Khub.info Learn TNPSC exam and online pratice


இஸ்லாம் -- ISLAM

Q1. இஸ்லாம் என்பதன் பொருள் என்ன?
இந்த பெயரை தீர்க்கதரிசி முகமது-வால் கொடுக்கப்பட்டது. இதன் பொருள் கடவுளிடம் ஒருவர் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது எனப் பொருள்.

Q2. இஸ்லாமிய மதத்தை நிறுவியவர் யார்?
தீர்க்கதரிசி முகமது (வாழ்காலம் B.570 AD; D.632 AD) இந்த மதத்தை கி.பி. 622ல் நிறுவினார். இவர் முகமது நபி எனவும் அழைக்கப்பட்டார்.
Q3. தீர்க்கதரிசி முகமது எங்கு பிறந்தார்?
சவுதி அரேபியாவின் மெக்கா என்ற இடத்தில். இது ஒரு இஸ்லாமியர்கள் புனித பயணம் செல்லும் - ஹஜ் - இடம். இந்த பயணத்தை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ""ஹாஜி"" என்ற மரியாதையுடன் அழைக்கப்படுவர்.
Q4. முஸ்லீம் என அழைக்கப்படுபவர் யார்?
இஸ்லாமிய தத்துவங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றுபவர் முஸ்லீம் என அழைக்கப்படுகிறார். முஸ்லீம் என்ற வார்த்தைக்கும் ""கடவுளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்"" எனப் பொருள்.
Q5. கடவுளின் போதனைகளை தீர்க்கதரிசி முகுமதுவுக்கு சொன்னவர் யார்?
கேப்ரியல் என்ற தேவதூதர். இதன் அடிப்படையில் தான் தீர்க்கத்தரிசு முகமது இஸ்லாமியர்களின் புனித நூலை தொகுத்து அளித்தார்.
Q6. இஸ்லாமியர்களின் புனித நூல் எது?
குரான் -- Quran – தொடக்கத்தில் அரபு மொழியில் எழுதப்பட்டது. இதில் 14 சுரா எனப்படும் அத்தியாயங்கள், 6236 வசனங்கள் அடங்கியுள்ளது.
Q7. இஸ்லாமியர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
(1) சன்னி -- SUNNI – இஸ்லாமியர்களுள் அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள். எகிப்தின் முதல் நான்கு காலீஃப் Caliphs களே தீர்க்கதரிசி முகமதுவின் நேரடி வாரிசுகள் மற்றும் இஸ்லாமியர்களின் கேள்விகள் கேட்கப் படமுடியாத தலைவர்கள்/அதிகாரம் பெற்றவர்கள்.
(2) ஷியா -- SHIA – இஸ்லாமியர்களுள் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள். இவர்களுக்கும் சன்னி இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஒரு சிறிய பேதம், இவர்களுள் உறவை மிகவுமே பாதித்துள்ளது. அந்த பேதம் என்னவென்றால், ஷியா பிரிவினர், அலி இபுன் அபி தாலிம் என்பவரே உண்மையாக முகமது நபியால் நியமிக்கப்பட்ட காலீஃப் என நம்புகின்றனர். அதே சமயம், சன்னி பிரிவினர், எகிப்தின் முதல் நான்கு அபு பக்கரில் தொடங்கி, காலீஃப்களே உண்மையான காலீஃப்கள் எனவும், முகமது நபி யாரையும் காலீஃபாக நியமிக்கவில்லை எனவும் நம்புகின்றனர். மதம், நம்பிக்கை ஆகியவை ஒன்றாக இருந்த போதிலும், இந்த கருத்து வேறுபாடு, பல நூறு ஆண்டுகளாக இரு பிரிவினரையும் பிரித்து வைத்துள்ளது. இதன் விளைவுகள் மிக மிக மோசமானதாக பல சமயங்களில் எற்பட்டுள்ளது.
