Khub.info Learn TNPSC exam and online pratice

சர்வதேச எல்லைக்கோடுகள் INTERNATIONAL BORDERS

Q1. ட்யூராண்ட் எல்லைக்கோடு என்பது...
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் - இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு. 1896ல் சர் மார்ட்டிமர் ட்யூராண்ட் என்பவரால் தீர்மானிக்கப்பட்ட எல்லைக் கோடு. ஆப்கானிஸ்தான் இன்றும் இந்த எல்லைக்கோட்டை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Q2. ஜெர்மனி மற்றும் போலந்து - இடையிலுள்ள எல்லைக்கோடு...
1917ல் போடப்பட்ட ஹிண்டன்பெர்க் கோடு . இவர் ஜெர்மன் ராணுவத்தின் உயர் அதிகாரி - ஃபீல்டு மார்ஷல். முதல் உலகப்போர் முடிவில் போடப்பட்ட து.
Q3. ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கிடையில் போடப்பட்ட எல்லைக்கோடு...
மாகினோட் எல்லைக்கோடு. 1929லிருந்து 1938க்குள் கோட்டை சுவர் போல் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 320 கி.மீ - 1969க்கு இந்த கட்டுமானம் வேறு பயன் பாட்டுக்கு விடப்பட்டது. இத்தொடர் எல்லையில் சிறுசிறு கோட்டைகள், சுரங்கங்கள், ரயில்பாதைகள் என பல வசதிகள் இருந்தன. இதை ஜெர்மன் நாட்டு தாக்குதலிலிருந்து தடுத்துக்கொள்ள ஃப்ரான்ஸ் நாடால் கட்டப்பட்ட து. ஆன்ட் ரே மேகினாட் என்ற ஃப்ரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Q4. ரஷ்யா மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கு இடையில் போடப்பட்ட எல்லைக்கோடு எது?
1917ல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, ஃபின்லாந்து ரஷ்ய கட்டுக்குள்ளிருந்து விடுபட்டு சுதந்திரம் அறிவித்தபிறகு, தற்காப்புக்காக, ஃபின்லாந்தால் கட்டப்பட்ட தடுப்பு எல்லைச்சுவர். இது 1920-24 மற்றும் 1932-39க்கிடையில் கட்டப்பட்ட்து. இது ஃபின்லாந்து ராணுவ உயர் அதிகாரி மேனர்ஹூம் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Q5. ரஷ்யா மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கு இடையில் போடப்பட்ட எல்லைக்கோடு எது?
1917ல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, ஃபின்லாந்து ரஷ்ய கட்டுக்குள்ளிருந்து விடுபட்டு சுதந்திரம் அறிவித்தபிறகு, தற்காப்புக்காக, ஃபின்லாந்தால் கட்டப்பட்ட தடுப்பு எல்லைச்சுவர். இது 1920-24 மற்றும் 1932-39க்கிடையில் கட்டப்பட்ட்து. இது ஃபின்லாந்து ராணுவ உயர் அதிகாரி மேனர்ஹூம் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Q6. இந்தியா - சீனாவுக்கிடையில் உள்ள எல்லைக்கோடு...
மேக்மோஹன் எல்லைக்கோடு - இதை நிர்ணயித்தவர் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை காரியதரிசி சர் ஹென்றி மேக் மோஹன். இது பூட்டானிலிருந்து மேற்காக 890 கி.மீக்கும், ப்ரம்மபுத்திராவின் கிழக்காக 260 கி.மீக்கும் செல்கிறது. இந்த எல்லை 1914ல் நடந்த சிம்லா உடன்படிக்கைபடி அறிவிக்கப்பட்டது. சீனா இன்றும் இதை ஏற்றுக் கொள்ளாதிருப்பது குறிப்பிடத்தக்கது. 1962ல் சீனா இந்த எல்லைக் கோட்டை மீறியதால் ஏற்பட்டது இந்தியா சீனா போர்.
Q7. இந்தியா - பாகிஸ்தானுக்கிடையில் உள்ள எல்லைக்கோடு எது?
ராட்கிளிஃப் எல்லைக்கோடு. 17.8.1947 அன்று சர் சிரில் ராட்க்ளிஃப் அவர்களால் தீர்மானிக்கப்பட்டது. வங்காள தேசத்துடன் தற்சமயம் உள்ள எல்லையும் (முன்பு பாகிஸ்தான்) இவராலேயே தீர்மானிக்கப்பட்டது.
Q8. சீக்ஃப்ரைடு எல்லைக்கோடு என்பது என்ன?
ஜெர்மனி ஃப்ரான்ஸ் நாட்டுடன் 1916-17களில் ஏற்படுத்திக்கொண்ட கோட்டை மற்றும் பீரங்கி அறைகளுடன் கூடிய தடுப்புச்சுவர் எல்லை. முதல் உலகப்போரின் போது ஏற்படுத்திக்கொண்ட ஹிண்டென் பெர்க் எல்லையுடன் தொடர்ச்சி. இது சுமார் 630 கி.மீ நீளம் கொண்டது.
Q9. வடக்கு மற்றும் தெற்கு வியட் நாம் நாடுகளுக்கிடையில் இருந்த எல்லைக்கோடு...
1954ல் இந்த இரு நாடுகளுக்குமிடையில் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கோடு. ஜூலை 1976ல் இணைந்த பிறகு இந்த எல்லைக்கோடு பயனற்றதாகி விட்டது.
Q10. 24வது இணைக்கோட்டு எல்லை என்பது...
இந்தியாவுடன் தீர்மானிக்கப்படவேண்டிய எல்லை என பாகிஸ்தான் முன் வைத்துள்ள எல்லைக்கோடு. இதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.
Q11. 38வது இணைக்கோட்டு எல்லை என்பது...
வடக்கு மற்றும் தெற்கு கொரியா நாடுகளுக்கு இடையில் தீர்மானிக்கப்பட்ட எல்லைக்கோடு. 38வது இணை என்பது 38 டிகிரி அட்சரேகைக்கு இணையாக (Parallel) தீர்மானிக்கப்பட்ட எல்லை.
Q12. 49வது இணை என்ற எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கிடையில் உள்ளது?
அமெரிக்கா - கனடா.