Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஜூலை 4, 2015 அன்று இராமநாதபுரம் கமுதி யில் சூரிய ஒளி மின் உற்பத்தி பெருமளவில் அமைக்க, தமிழக அரசாங்கம் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது?
Q2. 2015 பெண்களுக்கான ஃபிபா உலகக் கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடந்தது, எந்த நாடு வெற்றி பெற்றது?
Q3. 2015ல் சிறு தொழில் புரிவோருக்கான 10 லட்சம் வரையிலான கடன் திட்டம் ""முத்ரா கார்டு"" எந்த வங்கி முதன் முதலாக தொடங்கி வைத்தது?
Q4. 2015ல், கல்லூரியின் தேர்வு முடிவுகளை, கைபேசியில் குறுந்தகவல் -- எஸ்.எம்.எஸ் மூலம் அறிவித்த முதல் தமிழக பல்கலைக்கழகம் எது?
Q5. 2015 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
Q6. 2015 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
Q7. 2015ல் ஜூலை மாதத்தில் நம் நாட்டின் 55 வது தேசிய தடகளப் போட்டி எந்த நகரில் நடந்தது?
Q8. ஜூலை 2015ல் ஆந்திரபிரதேசத்தின் கோதாவரி நதிக்கரையில் ""மகாபுஷ்கரம்"" நிகழ்ச்சியின் போது நெரிசல் ஏற்பட்டு சுமார் 35 பேர் மரணம் அடைந்தனர். இந்த துயர நிகழ்ச்சி எந்த நகரத்தில் நடந்தது?
Q9. ஜூலை 2015ல் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மகாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
Q10. New Development Bank -- NDB -- புதிய முன்னேற்ற வங்கி -- ஜூலை 21 அன்று சீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கத் தொடங்கியது. இதை அமைத்த சர்வதேச அரசியல் அமைப்பு எது?
Q11. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் மற்றும் தலை சிறந்த விஞ்ஞானி திரு அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 21 அன்று காலமானார். அவரது மறைவு இந்தியாவின் எந்த நகரில் நிகழ்ந்தது?
Q12. ஜூலை 31, 2015 அன்று தமிழக அரசு அறிவிப்பின் படி, மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15, தமிழகத்தில் எவ்வாறு அனுசரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது?
Q13. இந்திய வங்கதேச எல்லை ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கு 7110 ஏக்கர் (51கிராமங்களும்), வங்காள தேசத்துக்கு 17160 ஏக்கர் (111 கிராமங்களும்) பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. இந்த பரிமாற்றம் இரவு 12 மணிக்கு ..........தினம் செய்து கொள்ளப்பட்டது.
Q14. 2015 ல் நெவ்ஜாத் ஐதீன் என்றவர், தனது உணவுப் பொருள் விநியோக வணிகத்தை விற்று, அதில் கிடைத்த லாபத்தில் தன்னிடம் பணி செய்த 169 ஊழியர்களுக்கு தலா 1.5 கோடி வீதம் பகிர்ந்துக்கொண்ட ஒரு மனிதாபிமான நிகழ்ச்சி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர் எந்த நாட்டவர்?
Q15. 2015ல் சென்னையில் ""தேசிய கைத்தறி தினம்"" அனுசரிக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார். அந்த நாள் எது?
Q16. காந்தியவாதி சசி பெருமாள் அவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி, பூரண மது விலக்குக் கோரி கைபேசி கோபுரத்தின் மீது ஏறி உண்ணாவிரதமிருந்து உயிரிழந்தார். இவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
Q17. ஆகஸ்ட் 2015ல் உலகின் முன்னணி கணினி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை என்ற இந்தியர் நியமிக்கப்பட்டார் என்பது உலகம் அறிந்தது. இவர் எந்த நகரத்தைச் சேர்ந்தவர்?
Q18. ஆகஸ்ட் 2015 ஒரு நாடு தனது கரன்சி மதிப்பை 2 சதவிகிதம் குறைத்து அறிவித்தது. எந்த நாடு?
Q19. தமிழ் நாட்டின் 2015ம் ஆண்டிற்கான அப்துல் கலாம் விருது திருமதி என்.வளர்மதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி கழகத்தில் ஒரு மூத்த விஞ்ஞானி என்பதும் தெரிந்ததே. இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் காண்க?
Q20. இந்தியாவில் இணையதள சேவை -- internet service -- எப்போது முதல் தொடங்கியது?
Q21. ஆகஸ்ட் 15, 2015 , 69வது சுதந்திர தினத்தன்று பிரதமர் அறிவித்தத் திட்டங்கள் இவைகளுள் எது?
Q22. ஆகஸ்ட் 21, 2015 அன்று, இந்தியா-பசிபிக் நாடுகள் மகாநாடு இந்தியாவின் எந்த நகரத்தில் நடந்தது?
