Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கர்சன் பிரபு இந்தியப் பல்கலைக்கழகச் சட்டத்தை நிறைவேற்றிய ஆண்டு எது?
Q2. உள்ளாட்சி அரசின் தந்தை என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்?
Q3. பின்வரும் இணைகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்க. 1. சுவாமி விவேகானந்தா - 1893 ம் ஆண்டு சிக்காகோவின் சமய பாராளுமன்றம் 2. எம்.எஸ். சுப்புலட்சுமி - கலை மற்றும் கட்டிடக்கலை 3. அன்னை தெரசா - மத்திய இந்துப்பள்ளி, பனாரஸ் 4. ராஜா ரவிவர்மா - பழமையான ஓவியங்கள்
Q4. 1829ம் ஆண்டு கோட்ட ஆட்சியர் அலுவலகத்தை உருவாக்கியவர் யார்?
Q5. தவறாக பொருந்தியுள்ளதைத் தேர்க : 1. சான்தாலார்கள் கலகம், 1855 2. மாப்ளே கலகம், 1921 3. வேலூர் கலகம், 1806 4. பரக்பூர் சிப்பாய்கள் கலகம், 1804
Q6. தவறானவைகள் எவை? 1. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது. 2. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. 3. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம். 4. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழி கோலியது.
Q7. பொருத்துக: அ. இந்தியாவின் மகாசாசனம் 1. 1883 ஆ. வட்டார மொழிச் சட்டம் 2. 1885 இ. இல்பர்ட் மசோதா 3. 1878 ஈ. இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858
Q8. மங்கள் பாண்டே குறித்த சரியான கூற்றுக்கள் எவை? 1. கொழுப்பு தடவிய துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தார். 2. பெர்காம்பூரில் நிறுத்தப்பட்டிருந்த 19வது பிரிவை சார்ந்த சிப்பாய். 3. பரக்பூரிலிருந்து 34 N.I படைபிரிவைச் சார்ந்தவர். 4. ஆங்கிலேயர்களால் தண்டிக்கப்படவில்லை.
Q9. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை? 1. பேரரசியின் அறிக்கையை 1858 "ஜஹானாபாத்" என்னுமிடத்தில் கானிங் பிரபு புதிய அரசாங்கத்தை முறைப்படி அறிவித்தார். 2. பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் "மகா சாசனம்" என்று அழைக்கப்படுகிறது.
Q10. தமிழ்நாட்டின் முதுபெரும் மனிதர் யார்?
Q11. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q12. பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானவை? 1. இந்தியாவின் முதல் தேசிய கவி - இரவீந்திரநாத் தாகூர் 2. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திரநாத் தாகூர் 3. தேசியகீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - இரவீந்திரநாத் தாகூர்
Q13. தவறான கருத்து எது?
Q14. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : லக்னோ மாநாடு 1916ம் ஆண்டு காங்கிரஸ் - லீக் உடன்பாட்டை செய்து கொண்டது. காரணம் : காங்கிரஸ் - லீக் உடன்பாடு ஒரு சாதனையாகக் கருதப்பட்டாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
Q15. இந்துஸ்தான் சோஷலிச குடியரசு கட்சியைத் தோற்றுவித்தவர் யார்?
Q16. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1906ம் ஆண்டு கல்கத்தா அமநாட்டில் தாதாபாய் நௌரோஜி, சுதேசி மற்றும் சுயராஜ்யம் பற்றி அறிவித்தார். காரணம் : அதே ஆண்டில் வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.
Q17. பொருத்துக: அ. கல்கத்தா காங்கிரஸ் (1928) 1. அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார கொள்கை மீதான தீர்மானம் ஆ. லாகூர் காங்கிரஸ் (1929) 2. இருநாடு கொள்கை இ. கராச்சி காங்கிரஸ் (1931) 3. டொமினியன் அந்தஸ்து ஈ. ராம்கார் காங்கிரஸ் (1940) 4. முழு சுதந்திரம்
Q18. சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர் யார்?
