத நட்டத்திற்கு சமம்?
Q13. விற்ற விலையில் 50% நட்டம் என்பது அடக்க விலையில் எத்தனை சதவீத நட்டத்திற்கு சமம்?
Q14. ஒரு பொருளின் அடக்க விலை ரூ. 9684 மற்றும் அதன் நட்டம் ரூ. 684 எனில் விற்ற விலையைக் காண்க.
Q15. ரூ. 2560 மதிப்புள்ள மாவரைக்கும் இயந்திரமானது ரூ. 140 செலவு செய்து பழுது நீக்கப்படுகிறது. எனில் அதை 5% இலாபத்திற்கு என்ன விலைக்கு விற்க வேண்டும்?
Q16. √784 + x = 500 ன் 78% எனில் x -ன் மதிப்பு என்ன?
Q17. ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு முதல் குழாய்க்கு 12 மணி நேரம் ஆகிறது. அதே தொட்டியை நிரப்புவதற்கு இரண்டாம் குழாய்க்கு 6 மணி நேரம் ஆகிறது. மூன்றாம் குழாய்க்கு 4 மணி நேரம் ஆகிறது. மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் தண்ணீர் தொட்டி நிரம்புவதற்கு ஆகும் நேரம் எவ்வளவு?
Q18. x² + 4y² = 4xy எனில் x : y ன் மதிப்பு என்ன?
Q19. ஒரு ஆண்டிற்கு எந்த வட்டி வீதம் மூலம் ரூ. 1200 இரண்டு வருடங்களில் ரூ. 1348.32 ஆகும்?
Q20. 7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணி நேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்?
Q21. கொடுக்கப்பட்ட தொடரில் பொருந்தாத எண்ணை கண்டறிக: 25, 36, 49, 81, 121, 169, 225
Q22. A-மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். B - என்பவர் A - யைக் காட்டிலும் 60% அதிக திறனுடன் வேலை செய்பவர் எனில் B - மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
Q23. 8% தனிவட்டி வீத்த்தில் 2,000 என்ற தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன?
Q24. ஒரு செவ்வகத்தின் நீளமானது 60% அதிகரிக்கப்படுகிறது. அதன் அகலமானது எத்தனை சதவீதம் குறைந்தால் அதன் பரப்பளவு முந்தைய பரப்பளவை போலவே இருக்கும்?
Q25. a : b = 6 : 7 எனவும் b : c = 8 : 9 எனவும் இருப்பின், a : c ன் விகிதம் என்ன?
Q26. 25 எண்களின் சராசரி 78:4 எனக் கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 எனப் பயன்படுத்தப்பட்ட து எனக் கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரி செய்யப்பட்ட சராசரி எது?
Q27. பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது? B, E, I, N, ...?
Q28. ஒரு தேர்வில் 30% மாணாக்கியர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணாக்கியர் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் என்ன?
Q29. A-ன் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது. எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
Q30. ஒரு நாற்காலியின் விலை ரூபாய் 2100 லிருந்து ரூபாய் 2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தைக் காண்க.
Q31. ரவியின் ஊதியம் 50% குறைக்கப்பட்டு பின்னர் உடனடியாக 25% உயர்த்தப்பட்டால் எத்தனை சதவீதம் அவர் இழந்தார்?
Q32. 2013ல் தஞ்சாவூர் மக்கள்தொகை 1,25,000. அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014ல் மக்கள் தொகையைக் காண்க.
Q33. மாத வருமானம் ரூ. 20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 ஐ சேமிப்பு செய்கின்றார் எனில் அவருடைய மாதச் சேமிப்பு சதவீதம் என்ன?
Q34. ஒரு மாணவன் தேர்ச்சி பெற 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அவன் 178 மதிப்பெண்கள் பெற்று 22 மதிப்பெண்ணால் தோல்வியுற்றான். எனில் மீப்பெரு மதிப்பெண்கள்?
Q35. 12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சம ம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் சதவீதம் என்ன?
Q36. ஒரு கூடையில் உள்ள மொத்த ஆரஞ்சு பழங்களில் 18% ஆனது 36 எனில் மொத்தமுள்ள ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை என்ன?
Q37. ஒருவர் ஒரு பொருளை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20%. அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு விற்க வேண்டும்?
Q38. ஒரு உணவு மேசையின் அடக்க விலை ரூ. 8400. ஒருவர் இம்மேசையை 10 மாதத் தவணைகளில் பெற நினைத்தால் அவரது மாதத் தவணை ரூ. 875 எனில் வட்டி வீதம் என்ன?
Q39. தொகுதி : விவசாயம் உற்பத்தியாளர்கள் சேவை வரி வசூல் : 22% 40% 38% வட்ட விளக்கப் பட்த்தின் மூலம் இதனை குறிக்கும்பொழுது உற்பத்தியாளரின் கோணம் என்ன?
Q40. ரூ. 2000 அசலானது 10% கூட்டு வட்டி விகித த்தில் ரூ. 2420 ஆகும் காலம்?
Q41. A, Bக்களின் வயது விகிதம் 6:5 அவ்விருவரின் வயதுகளின் கூடுதல் 44 ஆண்டுகள் எனில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விருவரின் வயதுகளின் விகிதம் யாது?
Q42. ஒரு தொடரின் குறைந்த மதிப்பு 9. அதன் வீச்சு 57 தொடரின் மீப்பெரு மதிப்பானது என்ன?
Q43. பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க : 15, 31, 63, 127, 255, ....?
Q44. TOGETHER என்ற வார்த்தையை RQEGRJCT என குறியீட்டில் எழுதினால் PAROLE என்ற வார்த்தையை எவ்வாறு குறியீட்டில் எழுதலாம்?
Q45. ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் தனி வட்டி அடிப்படையில் வைப்பு செய்யப்பட்ட ரூ.600, 3 ஆண்டுகளில் ரூ. 735 ஆக உயர்கிறது. வட்டி வீதம் 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அந்த ரூ. 600, 3 ஆண்டுகளில் எவ்வளவு ரூபாயாக உயரும்?
Q46. x, x+3, x+6, x+9, x+12ன் கூட்டுசராசரி 60 எனில், x -ன் மதிப்பு என்ன?
Q47. ஓர் எண்ணை 5, 6, 7 மற்றும் 8ல் வகுக்கும் போது ஒவ்வொன்றிலும் மீதி 3 கிடைக்க, மிகக் குறைந்த எண்ணைக் கண்டுபிடி.
Q48. மூன்று மணிகள் 12, 15 மற்றும் 18 நிமிட கால இடைவெளியில் ஒலிக்கின்றது. இம்மூன்றும் முதல் முறை காலை 8 மணிக்கு சேர்ந்து ஒலித்தது எனில் மீண்டும் எப்பொழுது சேர்ந்து ஒலிக்கும்?
Q49. துணியின் விலை 60% உயர்ந்துள்ள நிலையில், ஒரு குடும்பத்தின் மாதச் செல்வினம் அதிகரிக்காமல் இருப்பதற்கு, அவர்கள் துணிக்காக செலவில் எவ்வளவு சதவீதம் குறைக்க வேண்டும்?
Q50. 216 செ.மீ³ கன அளவு கொண்ட இரு கன சதுரங்கள் இரண்டையும் சேர்த்து ஒரு கன் செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அக்கன செவ்வகத்தின் மொத்த பக்க பரப்பின் மதிப்பு (ச.செ.மீ) என்ன?