Khub.info Learn TNPSC exam and online pratice

புரட்சிகள்:

Q1. புரட்சிகள் என்பது என்ன?
ஒரு அமைப்பு -- பொதுவாக சொன்னால் ஒரு ஆட்சியை எதிர்த்து, மக்கள் தங்களது அதிருப்தியை வெவ்வேறு வழிகளில் தெரிவிப்பதே. இதில் பல வழிகள் கடைபிடிக்கப்படுகிறது. சில நேரங்களில் அது வன்முறையில் முடிகிறது. இதன் மூலம் பல நேரங்களில் தீர்வும், ஆட்சி மாற்றமும், வெளி நாட்டு உதவிகளும், ஆக்கிரமிப்பும் ஏற்படுகிறது.

Q2. உலகின் புகழ் பெற்ற, அதிகமாக பேசப்படும் புரட்சிகள் யாவை?
1. ஃப்ரெஞ்ச் புரட்சி, French Revolution -- ஃப்ரான்ஸ் —1789 – 93
2. மெக்ஸிகோ புரட்சி Mexican Revolution -- மெக்ஸிகோ —1910
3. ரஷ்ய புரட்சி Russian Revolution -- ரஷ்யா — 1917 – 22
4. சீன புரட்சி Chinese Revolution -- சீனா — 1919
5. ஹங்கேரி புரட்சி Hungarian Revolution -- ஹங்கேரி — 1956
6. ஏப்ரல் புரட்சி April Revolution -- கொரியா — 1960
7. கார்னேஷன் புரட்சி Coronation Revolution -- போர்ச்சுகல் — 1974
8. இஸ்லாமிய புரட்சி Islamic Revolution -- இரான் —1979
9. எட்சா EDSA புரட்சி EDSA Revolution -- பிலிப்பைன்ஸ் — 1986
10. வெல்வெட் புரட்சி Velvet Revolution -- செக் — 1989
11. ரோஸ் புரட்சி Rose Revolution -- ஜியார்ஜியா — 2003
12. ஆரஞ்ச் புரட்சி Orange Revolution -- உக்ரைன் -- 2004
13. துலிப் புரட்சி Tulip Revolution -- கிர்கிஸ்தான் -- 2005
14. செடார் புரட்சி -- Cedar Revolution —லெபனான் —2005
15. பர்ப்பிள் புரட்சி -- Purple Revolution— இராக் —2005
16. ப்ளூ புரட்சி -- Blue Revolution— குவைத் —2005
Q3. ஃப்ரெஞ்ச் புரட்சி French Revolution 1789-93 என்பது என்ன?
இந்த புரட்சி ஏற்பட முக்கிய காரணமாயிருந்தது மன்னர் லூயிஸ் 17 (XVII) ன், மோசமான, நிர்வாக சீர் கேடான, பொறுப்பற்ற கொடுமையான ஆட்சி. உண்மையில் இவர் ஒரு வலுவான மன்னர் அல்ல. நிர்வாக திறமையற்றவர். இவருடைய நம்பிக்கையெல்லாம் மன்னருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதீத தெய்வீக உரிமை மற்றுமே. இதை பயன் படுத்தி, பெரிய மனிதர்களும், மத குருக்களும் அதிகமான சலுகைகளும் வசதிகளூம் பெற்று வாழ்ந்ததுடன், அதை தக்க வைத்துக் கொள்ள மன்னர் மீதும் தங்கள் அழுத்தத்தை கொடுத்து வந்தனர். இதனால் சாதாரண ஊழியர்களும் தொழிலாளிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதை எதிர்த்து, மாண்டெஸ்க்யூ, வால்டேய்ர், மற்றும் ரோஸியூ போன்ற தத்துவ வாதிகள் எழுதத் தொடங்கினர். அந்த எழுத்துக்களின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு மன எழுச்சி ஏற்பட தொடங்கியது மட்டுமின்றி, புகழ் பெற்ற வாக்கியங்களான “Liberty, Equality and Fraternity” "" சுதந்திரம், சமத்துவம் மற்றும் தோழமை"" என்ற தொடர் வெளி வந்தது. இது பொது அரசாங்க பிரதிநிதிகளிடமும் ஒரு பெரிய தூண்டுதலை ஏற்படுத்தியது.
