Khub.info Learn TNPSC exam and online pratice


கன்ஃப்யூஷியனிசம் – CONFUCIANISM

Q1. கன்ஃப்யூஷியனிசம் என்ற மதத்தை நிறுவியவர் யார்?
குங் ஃபூ ட்ஸூ -- Kung Fu Tsu -- “Confucius” என அழைக்கப்படுபவர் இந்த மதத்தை கி.மு.500ல் நிறுவியதாக தெரிகிறது. சீனாவில் லூ Lu என்ற மாகாணத்தில் பிறந்தவர். இவருடைய சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் போற்றுவதே இந்த மதம். இவர்களுக்கு வழிபாட்டுக்கான இடங்கள் கிடையாது.

Q2. கன்ஃப்யூஷியனிசம் எந்த நாடுகளில் போற்றப்படுகிறது?
இந்த மதம் கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் மட்டும் பரவியுள்ளது. சீனா, தைவான், தென் கொரியா, நௌரு மற்றும் வியட்நாம்.
Q3. கன்ஃப்யூஷியனிசம் மதத்தின் புனித நூல் என்ன?
கன்ஃப்யூஷியஸ், பல நூல்களிலிருந்து தொகுத்து அளிக்கப்பட்ட குறிப்புகள். சீனாவில் இது Lun Yu எனப்படுகிறது.