(3) சுஃபிஸம் -- SUFISM – இஸ்லாமியர்களில் ஒரு சிறுபான்மைப் பிரிவினர். இவர்கள், இஸ்லாமிய ஆன்மீக ரீதியாக கடவுளை உணர்வதையே தங்கள் குறிக்கோளாக உள்ளனர். இவர்களுடைய சுஃபி இசை முறை கடவுளுக்கு நேரடியாக அர்ப்பணிக்கும் முறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(4) பஹாய் -- BAHAI – இஸ்லாமியர்களில் மிக மிக குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள். இவர்களுடைய நம்பிக்கை முறைகள் பஹாவுல்லா என்பவரால் உருவாக்கப்பட்டது.
Q8. இஸ்லாமியத்தில் ஐந்து தூண்கள் எனப்படும் நம்பிக்கைகள் யாவை?
(1) ஷதா -- SAHADAH: நம்பிக்கைக்கு ஒரு சாட்சியமாக இருப்பது -- அதாவது, அல்லாவே ஒரே கடவுள், முகமது நபி அவரது தூதுவர் என அறுதியாக நம்புவது.
(2) சலாத் -- SALAT : பிரார்த்தனை - ஒரு நாளைக்கு 5 முறை.
(3) ஸகத் -- ZAKAT : ஏழைகளுக்கு தானம் அளிப்பது.
(4) சாவ்ம் -- SAWM: உண்ணா நோன்பிருத்தல்
(5) ஹஜ் -- HAJJ : மிக்காவுக்கு புனித பயணம் செல்லுதல்.
Q9. இஸ்லாமியர்களின் புனித யாத்திரைத் தலமாக கருதப்படும் இடங்கள் யாவை?
(1) மெக்கா -- MECCA: சவுதி அரேபியா -- தீர்க்கதரிசி முகமதுவின் பிறப்புத் தலம். இத்தலத்தின் முழுப் பெயர் -- ""மக்கா அல் முக்கரம்மாஹ்"". (முற்காலத்தில் பக்காஹ் Baqqah எனவும் அழைக்கப்பட்டது) இங்கு தான் மிக புனித தலமாக கருதப்படும் கஃபா (Qafah/Kafah/Kabah) என்ற இடம், அல் ஹராம் மசூதியில் அமைந்துள்ளது. இங்கு தான் ஜம்ரத் அல்லது ஜம்ரத் அல் அக்காபா Jamrat or Jamrat Al Aquaba, என்ற கல்தூண், பிசாசின் அடையாளமாக, உள்ளது. இந்த தூணைச்சுற்றி, யாத்திரிகர்கள் வட்ட வடிமாக சுற்றி, கருமை நிற கூழாங்கற்களால் பிசாசை அடித்து விரட்டும் விதமாக, தூணை நோக்கி எறிவர்.
(2) மதீனா -- MADINA : இங்கு தான் தீர்க்கதரிசி முகமது நபி, அல் நவாபி மசூதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுவும் சவுதி அரேபியாவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் புனிதப்பயணம் செய்வதே ஹஜ் யாத்திரை எனப்படுகிறது. ஹஜ் யாத்திரை முடிப்பவர்கள் ஹாஜி என்ற மரியாதைக்குரிய இடம் பெறுகிறார்கள்.
Q10. ஹஜ் யாத்திரை பயணம் செய்பவர்கள், ஒரு இரவு முழுவதும், குறிப்பிட்ட இடத்தில், மெக்காவுக்கு வெளியில், தங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அது எது?
முஸ்தாலிஃபா -- MUSTALIFA: மெக்காவுக்கும் அராஃபத் என்ற இடத்துக்கும் இடையில் உள்ளது. இங்கு ஜபல் அல் ரஹ்மா என்ற குன்று உள்ளது. இது ஒரு புனித இடமாக, கடவுளின் கருணை/மன்னிப்பு கோரி, ஒரு இரவை இங்கு கழித்துச் செல்வர்.
Q11. இஸ்லாமியர்கள் மேற்கு நோக்கி பிரார்த்தனை செய்யக் காரணம் என்ன?
கஃபா புனித தலம் மேற்கு திசையில் இருப்பதால்.
Q12. இஸ்லாமியர்களின் அன்றாட ஐந்து வேளை தொழுகை எவ்வாறு அழைக்கப் படுகிறது?