இதனால், இந்த பிரதிநிதிகள் நிர்வாகத்தின பகுதிக்கு மேல் இருந்தபடியால், தங்கள் எதிர்ப்பை வலுவாக தெரிவித்து, மன்னர் உத்தரவில் பாஸ்டில்லே சிறைச்சாலைக்கு Bastille prison வெளிநாட்டு பாதுகாவலர்களை நியமித்தத்தையும் தகர்த்து, சிறைச்சாலையை ஜூலை 1789ல் கைப்பற்றினர். இதனால் மன்னர் லூயிஸ் XVII ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சியை பொது பிரதிநிதிகள் கைப்பற்றி, அனைவருக்கு சம நிலையை உருவாக்கி, "" சுதந்திரம், சமத்துவம் மற்றும் தோழமை"" தத்துவத்தை நிலை நிறுத்தினர்.
இதற்கிடையில், ஆஸ்திரிய மன்னர், பொது பிரதிநிதிகளின் இந்த நடவடிக்கை, தன் நாட்டு மீதும் பரவாமலிருக்க, ஃப்ரான்ஸ் மீது படையெடுத்தார். இவ்வாறிக்க, ஃப்ரான்ஸ் நாட்டு ராணி, ஆஸ்திரிய நாட்டவர். அதனால் இந்த படையெடுப்பு ஃப்ரான்ஸ் மன்னர் லூயிஸ் மற்றும் ராணியின் நடவடிக்கை என ஊகித்து/சந்தேகித்து, ஃப்ரான்ஸில் ஒரு தேசிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டு, நாட்டை 22.9.1792ல் ஒரு குடியரசு நாடாக அறிவித்துக்கொண்டது. ஃப்ரான்ஸ் மன்னர் லூயிஸ் மற்றும் ராணி நாட்டு துரோக குற்றத்திற்காக 17.1.1793 மற்றும் 16.10.1793 (இந்த வரிசையில்) கொலை செய்யப்பட்டனர். தேசிய நிர்வாக அமைப்பு நிர்வாகத்தை கையெடுத்து, புது சாசனத்தை 1795 ல் அமல் படுத்தியது. இந்த புரட்சி, இதே மன்னராட்சி நிலையில் இருந்த நாடுகளிலும் பரவத்தொடங்கியது.
Q4. மெக்ஸிகன் புரட்சி Mexican Revolution என்பது என்ன?
1910 -- இது ஒரு அரசியல், சமூக, ராணுவ புரட்சி. நவம்பர் 20, 1910ல் ஃப்ரான்சிஸ்கோ ஐ. மடேரோ Francisco I Maderio என்பவர் தலைமையில், சர்வாதிகாரி பொடேரியோ டையஸ் மோரி Poterio Diaz Mori ஆட்சிக்கு எதிராக நடந்த இந்த புரட்சி 1921 வரை நீடித்தது. இதில் சுமார் 9 லட்சம் மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சர்வாதிகார ஆட்சி நீக்கப்பட்டு, மடேரோ நாட்டு தலைவரானர் (இவர் பிறகு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் நீக்கப்பட்டார்).
Q5. ரஷ்யப் புரட்சி Russian Revolution 1917-1922 என்பது என்ன?
1917 – 1922 காலத்தில் நடந்த இந்த புரட்சி இரண்டு நிலைகளில் நடந்தது.
1) இப்புரட்சியின் முதல் பகுதி 1917ல் நடந்து Czar Nicholas II மன்னராட்சியை நீக்கியது.
2) இரண்டாம் பகுதி அக்டோபர் 1917 ல் (இதையே அக்டோபர் புரட்சி எனவும் கூறுவர்) தொடங்கி, உலகின் முதல் கம்யூனிச ஆட்சியை பால்ஷெவிக் Bolsheviks கட்சி, லெனின் தலைமையில் கொண்டு வந்தது. இந்த புரட்சிகள் நடக்க முக்கிய காரணமாயிருந்தவை:
(1) Czar Nicholas II மன்னரின் கொடுங்கோலாட்சி.
