Khub.info Learn TNPSC exam and online pratice


இந்து மதம் -- HINDUISM

Q1. இந்து மதம் எங்கு எப்போது தொடங்கியது?
எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. அதனால், இதுவே உலகின் பழமையான மதமாக கருதப்படுகிறது. இந்துக்கள் அடிப்படையில், இயற்கையின் பல சக்திகளை, சூரியன், நீர், நெருப்பு, ஆகாயம், நிலம் ஆகியவற்றுக்கு தங்களது வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதையே, ஆர்யர்கள் மூலமாகவே இன்றைய காலக்கட்டத்திலும் தொடர்கிறது. ஆர்யர்கள் சூரியன், நீர், நெருப்பு ஆகியவைகளை வணங்கிய்து மட்டுமின்றி, நெருப்பினால் யாகங்கள் வளர்த்தனர், வேதங்களே அவர்களது புனித நூலாக இருந்தன, என்பதிலிருந்து, இந்து மதம் ஆர்யர்கள் காலத்திலிருந்து வளர்ந்தது என கூறலாம். வேதங்கள் கி.மு. 1500க்கு முன்பாகவே எழுதப் பட்டதாக தெரிகிறது.

Q2. இந்து மதம் எங்கெல்லாம் பரவியுள்ளது?
பொதுவாக ஆசிய நாடுகள். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மொரிசீயஸ், வங்காள தேசம். இவைத் தவிர்த்து, தென் ஆப்பிரிக்கா, ஃபிஜி தீவுகள், சுரிநாம், பாலி, கையானா, ட்ரினிடாட் மற்றும் டொபேகோ, போன்ற நாடுகளிலும் இந்து மதம் பின் பற்றுபவர்கள்.
Q3. இந்து மதம் எவற்றை அடிப்படையாகக் கொண்டது?
வேதங்களும், உபநிடதங்களும். இவைகள் தான் புராண காலத்திலிருந்து இந்து மத வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளன. ஆன்மீக சிந்தனைகள், வழிகாட்டி, சடங்குகள் செய்யும் முறைகள் போன்றவைகள் அடங்கியுள்ளன.
Q4. இந்து மதத்தில் உள்ள பிரிவுகள் யாவை?
பொதுவாக, சிந்தனைகள், சித்தாந்தங்கள் ஒன்றாக இருந்தாலும், இந்து மதத்தில், அவரவர்கள் நம்பிக்கையின் படி நான்கு பொது பிரிவுகள் உள்ளன. அவை:
1. சைவம் SAIVISM: சிவனைக் கடவுளாக ஏற்று வழிபடுபவர்கள் இவர்கள்.
2. வைஷ்ணவம் -- VAISHNAVISM: விஷ்ணு/நாராயணன் ஐ முதற் கடவுளாக ஏற்று வழிபடுபவர்கள்.
3. சக்தி SHAKTISM:
பெண் அவதாரக் கடவுள்களை வேண்டுபவர்கள்.
4. ஸ்மார்த்தர்கள்: SMARTHAS: இந்து மதத்தின் எல்லா கடவுள்கள் மீதும் நம்பிக்கைக் கொண்டு, வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ""அத்வைத வேதாந்தம்"" என்ற சித்தாந்தை அடிப்படை வழிகாட்டியாகக் கொண்டவர்கள்.
Q5. திருமூர்த்திகள் (மூன்று கடவுள்கள்) எனக் கூறப்படுபவர்கள் யாவர்?
(1) ப்ரம்மா Lord Brahma – உருவாக்கியவர் (2) விஷ்ணு Lord Vishnu – பாதுகாப்பவர் (3) சிவன் -- அழிப்பவர். இந்த மும்மூர்த்திகளில் சிவனே தலையாய கடவுள் என கருதப்படுகிறார். "
Q6. இந்து மதத்தில் அடிப்படை கடவுளாக, அவர்களுடைய வேறு பரிமாணத்திலும், அவதாரங்களிலும் வழிபடப்படுபவர்கள் யாவர்?
ப்ரம்மா BRAHMA : பிரபஞ்சத்தையும் ஜீவராசிகளையும் உருவாக்கியவர் என கருதப்பட்டாலும், இவரை வழிபாடு, வணங்குவது, போற்றுவது என்பது பழக்கத்தில் இல்லை.
சிவன் SHIVA: இவர் பல வடிவங்களிலும், பல பெயர்களிலும், அவதாரங்களிலும் வணங்கப்படுகிறார். இந்தியாவை குறிப்பாக, தென் இந்தியாவை ஆண்ட பல இந்து மன்னர்கள் சிவ பக்தர்களாக இருந்தமையால், சிவாலயங்கள் பெரிய அளவிலும், பெரும் சொத்துக்களும் கொண்டதாக அமைந்துள்ளன. பொதுவாக இவரை லிங்க வடிவில் வழிபாடு செய்வதே வழக்கத்தில் பரவியுள்ளது.
விஷ்ணு VISHNU: இவரும் பல அவதாரங்களில் வணங்கப்படுகிறார். பொதுவாக பெருமாள் என்ற பெயரில், பல பெயர்களில் இந்துக்கள் அனைவராலும் வணங்கப்படுகிறார். இவருக்கும் பல பெரிய கோவில்களும், பெரும் சொத்துக்களும் எல்லா இடங்களிலும் உள்ளது. மிகக் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலகளவில் புகழ் பெற்றது மட்டுமின்றி, உலகின் இரண்டாவது பணக்கார கோவில்.
கணேசர் GANESHA: சிவனின் மூத்த மைந்தர். உலகின் எல்லாவற்றிற்கும் இவரே தொடக்க கடவுள் என போற்றப்படுகிறார். அதனாலேயே இந்து மதத்தினர் எந்த ஒரு நிகழ்வையும் தொடங்குவதற்கு முன் இவருக்கு பிரார்த்தனை செய்தே தொடங்குவர். இவரும் நூற்றுக் கணக்கான பெயர்களில் அழைக்கபடுகிறார். பெரிய கோவில்களில் இருப்பது மட்டுமின்றி, எண்ணிக்கையில் சிறிய அளவிலான அதிகமான கோவில்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் பெருமளவுக்கு போற்றப்படும் கடவுள். இவருக்காக மகாராஷ்டிராவில் பெரிய அளவிலான விழா, பல கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில், பத்து நாட்கள் நடைபெறும்.
லக்ஷ்மி LAKSHMI : செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் இந்த பெண் தெய்வம், ஒவ்வொரு இல்லந்தோறும் வணங்கப்படுகிறார். இவருக்கென்று தனிப்பட்ட பெரும் கோவில்கள் பிரசித்தமான அளவில் இல்லை. இருப்பினும் ஆங்காங்கே சில கோவில்கள் உள்ளன. இந்த பெண்கடவுளுக்கும் பல பெயர்கள் உண்டு.
பார்வதி PARVATHI: சிவனின் துணைவியார். இல்லந்தோறும் வணங்கப்படும் கடவுள்.
சரஸ்வதி SARASWATHI: அறிவின் கடவுள். கல்வி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் போற்றப்படுபவர்.
கார்த்திகேயா KARTHIKEYA/Kanda/Muruga/Shanmuga: சிவனின் இளைய மைந்தர். தென் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய இடங்களில் இந்த கடவுளை பின் பற்றுபவர்கள் அதிகமுண்டு. இந்த நாடுகளிலெல்லாம் இவருக்கென பிரசித்தமான கோவில்கள் உண்டு. தென் இந்தியாவில் இவருடைய மிகப் பிரசித்தமான கோவில்கள் எல்லாம் மலை/குன்றுகள் மீது அமைந்திருக்கும். இவருக்கும் பல பெயர்களில் பல கோவில்கள் உண்டு.
காளி KALI: அதிகமாக கிழக்கிந்திய பகுதிகளில் தொழப்படும் பெண் கடவுள். இவருக்கும் பல பெயர்களும் பல சிறிய அளவிலான பல கோவில்களும் உள்ளன. இவருடைய வழிபாடு சக்தி வழிபாட்டின் கீழ் வருகிறது. தென் இந்திய மாகாணங்களில் நூற்றுக்கணக்கான பெயர்களில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன.
Q7. இதிகாசங்களின் அடிப்படையில் -- ராமாயணம், மகாபாரதம் -- வணங்கப்படும் தெய்வங்கள் யாவை?
ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர்.
Q8. இந்து மதத்தில், ஒருவரின் பிறப்பின் போது உள்ள கிரக நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி அறிவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆகவே, இவற்றைப் போற்றும் தெய்வ தலங்களும் உண்டு. அவை பற்றி….
இந்து மத நம்பிக்கைப்படி, பிறக்கும் போது உள்ள கிரக நிலைகளின் அடிப்படையில், ஒருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இந்த ஜாதகங்களின் அடிப்படையில் ஒருவரின் வாழ்க்கையின் சாதக பாதகங்கள் கணித்து சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் பரிகாரங்கள் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன். இவ்வகையில், 9 கிரகங்களுக்கும் தமிழ்நாட்டில் கோவில்கள் உள்ளன. மற்ற மாநிலங்களில், குறிப்பாக சனி கிரகத்துக்கு கோவில்கள் உள்ளன. இவ்வகை கோவில்களில் சனி பகவானுக்கு உள்ள கோவில்கள் மிகவும் பிரசித்தம் பெற்றது. அதற்கு அடுத்தபடியாக, ராகு கேது கோவில்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம், இந்த கிரகங்களால் மக்களுக்கு பாதிப்புகள் அதிகம் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது.
Q9. இந்து மதத்தில் வேதங்களின் முக்கியத்துவம் அதிகம். அவ்வகையில் ""வேதக்காலம்"" எனப்படுவது எந்தக் காலம்?
கி.மு. 2000 முதல் கி.மு.700 வரையிலான காலம் வேத காலம் எனவும், இதில் முன் பின் வேதக்காலம் என பிரிவும் பிரிக்கப்பட்டது. இவற்றுள் பிற்கால வேத காலம் தான், வேதங்கள், சடங்குகள், சாதிப் பிரிவுகள், மற்றும் வேதங்களின் விளக்கம் புராணங்கள், சாஸ்திரங்கள் எனவும் வெளிவர, ஏற்பட காரணமாயிருந்தது. ஆகவே, பிற்கால வேத காலம் இன்றைய ஆன்மீக, அரசியல், பொருளாதார நிலைகளுக்கு காரணமாக அமைகிறது.
Q10. வேதங்கள் என்பது என்ன, எத்தனை உள்ளன, அவை யாவை?
வேதங்கள், ஆர்யர்களின் புனித நூல்களாக இருந்த இவை, நாளடைவில் இந்துக்களின் புனித நூல்கள் ஆனது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றும், பிராமண குல நான்கு பிரிவுகளுக்கு வேதங்களாக அமைந்துள்ளன. அவை: (1) ரிக் (2) சாம (3) யஜூர் (4) அதர்வண.
Q11. ரிக் வேதம் என்பது என்ன, அதன் உள்ளடக்கம் என்ன?
நான்கு வேதங்களுள் ஒன்று. உலகின் ஆன்மீக நூல்களில் மிகவும் பழமையானது. இது ஒரு வேள்விகளின் (ஸ்லோகங்கள்) தொகுப்பு. இந்த வேள்விகள், நெருப்பு, இந்திரா, வாயு, விஷ்ணு மற்றும் வருண கடவுள்களை போற்றிப் பாடப்பட்டவை. ஆங்காங்கே சிறிய தெய்வங்களையும், ரிஷிக்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த வேதத்தில், 1028 வேள்விகள், 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன். இந்த வேள்விகளில், விலங்குகளுக்கும், குறிப்பாக, குதிரை (அஷ்வா), ஒட்டகம் (உஸ்த்ரா), சிங்கம் (சிம்ஹா), யானை (வரானா), எருமை (மஹிஷா) மற்றும் மயில் (மயூரா) ஆகியவையும் இடம் பெறுகின்றன.
Q12. ரிக் வேதத்தை எழுதியவர்கள் யார் என கருதப்படுகிறது?
ரிஷிக்கள் – அத்ரி, அங்கிரஸா, பரத்வாஜ், க்ரிட்சமத், கன்வா, விஷ்வமித்ரா, வாமதேவா, வசிஷ்டா ஆகியோர்.
Q13. சாம வேதம் என்பது என்ன, அதன் உள்ளடக்கம் என்ன?
இசை வடிவத்தில் அமைக்கப்பட்ட வேள்விகள். இவை சடங்குகளின் போது சொல்லப்படுவதில்லை, பாடப் படுகின்றன. அதனால் இத ""சாமகானா"" என்பர்.
Q14. யஜூர் வேதம் என்பது என்ன, அதன் உள்ளடக்கம் என்ன?
இந்த வேதம் பொதுவாக யாகங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த வேதம், சடங்குகள், யாகங்கள், பிரார்த்தனை (பூஜை) முறைகளைப் பற்றியது. இந்த வேதம், இரண்டு பிரிவாக ""பக்ஷ்"" ஆக உள்ளது. “Paksh” –
(1) ஷூக்லா -- Shukla = வெள்ளை -- புது நிலவிலிருந்து முழு நிலவு வரை உள்ள காலக்கட்டம்.
(2) கிருஷ்ணா -- Krishna = கருப்பு -- முழு நிலவிலிருந்து புது நிலவு வரை உள்ள காலக் கட்டம். ஷூக்ல யஜூர் வேதம் இரண்டு உபநிடதங்களைக் கொண்டது. (1) இசா வஸ்யா மற்றும் ப்ரிஹத்நாராயகா.
(2) கிரிஷ்ண யஜூர் வேதத்தில் நான்கு பிரிவுகள்.
Q15. அதர்வண வேதம் என்பது என்ன, அதன் உள்ளடக்கம் என்ன?
இந்த வேதம் மருந்துகளைப் பற்றியும் மந்திரங்களைப் பற்றியுமானது. இந்த வேதத்தை தொகுத்தவர்கள் -- ரிஷி ப்ரிகு மற்றும் அங்கிரஸா. இந்த வேதத்தை படித்து கடைப்பிடிக்க, ஒருவர் கடினமான ஆத்ம சுத்தமும், உடல் சுத்தமும் கடைப்பிடிக்க வேண்டும்.
Q16. உபநிடதங்கள் என்பது என்ன?
உபநிஷதம் என்பது ஒரு சமஸ்கிருதத் தொடர். அதன் பொருள்: உப = அருகில், நி = கிழே, ஷத் = அமர்ந்து. அதன் படி, இந்த உபநிடதங்களை படிக்க, ஒரு குருவின் அருகில், குரு-சிஷ்யன் பாரம்பரிய முறைப்படி, கீழே தரையிலமர்ந்து பயில வேண்டும். உபநிடதங்கள், வேதங்களின் ஒரு அங்கமாகும். இவை மூலம், தத்துவங்கள், தியான முறைகள் ஆகியவை அறியலாம். இந்திய தத்துவங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன.
Q17. உபநிடதங்கள் எத்தனை உள்ளன, அவற்றுள் முக்கியமானவை எனக் கருதப்படுபவை யாவை?
சுமார் 300. இவற்றுள் கீழ்க்கண்டவைகள், இந்திய தத்துவங்களுக்கு முக்கியமானவையாக கருதப்படுகின்றன: (1) ஆத்ரேயா Aitareya, (2) ப்ரிஹதாரண்யகா Brihadharanyaka, (3) இஷா Isha, (4) தைத்திரியா Taittiriya, (5) கதா Katha, (6) சாண்டோக்யா Chandogya, (7) கேனா Kena, (8) மாண்டுக்யா Mandukya, (9) ப்ரஷ்ணா Prashna, (10) முண்டகா Mundaka, மற்றும் (11) ஷ்வேதஷ்வதாரா Shvestashvatara.