(1) ஃபஜ்ர் -- FAJR: சூரிய உதயம் முன்பு
(2) ஸூஹர் -- ZUHAR: மதியம்
(3) அஸ்ர் -- ASR: மாலை
(4) மக்ரேப் -- MAGHRIB: சூரிய மறைவுக்கு முன்
(5) இஷார் -- ISHAR: இரவு.
இந்த ஐந்து தொழுகைகளும் சேர்த்து ""ஃபர்த்"" எனப்படும்.
Q13. முகமது அவர்களால், பிரார்த்தனை செய்ய உகந்த நேரமாக பரிந்துரை செய்திருக்கிறார்?
தஹாஜ்ஜூத் -- Tahajjuth – நடு இரவு பிரார்த்தனை.
Q14. ஒரு முஸ்லீம் ன் ஐந்து முக்கிய கடமைகள் யாவை?
1. கல்மா Kalma – இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் பரப்புவது.
2. நமாஸ் -- Namaz – தவறாமல் பிரார்த்தனை செய்வது.
3. க்ரெய்த் -- Kharait – தானம் கொடுப்பது.
4. ரஸா -- Raza – நோண்புகளை தவறாமல் கடைப்பிடிப்பது.
5. ஹஜ் -- Haj - புனித யாத்திரை.
(கேள்வி 9ம் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்)
Q15. புனித நூல் குரானுடன், ஹாடித் என்ற நூலும் புனித நூலாக கருதப் படுகிறது. அது என்ன?
முகமது நபியின் போதனைகள்.
Q16. இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தப்படும் இடம் எவ்வாறு அழைக்கப் படுகிறது?
மசூதி
Q17. மசூதிகளில் காணப்படும் உயரமான, பொதுவாக உருளைவடிவ மேற்கூம்புடன் கூடிய கட்டுமானம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?
மசூதி ஸ்தூபி (Minaret) – இது, சம்பந்தப்பட்ட மசூதியின் முக்கிய போதகர், பிரார்த்தனை நேரங்களில் அழைப்பு விடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்போது ஒலி பெருக்கிகளும் பயன்படுத்தப்படுகிறது.
Q18. இஸ்லாமிய பாரம்பரிய பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மதரஸா
Q19. இஸ்லாமிய புனித நூல் குரானின் முதல் அத்தியாயம் என்ன?
அல் ஃபதீஹா.
Q20. இஸ்லாமிய ஆன்மீக முக்கியமானதொடர்கள் யாவை, அவற்றின் பொருள் என்ன?
அன்சாரி -- ANSARI: மற்றவர்களுக்கு தொண்டு செய்பவர்.
அஸ்ஸலாமு அல் ஐக்கும் -- ASSALAMU-AL-AIQUM: சுருக்கமாம சொன்னால் ""சலாம்"" -- பொருள் -- ""அல்லாவின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு இருக்கட்டும்""
அஷூரா -- ASHURAH: அஷூரா என்ற நாள், முகமது நபியின் பேரன் ஹூசைன் இபுன் அலி, கர்பாலா போரில், உமையாத் காலீஃப் உடன் போரிட்டு மறைந்த நாள். சன்னி மற்றும் ஷியா பிரிவினர் இருவராலும் துக்கம் அனுசரிக்கப்படும் நாள். மாரில் அடித்துக் கொள்ளுதல் ""மத்தம்"" என்றழைக்கப்படுகிறது.
அதாப் -- ADAB: இஸ்லாமிய கோட்பாடுகளுக்குட்பட்டு வாழுதல்.
பிஸ்மில்லா -- BISMILLAH: கடவுளின் பெயரால்.
துவா -- DUAH: கடவுளிடம் வேண்டுதல், பிரார்த்தனை செய்தல்.
ஃபக்ர் -- FAKR: தானத்தில் ஒரு வகை.
"ஃபட்வா -- FATWAH: இஸ்லாமிய தலைவரால விடுக்கப்பட்ட மாறுதலுக்குட்படாத ஆணை.
ஹஃபீஸ் -- HAFIZ: எந்த ஒரு முஸ்லீம், குரானை முழுமையாக மனப்பாடம் செய்திருக்கிறாரோ அவர்.
