Khub.info Learn TNPSC exam and online pratice


ஜைன மதம் -- JAINISM

Q1. ஜைன மதம் என்பது என்ன?
மகாவீரரின் போதனைகள் கடைப்பிடித்து வாழ்வது. இவ்வாறு வாழ்பவர்கள் ஜைனர்கள் எனப்படுகிறார்கள்.

Q2. ஜைன மதத்தை நிறுவியவர் யார்?
ரிஷபதேவா -- அயோத்யாவில், நபி ராஜா மற்றும் ராணி மாருதேவிக்குப் பிறந்தவர். இவரே முதல் ""தீர்த்தங்கரா"" என அழைக்கப்படுகிறார்.
Q3. தீர்த்தங்கரர் என்பவர் யார்?
எந்த ஒரு மனிதர் எல்லா இச்சைகளிலிருந்தும் விடுபட்டு, முக்திக்கு முன் நிலையான ""அரிஹந்த்"" என்ற நிலைப் பெற்று, மக்களை, ஆன்மீக வழி நடத்தும் ஒரு வழிகாட்டி தலைவராக வெளிப்படுகிறாரோ அவரே இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
Q4. மகாவீரா என்பவர் யார்?
இவர் ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரர். பீஹாரின் குந்தாக்ராம் என்ற இடத்தின் மன்னர் சித்தார்த்தா மற்றும் த்ரிஷாலா வுக்கு, கி.மு.599ல், வைஷாலி என்ற இடத்தில் பிறந்தவர். பிறப்பில் இளவரசர். கி.மு.527ல் மறைந்தார். வர்த்தமானா என்ற இயற்பெயர் கொண்டவர். ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் இவரே. இவருக்கு முன்பாக இருந்த தீர்த்தங்கரர் பாரஸ்வநாத்.
Q5. மகாவீரா எங்கு மறைந்தார்?
கி.மு.527ல் பவன்புரி (ராஜ்கீர் அருகில் பீஹாரில்) என்ற இடத்தில் மறைந்தார்.
Q6. ஜைனர்களின் புனித நூல் எது?
தத்வர்த்த சூத்ரா Tattvartha Sutra – 1800 ஆண்டுகளுக்கு முன்பு, ஆச்சார்யா உமர்வதி என்பவரால், யதார்த்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
Q7. ஜைனர்களின் ஆலயங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
தேராசர் மற்றும் பாசாடி. (Derasar and also Basadi).
Q8. ஜைனர்களின் இடையில் உள்ள பிரிவுகள் யாவை?
(1) திகம்பர் -- DIGAMBAR : திக் == ஆகாயம்; அம்பர் == உடை. ( Dig – Space, Ambar – Clad. ) . அதனால், இந்த பிரிவினரின் துறவிகள் உடை ஏதுமின்றி இருப்பார்கள். பெண்களுக்கு மோட்சம் பெறுவதில்லை என நம்புகிறவர்கள். இவர்களுள், இரண்டு துணை பிரிவினர் உள்ளனர். தேராபந்தி & கஞ்சிபந்தி: இவர்கள் உருவச்சிலை வழிபாடு ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களுள் ஆண் மற்றும் பெண் துறவிகள் வாயில் எப்போதும் ஒரு துணியை கட்டியிருப்பர்.
(2) ஸ்வேதாம்பர் -- SWETAMBAR : ஸ்வேத் = வெள்ளை; அம்பர் = உடை. (Swet – White, Ambar – clad). இவர்கள் துறவிகள் நிர்வாணத்தில் இருப்பதையும், பெண்கள் மோட்சம் அடைவதில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். இவர்கள் வெள்ளை உடை அணிந்து, வாயில் துணி கட்டியிருப்பர்.
Q9. ஜைனர்களிடையே ""ஸ்தானவாகி"" Stanakvasis என்றொரு பிரிவினரும் உள்ளனர். அவர்கள் யார்?
கி.மு.1653ல் லாவாஜி என்ற வணிகரால் நிறுவப்பட்ட ஒரு ஜைன மத பிரிவு. இவர்கள் உருவமில்லாத கடவுள் வழிபாட்டை நம்பினர்.
Q10. ஜைன மதத்தின் முக்கிய கோட்பாடுகள் யாவை?
ஜீவா Jiva – அனைத்து உயிரினங்களும்.
அஜீவா -- Ajiva – உயிரற்ற பொருட்கள்.