Q18. புராணங்கள் என்பது என்ன, எத்தனை உள்ளன?
புராணம் என்பது மிகப்பழையது எனப் பொருள். இவை அனைத்தும், வரலாறு (ஆர்ய காலத்து), பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் தார்மீக ஒழுங்கு முறைகள் ஆகியவைகளை அடிப்படையாக தொகுக்கப் பட்டவை. இவை பெரிய புராணங்கள் மற்றும் துணை புராணங்கள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் 18 புராணங்களை உள்ளடக்கியவையாக உள்ளன.
Q19. புராணங்கள் எவற்றைப் பற்றி விவரிக்கின்றன, அவை எவ்வாறு அழைக்கப் படுகின்றன?
இவை பிரபஞ்சத்தின் ஐந்து முக்கிய அம்சங்களைப் -- ""பஞ்சலக்ஷணங்கள்"" பற்றி விவரிக்கின்றன. அவை: (1) சர்க Sarga – பிரபஞ்சம் உருவானது (2) ப்ரதிசாகரா Pratisarga – உலகின் பொழுது போக்கு அம்சங்களையும், முடிவு (3) வம்லா Vamla – கடவுள்கள் வம்ச வழி மற்றும் ரிஷிக்கள் (4) மனவந்தாரா Manvantara – மனித குலமும் முதல் மனிதன் உருவாக்கம் (5) வம்சானுசரிதம் Vamsanucharitam – வம்ச வழி வரலாறு.
Q20. மகாபுராணங்கள் எனப்படுபவை யாவை?
அக்னி, பகவத், பவிஸ்யா, பிரமாண்ட, ப்ரம்மவைவர்தா, கருடா, ஹரிவம்சா, கூர்மா, லிங்கா, மார்க்கண்டேயா, மத்ஸ்யா, நாரதா, பத்மா, ஸ்கந்தா, சிவ, வராஹ, வாயு, விஷ்ணு.
Q21. மகா புராணங்கள் மேலும் மூன்று பிரிவுகளாக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு குணாதிசயம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை யாவை?
(1) சதீவா Sativa – நன்மை, (2) ரஜாஸ் Rajas – உணர்வு மற்றும் (3) தமாஸ் Tamas – அறியாமை.
Q22. மகாபுராணங்களில் எந்த இரண்டு, மிக முக்கியமானதாகவும், தொடர்ந்து படிக்கவும் செய்யப்படுகிறது?
(1) பகவத் (2) விஷ்ணு.
Q23. துணை புராணங்கள் யாவை?
சமத் குமாரா, நரசிம்ம, ப்ரிஹன் நாரதிய, சிவ ரஹஸ்யா, துர்வாச, கபில, வாமணா, பார்கவா, வருணா, காலிகா, சம்பா, நந்தி, சூர்யா, பராசரா, வசிஸ்தா, தேவி பாகவதா, கணேசா, மற்றும் ஹம்ச.
Q24. மகா புராணம் மற்றும் உப புராணங்களைத் தவிர்த்து, இரண்டு முக்கிய புராணங்கள் இந்து மதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அவை யாவை?
(1) ஸ்தல புராணம் STHALA PURANA: ""ஸ்தலம்"" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இடம் எனப் பொருள். கோவில்களைப் பற்றியும் இடத்தின் வரலாற்றையும் கூறுவது .
(2) குல புராணம் KULA PURANA: ""குலா"" என சமஸ்கிருத வார்த்தை, குலம், குடும்பம், இனம் எனப் பொருள். இது, சாதிகள் உருவான வரலாறு மற்றும் அதைச்சார்ந்த பல நிகழ்வுகளை கூறுகிறது. சாதிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு முக்கியமான நூல்.
Q25. சைவ சமயத்தவர்கள் வணங்கும் கடவுளும், அவதாரங்களும் யாவை?
சிவன். இவரின் பல அவதாரங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:
நடராஜா NATARAJA: ஆன்மீக நடனக் கடவுள். பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருப்பவர்.
தட்சிணாமூர்த்தி DAKSHINAMOORTHY : அமைதியான கடவுள்.
ஹரிஹரா HARIHARA : பகுதி சிவ பகுதி விஷ்ணு கடவுள்
பைரவர் BHAIRAVA : திரிசூலம் ஏந்திய கடவுள் -- ஆசை, செயல், அறிவுக்கு.
அர்த்தநாரீஸ்வரர் ARDHANAREESWARA: பகுதி பெண், பகுதி ஆண் -- ஆண், பெண் இருவருக்கும் சம பங்கு உண்டு என உணர்த்தும் வகையாக. சிவன் எந்த மனித உருவத்திலும் வழிபடுவதில்லை. அவை லிங்க வடிவிலேயே வணங்குவர். சிவனை, ஈஸ்வரன் என்ற பெயரையும் பின் பகுதியில் சேர்த்தே வணங்கப்படுகிறார். அதனால் தான் சிவன் கோவில்கள் அனைத்துப் பெயர்களும் -- வைத்தீஸ்வரன், கபாலீஸ்வரன், சுந்தரேஸ்வரன், ஜலகண்டேஸ்வரன் என நூற்றுக்கணக்கான பெயர்களில் வணங்கப்படுகிறார்.
Q26. சிவனை பிரார்த்திக்கும் மிக புனிதமான மந்திரம் எது?
ஓம், ஓம் நமசிவாய. Oh (Ohm) and “Om namah Shivaya”
Q27. வேதங்களில் இடம் பெறும், சிவனைப் போற்றும் மிக முக்கிய மந்திரங்கள் யாவை?
ருத்ரம் மற்றும் ச்சமகம். “Rudram” and “Chamakam”.
Q28. புராண காலத்தில் சைவ சமயத்தை தீவிரமாக பரப்பியவர்கள் யாவர்?
நாயன்மார்கள் -- 63 பேர்கள். அவர்களில், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் மற்றும் மாணிக்க வாசகர் முக்கியம் ஆனவர்கள்.
Q29. சிவாலயங்களில், மந்திரங்கள் கூறி பூஜைகள் செயபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
சிவாச்சாரியார்கள்.
Q30. சைவ சமயத்தினரை அடையாளம் காட்டுவது எது?
அவர்கள் நெற்றியில் மூன்று வரிகளில் அணியும் விபூதி.
Q31. இந்துக்களின் மிக புனிதமான இடமாக கருதப்படுவது எந்த நகரம்?
வாரணாசி -- அங்குள்ள முக்கிய தெய்வம் -- காசி விஸ்வநாதர். Benares or Varnasi – Principal deity being Kasi Vishwanath.
Q32. எந்த மாநிலத்தில் சிவாலயங்கள் அதிகமாக உள்ளது?
தமிழ்நாடு.
Q33. சிவாலயங்கள் கட்டுவது, எதை முக்கிய அடிப்படையாக கொண்டு கட்டப்பட வேண்டும்.
ஆகம விதிகள் -- புராண காலத்தில் கோவில்கள் கட்டுவதெற்கென எழுதப்பட்ட விதிமுறை நூல்.
Q34. சைவ சமயத்தைப் பற்றி மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர் யார்?
அபினவ் குப்தா -- சமஸ்கிருத அறிஞர் -- ஸ்ரீநகர்.
Q35. ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் இருந்த போதிலும், 12 கோவில்கள் ""ஜோதி லிங்கங்கள்"" எனப்படுகின்றன? ஏன்? அவை யாவை?
இந்த பனிரெண்டு கோவில்களில் உள்ள லிங்கங்கள் சிவனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்ற நம்பிக்கை, இந்த கோவில்களுக்கு இந்த பெயர்களும், முக்கியத்துவமும்.
எண் பெயர் அமைந்துள்ள இடம்.
1. சோம்நாத் ப்ரபாஸ் பத்தான், சோம்நாத், சௌராஷ்டிரா, குஜராத்.
2. நாகேஷ்வர் துவாரகா, குஜராத்
3. மகாகாளேஷ்வர் மகாகால், உஜ்ஜெய்ன், மத்தியபிரதேசம்.
4. மல்லிகார்ஜூன் ஸ்ரீசைலம், கர்னூல், ஆந்திரபிரதேசம்
5. பீமா சங்கர் பீமா சங்கர், மகாராஷ்டிரா (மேற்கு தொடர்ச்சி மலை)
6. கேதார்நாத் ருத்ரப்ரயாக் மாவட்டம், உத்தராகாண்ட்
7. விஸ்வநாத் வாரணாசி, உத்திரப்பிரதேசம்.
8. த்ரியம்பகேஷ்வர் நாசிக், மகாராஷ்டிரா.
9. ராமநாதஸ்வாமி ராமேஸ்வரம், தமிழ்நாடு.
10. அமரேஷ்வர் ஓம்காரேஷ்வர், மத்தியபிரதேசம்.
11. க்ரிஷ்நேஷ்வர் எல்லோரா, மகாராஷ்டிரா.
12. வைத்யநாத் தேவ்கர், சந்தால், ஜார்க்கண்ட்.
Q36. 13 வது ஜோதி லிங்க கோவிலாக கருதப்படுவது வெளிநாட்டில் உள்ளது. எங்கே?
கையானா, மேற்கு இந்திய தீவுகள்.
Q37. பஞ்சபூதங்கள் எனப்படுபவை யாவை?
மனித குலத்தை இயக்கும் பிரபஞ்சத்தின் ஐந்து முக்கிய அம்சங்கள் எனக் கருதப்படுபவை. இந்து மதத்தில் இந்த ஐந்து அம்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவ பெருமானை இந்த ஐந்து அம்சங்களில் வணங்குகிறார்கள். அந்த ஐந்து அம்சங்கள்: ஆகாயம், காற்று, நீர், நெருப்பு, பூமி. இந்த ஐந்து அம்சங்களுக்கான சிவன் கோவில்கள் உள்ளன. ஒன்று மட்டும் ஆந்திராவிலும், எஞ்சியவை தமிழ் நாட்டிலும் உள்ளன.
Q38. பஞ்சபூதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் யாவை?
(1) ஆகாயம் SPACE : தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம், தமிழ்நாடு.
(2) காற்று WIND: காளஹஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி, ஆந்திரபிரதேசம்.
(3) நீர் WATER: ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி, தமிழ்நாடு.
(4) நெருப்பு FIRE : அருணாச்சலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை, தமிழ்நாடு.
(5) பூமி EARTH : ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், தமிழ்நாடு.
Q39. சைவ சமயத்தின் பல ஆன்மீக விழாக்களில், மிக முக்கியமானது என்ன?
மகா சிவராத்திரி, கணேஷ் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி, நவராத்திரி, தைப்பொங்கல்.
Q40. வைஷ்ணவம் என்பது என்ன?
மகா விஷ்ணு மற்றும் அவருடைய பல அவதாரங்களை பிரார்த்தனை செய்பவர்கள், போற்றுபவர்கள், வைஷ்ணவ பிரிவை சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களுக்கு விஷ்ணுவே கடவுள். இந்த பிரார்த்தனை மற்றும் போற்றும் முறை பக்தி யோகா என, பகவத் கீதை, இஷா உபநிடதம், விஷ்ணு பாகவதம் மற்றும் புராணங்களில் கூறப்படுகிறது.
Q41. விஷ்ணுவின் எந்த அவதாரப் பெயரில் அதிகமாக அழைக்கப்படுகிறார்?
நாராயணா.
Q42. மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் (சகாப்தம்) , ஒரு அவதாரம் எடுப்பார் என இந்து மதத்தினர் விஷ்ணு புராணத்தின் அடிப்படையில் நம்புகின்றனர். அவை யாவை?
எண் அவதாரம் யுகம்.
1. மத்ஸ்யா -- மீன் சத்யா யுகம்.
2. குர்மா -- ஆமை சத்யா யுகம்.
3. வராஹா -- பன்றி சத்யா யுகம்.
4. நரசிம்ஹா -- பகுதி மனிதன் பகுதி சிங்கம். சத்யா யுகம்.
5. வாமணா -- குள்ள உருவம். த்ரேதா யுகம்.
6. பரசுராமர் -- ராமா + கோடாரி த்ரேதா யுகம்.
7. ராமர் ----- த்ரேதா யுகம்.
8. கிருஷ்ணா------ த்வாபரா யுகம்.
9. புத்தர் ------- கலியுகம்.
10. கல்கி -------- இன்னும் வரவில்லை
Q43. கலியுகத்தின் தொடக்கமும், முடிவும் எப்போது என்று கூறப்படுகிறது?
கலியுகத்தின் தொடக்கமும், முடிவும் என்ன என்று உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், சில அறிஞர்கள் கூற்றுப்படி, இந்த யுகம் கி.மு.3102 ல் தொடங்கியதாகவும், சுமார் 4, 32,000 வருடங்கள் நீடிக்கும் என்றும் தெரிகிறது. இந்த விவரங்களும் உறுதியானது அல்ல.
Q44. வைஷ்ணவத்தை பின்பற்றுபவர்கள் எந்த நூலை புனித நூலாக கருதுகின்றனர்?
விஷ்ணு சஹஸ்ரநாமம். இதன் பொருள், விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள். இது, பகவத் கீதையின் 12 வது பக்தி யோகம் ""Shanti Parva"" (meaning Book of Peace) என்ற அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது.
Q45. வைஷ்ணவர்களின் அடையாளமாக எதை முக்கியமாக குறிப்பிடலாம்?
வைஷ்ணவர்கள் உயரவாக்கில் நெற்றியில் ஆங்கில எழுத்து U போன்று நாமம் என்ற பெயரில், இரு பக்கமும் வெள்ளைக் கோடும் நடுவில் மஞ்சள் கோடும் போட்டுக்கொண்டிருப்பார்கள். இதிலும் சில பிரிவுகள் உள்ளன. அதற்கேற்றவாறு, நடுக் கோட்டில் வண்ண மாற்றம் (சமயங்களில் சிகப்பு) இருக்கும். இது அவரவர்களின் வழிபாட்டு முறையை பொருத்து இருக்கும். இதை சம்பிரதாயம் எனக் கூறுவர். இந்த சம்பிரதாயங்களில், பல உண்டு. உதாரணமாக, ருத்ரா, கௌண்டில்யா போன்றவை.
Q46. வைஷ்ணவர்களின் முக்கியமான பண்டிகைகள் யாவை?
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி (ராமர் பிறந்த நாள்), ஜன்மாஷ்டமி (கிருஷ்ணரின் பிறந்த நாள்), ரதசப்தமி, ப்ரம்மோத்ஸவம். இன்னும் சில சிறிய அளவிலான பண்டிகைகளும் சைவ சமயத்திலிருந்தும் அனுசரிக்கப் படுகிறது.
Q47. வைஷ்ணவர்களின் புகழ் பெற்ற ஆலயங்கள் யாவை?
