Khub.info Learn TNPSC exam and online pratice


கிறித்துவம்: CHRISTIANITY

Q1. கிறித்துவத்தை நிறுவியவர் யார்?
யேசுநாதர். முதல் நூற்றாண்டு காலத்தில். உலகில் அதிகமாக கடைப்பிடிக்கப்படும் மதம்.

Q2. யேசுநாதர் யாருக்கு எங்கு பிறந்தார்?
கன்னி மேரி மாதாவுக்கு, புனித ஆவியின் ஆசீர்வாதத்தினால், பெத்லெஹெம் என்ற இடத்தில் ஒரு மாட்டு தொழுவத்தில் பிறந்தார்.
Q3. கன்னி மேரியிடம் உனக்கு, புனித ஆவியின் அருளால் உனக்கு ஒரு அதிசய குழந்தை பிறக்கும் என கூறியவர் யார்?
தேவதை கேப்ரியல்
Q4. யாருடைய ஆட்சியின் போது யேசுநாதர் பிறந்தார்?
ஹெராட் என்ற மாமன்னர் காலத்தில்.
Q5. யேசுநாதரின் பிறப்பை விவரமாக எந்த நூல்கள் எடுத்துரைக்கின்றன?
மேத்யூ மற்றும் லூக் உபதேசங்களில் கூறப்பட்டுள்ளது.
Q6. யேசுநாதரின் தொழிலும் மொழியும் யாது?
மர தச்சு வேலை. அவர் பேசிய மொழி அரமைக் Aramaic.
Q7. கிறிஸ்து “Christ” என்பதன் பொருள் என்ன?
அபிஷேக ஆராதனை செய்யப்பட்டவர். ஆசீர்வதிக்கப்பட்டவர். Christ means Christos in Greek meaning “The Anointed One”.
Q8. கிறிஸ்துவர்கள் வழிபாட்டு தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேவாலயம். ஆங்கிலத்தில் Church எனவும் Basilica எனவும் அழைப்பர்.
Q9. உலகின் மிகப் பெரிய தேவாலயம் எது?
புனித பீட்டர் தேவாலயம், வத்திகான், ரோம். St. Peter’s Basilica, Vatican, Rome, Italy.
Q10. கிறித்துவர்களின் புனித நூல் எது?
வேதாகமம் -- பைபிள் Bible.
Q11. பைபிளின் இரண்டு பதிப்புகள் யாவை?
பழைய ஏற்பாடு -- ஹீப்ரூ மொழியில். புதிய ஏற்பாடு -- தற்போது கிறித்துவர்கள் பயன்படுத்துவது. Old Testament: Hebrew Bible is known so. New Testament: Present Bible in practice.
Q12. ஒரு புத்தகமாக பைபிளின் சாதனை என்ன?
1456 AD. இயந்திரத்தின் மூலமாக அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம். ஜெர்மன் மொழியில் அச்சடிக்கப்பட்ட இந்த புத்தகம் ""குத்தென்பர்க் பைபிள்"" Guthenburg Bible எனப்படும்.
Q13. பைபிளின் பழைய ஏற்பாடு வேறு எவ்வாறும் அறியப்படுகிறது?
தனாக். Tanakh.
Q14. பைபிளின் புதிய ஏற்பாடு எவ்வாறு அறியப்படுகிறது?
புது உடன்படிக்கை அல்லது கிரேக்க ஏற்பாடு. New Covenant or Greek Testament.
Q15. பைபிளின் புதிய ஏற்பாடு ஆங்கிலத்தில் மாற்றம் செய்தவர் யார்?
ஜானி வைக்ளிஃப், இங்கிலாந்து -- 14 வது நூற்றாண்டின் கடைசியில். Johnny Wycliffe.
Q16. பைபிளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதியை முதலில் வெளியிட்டவர் யார்?
இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் 1.
Q17. பைபிளின் புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் எது?
மாற்க் Mark.
Q18. பைபிளில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன, அவற்றில் பெரியது எது, சிறியது எது?
260 -- சங்கீதம் Psalm 119 - பெரியது. சங்கீதம் Psalm 117 சிறியது.
Q19. வேதாகமத்தில் மிகச் சிறிய வசனம் எது?
யேசு அழுதார். ஜான் 11:35 ல். பெரிய வசனம் எஸ்தர் 8:9 ல் உள்ளது.
Q20. கிறித்துவர்களின் உயர்மட்ட மத குரு யார்?
போப்பாண்டவர் -- Pope – ரோமன் கத்தோலிக்க இனத்தவரின் பெரும் குரு. கிறித்துவத்தில், ரோமன் கத்தோலிக்க பிரிவினரே அதிகம்.
Q21. கிறித்துவத்தில் உள்ள பல பிரிவுகளில் பழமையானது எது?
ரோமன் கத்தோலிக்க பிரிவு. இதை தொடங்கியவர் யேசு மற்றும் அவருடைய 12 சீடர்களும், குறிப்பாக புனித பீட்டர்.
Q22. கத்தோலிக்க பிரிவினரின் முக்கிய நம்பிக்கை என்ன?
யேசுவின் புனித ஆவி ஒருவரே கடவுள் என்ற நம்பிக்கை.
Q23. கிறித்துவத்தில் உள்ள பிரிவுகள் யாவை?
1) ரோமன் கத்தோலிக்கம். Roman Catholics
2) ப்ராட்டஸ்டண்ட் Protestant:
3) பெந்தெகோஸ்த் Pentecostal:
4) ஆர்த்தடாக்ஸ் கிறித்துவர்கள் Orthodox Christians:
5) மெத்தாடிஸ்ட் Methodists:
Q24. போப்பாண்டவர் யாருடைய வாரிசாக வாழ்வதாக கருதப்படுகிறார்?
புனித பீட்டர்.
Q25. போப் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
“Vicar of Christ” -- யேசுவின் வாரிசு போதகர்.
Q26. போப் ஐ வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
Supreme Pontiff -- உச்ச போப்பாண்டவர்.
