Khub.info Learn TNPSC exam and online pratice


சீக்கிய மதம் -- SIKHISM

Q1. சீக்கிய மதத்தை நிறுவியவர் யார்?
குரு நானக் -- 15 வது நூற்றாண்டில். (1500)

Q2. குருநானக்கைப் பற்றிய விவரங்கள் சுருக்கமாக?
வாழ்காலம் -- 5.11.1469 (பிறப்பு) --> 07.09.1539 (மறைவு). பஞ்சாபின், தால்வாண்டி, நங்கானா சாஹிப் (இப்போது பாகிஸ்தானில்) ல் பிறந்தவர். மேத்தா காலு மற்றும் த்ரிப்தா தேவி பெற்றோர்கள். சுலக்ணி துணைவியார்.
Q3. குரு நானக்கின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் நூல் எது?
"ஜனம்சீக்கிஸ்" "Janamsikhis" – பாய் பாலா என்பவரால் எழுதப்பட்டது.
Q4. சீக்கியர்களின் புனித நூல் எனப்படுவது எது?
குரு க்ரந்த் சாஹிப் -- GURU GRANTH SAHIB : வெவ்வேறு மத குருக்களின் சிந்தனைகள், சித்தாந்தங்கள் போன்றவை தொகுத்து எழுதப்பட்ட நூல்.. குரு கோவிந்த் சிங் காலத்தில் முடிவு பெற்றது. 1430 பக்கங்கள் கொண்டது.
ஆதிக்ரந்த் -- ADIGRANTH : தற்சமயம் புனித நூலாக கருதப்படுவது. இது சீக்கியர்களின் 5 வது குரு அர்ஜன் தேவ் அவர்களின் போதனைகளைக் கொண்டு 1604 ல் தொகுக்கப்பட்டது. 1948 பக்கங்கள் கொண்டது. சுமார் 5000 வேள்விகள் (வசனங்கள்) இசை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Q5. சீக்கியர்களின் அசல் புனித நூல் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது?
குர்முக்கி.
Q6. சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருத்வாரா.
Q7. சீக்கிய மதத்தின் "மூல மந்திரம்" என்ன?
குரு க்ரந்த சாஹிப் ல் உள்ள முக்கிய பகுதிகள்.
Q8. சீக்கியத்தில் "குர்பானி" “Gurbani” என்பது எதைக் குறிக்கிறது?
"கடவுளின் கட்டளை" “The word of God”. பானி என்பது புனித நூல்களைக் குறிக்கிறது.
Q9. ஒரு சீக்கியர் முக்கியமாக படிக்க வேண்டிய ""பானி"" (புனித நூலின் பகுதி) யாவை?
காலை: ஜப்ஜி சாஹிப் (முதல் அத்தியாயம்), ஆனந்த் சாகிப், பெண்ட்டி சபாய், அம்ரித் சவையி
மாலை: ரெஹ்ராஸ் சாஹிப், சோ தர், சோபுரக்ஹ்.
இரவு: கீர்த்தன் சோஹிலா.
Q10. சீக்கியர்களின் மத குருக்கள் யாவர்?
எண் குருவின் பெயர் வாழ்காலம்
1. குரு நானக் தேவ் 15.4.1469-22-9-1539
2. குரு அங்கத் தேவ் 31.3.1954-28.3.1552
3. குரு அமர் தாஸ் 5.4.1479-1.9.1574
4. குரு ராம் தாஸ் 1534-1581
5. குரு அர்ஜன் தேவ் 15.4.1563-30.5.1606
6. குரு ஹை கோவிந்த் 19.6.1595-2.3.1644
7. குரு ஹர் ராய் 26.2.1630-6.10.1661
8. குரு ஹர் கிஷன் 23.7.1656-30.3.1664
9. குரு தேஜ் பகதூர் 1.4.1621-11.11.1675
10. குரு கோவிந்த் சிங் 2.12.1666-7.10.1708
Q11. சீக்கிய குருக்களில் இளைய வயதானவர் யார்?
7வது குரு ஹர் ராய். 1630ல் பிறந்து, 1644ல் குருவானவர்.
Q12. சீக்கிய குருக்களில் இருவர் முகலாய மன்னர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் யார்?