(1) வெங்கடேஷ்வரா கோவில், திருப்பதி : சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம், திருப்பதி நகரில், மலைக் கோவில். இதை, வெங்கடாசலபதி, பாலாஜி, நாராயணா, கோவிந்தா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையான் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஏழுமலையான் என அழைக்கக் காரணம், இந்த ஆலயம் 7 மலைகளுக்கு மேல் அமைந்து உள்ளது. அந்த ஏழு மலைகளின் பெயர்கள்: சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபத்ரி, நாரயணாத்ரி, மற்றும் வெங்கடாத்ரி. பொதுவாக மக்களிடம் நிலவும் நம்பிக்கை என்னவென்றால், விஷ்ணு பகவான், குபேரனிடம் கடன் வாங்கி, அதை இன்றும் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், இங்கிருந்து கொண்டு, கடனை அடைத்து வருவதாகவும் நம்பப்படுகிறது. அதிகமான பக்தர்கள் (சுமார் 50000 தினசரி), அதிகமான வருவாய் (உலகிலேயே இரண்டாவது பணக்கார ஆலயம்) கொண்ட கோவில். பக்தர்களுக்கு இலவச அன்னதானம், தங்குமிடம், பல்கலைக்கழகம், மருத்துவ கல்லூரி, மருத்துவ மனை, என பல தொண்டு மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ப்ரம்மோத்சவம் மிகப்பெரிய திருவிழா. 9 நாட்களுக்கு, புரட்டாசி மாதத்தில் (September/October) நடத்தப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
Venkatesa Suprabatham: சமஸ்கிருதத்தில் வெங்கடேஸ்வரா வைப் போற்றி, பாடப்படும் பாடல். இதை, கி.1430ல் அனந்தாசார்ய எழுத, திருமதி எம்.எஸ் சுப்புலக்ஷ்மி பாடியிருப்பது, இக்கோவிலின் தெய்வீகப்பாடல். தினமும் அதி காலையில் திருப்பதியில் ஒலிக்கப்படுவது மட்டுமின்றி, அநேகமாக தென் இந்தியாவில் அனைத்து இந்துக்கள் கோவில் மற்றும் இல்லங்களில் ஒலிக்கப்படுகிறது.
(2) ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆலயம், ஸ்ரீரங்கம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. இந்த ஆலயம், காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றினால் அமைந்துள்ள தீவில் அமைந்துள்ளது. மிகப்பெரிய ஆலயம். தமிழ் நாட்டின் பெரிய ஆலயங்களுள் இதுவும் ஒன்று -- 6,31,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதன் கோபுரம் ஆசியாவிலேயே பெரியது -- சுமார் 236 அடி உயரம். இங்கும் பக்தர்கள் கூட்டம், வருவாய் மிகுந்த கோவில்.
(3). ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில்: ஆண்டாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில், விருது நகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவிலின் கோபுரம், தமிழ்நாட்டு அரசு சின்னமாக உள்ளது.
(4). ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி, சென்னை: 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில், கிருஷ்ணபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Q48. நம் நாட்டில் உள்ள மூன்று ரங்கநாதசாமி கோவில்கள், அதுவும் தீவின் மீது அமைந்துள்ளன. அவை யாவை?
மூன்று உள்ளன. அவை:
(1) ஆதி ரங்கா -- ஸ்ரீரங்கபட்டினம் -- மைசூர்
(2) மத்ய ரங்கா -- சிவசமுத்ரா -- கர்நாடகா
(3) அந்த்ய ரங்கா -- ஸ்ரீரங்கம், திருச்சி, தமிழ்நாடு இவை மூன்றுமே காவேரி நதியில் உள்ள தீவுகளில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Q49. "பஞ்சரங்கம்" எனப்படும் ரங்கநாதசாமி கோவில்கள் எங்குள்ளன?
1. ஸ்ரீரங்கப்பட்டினம்,
2. கோவிலாடி, திருப்பேர் நகர், தமிழ்நாடு,
3. இந்தலூர், மாயூரம்,
4. சீர்காழி,
5. ஸ்ரீரங்கம்.
Q50. சக்தி வழிபாடு என்பது என்ன?
காளி, துர்கா, பார்வதி என பல அவதாரங்களில் உள்ள பெண் தெய்வங்களை வழிபடுவதே. இவ்வகை பெண் தெய்வங்களை ""அம்மன்"" என்ற துணைப்பெயருடன் சேர்த்து, பல பெயர்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் மிக அதிகமாக வணங்கப்படுகிறது. இவ்வகை வழிபாடுகளில், விலங்குகளை, வேண்டுதலின் பேரில், பலி கொடுப்பது, ஒரு பொதுவான வழக்கமாக உள்ளது. தேவி மகாத்மியம், லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவை இவ்வழிபாட்டு முறையில் முக்கிய வேள்வி புத்தகங்கள். அம்மன் கோவில்கள் ஏராளம். அவற்றுள் ஒரு சில கோவில்கள் மிகவும் பிரசித்தமானவை.
Q51. மிகவும் புகழ் பெற்ற அம்மன் கோவில்கள் யாவை?
(1) வைஷ்ணவி தேவி கோவில், காஷ்மீர்.
(2) காளி கோவில், கொல்கத்தா
(3) பகவதி கோவில், சோட்டானிக்கரா, கேரளா. (இப்பெயரில் கேரளாவில் அநேக கோவில்கள் உள்ளன).
(4) மூகாம்பிகா கோவில், கொல்லூர், கர்நாடகா
(5) சாமுண்டீஸ்வரி, மைசூரு, கர்நாடகா
(6) கனகதுர்கா, விஜயவாடா, ஆந்திரபிரதேசம்
(7) மீனாட்சியம்மன் கோவில், மதுரை, தமிழ்நாடு
(8) காமாக்ஷி அம்மன் கோவில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
(9) மாரியம்மன் கோவில், சமயபுரம், திருச்சி
(10) காமாக்ஷி அம்மன் கோவில், மாங்காடு, சென்னை
(11) ஆதிபராசக்தி கோவில், அச்சரபாக்கம், தமிழ்நாடு
(12) பன்னாரி அம்மன் கோவில், சத்யமங்கலம், தமிழ்நாடு.
(13) தேவி கருமாரி அம்மன் கோவில், திருவேற்காடு, சென்னை.
(14) மகாலக்ஷ்மி (அம்பா பாய்) அம்மன் கோவில், கோலாப்பூர்
(15) மகாலக்ஷ்மி கோவில், மும்பை. இவை தவிர்த்து பல பிரபலமான அம்மன் கோவில்கள், இந்தியா முழுவதும் பரவியுள்ளது.
Q52. இந்து மதத்தில் நான்காவது பிரிவாக கருதப்படும் ""ஸ்மார்த்தா"" எனப் படுபவர்கள் யார்?
இந்து மதத்தில், எந்த குறிப்பிட்ட கடவுளையும் வணங்குவதாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல், அனைத்து கடவுள்களையும் வணங்குபவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர். இவர்கள், ஆதி சங்கரர் அருளிய ""அத்வைத வேதாந்தம்"" ஐ முன் வைத்து, தர்மத்தையே முக்கிய குறிக்கோளாக தங்கள் வழிபாடுகளை நடத்துகின்றனர். வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி, யாகங்களின் மூலம் (ஷ்ரௌதா-Shrauta என அழைப்பர்) தங்கள் வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவர்கள், தங்கள் அன்றாட வழிபாட்டு முறையாக, கீழ்க்கண்ட முறைகளைப் கடைபிடிக்க வேண்டும். அவை:
(1) ஸ்நானா -- குளியல்
(2) சந்தியாவந்தனம் (காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளிலும் மந்திரங்கள் குறிப்பாக ""காயத்ரி மந்திரம்"" சொல்வது),
(3) பிரார்த்தனை (அமைதியான முறையில்)
(4) பூஜைகள் (தெய்வங்களுக்கு)
(5) யாகங்கள்.
Q53. ஆதி சங்கரர் என்பவர் யார்?
கி.மு. 788-820 களில் இந்து மதத்தை பரப்புவதில் முதன்மையாக விளங்கியவர். ஆதி சங்கரர் என்பது முதல் சங்கரர் எனப்பொருள். இவரை ""சங்கர பகவத் பாதாச்சார்யா"" எனவும் அழைப்பர். இதன் பொருள் -- கடவுளின் பாதத்தில் ஒரு ஆசான்"". சிவபிரானின் ஒரு அவதாரம் எனக் கருதப்படுகிறார். ""அத்வைத வேதாந்தம்"" என்ற இந்து மத சித்தாந்தத்தை தொகுத்து அளித்தவர். அத்வைத வேதாந்தத்தை பரப்புவதற்காக இவர் மேற்கொண்ட பயணம் ""திக் விஜயம்"" எனப்படுகிறது. ""தஷாநமி சம்பிரதாயம்"" “Dashanami Sampradaya” (தஷாநமி=10 பெயர்கள்) கொண்ட அத்வைத வேதாந்தத்தின் அடிப்படையில், ஸ்மார்த்தா நம்பிக்கையில், இந்து மத துறவி முறையை அறிமுகப் படுத்தியவர். ஆதி சங்கரர், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், ""காலாடி"" என்ற இடத்தில் பிறந்தவர்.
Q54. ஆதி சங்கரர் நிறுவிய இந்து மத ""பீடங்கள்"" (ஒருங்கிணைப்பு மையங்கள்) யாவை?
(1) சாரதா பீடம்: ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் எனவும் அழைக்கப்படுகிறது. துங்கபத்ரா நதிக்கரையில், சிருங்கேரி என்ற இடத்தில், கர்நாடகாவில் அமைந்துள்ளது. இந்த பீடத்தின் மடாதிபதி சரஸ்வதி, தீர்த்தா, ஆரண்யா மற்றும் பாரதி என்ற ஏதேனும் ஒரு பட்டத்துடன் பெயர் வைக்கப்படுகிறார்.
(2) ஜோதிமாதா பீடம்: உத்தரகாண்ட் மாகாண, ஜோஷிமத், சமோலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த பீடம் அதர்வண வேதத்துக்கு தலைமை பீடம். இந்த மடத்தின் மடாதிபதி, கிரி, பர்வத மற்றும் சாகரா என்ற பட்டத்துடன் பெயர் வைக்கப்படுகிறார்.
(3) கோவர்தன பீடம்: ஒடிசாவின் பூரி நகரில், ஜகந்நாதர் கோவிலுடன் இணைந்துள்ள பீடம். இந்த மடத்தின் மடாதிபதி, பூரி, வனா, மற்றும் ஆரண்யா என்ற பட்டத்துடன் பெயர் வைக்கப்படுகிறார். ரிக் வேதத்திற்கு இந்த மடம் தலைமை பீடம்.
(4) துவாரகா பீடம்: குஜராத்தின் துவாரகா நகரில் அமைந்துள்ளது. சாம வேதத்துக்கு தலைமை பீடம். இந்த பீடத்தின் மடாதிபதி தீர்த்தா, ஆஷ்ரமா என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார்.
(5) காஞ்சி காமகோடி பீடம்: காஞ்சிபுரம், தமிழ்நாட்டில் உள்ளது. 5வது நூற்றாண்டில் ஆதி சங்கரர் நிறுவியது. இந்த பீடத்தின் மடாதிபதி ""சங்கராச்சார்யர்"" என அழைக்கப்படுகிறார். மற்ற பீடத்தின் மடாதிபதிகளும் சங்கராசார்யர் என அழைக்கப்படுவதால், வேறுபாடு படுத்துவதற்காக, இந்த மடாதிபதிக்கு ""ஸ்வாமிகள்"" என்ற பட்டம் பெயருடன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இப்போது 69வது சங்கராச்சார்யர் பதவியிலிருக்கிறார். 68வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், மிகப் பெரிய மகான். இவரை உலகத்தில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும் இதர தலைவர்கள் அனைவரும் பெரும் மரியாதையுடன் போற்றி வந்தனர். இவரின் மகிமையின் அடிப்படையில், இவரை ""மகாபெரியவாள்"" என அழைப்பர். இந்து மத தத்துவத்தை இவருடைய நூல் ""Voice of Divinity"" மூலம் எடுத்துரைத்துள்ளார்.
Q55. இந்து மதத்தின், சமீப கால ஆன்மீக குருக்கள் யாவர்?
(1) ஷிர்டி சாய் பாபா: இது ஒரு சமாதி மற்றும் கோவில். இவருடைய இயற்பெயர், பிறந்த ஊர் தெரியவில்லை. இந்த கோவில், ஷிர்டி, அஹமத்நகர் மாவட்டம், மகாராஷ்டிரா வில் உள்ளது. 19 - 20ம் நூற்றாண்டில் வாழ்ந்து 1918ல் மறைந்ததாக தெரிகிறது. இவர் இந்து மற்றும் முஸ்லீம் மக்களால் போற்றப்பட்ட ஒரு ஆன்மீக குரு. மசூதியில் வாழ்ந்து, கோவிலில் புதைக்கப்பட்டவர். ""அல்லா மாலீக்"" = ""கடவுளே நாம் எல்லோருக்கும் எஜமானர்"" என்பது இவருடைய புகழ்பெற்ற வாக்கு. ""ஸ்ரீ சாய் சத்சரிதா"" என்பது, இவருடைய சித்தாந்தங்களை பற்றிய, கோவிந்த் ராவ் ரகுநாத் தாபோல்கர் என்வரால் எழுதப்பட்ட நூல். சகோரி என்ற இடத்து மன்னர் உபசாய் மகாராஜ் மற்றும் அஹமத் நகர் ராஜ பரம்பரையைச் சேர்ந்த மெஹர் பாபா இவருடைய தீவிர பக்தர்களாக இருந்து பிற்காலத்தில் ஆன்மீக குருக்கள் ஆனவர்கள். இவருடைய லட்சக்கணக்கான பக்தர்களில் மிகவும் புகழ் பெற்ற சீடர் புட்டபர்தி சாய்பாபா. B.V நரசிம்ம சுவாமிஜி என்பவரால் நிறுவப்பட்ட அகில இந்திய சாய் சமாஜம் இந்த கோவிலையும் அதனுடன் அனைத்து நிர்வாகப் பணிகளையும் மேற்கொள்கிறது.
(2) ஸ்ரீ சத்ய சாய் பாபா: சத்ய நாராயண ராஜூ (1926-2011) வாக பிறந்து, ரத்னாகரன் என பெற்றோர்களால் அழைக்கப்பட்டு, இப்போது சத்ய சாய் பாபா என்ற ஆன்மீக குருவாக உலகளவில் நன்கு அறியப்பட்டவர். இவருடைய போதனைகள், ஆதிசங்கரர் ன் ""அத்வைத வேதாந்தம்"" அடிப்படையாகக் கொண்டது. இவருடைய ஆஸ்ரமம், அனந்தபூர் மாவட்டம், புட்டபர்த்தி என்ற இடத்தில் உள்ளது. இந்த ஆஸ்ரமத்தின் பெயர் ""ப்ரஷாந்தி நிலையம்"". இதை தவிர்த்து, கடுகேடி, ஒயிட் ஃபீல்ட், கர்நாடகாவில் ""பிருந்தாவனம்"" என்ற பெயரிலும், கொடைக்கானல், தமிழ் நாட்டில் ""சாய் ஷ்ருதி"", என்ற வேறு இரு ஆஸ்ரமங்களும் உள்ளது. இவருடைய போதனை மற்றும் தியான மையங்கள் , ""சத்யம்"" மும்பை, ""சிவம்"" ஹைதராபாத் மற்றும் ""சுந்தரம்"" சென்னை. உலகளவில் இவருக்கு சீடர்களும், பக்தர்களும் இருந்தபடியால், வருவாய் பெருகி, அந்த வருவாயில், பல தொண்டு செயல்களும் புரிந்துள்ளார். கல்வி நிலையங்கள், உயர்தர மருத்துவ மையம், மற்றும் பல தொண்டுப் பணிகள் தொடர்கின்றன. ""ராமகிருஷ்ண ரசவாஹினி"" இவருடைய போதனைகள் அடங்கிய நூல், ""சனதான சாரதி"" சத்ய சாய் பாபா சேவா சங்கத்தால் வெளியிடப்படும் மாத இதழ். 24.4.2011 அன்று சமாதி அடைந்தார்.
