Khub.info Learn TNPSC exam and online pratice

பில்லியர்ட்ஸ் & ஸ்நூக்கர் - BILLIARDS & SNOOKER

Q1. இந்த வகை விளையாட்டை ஆங்கிலத்தில் பொதுவாக எவ்வாறுஅழைப்பார்கள்?
CUE SPORTS.
Q2. பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் என்பது எவ்வகை விளையாட்டு?
"இது ஒரு தனி நபர் / சமயங்களில் இருவர் சேர்ந்த அணி விளையாட்டு. ஒரு நீண்ட மேஜை, அதன் நான் கு மூலை, மற்றும் நீள் வட்ட த்தில் இரண்டு மூலைகளுக்கு நடுவிலுமாக மொத்தம் 6 குழிகள் (POCKETS) கொடுக்கப்பட்டிருக்கும். மேசை மீது, குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கை பந்துகள் (சற்றே கெட்டியான) பல வண்ணங்களில் அடுக்கப்பட்டிருக்கும். வெள்ளை வண்ணத்தில் ஒரு பந்து (CUE BALL) இருக்கும். வீர ர்களின் கையில் ஒரு நீண்ட குச்சி (CUE) கொடுக்கப்பட்டிருக்கும். இந்த குச்சி குறுகலான உருளை வடிவிலிருக்கும். இந்த குச்சியின் உதவியால், வெள்ளை பந்தால் (மட்டுமே) மற்ற பந்துகளை அடித்து குழியில் தள்ளுவதே இந்த விளையாட்டு. குழிகளில் தள்ளப்படும் பந்துகளின் எண்ணிக்கைக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். பில்லியர்ட்ஸ் விளையாட்டுக்கும் ஸ்நூக்கர் விளையாட்டுக்கும் மேசையின் அளவில் வித்தியாசம் இருக்கும். பில்லியர்ட்ஸுக்கு ஒரு வெள்ளை, ஒரு மஞ்சள் மற்றும் ஒரு சிகப்பு பந்து மட்டுமே இருக்கும். இதில் வெள்ளை பந்து ஒருவருக்கும் மற்றொருவருக்கு மஞ்சள் பந்தும் அடிபந்தாக (CUE BALL) பயன்படும். ஸ்நூக்கர் விளையாட்டில், 15 சிகப்பு, மற்றும் 6 வெவ்வேறு வண்ண பந்துகள் இருக்கும். ஒரு வெள்ளை பந்து பொதுவான அடிபந்தாக பயன்படுத்தப்படும். இந்த வகை விளையாட்டில் புள்ளிகள் கணக்கிடும் முறை அனுபவ ரீதியாக பயிற்சி மூலம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று."
Q3. ஸ்நூக்கர் விளையாட்டு எங்கு, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
1848ல் ஆங்கிலேயர்களால் நீலகிரி மாவட்டம் கூனூரில் கண்டுபிடிக்கப்பட்ட து.
Q4. பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் பொருள்கள் யாவை?
" 1. மேசை (TABLE) : செவ்வக வடிவத்தில் மரத்தினால் ஆன மேசை. பொதுவாக 11 அடி 8 அங்குலத்திலிருந்து 12 அடி 6 அங்குல நீளமும், 5 அடி 10 அங்குல அகலம் கொண்டதாக இருக்கும். இதன் நான்கு மூலைகளிலும், நீள் வட்ட வாக்கில் நடுவிலும் ஆக 6 குழிகள் பந்துகள் விழுவதற்கு ஏதுவாக அமைந்து இருக்கும். பந்துகள் கீழே விழாமல் இருப்பதற்காக அனைத்து பக்கங்களிலும் மரத்தினால் உயரத் தடுப்புகள் (சுமார் 3 அங்குல) இருக்கும். பந்துகள் விளையாடும் பகுதியும், ஓரங்களும், உயர்தர கம்பளத்துணியால் (BAIZE என்ற வகை) ஒட்டப்பட்டிருக்கும்.
2. பந்துகள் (BALLS) : பொதுவாக PHENDLIC RESIN என்ற வேதிக் கலவையால் ஆனவை. விளையாட்டுக்கு ஏற்றவாறு பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகிறது. பந்துகள் 52.5 மி.மீ. விட்டம் கொண்டவையாக இருக்கும். வெள்ளை, அடிபந்து CUE BALL எனப்படும்.
3. குச்சி (CUE) : மரத்தினால் செய்யப்பட்ட குறுகலான உருளை வடிவ 1.5 மீ குச்சி - சுமார் 610 கி எடை - நவீன காலத்தில் க்ராஃபைட், ஃபைபர் கிளாஸ் போன்றவற்றாலும் செய்யப்படுகிறது. இதன் உதவியால் பந்து அடிக்கப்படும்."
Q5. ஸ்நூக்கர் ஆட்டத்தில் பந்துகள் அடுக்கப்படுவதை எவ்வாறு அழைப்பார்கள்?
