Khub.info Learn TNPSC exam and online pratice

முன் வரலாறு PRE HISTORY

Q1. நம் நாட்டில் மனித குலம் வாழ்ந்ததற்கான கற்கால சான்று எது?
"கி.மு.3,00,000 to 2,00,000 . பஞ்சாப் மாநிலத்தின் சோன் பள்ளத்தாக்கு (சோன் நதி) மற்றும் தெற்கு இந்தியாவின் சில இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் சான்றாகும். "

Q2. "Homo-Sapiens" என்ற நவீன கால மனித குலம் தோன்றினர்?
சுமார் கி.மு. 36000
Q3. மனித குல வாழ்வை எத்தனை கால (age) கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
"1. பழங்கற்காலம் Paleolithic Age
2. இடைக்கற்காலம் Mesolithic Age
3. புதிய கற்காலம் Neolithic Age
4. செம்புக்காலம் Chalcolithic Age."
Q4. பழங்கற்காலம் -- Paleolithic Age என்பது என்ன?
3,00,000 கி.மு முதல் 8000 கி.மு. வரை.
Q5. இடைக்கற்காலம் -- Mesolithic என்பது என்ன?
8000 முதல் 4000 கி.மு.
Q6. இடைக்கற்காலத்தின் மனித வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் யாவை?
"கூர்மையான முனை கொண்ட உபகரணங்கள் பயனுக்கு வந்தது. கி.மு. 4000 காலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு புதிய கற்காலத்தில் பயனுக்கு வந்தது. "
Q7. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கற்கால த(இ)டங்கள் யாவை?
சோட்டா நாகபுரி பீடபூமி, மத்திய இந்தியா, கிருஷ்ணா ஆற்றுப்படுகை
Q8. "இடைக்கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?"
மைக்ரோலித்ஸ் -- MICROLITHS – மிகச்சிறிய உபகரணங்கள்.
Q9. புதிய கற்காலம் -- Neolithic Age என்பது என்ன?
"4000 முதல் 1800 கி.மு. இந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் விலங்குகளை வளர்ப்பது, விவசாயம் செய்வது, சமூகம்/கிராமங்களை உருவாக்குவது, பளபளக்காப்பட்ட உபகரணங்களை பயன் படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடத் துவங்கினர். "
Q10. செம்புக் காலம் -- Chalcolithic Age என்பது என்ன?
"1800 முதல் 800 கி.மு வரை. கற்காலம்-செம்புக்காலம் இணைந்தது. செம்பு, பித்தளை போன்ற உலோகப்பயன்பாடு தொடங்கியது. "
Q11. இந்தியாவில் பயனுக்கு வந்த முதல் உலோகம் எது?
செப்பு -- Copper.
Q12. பழங்கற்கால உபகரணங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?
"சோன் பள்ளத்தாக்கு, பஞ்சாப்; கோதாவரி படுகை,கூடலூர், ஆந்திரபிரதேசம்; நாகார்ஜூனா கொண்டா, ஆந்திரா; வடமதுரை, அதிரம்பாக்கம் சென்னை அருகில், மகாநாதி கரையோரம், ஒடிசா. Soan Valley, "
Q13. "இந்தியாவின் எந்த பகுதியில், பழங்கால மனித இனம், விலங்குகளை வளர்த்தது, மற்றும் சமூகத்தினரிடையே பண்டமாற்று முறை இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன? "
லங்க்நாஜ், குஜராத் மற்றும் ஆதாம்கர், மத்தியபிரதேசம்.
Q14. மனித குலத்தால் உணவு தயாரிப்பு எந்த காலத்தில் தொடங்கியது?
புதிய கற்காலம் -- 4000 முதல் 800 கி.மு காலத்தில்
Q15. "எந்த கிராமத்தில் (இப்பொழுது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது) புதிய கற்காலத்தில் இருந்து செம்பு காலத்திற்கு மாறுதல் ஏற்பட்டது? "
மெஹர்கார் -- MEHRGARH.
Q16. மண்பானைகள் செய்யும் முறை எப்போது தோன்றியது?
பின் கற்காலத்தில் -- Late stone Age.
Q17. "கிழக்கிந்தியாவின் எந்த இடத்தில் செம்பு கால விவசாய நடைமுறைகளுக்கான நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன? "