Q23. உலகின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை -- 56 கி.மீ நீளம் -- எந்த நாட்டு நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு 2016ல் தொடங்கவுள்ளது?
Q24. ""ஜன் தன் யோஜனா"" - அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற மத்திய அரசின் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q25. 2015ல் குளச்சல் என்ற இடத்தில் புதிய துறைமுகம் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. குளச்சல் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q26. 2015 செப்டம்பர் 5 ல் ஜி.20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மகாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
Q27. செப்டம்பர் 7, 2015ல் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இது தமிழக அரசின் ……….வது அரசு மருத்துவ கல்லூரி.
Q28. 2015ல், கவிஞர் வைரமுத்துவின் எந்த நாவலை, சாகித்ய அகாதமி 23 மொழிகளில் மொழி பெயர்க்க முடிவு எடுத்தது?
Q29. செப்டம்பர் 11, 2015 அன்று, கடலோர நகரங்களில் தீவிரவாதிகள் செயலுக்கு எதிரான ராணுவ பயிற்சி நடவடிக்கை நடத்தப்பட்டது. அதன் பெயர் என்ன?
Q30. சர்வதேச இந்தி மகாநாடு செப்டம்பர் 20, 2015 அன்று ....... நகரில் நடத்தப்பட்டது.
Q31. தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மகாநாடு சென்னையில் எந்த தேதியில் நடத்தப்பட்டது?
Q32. கங்கை நதியை சுத்திகரிக்க கேரள மாநில துறவி மாதா அமிர்தானந்தமயி தேவியின் அறக்கட்டளை ஒரு பெரும் நிதி உதவியை 2015 செப்டம்பர் மாதத்தில் அளித்தது. அந்த தொகை என்ன?
Q33. செப்டம்பர் 2015ல், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடற்படை ராணுவ பயிற்சி எந்த நகரத்தில் நடைப்பெற்றது?
Q34. 2015 அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவை வென்றவர் யார்?
Q35. 2015 அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவை வென்றவர் யார்?
Q36. 2015 உலக வங்கி அறிக்கைப்படி, இந்தியாவின் எந்த மாநிலம் தொழில் தொடங்க உகந்த மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது?
Q37. 2015ல் உலகின் மிக நீளமான எரிமலைத் தொடர் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
Q38. தேர்தலின் போது, வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்க பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சின்னம் என்ன?
Q39. 2013-2014 ம் ஆண்டிற்கான, தேசிய சுற்றுலா விருதின் ஒரு பிரிவான ""சிறந்த குடிமை மேலாண்மையை பேணும் சுற்றுலாத்தலம்"" விருதைப் பெற்ற தமிழக தலம் எது?
Q40. தமிழகத்தின் எந்த சிறையில் முதல் முறையாக தொழிற் பயிற்சி கல்வி மையம் -- Industrial Training Institute -- 2015ல் தொடங்கப்பட்டது?
Q41. இந்தியாவின் எந்த மாகாணத்தின் நீதிமன்றத்தின் கூரை சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
Q42. பெண் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ..........மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ரூ.5000/- முதலீடு செய்யப்பட்டு, அந்தக் பெண் குழந்தை 18 வயது அடையும் போது ஒரு சவரன் தங்கமோ அல்லது அதற்கிணையாக பணமோ கொடுக்கப்படுகிறது. அது எந்த மாநிலம்?
Q43. அக்டோபர் 2015ல், கூகுள் நிறுவனத்தின் பல பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு தனி நிறுவனத்தின் கீழ் இயங்கத் தொடங்கியுள்ளன. அந்த நிறுவனத்தின் பெயர் என்ன?
Q44. 2015ம் ஆண்டின் இலக்கியத்திற்கான ""மான் புக்கர்"" பரிசை, மார்லன் ஜேம்ஸ் என்பவர் வென்றார். இவர் எந்த நாட்டவர்?
Q45. 2015 அக்டோபர் மாதத்தில், தமிழக அரசு, எந்த இரண்டு தமிழக நகரங்களில் மருத்துவ கல்லூரி திறக்க உத்தரவிட்டது?
Q46. அக்டோபர் 28, 2015 அன்று, வித்யா தேவி பண்டாரி என்ற பெண்மணி ........ நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
Q47. "சேலம் தினம்" (சேலம் நகரம்) வருடந்தோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
Q48. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31, எவ்வாறு 2015ல் அனுசரிக்கப் பட்டது?
Q49. மறைந்த குடியரசுத்தலைவர்/விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களைப் பாராட்டி, நவம்பர் 1, 2015 அன்று தபால் தலை வெளியிட்ட நாடு எது?
Q50. நவம்பர் 10, 2015 அன்று, கர்நாடக அரசு, ஒரு தலைசிறந்த கர்நாடக மனிதரின் பிறந்த நாளைக் கொண்டாடியது. அவர் யார்?