Q27. கிறித்துவர்களின் முதல் போப்பாண்டவர் யார்?
புனித பீட்டர். St. Peter.
Q28. இரண்டாம் போப், ஆனால், கிறிஸ்துவுக்கு பிறகு வந்த முதல் போப் என அழைக்கப்படுபவர் யார்?
லினஸ் -- Linus.
Q29. 2016 நிலையில் உள்ள போப் யார்?
போப் பெனடிக்ட் 16 -- Pope Benedict XVI – அவருடைய இயற் பெயர் Joseph Alois Ratzinger , பவேரியா, ஜெர்மனி.
Q30. முதல் ஆங்கிலேய போப்பாண்டவர் யார்?
அட்ரியன் 4 Adrian IV – 1154 -- 1159. இதுவரையில் இவர் மட்டுமே ஆங்கிலேய போப்பாண்டவர்.
Q31. போப்பாண்டவரின் தலைமையக எங்குள்ளது?
வத்திகான் நகரம். Vatican City – வெறும் 44 ஹெக்டேர் பரப்பளவு கொண்டு, சுமார் 550-600 பேர் வாழும் ஒரு சிறிய நகரம், ஒரு நாட்டு அந்தஸ்துடன் சுதந்திரமாக இயங்கி வருகிறது. இத்தாலியின் ரோம் நகரின் ஒரு பகுதி. போப்பாண்டவர் நாடு என அழைக்கப்படுகிறது.
Q32. வத்திகான் நகரம், எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது?
லேதரான் உடன்படிக்கை -- Lateran Treaty, 1929 – இந்த உடன்படிக்கை, இத்தாலி நாட்டுக்கும், லேத்தரான் அரண்மனை மற்றும் புனித பீட்டர் தேவாலயத்திற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, இந்த இரு அமைப்புகளும் இத்தாலி நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, சுதந்திரமாக செயல்படும் ஒரு சுதந்திர அமைப்பாக இயங்கி வருகிறது.
Q33. போப்பாண்டவரின் இல்லம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லேத்தரான் அரண்மனை. Lateran Palace.
Q34. போப்பாண்டவரின் அலுவலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
போப்பாண்டவர் அலுவலகம். Papacy.
Q35. போப்பாண்டவர் அணிந்திருக்கும் ஆன்மீக உடையின் பெயர் என்ன?
போப்பாண்டவர் அங்கி -- Papal Cassock.
Q36. போப்பாண்டவர் அணியும் பெரிய அளவிலான தலை தொப்பியின் பெயர் என்ன?
மித்ரே -- Mitre.
Q37. போப்பாண்டவர் கையில் வைத்திருக்கும் ஒரு நீண்ட கொம்பின் பெயர் ?
Crossier or Crozier.
Q38. போப்பாண்டவர் நிர்வாகம் செய்யும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
போப்பாண்டவர் நிர்வாக பகுதி -- Papal States.
Q39. போப்பாண்டவர் தன் கை விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தின் பெயர் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
மீனவன் மோதிரம் -- Fisherman’s Ring: இந்த மோதிரம், புனித பீட்டர் நினைவாக அணியப்படுகிறது. புனித பீட்டர் ஒரு மீனவராக இருந்ததால், இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மோதிரம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முத்திரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. போப்பாண்ட்வர் இறந்தால், இந்தி மோதிரம் அழிக்கப்படும். புது போப்பாண்டவர் பதவி ஏற்கும் போது, புதிய மோதிரம் செய்யப்படும்.
Q40. எந்த போப்பாண்டவர், "புன்னகை போப்" “Smiling Pope” என அழைக்கப்பட்டார்?
ஜான் போப் 1 -- John Pope I.
Q41. எந்த போப்பாண்டவர், மத்திய ஐரோப்பாவின் ஹன் இனத் தலைவர் அட்டிலா வை சந்திக்க மறுத்தார்?
லியோ 1 -- Leo I. கி.பி.460 களில்.
Q42. போப்பாண்டவர் தலையில் அணியும் மத ரீதியான வட்ட வடிவ சிறிய தலை விரிப்பு (தொப்பி போன்று) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Zuccheto – “Pileolus”. இதில் பல வண்ணங்கள், பதவிகளுக்கேற்ப அணியப்படுகிறது. வெள்ளை -- போப் ; சிகப்பு -- கார்டினல்; ஊதா -- பிஷப்; கருப்பு -- போதகர்கள் போன்றவர்கள்.
Q43. ஏசுவின் போதனைகள் -- Gospels என்பது என்ன?
யேசு கிறிஸ்துவின் வாழ்வின் நிகழ்வுகளை விவரிப்பது. இதை "நற்செய்தி" என்றும் கூறுவர்.
Q44. எத்தனை போதனைகள் (Gospels - நற்செய்திகள்) எத்தனை உள்ளன, அவை யாவை?
நான்கு. அவை:
1. மத்தேயூ நற்செய்தி GOSPEL OF MATHEW: யேசுவின் இளைய பருவத்திலிருந்து, மீர்த்தெழுதல் வரை.
2. மாற்கு நற்செய்தி GOSPEL OF MARK: யேசுவின் இளமைப் பருவ நிகழ்வுகள், பிரசங்கங்கள், அவர் நிகழ்த்திய அற்புதங்கள்.
3. லூக் நற்செய்தி GOSPEL OF LUKE : யேசுவின் வாழ்க்கை, மறைவு, மீர்த்தெழுதல். (லூக் ஒரு மருத்துவர்)
4. ஜான் நற்செய்தி GOSPEL OF JOHN: யேசுவின் செயல்களும் பிரசங்கங்களும். Jesus’ actions and discourses.
Q45. போப்பாண்டவரில் தொடங்கி, கிறித்துவ மத போதகர்களை வரிசைப் படுத்துக?
போப், கார்டினல், பிஷப், ஆர்ச் டெக்கன், போதகர்கள்.
Q46. டையோசிஸ் -- Diocese என்பது என்ன?