ஹலால் -- HALAL: அனுமதிக்கப்பட்ட உணவு.
ஹிஜ்ரா -- HIRJA: இஸ்லாமிய நாள் காட்டி தொடங்கப்பட்ட காலம்.
இன்ஷா அல்லா -- INSHAH ALLAH: ""கடவுள் ஆசீர்வதிக்கட்டும்"" ""கடவுள் விரும்பினால்""
இமாம் -- IMAM: ஒரு மசூதியில், முஸ்லீம்களுக்கு பிரார்த்தனை நடத்தி வைப்பவர் -- மத குரு.
ஜிஹாத் -- JIHAD: இஸ்லாமிய கோட்பாடுகளை பாதுகாத்து பரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் போர்.
லா இலாஹி இல்லல்லா -- முகமது ரஸூலுல்லா LA ILAHI ILLALLAH- Mohammad Rasulullah: அல்லா மட்டுமே போற்றக்கூடியவர், மரியாதைக்குரியவர்.
மஹர் -- MAHAR: இஸ்லாமிய விதிமுறைகளின் படி, ஒரு மாப்பிள்ளை, மணமகளுக்கு கொடுக்கும் கட்டணம்.
முஜ்ஜாஹித் -- MUJJAHID: இஸ்லாமிய நீதிபதிகளின் ஆணைகள்.
நபி -- NABI: மேன்மை மிகுந்தவர்.
நிக்காஹ் -- NIKKAH: திருமணம்
சலாத் -- SALAT: பிரார்த்தனை
ஸூஹூத் -- SUHUDH: முழங்காலில் மண்டியிட்டு, உடலை வளைத்து நெற்றியை தரையில் படும்படி வணங்குவது.
ஷான் எ அல்லா -- SHAN E ALLAH: கடவுளின் மகிமை
சுபான் எ அல்லா -- SUBHAN E ALLAH : கடவுளே உயர்ந்தவர்.
ஷரியா -- SHARIA: இஸ்லாமிய சட்டங்களின் அமைப்பு.
சாவ்ம் -- SAWM: சூரிய உதயம் முதல் மறைவு வரை, ரம்ஸான் காலத்தில், உண்ணா நோன்பு இருத்தல்.
தராவீ -- TARAVEEH: மசூதிகளில் இரவு பிரார்த்தனை.
தலாக் -- TALAQ: விவாக ரத்து.
தயாம் உம் -- THAYAM UM : உலு எனவும் கூறுவர். உடல் சுத்திகரிப்பு செய்து கொள்ள, நீர் கிடைக்காத இடத்தில், முஸ்லீம் மண்ணால் சுத்திகரிப்பு செய்து கொள்ளுதல்.
உம்ராவ் -- UMRAO : பிரார்த்தனை தவறாமல் செய்வதாக உறுதி ஏற்றுக் கொள்ளுதல். இது ஹஜ் பயணத்திற்கு இணையாக கருதப்படுகிறது. ஹஜ் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. ஆனால் உம்ராவ் எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடியது.
உலு -- ULU : ஒவ்வொரு பிரார்த்தனைக்கு முன்பும் நீரால் ஒருவர் தன்னை சுத்திகரிக்கப்படுத்துதல்.
உலேமா -- ULEMA: இஸ்லாமிய அறிஞர்கள் அடங்கிய குழு. இஸ்லாமிய ஷரியா Sharia’a சட்டத்தின் நீதிபதிகள்.
வாக்ஃப் -- WAKF: இஸ்லாமிய சொத்துக்களை மேலாண்மை செய்யும் ஒரு அறக்கட்டளை.
யா அல்லா -- YA ALLAH : கடவுளே உன்னிடம் பிரார்த்திக்கிறேன், வேண்டுகிறேன்.
யாஷ்மாக் -- YASHMAK: இஸ்லாமிய பெண்கள் தலை முதல் கால் வரை அணியும் அங்கி.
ஸகத் -- ZAKAT: தானத்தில் ஒரு வகை.
Q21. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகள் யாவை?
1. முஹர்ரம் -- MUHARRAM: இஸ்லாமிய நாள்காட்டியின் (காலண்டர்) முதல் மாதம்.