(3) ரமண மகாரிஷி: 30.12.1879-14.04.1950. மிகவும் மரியாதைக்குரிய ஆன்மீக குரு. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை நகரில் இவருடைய ஆஸ்ரமம் ""ரமணாஷ்ரமம்"" உள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கும் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படும் தீப திருவிழாவுக்கும் புகழ் பெற்றது. இவருடைய போதனைகள், தனி மனிதன் தன்னை புரிந்து கொள்ளுதல் ஐ மையமாக கொண்டது. இவருடைய போதனைகள் சிவப்ரகாசம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட ""நான் யார்"" என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
(4) ராமகிருஷ்ண பரமஹம்சா: 18.02.1836-16.08.1886. மேற்கு வங்காளத்தில், கமார்புகூர் என்ற இடத்தில், கதாதர் சட்டபாத்யாய் என பிறந்தவர். ஆன்மீக குரு மற்றும் ஆசான். வங்காளம் குறிப்பாக, மற்றும் கிழக்கிந்திய பகுதிகளில் மிகவும் போற்றப்படும் மரியாதைக்குரிய குரு. கடவுளை அறிவது, அவரை வழிபடுவது, மத நல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு போதனைகள் செய்தார். இவருடைய போதனைகள் ""கதாமித்ரா"" என்ற வங்காள மொழி புத்தகத்தில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மகேந்திரநாத் குப்தா என்பவரால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவருடைய துணைவியார் பெயர் சாரதா. ராமகிருஷ்ணர் மறைவுக்குப் பிறகு, இவரும் அவருடைய ஆன்மீக பணியைத் தொடர்ந்தார். ஆகவே இருவருமே வங்காள மக்களின் மிக மரியாதைக்குரிய ஆன்மீக் குருவாக இருந்தனர்.
(5) சாரதா தேவி : 1853 – 1920. ராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார். இவர் ஆன்மீக பணியை கொல்கத்தாவில் தக்ஷிணேஷ்வர் என்ற இடத்தில் தொடர்ந்தார்.
(6) ஸ்வாமி விவேகானந்தர்: 12.01.1863 - 04.07.1902. நரேந்திரநாத் தத்தா என்பது அவருடைய இயற்பெயர். ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மை சீடர். வேதாந்தம் மற்றும் யோகா வை அடிப்படையாக கொண்ட உலகின் மிகப் புகழ் பெற்ற ஆன்மீக போதகர்/குரு. இந்திய ஆன்மீகவாதிகளில் முதன் முதலாக வெளிநாடு சென்று புகழ் பெற்றவர். கல்கத்தாவின் ப்ரெசிடென்ஸி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரிகளில் கல்வி பயின்றவர். 1893ல், தனது 30 வது வயதில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக ஆன்மீக மகாநாட்டில் கலந்து கொண்டு , உலகப் புகழ் பெற்ற “Sisters and Brothers of America,” என்ற தனது உரையை நிகழ்த்தினார். இவருடைய அமெரிக்க விஜயத்திற்கு ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, மைசூர் மன்னர், கேத்ரி மன்னர் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இந்த வெளிநாட்டு விஜயத்திற்குப் பிறகு, இவர் உலகப்புகழ் பெற்ற ஆன்மீக குருவாக போற்றப்பட்டார். மேற்கு வங்காளத்தில் ""ராமகிருஷ்ண மடம்"", 15.8.1897 லும், பேலூர் மடம் ஜனவரி 1889லும் இவரால் நிறுவப்பட்டது. 4.7.1902 அன்று இவர் மறைந்தார். இவரைப் பற்றி இந்திய தலைவர்கள் கூறியது/நடந்தது:
(1) ரவீந்திர நாத் டாகூர் இவரைப்பற்றி, ""இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டுமானால், விவேகாநந்தரைப் பற்றி படியுங்கள். இவருள் எல்லாமே தீர்க்கமான சிந்தனைகள். எதுவுமே எதிர்மறை அல்ல"" .
(2) ராஜகோபாலாச்சாரி கூறுகையில், ""இவர் இந்து மதத்தைக் காப்பாற்றியுள்ளார்""
(3) நேதாஜி கூறுகையில், "" நவீன இந்தியாவின் வடிவமைப்பாளர்"" என்றார்.
(4) காந்திஜி கூறுகையில் "" இவருடைய சிந்தனைகள் செயல்கள், என்னுள் இருந்த நாட்டுப்பற்றை ஆயிரம் மடங்கு உயர்த்தியிருக்கிறது"".
(5) விகேகாநந்தரின் தூண்டுதலால், ஜம்ஷெட்ஜி டாடா பெங்களூரில் இந்திய அறிவியல் கல்வி மையம், Indian Institute of Science, அவர் நினைவாக நிறுவினார்.
(6) விவேகாநந்தர் பாறை நினைவாலயம் Vivekananda Rock Memorial – கன்னியாகுமரியில், முக்கடல் சந்திப்பில், ஸ்ரீபாதப்பாறை என்ற ஒரு தீவுப் பாறையில் அவருடைய சிலை, தியான மண்டபம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பாறையின் மீது 24.12.1892 அன்று அமர்ந்து தியானம் புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.
(7) இவருடைய பிறந்த நாள் -- 12 ஜனவரி - நாடு முழுவதும் இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
(7) அமிர்தானந்த மாயி : 27.9.1953 அன்று, பரயக்கடவு, கேரளாவில் சுதாமணி என்ற பெயரில் பிறந்தவர். அம்மா, அம்மாயி, அம்மாச்சி, ஆயி, மதர், மாதா என பல பெயர்களிலும், ""கட்டிப்பிடிக்கும் துறவி"" எனவும் அழைக்கப் படுகிறார். இவர், பூரியில், ஸ்வாமி அம்ரிதா ஸ்வரூபானந்த பூரி, பூரி பீடத்தின் முதல் முக்கிய சீடராக இருந்தவர். இவர் நடத்தும் தொண்டமைப்பு நிறுவனம் ""அம்ரிதாபுரி"" என்றழைக்கப்படுகிறது. இவருடைய ஆன்மீக பிரசங்கங்கள் சொற்பொழிவுகள் வெளி நாடுகளில் நடந்த இடங்கள்:
(1) 1993 ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக மதங்களின் மகாநாடு. விவேகாநந்தருக்குப் பிறகு இந்த மகாநாட்டில் சரியாக 100 வருடங்களுக்குப் பிறகு கலந்து கொண்ட இந்தியர்.
(2) 2000ல், ஐ.நா.சபையில், நியூயார்க் நகரில் நடந்த மதங்கள் நல்லிணக்க கொண்டாட்டத்தின் 50 வது வருட நிகழ்ச்சியில் ஆன்மீக உரையாற்றினார்.
(3) 2002ல், ஐ.நா. சபையின் மில்லெனியம் அமைதி உச்சி மகாநாட்டில் முக்கிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.
(4) 2002ல், அகிம்சைக்காக காந்தி - மார்ட்டின் லூதர் கிங் விருது பெற்றார்.
(5) 2004ல் மீண்டும் உலக மதங்களின் மகாநாட்டில் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
(6) இவருடைய தொண்டு நிறுவனத்தின் மூலம், மருத்துவ கல்லூரி, உயர்தர மருத்துவ மனை, தொழிற்நுட்ப பல்கலைக்கழகம், என பல தொண்டுகள் நடைவெற்றுவருகின்றன.
(8) ரஜ்னீஷ் : இயற்பெயர் சந்திர மோகன் ஜெயின். 11.12.1931--19.1.1990. மத்திய பிரதேச, நரசிங்கப்பூர் மாவட்டம், குஸ்வாடா கிராமத்தில் பிறந்தவர். பூனாவில் ஆஸ்ரமம் நடத்தியவர். உலகம் முழுவதும் இவருக்கு பின்பற்று-- பவர்கள் நிறைய இருந்தவனர். உலகமறிந்த ஆன்மீக வாதியாக இருந்த போதிலும், பல சர்ச்சைகளுக்கும் உள்ளானவர்.
(9) பக்தி வேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதா: 1.9.1896 -- 14.11.1977 -- கல்கத்தாவில் அபய் சரன் தே என்ற இயற்பெயர், நந்துலால் என்று பெற்றோர்களால் அழைக்கப்பட்ட செல்லப் பெயருடன் பிறந்தவர். கௌடிய வைஷ்ணவத்தை மிகவும் தீவிரமாக பரப்பியவர். பிறந்த நாள் கிருஷ்ணாஷ்டமி தினம், செல்லப்பெயரும் கிருஷ்ணரின் பெயர். இவைக்கேற்ப, இவர் ஒரு தீவிர கிருஷ்ண பக்தராக இருந்து, உலகளவில் இன்றும் வளர்ந்து கொண்டிருக்கும் ISKCON அமைப்பை உருவாக்கியவர். ISKCON கோவில்கள் உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலுமாக, நூற்றுக்கணக்கான கோவில்களும் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.
Q56. இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மிகப் புகழ்பெற்ற ஆன்மீக தொண்டாற்றும் அமைப்புகள் யாவை?
(1) ஆர்ய சமாஜம்: ஒரு சமூக சீர்திருத்த அமைப்பு. 1875ல் பாம்பேயில் ஸ்வாமி தயானந்தாவால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, மனித குலத்தின் கடமைகளை - கர்மா - வலியுறுத்தி, தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
(2) ப்ரம்ம சமாஜ்: ஆகஸ்ட் 1828ல், கொல்கத்தாவில், ராஜா ராம் மோகன் ராய் அவர்களால் நிறுவப்பட்டது. சமூக மற்றும் ஆன்மீக சீர்திருத்த அமைப்பு. சதி பழக்கத்தை ஒழிக்கவும், விதவை மறுமணத்திற்காகவும் கடுமையாக உழைத்த அமைப்பு.
(3) ராமகிருஷ்ணா மிஷன்: 1.5.1897ல், ஸ்வாமி விவேகானந்த் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, ஆன்மீக மற்றும் சமூக தொண்டு வழியில் ஈடுபடுத்த, விருப்பமுள்ள இளைஞர்களை, குருகுல, துறவி வழியில், பயிற்சி அளித்து ஈடுபடுத்துகின்றது. இதில் தன்னார்வ துறவிகளும் ஈடுபடுகின்றனர். இதன் தலைமையகம் கல்கத்தா நகரில் பேலூர் மடத்தில் உள்ளது. ""கர்மா"" வின் அடிப்படையில் இயங்கும் ஒரு ஆன்மீக தொண்டு நிறுவனம்.
(4) ஆன்மீக வாழ்வு சங்கம் -- DIVINE LIFE SOCIETY: 1936ல் ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி அவர்களால் ரிஷிகேஷ் ல் நிறுவப்பட்டது. ஆன்மீக அறிவை, தனது அமைப்பின் நூல் வெளியீடுகள் மூலம் பரப்பி வரும் ஒரு அமைப்பு.
(5) சின்மயா மிஷன்: 1953ல், மும்பையில், ஸ்வாமி சின்மயானந்தா அவர்களால் நிறுவப்பட்ட ஆன்மீக, சமூகத் தொண்டு நிறுவனம். உலகளவில் 300க்கும் மேற்பட்ட மையங்கள் கொண்டது.
(6) இஸ்கான்: ISKCON: சர்வதேச கிருஷ்ணா உணர்வு அமைப்பு -- 1996ல், நியூயார்க் நகரில், ஸ்ரீ ஸ்வாமி பக்தி வேதாந்த ப்ரபுபாதா என்பவரால் நிறுவப்பட்டது. வைஷ்ணவ முறைப்படி, கிருஷ்ணர் உணர்வு பற்றி பரப்புவதே இதன் முக்கிய தொண்டு. உலகளவில், உறுப்பினர் எண்ணிக்கை, ஆர்வலர்கள், வருவாய் ஆகியவற்றில் மிகப்பெரிய ஆன்மீகத் தொண்டாற்றும் அமைப்பு. சமூகத் தொண்டிலும் பல்வேறு வகைகளிலும் ஈடுபடுகிறது.
Q57. வேதங்கள், உபநிடதங்கள் தவிர்த்து, வேறு எந்த நூல்கள், இந்து மத நடை முறைகளுக்கு உதவுவதாக உள்ளன?
சூத்திரங்கள், துணைவேதங்கள், வேதாங்கம், சாஸ்திரங்கள், மனுஸ்மிரிதி, மகா பாரதம், ராமாயணம்.
Q58. சூத்திரங்களில் முக்கிய உள்ளடக்கம் என்ன?
ஸ்ரௌதா SROUTA: வேதங்களின் அடிப்படையில் செய்யப்படும் பலியிடுதல் முறைகள்.
க்ரிஹா GRIHA: ஒரு குடும்பத்தலைவனின் கடமையும், பொறுப்புகளும். Duties and responsibilities of a familyman.
தர்மா DHARMA: சமூக விதிகளும், கடமையும்.
Q59. உபவேதங்கள் என்ன, அவை எதைப்பற்றி விவரிக்கின்றன?
ஆயூர்வேதா -- மருத்துவம்.
தனுர்வேதா -- போர் முறைகள்
கந்தர்வவேதா -- கலை மற்றும் இசை.
ஷில்ப வேதா -- கலை மற்றும் இலக்கியம்.
Q60. வேதாங்கங்கள் எதைப் பற்றி விவரிக்கின்றன?
கல்பசிக்ஷா -- உச்சரிப்பு முறை
வ்யாகர்ணா -- இலக்கணம்
நிருகுலா -- சொற்பிறப்பியல்
ஜோதிஷா -- வானியல்
Q61. சாஸ்திரங்கள் எதைப்பற்றி விவரிக்கின்றன?
கடவுள், ஆன்மா, பிறப்பு, மறைவு.
Q62. மனுஸ்மிரிதி என்பது என்ன?
மனு என்பவர் ஆர்யர்கள் காலத்து சட்ட முறைகளைத் தொகுத்தவர். வாரிசுரிமை, மன்னர்களின் கடமை, மக்களின் கடமை ஆகியவை பற்றி மனுஸ்மிரிதி என்ற அவரது நூல் தொகுப்பில் விளக்கியுள்ளார். நம் நாட்டுக்கு சட்ட விதிமுறைகளை முதலில் கொடுத்தவர் என, மத சார்பின்றி போற்றப்படுகிறார்.
Q63. இந்து மதத்தின் இரண்டு முக்கிய காவியங்கள் யாவை?
மகா பாரதம் மற்றும் ராமாயணம்.
Q64. மகாபாரதத்தை முதலில் யார், யாரிடம் கூறினார்?
வேத வியாசர் ரிஷி அவர்களால், விநாயகர் கடவுளுக்கு சொல்லப்பட்டது.
Q65. மகாபாரதத்தை எழுத்து வடிவத்தில் கொடுத்தவர் யார்?
விநாயகக் கடவுள். – யானைத் தலையை கொண்ட, முதற் கடவுளாக கருதப்படுபவர். அவர் தனது வலது தந்தத்தால், வேத வியாச ரிஷி கூற, இவர் எழுதி முடித்தார். அதனால் தான் அவர் உருவங்களிலெல்லாம் வலது தந்தம் பகுதியாக காண்பிக்கப்படுகிறது.
Q66. மகா பாரதக் கதையை யாருக்கு, யாரால் முதலில் சொல்லப்பட்டது?