ஒரு நிர்வாக எல்லைப் பகுதி. பொதுவாக பிஷப் தலைமையில் இயங்குவது. சுமார் 2850 டையோசிஸ்கள் உலகளவில் உள்ளன.
Q47. ஞானஸ்நானம் -- Baptism என்பது என்ன?
கிறித்துவ மத ரீதியாக, ஒருவரை நீரின் மூலம் சுத்திகரிப்பது. இது மூன்று முறைகளில் நடத்தப்படுகிறது.
1. ASPERSION: போதிக்கப்பட்ட நீரை ஒருவரின் சிரம் மீது தெளிப்பது.
2. AFFUSION: ஒருவரின் தலை வழியாக நீரை ஊற்றுவது.
3. IMMERSION: நீரில் உடலை முழுமையாக மூழ்கடிப்பது.
Q48. யேசுவுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தவர் யார்?
ஜோர்டான் நதியில், ஜான் அவர்களால்.
Q49. ஞானஸ்நான குரு ஜான் அவர்கள் கிறித்தவர்களுக்கு அளித்த செய்தி என்ன?
"திரும்ப செய் அல்லது அழிந்து விடு" “Repeat or Be Damned”
Q50. யேசுவிற்கு ஞானஸ்நானம் செய்யப்பட்ட பிறகு, மாற்கு வின் கருத்து என்ன?
""சொர்க்கம் பிளவு பட்டு அவர் மீது புனித ஆவி இறங்குகிறது."" “Heavens parting and the Holy Spirit descending upon Him”. இதை இவர் கூறியவுடன், சொர்க்கத்திலிருந்து அசரீரி கூறியது "" நீ எனது அன்புக்கு பாத்திரமான மைந்தன், நான் மிகவும் பூரிப்படைகிறேன்""
Q51. "தவம்/வாக்குமூல சடங்கு" “Sacrament of Penance” என்பது என்ன?
வாக்கு மூலம் கொடுப்பது எனவும் அழைக்கப்படுகிறது. ஞானஸ்நானம் எடுத்த பிறகு, ஒருவர் தான் செய்த தவறுகளுக்காக ஆண்டவனிடம் பாவ மன்னிப்பு கேட்பது. இதை ஒரு மத போதகர் அல்லது பிஷப் மட்டுமே ஆண்டவனின் பிரதிநிதியாக இந்த சடங்கை ஏற்றுக் கொள்ள முடியும்.
Q52. கிறித்துவத்தில் பத்து கட்டளைகள் என்பது ஒரு முக்கிய அங்கமாகும். இதை யார் யாரிடம் எங்கு கொடுத்தார்?
ஆண்டவர், மோசஸ் க்கு, சினாய் குன்றின் மீது, இரண்டு கருங்கல்லால் ஆன இரண்டு வரைப்பட்டிகை மூலம் கொடுத்தார்.
Q53. பத்து கட்டளைகள் என்பது என்ன?
கிறித்துவர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய, ஆண்டவரால் அளிக்கப்பட்ட கட்டளைகள்:
1. நானே உன் கடவுளாகிய ஆண்டவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. I am the LORD Thy God Thou shalt have no other Gods;
2. என்னைப் போன்ற யாதொன்றின் சிலையையோ, ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். No graven images or likenesses;
3. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. Not take the LORD's name in vain;
4. ஓயுவு நாளைத் தூயதாக கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. Remember the Sabbath Day;
5. உன் தந்தையையும், தாயையும் மதித்து நட. Honour Thy father and Thy mother;
6. கொலை செய்யாதே. Thou shalt not kill;
7. விபச்சாரம் செய்யாதே. Thou shalt not commit adultery;
8. களவு செய்யாதே. Thou shalt not steal;
9. பிறருக்கு எதிராக பொய்ச்சான்று செல்லாதே. Thou shalt not bear false witnesses;
10. பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. Thou shalt not covet.
Q54. கிறித்துவத்தில் திருப்பலி -- Eucharist என்பது எதைக் குறிக்கிறது?
பிஷப் பதவியில் இருக்கும் மத மோதகர் மட்டுமே ஏற்பாடு செய்யக்கூடிய, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு விருந்து.
Q55. நோயுற்றவருக்கு அபிஷேகம்" “Anointing of the Sick” என்பது என்ன?
இந்த சடங்கு, ஒரு பாதிரியாரால், வயது மூப்பு / நோயுற்று கடைசிக்காலத்தில் இருக்கும் ஒருவருக்கு நடத்தப்படுகிறது. அவருக்கு பொதுவாக ஆலிவ் எண்ணெய் குடிப்பதற்கு வழங்கப்படுகிறது.
Q56. திருமணத்திற்காக நடத்தப்படும் வழிப்பாட்டு கூட்டம், கிறித்துவத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதலிரவு வழிபாடு -- Nuptial mass.
Q57. ஒப்புதல் வாக்குமூலம் “Confession” என்பது கிறித்துவத்தில் எதைக் குறிக்கிறது.
ஒருவர் தான் செய்த பாவச் செயல்களுக்காக, தனது மனதார, மத போதகரை தூதுவராக கொண்டு ஆண்டவரிடம் நேரடியாக மன்னிப்பு கோரி, சுத்தப்படுத்த வேண்டுவது.
Q58. கிறித்துவத்தில் பேரின்பம் Beatitudes என்பது எதைக் குறிக்கிறது?
மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள, குன்றின் மீது கொடுக்கப்பட்ட பிரசங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப் பிரசித்தமான மற்றும் உறுதியான பகுதிகள்.
Q59. மீட்பாளர், தீர்க்கதரிசி -- “Messiah” என கிறித்துவத்தில் அழைக்கப்படுபவர் யார்?
மெஸ்ஸையா என்பது ஒரு கிரேக்க தொடர். பொருள் -- அபிஷேகம் செய்யப்பட்டவர். பொதுவாக "தூதுவர்".
Q60. கிறித்துவத்தில் “Annunciation” எனப்படுவது எதைக் குறிக்கிறது?
