Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அசல் தொகை ரூ. 10,000க்கு 3 வருடங்களில் ரூ. 10 வட்டி விகிதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?
Q2. பக்கங்கள் 9 செ.மீ, 12 செ.மீ, என்ற அளவுகளுடைய ஒரு முக்கோணத்தின் பரப்பளவு எவ்வளவு?
Q3. 25, 16, 9 என்ற தொடர் வரிசையில் அடுத்த எண் என்ன?
Q4. ஒரு பேனாவை ரூபாய் 15க்கு விற்பதனால் ஒருவர் பேனாவின் மதிப்பில் பதினாறில் ஒரு பகுதியை இழக்கிறார். எனில் அந்த பேனாவின் விலை என்ன?
Q5. ஒருவரது வருமானம் 50% ஆக குறைக்கப்பட்டது. மீண்டும் இந்த குறைக்கப்பட்ட வருமானம் 50% அதிகப் படுத்தப்பட்டது. எனவே, அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு?
Q6. பத்து மனிதர்கள் எட்டு நாட்களில் கட்டி முடிக்கக்கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரை நாளில் முடிக்க எத்தனை மனிதர்கள் வேண்டும்?
Q7. குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்?
Q8. மூன்று எண்களின் சராசரி 28, இரண்டாம் எண் முதல் எண்ணைப் போல் இருமடங்கு, மூன்றாம் எண் இரண்டாம் எண்னைப் போல் இருமடங்கு எனில் அந்த எண்கள் முறையே?
Q9. 6, ?, 21, 33, 48…
Q10. A, B, C என்ற மூவரும் முறையே 5 : 2 : 9 என்கிற விகிதத்தில், ரூ. 3,200 ஐ பகிர்ந்து கொள்கின்றனர். எனில் B என்பவர் பெற்ற தொகை எவ்வளவு?
Q11. ஒரு தேர்வில் 30% மாணவிகள் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணவிகள் ஹிந்திப்பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணவிகளின் சதவிகிதம் என்ன?
Q12. முதல் 60 இயல் எண்களில் கூடுதல் என்ன?
Q13. ஒரு பள்ளியில் முதல் வகுப்பில் 36 மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் 44 மாணவர்களும் உள்ளனர். முதல் வகுப்பு மாணவர்களின் சராசரி எடை 40 கி இரண்டாம் வகுப்பு மாணவர்களின் சராசரி எடை 35 கி ஆக உள்ளது. இரண்டு வகுப்பு மாணவர்களும் சேர்ந்து சராசரி எடை என்ன?
Q14. ஒரு தொகை இரண்டு வருடத்தில் ரூ. 605 ஆகவும், மூன்று வருடத்தில் ரூ. 668.50 ஆகவும் உயர்கிறது. அந்தத் தொகைக்குக் கிடைக்கும் வட்டி விகிதம் என்ன?
Q15. மூன்று எண்களின் விகிதம் 4 : 5 : 6 என்று அமைந்துள்ளது. அவற்றின் கூடுதல் 75 ஆக உள்ளது எனில் அவற்றுள் பெரிய எண் எது?
Q16. 120 இல் 72ன் விழுக்காடு (%) என்ன?
Q17. ஒரு வியாபாரி 320 மாம்பழங்களை விற்பனை செய்யும்போது 400 மாம்பழங்களுக்கான பணம் கிடைக்கின்றது. எனில், அவருக்கு லாபம் எவ்வளவு?
Q18. ஒரு விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடம் காலதாமதமாகப் புறப்பட்டது. அது குறிப்பிட்ட நேரத்தில் 1500 கி.மீ. தூரத்தை அடைய வேண்டுமெனில் வேகத்தை 250 கி.மீ. அதிகப்படுத்த வேண்டும். எனில் அதன் வழக்கமான வேகம் என்ன?
Q19. 210 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில் வண்டி 390 மீட்டர் நீளமான குகையை 60 வினாடிகளில் கடக்கிறது. எனில் அதன் வேகம் என்ன?
Q20. 60 லிட்டர் பாலில், பாலுக்கும் தண்ணீருக்கும் உள்ள விகிதம் 2:1 இதில் இனி எத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்றினால் பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 1:2 ஆக மாறும்?
Q21. ஒரு சிறுவன் இரண்டு நாணயங்களைச் சுண்டுகிறான். இரண்டு தலைகள் விழுவதற்கான நிகழ்தகவு என்ன?
Q22. ஒரு பட்டம் 50 மீட்டர் உயரத்தில் 30 சாய்வில் ஒரு நூலில் பறக்கிறது. நூலின் நீளம் எவ்வளவு?
Q23. ஒரு பையில் 8 சிவப்பு, 6 நீலம், 6 பச்சை பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகின்றது. அது நீலமாக இல்லாமல் இருக்க வாய்ப்பு?
Q24. ஒரு கனசதுரத்தின் விளிம்பு 50% அதிகப்படுத்தப்பட்டால் அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் விகிதம் எவ்வளவு?
Q25. 2A = 3B =4C எனில் A : B : C எவ்வளவு?
Q26. கொடுக்கப்பட்டுள்ள மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்கு, மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கு, இந்த மூன்று எண்களின் சராசரி 44 என்றால், இதில் மிகப்பெரிய எண் எது?
Q27. x² + y² = 34, x² + y = 544 - இதில் x மற்றும் y ன் மதிப்பு என்ன?
