Khub.info Learn TNPSC exam and online pratice


யூத மதம் -- JUDAISM

Q1. யூத மதம் என்பது என்ன?
இஸ்ரேல் மக்கள் கடைப்பிடிக்கும் ஒரு மதம். கிறித்துவத்திலிருந்து பிறந்தது. இவர்கள் ஹீப்ரூ மொழி பைபிள் -- வேதாகமத்தை புனித நூலாகக் கொண்டவர்கள். அதன் பெயர் ""தனாக்ஹ்"" . இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் யூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

Q2. யூத மதத்தை நிறுவியவர் யார்?
மோசஸ் -- கி.மு. 1300ல் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.
Q3. யூதர்களின் புனித நூல் எது?
தனாக்ஹ் -- TANAKH. ஹீப்ரு பைபிள். இதில் மூன்று புத்தகங்கள் அடக்கம். ஒவ்வொரு புத்தகத்திலும் சில துணை புத்தகங்களும் உண்டு. அவை: (1) டோரா -- 5 புத்தகங்கள். (2) நெவின் -- 8 புத்தகங்கள்; கெடுவிம் -- 11 புத்தகங்கள். இவ்வாறாக, தனாக்ஹ் என்பது 24 புத்தகங்களைக் கொண்டது. இவையே யூதர்களின் புனித நூல், சட்டம் எல்லாமே. இவையெல்லாம் சேர்த்து யூதர்கள் ""ஹலாக்காஹ் Halakah."" என அழைக்கின்றனர்.
Q4. யூதர்களின் மிகப்புனித இடம் எது?
ஜெருசலேம்.
Q5. யூதர்களின் வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சைனோகாக் -- Synogogue.
Q6. யூத மதம் பிறப்பின் பின்னணி என்ன?
கடவுள், ஜேகப் மற்றும் அவரது குடும்பத்தினரையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, இவர்கள், எகிப்து மன்னர் பரோவா வம்சத்தின் அடிமைகள் ஆனார்கள். அச்சமயம், கடவுள் மோசஸ் ஐ அனுப்பி அவர்களை அடிமை நிலையிலிருந்து மீட்க அனுப்பினார். எகிப்திலிருந்து தப்பி சென்றவர்களைக் கடவுள் சினாய் குன்றுப் பகுதிக்கு அனுப்பி அங்கு குடியேறச் சொல்லி, அவர்களுக்கு புனித நூலான டோராஹ் வைக் குடியேறச் சொன்னார். மோசஸ் ன் சகோதரர் ஆரோன் அவர்களை மத குருவாக நியமித்தார். இவ்வாறாக பிறந்தது தான் யூதர்கள், இஸ்ரேல். இதனால், மோசஸ் இஸ்ரேலியர்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
Q7. யூதர்களில் உள்ள பிரிவுகள் யாவை?
(1) பாரம்பரியம் -- Orthodox. இவர்கள், மோசஸூக்கு நேரடியாக கடவுளால் கொடுக்கப்பட்ட டோராஹ் வையும், ""ஷூல்கான் ஆரூக்"" என்ற நூலையும், யூதர்களின் உறுதியான மத சட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
(2) ஹரேடி -- Haredi. இவர்கள், தனாக் ன் மூன்று புத்தகங்களையும் தங்கள் புனித நூலாக ஏற்றுக்கொண்டு அதை கடைப்பிடிக்கின்றனர்.
Q8. ஹசிடி யூதம் என்பது என்ன?
யூத மதத்தின் ஒரு பிரிவு. இவர்கள் ரப்பி இஸ்ரேல் பென் எலிசர் என்பவரின் போதனைகளை நம்புகிறவர்கள். ""கப்பாலா"" என்ற நூலை தங்கள் புனித நூலாக கொண்டுள்ளனர். இவர்கள், தங்கள் உடை மற்றும் பழக்க வழக்கங்களில் மற்ற இஸ்ரேலியர்களை விட மாறுபட்டிருப்பார்கள். இதைத் தவிர்த்து வேறு சில சிறிய அளவிலான பிரிவுகளும் உள்ளன.
Q9. "தால்மூட் Talmud " என்பது யூதர்களின் ஒரு புனித நூல். அது என்ன?
யூதர்களின் ஆன்மீக சட்டங்களின் சர்ச்சைகள், விவாதங்கள் அடங்கிய ""மிஷ்னா மற்றும் கெமாரா"" என இரண்டு புத்தகங்கள். இவற்றுள், மிஷ்னா என்பது பொது சட்டங்களின் மீதான விவாதங்களும் கருத்துகளும்.
Q10. யூத மத தொடர்களும் அதன் விளக்கங்களும் யாவை?
அமிதா -- AMIDAH: யூதர்கள், காலை, மதியம், மாலை என மூன்று வேளையும், ஒன்றுகூடி சொல்லும் பிரார்த்தனை.