மரியாளிடம் தேவதூதர் கேப்ரியல் வந்து, அவளுக்கு யேசு என்ற அதிசய, கடவுளாக்குகந்த குழந்தை பிறக்கும் என கூறியது..
Q61. கிறித்துவத்தில் 666 என்ற எண்ணுக்கு ஒரு தொடர்பு உண்டு. அது என்ன?
அருள் வெளிப்பாடு என்ற நூலில் குறிப்பிட்டுள்ள படி இந்த எண் பிரபஞ்சத்தில் நிலவும் பூதம், பேய்களை குறிப்பது. (இந்த எண்ணின் அடிப்படை தத்துவத்தில் எடுக்கப்பட்டது ஆங்கில திரைப்படம் “OMEN”)
Q62. மோசஸ் ன் முதல் புத்தகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆதியாகமம் -- Genesis.
Q63. பொதுவாக நாம் காணும் யேசு வின் சிலுவையில் INRI என்ற எழுத்துக்கள், குறிக்கப்பட்டிருக்கும். அது எதைக்குறிக்கிறது?
Iesus Nazarenus Rex Ivdaeorum – > Jesus of Nazareth, King of the Jews --> நாஸெரெத்தின் யேசு -- யூதர்களின் மன்னர்.
Q64. பத்து கட்டளைகள் வேறு எவ்வாறும் அழைக்கப்படுகிறது?
Decalogue.
Q65. புனிதர் பட்டம் Canonization என கிறித்துவத்தில் அழைக்கப்படுவது என்ன?
மாய்த்த ஒரு உயிருக்கு, துறவி என்ற பட்டமளிப்பது.
Q66. ஒரு தேவாலயத்தின் நடுப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நடுக்கூடம் -- Nave.
Q67. “Hassock” என ஒரு தேவாலயத்தில் குறிப்பிடப்படுவது என்ன?
தேவாலயத்தில், மக்கள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்ய போடப்பட்டிருக்கும் மெத்தை.
Q68. தேவாலயத்தில் “Lectern” எனக்குறிப்பிடப்படுவது என்ன?
தேவாலயத்தில் படிப்பதற்காக போடப்பட்டிருக்கும் ஒரு மேசை.
Q69. கிறித்துவத்தில் “Pastor” என அழைக்கப்படுபவர் யார்?
ஒரு தேவாலயத்தின் மத போதகர்.
Q70. யேசு பிரானின் பன்னிரெண்டு சீடர்கள் யாவர்?
(1) சைமன் Simon, (2) ஆன்ட்ரூ Andrew, (3) ஜேம்ஸ் James, (4) ஜான் John, (5) பிலிப் Phillip, (6) பார்த்தொலோமியோ Bartholomew, (7) தாமஸ் Thomas, (8) மத்தேயூ Mathew, (9) ஜேம்ஸ் James, (10) சைமன் Simon, (11) ஜூடா Judas, மற்றும் (12) ஜூட். Jude.
Q71. யேசு வுக்கு துரோகம் செய்த சீடர் யார்?
ஜூடாஸ்.
Q72. ஜூடாஸ் என்ன சலுகைப் பெற்றுக்கொண்டு யேசு வுக்கு துரோகம் நிகழ்த்தினார்?
30 வெள்ளிக் காசுகள்
Q73. ஜூடாஸூக்கு பதிலாக சீடரானவர் யார்?
மத்தையாஸ் Mathias.
Q74. கடைசி இரா போஜனம் “The Last Supper” எனப்படுவது என்ன?
ஜெருசலேம் பழைய நகரில், ஸையான் குன்றின் மீதிருந்த லாசரஸ் ன் இல்லத்தில் ஒரு அறையில் யேசு வின் கடைசி இரவு உணவு போஜனம்.
Q75. யேசு கிறிஸ்து எங்கு கைது செய்யப்பட்டார்?
யேசு தனது கடைசி இரவு போஜனத்தை முடித்து, கெஸ்தமானே Gethsemane என்ற தோட்டத்துக்கு சென்ற போது.
Q76. யேசு கிறிஸ்துவின் விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுவதை முன்னின்று நடத்தியவர் யார்?
ரோம ஆளுநர் பாண்டியஸ் பிஸேட் -- Pontius Pilate the Roman Governor.
Q77. யேசு கிறிஸ்து எங்கு சிலுவையில் அறையப்பட்டார்?
கல்வாரி -- Calvary – இந்த இடம் கோல்கொத்தா என்றும் அழைக்கப்படுகிறது. மண்டை ஓட்டின் இடம் எனப் பொருள் கொண்டது.
Q78. யேசு கிறிஸ்து, மரித்து, எத்தனை நாட்களுக்குப் பிறகு, உயிர்த்தெழுந்து, யாருக்கு முன்பு தோன்றினார்?
மூன்று நாட்களுக்குப் பிறகு, மேரி மகதலீனா முன்பு தோன்றினார்.
Q79. யேசு கிறிஸ்து நிகழ்த்திய பல அற்புதங்களில் எந்த ஒன்றில், சில ஆயிரம் மக்களுக்கு எதை வைத்துக்கொண்டு உணவளித்தார்?
ஐந்து ரொட்டி அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளையும் கொண்டு, சுமார் 5000 பேருக்கு உணவளித்தார்.
Q80. யேசு நிகழ்த்திய பல பிரசங்கங்களில் மிகவும் முக்கியமானதும், புகழ் பெற்றதும் எது?
கலீலி கடலுக்கு அருகில் அமைந்துள்ள ஸையான் குன்றின் மீது அவர் மோசஸூக்கு நிகழ்த்தியதே. (கலீலி கடல், வேதாகமத்தில் திப்ரியாஸ் ஏரி என கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஜோர்டான் பகுதியில்.
Q81. யேசு மகான் நிகழ்த்திய மற்றொரு முக்கிய அதிசயம் என்ன?
மரித்த லாசரஸை மீண்டும் உயிர்ப்பித்தார்.