புண்யா -- Punya – நற்செயல்கள்
பாப் -- Paap – பாவச் செயல்கள்
அஸ்ரவா -- Asrava – உள்ளாய்வு
பந்தா -- Bandha – செயல்கள் மீது பற்று.
சம்வாரா -- Samvara – செயல்கள் மீது உள்ளாய்வு நிறுத்தல்.
நிர்ஜாரா -- Nirjara – செயல்களில் சிந்தனை சிதறல்.
மோக்ஷா -- Moksha – மோட்சம்/முக்தி.
Q11. ஜைனர்கள் எடுத்துக்கொள்ளும் ஐந்து முக்கிய உறுதிமொழிகள் யாவை?
1. அஹிம்சை -- Ahimsa
2. சத்யம் -- Sathya -- உண்மை.
3. அஸ்தேயா -- Asteya – திருடாமலிருப்பது.
4. ப்ரம்மசார்யா -- Brahmacharya – தர்மம்.
5. அபாரி க்ரஹா -- Apari Graha – பற்று தவிர்த்தல்.
Q12. ஜைனர்களின் புனித அடையாளம் என்ன?
ஸ்வஸ்திக். Swastik.
Q13. ஜைன மதத்தின் சில முக்கியமான சடங்கு/சம்பிரதாய தொடர்கள் யாவை?
1. அநேகாந்தவாடா -- ANEKANTAVADA: ஜைன மதத்தின் அடிப்படை கோட்பாடு -- உண்மை reality என்பது ஒரு தனி அபிப்பிராயத்தினால் ஏற்பட்டதல்ல. பல கருத்துகளிலிருந்தே பிறந்தது.
2. தேராவசி/மூர்த்தி பூஜகா: DERAVASI/MURTI PUJAKA: ஜைன மதத்தில், உருவச்சிலை வழிபாட்டை நம்புபவர்கள்.
3. க்ஷமா வாணி -- KSHAMA VAANI: ஆண்டவரிடம் மன்னிப்பு கோரும் நாள். பத்ரபாட் (புரட்டாசி) மாதத்தின் 14வது நாள் இந்த சடங்கு ""மிச்சாமி துக்கடாம்"" என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது.
4. மகாவீர் ஜெயந்தி -- MAHAVIR JAYANTHI: மகாவீர் பிறந்த நாள்.
5. நமோரர் மந்த்ரா -- NAMORAR MANTRA : கீழ்க்கண்டவர்களை வணங்கி, தினம் அனுசரிக்க வேண்டிய பிரார்த்தனை முறைகள்: (1) அரிஹந்த் (2) சித்தர்கள் (3) ஆச்சார்யர்கள் (4) ஆசான்கள் (5) துறவிகள்
6. பர்யூஷன் பர்வா -- PARYUSHAN PARVA : உண்ணா நோன்பு காலம் -- 8 -> 10 நாட்கள்.
7. பர்யூஷானா -- PARYUSHANA: ஒரே இடத்தில், குறைந்த பட்சமாக 70 நாட்கள், மாதக்கணக்கில் தங்கி ""சமாயிகா"" என்ற சடங்கை கடைப்பிடிப்பது.
8. ப்ரத்திக்ரமன் -- PRATIKRAMAN: செய்த பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கோருதல்.A process of reputence of sins, during which Jains reput for their wrong doings.
9. சமாயிகா -- SAMAYIKA: ஜைனர்களின் தியான முறை.
10. சர்வகா -- SARVAKA: சீடர்.
11. சல்லேகானா -- SALLEKHANA: உண்ணா நோன்பிருந்து மரணத்தை தழுவுவது.
12. தீர்த் -- TIRTH: தேராசார் எனவும் அழைக்கப்படும், 100 வருடங்களுக்கும் மேலான, இட, உணவு வசதியுடன் கூடிய ஜைன ஆலயங்கள்.
13. குரு / சைதன்ய வந்தனா -- GURUVANDANA, CHAITANYA VANDANA: ஞானிகளையும், அறிஞர்களையும், ஆசான்-- களையும், ஆய்வாளர்கள் ஆகியோரை வணங்குதல்.
Q14. மகாவீரர் ஜெயந்தி/பிறந்த நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
இந்து காலண்டர் சைத்ரா (மார்ச்-ஏப்ரல்) 13வது நாள்.
