Khub.info Learn TNPSC exam and online pratice

கண்டங்கள் CONTINENTS

Q1. "பனாஜியா" (PANAGEA) என அழைக்கப்படுவது...
250 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக, பிளவு படாமல் இருந்த ஒரே நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அதற்கு பிறகு நடந்த புவித்தட்டு நகர்வியல் (PLATE TECTONICS MOVEMENT) காரணமாக நிலப்பகுதி பிளவுப்பட்டு, இன்றைய நிலை நிலப்பகுதிகளாக (கண்டங்கள் - CONTINENTS) மாறின.
Q2. கண்டங்கள் நகர்வு - என்பது என்ன?
1915ல் முன் வைக்கப்பட்ட ஒரு த்த்துவத்தின் மூலம், கண்டங்கள் மிக மெதுவாக மேற்கு நோக்கி நகருவதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நகர்வு தொடர்வதால் கூறப்படுகிறது.
Q3. உலக நிலப்பகுதி எத்தனை கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
ஏழு - 1. ஆப்பிரிக்கா, 2. ஆசியா, 3. ஐரோப்பா, 4. தென் அமெரிக்கா, 5. வட அமெரிக்கா, 6. ஆஸ்திரேலியா, 7. அண்டார்டிகா.
Q4. கண்டங்களில் பெரியது, சிறியது எது?
பெரியது - ஆசியா, சிறியது - ஆஸ்திரேலியா.
Q5. கண்டங்கள் பிளவை - CONTINENTAL DIVIDE (மகா பிளவு - GREAT DIVIDE எனவும் அழைக்கப்படும்) எந்த கண்டத்தை பிளவு படுத்துகிறது?
வட அமெரிக்கா
Q6. அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் எது?
ஆப்பிரிக்கா - 54 நாடுகள்.
Q7. அதிகமான ஜனத்தொகை கொண்ட கண்டம் எது?
ஆசியா.
Q8. ஈரப்பதமும் (HUMID) உலர் நிலையும் (DRY) அதிகம் நிறைந்த கண்டம் எது?
அண்டார்டிகா. 96 சதவிகிதப்பகுதிகள் பனிக்கட்டிகளால் உறைந்த நிலை இருந்தும், இந்த கண்டமே அதிக உலர் நிலை (DRY) கொண்ட து.
Q9. பாலைவனம் இல்லாத கண்டம் எது?
ஐரோப்பா.
Q10. மழை பொழிவு இல்லாத உலர் நிலை கொண்ட கண்டம் எது?
அண்டார்டிகா.
Q11. ஆப்பிரிக்காவின் பரப்பளவு எவ்வளவு?
3,02,21,532 ச.கி.மீ. உலக நிலப்பரப்பில் சுமார் 20.4 சதவிகிதம் கொண்ட்து இரண்டாவது மிகப்பெரிய கண்டம்.
Q12. ஆப்பிரிக்க கண்டத்தின் எல்லையை சுற்றியுள்ளது...

வடக்கு - மெடிட்டெரேனியன் கடல் - மத்திய தரைக்கடல்
கிழக்கு - செங்கடல், இந்திய பெருங்கடல்,
மேற்கு - அட்லாண்டிக் பெருங்கடல்,
தெற்கு - தென் கடல்.
Q13. கடல் சூழ்ந்த ஆப்பிரிக்கா எந்த இடத்தில் தரை வழியாக ஆசியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது?
சூயஸ் பகுதியில் உள்ள ஒரு ஒடுக்கமான நிலப்பகுதி. ஆங்கிலத்தில், இவ்வாறாக இரு பெருங்கடலைப் பிரிக்கும் நிலப் பகுதிக்கு "இஸ்துமஸ் - ISTHUMUS" என்பார்கள். இந்த நிலப்பகுதி இல்லையேல் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவைப் போல ஒரு தீவு கண்டமாக இருக்கும்.
Q14. ஆப்பிரிக்காவில் எத்தனை நாடுகள் உள்ளன? அவை யாவை?
54 நாடுகள்.