"பிரமிட் -
இந்த முக்கோண வடிவத்தில் 15 சிகப்பு பந்துகள் அடுக்கப்படும். இதைத் தவிர்த்து 6 வெவ்வேறு வண்ன பந்துகள், அவைகளுக்கென்று குறிக்கப்பட்டுள்ள இடங்களில் அடுக்கப்படும். வெள்ளை பந்தால், சிகப்பு பந்துகளை கலைத்து குழியில் தள்ளிய பிறகே மற்ற வண்ண பந்துகளை வகுக்கப்பட்ட வரிசையில் குழியில் தள்ள வேண்டும். புள்ளிகளை அதிகரிக்க இடையிலும் மற்ற வண்ண பந்துகளையும் போடலாம். ஆனால் அவை மீண்டும் நடுவில் குறிப்பிட்ட இடத்தில் நடுவரால் வைக்கப்படும். "
Q6. ஸ்நூக்கர் விளையாடும் முறை என்ன?
"சிவப்பு பந்துகளுக்கு ஒரு புள்ளி; மஞ்சள் - 2; பச்சை - 3; அரக்கு - 4; நீலம் - 5; இளஞ்சிவப்பு - 6; கருப்பு - 7 என புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிகப்பு பந்துகளை முதலில் குழியில் தள்ள வேண்டும். ஒரு சிகப்பு பந்தை தொடர்ந்து, வேறு வண்ண (எந்த) பந்தையும் போடலாம். இதனால் ஒரு வீரரின் புள்ளி கணக்கு வேகமாக கூடுவதற்கான வாய்ப்புள்ளது. அவ்வாறு போடப்பட்ட வண்ண பந்து, மீண்டும் மேசை மீது, அதற்குரிய இடத்தில் வைக்கப்படும். இவ்வாறாக, சிகப்பு பந்துகள் போட்டு முடித்த பிறகு, மற்ற பந்துகளை, புள்ளி ஏறு வரிசையில் போட வேண்டும். இந்த முறையில் போடப்படும் பந்துகளின் புள்ளி மதிப்பு கணக்கிடப்படும். இவ்வாறு வெள்ளைப் பந்து குழியில் விழுந்தாலோ, அல்லது, வெள்ளைப் பந்து, சிகப்பு பந்து, அல்லது குறிப்பிட்ட வண்ணப் பந்தை தொடத் தவறினாலோ, அல்லது, வெள்ளைப் பந்து மேசையை விட்டு வெளியேறினாலோ, ஆட்டம் எதிர் வீரரின் கை மாறி தொடரும். இவ்வாறாக அனைத்து பந்துகளும் போட்டு முடிக்கப்பட்டால், ஒரு FRAME முடிவுறும். போட்டிகள், முன் முடிவு செய்யப்பட்ட FRAMES கணக்கில் விளையாடப்படும்."
Q7. ஸ்நூக்கர் போட்டியில், ஒரு FRAME ல் அதிகபட்சமாக எத்தனை புள்ளிகள் எடுக்கலாம்?
147. இதற்கு 36 முறை தொடர்ந்து பந்து குழிக்கு அனுப்பப்பட வேண்டும்.
Q8. ஸ்நூக்கரின் உச்சகட்ட போட்டி எது?
உலக சாம்பியன்ஷிப் - WORLD CHAMPIONSHIP. 1927 முதல் வருடந்தோறும் உலகின் பல இடங்களில் நடத்தப்படுகிறது.
Q9. ஸ்நூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பு எது?
சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் கூட்டமைப்பு. INTERNATIONAL BILLIARDS AND SNOOKER FEDERATION - 1973 - துபாயில் இதன் தலைமையகம் உள்ளது.
Q10. பில்லியர்ட்ஸ் போட்டியில் முதல் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் யார்?
வில்சன் ஜோன்ஸ் - 1950. சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஒரு விளையாட்டிலும் உலக சாம்பியன் ஆன முதல் இந்தியரும் இவரே.
Q11. மிகக்குறைந்த வயதில் தொழில் சாரா (AMATEUR) பில்லியர்ட்ஸ் போட்டியில் உலக சாம்பியன் ஆன இந்தியர் யார்?
கீத் சேத்தி - 1985. தொழில் சாரா முறையில் 1985, 1987, 2001லும், தொழில் ரீதியாக (PROFESSIONAL) 1992, 1993, 1995, 1998, 2006ல் உலக சாம்பியன். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. 1992-93. பத்மஸ்ரீ, மற்றும் அர்ஜுனா விருது - 1986.
Q12. "நம் நாட்டில், உலகளவில் மிகவும் புகழ்பெற்ற பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டு வீரர் யார்?"
பங்கஜ் அத்வானி - மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டில், தொழில் சாரா மற்றும் சார்ந்த அனைத்து வகை போட்டிகளிலும் இவர் வெற்றி அடையாததே கிடையாது எனக் கூறலாம். இவருடைய சாதனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு - மிகக்குறைந்த வயதில் - 27 வயதுக்குள் - 8 முறை பில்லியர்ட்ஸில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். பத்மஸ்ரீ (2009), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (2005-2006) பெற்றவர்.