வியாச முனிவரின் முதல் சீடர் வைசம்பாயனா என்பவர், புராண காலத்து மன்னர் ஜனமேஜெயா (பரீக்ஷித் மன்னரின் மைந்தர்) என்பவருக்கு சொல்லப்பட்டது. இந்த மன்னருக்கு பாம்புகள் மீது கடும் வெறுப்பு இருந்ததால் பிரபஞ்சத்தில் இருந்த பாம்புகளையெல்லாம் கொல்ல வேண்டும் என நினைத்தார். அப்போது அவருக்கு இயற்கையுடன் கூடி வாழ வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த கதையை எடுத்துரைத்தார்.
Q67. மகாபாரதம் கூறும் முக்கிய அம்சம் என்ன?
மகா பாரதம் தார்மீக விதிமுறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இது, இரண்டு சகோதரர்களின் குடும்பத்தில் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்து போரில் ஈடுபட்டதின் அடிப்படையில் அமைந்து உள்ளது. ஹஸ்தினாபுரத்தை ஆண்ட மன்னர் பாண்டு மற்றும், துணைவியர் குந்தி (முதல் மூன்று புத்திரர்கள்), மாத்ரி (கடைசி இரண்டு புதல்வர்கள்) அவருடை ஐந்து புதல்வர்கள் -- யுதீஸ்திரன், பீமன், அர்ஜூனன், நகுலன், மற்றும் சகாதேவன் -- ஒரு புறமும், மறு புறம் -- கௌரவர்கள் எனப்பட்ட, மன்னர் திருதராஷ்டிரர் (பிறப்பிலேயே கண் பார்வை இழந்தவர்) மற்றும் அவரது துணைவியார் காந்தாரி, அவரது 100 புதல்வர்கள் -- மூத்தவர் துரியோதனன்) இடையே நடந்த போரும் அதன் விளைவும் தான் இந்த காவியம். பாண்டுவும் திருதராஷ்டிரரும், விசித்திரவீரா மற்றும் நியோகா தம்பதியினரின் புதல்வர்கள். சகுனி, (காந்தாரியின் சகோதரர்) தான் இரு குடும்பங்களுக்கிடையில் குழப்பங்களையும், போர் ஏற்பட காரணமாயிருந்தவர். இந்தப் போரே ""குருக்ஷேத்ர போர்"" எனப்படுகிறது. 18 நாட்களுக்கு நடந்த போர். கடைசியில் கௌரவர்கள் தோல்வி கண்டனர். இது ஒரு காவியப் போர் ஆக இருந்தாலும், இதில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும், மனித குலம் தங்கள் வாழ்க்கைக்கு தெரிந்துக்கொள்ளவேண்டிய தார்மீக நெறிகளை எடுத்துக்கூறுகிறது.
Q68. மகா பாரதத்தில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன?
பதினெட்டு. இவை ""பர்வங்கள்"" என அழைக்கப்படுகின்றன. அவை: (1) ஆதி (2) சபா (3) ஆரண்யக (4) விராட (5) உத்யோக (6) பீஷ்ம (7) துரோண (8) கர்ண (9) சல்லிய (10) சௌப்திக (11) ஸ்திரீ (12) சாந்தி (13) அனுசாசன (14) அசுவமேத (15) ஆசிரமவாசிக (16) மௌசல (17) மகா பிரஸ்தானிக (18) சுவர்க்காரோகண. இதைத் தவிர்த்து, ஹரிவம்ச பர்வம் என்று ஒன்று, இவற்றில் சேராத ஒன்று.
Q69. ராமாயணத்தை முதலில் (அசல்) எழுதியவர் யார்?
வால்மீகி - ரிஷி - சமஸ்கிருதம். பிறகு இந்தியில் துளசிதாஸ் அவர்களாலும், தமிழில் கம்பராலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
Q70. ராமாயணம் என்பது என்ன?
அயோத்தியின் மன்னர் தசரதரின் மைந்தர் ராமன் மன்னர் பதவிக்கு வருவது, அதில் ஏற்பட்ட தடங்கல், அவர் சீதா தேவியுடன் வன வாசம் செல்ல வேண்டிய அவசியம், வன வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட தீங்குகள், அதிலிருந்து அவர் மீள்வது, இதற்கிடையில் அயோத்தியில் நடந்த நிகழ்வுகள், மீண்டும் பதவிக்கு வருவது வரை, எழுதப்பட்ட ஒரு மிகப்பெரிய காவியம். இந்துக்களால் அதிகம் போற்றப்படும் காவியம். காவியம் மட்டுமல்ல, பல உன்னத வாழ்க்கையின் தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறும் நூல்.
Q71. ராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன, அவை எதைப்பற்றி சித்தரிக்கிறது?
(1) பால காண்டம்: ராமரின் இளைய காலம் முதல், சீதா தேவியை மணம் முடிக்கும் வரை.
(2) அயோத்தி காண்டம்: மன்னர் தசரதர், தனது இரண்டாவது துணைவியாருக்கு கொடுத்த வாக்கின் படி, ராமர் மன்னர் பட்டமுடிப்பை தவிர்த்து, 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டிய அவசியம்.
(3) ஆரண்ய காண்டம்: வனவாசத்தில் ராமர்/சீதா தேவி, மற்றும் அவருடன் சென்ற சகோதரர் லக்ஷ்மணரின் வாழ்க்கையும், சீதா தேவியை ராவணன் கடத்தி செல்லுதல்.
(4) கிஷ்கிந்தா காண்டம்: ராமர் வனவாசத்தில், வனத்தைச் சுற்றி வருதலும், அங்குள்ள விலங்குத் தலைவர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு, சீதா தேவியை தேடுதல்.
(5) சுந்தர காண்டம்: அனுமான் சுற்றித் திரிந்து பயணம் மேற்கொண்டு, சீதா தேவியைக் கண்டுபிடித்தல்.
(6) யுத்த காண்டம்: ராமருக்கும் ராவணனுக்கும் இடையில் போர் - ராமரின் வெற்றி -- அயோத்தி திரும்புதல் -- பட்டமேற்பு.
(7) உத்தர காண்டம்: அயோத்தியில் ராமர், சீதை, மற்றும் அவருடைய சகோதரர்களுடன் வாழ்க்கை. மேல் லோகம் செல்வது. ராமாயணத்தில் 24000 வசன சமஸ்கிருதத்தில் உள்ளது.
Q72. பாரசீக மொழியில் மகாபாரதம் எவ்வாறு அறியப்படுகிறது?
ரஸ்ம் நாமா -- Razmnamah
Q73. பாகவதம் என்பது என்ன, அது எதைப்பற்றியது?
கிருஷ்ணர் ( விஷ்ணுவின் அவதாரம்) ன் வாழ்க்கை வரலாறு, மகா பாரதத்தில் அவருடைய பங்கு. இதில் 18 அத்தியாயங்களும், சுமார் 700 ஸ்லோகங்களும் உள்ளன.
Q74. இந்து மதம் சாதி முறைகளை அடிப்படையாகக் கொண்டது. எந்த வேத கால நூலில், சாதிகளின் தொடக்கம் மற்றும் சாதிகளைப் பற்றிய இதர விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது?
குல புராணம். குலா என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் குலம், இனம் எனப்படும். சாதிகள், தொடக்கம், அவை பற்றிய சந்தேகங்கள், மற்றும் சாதிகள் ஏற்பட காரணமாயிருந்த கதைகளும், பின்னணியும்.
Q75. இந்து மதத்தில் அடிப்படை சாதிகள் யாவை?
(1) பிராமணர்கள் (2) சத்திரியர்கள் (3) வன்னியர்கள் (4) சூத்திரர்கள் . இவற்றுக்குள் பல பிரிவுகள் உள்ளன. அவற்றை அடையாளம் காட்டும் வகையில் கோத்ரங்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவுகளின் சமூக உறவுகள் ஏற்படுகின்றன.
Q76. இந்து மதத்தில் "கோத்ரம்" என்பது எதைக்குறிக்கிறது?
ஒருவர் அவரது பிறப்பின் மூலம் எந்த வம்சத்தை சேர்ந்தவர் என்பதைக் குறிக்கும் ஒரு வம்சாவளி அடையாளம். இது பொதுவாக தந்தையின் வம்சாவளியை பிறப்பிலிருந்தே சார்ந்ததாக இருக்கும். இந்த கோத்ர பிரிவின் மூலம் சமூக உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் பிராமணர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். காரணம், ஒரே கோத்ரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், தங்களது மூதாதையர்கள் மூலம் உடன் பிறவா சகோதர சகோதரி ஆகி விடுகின்றனர் என்ற நம்பிக்கை. அதனால் ஒரே கோத்ரத்தில் திருமண உறவுகள் ஏற்படுத்திக் கொள்வதில்லை. (இது விஞ்ஞான பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று).
Q77. ஒரு இந்துவானவன், தினமும் கட்டாயமாக சொல்ல வேண்டிய மந்திரம் எது?
ரிக் வேதத்தில் (3:62:10) கூறப்பட்டுள்ள "" காயத்ரி மந்திரம் "". இந்த மந்திரம் விஸ்வாமித்ர முனிவர் கொடுத்தது எனக் கூறப்படுகிறது.
Q78. இந்து மதத்தின் முக்கிய விழாக்கள் யாவை?
அக்ஷய திருத்தியை, அமாவாசை, அனந்த் சதுர்தசி, பாவ் பீஜ், ப்ரம்மோத்சவம், சாத், தசரா, தந்தேராஸ், தீபாவளி, துர்கா பூஜா, கணேச சதுர்த்தி, குடி பட்வா, குரு பூர்ணிமா, அனுமன் ஜெயந்தி, ஹோலி, கர்வா சௌத், கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, மகாமகம், மகர சங்கராந்தி, ஓணம், தைப்பொங்கல், புஷ்கரம், ரக்ஷா பந்தன், ராம நவமி, ரத யாத்திரை, சரஸ்வதி பூஜை, தை பூசம், உகாதி, வைசாகி, வசந்த் பஞ்சமி, வாத் பூர்ணிமா, விஜய தசமி, விஷூ, என இந்தியா முழுவதும் பல தரப்பட்ட மக்களால் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
Q79. அக்ஷய திருத்தியை என்பது என்ன?
அக்ஷயா என்றால் ""முடிவில்லாதது"" எனப்பொருள். சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் பிறை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்து மத புராணங்களின் படி, த்ரேதா யுக்ம, இந்த நாளில் தொடங்கியதாகவும், கங்கை நதி பூமிக்கு இறங்கியதாகவும் நம்பப்படுகிறது.
Q80. அமாவாசை என்பது எவ்வாறு இந்துக்களின் முக்கிய நாள்?
இது ஒரு விழா அல்ல. ஒரு சடங்கு. புது நிலா நாள். இந்த நாளில் முன்னோர்களின் நினைவாக, அவர்களின் ஆத்மா சாந்தி அடைய, தந்தை இல்லாதவர்கள், சடங்கு செய்ய வேண்டிய நாள். இதைத் தவிர்த்து, இன்றைய நாளில் சில பூஜைகளும் செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆங்கில மாதம் செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் வரும் பௌர்ணமிக்கு பிறகு வரும் இரு வாரங்கள் ""மஹாலய பக்ஷம்"" என கருதப்படும். இந்த காலத்தில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய ஆத்ம சாந்தி சடங்குகளை செய்தால் மிக உகந்தது என கருதப்படுகிறது.
Q81. அனந்த் சதுர்தஷி என்பது என்ன?
கணேச சதுர்த்தி முடிந்த 10/11 வது நாள். அன்றைய தினம், கணேசர் விக்ரகங்களை நீர் நிலைகளில் மூழ்கடிப்பது.
Q82. பஹூ பீஜ் (மராத்தி) விழா என்பது என்ன?
பாய் தூஜ் (இந்தி), பாய் பீஜ் (குஜராத்தி), பாய் போட்டா (பெங்காலி) எனவும் சொல்லப்படுகிறது. தீபாவளி முடிந்த இரண்டாம் நாள், சகோதரிகள், தங்கள் சகோதரர்கள் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் விழா. சகோதரர்களை சந்தித்து அவர்களுடைய ஆசி பெற்று, வெகுமதிகளும் பெற்று வருவர்.
Q83. ப்ரம்மோத்சவம் விழா என்பது என்ன?
இது ஒரு வருடாந்திர திருவிழா. வைஷ்ணவ ஆலயங்களில், மிக முக்கியமாக, திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில், மிக விமரிசையாக நடத்தப்படும் விழா. புரட்டாசி மாதத்தில் நடைபெறும்.
Q84. சாத் விழா என்பது என்ன?
இது ஒரு வடநாட்டில் நடைபெறும் முக்கிய விழா. தீபாவளி முடிந்த 6 வது நாளில், சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் விழா. பீஹார், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமான, முக்கியமான விழா. அக்டோபர்/நவம்பர் மாதங்களில் வரும் விழா.
Q85. தசரா விழா என்பது என்ன?
தீங்குகளுக்கும், தீமைகளுக்கும் எதிராக கிடைத்த வெற்றியை போற்றும் விழா. ராட்சத மன்னன் ராவணனுக்கு எதிராக ராமனுக்கு கிடைத்த வெற்றி. இந்த விழா, 9/10 நாட்கள் நடத்தப்படும் இந்த விழா, நவராத்திரி என அழைக்கப்படுகிறது. கர்நாடகா, குறிப்பாக இது தசரா என்ற பெயரில் மிக கோலாகலமாக, அரசாங்க ஆதரவுடன் நடைபெறுகிறது. இந்த நாட்களில், மைசூர் முழுமையாக வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரியின் விக்ரகம் யானை மீது நகரம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். உடையார் மன்னர் வம்ச அரண்மனை, க்ருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் இதர கட்டுமானங்களின் அலங்கரிப்பு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதர இடங்களில், பொம்மெ ஹெப்பா (பொம்மை காட்சி) என கர்நாடக இல்லங்களிலும், பொம்ம கொலுவு என ஆந்திராவிலும், கொலு என தமிழ்நாட்டிலும், வேறு வகையில் குஜராத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் சில கிழக்கு மாகாணங்களிலும் ""துர்கா பூஜை"" என மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.. இந்த விழாவின் கடைசி நாள் ""விஜயதசமி"" ""வெற்றி நாள்"" என 10வது நாள் கொண்டாடப் படுகிறது. (விஜய = வெற்றி, தசமி = பத்து).
Q86. தந்தேராஸ் என்பது என்ன விழா?
வட இந்தியாவின் ஒரு முக்கிய விழா. வட இந்தியாவின் பல பகுதிகளில், தீபாவளி 5 நாட்களுக்கு கொண்டாடப் படுகிறது. அதன் முதல் நாள் இந்த பெயரில் அனுசரிக்கப்படுகிறது. செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி இந்த நாளில் பூஜிக்கப்படுகிறார், குறிப்பாக, வணிக பெருமக்களால்.
Q87. தீபாவளி என்பது என்ன விழா?
தீபங்களின் விழா எனப்படுகிறது. இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களால் பெருமளவில் கொண்டாடப்படும் ஒரு விழா. இந்த விழாவும், தீங்குகளுக்கு எதிராக கிடைத்த வெற்றி -- நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் வதம் செய்த நாள் -- பிரார்த்தனைகளும், விழாக்கோலமும் நிறைந்த நாள். தென் இந்தியாவில் தீபாவளி நாள் மட்டும் மிக சிறப்பாகவும், வட நாட்டில், ஐந்து நாட்களுக்கு (1) தந்தேராஸ் (2) நரக சதுர்தசி (3) தீபாவளி (4) பட்வா (5) பாய்தூஜ் என கொண்டாடப்படுகிறது. சீக்கியர்கள் இந்த நாளை, அமிர்தசரஸ் பொற்கோவில் கட்டுவதற்கு அடித்தளம் போட்டப்பட்ட நாளாக கருதுகின்றனர். ஜைனர்கள், இந்த நாளை மகாவீரரின் முக்தி நாளாக கருதி கொண்டாடுகின்ரனர்.