அவை - 1. அல்ஜீரியா, 2. அங்கோலா, 3. பெனின், 4. போட்ஸ்வானா, 5. பர்கினோஃபாஸோ, 6. புருண்டி, 7. கேமரூன், 8. கேப் வேர்டி, 9. மத்திய ஆப்பிரிக்க்க் குடியரசு, 10. சாட், 11. கொமொரோஸ், 12. ஜன நாயக குடியரசு காங்கோ, 13. காங்கோ குடியரசு, 14. டிஜிபௌத்தி, 15. எகிப்து, 16. இக்குவோட்டரியல் கினி, 17. எரிட்ரியா, 18. எத்தியோப்பியா, 19.கேபோன், 20. காம்பியா, 21. கானா, 22. கினி, 23. கினி பிஸ்ஸாவ், 24. ஐவரி கோஸ்ட், 25. கென்யா, 26. லெஸோத்தோ, 27. லைபீரியா,28. லிப்யா, 29. மடகாஸ்கர், 30. மாளவி, 31. மாலி, 32. மாரிட்டானியா, 33. மொரீசியஸ், 34. மொராக்கோ, 35. மொஸாம்பிக், 36. நமீபியா, 37. நிகர், 38. நைஜீரியா, 39. ரவாண்டா, 40. சாவ் தோமே மற்றும் ப்ரின்ஸிபே, 41. செனேகல், 42. சிஷல்ஸ், 43. சியரா லியோன், 44. சோமாலியா, 45.தென் ஆப்பிரிக்கா, 46. தெற்கு சூடான், 47. சூடான், 48. ஸ்வாஸிலேண்ட், 49. தன்ஸானியா, 50. டோகோ, 51. துனிசியா, 52. உகாண்டா, 53. ஜாம்பியா, 54. ஜிம்பாப்வே."
Q15. ஆப்பிரிக்காவின் முக்கிய நதிகள் யாவை?
நைல், காங்கோ, நிகர்.
Q16. ஆப்பிரிக்காவின் முக்கிய மலைத்தொடர் எது?
கிளிமாஞ்சாரோ. உலக மலைத்தொடர் பரப்பளவில், ஆப்பிரிக்காவில் வெறும் 3 சதவிகிதம் மட்டும் உள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.
Q17. ஆப்பிரிக்காவின் முக்கிய மதங்கள் யாவை?
கிறித்துவம், இஸ்லாம் மற்றும் பழங்குடி நம்பிக்கைகள்.
Q18. ஆப்பிரிக்காவில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடு எது?
தென் ஆப்பிரிக்கா.
Q19. நான் கு பக்கமும் ஒரே நாடால் சூழப்பட்டுள்ள நாடு எது?
லெசோத்தோ. நான் கு பக்கமும் தென் ஆப்பிரிக்காவால் சூழப்பட்டுள்ளது.
Q20. பொருளாதார ரீதியில் ஆப்பிரிக்கக் கண்டம்...
அதிகமான பின் தங்கிய நாடுகள் உள்ளன.
Q21. ஆப்பிரிக்க கண்ட்த்தின் எந்த நாடு சர்வதேச உறவுகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த து?
தென் ஆப்பிரிக்கா. 20ம் நூற்றாண்டின் பெரும் பகுதி, இந்த நாட்டுடன், இனவெறி கொள்கையை பின்பற்றியதற்காக, சர்வதேச உறவு தடை பெற்று இருந்தது.
Q22. ஆப்பிரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் யாவை?
1. நைஜீரியா, 2. அல்ஜீரியா, 3. அங்கோலா, 4. லிப்யா, 5. எகிப்து, 6. சூடான், 7. இக்குவோடேரியல் கினி, 8. காங்கோ குடியரசு, 9. கேபோன், 10. தென் ஆப்பிரிக்கா.
Q23. ஆப்பிரிக்காவில் உள்ள மன்னராட்சி நாடுகள் யாவை?
1. லெசோத்தோ, 2. மொரோக்கோ, 3. ஸ்வாஸிலேண்டு.
Q24. ஆசியாவின் பரப்பளவு என்ன?
4,45,79,000 ச.கி.மீ. உலக நிலப்பரப்பில் சுமார் 30% இடத்தை ஆக்கிரமித்து, இரண்டாவது மிகப்பெரிய கண்டம்.
Q25. ஆசிய கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளன?