Q15. ஜைனர்கள் தீபாவளியை எவ்வாறு அனுசரிக்கிறார்கள்?
மகாவீர் ஞானசக்தி--Nirvana (Enlightment)-- அடைந்த நாளாக.
Q16. ஜைனர்களின் முக்கியமான கோவில்கள்/புனித தலங்கள் யாவை?
(1) சரவணபேலகுலா -- SARAVANA BELA GULA : ஹாசன் மாவட்டம், கர்நாடகா. விந்தியாகிரி என்ற மலைக்குன்றின் மீது, ஒரே கல்லால் ஆன 60 அடி உயர பாஹூபலி (ரிஷபா வின் இரண்டாவது மைந்தர்) சிலையும் கோவிலும். கங்கா வம்ச காலத்தில் நிறுவப்பட்டது. 12 ஆண்டுகளுக்கொரு முறை இங்கு ""மகாமத்ஸாபிஷேகா"" என்ற பெரிய விழா நடத்தப்படுகிறது. அடுத்த இந்த விழா 2018ல் நடைபெறும்.
(2) ஷிகார்ஜி -- SHIKARJI : பாரஸ்வநாத்ஜி ஆலயம் -- கிர்தி மாவட்டம், ஜார்க்கண்ட் -- 4481 அடி உயர மலை மீது அமைந்துள்ள ஜைனர்களின் மிக புனித தலம். 20 தீர்த்தங்கரர்கள் இங்கு முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
(3) பலிதானா -- PALITANA: குஜராத் மாகாணத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோவில்.
(4) தில்வாரா -- DILWARA TEMPLES : ராஜஸ்தானில், மவுண்ட் அபு என்ற மலையின் மீது அமைந்துள்ள வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோவில்.
(5) ராணக்பூர் -- RANAKPUR : ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஜைன மத கோவில்.
(6) குண்டால்பூர் -- KUNDALPUR : மத்தியபிரதேசம் -- சித்த ஷேத்ரம். 63 கோவில்கள் -- படே பாபா என்ற சித்தரின் மிக அழகான சிலை உள்ளது.
(7) சந்தன்பூர் -- CHANDANPUR : சவாய் மாதோபூர், ராஜஸ்தான் -- மகாவீரரின் பத்மாசன நிலையில் உருவச்சிலை -- புகழ்பெற்ற ஜைன தலம்.
(8) அனந்தநாதசாமி ஆலயம் -- ANANTHANATHASWAMY TEMPLE, புலியார்மலா, வயநாடு, கேரளா.
(9) கிர்னார் -- GIRNAR: குஜராத்தில் உள்ள ஜைன கோவில்கள்.
(10) ஜூனாகாத் -- JUNAGADH: அசோகர் காலத்து பெரிய கல்வெட்டு அரசாணைகள்.குஜராத்.
Q17. இந்தியாவை தவிர்த்து, எந்த வெளிநாட்டில், அதிகமான ஜைன மத கோவில்கள் உள்ளன?
அமெரிக்கா.
Q18. இந்தியாவின் எந்த மாகாணத்தில் அதிகமான ஜைன மக்கள் உள்ளனர்?
மகாராஷ்டிரா.
Q19. ஜைன மக்களிடையே கல்வியறிவு எவ்வாறு உள்ளது?
இந்திய மதங்களிடையே அதிக கல்வியறிவு பெற்ற மதத்தினர் -- சுமார் 94%
Q20. ஜைன மதத்தை கடைபிடிப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
தேராவாசி -- மூர்த்திபூஜிகா.
Q21. ஜைன மதத்தினர் உண்ணா நோன்பு காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பர்யூஷன் பர்வா.
Q22. ஜைன மதத்தினர் தியானம் செய்வதை எவ்வாறு அழைக்கின்றனர்?
சமாயிகா.
Q23. ஜைனமத சீடர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
சர்வகா.
Q24. ஜைன மதத்தினர் உண்ணா நோன்பிருந்து மரணம் தழுவுவதை எவ்வாறு அழைக்கின்றனர்?
சல்லேகானா.
Q25. ஜைனர்களின் முக்கியமான பண்டிகைகள் யாவை?
பர்யூஷ் பர்வா, மஹாவீர் ஜெயந்தி, தீபாவளி, ஞானபஞ்சமி, பௌஷ் தசமி, வர்ஷி தபா/அக்ஷய த்ரித்தியா, மௌன க்யாராஸ், நவ் பட் ஒலி.