(1) குரு அர்ஜன் தேவ் -- 5வது குரு -- 1604 ல் ஜெஹாங்கீரால் மத ரீதியான காரணங்களுக்காக கொல்லப்பட்டார்.
(2) குரு தேஜ் பஹதூர் -- 9 வது குரு -- இஸ்லாமுக்கு மாற மறுத்த இந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிதர்களை ஆதரித்ததற்காக, அவுரங்கசீப்பால் 1675ல் கொல்லப்பட்டார்.
Q13. இஸ்லாமியத்திற்கு மாற மறுத்து முகலாய தளபதியால் கொல்லப்பட்ட சீக்கிய மத துறவி மற்றும் ராணுவ தளபதி யார்?
பந்தா பஹதூர்.
Q14. சீக்கியர்கள் எந்த நாள்காட்டி (காலண்டர்) யை கடைப்பிடிக்கிறார்கள்?
நானக் ஷாஹி  (இந்து)  காலண்டர்.
Q15. சீக்கியர்களின் புத்தாண்டு தினம் எது?
வைஷாகி -- 13/14 ஏப்ரல் -- 1699ல் இந்த நாளில் குரு கோவிந்த் சிங் "கல்சா" முறையை அறிமுகப்படுத்தினார்.
Q16. சீக்கிய மதக்கூட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சங்கட் -- Sangat.
Q17. ஞான ஸ்நானம் பெற்று பெயர் வைக்கப்பட்ட ஒவ்வொரு சீக்கியனும், கட்டாயமாக 5 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என குரு கோவிந்த் சிங் சீக்கியர்களுக்கு உத்தரவிட்டார். அவை என்ன?
இவை ஆங்கிலத்தில் 5 K எனலாம். அவை:
(1) தலை முடி -- Kesh – வெட்டப்படாத தலைமுடி வைத்துக்கொள்ள வேண்டும்.
(2) கங்கா -- Kanga – மரத்தால் செய்யப்பட்ட சீப்பு.
(3) கரா -- Kara – இரும்பு வளையல்
(4) கச்சேரா -- Kachchera – பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பருத்தி உள்ளாடை.
(5) கிர்பன் -- Kirpan – இடுப்பில் தொங்கவடப்படும் ஒரு வகை கத்தி/வாள்.
Q18. சீக்கிய மதத்தில் அடிக்கடி வழக்கத்தில் நாம் கேள்விபடும் தொடர்களும் அவற்றின் பொருளும்:
அகல் தக்த் -- AKAL TAKHT : சீக்கியர்களின் உயர் மட்ட முடிவுகள் எடுக்கும் அரசியல் அமைப்பு.
அகல் புராக்ஹ் -- Akal Purakh: கடவுளை குறிக்கும் ஒரு சொல். கால வரம்பின்றி, சாகா வரம் பெற்றவர் என பொருள்.
அர்தாஸ் -- ARDAS : எந்த ஒரு முக்கியமான செயலையும் செய்வதற்கு முன் சொல்லப்படும் ஒரு பிரார்த்தனை.
ஆனந்த் கரஜ் -- ANAND KARAJ : சீக்கிய திருமண முறை - குரு அமர் தாஸ் ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அகண்ட் பாத் -- AKHAND PATH : குரு க்ரந்த் சாஹிப் புனித நூலை நிறுத்தாமல் படித்துக்கொண்டே இருப்பது.
தசம் க்ரந்த் -- DASAM GRANTH: போர் முறை பற்றிய சீக்கிய நூல்.
தாஸ்தார் -- DAASTAR: சீக்கியர்கள் தலையில் முண்டாசு போல் கட்டும் தலை அணி.
குர்மத் -- GURMAT : சீக்கியர்களின் அடிப்படை நடவடிக்கைகளை பற்றிய உயர் அமைப்பு “Sarbat Khalsa” – விடும் ஆணை. இந்த ஆணைகளை அனைத்து சீக்கியர்களும் மதிக்க வேண்டும்.
குரு பூரப் -- GURU PURABS : குரு மற்றும் தியாகிகளின் பிறந்த நாளாக கருதப்படும் நாள்.
குட்கா -- GUTKAS : தினசரி படிப்பதற்காக, சிறிய அளவிலான சிறு சிறு பகுதிகள் கொண்ட புனித நூல்கள்.