Q88. துர்கா பூஜை என்பது என்ன?
வங்காளம், சில கிழக்கிந்திய மாகாணங்கள், வங்காள தேசம், ஆகிய பகுதிகளில் வாழும் இந்துக்கள் (பெங்காலிகள்) மிக விமரிசையாக கொண்டாடும் ஒரு முக்கிய விழா. பெங்காலிகள் காலண்டரின் 6 வது மாதத்தில் நடைபெறும். (செப்டம்பர்/அக்டோபர்). துர்கா அம்மனை போற்றும் ஒரு மிகப்பெரிய திருவிழா. கடைசி நாள் விஜயதசமி என கொண்டாடப்பட்டு, துர்கை அம்மன் சிலைகள் நீர் நிலைகளில் மூழ்கடிக்கப்படும்.
Q89. கணேஷ் சதுர்த்தி என்பது என்ன?
முதற்கடவுள் கணேசரின் பிறந்த நாள். மகாராஷ்டிராவில் 10 நாட்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிகப் பெரிய திருவிழா. தமிழ் மாதம் ஆவணி மாதத்தில் வரும் இந்த பண்டிகை. பண்டிகையின் கடைசி நாள் அனந்த் சதுர்தசி என அழைக்கப்பட்டு, கணேசரின் உருவச் சிலைகள் நீர் நிலைகளில் மூழ்கடிக்கப்படும். மகாராஷ்டிராவின் இந்த மிகப்பெரிய பண்டிகையை, 1893ல், இந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக, பால கங்காதர திலக் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.
Q90. குடி பட்வா என்பது எவ்வகை பண்டிகை?
மராத்தியர்களின் புதுவருடம். (உகாதி -- ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா) . இளவேனிற் காலத்தையும், அறுவடையையும் போற்றும் நாள். மார்ச்/ஏப்ரல் மாதங்களில் வரும் இந்த பண்டிகை.
Q91. குரு பூர்ணிமா என்பது என்ன விழா?
ரிஷி வியாசரின் பிறந்த நாள் (மகாபாரதத்தை எழுதியவர்) . இந்த நாளை, தங்களது ஆசான்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
Q92. ஹனுமான் ஜெயந்தி என்பது என்ன விழா?
வாயு புத்ரர் அனுமார் ன் பிறந்த நாள். மார்கழி மாத மூல நட்சத்திர நாளில் அனுசரிக்கப்படுகிறது.
Q93. ஹோலி பண்டிகை என்பது என்ன?
மிகவும் புகழ் பெற்ற வட இந்திய மக்களின் பண்டிகை. பிப்ரவரி மாதத்தில் வரும் இந்த பண்டிகை, மக்களிடையில் நல்லுறவு, பெரியோர்களை மதித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படுவது. இந்த நாளில், ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவர்.
Q94. கர்வா சௌத் என்பது எவ்வகை பண்டிகை?
குறிப்பாக பீஹாரிலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் மிகவும் புகழ்பெற்ற விழா. அன்றைய தினம், திருமணமான பெண்கள் உண்ணா நோன்பிருந்து தங்கள் கணவன்மார்கள் நன்கு வாழவேண்டும் என பிரார்த்தனை மேற்கொள்வார்கள்.
Q95. கிருஷ்ண ஜெயந்தி என்பது என்ன விழா?
கிருஷ்ணரின் பிறந்த நாள். கிருஷ்ணாஷ்டமி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் நடத்தப்படுகிறது. குஜராத்தில், குறிப்பாக மதுரா மற்றும் பிருந்தாவனில் மிக மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.
Q96. கார்த்திகை தீபம் என்பது என்ன பண்டிகை?
தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பண்டிகை. இல்லந்தோறும் எண்ணெய் தீபங்களை ஏற்றி, சிவனை ப்ரார்த்தனை செய்வர். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இது ஒரு மிகப் பெரிய பண்டிகை.
Q97. மகாசிவராத்திரி என்பது என்ன பண்டிகை?
தமிழ் மாதம் பங்குனி ல் கிருஷ்ண பக்ஷத்தின் 14வது நாளில் வரும் இந்த பண்டிகையன்று, சிவ பிரானை போற்றி பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடத்தப்படும். அன்றைய தினம், இரவு முழித்து, சிவனை நினைத்து பிரார்த்தனை, பாடல்கள் பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, வில்வ இலையால் சிவனுக்கு பூஜை செய்வது உகந்தது.
Q98. மகர சங்கராந்தி என்பது என்ன பண்டிகை?
தை மாதத்தில், சூர்ய பகவானையும், அறுவடையையும் போற்றி, குறிப்பாக விவசாயிகளால் நடக்கும் பண்டிகை. ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் வரும் இந்த பண்டிகை, தமிழ்நாட்டில் தைப்பொங்கல் என மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள், போகி, இரண்டாம் நாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை தமிழ் நாட்டில், , ஜல்லிக்கட்டு என்ற காளைகளை அடக்கும் வீர விளையாட்டு மிகவும் பிரபலமானது. இந்த பண்டிகை நாட்டின் பல பகுதியில் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அவை: போகாலி பிஹூ -- மேற்கு வங்காளம்; உத்தராயண் -- குஜராத், ராஜஸ்தான்; சங்கராந்தி -- ஆந்திரபிரதேசம், கர்நாடகா; மாகி, மாகே சங்கராந்தி -- நேபாளம்; மகர சங்கராந்தி -- இதர மாநிலங்களில். இதே நாளில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஹரித்வார், உஜ்ஜெயின், நாசிக் ஆகிய இடங்களில் கும்ப மேளா எனவும், வருடா வருடம், ப்ரயாக் என்ற இடத்தில் கங்கா சாகர் மேளா என்ற பெயரில் கங்கை முகத்துவாரத்தில் கொண்டாடப்படும். கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகர ஜோதி என்ற மிக புகழ்பெற்ற பண்டிகை நடத்தப்படும். ஜனவரி 13/14 தேதிகளில் சுமார் 15 - 20 லட்சம் பக்தர்கள் ஒன்று கூடி, இந்த பண்டிகையில் பங்கு பெறுவார்கள். குஜராத்தில் மகர சங்கராந்தி அன்று மக்கள் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுவார்கள்.
Q99. ஓணம் பண்டிகை என்பது என்ன?
கேரள மாகாணத்து இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை. இது ஒரு அறுவடைப் பண்டிகை எனவும் போற்றப் படுகிறது. இந்த பண்டிகை மலையாள செங்கம் (ஆகஸ்ட்-செப்டம்பர்) மாதத்தில், விஷ்ணு வின் வாமண அவதாரம் எடுத்த நாளாகவும், புராண காலத்து மன்னர் மகாபலி யின் நினைவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கேரளத்தில், இல்லந்தோறும், பிரார்த்தனைகளும், கோவில்களும் திருவிழாக் கோலம் கொண்டு, இருக்கும். ஆன்மிக செயல்கள் தவிர்த்து, வான வேடிக்கைகள், படகு போட்டி, தும்பி துள்ளல், என பலவகை கேளிக்கைகளும் இடம் பெறும். இந்நாளில் ரங்கோலி கோலங்கள் போடுவது, போட்டி வைப்பது மிகவும் புகழ் பெற்றது.
Q100. புஷ்கரம் என்பது எவ்வகை பண்டிகை?
இந்தியாவில் சுமார் 12 நதிகள் புனித நதிகளாக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றை, ஜோதிட முறைப்படி தேர்ந்தெடுத்து, அந்த நதி யை (மற்றும் இதர நதிகளையும்), மனித குலத்துக்கு அவை செய்யும் மகத்தான சேவையைப் போற்றும் வகையில் பிரார்த்தனை, பூஜை என பல வழிகளில் அர்ப்பணம் செய்யப்படுகிறது.
Q101. ரக்ஷா பந்தன் என்பது என்ன பண்டிகை?
இந்து தேசிய மாதம் ஷ்ராவன் (ஆவணி) மாதத்தில் நடத்தப்படும் பண்டிகை. இந்த பண்டிகை, சகோதரன் சகோதரியை பாதுகாக்கும் விதமாக நடத்தப்படும் பண்டிகை. சகோதரிகள், சகோதரர்கள் கையில் பல வண்ண நூல்களாலும் இதர பொருட்களாலும் அலங்கரித்து செய்யப்பட்ட ஒன்றைக் கட்டி, சகோதரனின் ஆசிர்வாதத்தைப் பெற்று, அவர் அளிக்கும் வெகுமதிகளையும் பெற்றுச்செல்வர். இது வட இந்தியாவின் முக்கிய பண்டிகை.
Q102. ராம நவமி என்பது என்ன?
ராம பிரானின் பிறந்த நாள் -- சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷ (அமாவாசைக்கு பிறகு) நவமி திதியில் நடத்தப் படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று. பிரார்த்தனைகள், பஜனைகள், அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. உத்திரபிரதேசம் மற்றும் சில வட இந்திய மாநிலங்களில் மிக ஆன்மீக முறையிலும், விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது.
Q103. ரத யாத்ரா என்பது என்ன பண்டிகை?
ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவிலில் நடத்தப்படும் மிகப் பெரிய விழா. ஜகந்நாதர் உருவச் சிலை, மிகப்பெரிய மரத்தினால் ஆன ரதத்தில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்வது. ஆடி மாதத்தில் நடக்கும் இந்த பண்டிகையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறுவார்கள்.
Q104. What is Saraswati Puja?
எல்லா இந்து மத இல்லங்களிலும் தவறாமல் நடத்தப்படும் ஒரு பண்டிகை. காரணம், சரஸ்வதி தெய்வம் அறிவுக்கும் கல்விக்கும் கடவுள். ஆங்கில மாதங்கள் பிப்ரவரி-மார்ச் (மாசி) மாதத்தில் நடைபெறும் பண்டிகை.
Q105. தை பூசம் என்பது என்ன பண்டிகை?
உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை. இந்த பண்டிகை, முருகப் பெருமானின் பிறந்த நாளை தை மாதம் பூச நட்சத்திரத்தன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. பூஜைகள், மற்றும் அலகு குத்துதல், காவடி தூக்குதல் போன்ற பல நேர்த்திக் கடன்களும் நடத்தப்படுகின்றன. சூர பத்மன் என்ற அரக்கனை கொன்ற நாளும் இதுவே. பழநி, திருச்செந்தூர் ஆகிய இரு கோவில்களில் மிக சிறப்பாகவும், இதர முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் என கொண்டாடப்படும். குலாலம்பூர் ல் உள்ள பண்ட்டு குகைக்கோவில், இலங்கை கண்டி கதிர்காம முருகன் கோவில் ஆகிய இடங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
Q106. பூரம் பண்டிகை என்பது என்ன?
கேரள இந்துக்களிடையே, முக்கியமாக திருச்சூரில் மிக மிக விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா போன்ற பண்டிகை. மலையாள நாள்காட்டி (காலண்டர்) மேடோம் மாதம் (சித்திரை -- ஏப்ரல்-மே) பூர நட்சத்திரம் அன்று அம்மன் கோவில்களில் (துர்கா/காளி) கொண்டாடப்படுகிறது. திருச்சூரில் நடத்தப்படும் இந்த மிக பிரபலமான பண்டிகை, வடக்கு நாதர் கோவிலில் நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவை தொடங்கி வைத்தவர் ராஜா ராம வர்மா (சக்தன் தம்பூரான்) என்ற கொச்சின் மன்னர். அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பு, செண்டா மேளம் என பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் மிக விமரிசையாக நடைபெறும்.
Q107. உகாதி பண்டிகை என்பது என்ன?
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் புத்தாண்டு நாளாக அனுசரிக்கப்படும் நாள். மகாராஷ்டிராவில் குடிபட்வா என கொண்டாடப்படுகிறது.
Q108. வைசாகி/பைசாகி என கொண்டாடப்படும் பண்டிகை என்ன?
பஞ்சாபில் புத்தாண்டு மற்றும் அறுவடையைப் போற்றும் ஒரு பண்டிகை. பிஹூ என பீஹாரில் , நப பர்ஷா என கிழக்கு இந்திய மாகாணங்கள், புத்தாண்டு என தமிழ் நாட்டில், விஷூ என கேரளாவிலும் கொண்டாடப்படுகிறது.
Q109. வசந்த் பஞ்சமி என்பது என்ன பண்டிகை?
வட இந்தியாவில், அறிவுக் கடவுள் சரஸ்வதியை போற்றி வணங்கும் தினமாக, ஜனவரி-பிப்ரவரி இந்து காலண்டரின் மாக் மாதத்தின் 5 வது நாளில் அனுசரிக்கப்படுகிறது.
Q110. வாட் பூர்ணிமா என்பது என்ன பண்டிகை?
மகாராஷ்டிராவின் ஒரு முக்கியமான இந்து பண்டிகை. திருமணமான பெண்கள், தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி, ஆல மரத்தைச் சுற்றி ஒரு புனித நூலைக் கட்டி, இதர பூஜைகள் செய்து, ஜ்யேஷ்ட மாத பௌர்ணமி அன்று (ஜூன்) வணங்குவர்.
Q111. விஜயதசமி என்பது என்ன பண்டிகை?
தசரா விழாக்களின் 10வது நாள். தீங்குகளுக்கு எதிராக வெற்றி கிடைத்த நாளாக அனுசரிக்கப்படுகிறது.
Q112. விஷூ என்பது என்ன பண்டிகை?
கேரளா இந்து மக்களின் புத்தாண்டு விழா. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் மலையாள மாதம் மேடோம் மாத முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது. புத்தாடைகள், ""சாத்யா"" எனப்படும் விருந்து, தொண்டு நன்கொடைகள், மற்றும் இல்லங்களை அலங்கரிப்பது என மிக சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் ""விஷூக்கனி"" பார்ப்பது. அதாவது, அன்றைய தினம் காலையில் எழுந்தவுடன் தனக்கு நல்லது செய்யும் என நினைக்கும் விருப்பமான பொருளை பார்ப்பது ஒரு வழக்கம்.
Q113. ஸாத்ரா Zatra என்பது என்ன பண்டிகை?
கோவாவின் கொங்கன் பகுதிகளில் வாழும் மராத்தியர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. இந்நாளில், இந்துக் கடவுள்களை ரதங்களில் ஏற்றி சுற்றி வந்து பிரார்த்தனை செய்யும் ஒரு பண்டிகை. தீபாவளிக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
Q114. பொனாலு என்பது என்ன பண்டிகை?
துர்கை அம்மனைப் போற்றி, தெலங்கானா பகுதி கிராமிய மக்களால் நடத்தப்படும் பண்டிகை. ஜூலை/ஆகஸ்ட் (ஆஷாடா) மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

பொது கேள்விகள்:

Q115. அக்ஷயா என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் என்ன?
முடிவில்லாத ஒன்று.
Q116. அமாவாசை நாளின் முக்கியத்துவம் என்ன?
முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சடங்குகள் செய்வது.
Q117. அனந்த் சதுர்தசி என்பது என்ன?
கணேச சதுர்த்தி விழாக்களின் கடைசி நாள் -- 10வது நாள்.