(2) உயர்வகுப்பு மக்களும், மன்னர் பரம்பரையினரும் அனைத்து வசதிகளும் பெற்று வளமாய் வாழ, அடித்தள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டது.
(3) தொழிலாளர்கள் உயர்தர மக்களால் கொடுமைப்படுத்துவதற்கு எதிராக கிளர்ச்சி செய்யத்தொடங்கினர்.
(4) லியோ டால்ஸ்டாய் Leo Tolstoy மற்றும் டுர்கெனெவ் போன்ற சிந்தனையாளர்கள், மக்களிடையே சுதந்திர மற்றும் புரட்சி சிந்தனைகளை பரப்பத் தொடங்கினர்.
(5) ரஷ்ய ஜப்பானிய போருக்கு (1904-1905) மன்னரே காரணம் என மக்கள் தீர்மானித்தனர்.
(6) காரல் மார்க்ஸ் ன் சிந்தனைகள் மக்களிடையே, குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரிடம், ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. வகுப்பு பேதமில்லாத ஒரு சமூகத்தை உருவாக்கும் சிந்தனைகள் மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியைத் தூண்டியது. இதன் அடிப்படையில் 1895ல் உருவானது தான் தொழிலாளர்கள் ஜனநாயக கட்சி. பிற்காலத்தில் இக்கட்சி BOLSHEVIKS மற்றும் MENSHEVIKS என்ற இரு பிரிவாக பிரிந்தது.
(7) MENSHIVIKES என்ற பிரிவினரின் தலைவராக அலெக்ஸாண்ட கெரென்ஸ்கி Alexander Kerensky என்பவர் இருந்தார். இப்பிரிவினர் ஒரு மிதவாத பிரிவாக வலுவில்லாமல் இருந்து வந்தது. அதே சமயம் BOLSHVIKS பிரிவினர், எண்ணிக்கையில் அதிகமாகவும், புரட்சி சிந்தனைகளை அடிப்படையாக கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்களின் தலைவராக லெனின் இருந்தார். இப்பிரிவினர் தான் புரட்சியில் முழுமையாக ஈடுபட்டனர்.
இரண்டாம் பகுதியான புரட்சி 7.3.1917 அன்று தொடங்கியது. இதில், ராணுவத்தினர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பங்கு பெற்றனர். புரட்சியின் பின்னணியில் மன்னராட்சி நீக்கப்பட்டு, கெரென்ஸ்கி தலைமையில் மக்களாட்சி தொடங்கியது. ஆனால், கெரென்ஸ்கியின் மிதவாத நடவடிக்கைகளுக்கு மக்களிடையே வரவேற்பில்லை. இதனால் மீண்டும் லெனின் தலைமையில் 1917ல் ஒரு புரட்சி ஏற்பட்டு, கெரென்ஸ்கி ஆட்சி நீக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து லெனின் தலைமையில் ஆட்சி உருவாகி, காரல் மார்க்ஸ் தத்துவங்கள் அடிப்படையில் அதிரடியான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, கம்யூனிச மக்களாட்சி மலர்ந்தது.
Q6. சீனப் புரட்சி Chinese revolution என்பது என்ன?
1919 -- இதை மே (4ந் தேதி) புரட்சி (May 4th என்றும் அழைப்பர். இந்த புரட்சி நவீன சீனாவில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சி. இதன் மூலமே சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் குடியரசும் பிறந்தது.
Q7. ஹங்கேரி புரட்சி Hungarian Revolution என்பது என்ன?
1956 -- அக்டோபர் - நவம்பர் மாதங்களில், ரஷ்ய ஆதரவுடன் நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சி மற்றும் அதன் கொள்கைகளை எதிர்த்து நடந்த புரட்சி. ஆனால், இந்த புரட்சி, அரசாங்கத்தின் இரும்புக் கரங்களால் மிக கொடுமையான முறையில் ஆயிரக்கணக்கான உயிரிழப்புடன் அடக்கப்பட்டது.