2. ரம்ஸான் -- RAMZAN/RAMADAAN: இஸ்லாமிய காலண்டரின் 9வது -- ரமதான் - மாதம். உண்ணா நோன்பு இருக்கும் காலம். 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண் இருபாலரும், சூரிய உதயத்துக்கு முன்பு முதல், சூரிய மறைவு வரை உண்ணா நோன்பிருத்தல்.
3.இத் உல் ஃபித்ர் -- Id Ul Fitr: ரம்ஸான் மாதத்தின் கடைசி நாள். உண்ணாநோன்பு நிறைவடையும் நாள். இந்த நோன்பின் கடைசிநாள் நடக்கும் விருந்து, ""இஃப்தார்"" விருந்து எனப்படும்.
4. இத் உல் ஸூஹா -- ID UL ZUHA : இஸ்லாமிய 12வது மாதமான து அல் ஹஜா வின் 10வது நாள் அனுசரிக்கப் படும் பண்டிகை. ஈத் என அழைக்கப்படுகிறது. ஹஜ் பயணத்தின் போது 5 நாட்களுக்கு அனுசரிக்கபடும்.
Q22. இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட மசூதி எங்குள்ளது?
கொடுங்கல்லூர், கேரளா -- கி.பி. 642ல் மாலிக் இஃப்னூத் என்பவரால்.
Q23. இந்தியாவின் மிகப்பெரிய மசூதி எது?
ஜமா மஸ்ஜீத், டெல்லி.
Q24. 786 – இந்த எண்களை இஸ்லாமியர்கள் பொதுவாக பயன் படுத்துவதை பார்த்திருப்போம். அது எதைக் குறிக்கிறது?
""பிஸ்மில்லா இர்ரஹ்மான் இர்ரஹீம் “Bismillah Irrahman Irrahim” –அல்லாவின் பெயரில், அல்லா மிகவும் கருணை உள்ளவரும், நலன் பயக்கிறவரும் ஆவார்"". Allah, most gracious, most merciful.
Q25. “Blue Mosque” எனப்படும் உலகப் புகழ்பெற்ற மசூதி எங்குள்ளது?
இஸ்தான்புல், துருக்கி.
Q26. இஸ்லாமிய காலண்டரில் AH என்பது எதைக்குறிக்கிறது?
"அன்னா ஹெஜிரே" “Anna Hegirae” ஹிஜ்ரா Hijra வருடத்தில் -- என பொருள்படும்.
Q27. இஸ்லாமியர்களின் புனித அடையாளம் எது?
பிறை -- Crescent
Q28. கணிதத்துறையில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமியர் யார்?
அல் க்வாரிஸ்மி Al Khwarizmi – இவருடைய ""கிதாப் அல் ஜபர்"" Kitab Al Jabra என்ற புத்தகத்தின் அடிப்படையில் தான் அல்ஜீப்ரா Algebra என்ற கணிதப் பிரிவு பெயரிடப்பட்டுள்ளது.
Q29. Babism என்பது என்ன அது Bahaism உடன் எவ்வாறு தொடர்புடையது?
சிய்யித் அலி முஹமது ஷிராஸி -- பாப் எனவும் அழைக்கப்படுவார் -- இவரே இஸ்லாமியத்தில் பாபிஸம் என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தி, அதுவே பிற்காலத்தில் பஹாவுல்லாவால் பஹாயிஸம் என்ற ஒரு பிரிவு ஏற்பட காரணமாயிருந்தது.
Q30. பஹாய் பிரிவு இஸ்லாமியர்களின் புனித நூல் எது?
கிதாப் இ அக்தாஸ் Kitab-I-Aqdas, கிதாப் இல்கான் Kitab-IIqan மற்றும் Hidden words என்ற நூல்கள்.
Q31. பஹாய் பிரிவு இஸ்லாமியர்களின் நிர்வாக ஆதாரங்கள் யாவை?
அப்துல் எழுதிவைத்த, அவருடைய விருப்பங்களும், விதிமுறை ஏற்பாடுகளும், மற்றும் கிதாப் இ அக்தாஸ்.