Q118. சகோதர சகோதரி உறவை மேம்படுத்தும்/போற்றும் பண்டிகை எது?
பாய் தூஜ்/பாய் பீக்/பாய் போட்டா/ ரக்ஷா பந்தன்/ராக்கி என பல பெயர்களில் அனுசரிக்கப்படுகிறது.
Q119. சூர்ய பகவானை போற்றும் பீஹார் மக்களின் பண்டிகை எது?
சாத். Chaath.
Q120. கர்நாடக மக்களின் மிக புகழ்பெற்ற பண்டிகை எது?
தசரா. Dussehra.
Q121. நவராத்திரி காலத்தில் பொம்மைகளின் கண்காட்சி பழக்கம் எந்த மாநிலங்களில் உள்ளது?
கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு.
Q122. ப்ரம்மோத்சவம் எந்தக் கோவிலின் மிகப்பெரிய திருவிழா/பண்டிகை?
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில், திருப்பதி.
Q123. தந்தேராஸ் என்ற வட இந்திய பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது?
செல்வத்தின் கடவுள் லக்ஷ்மியை பிரார்த்தனை/பூஜை செய்வது. தீபாவளியின் ஐந்து நாள் விழாவின் முதல் நாள்.
Q124. தீபாவளி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தீபங்களின் திருவிழா.
Q125. துர்கா பூஜா எந்த இனத்தவரின் முக்கிய பண்டிகை?
வங்காளம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மற்றும் இதர பகுதிகளில் வாழும் பெங்காலிகளின் முக்கியமான பண்டிகை.
Q126. குடி பட்வா என்ற பண்டிகை எந்த பகுதியில் அனுசரிக்கப்படுகிறது?
மகாராஷ்டிரா மக்களின் புத்தாண்டு திருநாள்.
Q127. குரு பூர்ணிமா என்ற நாளின் முக்கியத்துவம் என்ன?
ஆசான்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள்.
Q128. "வண்ணங்களின் பண்டிகை" என்பது எது?
ஹோலிப் பண்டிகை -- பிப்ரவரி மாதம்.
Q129. கார்த்திகை தீபம் எங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது?
திருவண்ணாமலை, தமிழ்நாடு.
Q130. சிவ பெருமானை போற்றி பூஜை செய்ய எந்த இலை முக்கியமாக பயன் படுத்தப்படுகிறது?
வில்வம்.
Q131. பிஹூ என்ற பண்டிகை எங்கு கொண்டாடப்படுகிறது?
புத்தாண்டு, அஸ்ஸாம்.
Q132. தைப்பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும், முக்கிய கிராமப்புற வீர விளையாட்டு எது?
ஜல்லிக்கட்டு. காளை அடக்குவது.
Q133. கும்ப மேளா எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
மகர சங்கராந்தி நாளில்.
Q134. கும்ப மேளா நடத்தப்படும் இடங்கள் யாவை?
ஹரித்வார், ப்ரயாக், உஜ்ஜெயின், நாசிக், கும்பகோணம்.
Q135. மகர சங்கராந்தி வெவ்வேறு இடங்களில் எந்த பெயரில் அனுசரிக்கப்படுகிறது? Makara Sankarathi is celebrated as ?
போகாலி பிஹூ Bhogali Bihu – மேற்கு வங்காளம், அஸ்ஸாம்
உத்தராயண் -- ராஜஸ்தான், குஜராத்
பொங்கல் -- தமிழ்நாடு
மாகி -- நேபாளம்
சங்கராந்தி -- ஆந்திரப்பிரதேசம்.
Q136. ஓணம் பண்டிகை எந்த மாநிலத்தின் முக்கிய பண்டிகை?
கேரளா.
Q137. புஷ்கரம் என்ற பண்டிகை எதைப் போற்றி நடத்தப்படுகிறது?
நதிகள்.
Q138. ராம பிரானின் பிறந்த நாள் எந்த பெயரில் நடத்தப்படுகிறது?
ராம நவமி.
Q139. ஒடிசா வின் பூரி நகரத்தில் நடத்தப்படும் புகழ் பெற்ற பண்டிகை எது?
ரத் யாத்ரா.
Q140. முருகப் பெருமானின் தைப் பூச பண்டிகை எங்கு சிறப்பாக அனுசரிக்கப் படுகிறது?
தமிழ்நாட்டின் பழநி மற்றும் திருச்செந்தூர். வெளிநாட்டில், மொரிசீயஷ், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா -- இங்கெல்லாம் தமிழர்கள்/வம்சாவளிகள் அதிகமாக வாழ்கின்றனர்.
Q141. திருச்சூர், கேரளா வின் உலகப்புகழ் பெற்ற பண்டிகை எது?
பூரம் பண்டிகை.
Q142. உகாதி என்ற புத்தாண்டு பண்டிகை எந்த மாநிலத்து பண்டிகை?
ஆந்திரா, கர்நாடகா.
Q143. பஞ்சாபின் புத்தாண்டு பண்டிகையின் பெயர் என்ன?
பைசாகி.
Q144. கேரளாவின் புத்தாண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விஷூ
Q145. கோவா மாநிலத்தின் புகழ் பெற்ற இந்து பண்டிகை எது?
ஸாத்ரா - Zatra.
Q146. இந்து “Hindu” என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர்கள் யார்?
அரேபியர்கள்.
Q147. உலகின் மிகப்பெரிய இந்து ஆலயங்கள் சில ….
1. ஆங்கர்வாட் கோவில் -- கம்போடியா -- 8,20,000 ச.மீ;
2. ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், ஸ்ரீரங்கம் -- 6,31,000 ச.மீ
3. அக்ஷர்தாம் கோவில் -- புது டெல்லி -- 2,40,000 ச.மீ
Q148. ஸ்வாமிநாராயண் ஆலயம் முதன் முதலாக எங்கு கட்டப்பட்டது?
அஹமதாபாத் ல் 1822ல் கட்டப்பட்டது.
Q149. இந்தியாவிலும், உலகின் பல இடங்களிலும், ஸ்வாமிநாராயண் ஆலயங்களை கட்டுவதற்கு காரணமாயிருந்தவர் யார்?
ஸ்வாமிநாராயண் என்ற சகஜானந்த் ஸ்வாமி என்ற உத்திரபிரதேசத்தில் 1781ல் பிறந்த கண்ஷ்யாம் பாண்டே.
Q150. ஸ்வாமிநாராயண் ஆலயங்கள் எங்கெல்லாம் உள்ளன?
டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்காளம், குஜராத், கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தராகாண்ட், உத்திரபிரதேசம் என பல மாநிலங்களில் சுமார் 45 ஆலயங்கள் உள்ளன. தமிழ் நாட்டில் சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது. வெளி நாட்டில், அமெரிக்காவில் 18 இடங்களிலும், மற்றும் உலகின் பல நாடுகளிலும் உள்ளன.
Q151. சூரிய பகவானுக்கு எங்கெல்லாம் ஆலயங்கள் உள்ளன?
1. கொனாரக், பூரி மாவட்டம், ஒடிசா. 2. பிராச்சி நாராயண் ஆலயம், ப்யூகெர்டா, கஞ்சம், ஒடிசா, 3. சூரியன் ஆலயம், மதேரா, குஜராத். தமிழ் நாட்டில் புராதன சூரிய பகவான் கோவில், கும்பகோணத்தின் அருகில் புகழ்பெற்ற தலமாகவுள்ளது.
Q152. இந்து மதத்தை தொடங்கியவர்கள் எனக் கருதப்படுபவர்கள் யார்?
ஆர்யர்கள் அவர்களது கலாச்சாரமும்.
Q153. உலகில் எத்தனை மதங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது?
சுமார் 4200 -- இவையெல்லாம், உலகின் முக்கிய மதங்களில் -- இந்து, கிறித்துவம், இஸ்லாம், ஜைனம், புத்தம், ஜூடாயிஸம், அடங்கியுள்ளதாக தெரிகிறது.
Q154. எந்த மதம் உலகின் பழமையானது?
இந்து மதம்.
Q155. உலகில் அதிகமாக பரவி, பக்தர்கள் அதிகமுள்ள மதம் எது?
கிறித்துவம்.
Q156. உலகிலேயே கிறித்துவர்கள் எண்ணிக்கையில் அதிகமுள்ள நாடு எது?
அமெரிக்கா.
Q157. இந்து மதத்தினர் அதிகமுள்ள நாடு எது?
இந்தியா.
Q158. புத்த மதத்தினர் அடர்த்தி அதிகமுள்ள நாடு எது?
கம்போடியா -- 96%.
Q159. புத்த மதத்தினர் எண்ணிக்கையில் அதிகமுள்ள நாடு எது?
சீனா.
Q160. இந்து மதம் எதை அடிப்படையாகக் கொண்டது?
வேதங்கள், உபநிடதங்கள்.
Q161. மும்மூர்த்திகளுள், ஆலயங்கள் மூலம் வழிபடப்படாத தெய்வம் எது?
ப்ரம்மா.
Q162. இந்து கடவுள்களுக்குள் அதிகமான ஆலயங்கள் உள்ள கடவுள் யார்?
சிவன்.
Q163. ரிக் வேதத்தின் உள்ளடக்கம் என்ன?
10 பகுதிகள், 1028 ஸ்லோகங்கள்.
Q164. இசை வடிவத்தில் பாடப்படும் வேதம் எது?
சாம வேதம்.
Q165. யாகங்கள் மற்றும் சடங்குகள் பற்றி எந்த வேதத்தில் விரிவாக குறிப்பிடப் பட்டுள்ளது?
யஜூர் வேதம்.
Q166. எந்த வேதம் மந்திரம் மற்றும் மருந்துகள் பற்றி விவரிக்கிறது?
அதர்வண வேதம்.
Q167. எந்த சிவாலயம் கஜினி முகமதால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது?
சோம் நாத், குஜராத்.
Q168. எந்த சிவாலயம் வருடத்தில் சுமார் 6 மாதங்கள் அடைக்கப்பட்டிருக்கும்?
கேதார்நாத் -- பனிக்காலத்தில்.
Q169. தமிழ் நாட்டில் கடற்கரையோரம் அமைந்துள்ள சிவாலயம் எது.?
ராமேஸ்வரம்.
Q170. எந்த ஜோதிலிங்க சிவாலயம், நதிமீதுள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது?
ஓம்காரேஷ்வர் -- குஜராத்தின் காண்ட்வா மாவட்டத்தில் நர்மதா நதியில் மந்தாதா/ஷிவ்புரி என்ற தீவில் உள்ளது.
Q171. பஞ்சபூதங்கள் என இந்து மதத்தில் கூறப்படுவது எவை?
நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு.
Q172. மக்களிடையே நிலவும் ஒரு பொதுவான நம்பிக்கைப்படி, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் யாரிடம் கடனாளியாக உள்ளார்?
குபேரன். புராண காலத்து யக்ஷர்களின் மன்னர். செல்வங்களின் அதிபதி எனப்படுகிறார்.
Q173. திருப்பதியில் அதிகாலையில் ஒலிக்கப்படும் ஆன்மீக பாடல் எது?
சுப்ரபாதம் -- எழுதியது அனந்தாச்சார்யா 1430ல்., பாடியது எம்.எஸ். சுப்புலக்ஷ்மி.
Q174. காவேரி மற்றும் கொள்ளிடம் நதிகளின் தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற தமிழ்நாட்டு வைஷ்ணவ தலம் எது?
ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், ஸ்ரீரங்கம், திருச்சி.
Q175. காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மூன்று வைஷ்ணவ தலங்கள் யாவை?
ஆதி ரங்கா -- ஸ்ரீரங்கபட்டினம், கர்நாடகம்.
மத்ய ரங்கா -- சிவசமுத்ரம், கர்நாடகம்.
அந்த்ய ரங்கா -- ஸ்ரீரங்கம், தமிழ் நாடு.
Q176. ஆதி சங்கரர் தொகுத்து பரப்பிய இந்து மதத்தின் முக்கிய தத்துவம் யாது?
அத்வைத வேதாந்தம்.
Q177. ஆதி சங்கரர் பிறந்த இடம் எது?
காலாடி, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா.
Q178. ஆதி சங்கரர் ன் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நூல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சங்கர விஜயம்.
Q179. ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தத்தை பரப்புவதற்காக மேற்கொண்ட பயணங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திக் விஜயம்.
Q180. இந்துக்களிடையே, பல தெய்வங்களை வணங்குவதில் வேற்றுமை ஏற்படாது இருக்க, ஆதிசங்கரர் வகுத்த வழிபாடு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஷன்மதா.
Q181. ஆதி சங்கரரின் புகழ் பெற்ற பாடல் (ஸ்லோக) தொகுப்புகள் யாவை?
சிவானந்த லஹரி மற்றும் லக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்ரம்.
Q182. ஆதி சங்கரர் நிறுவிய பீடங்கள் (இந்து மத ஒருங்கிணைப்பு மடங்கள் ) யாவை?
1. சாரதா பீடம் -- சிருங்கேரி, கர்நாடகம்.
2. ஜோதிர்மத் பீடம் -- ஜோஷிமத், உத்தராகாண்ட்.
3. கோவர்தன பீடம் -- பூரி, ஒடிசா.
4. துவாரகா பீடம் -- குஜராத்.
5. காமகோடி பீடம், காஞ்சிபுரம், தமிழ்நாடு.
Q183. “Voice of Divinity” என்ற புகழ் பெற்ற இந்து மத தத்துவ நூலை எழுதியவர்?
சங்கராச்சாரியார் -- ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், காஞ்சி காமகோடி பீடம்.
Q184. ஷிர்தி சாய் பாபாவின் புகழ் பெற்ற வார்த்தைகள் என்ன?
அல்லா மாலீக் -- கடவுளே எஜமானர்.
Q185. ஷிர்தி சாய் பாபா கோவில் எங்குள்ளது?
ஷிர்டி, அகமது நகர் மாவட்டம், மகாராஷ்டிரா.
Q186. ஷிர்டி சாய் பாபாவின் முக்கிய சீடராக இருந்து, பிற்காலத்தில் புகழ் பெற்ற ஆன்மீகவாதியானவர் யார்?
ஸ்ரீ சத்ய சாய் பாபா.
Q187. ஸ்ரீ சத்ய சாய் பாபா வின் இயற் பெயர் என்ன?
சத்ய நாராயன ராஜூ (பெற்றோர் அழைக்கும் பெயர் ரத்னாகரன்)
Q188. ஸ்ரீ சத்ட்ய சாய் பாபாவின் முதன்மை ஆஸ்ரமத்தின் பெயர் என்ன?
ப்ரசாந்தி நிலையம் -- இடம்: புட்டபர்த்தி, அனந்தபூர் மாவட்டம், ஆந்திரபிரதேசம்.
Q189. ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகள் அடங்கிய நூலின் பெயர் என்ன?
ராமகிருஷ்ண ரசவாஹினி.
Q190. ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை வெளியிடும் மாத இதழின் பெயர் என்ன?
சனதான சாரதி.
Q191. ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், புட்டபர்த்தியில் அமைந்துள்ள உலக மதங்களைப் பற்றிய பல்கலைக்கழகம் மற்றும் அருங்காட்சியகம் பெயர் என்ன?
சைதன்ய ஜோதி. இந்த கட்டிடம் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. Chaitanya Jyothi. An architectural marvel.
Q192. தமிழ் நாட்டின் மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக துறவி யார், அவருடைய ஆஸ்ரமம் எங்குள்ளது?