48 நாடுகள்
அவைகள் 1. ஆஃப்கானிஸ்தான், 2. அர்மேனிய, 3. அஸர்பைஜான், 4. பஹ்ரைன், 5. வங்காள தேசம், 6. பூடான், 7. ப்ரூனே, 8. கம்போடியா, 9. சீனா, 10. சைப்ரஸ், 11. ஜியார்ஜியா, 12. இந்தியா, 13. இந்தோனேசியா, 14. ஈரான், 15. ஈராக், 16. இஸ்ரேல், 17. ஜப்பான், 18. ஜோர்டான், 19. கஸகிஸ்தான், 20. வடகொரியா, 21. லாவோஸ், 22. குவைத், 23. கிர்கிஸ்தான், 24. லாவோஸ், 25. லெபனான், 26. மலேசியா, 27. மாலத்தீவுகள், 28. மங்கோலியா, 29. மியான்மார், 30. நேபாளம், 31. ஓமன், 32. பாகிஸ்தான், 33. பிலிப்பைன்ஸ், 34. கத்தார், 35. ரஷ்யா, 36. சவுதி அரேபியா, 37. சிங்கப்பூர், 38. ஸ்ரீலங்கா, 39. சிரியா, 40. தஜிகிஸ்தான், 41. தாய்லாந்து, 42. கிழக்கு திமோர், 43. துருக்கி, 44. துருக்குமெனிஸ்தான், 45.ஐக்கிய அரபு நாடுகள், 46. உஸ்பெகிஸ்தான் 47. வியட் நாம், 48. எமென்.
Q26. ஆசிய கண்டத்தில் உள்ள மன்னராட்சி நாடுகள் யாவை?
1. பஹ்ரைன், 2. பூடான், 3. ப்ரூனே, 4. கம்போடியா, 5. ஜப்பான், 6. ஜோர்டான், 7. மலேசியா, 8. ஓமன், 9. கத்தார், 10. சவுதி அரேபியா, 11. தாய்லாந்து, 12. ஐக்கிய அரபு நாடுகள்."
Q27. ஆசியாவை சுற்றியுள்ள எல்லைகள் யாவை?
ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா, பசிபிக் கடல், ஆர்க்டிக் கடல், வட அட்லாண்டிக் கடல்.
Q28. ஆசியாவில் அதிகமாக போற்றப்படும் மதங்கள் யாவை?
இந்து, புத்த, இஸ்லாமிய, கிறித்துவ மதங்கள்.
Q29. ஆசியாவின் முக்கிய நதிகள் யாவை?
பிரம்மபுத்திரா, கங்கை, யாங்ட்சே, ஹ்வாங்ஹோ, யனிசி, அமுர், மெகாங்.
Q30. ஆசியாவின் முக்கிய மலைத்தொடர் எது?
இமாலயத்தொடர். சுமார் 2400 கி.மீ. நீளம். 8000 மீ. க்கு மேல் சுமார் 14 மலைகள் உள்ளன.
Q31. ஆசியாவில் எண்ணெய் வளம் உள்ள நாடுகள் யாவை?
1. சவுதி அரேபியா, 2. சீனா, 3. ஈரான், 4. ஈராக், 5. ஐக்கிய அரபு நாடுகள், 6. குவைத், 7. கஜகிஸ்தான், 8. கத்தார், 9. ஓமன், 10. அஸர்பைஜான், 11. மலேசியா, 12. எகிப்து, 13. வியட் நாம், 14. தாய்லாந்து, 15. துருக்குமெனிஸ்தான், 16. எமென், 17. ப்ரூனே, 18. பாகிஸ்தான், 19. உஸ்பெகிஸ்தான், 20. பஹ்ரைன், 21. துருக்கி, 22. சிரியா, 23. பிலிப்பைன்ஸ், 24. மங்கோலியா, 25. ஜப்பான், 26. வங்காள தேசம், 27. கிர்கிஸ்தான், 28. இந்தியா. ஆசிய நாடுகளில் தான் அதிகமான எண்ணெய் வளம் உள்ளது. 
Q32. ஐரோப்பாவின் பரப்பளவு என்ன?

1,01,80,000 ச.கி.மீ உலகின் நிலப்பரப்பில் சுமார் 6.5 சதவிகிதம்.

Q33. ஐரோப்பாவில் எத்தனை நாடுகள் உள்ளன, அவை யாவை?
50 நாடுகள்.