Q19. பொருத்துக: அ. டச்சுக்காரர்கள் 1. கோவா ஆ. ஆங்கிலேயர்கள் 2. நாகப்பட்டினம் இ. போர்ச்சுகீசியர்கள் 3. ஹூக்ளி ஈ. பிரெஞ்சுக்காரர்கள் 4. பாண்டிச்சேரி
Q20. கி.பி. 16ம் நூற்றாண்டின் தென்னிந்திய வாணிபம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை? 1. மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் மசூலிப்பட்டினத்தில் இருந்தது. 2. நாசபூர் என்ற கப்பல் கட்டும் தளம் குறைவாக பயன்படுத்தப்பட்டது. 3. மேற்குக் கடற்கரைப் பகுதியில் கிராங்கனூர் மற்றும் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் இருந்தது. 4. வட மாநிலங்களைப் போன்றே கப்பல் கட்டும் தளமானது மன்னரின் உடமையாக இருந்தது.
Q21. சைமன் கமிஷன் சென்னை மாகாணத்திற்கு வருகை தந்தபோது, அதன் முதலமைச்சராக இருந்தவர் யார்?
Q22. India Wins Freedom -என்ற நூலை எழுதியவர் யார்?
Q23. பொருத்துக: அ. வாரன் ஹேஸ்டிங்ஸ் 1. மங்களூர் உடன்படிக்கை ஆ. சர்ஜான் ஷோர் 2. ஹபீஸ் ரகமத் கான் இ. தோஸ்த் முகமது 3. தலையிடாக் கொள்கை ஈ. மெக்கார்ட்னே பிரபு 4. ஆக்லண்ட் பிரபு
Q24. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரரிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள். காரணம் : மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கள்தொகை பெருக்கமும், கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளைநிலங்களின் தேவை பெருகியது.
Q25. வரதட்சணை ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Q26. 1923ல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற பின் சென்னை மாகாணத்தில் முதலமைச்சராகப் பதவியேற்றவர் யார்?
Q27. நீதிக்கட்சி ஆட்சியில் எந்த ஆண்டு இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
Q28. தீண்டாமை எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Q29. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1878ம் ஆண்டின் வட்டார மொழி பத்திரிகைச் சட்டம் இரகசியமாக உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியப் பேரரசின் மைய சட்டமன்றத்தில் ஒரே அமர்வில் நிறைவேற்றப்பட்டது. காரணம் : அமிர்த பஜார் பத்திரிகை அதுவரை வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இரவோடு இரவாக இது ஆங்கிலப் பத்திரிகையாக மாற்றப்பட்டு விட்டது.
Q30. பொருத்துக: அ. மகாத்மா காந்தி 1. இந்திய சேவகர்கள் அமைப்பு ஆ. ஜவஹர்லால் நேரு 2. இந்திய கருத்துவம் இ. B.P. வாதியா 3. A I T U C ஈ. V.S. ஸ்ரீனிவாச சாஸ்திரி 4. சென்னை தொழிலாளர் சங்கம்
Q31. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : திருமண விருப்ப மசோதா பியரம்ஜி மலாபாரியின் முக்கியமான சாதனையாகும். காரணம் : இந்த மசோதா சீர்திருத்தத்திற்கும், தேசிய இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத இணைப்பை உருவாக்கியது.
Q32. பொருத்துக: அ. வேதம் நோக்கிச் செல் 1. அப்துல் கபார் கான் ஆ. இந்தியாவின் தேசப்பற்றுத் துறவி 2. டி.கே. கார்வே இ. எல்லைப்புற காந்தி 3. சுவாமி விவேகானந்தர் ஈ. இந்து விதவைகள் இல்லம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
Q33. ஆங்கிலேயர்கள் தீவிரவாதிகளை அடக்குவதற்காக கொண்டு வந்த சட்டங்கள் பற்றிய விபரங்களில் எவை தவறானவை?
Q34. பின்வருவனவற்றில் தவறானவை எவை? 1. புருசோத்தம்தாஸ் டாண்டன் - 1950ல் காங்கிரஸ் தலைவர் 2. காங்கிரஸின் ஆவடி மாநாடு - 1963 3. காமராசர் திட்டம் - 1955 4. காமராசர் - 1963 ல் காங்கிரஸ் தலைவர்.
