Khub.info Learn TNPSC exam and online pratice


புத்தமதம். BUDDHISM

Q1. புத்தமதம் என்பது என்ன?
"புத்த தர்மம்" அல்லது "தர்மம்" - அல்லது "விழிப்புணர்ச்சி பெற்றவர்".

Q2. புத்த மதத்தை நிறுவியவர் யார்?
சித்தார்த்தா கௌத்தமா - அல்லது கௌத்தம புத்தா - கி.மு. 5 வது நூற்றாண்டு. (கி.மு.525)
Q3. புத்தர் எங்கு பிறந்தார்? புத்தரின் பெற்றோர் யார்?
கி.மு.563ல், நேபாளத்தில் லும்பினி என்ற இடத்தில், (சால் மரத்தடியில்) சாக்யா ராஜ்ய மன்னர் சுத்தோதனா மற்றும் ராணி மாயா தம்பதியினருக்கு பிறந்தவர்.
Q4. புத்தர் எங்கு "ஆன்மீக எழுச்சி" (Enlightenment) யை பெற்றார்?
பீஹார் மாகாணத்தில் உள்ள போத் கயா என்ற இடத்தில், அரச மரத்தடியில், 49 நாட்கள் தவத்திற்கு பின், இவர் ஆன்மீக எழுச்சி பெற்றார். இது "போதி" என்று அழைக்கப்படுகிறது.
Q5. கௌத்தம புத்தர், இளவரசராக எங்கு 29 ஆண்டுகள் தங்கியிருந்தார்?
கபில வாஸ்து.
Q6. கௌதம புத்தர் எங்கு தன்னுடைய ஆன்மீக வாழ்க்கையை தொடங்கினார்?
ராஜகிருகம்.
Q7. புத்தரின் மனைவி மற்றும் அவரின் மைந்தரின் பெயர் என்ன?
மனைவி: யசோதரா; மைந்தன் - ராகுல்.
Q8. கௌத்தம புத்தர் எங்கு இறந்தார்?
குஷிநகர் - உத்திரபிரதேசம் - கி.மு.483.
Q9. புத்த மதத்தில் உள்ள முக்கிய பிரிவுகள் யாவை?
மஹாயானா: இப்பிரிவை கிழக்கத்திய புத்த மதம் அல்லது சீன புத்த மதம் என்றும் அழைப்பர். இந்தியாவில் தொடங்கி, சீனா, இந்தோனேசியா, வியட்நாம், கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பரவியது. இப்பிரிவினர் புத்தரின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொழுகின்றனர்.
ஹினாயானா: இப்பிரிவினர் புத்தரை ஒரு கடவுளாக அதிக முக்கியத்துவம் அளித்து தொழுகின்றனர்.
தெரவாடா: தென் கிழக்கு மற்றும் பாலி புத்த மதம் என அழைக்கின்றனர். முக்கியமாக ஸ்ரீலங்கா, மியான்மார், லாவோஸ் மற்றும் தாய்லாந்து மற்றும் சில நாடுகளில் இந்த பிரிவினர் வாழ்கின்றனர். புத்த மத்த்தின் மிக பழமையான பிரிவு என கூறப்படுகிறது.
வஜ்ராயானா: இப்பிரிவினரை வடக்கு, மொங்கோலியன், திபேத்தியன், லாமா புத்த மதம் என அழைக்கிறார்கள்.
Q10. புத்த மத துறவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
சங்கா.
Q11. புத்த மதத்தின் புனித நூல் எது? அதில் உள்ள பிரிவிகள் யாவை?
திரிபீடகா -- இதில் மூன்று பிரிவுகள் உள்ளன.
(1) வினயாபீடிகா: புத்த ஆண், பெண் துறவிகள கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.
(2) சூத்ரபீடிகா: புத்தரின் போதனைகள்
(3) அபிதம்மா பீடிகா: தத்துவ பாடங்களின் தொகுப்பு.
Q12. புத்த மதத்தின் புனித நூல் மற்றும் இதர சுவடிகள் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தன?
பாலி.
Q13. திரிபீடிக - த்தை தவிர்த்து மற்ற புத்த புனித நூல்கள் யாவை?
தம்மபாதா: 26 பிரிவுகளில், 423 செய்யுள் தொகுப்புகளைக் கொண்டது.