1. அல்பேனியா, 2. அண்டோரா, 3. அர்மேனியா,4. ஆஸ்திரியா, 5. அஸர்பைஜான், 6. பெலாரூஸ், 7. பெல்ஜியம், 8. போஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா, 9. பல்கேரியா, 10. க்ரோஷியா, 11. சைப்ரஸ், 12. செக் குடியரசு, 13. டென்மார்க், 14. எஸ்தோனிய, 15. ஃபின்லாண்ட், 16. ஃப்ரான்ஸ், 17. ஜியார்ஜியா, 18. ஜெர்மனி, 19. க்ரீஸ், 20. ஹங்கேரி, 21. ஐஸ்லாந்து, 22. அயர்லாந்து, 23. இத்தாலி, 24. கஜகிஸ்தான், 25. லாட்வியா, 26. லிச்சென்ஸ்டீன், 27. லித்துவேனியா, 28. லக்ஸம்பர்க், 29. மாஸெடோனியா குடியரசு, 30. மால்டா, 31. மால்டோவா, 32. மொனார்க்கோ, 33. மாண்டி நீக்ரோ, 34. நெதர்லாந்து, 35. நார்வே, 36. போலந்து, 37. போர்ச்சுகல், 38. ரொமானியா, 39. ரஷ்யா, 40. சான் மரினோ, 41. செர்பியா, 42. ஸ்லோவாக்கியா, 43. ஸ்லோவேனியா, 44. ஸ்பெயின், 45. ஸ்வீடன், 46. ஸ்விட்சர்லாந்து, 47. துருக்கி, 48. உக்ரெய்ன், 49. ஐக்கிய ராஜ்யம், (மகா ப்ரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து). 50. வட்டிகான்."
Q34. ஐரோப்பாவில் உள்ள மன்னராட்சி நாடுகள் யாவை?
1. அண்டோரா, 2. பெல்ஜியம், 3. டென்மார்க், 4. லிச்சென்ஸ்பின், 5.லக்ஸம்பர்க், 6. மொனாக்கோ, 7. நெதர்லாந்து, 8. நார்வே, 9. ஸ்பெயின், 10. ஸ்வீடன், 11. ஐக்கிய ராஜ்யம், 12. வத்திகான் (போப் ஆண்டவரால் ஆளப்படுகிறது).
Q35. ஐரோப்பாவில் அதிகம் போற்றப்படும் மதம் எது?
கிறித்துவம்.
Q36. ஐரோப்பாவின் முக்கிய நதிகள் யாவை?
வோல்கா, டனுபே, ரைன், டூபியர், உரால் மற்றும் டான்.
Q37. ஐரோப்பாவின் முக்கிய மலைத்தொடர்கள் யாவை?
ஆல்ப்ஸ், பைரெனீஸ், உரால்ஸ், கார்பேத்தியான், பால்கன், நெவாடா, காக்கஸ்.
Q38. சமீப காலங்களில் பிளவுபட்ட ஐரோப்பிய நாடுகள் யாவை?
1. டிசம்பர் 1991 : USSR - Union of Soviet Socialist Republics - ஐக்கிய சோவியத் சோஷலிச நாடுகள். பிளவுபட்டு, 15 தனி சுதந்திர நாடுகளாக இயங்கி வருகின்றன.
அவை:
1. ரஷ்யா, 2. உக்ரைன், 3. பெலாரூஸ், 4. கஜகிஸ்தான், 5. உஸ்பெகிஸ்தான், 6. அஸர்பைஜான், 7. ஜியார்ஜியா, 8. மால்டோவியா, 9. லித்துவேனியா, 10. கிர்கிஸ்தான், 11.தஜிகிஸ்தான், 12. அர்மேனியா, 13. லாட்வியா, 14. துருக்குமேனிஸ்தான், 15. எஸ்தோனியா.
2. ஜூன் 1991 - ஏப்ரல் 1992 : முன்னாள் யுகோஸ்லேவியா பிளவுபட்டு கீழ்க்கண்ட நாடுகளாக இயங்கத்தொடங்கின. 1. செர்பியா, 2. க்ரோஷியா, 3. ஸ்லோவேனியா, 4. மாண்டி நீக்ரோ, 5. மாசெடோனியா, 6. பாஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா.
3. 1.1.1993 : முன்னாள் செக்கோஸ்லோவாகியா பிளவுபட்டு செக் குடியரசு மற்றும் ஸ்லோவாகியா என இரு நாடுகளாக இயங்கி வருகின்றன.
Q39. வட அமெரிக்காவின் பரப்பளவு என்ன?
2,47,09,000 ச.கி.மீ. உலக நிலப்பரப்பில் சுமார் 16.5 சதவிகிதம்.
Q40. வட அமெரிக்காவில் உள்ள நகரங்கள் யாவை?