Q8. ஏப்ரல் புரட்சி April Revolution என்பது என்ன?
1960 கொரியா -- தென் கொரியாவின், சிங்மன் ரீ Syngman Rhee முதல் குடியரசு ஆட்சியை எதிர்த்து அனைத்து தரப்பினராலும் நடத்தப்பட்ட புரட்சி. இதன் எதிரொலியாக சிங்மன் ரீ Syngman Rhee ராஜினாமா செய்து வேறொரு குடியரசு ஆட்சி தொடங்கியது. இதே பெயரில், ஏப்ரல் 2006ல், நேபாளத்தில், மன்னராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சி, மக்களாட்சி ஏற்பட வழி வகுத்தது.
Q9. கார்னேஷன் புரட்சி Carnation Revolution என்பது என்ன? (Carnation = நறுமண மலர் கொண்ட செடி)
1974 -- போர்ச்சுகல் -- “ESTADO NAVO” என்று அந்நாட்டு மொழியில் அழைக்கப்பட்ட ராணுவ கொடுமை ஆட்சிக்கு எதிராக நடந்த புரட்சி. இது ஏப்ரல் 1974ல் Marcelo Caetano என்பவரால் வழிநடத்தப்பட்டது. இதன் மூலம் ராணுவ ஆட்சி நீக்கப்பட்டது.
Q10. "இரான் இஸ்லாமிய புரட்சி" “Islamic Revolution” என்பது என்ன?
1979 -- ல் இரான் நாட்டில் முகமது ரஸா பஹெல்வி Mohammed Raza Pahelvi (the last Shah of Iran) என்ற மன்னர் 1941ல் இருந்து ஆட்சியிலிருந்து வந்தார். இவருடைய ஆட்சிக் கொள்கைகளும் நடவடிக்கைகளும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக இருந்தது. அதனால் இஸ்லாமிய மத குருக்கள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் இது புரட்சியாக மாறியது. உள் நாட்டுப் போர் நிலைக்கு வந்த போது, மன்னர் நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார். இதன் பின்னணியில் பிப்ரவரி 1979ல் இஸ்லாமிய மத ரீதியான ஒரு புரட்சிகரமான ஆட்சி அயதுல்லா கொமினி Ayatollah Khomeini (இது வரை வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்தவர்) தலைமையில் ஆட்சி அமைந்தது. இஸ்லாமிய இரான் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
Q11. எட்ஸா புரட்சி EDSA Revolution என்பது என்ன?
EDSA (“EPIFANIO DE LOS SANTOS AVENUE” மணிலா நகரின் முக்கிய இடம்) புரட்சி -- 1986: இதை "பிலிப்பைன்ஸ் புரட்சி" என்றும் அழைப்பர். அப்போது அதிபராக ஆட்சியிலிருந்த கொரெஸான் அக்கினோ CORAZON AQINO ஆட்சிக்கு எதிராக நடந்த அமைதியான மக்கள் புரட்சியின் மூலம், அவர் பதவி விலகி, ஃபெர்டினாண்ட் மார்கோ Ferdinand Marcoதலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது.
Q12. வெல்வெட் புரட்சி Velvet Revolution என்பது என்ன?
1989 -- செக் குடியரசு -- நாட்டில், நவம்பர் 16 முதல் 29 வரையில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) எதிராக நடந்த ஒரு அமைதியான புரட்சி. இதன் விளைவாக, இந்த ஆட்சி நீக்கப்பட்டு வடாவ் ஹேவல் Vadav Havel தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (40 ஆண்டுகளுக்குப் பிறகு) மக்களாட்சி மலர்ந்தது.
Q13. ரோஸ் புரட்சி “Rose Revolution” என்பது என்ன?