ப்ரிட் நிலாஹ் -- BRIT NILAH : புதிதாக பிறந்த ஆண் குழந்தையை பிரார்த்தனை ஆலயத்துக்கு வர்வேற்த்தல்.
மெத் டின் BETH DIN : மத போதகர்கள் அடங்கிய பஞ்சாயத்து/நீதிமன்றம்.
பால் க்ரியா -- BALL KRIYAH : புனித நூல் தோரா வின் ஒரு பகுதியை வாரத்தின் ஒரு நாள், வாசிப்பவர்.
ச்சஸான் CHAZZAN : நல்ல குரல்வளம், பாரம்பரிய இசை ஞானம் கொண்ட ஒருவர், காலை பிரார்த்தனைகளை பாடுபவர்.
தயான் -- DAYAN: நீதிபதி -- யூத மதச்சட்ட வல்லுநர். பணம் கொடுக்கல் வாங்கல், விவாகரத்து போன்ற வழக்கு- களை விசாரிக்கும் மத போதகர்கள் அடங்கிய குழுவின் தலைவராக இருப்பவர்.
கெட் -- GET : விவாகரத்துப் பத்திரம்.
ஹஸ்ஸன் -- HAZZAN : குரல் வளத்தில் பயிற்சி பெற்ற மத பாடல்கள் பாடக்கூடிய வல்லுநர்.
ஹனுக்காஹ் -- HANUKKAH: யூத மதத்தில் கிஸ்லெவ் மாதத்தில் நடைபெறும் தீப ஒளி விழா. எட்டு நாட்களுக்கு நடைபெறும். ஒரு நாளைக்கு ஒரு மெழுகுவர்த்தி என, எட்டாவது எட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்குவர்.
கோஹென் -- KOHEN: மத போதகர் - மத ரீதியான பணிகளை செய்பவர்.
கிட்டெல் -- KITTEL: கழுத்திலிருந்து முட்டி வரையிலான வெள்ளை நிற அங்கி (கோட் மாதிரி)
கிப்பாஹ் -- KIPPAH: மெல்லிய வட்டமான தலை அணி தொப்பி.
கஷ்ருத்/கோஷேர் -- KASHRUT or KOSHER: உணவுப் பொருள்/பழக்கத்தின் சட்டம். லெவி -- LEVI: மத போதகர் (கோஹென் க்கு கீழ்)
மொஹெல் -- MOHEL: யூத மத சடங்குகள் செய்பவர்களில் ஒருவர்.
மெனோராஹ் -- MENORAH: யூத மத ஆலயங்களில் ஏற்றப்படும், ஏழு கிளைகள் கொண்ட எண்ணெய் விளக்கு.
மிக்வாஹ் -- MIKVAH : யூத மதத்தில், ஒருவர் தன்னை சுத்திகரித்துக்கொள்ள,பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குளம்.
மிட்ஸ்வாஹ் -- MITZVAH: மத ரீதியான ஆணை.
மின்யான் -- MINYAN: பத்து அல்லது அதற்கு மேற்பட்ட யூதர்கள் குழு, யூத மத ஆலயத் தொண்டர்கள்.
நித்தாஹ் -- NIDDAH: ஆண்-பெண் உறவுக்கான சட்டதிட்டம்.
புல்பிட் -- PULPIT: யூத மத ஆலயத்தில், மத போதகர் பிரார்த்தனைகளை படிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சற்று உயரமான சிறு மேடை.
பூரிம் -- PURIM: ஒரு சந்தோஷமான திருவிழா. பாரசீக யூதர்கள் அடிமை நிலையிலிருந்து விடுபட்ட நாள். விருந்து, பரிசு, என ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு.
பாஸ் ஓவர்/ பிஸாச் -- PASS OVER/PESACH: சுதந்திர நாட்டில் பிறந்த யூதர்களுக்காக நடத்தப்படும் ஒரு திருவிழா.
ஒரு வார காலம் நீடிக்கும். எகிப்தில் அடிமை நிலையிலிருந்து மீண்டதையும் கொண்டாடப்படுகிறது.
பிய்யுட் -- PIYYUT: யூத மத பாடல். மதம் சார்ந்த விழாக்களில் பாடப்படுவது.
ரப்பி -- RABBI: யூத அறிஞர். சட்டங்களுக்கு விளக்கங்கள் கூறுபவர்.
ரோஷ்யெஷிவா
-- ROSHYESHIVA: ஆன்மீக கல்வி அமைப்புகளின் (யெஷிவா) தலைவர்.
ஷோஃபர் -- SHOFAR: புத்தாண்டை அறிவிக்கும் ஒரு ஊதுகுழல். இதை 101 முறை ஊதி அறிவிப்பர்.
ஷாலியச் ட்சிபுர்/ஷாட்ஸ் -- SHALIACH TZIBUR / SHATZ: பிரார்த்தனைக் கூட்டத்தை முன் நின்று பிரார்த்தனை நடத்துபவர்.