1. ஆண்ட்டிகுவா மற்றும் பர்புடா, 2. பஹாமாஸ், 3. பார்படோஸ், 4. பெலிஸ், 5. கனடா, 6. கோஸ்டரிகா, 7. க்யூபா, 8. டொமினிக்கா, 9. டொமினிக்கன் குடியரசு, 10. ஏல் சல்வேடார், 11. க்ரெனடா, 12. கவுத்தமாலா, 13. ஹைத்தி, 14. ஹொண்டூராஸ், 15.ஜமைக்கா, 16. மெக்சிகோ 17. நிக்கரகுவா, 18. பனாமா, 19. செயிண்ட் கிட்ஸ் 20.செயிண்ட் லூசியா 21. செயிண்ட் வின்சென்ட் மற்றும் க்ரெனாடின்ஸ், 22. ட்ரினிடாட் மற்றும் டொபேகா, 23. ஐக்கிய அமெரிக்க நாடுகள். 
Q41. வட அமெரிக்காவில் உள்ள மன்னராட்சி நாடுகள் யாவை?
1. பஹாமாஸ், 2. பார்படோஸ், 3. பெலிஸ், 4. கனடா, 5. க்ரெனடா, 6. ஜமைக்கா, 7. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 8. செயிண்ட் லூசியா, 9. செயிண்ட் வின்சென்ட் மற்றும் க்ரெனாடின்ஸ்.
Q42. வட அமெரிக்காவின் முக்கிய நதிகள் யாவை?
மிஸ்ஸிஸிப்பி, மிசோரி, மெக்கென்ஸி, செயிண்ட் லாரன்ஸ்.
Q43. வட அமெரிக்காவின் முக்கிய மலைத்தொடர்கள் யாவை?
மௌண்ட் கின்லி, மௌண்ட்லோகன், மௌண்ட் அலியாஸ்.
Q44. தென் அமெரிக்காவின் பரப்பளவு என்ன?
1,78,40,000 ச.கி.மீ - உலக நில பரப்பில் சுமார் 11.8 சதவிகிதம்.
Q45. தென் அமெரிக்க நாடுகள் யாவை?
1. அர்ஜெண்டினா, 2. பொலிவியா, 3. ப்ரேசில், 4. சிலி, 5. கொலம்பியா, 6. இக்குவேடார், 7. கயானா, 8. பாராகுவே, 9. பெரு, 10. சுரி நாம், 11. உருகுவே, 12. வெனிசுலா.
Q46. தென் அமெரிக்காவின் முக்கிய நதிகள் யாவை?
அமேசான், பனாமா, மடேராபுருஸ், ஒரினாகோ, சான்ஃபிரான்ஸிஸ்கோ.
Q47. தென் அமெரிக்காவின் முக்கிய மலைத்தொடர் யாவை?
ஆண்டிஸ் மற்றும் இளம்ப்பு.
Q48. தென் அமெரிக்காவில் முக்கியமாக போற்றப்படும் மதம் யாது?
கிறித்துவம்.
Q49. ஆஸ்திரேலிய கண்டத்தின் பரப்பளவு யாது?
86,00,000 ச.கி.மீ. உலக நிலப்பரப்பில் சுமார் 5.5 சதவிகிதம். எல்லா கண்டங்களையும் விட சிறியது. புவியியல் ரீதியாக லூசியானியா மற்றும் ஆஸ்திரேலேசியா எனவும் அழைக்கப்படுகிறது.
Q50. ஆஸ்திரேலிய கண்டத்தில் அடங்கியுள்ள நாடுகள் யாவை?
1.ஆஸ்திரேலியா, 2. ஃபிஹி, 3. கிரிபாட்டி தீவுகள், 4. மார்ஷல் தீவுகள், 5.மைக்ரோனேசியா, 6. நாவ்ரூ, 7. நியூசிலாந்து, 8. பலாவ், 9. பப்புவா நியூ கினி, 10. சமோவா, 11. சாலமன் தீவுகள், 12. டோங்கா, 13. துவாளு, 14. வனுவாட்டு.
Q51. ஆஸ்திரேலிய கண்டத்தின் முக்கிய ஆறுகள் யாவை?
மர்ரே மற்றும் டார்லிங். இரு ஆறுகளும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ளன.
Q52. ஆஸ்திரேலிய கண்டத்தின் முக்கிய மலைத்தொடர்கள் யாது?
கோசி கஸ்கோ.
Q53. ஆஸ்திரேலிய கண்டத்தில் முக்கியமாக போற்றப்படும் மதம் எது?
கிறித்துவம்.