Q26. பர்யூஷ் பர்வா என்பது என்ன பண்டிகை?
ஜைனர்களின் மிக முக்கிய பண்டிகை. இந்து காலண்டர் பத்ரா மாதத்தில் (ஆகஸ்ட்/செப்டம்ப்ர்) மாதத்தில், குறைந்த பட்சமாக 3 நாட்கள், எட்டு நாட்களுக்கு உண்ணா நோன்பிருத்தல். இதில் 8 வது நாள் மிக முக்கியம். பிரார்த்தனைகள், பூஜைகள் என அனுசரிக்கப்படும்.
Q27. மகாவீர் பிறந்த நாள் எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?
மகாவீர் ஜெயந்தி -- இந்து காலண்டர் சைத்ர மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் 13வது நாள்.
Q28. ஜைனர்கள் தீபாவளியை எவ்வாறு அனுசரிக்கிறார்கள்?
ஜைனர்களின் இரண்டாவது முக்கிய பண்டிகை. இது மகாவீர் முக்தி அடைந்த நாளாக கருதப்படுகிறது.
Q29. ஜைனர்களின் புத்தாண்டு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
தீபாவளிக்கு அடுத்த நாள்.
Q30. ஞான பஞ்சமி என்பது என்ன நாள்?
புத்தாண்டின் 5வது நாள். -- பிரார்த்தனை மற்றும் புனித நூல்களைப் படிப்பது முக்கியம்.
Q31. பௌஷ் தசமி என்பது என்ன நாள்?
23வது தீர்த்தங்கரர் பாரஸ்வநாத் ன் பிறந்தநாள். இந்து காலண்டர் பௌஷ் மாத 10வது நாள்.
Q32. வர்ஷி தபா/அக்ஷயா த்ரிதிய தபா என்பது என்ன?
இந்து மத வைஷாக் மாத மூன்றாவது நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளிலிருந்து ஒரு வருடம் முன்பாக உண்ணா நோன்பை தொடங்கி, இந்த நாளில் முடிப்பது ஒரு வழக்கம். குஜராத்தில், பலிதானாவில் உள்ள ஷருஞ்சய் கோவிலுக்கு புனித பயணம் மேற்கொள்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.
Q33. "மௌன க்யாராஸ்" என்பது ஜைனர்களின் என்ன பண்டிகை?
தீர்த்தங்கரர்களின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. நவம்பர்/டிசம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. நாள் முழுவதும் அமைதியும், மௌனமும் காத்து, ஐந்து குருக்களை நினைத்து, தியானம் செய்வது. ஐந்து குருக்கள்: துறவிகள், ஆசான், ஆன்மீக குரு, அரிஹந்த் மற்றும் சித்தர்கள்.
Q34. நவ்பட் ஒலி என்பது ஜைனர்களின் என்ன பண்டிகை?
உண்ணா நோன்பு இருக்கும் காலம் -- மார்ச்/ஏப்ரல், மற்றும் செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் வருவது.
Q35. ஜைனர்களின் இரண்டு மிக மிக புகழ் பெற்ற புனித தலங்கள் எவை?
(1) சங்கேஷ்வர், குஜராத். (2) சத்ருஞ்சய், பாலிதானா, குஜராத்
Q36. சரவணபெலாகுலாவில் உள்ள 60 அடி உயர சிலை கொண்ட பஹூபலி யார்?
ஜைனமதம் நிறுவிய ரிஷபாவின் இரண்டாவது மைந்தர். இந்த சிலை கர்நாடகா கங்கா வம்ச ஆட்சியாளர்களால் நிறுவப்பட்டது.
Q37. தீர்த்தங்கரர் என்பதன் பொருள் என்ன?
மனித குலத்தின் துக்கங்களைப் போக்க வந்தவர்.
Q38. ஜைன மதத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் யாவை?
திகம்பர் மற்றும் ஷ்வேதாம்பர்.
Q39. ஜைன மத சித்தாந்தத்தின் முக்கிய குறிக்கோள் யாது?
அனேகதந்தவாடா.
Q40. மகாவீரர் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
வர்த்தமானர்.
Q41. சரவணபேலாகுலா பஹூபலி க்கு நடத்தப்படும் மிகப்பெரிய விழா எது?
மகாமஸ்தாபிஷேகம்.