2003 -- ஜியார்ஜியா -- நாட்டில், எட்வர்ட் ஷெவர்னாட்ஸே அதிபராக இருந்த போது, 2003ல் நடந்த தேர்தலில் பெருத்த முறைகேடுகள் நடந்ததாக கருதப்பட்டு, மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த புரட்சிக்கு இப்பெயர் வரக்காரணம், அதிபர் எட்வர்ட் ஷெவர்னாட்ஸே, 2003 தேர்தலுக்குப் பிறகு நடத்திய முதல் அவைக் கூட்டத்திற்கு வரும் போது, எதிர்க்கட்சியினரும் ஆர்ப்பாட்ட தலைவருமான மைக்கேல் சாக்ஷிவாலி கையில் ரோஜா பூக்கள் மலர் கொத்தை ஏந்தி வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
Q14. ஆரஞ்சு புரட்சி Orange Revolution என்பது என்ன?
2004 -- உக்ரெய்ன் -- நாட்டில் அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் முறைகேடுகள், லஞ்சம், மக்கள் பயமுறுத்தல் போன்ற சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் நடந்ததான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடந்த புரட்சி. இதனால், முதலில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த புரட்சிக்கு இப்பெயர் வரக்காரணம், மக்கள் ஆரஞ்சு வண்ண நாடாவை கையிலேந்தி அமைதியான புரட்சியில் ஈடுபட்டதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q15. துலிப் புரட்சி “Tulip Revolution என்பது என்ன? (துலிப்=மலர்)
2005 -- கிர்கிஸ்தான் -- அதிபர் அஸ்கர் அகயேவ் ன் லஞ்சம் நிறைந்த, கொடுமையான ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய புரட்சி. இதனால் அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார். இப்புரட்சிக்கு இப்பெயர் வரக்காரணம், மக்கள் கையில் துலிப் மலர்களை ஏந்தி புரட்சி நடத்தினர்.
Q16. செடார் புரட்சி Cedar Revolution என்பது என்ன? (Cedar = தேவதாரு மரம்)
2005 -- லெபனான் நடந்த புரட்சி. காரணங்கள்:
1) 14.2.2005 அன்று முன்னாள் பிரதம மந்திரி ரஃபிக் ஹரீரி படுகொலை.
2) சுமார் 13000 சிரிய ராணுவத்தினரை வாபஸ் பெறுவது.
3) லெபனான் அரசியலில் சிரியா நாட்டு தலையீட்டை நிறுத்துவது.
இதன் விளைவாக, சிரிய ராணுவம் வாபஸ் பெறப்பட்டது, சிரியா நாட்டைச் சார்ந்து ஆட்சி நடத்திய ஆட்சி நீக்கப்பட்டது. (செடார் (தேவதாரு) மரம் லெபனான் நாட்டுச் சின்னம், அதனால் இப்பெயர்).
Q17. நீல புரட்சி “Blue Revolution” என்பது என்ன?
2005 -- குவைத் -- நாட்டில், பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட ஒரு அமைதிப் போராட்டம். இந்த போராட்டத்தில் நீல நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் இப்பெயர் பெற்றது. இதைத் தொடர்ந்து, 2007 தேர்தலில், பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.
Q18. ஊதா புரட்சி “Purple revolution” என்பது என்ன?
2005ல் இந்த நாட்டில் நடந்த தேர்தலின் போது வாக்காளர்களின் ஆள் காட்டி விரலில் வைக்கப்பட்ட ஊதா அடையாள மை யை கொண்டு இது அழைக்கப்படுகிறது. ஒரு சிலர் சதாம் உசேனின் ஆட்சியின் முடிவுக்கு வந்ததையும், ஜனநாயகம் முன் வந்ததும் இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் மற்றும் ரஷ்ய தலைவர் வ்ளாடிமிர் புடின் இடையில் 24.2.2008ல் நடந்த ஒரு உச்சி மகாநாட்டு பேச்சு வார்த்தையிலும் பயன்படுத்தியதாக தெரிகிறது.
Q19. ஃப்ரெஞ்ச் புரட்சி நடந்த காலம்.....?