புத்த கோஷா: தம்ம பாதத்தில் உள்ள செய்யுள் வரிகளுக்கு ஏற்ற கதைகள்.
Q14. புத்த மத கொள்கைகள் கூறும் நான்கு முக்கிய உண்மைகள் யாவை?
(1) துன்பம் (2) துன்பத்தின் காரணம் (3) துன்பத்தை ஒழித்தல் (4) துன்பத்தை ஒழிக்க உதவும் பாதைகள்.
Q15. புத்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள எட்டு உயர்ந்த வழிகள் யாவை?
இந்த எட்டு வழிகள் மனித குல நடவடிக்கைகளில் மூன்றாக பிரிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.
(அ) சிலா: மனித குல அன்றாட நடவடிக்கை - (1) தூய்மையான பேச்சு (2) தூய்மையான செயல் (3) தூய்மையான வாழ்க்கை.
(ஆ) சமாதி: இதுவும் மூன்று பிரிவாக பரித்து சொல்லப்பட்டுள்ளது -- (4) சரியான முயற்சி (5) சரியான ஞானம் (6) சரியான கவனம்
(இ) ப்ரஜினி: - அறிவு -- (7) தூய்மையான எண்ணம் (8) சரியான புரிதல்.
Q16. புத்த மத போதனைகளில் எவை "மூன்று வைரங்கள்" (Three Jewels) எனப்படுகின்றன?
(1) புத்தா: புத்தரின் உயர்ந்த போதனைகளையும், எட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடித்து ஆன்மீக உயர்வை (போதி) அடைவது.
(2) தர்மா: புத்தர் வகுத்த போதனைகளை பரிபாலனம் செய்வது.
(3) சங்கா: புத்த மத துறவிகள் - ஆன்மீக உயர்வின் முதல் படியை எட்டியவர்களாக கருதப்படுபவர்.
Q17. புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள எட்டு நற்சகுன அடையாளங்கள் யாவை?
(1) பாரசோல் (குடை - Umbrella)
(2) தங்க மீன் (Golden Fish)
(3) செல்வ கருவூலம் (Treasure Vase)
(4) தாமரை (Lotus)
(5) சங்கு (Conch Shell)
(6) முடிவில்லா முடிச்சு (Endless Knots)
(7) வெற்றி கொடி (Victory Banner)
(8) தர்ம நெறிகள் (Dharma)
Q18. புத்த மதத்தில் பயனில் உள்ள பல தொடர்களும், அவற்றின் பொருளும் என்ன?
அர்ஹத்/அர்ஹந்த் -- ARHAT/ARAHANT: புத்த மத ஆன்மீக போதகர்.
அனிக்கா -- ANICCA: உலகின் அனைத்துப் பொருட்களும் முக்கியமானவை
அனத்தா ANATTA: That the perception of a constant self is an illusion.
துக்கா DUKHA: That all beings suffer from all situations due to unclear mind.
கர்மா -- KARMA: ஒருவரின் செயல்கள், யோசனைகள் போன்றவை.
வினயா -- VINAYA: ஒழுங்கு/கட்டுப்பாடு (பாலி மொழியில்). இது புத்த துறவிகளுக்கான(சங்கா) நடைமுறை விதி முறைகள். இதில் சுமார் 227 விதிகள் உள்ளன. இதை ""வினய பீடிகா"" எனக் கூறுவர்.
விபாசனா -- VIPASNA: தியான முறைகள்.
நிர்வானா -- NIRVANA: மோகம், கோபம், ஆசை போன்றவைகளிலிருந்து விடுபடுதல்.
பரிநிர்வானா -- PARINIRVANA: நிர்வானா நிலையிலிருந்தும் விடுபடுதல் -- அதாவது முக்தி (மரணம்).
விட்டாலிகா -- VITALIKAS : புத்த மத பாடகர்கள்
விஹாரா -- VIHARA: புத்த மத போதகர்களின்/துறவிகள் தங்குமிடம்.
Q19. புத்த மத மாநாடுகள் எப்போது/ எங்கெல்லாம் நடைபெற்றன?
1. கி.மு. 5 ஆம் நூற்றாண்டு: மன்னர் அஜாத சத்ரு காலத்தில், ராஜ கிருஹா வில் ஒரு குகையில் (இன்றைய ராஜ்கீர், பீஹார்) என்ற மகத சாம்ராஜ்ய தலைநகரத்தில் நடைபெற்றது.