Q82. வேதாகமத்தின் படி, யேசுநாதர் எத்தனை பகல் இரவு உண்ணா நோன்பு கடைப்பிடித்தார்?
ஒரு வனத்தில் 40 பகல், 40 இரவுகள். இதன் அடிப்படையில் தான் ஈஸ்டர் நோன்பு காலம் அனுசரிக்கப் படுகிறது.
Q83. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளில் “Mass” என்பது என்ன?
ஒரு பாதிரியாரால், ஒரு தேவாலயத்தில், அனைத்து மக்களும் பிரார்த்தனை நடத்த ஒன்று கூடுவது.
Q84. கிறிஸ்துமஸ் கேரோல் எனப்படும் யேசு புகழ் பாட்டுகள் இல்லந்தோறும் சென்று பாடுவது எப்போது தொடங்கப்பட்டது?
1410ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டதாக தெரிகிறது.
Q85. மெழுகுவர்த்தி பிரார்த்தனை எப்போது நடத்தப்படுகிறது?
பிப்ரவரி இரண்டாம் நாள் தேவாலயத்தில் யேசுநாதரின் பெருமை அறிமுக நாள்.
Q86. வேதாகமப்படி, எகிப்தில் எத்தனை முறை ப்ளேக் நோய் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது?
இரு முறை
Q87. பைபிளின் படி, பெரு வெள்ளத்திற்கு முன், எத்தனை பகல், எத்தனை இரவு, தொடர் மழை பெய்தது?
40 பகல் 40 இரவுகள்.
Q88. “Doubting Thomas” இதன் பொருள் சந்தேகிக்கும் தாமஸ். ஒருவர் எதையும் நேரடியாக, பார்க்காமல், கேட்காமல், தொடாமல் எதையும் நம்பமாட்டார். இத்தொடருக்கும் கிறித்துவத்துக்கு ஒரு தொடர்பு உண்டு. அது என்ன?
யேசுவின் சீடரான தாமஸ், யேசு உயிர்த்தெழுந்ததை நம்ப மறுத்து, அவரே நேரடியாக யேசுவின் காயங்கள் மற்றும் உடலை பரிசோதித்த பிறகே ஏற்றுக்கொள்வதாக கூறினார். தாமஸின் இந்த செயலே, இந்த ஆங்கில தொடர் ""Doubting Thomas"" வருவதற்கு காரணமாயிற்று.
Q89. "Vulgate" என ஆங்கிலத்தில் கூறப்படுவது எதைக் குறிக்கிறது?
லத்தீன் மொழி பைபிள். நான்காம் நூற்றாண்டிலேயே வெளிவந்து, 16ம் நூற்றாண்டில் லத்தீன் மொழி பைபிள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Q90. குருத்து ஞாயிறு -- Palm Sunday என்பது என்ன?
கிறித்துவ நாள்காட்டியின் முதல் புனித வாரத்தின் முதல் நாள்.
Q91. Index Librorum Prohibitorum என்பது என்ன?
ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களால் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல்.
Q92. போப்பாண்டவரின் தூதுவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
Nuncio.
Q93. பெண்களுக்காக, பைபிளில், ஒதுக்கப்பட்ட புத்தகங்கள் (பகுதிகள்) யாவை?
பழைய ஏற்பாட்டில், ருத் மற்றும் எஸ்தர் பகுதிகள்.
Q94. “Advent” என்ற தொடர் கிறித்துவத்தில் எதைக் குறிக்கிறது?
கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்பாக முன்னேற்பாடுகள் செய்யும் காலம்.
Q95. கிறித்துவத்தில் Boxing day என அழைக்கப்படுவது எது?
டிசம்பர் 26. புனித ஸ்டீஃபன் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், நமக்காக பணி புரியும் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் அன்பளிப்புகள் கொடுப்பது 1830ல் இங்கிலாந்தில் தொடங்கியது.
Q96. நீற்றுப் (சாம்பல்) புதன் கிழமை Ash Wednesday -- கிறித்துவத்தில் இது என்ன நாள்?
இந்த புதன் கிழமை ஈஸ்டருக்கு 46 நாட்கள் முன்பாக வரும் புதன். இந்த நாளிலிருந்து தான் உண்ணா நோன்பு தொடங்குகிறது.
Q97. Season of lent என ஆங்கிலத்தில் கூறப்படும் நோன்பு காலம் என்பது என்ன?
40 நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படும் காலம்.
Q98. புனித வெள்ளி -- Good Friday என்பது என்ன?
யேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட நாள்.
Q99. யேசு தனது கடைசி இரா போஜனத்தை எப்போது கொண்டார்?
Pass over festival (இதற்கு தமிழில் எவ்வாறு கூறப்படுகிறது என தெரிவியுங்கள்).
Q100. குருத்து ஞாயிறு “Palm Sunday” என்பது எதைக் குறிக்கிறது?
யேசு பிரான் ஜெருசலேமுக்கு வந்த நாள் (ஞாயிறு)
Q101. “Evangelists” என கூறப்படுவது எதைக் குறிக்கிறது?
மத்தேயு, மாற்கு, லூக் மற்றும் ஜான் சுவிசேஷங்களை எழுதியவர்களை மொத்தமாக அழைக்கப்படும் பெயர்.
Q102. ஈஸ்டர் அனுசரிக்கப்படுவது எதற்காக?
யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில்.
Q103. வேதாகமத்தின் படி உலகில் தோன்றிய முதல் மனித குலம் யார் என கூறப்பட்டுள்ளது?
ஆதாம் மற்றும் ஏவாள் -- ஈடன் தோட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
Q104. கோலியத் என்ற அரக்கனை யார் எதிர் கொண்டார் என பைபிள் கூறுகிறது?
டேவிட்.
Q105. ஆதாம் மற்றும் ஏவாள் ன் இரண்டு மகன்கள் யார்?