1789 – 1793.
Q20. ஃப்ரெஞ்ச் புரட்சி நடந்த போது மன்னராக இருந்தவர் யார்?
மன்னர் லூயிஸ் XVII.
Q21. "சுதந்திரம், சமத்துவம், தோழமை" “Liberty Equality and Fraternity” இத்தொடரை முன் வைத்தவர் யார்?
ரோஸ்யூ ROSSEAU – ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்.
Q22. ஃப்ரெஞ்ச் புரட்சியின் போது, போராளிகளால் கைப்பிடிக்கப்பட்ட சிறையின் பெயர் என்ன?
பாஸ்டில் சிறைச்சாலை Bastille Prison -- ஜூலை 1789.
Q23. ரஷ்யப் புரட்சி நடந்த காலம் என்ன?
1917 – 1922
Q24. ரஷ்யப் புரட்சியின் போது ஆட்சியிலிருந்த மன்னர் யார்?
Czar Nicholas II.
Q25. ரஷ்யப் புரட்சியின் போது ரஷ்யாவில் தொடங்கப்பட்ட முதல் அரசியல் கட்சி எது?
Workmen’s Socialist Democratic Party 1895.
Q26. ரஷ்யப் புரட்சியின் போது தொடங்கப்பட்ட அரசியல் கட்சியில் இரு பிரிவு இருந்தது. அதில், லெனின் எந்தப் பிரிவை சேர்ந்தவராக இருந்தார்?
“Bolsheviks”. (மற்றொரு பிரிவின் பெயர் “Mensheviks” )
Q27. ஏப்ரல் புரட்சி எந்த நாடு/கள் உடன் சம்பந்தப்பட்டது?
1960 -- தென் கொரியா; 2006 -- நேபாளம்.
Q28. கார்னேஷன் புரட்சி எந்த நாட்டுடன் சம்பந்தப்பட்டது?
போர்ச்சுகல் 1974.
Q29. 1979ல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் போது இருந்த மன்னர் (ஷா) யார்?
முகமது ரஸா பெஹல்வி -- Mohammed Raza Pehelvi.
Q30. EDSA புரட்சி எந்த நாட்டில் நடைபெற்றது?
பிலிப்பைன்ஸ் - 1986
Q31. "வெல்வெட் புரட்சி" “Velvet Revolution” எந்த நாட்டில் நடைபெற்றது?
செக்கோஸ்லோவாகியா Czechoslovakia – 1989.
Q32. ரோஸ் புரட்சி “Rose Revolution” எந்த நாட்டில் நடைப்பெற்றது?
2003 -- ஜியார்ஜியா. போராளிகள் ரோஜா மலரை கையில் ஏந்தி போராடியதால் இப்பெயர்.
Q33. ஆரஞ்ச் புரட்சி “Orange Revolution” எந்த நாட்டில் நடைபெற்றது?
உக்ரெய்ன் -- 2004 -- போராளிகள் ஆரஞ்ச் நாடா கையிலேந்தி போராடினர்.
Q34. துலிப் புரட்சி Tulip Revolution எந்த நாட்டில் நடைபெற்றது?
கிர்கிஸ்தான் -- 2005 -- போராளிகள் துலிப் மலரை கையிலேந்தி போராடியதால் இப்பெயர்.
Q35. செடார் புரட்சி Cedar Revolution எந்த நாட்டில் நடைபெற்றது?
லெபனான் 2005 -- செடார் (தேவதாரு) மரம் லெபனான் நாட்டு சின்னம்.
Q36. நீல புரட்சி -- Blue Revolution எந்த நாட்டுடன் சம்பந்தப்பட்டது?
குவைத் -- 2005 -- பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என போராளிகள் போராட்டத்தின் போது நீல நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
Q37. ஊதா புரட்சி Purple Revolution எந்த நாட்டுடன் சம்பந்தப்பட்டது?
2005ல் இராக் அதிபர் சதாம் உசேன் நீக்கப்பட்டதற்கு இந்த பெயர்.