ரமண மகரிஷி -- "ரமணாஸ்ரமம்" -- திருவண்ணாமலை, தமிழ் நாடு.
Q193. ரமண மகரிஷியின் போதனைகள் அடங்கிய நூல் எது?
"நான் யார்" -- எழுதியவர் சிவப்பிரகாசம் பிள்ளை.
Q194. ராமகிருஷ்ண பரமஹம்சர் எங்கு பிறந்தார்?
கமார்புகூர், மேற்கு வங்காளம்.
Q195. ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற் பெயர் என்ன?
கதாதர் சட்டபாத்யாய்.
Q196. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள் அடங்கிய நூலின் பெயர்..?
கதா மித்ரா -- பெங்காலி நூல் -- எழுதியவர் மகேந்திரநாத் குப்தா. இதன் ஆங்கில பதிப்பை ஸ்வாமி விவேகாநந்தர் எழுதியுள்ளார் -- “The Gospel of Sri Ramakrishna”.
Q197. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் துணைவியார் பெயர் என்ன?
சாரதா தேவி -- இவரும் வங்காளத்தின் மதிப்புக்குரிய ஆன்மீக குரு.
Q198. ராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ்பெற்ற பிரதம சீடர் யார்?
ஸ்வாமி விவேகானந்தர்.
Q199. விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?
நரேந்திரநாத் தத்தா -- ( பி.12.1.1863 -- இ. 04.07.1902 ).
Q200. வெளிநாடு விஜயம் செய்த முதல் ஆன்மீக வாதி யார்?
ஸ்வாமி விகேகானந்தர் -- 1893 – சிகாகோ, அமெரிக்கா – உலக அனைத்து மத பாராளுமன்றம்.
Q201. விவேகானந்தரின் அமெரிக்க விஜயத்துக்கு உதவி செய்தவர்கள் யார்?
1. பாஸ்கர சேதுபதி, ராமநாதபுரம் மன்னர்.
2. மைசூர் மன்னர்.
3. கேத்ரி மன்னர்.
Q202. சிகாகோ, அமெரிக்காவில் உலக மதங்களின் பாராளுமன்றத்தில், விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவின் தொடக்கம் என்ன?
அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே -- Sisters and Brothers of America.
Q203. விவேகானந்தர் நிறுவிய இந்து மத அமைப்புகள் யாவை?
1. ராமகிருஷ்ண மிஷன், மேற்கு வங்காளம்.1.5.1897
2. ராமகிருஷ்ண மடம், பேலூர், மேற்கு வங்காளம்.
3. ராமகிருஷ்ண துறவி வழிமுறை.
Q204. ""இந்தியாவை தெரிந்து கொள்ள, விவேகானந்தரை புரிந்துகொள். அவரிடம் அனைத்தும் தீர்க்கமான எண்ணங்கள், எதிராக அல்ல"" - இக்கூற்று யாருடையது?
ரவீந்திரநாத் தாகூர்.
Q205. ""விவேகானந்தரின் எண்ண உணர்வுகள், தாய் நாட்டின் மிது எனக்கிருந்த பற்றை ஆயிரம் மடங்கு உயர்த்தியிருக்கிறது"" இக்கூற்று யாருடையது?
காந்திஜி.
Q206. "விவேகானந்தர் இந்து மதத்தை காப்பாற்றினார்" இக்கூற்று யாருடையது?
ராஜகோபாலாச்சாரி.
Q207. ""நவீன இந்தியாவை உருவாக்கியவர்"" என விவேகானந்தரை வர்ணித்தவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
Q208. யாருடைய தூண்டுதலால், யாரால், இந்திய அறிவியல் கழகம் Indian Institute of Science பெங்களூர் நிறுவப்பட்டது?
விவேகானந்தரின் தூண்டுதலால் ஜாம்ஷெட்ஜி டாடா வால் நிறுவப்பட்டது.
Q209. தமிழ்நாட்டில் விவேகானந்தருக்கு எழுப்பப்பட்டுள்ள புகழ்பெற்ற நினைவு ஆலயம் எங்குள்ளது?
கன்யாகுமரி முக்கடல் சந்திப்பில் உள்ள ஸ்ரீபாதபாறை என்ற தீவுப் பாறை மீது அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலை, மற்றும் தியான மண்டபம்.
Q210. விவேகானந்தரின் பிறந்தநாள் நம் நாட்டில் எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?
இளைஞர்கள் தினம்.
Q211. கேரளாவில் பிறந்து, தற்போது நம்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீக குரு மற்றும் பொது தொண்டு பெண்மணி யார்?
அம்ரிதானந்த மாயி -- சுதாமணி இயற்பெயர் -- பெரியக்கடவு, கொல்லம், கேரளாவில் அவருடைய ஆஸ்ரமம் மற்றும் நிர்வாக அமைப்பு உள்ளது.
Q212. ரஜ்னீஷ் குருவின் ஆஸ்ரமம் எங்குள்ளது?
பூனா, மகாராஷ்டிரா.
Q213. ப்ரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
ராஜா ராம் மோகன் ராய்.
Q214. ராமகிருஷ்ண மிஷன் ன் தலைமையகம் எங்குள்ளது?
பேலூர், மேற்கு வங்காளம்.
Q215. ஆர்ய சமாஜத்தை நிறுவியவர் யார்?
ஸ்வாமி தயானந்தா -- பாம்பே -- 1875.
Q216. ஆன்மீக வாழ்வு சங்கம் - Divine Life Society நிறுவியவர் யார்?
ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி -- 1936 -- ரிஷிகேஷ்.
Q217. சின்மயா மிஷன் நிறுவியவர் யார்?
ஸ்வாமி சின்மயானந்தா -- 1953 -- மும்பை.
Q218. ISKCON என்ற ஆங்கில சுருக்கத்தை விரிவு படுத்தவும். இந்த அமைப்பை நிறுவியவர் யார்?
International Society for Krishna Consciousness – ஸ்வாமி பக்தி வேதாந்த ப்ரபுபாதா -- நியூயார்க் -- 1966.
Q219. எந்த புராணம் இல்லங்களில் படிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப் படுகிறது?
கருட புராணம்
Q220. இந்து மதத்தின் எந்த சூத்ரம், ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்புகளை கடமைகளை எடுத்துரைக்கிறது?
க்ரிஹ சூத்ரா.
Q221. ""பரசுராமர்"" விஷ்ணுவின் அவதாரம். அவருக்கு கோவில் உள்ள ஒரே இடம் எது?
திருவல்லம், திருவனந்தபுரம், கேரளா.
Q222. ராமரை கடவுளாக வணங்குவது அநேக கோவில்களில் உள்ளன. ஆனால், அவரை ஒரு மன்னர் உருவத்தில் வணங்கப்படும் ஒரே கோவில் எது?
ராம் ராஜா கோவில், ஓர்ச்சா, மத்திய பிரதேசம்.
Q223. "நாராயணீயம்" என்ற ஆன்மீக வேள்வி நூலை எழுதியவர் யார்?
மேல்பட்டு நாராயண பட்டாத்ரி.
Q224. நாரதர், தனது இசை ஞானத்தை ஒரு பறவையிடமிருந்து கற்றார் எனக் கூறப்படுகிறது. அது எது?
ஞானபந்து என்ற ஆந்தையிடமிருந்து.
Q225. இந்து புராணங்களின் படி ஏழு பேர் ""சிரஞ்சீவிகள்"" ( மறைவு இல்லாதவர்கள்) என அழைக்கப்படுகிறார்கள்?
1. பாலி சக்ரவர்த்தி; 2. பரசுராமர்; 3. விபீஷணர்; 4. அஸ்வத்தாமா; 5. அனுமார்; 6. வைஸ்யா; 7. க்ருபா.
Q226. சிசுபாலரால், எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்ட பிறகு, கிருஷ்ணர் அவரை வதம் செய்தார்?
நூறு முறை
Q227. பகவத் கீதையை கிருஷ்ணரிடமிருந்து நேரடியாக கேட்ட மூவர் யார்?
அர்ஜூனா, சஞ்சயா, ஹனுமான்.
Q228. அனுமாருக்கு மிகப்பெரிய சிலை உள்ள கோவில் எங்குள்ளது?
105 அடி உயர சிலை -- நந்தூரா, புல்தானா மாவட்டம், மகாராஷ்டிரா.
Q229. யுதீஷ்த்ரருக்கும், அம்பு படுக்கையில், மரணத்தை எதிர்பார்த்து படுத்திருந்த பீஷ்மருக்கும் இடையில் நடந்த உரை, இப்போது என்னவாக அறியப்படுகிறது?
விஷ்ணு சஹஸ்ரநாமம்.
Q230. உருவாக்குதல் -- இதன் கடவுள் யார்?
ப்ரம்மா.
Q231. விஷ்ணுவை வணங்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
வைஷ்ணவர்கள்.
Q232. உலகின் எல்லா நிகழ்வுகளுக்கும் முதல் தொடக்கக் கடவுளாக கருதப் படுபவர் யார்?
விநாயகக் கடவுள்.
Q233. செல்வங்களுக்கு அதிபதியான கடவுளாக கருதப்படுபவர் யார்?
பெண் கடவுள் லக்ஷ்மி.
Q234. மருத்துவத்தைப் பற்றி கூறும் வேதம் எது?
அதர்வண வேதம்.
Q235. கோவில்களின் மகத்துவத்தையும், அவைகள் அமைந்துள்ள இடத்தைப் பற்றியும் கூறும் நூல் எது?
ஸ்தல புராணம்.
Q236. சாதிகள் உருவானதைப் பற்றி கூறும் புராணம் எது?
குல புராணம்.
Q237. ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி விளக்கும் சிவபெருமானின் அவதாரம் எது?
அர்த்தநாரீஸ்வரர் -- பகுதி ஆண், பகுதி பெண் உருவம்.
Q238. சிவனின் எந்த அவதாரத்தில், பகுதி சிவனாகவும், பகுதி விஷ்ணுவாகவும் அமைந்திருக்கும்?
ஹரிஹரா (ஹரிஹரன்)
Q239. சிவனின் எந்த அவதாரம் "தெய்வீக நாட்டிய" ராக அமைந்துள்ளது?
நடராஜர்.
Q240. ஆசியாவிலேயே உயரமான கோபுரம் கொண்ட கோவில் எது?
ஸ்ரீ ரங்கநாத சாமி கோவில், ஸ்ரீரங்கம், திருச்சி, தமிழ்நாடு.
Q241. அத்வைத வேதாந்தத்தை தொகுத்து அளித்தவர் யார்?
ஆதி சங்கரர். முதல் சங்கராச்சார்யர்.
Q242. ஆதி சங்கரர் அமைத்த துறவி முறையை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தஷநாமி சம்ப்ரதாயா -- இதன் படு துறவறம் ஏற்று, ஒரு பீடத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்கும் போது, அவர் இந்த முறையில் கொடுத்துள்ளபடி ஒரு பட்டப்பெயரை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். (தஷநாமி என்பது பத்துப்பெயர் எனப் பொருள்)
Q243. சாரதா பீடம் எங்கு அமைந்துள்ளது?
சிருங்கேரி, கர்நாடகம்.
Q244. கோவர்தன பீடம் எங்கு அமைந்துள்ளது?
பூரி, ஒடிசா.
Q245. துவாரகா பீடம் எங்கு அமைந்துள்ளது?
துவாரகா, குஜராத்.
Q246. காமகோடி பீடம் எங்கு அமைந்துள்ளது?
காஞ்சிபுரம், தமிழ்நாடு.
Q247. 2016 நிலையில் காஞ்சி காமகோடி மடத்தின் மடாதிபதி, எத்தனையாவது மடாதிபதி?
69வது சங்கராச்சார்யர்.
Q248. ரஜ்னீஷ் அவர்களின் இயற்பெயர் என்ன?
சந்திர மோகன் ஜெயின்.

இந்து மதத்தின் சிறப்பு அம்சங்கள்:

Q249.
இந்துக்களின் கோவில்களின் சிறப்பு, முக்கியத்துவம், அமைப்பு, என பல வகைகளில், பல விதமான சிறப்புகள், வினோதங்கள், போன்றவை அநேகம் உள்ளன. அதே சமயம், வழிபாட்டு முறைகள், சடங்குகள், நேர்த்திக் கடன்கள், விரதங்கள், பிரசாதங்கள் விநியோகம் என பல வழிகளில், பல இடங்களில், கோவில்களில் அநேக வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, திருப்பதி சென்றால், மொட்டை அடிப்பது, பழநிக்கு சென்றால் மொட்டை அடிப்பது, காவடி எடுப்பது, இந்துக் கடவுள்களின் வாகனங்கள் என பல சிறப்பு வித்தியாசங்களை நாம் பார்க்கலாம். இந்த அம்சங்களின் அடிப்படையில், கிடைத்த தகவல்களை சேகரித்து கேள்வி பதிலாக கொடுத்துள்ளோம். பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
Q250. இந்து மதத்தில், சந்திரனுடன் சம்பந்தப்பட்ட கடவுள் யார்?
அனுமதி.
Q251. "தவளைக் கோவில்" “Frog Temple” என்பது எங்குள்ளது?
சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள, தவளை வடிவ கோவில், உத்திரபிரதேசத்தின் ஒயால் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
Q252. கோவிலின் கர்ப்பகிருஹத்தில் எந்த ஒரு சிலையும் இல்லாமல், வெற்று இடமாக, கடவுள் எங்கும் இருக்கிறார் என உணர்த்தும் வகையில் உள்ள கோவில் எங்கு அமைந்துள்ளது?
நடராஜர் கோவில், சிதம்பரம், தமிழ்நாடு.
Q253. இந்தியாவில், ஒரு ஏரியின் நடுவில் அமைந்துள்ள சிவன் கோவில் எங்கு உள்ளது?
ஸ்தானேஷ்வர் மகாதேவ் கோவில், குருஷேத்ரா, ஹரியானா.
Q254. "தக்ஷின் துவாரகா" என அழைக்கப்படுவது எந்த கோவில்?
குருவாயூர் கிருஷ்ணர் கோவில், கேரளா.
Q255. எந்த கோவிலில், பெண்கள் 10 முதல் 50 வயது வரை, அனுமதிக்கு தடை செய்யப்பட்டுள்ளது?
சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவில், கேரளா.
Q256. தென் இந்தியாவில், ஒரு கோவிலில், 9 நாட்கள் பண்டிகையின் போது, ஆண்கள் கோவிலுக்குள்ளோ அல்லது அதை சுற்றியுள்ள பகுதிகளிலோ அனுமதிக்கப்படவில்லை. அது எந்தக் கோவில்?
பொன் கால மகோத்சவம், ஆட்டுக்கால் பகவதி கோவில், திருவனந்தபுரம், கேரளா. அந்த விழா நாட்களில் அனைத்து சடங்குகளும் பெண்களாலேயே நடத்தப்படுகிறது.
Q257. எந்த கோவிலை, முழுவதுமாக வெள்ளித் தகடுகளால் கவரப்படுவதற்கு, எந்த முகலாய மன்னர் உதவி செய்தார்?
முகலாய மன்னர் ஜெஹாங்கீர் -- ப்ரஜேஷ்வரி கோவில், கங்க்ரா, இமாச்சலப் பிரதேசம்.
Q258. "ருத்ராட்சம்" “Rudraksha” என்ற வார்த்தையின் பொருள் என்ன?
"ருத்ரரின் கண்ணீர்த்துளி" “Rudra’s tear” – Rudra = சிவா Shiva, Aksha = கண்ணீர் துளி Tear.