2. கி.மு. 383 : வெசால் (இன்றைய வைஷாலி, பீஹார்) என்ற இடத்தில் நடந்தது.
3. கி.மு. 250 : பாடலிபுத்ரா (இன்றைய பாட்னா, பீஹார்). மன்னர் அசோகர் ஆதரவில் நடைபெற்றது.
4. கி.மு. 30 : இரண்டு மகாநாடுகள் நடந்தன. முதல் மகாநாடு, இலங்கையிலும், இரண்டாவது காஷ்மீரில் குஷானா வம்ச அரசர் கனிஷ்கா தலைமையில் நடைபெற்றது.
5. 1871: மியான்மார் மன்னர் மிண்டான் தலைமையில் நடைபெற்றது.
6. 1954 (17th May): மீண்டும் பர்மாவில் அரசாங்க ஆதரவுடன் நடைபெற்றது. முதல் மகாநாடு நடந்த குகையை போல் ஒன்று கட்டப்பட்டது. அதன் பெயர் -- மகா பாசான குகை.
Q20. புத்தர் அவருடைய முதல் பிரசங்கத்தை நடத்தினார்?
சாரநாத்.
Q21. போத் கயா -- பீஹார் -- எங்கு அமைந்துள்ளது?
கங்கையின் துணை நதியான, ஃபல்கு நதிக்கரையில் அமைந்துள்ளது.
Q22. திபெத்தில் உள்ள புத்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
லாமா.
Q23. தற்போது, திபெத் புத்தமதத்தினவரின் தலைமை குரு யார்?
தலாய் லாமா -- 14வது மத குரு.
Q24. "புத்தா" என்பதன் பொருள் என்ன?
அறிவொளி/ஞானம் பெற்றவர்கள்.
Q25. புத்தர்கள் வழிபாடு நடத்தும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பகோடா -- Pagodas.
Q26. புத்தரின் பிறந்த நாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேசக் Vesak – புத்த பூர்ணிமா.
Q27. புத்தமத முதல் மத போதகர் யார்?(அரஹந்த்)
கௌண்டின்யா.
Q28. புத்தர் எதிர் காலத்தில் ஒரு அறிவொளி/ஞானம் பெற்றவராக விளங்குவார் என முதலில் கணித்தார்?
கொண்டண்ணா, ஒரு பிராமண அறிஞர். கொண்டன்னா பிற்காலத்தில் புத்த மதத்தின் முதல் போதகர் ஆனார்.
Q29. ""தர்ம சக்ரா ப்ரவர்த்தன சூத்ரா"" “Dharma Chakra Pravartana Sutra” என்ற புத்தமத வேத நூல் எதைப் பற்றியது?
புத்த மதத்தின் நான்கு உன்னத உண்மைகளையும், எட்டு வழிப் பாதைகளும் பற்றியது.
Q30. புத்தர் எங்கு ப்ரிநிர்வானா நிலையை அடைந்தார்?
குஷினாரா வனம், பீஹார்.
Q31. எந்த மன்னர் தனது ராஜ்ய பதவியையே புத்தருக்கு அளிக்க விரும்பிய போது, புத்தர் அதை தாழ்மையுடன் நிராகரித்தார்?
பிம்பிசாரா மன்னர்.
Q32. புத்தரின் குதிரையின் பெயர் என்ன?
கண்டகா.
Q33. பொதுவாக புத்தரின் சிலைகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன?
8 இதழ்கள் கொண்ட தாமரையின் மீது அமர்ந்த நிலையில்.
Q34. ஜப்பானில் “Zen” என்பது புத்த மதத்துடன் எவ்வாறு தொடர்புடையது?
ஜப்பானில் புத்தமத வழிபாட்டில் ஒரு பிரிவு.
Q35. புத்த மதத்தின் மிகப்பெரிய கோவில் எது?
ஆங்கோர் வாட் -- Angkor Vat: கம்போடியா (கம்பூச்சியா)
Q36. Where is the tallest Buddha statue?
153 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை -- சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது. இதை நிறுவ சுமார் 11 வருடங்கள் 1997 - 2008 ஆயிற்று.
Q37. புத்தரின் "புனிதப் பல்" கோவில் எங்குள்ளது?