Q54. அண்டார்க்டிகா கண்டத்தின் பரப்பளவு என்ன?
1,40,00,000 ச.கி.மீ. - உலக நிலப்பரப்பில் சுமார் 9.6 சதவிகிதம். பனிப்பிரதேசம். நாடுகள் எதுவும் கிடையாது. தென் துருவத்தில், தென் கடலால் சூழப்பட்ட பகுதி. இதன் 98 சதவிகித பகுதி பனிக்கட்டி படர்ந்த பகுதி. இது ஒரு பாலைவனமாக கருதப்படுகிறது. இருக்கும் கண்டங்களில் இதுவே மிகவும் குளிரான, உலர்தன்மை நிறைந்த, காற்றோட்டம் அதிகமுள்ள பகுதி. மனித குலம் வாழ முடியாத இப்பகுதியில், ஆராய்ச்சி நிமித்தமாக, சர்வதேச விஞ்ஞானிகள் ஒரு சில ஆயிரம் பேர் எப்போதும் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கென்று பிரத்தியேக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ராணுவ மற்றும் அணுசக்தி ஆய்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
Q55. ஆப்பிரிக்கா கண்டத்தின் உயர்வான மற்றும் தாழ்வான பகுதி எது?
உயர்வு : கிளிமாஞ்சாரோ மலை - 19340 அடி / 5895 மீ கடல் மட்டத்திற்கு மேல் - தன்ஸானியா.
தாழ்வு : அஸ்ஸால் ஏரி - 509 அடி / 155 மீ கடல் மட்டத்திற்கு கீழ் - டிஜிபௌட்டி.
Q56. ஆசிய கண்டத்தின் உயர்வான மற்றும் தாழ்வான பகுதி எது?
உயர்வு : எவரெஸ்ட் சிகரம் - 29029 அடி / 8848 மீ கடல் மட்டத்திற்கு மேல் - இமாலயப்பகுதி - இந்தியா - சீனா.
தாழ்வு : சாக் கடல் - - 1369 அடி / 417.5 மீ கடல் மட்ட த்திற்கு கீழ் - இஸ்ரேல் - ஜோர்டான்.
Q57. ஐரோப்பா கண்டத்தின் உயர்வான மற்றும் தாழ்வான பகுதி எது?
உயர்வு : மவுண்ட் எல்ப்ரோஸ் - 18510 அடி / 5642 மீ கடல் மட்ட த்திற்கு மேல் - ரஷ்யா.
தாழ்வு : காஸ்பியன் கடல் - 92 அடி/ 28 மீ கடல் மட்ட த்திற்கு கீழ் - ரஷ்யா.
Q58. வட அமெரிக்காவின் உயர்வான மற்றும் தாழ்வான பகுதி எது?
உயர்வு : மெக்கின்லி மலை - 20237 அடி/6168 மீ கடல் மட்டத்திற்கு மேல் - அமெரிக்கா.
தாழ்வு : மரண பள்ளத்தாக்கு - 282 அடி / 86 மீ கடல் மட்டத்தின் கீழ் - அமெரிக்கா.
Q59. தென் அமெரிக்காவின் உயர்வான மற்றும் தாழ்வான பகுதி எது?
உயர்வு : அகன்காகுவா மலை - 22841 அடி / 6962 மீ கடல் மட்டத்திற்கு மேல் - அர்ஜெண்டினா.
தாழ்வு : சாந்தா குரூஸ் - 344 அடி / 105 மீ கடல் மட்டத்திற்கு கீழ் - அர்ஜெண்டினா.
Q60. ஆஸ்திரேலிய கண்டத்தின் உயர்வான மற்றும் தாழ்வான பகுதி எது?
உயர்வு : கோஸியஸ்கோ மலை - 7310 அடி / 2228 மீ கடல் மட்டத்திற்கு மேல் - ஆஸ்திரேலியா.
தாழ்வு : அயர் ஏரி - 49 அடி / 15 மீ கடல் மட்டத்திற்கு கீழ் - ஆஸ்திரேலியா.
Q61. அண்டார்க்டிகா கண்டத்தின் உயர்வான மற்றும் தாழ்வான பகுதி எது?
உயர்வு : வின்சன் மலை - 16050 அடி / 4892 மீ கடல் மட்டத்திற்கு மேல்.
தாழ்வு : பெண்ட்லி பனிப்பாறையின் கீழ் - 8382 அடி / 2555 மீ கடல் மட்டத்திற்கு கீழ்.