Q32. பஹாய் பிரிவு இஸ்லாமியர்களின் நிர்வாக அமைப்பு எங்குள்ளது?
ஹைஃபா, இஸ்ரேலில் உள்ள யூனிவர்சல் நீதி இல்லம் -- Universal House of Justice.
Q33. பஹாய் பிரிவு இஸ்லாமியர்களின் அடையாள சின்னம் என்ன?
ஒன்பது முனை கொண்ட நட்சத்திரம், அதன் மத்தியில் இஸ்லாமிய புனித எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
Q34. பஹாய் பிரிவு இஸ்லாமியர்களின் மிக மரியாதைக்குரிய தலைவர் யார்?
ஷோகி எஃபெண்டி -- Shogi Effendi.
Q35. பஹாய் பிரிவு இஸ்லாமியத்தை நிறுவிய பஹாவுல்லா எங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்?
பேப் ஆலயம், ஹைஃபா, இஸ்ரேல். Shrine of Bab, Haifa, Israel.
Q36. இந்தியாவில் பஹாய் பிரிவு இஸ்லாமியர்களின் மிகப்புகழ்பெற்ற நிலக்குறி landmark என்ன?
தாமரைக் கோவில் -- Lotus Temple – புது டெல்லி.
Q37. பஹாய் பிரிவு இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை எது?
ரித்வான் -- Ridvan – பஹாவுல்லா தீர்க்கதிரிசி நிலை அடைந்ததை 12 நாட்களுக்கு கொண்டாடும் விழா.
Q38. தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற மசூதி எங்குள்ளது?
நாகூர், தமிழ்நாடு.
Q39. உலகின் எந்த நகரம் "மசூதிகளின் நகரம்" என்றழைக்கப்படுகிறது?
டாக்கா, வங்காளதேசம் -- சுமார் 700 மசூதிகள் உள்ளன.
Q40. அரபு மொழியில் கடவுளை எவ்வாறு அழைப்பர்?
அல்லா.
Q41. நாம் ஒரு இஸ்லாமியரை நோக்கி சலாம் என வணக்கம் சொல்லும் போது அவர் பதிலுக்கு அஸ்ஸலாமு அல் ஐக்கும் எனக் கூறுவார். இதன் பொருள் என்ன?
அல்லாவின் ஆசிர்வாதம் உங்களுக்கிருக்கட்டும்.
Q42. ஒரு குறிப்பிட்ட நாளில், இஸ்லாமியர்கள் தங்கள் மார்களில் அடித்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். அந்த பண்டிகை/சடங்கு என்ன?
அஷூரா -- Ashurah. அஷூரா என்ற நாள், முகமது நபியின் பேரன் ஹூசைன் இபுன் அலி, கர்பாலா போரில், உமையாத் காலீஃப் உடன் போரிட்டு மறைந்த நாள். சன்னி மற்றும் ஷியா பிரிவினர் இருவராலும் துக்கம் அனுசரிக்கப்படும் நாள். மாரில் அடித்துக் கொள்ளுதல் ""மத்தம்"" என்றழைக்கப்படுகிறது. முஹர்ரம் மாதத்தின் 10வது நாள்.
Q43. "பிஸ்மில்லா" “Bismillah” என்பதன் பொருள் என்ன?
கடவுளின் பெயரால்.
Q44. இஸ்லாமியத் மதகுரு கொடுத்த மாறுதல் படுத்தமுடியாத உத்தரவு எவ்வாறு அழைக்கப் படுகிறது?
ஃபட்வா -- Fatwah.
Q45. "இன்ஷாஅல்லா" என்பதன் பொருள் என்ன?
கடவுள் விரும்பினால் மற்றும் கடவுள் ஆசீர்வாதம் இருக்கட்டும்.
Q46. மசூதிகளில் ஆன்மீக குருவாக பணி புரிபவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
இமாம்.
Q47. இஸ்லாமியத்தில் "ஜிஹாத்" எனப்படுவது என்ன?
இஸ்லாமிய மத கோட்பாடுகளைக் காக்கவும், பரப்பவும் நடத்தப்படும் போர்.