கெய்ன் (மூத்தவர்) மற்றும் ஏபெல் (இளையவர்)
Q106. கிறித்துவத்தின் வளர்ச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும், தொண்டு செயல் -- களுக்காகவும் இயங்கும் அமைப்பு எது?
Salvation Army – 1865ல் வில்லியம் மற்றும் கேத்தரின் ஆகியோர்களால் நிறுவப்பட்டது. தொண்டு காரணங்களுக்காக அதிகமான நிதி திரட்டும் ஒரு அமைப்பு.
Q107. கிறித்துவத்தீல் “Banns of Marriage” எனப்படுவது எதைக் குறிக்கிறது?
சம்பந்தப்பட்ட தேவாலயத்தில், ஒரு குறிப்பிட்ட இருவருக்கு திருமணம் நடத்தப்படுவதை பற்றிய அறிவிப்பு.
Q108. மேங்கர் சதுக்கம் - Manger Square ன் முக்கியத்துவம் என்ன?
இந்த இடம், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மேற்கு பகுதி, பிறப்பிட தேவாலயம் - “Church of Nativity” க்கு அருகில் உள்ள ஒரு இடம். இங்குதான் யேசு பிறந்ததாக நம்பப்படுகிறது.
Q109. கிறித்துவத்தில் “Great Schisms” என்ற குறிப்பிடப்படும் நிகழ்வு என்ன?
கிறித்துவத்தில், உயர் அதிகாரத்தைப் பற்ற இரு பிரிவினருக்கிடையே -- ஒன்று ரோம், மற்றொன்று ஃப்ரான்ஸின் ஆங்கோன் Angon -- ஏற்பட்ட மோதல்.
Q110. முதல் போப்பாண்டவராக அழைக்கப்பட்டவர் யார்?
சைரீசியஸ் -- Cyricius.
Q111. பைபிளின் படி, சாம்சனுக்கு சக்தி எங்கிருந்தது, அதை அறுத்தவர் யார்?
சாம்சனுக்கு சக்தி தலை முடியில் இருந்தது. அதை டிலைலா வெட்டியெடுத்து, அவனை வெற்றிகண்டார்.
Q112. துறவியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்தீரி அல்ஃபோன்ஸ் -- 2008ல் (மறைவுக்குப் பிறகு கௌரவிக்கப்பட்டார்.
Q113. பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்ட லாலிபெலா தேவாலயம் எங்குள்ளது?
லாலிபெலா என்பது எத்தியோப்பியாவின் வடபகுதியில் உள்ளது. இங்கு பல தேவாலயங்கள், ஒற்றை பெருங்கல் பாறைகளை உடைத்து, திருத்தி, குடைந்து உருவாக்கபட்டுள்ளன. இவை அனைத்தும் 12 ம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தேவாலயங்கள், யுனெஸ்கோவால் 1978ல் உலகப் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Q114. பைபிளின் படி, ஆண்டவர், எந்த நாளில், மனிதனைப் படைத்தார்?
ஆறாவது நாள்.
Q115. 1917ல், போர்ச்சுகல் ன் எந்த ஒரு சிறு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவர்கள், வானத்தில், கன்னி மேரி யின் உருவத்தை பார்த்ததாக கூறியுள்ளார்கள்?
ஃபாத்திமா. Fatima.
Q116. கானன் -- Canaan – இஸ்ரேல் ல் ஒரு இடம், பைபிளில் இடம் பெற்றுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன?
யூதர்கள் கைப்பற்றுவதற்கு முன் பழங்கால பாலஸ்தீனம், பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் இஸ்திரேலியர்களுக்கு அளிக்கப்படும் என ஆண்டவர் கூறியிருந்தத்தாக கருதப்படுகிறது.
Q117. யேசு தனது முதல் அதிசயத்தை எங்கு புரிந்ததாக கருதப்படுகிறது?
கேனா Cana – பாலஸ்தீனம் Palestine – வடகிழக்கு நாஸதேத்.
Q118. யேசு கிறிஸ்துவின் மிகப் பெரிய உருவச் சிலை எங்குள்ளது?
Cristo Dela Concordia – San Pedro Hill, Cochabamba – பொலிவியா – பீடத்திலிருந்து 40.44 mtr / 132.7 அடி உயரம்.
Q119. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் “Christ the Redeemer” சிலை எங்குள்ளது?
திஜூகா வன தேசிய பூங்கா, கார்கோவேடோ மலை, ரியோ டி ஜெனிரோ, ப்ரேசில். 1922-1931க்குள் கட்டப்பட்டது. 39.6 மீட்டர் உயரம், சுமார் 650 டன் எடை கொண்டது.
Q120. யூதர்களின் எந்த மத விழா, கத்தோலிக்கர்களின் ஈஸ்டர் விழாவுடன் தொடர்பு கொண்டது?
Pesach or Pass over.
Q121. “Ecomenism” என கிறித்துவத்தில் எதைக் குறிக்கிறது?
கிறித்துவ தேவாலயங்களுக்குள் உள்ள ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் இயக்கம்.
Q122. எந்த போப் அதிகமான பேர்களை துறவிகளாக அங்கீகரித்திருக்கிறார்?
போப் ஜான் பால் 2
Q123. “Precentor” என கிறித்துவத்தில் அழைக்கப்படுபவர் யார்?
தேவாலயத்தில் தெய்வீக பாடல்கள் பாடப்படுவதை நடத்துபவர்.
Q124. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கொட்டை உணவுப்பொருள் என்ன?
பாதாம் மற்றும் பிஸ்தா.
Q125. சிலுவையில் அறையப்படும் முன் யேசு நாதர் பேசிய வார்த்தைகள் யாவை?
"ஆண்டவரே, ஆண்டவரே, என்னை ஏன் கைவிட்டுவிட்டாய்" “My God, My God, why hast thou forsaken me”.
Q126. தமிழ்நாட்டின் திண்டுக்கல் அருகில் உள்ள மேட்டுப்பட்டி பாதிரியார், டாக்டர் சேவியர் லோபோ ஆரோக்கியராஜ் அவர்களுக்கு, கத்தோலிக்க நிர்வாக பொறுப்பில் கிடைத்த பெரிய கௌரவம் என்ன?