கண்டி, இலங்கை. சிங்கள மொழியில் ""ஸ்ரீ தளடா மளநாவா"" என அழைக்கப்படுகிறது. புத்தரின் தகனத்தின் போது மீட்கப்பட்ட ஒரு பல் இங்கு வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இது ஐ.நா. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் புராதனச் சின்னம்.
Q38. திபெத்தில் புத்தமதம் தோன்றியதாக கருதப்படும் இடம் எது?
சாம்யே, திபெத். இங்குள்ள புத்த மடம், கி.பி. 775-779 காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இதுவே திபெத்தில் கட்டப்பட்ட முதல் மடம்.
Q39. ஒரு குறிப்பிட்ட போருக்குப் பின், புத்த மதத்திற்கு மாறிய இந்தியாவின் புகழ் பெற்ற மன்னர் யார்?
கலிங்கப் போருக்கு பிறகு, மன்னர் அசோகர், புத்த மதத்தைத் தழுவினார்.
Q40. புத்த மதம் எந்த மதத்திலிருந்து பிறந்ததாக கருதப்படுகிறது?
இந்து மதம்.
Q41. கௌதம புத்தரின் முதல் இரண்டு சீடர்கள் யாவர்?
மகா மொக்கலான் மற்றும் மகா சரிபுட்டா.
Q42. திபெத்தில் புத்த மதத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியவர் யார்?
பத்ம சம்பவா. 8 வது நூற்றாண்டில், புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவை, பூட்டானிலிருந்து இங்கு எடுத்துச் சென்று பரப்பினார்.
Q43. புத்த மதத்தில் "த்யானி புத்தர்" “Dyani Buddhas” போற்றப்படுகிறது?
ஐந்து.
Q44. இந்தியாவின் மிகப் பெரிய புத்த மடம் எங்குள்ளது?
தவாங் Tawang, அருணாச்சல பிரதேசம்.
Q45. புத்தா, தர்மா மற்றும் சங்கா, புத்த மதத்தின் என்னவாக கருதப்படுகிறது?
ஆபரணங்கள்.
Q46. புத்த மதத்தின் பல விழாக்கள் யாவை?
ஆசாலா பூஜா, பும்ச்சு, புத்த பூர்ணிமா, சொட்ருல் துச்சென், த்ருப்கா தேஷி, கத்திமா, லபாப் டச்சென், மோன்லாம், பரிநிர்வானா நாள், பவரானா, பாய் சாங்க் லாங்க், உபோசதா, வஸ்ஸா, வேசக்.
Q47. ஆஸாலா பூஜா அனுசரிக்கப்படுவது ….
புத்தரின் முதல் சொற்பொழிவையும், புத்த சங்கா அமைப்பு உருவானதை போற்றுவதற்காக நடத்தப்படும் விழா.
Q48. பும்ச்சு - Bhumchu விழா புத்த மதத்தில் அனுசரிக்கப்படுவது …..
எதிர்காலத்தை கணிக்கும் ஒரு விழா -- பிப்ரவரி/மார்ச் மாதங்களில் அனுசரிக்கப்படுகிறது.
Q49. புத்தரின் பிறந்தநாள் எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?
புத்த பூர்ணிமா.
Q50. சோட்ருல் டச்சென் - Chotrul Duchen, என்பது எவ்வகை விழா?
திபெத்தில் மட்டும் அனுசரிக்கப்படுகிறது. புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை போற்றும் விதமாக அனுசரிக்கப்படும் விழா.
Q51. கத்திமா Kathima என்பது எவ்வகை திருவிழா?
புத்த துறவிகளுக்கு நன்றி சொல்லும் விழா - மடாலயங்களில் நடத்தப்படுகிறது.
Q52. லபாப் டச்சென் - “Lhabab Duchen” என்பது எவ்வகை விழா?
திபெத்தில் மட்டும். புத்தர் மேலுலகிலிருந்து கீழுலகுக்கு (பூமிக்கு) வந்ததை போற்றும் வகையில்.
Q53. புத்தர்களின் மோன்லாம் - Monlam விழா என்பது ……..
புத்த துறவிகள் அனைவரும் ஒன்று கூடி வழிபாட்டில், திபெத்தின் லாசா நகரில் உள்ள ஜோகங் மடத்தில் நடத்தப்படும் விழா.
Q54. பரிநிர்வான நாள் என்பது ………..