Q48. இஸ்லாமிய மத நீதிபதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
முஜ்ஜாஹித் -- Mujjahid.
Q49. "நபி" என்பதன் பொருள் என்ன?
மேன்மைப்படுத்தப்பட்டவர்.
Q50. இஸ்லாமியர்களின் திருமணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிக்காஹ்.
Q51. இஸ்லாமியர்கள் பிரார்த்தனைக்கு பொதுவாக கூறும் வார்த்தை எது?
சலாத் Salat.
Q52. இஸ்லாமியர்கள், தங்கள் பிரார்த்தனையின் பொது மண்டியிட்டு, நெற்றியால் தரையை தொடும் முறைக்கு என்ன பெயர்?
ஷூஹூத் -- Shuhudh.
Q53. "சுபான் எ அல்லா" “Subhan-e-Allah” என்பதன் பொருள் என்ன?
கடவுள் மேன்மையானவர்.
Q54. இஸ்லாமிய சட்டங்களை மேலாண்மை செய்யும் குழு எவ்வாறு அழைக்கப் படுகிறது?
ஷரியா -- Sharia.
Q55. ரம்ஜான் காலத்தில் காலை முதல் மாலை வரை உண்ணா நோன்பு இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சாவ்ம் -- Sawm.
Q56. இஸ்லாமியத்தில் "உம்ராவ்" என்பது என்ன?
பிரார்த்தனை தவறாமல் செய்வதாக உறுதி ஏற்றுக் கொள்ளுதல். இது
Q57. உம்ராவ் க்கும் ஹஜ் க்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஹஜ் பயணத்திற்கு இணையாக கருதப்படுகிறது. ஹஜ் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. ஆனால் உம்ராவ் எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடியது.
Q58. இஸ்லாமிய பெண்கள் தலை முதல் கால் வரை மறையக்கூடிய அணியும் அங்கி யின் பெயர் என்ன?
யாஷ்மாக். Yashmak.
Q59. மெக்கா (சவுதி அரேபியா) வின் முழுப்பெயர் என்ன?
மக்கா அல் மக்கரம்மாஹ். Makkah al Mukkarammah.
Q60. மெக்காவில் புனித இடமாகக் கருதப்படுவது எது?
கஃபா -- Kafah/Qafah/Kabah.
Q61. மெக்காவில், பிசாசின் அடையாளமாக உள்ள கல் தூண் பெயர் என்ன?
ஜம்ரத் அல் அகாபா (ஜம்ரத்) -- Jamrat Al Aqaba (Jamrat).
Q62. ஹஜ் பயணத்தை முடித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
ஹாஜி -- Haji.
Q63. தீர்க்கதரிசி முகமது மற்றும் அவருடைய பக்தர்கள், 622ல் மதீனா வந்து அடைந்தது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹிஜ்ரா -- Hijra.
Q64. ஜபால் அன்னூர் என்ற இடத்தில் உள்ள ""ஹீரா குகை"" முஸ்லீம்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
தீர்க்கதரிசி முகமது, கடவுளான அல்லாவின் தூதர் கேப்ரீயல் சொன்ன கடவுளின் போதனைகள எடுத்துச் சொன்னது இந்த இடத்தில் தான் என கருதப்படுகிறது.
Q65. மெக்கா, மதீனா வுக்கு பிறகு, மூன்றாவது புனித இடமாகக் கருதப்படுவது எது?
அல் அக்சா மசூதி, ஜெருசலேம்.
Q66. கடலுக்குள் அருமையான கட்டிடக்கலையுடன் கூடிய புகழ் பெற்ற மசூதி எங்கு அமைந்துள்ளது?
ஹாஜி அலி தர்கா -- மும்பையில் வொர்லி கடல் பகுதியில் அமைந்துள்ளது.
Q67. ஆடும் தூபிகளுடன் கூடிய மசூதி எங்கு அமைந்துள்ளது?
சிதி பஷீர் மசூதி, அஹமதாபாத்
Q68. "தோலி" மசூதி எனப்படும் புகழ் பெற்ற மசூதி எங்குள்ளது?
ஹைதராபாத்.