SENUAR –
Q18. "இந்தியாவின் எந்த பகுதியில் மனிதன் வாழ்ந்ததற்கான முந்தைய சான்று கிடைத்தது? "
நர்மதா பள்ளத்தாக்கு
Q19. "துணைக்கண்டத்தில் வகைமுறைப்படுத்தப்பட்ட விவசாயம் நடந்ததற்கான சான்று எங்கு கிடைத்தது? "
மெஹர்கார் (தற்சமயம் பலுச்சிஸ்தான், பாகிஸ்தானில் உள்ளது)
Q20. இடைக்கற்காலத்து கால குகை சித்திரங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
பிம்பெட்கா -- ரெய்சன் மாவட்டம், மத்தியபிரதேசம்.
Q21. ஆவ்ல் -- AWL என்ற கற்காலத்து தொடர் எதைக்குறிக்கிறது?
"தோல், மரம் போன்றவைகளில் துளை போடுவதற்கு உதவும் வகையிலான, கல், எலும்பு மற்றும் உலோகத்தால் ஆன உபகரணம். "
Q22. பரின் -- BURIN என்ற கற்காலத்து தொடர் எதைக் குறிக்கிறது?
"கல்லால் ஒரு முனை பட்டையாகவும் கூராகவும் ஆன ஒரு உபகரணம். இது செதுக்கு - வதற்கு பயன்படுத்தப்பட்டது. "
Q23. சாப்பர் -- CHOPPER, என்ற கற்காலத்து தொடர் எதைக் குறிக்கிறது?
"கூழாங்கற்களால் ஒரு புறம் சொரசொரப்பான பகுதியாக்கப்பட்டு சுரண்டுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட கற்கால உபகரணம். "
Q24. க்ளீவர் -- CLEAVER -- என்ற கற்காலத்து தொடர் எதைக்குறிக்கிறது?
பட்டை மற்றும் கூரான முனையை இருபகுதிகளாக பிளக்கப்பட்ட உபகரணம்.
Q25. பர்னிஷர் -- BURNISHER -- என்ற கற்காலத்து தொடர் எதைக்குறிக்கிறது?
மண்பாண்டங்களின் பரப்பை பளபளக்க செய்ய பயன்பட்ட உபகரணம்.
Q26. கரோஷ்தி -- KHAROSHTHI என்பது என்ன?
கி.மு 3 லிருந்து கி.பி. 3 வரை புழக்கத்தில் இருந்த ஒரு எழுத்து வடிவம். ( A script )
Q27. பெருங்கல் -- MEGALITHS மற்றும் நுண்கல் -- MICROLITHS என்பது என்ன?
"பெருங்கல் -- MEGALITHS – பெரிய கற்களால் ஆன நினைவுச் சின்னங்கள். நுண்கல் -- .MICROLITHS – சிறு கற்களால் சீராக செதுக்கப்பட்ட உபகரணங்கள் "
Q28. "மனித வாழ்க்கையின் காலகட்டத்தை குறிக்கும் வகையில் எவ்வாறு வகைப்படுத்தியிருந்தனர்? "
"PLEISTOCENE -- பல லட்சம் ஆண்டுகளுக்கு (25,88,000) ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கி, 11,700 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இருந்த காலம். HOLOCENE -- 11,700 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்றும் நிலவும் காலக்கட்டம். "
Q29. NASTA’LIQ என்பது என்ன?
14 வது நூற்றாண்டில் புழக்கத்துக்கு வந்த அரபு எழுத்து வடிவம்.
Q30. சுடுமண்பாண்டம் -- TERRACOTA என்பது என்ன?
சுடப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பாண்டங்கள்.
Q31. கரிம கால கணிப்பு முறை -- Carbon Dating Method என்பது என்ன?
"பழங்காலத்தை கணிக்கும் முறை. இதற்கு கார்பன் 14 என்ற கதிரியக்கப் பொருள் பயன் படுத்தப்படுகிறது. ஒரு உயிர்ப்பொருள், கார்பன் 14 மற்றும் கார்பன் 12 ஐ ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளடக்கியது. அந்த பொருளின் உயிர் பிரிந்தவுடன் அதற்கு புதிதாக கார்பன் 14 கிடைப்பதில்லை. ஆகவே அதனுள் இருந்த கார்பன் 14 காலக்கட்டத்தில் மெதுவாக அழியத் தொடங்குகிறது. இந்த அழிவின் வேகத்தையும், எஞ்சியுள்ள கார்பன் 14 மற்றும் கார்பன் 12 ன் அளவை கணக்கில் கொண்டு ஒரு பொருளின் பழமைக் காலம் கணிக்கப் படுகிறது. "
Q32. கார்பன் 14ன் பகுதி ( இரு சம பகுதி - half life) வாழ்வு எத்தனை வருடங்கள்?
5730 years.