புத்தர் பரிநிர்வான் நிலையை அடைந்ததை போற்றும் வகையில், பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் விழா.
Q55. பவரானா என்பது எவ்வகை விழா?
புத்த துறவி, உண்ணாவிரத நாட்களில், ஏதேனும் தவறு செய்திருப்பின் அதற்காக மன்னிப்பு கோருவது.
Q56. பாய் சேங்க் லாங் -- “Poy Sang Lang” என்பது மியான்மாரில் அனுசரிக்கப்படும் விழா. எதற்காக?
7 முதல் 14 வயதுக்குள் உள்ள சிறுவர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்தில், புத்த மட வாழ்க்கை நடத்துவதாக பிரமாணம் எடுத்துக் கொள்ளுதல்.
Q57. உபோசதா “Uposatha” என்பது ……
வங்காளதேசம், மியான்மார், இலங்கை மற்றும் தாய்லாந்து நாட்டில் வாழும் தெரவாடா பிரிவு புத்த மதத்தினரால், மனதையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு நடவடிக்கை.
Q58. வாஸா -- Vaasa என்ற விழா ……….
மழைக் காலத்தில் எல்லா புத்த துறவிகளும் ஒரு இடத்தில் கூடி, தங்கள் ஆன்மீக பயிற்சியையும், தினசரி நடைமுறைகளையும் ஊக்குவித்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கை.
Q59. வேசக் -- “Vesak” என்பது எவ்வகை விழா?
இலங்கை புத்த மதத்தினரால், புத்தரின் பிறந்த நாள், அறிவொளி பெற்ற நாள் புத்தர் முக்தி அடைந்த நாள் ஆகியவற்றை போற்றி அனுசரிக்கப்படும்ஒரு விழா. இது நடத்தப்படும் மாதம் புனித மாதமாக கருதப் படுகிறது.
Q60. த்ருப்க தேஷி -- “Drupka Teshi” என்பது என்ன விழா?
சாரநாத் மான் பூங்காவில், புத்தர் முதல் முறையாக, வாழ்வின் நான்கு உண்மைகளைப் பற்றி, பிரசங்கம் நடத்திய நாளாக அனுசரிக்கப்படுகிறது. திபெத்திய நாள்காட்டியின், ஆறாவது மாதத்தில் 4 வது நாள் (பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில்) அனுசரிக்கப்படுகிறது.
Q61. புத்தரின் நான்கு உண்மைகள் என்பது என்ன?
1. துன்பம்
2. துன்பத்தின் காரணம்
3. துன்பத்தின் முடிவு.
4. துன்பத்தை களைய கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்.
Q62. புத்தரின் பிறந்த நாள், வெவ்வேறு நாடுகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புத்த பூர்ணிமா -- இந்தியா;
வேசக் - சிங்கப்பூர்;
விசாகா புச்சா -- தாய்லாந்து;
வைசாக் -- இந்தோனேசியா;
சாக தவா -- திபெத்;
வெசாகா -- இலங்கை;
Seokga Tansinil - கொரியா;
Full Moon of Kason - மியான்மார்
Q63. லெஷான், சீனாவில் உள்ள புத்தர் சிலையின் சிறப்பு என்ன?
71 மீட்டர் உயரம் -- 24 மணி நேரமும் மின்னணு உபகரணத்தினால் பாதுகாக்கப்படுகிறது.
Q64. ஹாங்காங் ல் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையின் சிறப்பு என்ன?
Tian Ten or Giant Buddha – 112 அடி உயரம் – 250 டன் எடை கொண்டது. லேண்டாவ் தீவில் உள்ளது.
Q65. புத்த துறவிகளின் தங்குமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விஹாரா.
Q66. திபெத்தின் புத்தமத குருவாக தற்சமயம் வரை எத்தனை தலாய் லாமா க்கள் இருந்தனர்?
பதினான்கு
Q67. ராஜ பரம்பரையிலிருந்து முதன் முதலாக புத்த மதத்திற்கு மாறியவர் யார்?
அஜாதசத்ரு.
Q68. புத்தர் தனது வாழ்க்கையின் கடைசி 29 வருடங்கள் எந்த நகரில் கழித்தார்?
கபில வாஸ்து.
Q69. இந்தியாவில் உயரமான புத்தர் சிலை எங்குள்ளது?
சாரநாத் -- 80 அடி உயரம்.