Roman Rota என்பது, வத்திகானில் கத்தோலிக்க நிர்வாக அமைப்பின் உச்ச அமைப்பு. இதன் முக்கிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் ஆசியர் மற்றும் ஒரே தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. ( “Rota” என்பது சக்கரம் எனப் பொருள் கொண்டது. நீதிபதிகள் ஒரு வட்டவடிவ அறையில், இந்த அமைப்பு சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் இடம்).
Q127. வத்திகான் நிர்வாகத்தால் கார்டினல் “cardinal” பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய கத்தோலிக்க பாதிரியார் யார்?
Valerian Gracias, பாம்பே..
Q128. “Sacristy” என்பது கிறித்துவ தேவாலயத்துடன் தொடர்புடையது. அது என்ன?
தேவாலயத்தின் ஆவணங்கள், புனித உபகரணங்கள், போன்ற முக்கியமான பொருட்கள் வைக்குமிடம்.
Q129. சாந்தா க்ளாஸ் Santa Claus வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
கிறிஸ்துமஸ் தந்தை Father Christmas – பொதுவாக; Julemandes – டென்மார்க்; Shengdon Laores – சீனா; Pai Natal –போர்ச்சுகல் .
Q130. பைபிளின் மிகப் பெரிய அத்தியாயம் எது?
சங்கீதம் Psalm – 119.
Q131. சாந்தா க்ளாஸ் உடன் ரெயிண்டீர் மான்கள் இருப்பது அறிவோம். அவற்றுள் மூன்று மான்களுக்கு பெயர்கள் உண்டு. அவை யாவை?
Dancer, Dasher and Donner.
Q132. போப்பாண்டவரின் கோடைக்கால விடுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Castel Gandolfo – அல்பேமோ ஏரிக்கரையில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இத்தாலி.
Q133. ஒரு பிஷப், கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்டவுடன், அவருக்கு அதிகார அடையாளமாக போப்பாண்டவரால் கொடுக்கப்படுபவை யாவை?
Red Birreta – மும்முனை கொண்ட செவ்வண்ண தொப்பி மற்றும் ஒரு மோதிரம். (cardinal ring).
Q134. பைபிளின் படி, ஆண்டவர், என்று, கடல் விலங்குகளையும், பறவைகளையும் உருவாக்கினார்?
5 வது நாள்.
Q135. கிறிஸ்துமஸ் அன்று, கிறிஸ்துமஸ் மரமும், அதில் வண்ண விளக்குகள் ஏற்றும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
1880 களில் எட்வர்டு ஜான்சன் என்பவர். இவர் தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர்.
Q136. யேசு நாதரின் உருமாற்றம் எந்த இடத்தில் நடந்ததாக கருதப்படுகிறது?
டேபர் குன்று, இஸ்ரேல்.
Q137. கிறித்துவத்தில் முதல் போப்பாண்டவராக கருதப்படுபவர் யார்?
புனித பீட்டர்.
Q138. ஆண்டவரை வேண்டியதால், யார் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டார்?
டேனியல்.
Q139. பைபிளை முதலில் லத்தீன் மொழி மாற்றம் செய்தவர் யார்?
செயிண்ட் ஜெரோம்.
Q140. பிரார்த்தனை கூட்டங்களின் போது போதகர்களால் அணியப்படும் அங்கி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ALB.
Q141. பைபிளின் படி, நோவாவின் படகு எவ்வளவு நீளம்?
300 க்யூபிட் (முழம்)
Q142. கிறிஸ்துமஸ் ன் போது அருந்தப்படும் பாரம்பரிய பானம் எது?
Eggnog – பால், கிரீம், சர்க்கரை, முட்டை, பட்டை, ஜாதிக்காய் ஆகியவை கலந்து செய்யப்படும் பானம்.
Q143. சாந்தா க்ளாஸ் ன் பெயர் யாரை சார்ந்தது?
செயிண்ட் நிக்கலஸ் St. Nicholas.
Q144. யேசு நாதரைப் போற்றும் நிர்வாக அமைப்பை பொதுவார எவ்வாறு அழைப்பார்கள்?
Jesuits.
Q145. கன்னியாஸ்திரீகள் அணியும் தலை ஆடை அணி க்கு என்ன பெயர்?
விம்ப்பிள் Wimple.
Q146. கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை முதல் முதலில் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியவர் யார்?
சர் ஹார்வி கோல், இங்கிலாந்து. Sir Harvey Cole, UK.
Q147. மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை முதன் முதலில் ஒலிபரப்பியவர் யார்?
மன்னர் ஜார்ஜ் 5 King George V.
Q148. கிறித்துவத்தில், “Wassailing” என ஆங்கிலத்தில் கூறப்படுவது என்ன?
வீடு வீடாக/அண்டைய வீடுகளுக்கு சென்று, கிறிஸ்துமஸ் கேரோல் பாடல்களை படி வெகுமதிகள் பெறுவது.
Q149. கிறித்துவத்தின் எந்த பிரிவினர், ஜனவரி 7ம் தேதியை கிறிஸ்துமஸ் தினமாக அனுசரிக்கின்றனர்?
ரஷ்யாவின் ஆச்சார தேவாலயங்கள் Russian Orthodox Churches, காரணம் அவர்கள் இன்னும் ஜூலியன் நாள்காட்டி (காலண்டர்) பயன்படுத்துகிறார்கள்.
Q150. கிறித்துவர்களின் முக்கிய பண்டிகைகள் யாவை? What are the Christian festivals?
Advent, All Saints Day, Annunciation, Ascension, Ash Wednesday, Christmas, Easter, Maundy Thursday, Good Friday, Palm Sunday.
Q151. கிறித்துவத்தில் “Advent” என்பது என்ன?
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கால வருகையை போற்றுவது.
Q152. கிறித்துவத்தில் "புனித துறவிகள் தினம்" “All Saints Day” எனப்படுவது என்ன?
