அன்புத் தோழர்களே,

"முயற்சித் திருவினையாக்கும்", முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்", விடாமுயற்சி வெற்றி தரும்" -- என நமது முன்னோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். வெறும் முயற்சி வீண். பயிற்சியுடன் சேர்ந்த முயற்சியே வெற்றி தரும் என்பது அனுபவ பூர்வ உண்மை.

பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி மறைந்த தற்காப்புக் கலை மாமேதை ப்ரூஸ் லீ அவர்களைப்பார்த்து "நீங்கள் யாருக்கு மிகவும் பயப்படுவீர்கள்?" எனக் கேட்ட போது, அவர் அளித்த பதில், " 10000 தற்காப்பு முறைகளை பயின்றவரிடம் நான் பயப்பட மாட்டேன். ஆனால், ஒரு தற்காப்பு முறையை 10000 முறை பயிற்சி செய்தவரிடம் நிச்சயமாக பயப்படுவேன்" என பதில் அளித்தார். இதிலிருந்து பயிற்சியின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

வேலை சார்ந்த போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல பணியில் அமர்வது ஒவ்வொரு இளைஞனுக்கும் உண்டான கனவு. இதற்கு, இன்றைய நிலையில் பல விதமான புத்தகங்கள், பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் பயிற்சி பெற முடிந்த போதிலும், இவற்றுக்கான செலவினம், புத்தகங்களின் விலை, எடை, நேரம், போக்குவரத்து என பல அசௌகரியங்கள் உள்ளன. மேலும் புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு விவரங்கள் மட்டுமே அளிப்பது மட்டுமின்றி , அன்றாட மாற்றங்கள் உடனடியாக பிரதிபலிக்காது. காகிதங்கள் பயன்பாட்டை குறைப்பதினால், சுற்றுப்புற சூழ்நிலை மேம்பாட்டுக்கு நம்மால் முடிந்ததை செய்ய முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நீங்கள் இல்லத்தில் இருந்தபடியே, கணினி மற்றும் இணையதளம் மூலம் அளவில்லா பயிற்சி பெறும் வகையில் இந்த வலை தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளம், IAS (Prelim), TNPSC (all groups), IBPS, BANK, LIC, NDA, CDS, RRB மற்றும் இதர போட்டித்தேர்வுகளுக்கு, பொதுப் பாடத்திற்கு (General Studies), மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

இல்லப்பக்கம்: HOMEPAGE: இப்பகுதி, படிப்பதற்காகவே, பல் வேறு தலைப்புகளில், கேள்வி-பதில் வடிவத்தில், எளிய முறையில் புரிந்து கொள்ளும்படியாக, பல ஆயிரம் கேள்வி பதில்களுடன், அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புத்தகங்களுக்கான செலவு, புத்தகப்பளு தூக்குதல் போன்றவை தடுக்கப்படுகிறது.

பலவிடை கேள்விகள்: MCQ PRACTICE SITE: தலைப்பு வாரியாக பல ஆயிரம் பல்விடை கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சியில், தலைப்பு வாரியாகவும், அனைத்து தலைப்பு கேள்விகள் கலந்த முறையிலும் (RANDOM TEST) பயிற்சி செய்யலாம். விரைவில், உண்மைத் தேர்வு பாணியில், நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய பயிற்சி செய்யவும், வசதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம், நீங்கள் உங்கள் பயிற்சி முறையில் அதிக நேரம் செலவிடவும், வேறு செலவினங்களையும் குறைக்க வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில், இந்த தளத்தில் பல்லாயிரம் கேள்விகள் (பல தேர்வுகளில் கேட்கப்பட்டவை, கேட்கக் கூடியவை) கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே தளத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழில் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே தளம் என்பதை சற்று பெருமையுடன் முன் வைக்கிறோம்.

உங்கள் மேலான ஆதரவு, எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்து, மேலும் பல புதுமைகளை புகுத்த உதவும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு - 7418314448 - என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

பொறுப்பு துறப்பு: DISCLAIMER: இவ்வளவு பெரிய தளத்தின் அதிகமான தகவல்களை சேகரித்து அளிக்கும் போது, தவறுகள் ஏற்படாமல் இருக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், எங்கள் முயற்சிகளை மீறி ஒரு சில இடங்களில் தவறுகள் ஏற்பட்டிருப்பின், சுட்டிக்காட்டுங்கள் - திருத்திக்கொள்கிறோம்.

உங்கள் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்களுடன், நன்றிகளை உரித்தாக்குகிறோம்.