Q69. இந்தியாவில் எந்த மசூதியில், திர்க்கதரிசி முகமது வின் முகத்தாடி யில் இருந்து, ஒரு முடி பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது?
ஹஸரத்பல் மசூதி, ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்.
Q70. இந்தியாவில் குவிமாடம் domed கொண்ட ஒரே மசூதி எங்குள்ளது?
ஹஸரத்பல் மசூதி, ஸ்ரீநகர். பொதுவாக மசூதிகள் "பகோடா" போன்ற மேல்கூரை அமைந்திருக்கும்.
Q71. இந்தியா/உலகில் மிக உயரமான இஸ்லாமிய தூபி minaret எது?
குதுப் மினார். Qutub Minar.
Q72. இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகள் யாவை?
ஈத் உல் ஃபித்ர், அஷூரா, ஈத் உல் துஹா, மிலாத் உன் நபி, முகர்ரம், உர்ஸ், ரம்ஜான்.
Q73. ஈத்/ஈத் உல் ஃப்த்ர் என்பது என்ன?
ரம்ஜான் நோன்பு மாதம் முடிவு நாள். இந்த நாள், இஸ்லாமிய காலண்டர் ""ஷவ்வால்"" மாதத்தின் முதல் நாள் அனுசரிக்கப்படுகிறது. பிரார்த்தனை, தானம், குடும்பத்தினருடன் விருந்து, என அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ரம்ஜான் என அழைக்கப்படுகிறது.
Q74. அஷூரா என்பது என்ன பண்டிகை?
அஷூரா என்பது 10 என்று பொருள். அஷூரா என்ற நாள், முகமது நபியின் பேரன் ஹூசைன் இபுன் அலி, கர்பாலா போரில், உமையாத் காலீஃப் உடன் போரிட்டு மறைந்த நாள். சன்னி மற்றும் ஷியா பிரிவினர் இருவராலும் துக்கம் அனுசரிக்கப்படும் நாள். மாரில் அடித்துக் கொள்ளுதல் ""மத்தம்"" என்றழைக்கப்படுகிறது.
Q75. ஈத் உல் அதா என்பது என்ன பண்டிகை?
இஸ்லாமிய மாதம் தூல் ஹிஜ்ஜா வின் 10 வது நாளில் அனுசரிக்கப்படுகிறது. தீர்க்கதரிசி இப்ராஹிம், தனது மகன் இஸ்மாயில் ஐ கடவுளுக்காக அர்ப்பணிக்க (பலி) கொடுக்க முன்வந்ததை அனுசரிக்கும் நாள்.
Q76. மிலாத் உன் நபி என்பது என்ன பண்டிகை?
தீர்க்கதரிசி முகமதுவின் பிறந்த நாள்.
Q77. முஹர்ரம் என்பது என்ன?
இது ஒரு துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. முகமது நபியின் பேரன் ஹூசைன் இபுன் அலி, கர்பாலா போரில், உமையாத் காலீஃப் உடன் போரிட்டு மறைந்த நாள். சன்னி மற்றும் முக்கியமாக ஷியா பிரிவினர், இருவராலும் துக்கம் அனுசரிக்கப்படும் நாள். ""யா ஹூசைன்"" எனக் கூறிக்கொண்டே, மாரில் அடித்துக் கொள்ளுதல் ""மத்தம்"" என்றழைக்கப்படுகிறது.
Q78. "உர்ஸ்" என்பது என்ன பண்டிகை?
இஸ்லாமிய சுஃபி துறவிகள் நினைவாக அனுசரிக்கப்படும் நாள். தெற்கு ஆசிய இஸ்லாமியர்கள் இதை அனுசரிக்கிறார்கள்.
Q79. சந்தனக்கூடு என்ற புகழ் பெற்ற தமிழக இஸ்லாமியர் பண்டிகை எங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது?
ராமநாதபுரம் மாவட்டம் எரவாடி தர்கா (மசூதி) வில் நடத்தப்படும் விழா. இஸ்லாமிய மாதம் ஸில் க'தா வில், பாதுஷா நாயகம் என்ற இஸ்லாமிய மகானின் கல்லறையில், அவர் மறைவின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.