தேவாலயங்களி, அறிந்த, அறியாத அனைத்து புனித துறவிகளை கௌரவிக்கும் வகையில் நடக்கும் விருந்து.
Q153. கிறித்துவத்தில் “All Souls Day” என்பது என்ன?
நவம்பர் 2 அன்று, மரித்த அனைத்து ஆவிகளும் மேல் லோகத்தில் அமைதியாக இருக்க பிரார்த்தனை.
Q154. கிறித்துவத்தில் “Annunciation” என்பது என்ன?
இந்த நாள், மார்ச் 25, அதாவது டிசம்பர் 25க்கு 9 மாதங்கள் முன், அனுசரிக்கப்படும் நாள். கன்னி மேரியிடம், தேவதூதர் கேப்ரியல், அவளுக்கு விரைவில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தேவ ஆண் குழந்தை பிறக்கும் எனக் கூறியதை, அனுசரிக்கப்படும் நாள். நாசரேத், இஸ்ரேலில் உள்ள ஒரு தேவாலயம் இந்த விழாவை மிகச் சிறப்பாக அனுசரிக்கிறது.
Q155. கிறித்துவத்தில் “Ascension” என்பது என்ன?
யேசு தேவ லோகத்தை சென்றடைந்த நாள் என, ஈஸ்டர் காலத்தின் 6வது வார வியாழக்கிழமை அனுசரிக்கப் படுகிறது.
Q156. கிறித்துவத்தில் “Ash Wednesday” என்பது என்ன?
40 நாட்கள் உண்ணா நோன்பு தொடங்கப்படும் புதன் கிழமை. பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து மார்ச் 10 தேதிக்குள் இந்த புதன் கிழமை முடிவு செய்யப்படும். அன்றைய நாளில், கிறித்துவர்கள் அனைவரும் தங்கள் நெற்றியில் சாம்பலில் சிலுவை போட்ட்டுக் கொள்வது வழக்கம்.
Q157. யேசுவின் பிறந்த நாளாக கருதப்படுவது எந்த நாள்?
டிசம்பர் 25 -- கிறிஸ்துமஸ் -- முக்கியமான கொண்டாட்ட நாள்.
Q158. கிறித்துவத்தில் “Easter” பண்டிகை என்பது என்ன?
யேசுவின் உயிர் மீத்தலை கொண்டாடுவது. திருநீற்று புதன் கிழமையில் தொடங்கி 40 நாட்கள் இந்த கொண்டாட்டம் தொடரும். கிறித்துவர்கள் பிரார்த்தனையும், உண்ணா நோன்பும் மேற்கொள்வார்கள்.
Q159. கிறித்துவத்தில் “Maundy Thursday”என்பது என்ன?
ஈஸ்டருக்கு முன்பான வியாழக்கிழமை, சீடர்களுடன் யேசுவின் கடைசி இரா சாப்பாட்டை போற்றும் விதமாக, புனித/விருந்து நடத்தும் நாள்.
Q160. கிறித்துவத்தில் “Good Friday” "புனித வெள்ளி, என்பது என்ன?
“Maundy Thursday” ன் அடுத்த நாள். யேசு சிலுவையில் அறையப்பட்ட நாள்.
Q161. கிறித்துவத்தில் குருத்து ஞாயிறு “Palm Sunday” என்பது என்ன?
ஈஸ்டருக்கு முன்பான ஞாயிற்றுக் கிழமை. இந்த நாள் யேசு ஜெருசலேம் வந்தடைந்த நாள். கிறித்துவர்கள் தென்னை குருத்து ஓலைகளால் ஆன சிலுவையை கையிலேந்தி சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். பிறகு இந்த ஓலைகளை ஒன்று சேர்த்து எரித்து, அதில் ஏற்படும் சாம்பலை கொண்டு திருநீற்று புதன் கிழமை அன்று தங்கள் நெற்றியில் சிலுவை போட்டுக்கொள்வார்கள்.
Q162. இந்தியாவின் முதல் தேவாலயம் எது?
செயிண்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், பாலையூர், திருச்சூர் மாவட்டம், கேரளா. கி.பி.52 ல் உருவானதாக தெரிகிறது. புனித தாமஸ் அவர்களால் நிறுவப்பட்டது. சென்னையில் மைலாப்பூரில் உள்ள செயிண்ட் தாமஸ் தேவாலயமும் இவரால் உருவாக்கப்பட்டது.
Q163. தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற தேவாலயங்கள் எவை?
1. அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், நாகப்பட்டினம் மாவட்டம்.
2. பூண்டி மாதா கோவில், தஞ்சை மாவட்டம் -- வீரமா முனிவரால் கட்டப்பட்டது.
3. லூர்து மேரி தேவாலயம், செயிண்ட் ஜோசஃப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
4. செயிண்ட் தாமஸ் தேவாலயம், மைலாப்பூர், சென்னை -- 1893
5. அர்மெனியன் தேவாலயம், சென்னை
6. புனித மேரி தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை.
7. புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம், எழும்பூர், சென்னை -- 1821
8. புனித ஜார்ஜ் கதீட்ரல், கதீட்ரல், அண்ணாசாலை, சென்னை.
Q164. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்போது துவங்கியது?
டிசம்பர் 25, கி.பி.154. போப்பாண்டவர் ஜூலியஸ் அறிவித்து தொடங்கப்பட்டது.
Q165. கிறிஸ்துமஸ் அன்று குடில் கட்டி அலங்கரிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
புனித ஃப்ரான்சிஸ் -- 1722.
Q166. கிறிஸ்துமஸ் பண்டிகையை 20 நாட்களுக்குக் கொண்டாடும் நாடு எது?
ஸ்காட்லாந்து -- டிசம்பர் 18லிருந்து ஜனவரி 6 வரை.
Q167. கிறிஸ்துமஸ் அன்று போக்குவரத்தை முழுமையாக நிறுத்தும் நாடு எது?
ஃபின்லாந்து.