Q28. ஒரு நகரத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையின் எண்ணிக்கை 3,00,000. இதில் 1,80,000 பேர் ஆண்கள். மக்கள்தொகையில் 50% பேர் படித்தவர்கள். இதில் 70% ஆண்கள் படித்தவர்கள் எனில், படித்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q29. செந்தில் 12 கி.மீ. தூரம் வடக்கு நோக்கி நடக்கிறான். அங்கிருந்து கிழக்கு நோக்கி 15 கி.மீ. தூரம் நடக்கிறான். அங்கிருந்து மேற்கு நோக்கி 15 கி.மீ. தூரம் நடக்கிறான். அங்கிருந்து தெற்கு நோக்கி 18 கி.மீ. தூரம் நடக்கிறான். எனில், செந்தில் நடக்கத் துவங்கிய இடத்திலிருந்து இப்போது இருக்கும் இடத்திற்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
Q30. முதல் 999 வரை உள்ள எண்களில் 5 அல்லது 7 ஆல் வகுபடாத எண்களின் எண்ணிக்கை?
Q31. x² + 1/x = 5 எனில் x² + 1/x² = ?
Q32. 3α = 81 எனில் m = ?
Q33. + என்பது - எனப்பட, x என்பது + எனப்பட, + என்பது + எனப்பட, - என்பது x என எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனில், 252 x 9 - 5 + 32 + 92 = ?
Q34. 1 + 2 = 18, 2 + 3 = 827 எனில் 3 + 4 = ?
Q35. ஒரு காரின் விலை ரூ. 1,20,000. இதற்கு 5% தள்ளுபடி எனில், தள்ளுபடி தொகை எவ்வளவு?
Q36. ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 24 பேர் ஏ கிரேடு வாங்கியுள்ளனர். எனில் ஏ கிரேடு வாங்கியவர்களின் சதவீதம்?
Q37. ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 82 மீ மற்றும் அதனுடைய பரப்பு 400 மீ² எனில் அதன் அகலம் என்ன?
Q38. இரண்டு எண்களின் விகிதம் 15 : 11 என்ற விகிதத்தில் உள்ளது. இவற்றில், மீ.பெ.வ. 13 எனில், அந்த எண்கள் எவை?
Q39. ஒரு மட்டையாளர் 17வது இன்னிங்ஸில் 87 ரன்களை எடுக்கிறார். சராசரி 3 கூடுகிறது எனில் 17வது இன்னிங்ஸில் பிறகு எடுக்கும் சராசரி ரன்கள் என்ன?
Q40. தேர்வில் தேர்வு பெறுவதற்கு 36% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஒருவன் 113 மதிப்பெண்கள் எடுத்து 85 மதிப்பெண்ணில் தவறி விடுகிறான். மொத்த மதிப்பெண்கள் என்ன?
Q41. ஒருவன் 400 மாம்பழங்களை வாங்கிய விலைக்கு 320 பழங்களை விற்று விடுகிறான். எனில் இலாப சதவீதம் என்ன?
Q42. ஒருவன் ரூ.10,000 யை நான்கு பிரிவுகளாக பிரித்து கொடுக்கப்படுகிறது. ரூ.2000யை 8% வட்டிவீதமும், ரூ. 4000 யை 7.5% வட்டி வீதமும், ரூ. 1400 யை 8.5% வட்டி வீதமும்படி கொடுக்கின்றான். சராசரி வட்டி வீதம் 8.13% எனில் மீதித் தொகை எவ்வளவு வட்டி வீதத்திற்கு கொடுப்பார்?
Q43. ஒரு மரம் ஆண்டுக்கு 1/8 பங்கு வளர்கிறது. தற்பொழுது அதன் உயரம் 64 செ.மீ. எனில் இரண்டு ஆண்டுகளில் அதன் உயரம் என்ன?
Q44. குமார், சங்கர் முறையே ஒரு வேலையை செய்து முடிக்க 10, 20 நாட்கள் ஆகின்றன. சங்கர் வேலையை ஆரம்பித்த 5 நாட்களுக்கு பிறகு குமார் சேருகின்றான். அப்படியெனில் இருவரும் சேர்ந்து மீதி வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
Q45. பத்து வருடங்களுக்கு முன்பு தந்தையின் வயது மகளின் வயதைப் போல் மூன்று மடங்கு. பத்து வருடங்களுக்கு பின்பு தந்தையின் வயது மகனின் வயதைப்போல் இரு மடங்கு எனில் தற்போது அவர்களின் வயதுகளின் விகிதம் என்ன?
Q46. ராமன் அவன் வருமானத்தில் 25% வாடகைக்கும், 5% உணவுக்கும், 15% போக்குவரத்துக்கும், 10% துணிக்கும் செலவு செய்தது போக ரூ.22500 சேமித்து வைத்துள்ளான். எனில் அவன் வருமானம் எவ்வளவு?
Q47. 513 மற்றும் 783 ன் மீ.பொ.வ. மதிப்பு என்ன?
Q48. ஒரு முக்கோணம் 1/2 : 1/3 : 1/4 என்ற விகிதத்தில் தன் பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த முக்கோணத்தின் சுற்றளவு 52 செ.மீ. எனில் அதன் மிகச்சிறிய பக்கத்தின் நீளம் என்ன?
Q49. இரு எண்களின் கூடுதல் 528. அதன் மீ.பெ.வ 33 எனில் எத்தனை ஜோடி எண்கள் இருக்கும்?
Q50. ஒரு எண்ணை 6 ஆல் வகுக்கும்போது மீதி 3 கிடைக்கிறது. அந்த எண்ணின் வர்க்கத்தை 6ஆல் வகுக்கும்போது மீதி என்ன கிடைக்கும்?