Q35. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1947ல் இந்தியா விடுதலை அடைந்ததும் இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு. காரணம் : ஒன்று வறுமையை ஒழிப்பது, இரண்டு கல்வியைப் பரப்புவது.
Q36. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை 1858ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி அலகாபாத்தில் நடந்த தர்பாரில் (கூட்டம்) வெளியிட்ட தலைமை ஆளுநர் யார்?
Q37. பொருத்துக: அ. சர்தார் வல்லபாய் பட்டேல் 1. முதல் கவர்னர் ஜெனரல் ஆ. பி.ஆர். அம்பேத்கார் 2. இந்திய பிஸ்மார்க் இ. மௌண்ட்பேட்டன் பிரபு 3. சுயராஜ்ய கட்சி ஈ. மோதிலால் நேரு 4. அரசியல் அமைப்பு விரைவுக் குழு
Q38. சிவகங்கைச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q39. பின்வரும் நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக. 1. பூனா தன்னாட்சிக் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு. 2. காகோரி வழக்கு முடிவுற்ற ஆண்டு. 3. சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட ஆண்டு. 4. சத்யபால் மற்றும் கிச்சுலு பஞ்சாப் அரசால் நாடு கடத்தப்பட்ட ஆண்டு.
Q40. கீழ்க்கண்ட வாக்கியங்களை கால வரிசைப்படுத்துக. 1. முதல் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. 2. ஒத்துழையாமை இயக்கத்தை சௌரிசௌரா நிகழ்வைத் தொடர்ந்து காந்தியடிகள் இடையிலேயே நிறுத்தி வைத்தார். 3. காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகலை, முஸ்லிம் லீக் விடுதலை நாளாகக் கொண்டாடியது. 4. காபினட் தூதுக்குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது.
Q41. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது? 1. இந்திய சங்கம் - நேதாஜி 2. செல்வ சுரண்டல் கோட்பாடு - தாதாபாய் நௌரோஜி 3. இந்திய பணியாளர் சங்கம் - மகாத்மா காந்தி 4. அபிநவ பாரத் - பிரோஸ் ஷா மேத்தா
Q42. செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் யார்?
Q43. பொருத்துக: அ. சூரத் பிளவு 1. 1927 ஆ. ஆகஸ்ட் அறிக்கை 2. 1923 இ. சுயராஜ்யக் கட்சி 3. 1917 ஈ. சைமன் தூதுக்குழு அமைத்தல் 4. 1907
Q44. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை? 1. இந்திய அரசுச்சட்டம், 1935ம் ஆண்டு மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது. 2. இந்தியா கவுன்சில் 1935ல் தொடங்கப்பட்டது. 3. மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது. 4. 1935 ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
Q45. தந்தி முறை மற்றும் மலிவான தபால் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Q46. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1909ம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் மறைமுகத் தேர்தலைப் புகுத்தியது. காரணம் : இச்சட்டம் முஸ்லிம்களுக்கான, தனித்தொகுதியை உண்டாக்கியது.
Q47. பெண்டிங் பிரபு எந்த ஆண்டு ஆங்கில மொழியை இந்தியாவின் அலுவலக மொழியாக மாற்றினார்?
Q48. பொருத்துக: அ. நேரு 1. மண்டல் பரிந்துரை ஆ. இந்திராகாந்தி 2. காட் ஒப்பந்தம் இ. வி.பி. சிங் 3. அவசர நிலை ஈ.பி.வி. நரசிம்மராவ் 4. இந்திய - சீன போர்
Q49. 1863ம் ஆண்டு கொல்கத்தாவில் முகமதியர் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்தவர் யார்?
Q50. கீழ்க்கண்ட எந்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகம் மைய ஆட்சியை ஏற்படுத்தியது? 1. ஒழுங்கு முறைச் சட்டம் - 1773 2. பிட் இந்தியச் சட்டம் - 1784 3. பட்டயச் சட்டங்கள்.