ஸூக்கோட் -- SUKKOT: எகிப்திலிருந்து தப்பித்து வரும் போது, குழந்தைகள் காடுகளில்/பாலைவனங்களில் வாழ்ந்த வாழ்கையை நினைவு கூறும் வகையில், அப்போதிருந்த நிலை போல் குடிசைகள் போன்ற நிலை உருவாக்கி, அதில் 7 நாட்கள் வாழும் ஒரு திருவிழா.
ஷவௌத் -- SHAVOUT: சினாய் குன்றின் மீது தோரா வை யூதர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாளை கொண்டாடுவது.
ஷூல்கான் ஆருக் -- SHULKHAN ARUKH : யூத மத கோட்பாடுகள் கடைப்பிடிப்பை புதுப்பிக்கும் நாள்.
ஷப்பத் -- SHABBAT: யூதர்களின் வார விடுமுறை நாள்.
ஷேமா -- SHEMA: காலை மற்றும் மாலை பிரார்த்தனை.
தல்லித் -- TALLITT; பிரார்த்தனை நேரத்தில் யூதர்கள் பயன்படுத்தும் துண்டு.
டெஃப்லின் & ஃப்யாக்டெரீஸ் -- TEFFILIN & PHYACTERIES : புனித நூல் தோராவை வைக்கும் பெட்டி.
டிஸ்ஸிட் TZITZIT: தல்லித் ப்ரார்த்தனை துண்டுகளின் ஓரத்தில் உள்ள நூல் தொங்கு அழகுக் குஞ்சலங்கள்.
யோம் டோவ் -- YOM TOV: யூதர்களின் விடுமுறை/விழா நாள்.
யோம் கிப்பூர் -- YOM KIPPUR: பாவநிவர்த்தி நாள் -- செய்த பாவங்களுக்காக உண்ணா நோன்பிருத்தல். அதே சமயம் கடவுளின் கருணையால் சுதந்திரமாக வாழ்வதை குறித்து ஒரு மகிழ்ச்சியான நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஒரு விடுமுறை நாள்.
யாஷிவா -- YASHIVA: யூத ஆன்மிக/மத கல்வி கற்கும் மையம்.
ஸெவெத் ஹபத் -- ZEVED HABAT : குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நாள்/விழா.
Q11. யூதர்களின் புத்தாண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரோஷ் ஹஷனாஹ் -- Rosh Hashanah: இந்த நாள் புத்தாண்டு தினமாக கருதப்பட்டாலும், ஹீப்ரூ காலண்டரின் (திஷ்ரி) ஏழாவது மாதத்தின் முதல் நாளாகிறது. இது 10 நாள் நடத்தப்படும் பண்டிகை. ஒருவர் யாருக்கெல்லாம் தீங்கு இழைத்திருக்கிறாரோ, அவர்களிடம் மன்னிப்பு கோருவதும், சம்பந்தப்பட்டவர் அவரை மன்னிப்பதும் முக்கிய நடவடிக்கை.
Q12. யூதர்களின் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெத் டின்.
Q13. யூதர்களின் ஹீப்ரு காலண்டர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திஷ்ரி.
Q14. யூதர்களின் நீதிபதி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
தயான்.
Q15. யூதர்களின் விவாகரத்துப் பத்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கெட்.
Q16. யூத மத குரு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
கோஹென்.
Q17. யூத ஆண்-பெண் உறவை வரைமுறைப் படுத்தும் சட்டத்தின் பெயர் என்ன?
நித்தாஹ்.
Q18. யூதர்களின் புத்தாண்டின் வரவை எவ்வாறு அறிவிக்கிறார்கள்?
ஷோஃபார் என்ற ஊதுகுழலை 101 முறை ஊதி வரவேற்கிறார்கள்.
Q19. யூத அறிஞர் எவ்வாறு அறியப்படுகிறார்?
ரப்பி.
Q20. யூதர்களின் ஆன்மீக கல்வி மையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
யெஷிவா.
Q21. யூத குழந்தைகளின் பெயர் வைக்கும் நாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸெவத் ஹபத்.
Q22. இந்தியாவின் எந்த இடம், முன் காலத்தில், யூதர்களின் பெரிய இருப்பிடமாக விளங்கியது?
மட்டன்ச்சேரி, கேரளா.
Q23. யூதர்களின் மிகச்சிறந்த புனித தலம் என கருதப்படுவது யாது?
பழைய ஜெருசலேம் நகரத்தில் மேற்கத்திய சுவர்.
Q24. உலகிலேயே மிகப்பெரிய யூத் மத ஆலயம் synagogue எங்குள்ளது?
இம்மானுவேல் ஆலயம், நியூயார்க், 3523 ச. மீ.
Q25. இந்தியாவின் முதல் மற்றும் பழமையான யூத மத ஆலயம் எங்குள்ளது?
பர்தேசி சைனகாக், மட்டன்ச்சேரி, கேரளா. Pardesi Snyagogue.