ஹர்மந்திர் சாஹிப் -- HARMANDIR SAHIB : அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில். ஹோலி மொஹல்லா -- HOLY MOHALLA : ஹோலி பண்டிகையின் அடுத்த நாள். ஆனந்த்பூர் என்ற இடத்தில் சீக்கியர்கள் ஒன்று கூடி, தங்களது சண்டை போடும் திறமைகளை வெளிப்படுத்துவது.
ஹூகும் நாமா -- HUKUM NAMAH : குரு க்ரந்த் சாஹிப் ல் இருந்து, ஒரு ஸ்லோகம், சீக்கியர்களுக்கு ஒரு உத்தரவாக கொடுக்கப்படுவது.
கல்சா -- KHALSA : ஞான ஸ்நானம் பெற்று சீக்கியத்துக்குள் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், ""அம்ரித் சஞ்சார்"" என்ற சடங்கில், அமிர்தத்தை உட்கொண்டவர்களுக்கு கொடுக்கப்படும் பெயர். இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் குரு கோவிந்த் சிங்.
கல்சா பந்த் -- KHALSA PANTH : கல்சா சீக்கியர்களை மேலாண்மை செய்யும் மத ரீதியான அமைப்பு.
கீரத் கர்னி -- KIRAT KARNI : சீக்கிய குருக்கள் சொன்னபடி வாழ்க்கையை நடத்துபவர்.
கீர்த்தன் -- KIRTAN : ஆன்மீக/தெய்வீக பாடல்களை பாடுவது.
மாஞ்சி -- MANJI: எழுத்தாளர்கள் மூலம் கண்காணிப்பு முறை.
மிஸ்ல் -- MISL: இடைக்கால வரலாற்றின் போது இருந்த சில சீக்கிய மன்னர்களின் ராணுவ கூட்டமைப்பு.
நாம் ஜப்னா -- NAAM JAPNA: கடவுளை நோக்கி தியானம் செய்வதும், புனித நூல்களைப் படிப்பதும்.
பாத் -- PAATH: புனித நூல்களை படிப்பதும், மனப்பாடமாக ஒப்பிப்பதும். பஞ்ச் ப்யாராஸ் -- PANJ PYARAS : பத்தாவது குரு கோவிந்த் சிங் நிறுவிய ஆயுதம் ஏந்திய மெய்க்காப்பாளர்கள்.
ப்ரபாத் ஃபெரிஸ் -- PRABHAT PHERIS : குருநானக் பிறந்த நாளில் திருவிழாக் கோல ஊர்வலம்.
சாத் சங்கட் -- SADH SANGHAT : அறிஞர்கள் அடங்கிய குழு.
சர்பத் கல்சா -- SARBAT KHALSA : கல்சா பந்த் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம். சக்தி வாய்ந்த ஒரு அமைப்பு.
ஷிரோமணி குருத்வாரா ப்ரபந்தக் குழு -- SHIROMANI GURUDWARA PRABANDHAK COMMITTEE: குருத்வாரா மேலாண்மை மற்றும் மேற்பார்வைக் குழு.
ஷிரோமணி அகாலி தல் -- SHIROMANI AKALI DAL : சீக்கியர்களின் ஒரு அரசியல் கட்சி.
சீக் ரெஹத் மர்யாதா -- SIKH REHT MARYADA : சீக்கியர்களின் நடைமுறைக் கோட்பாடுகள்.
சத்ஸ்ரீ அகால் -- SAT SRI AKAL : கடவுளின் பெயரால் வணக்கம் சொல்வது.
சேனா -- SENA: பொது இடத்தில் பொதுத்தொண்டு செய்ய முன்வரும் தொண்டர்கள்.
வாஹே குரு -- WAHEGURU: "மேன்மையான கடவுள்"
Q19. சீக்கியத்தில், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் முறை என்ன?
குழந்தை பிறந்தவுடன், குரு க்ரந்த் சாஹிப் நூலை சீரற்ற வரிசையில் துறந்து, அந்த பகுதியில் இடது பக்க இடது முனையில்/தொடக்கத்தில் வரும் முதல் எழுத்தைக் கொண்டு பெயர் வைக்கப்படும்.
Q20. சீக்கியத்தில் "லங்கர்" “Langar” என்பது என்ன?
பொது சமையலறை. விழா நாட்கள், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்ற தேசிய இடற்பாடுகளின் போது, இவ்வகை சமையல் அறைகள் அமைக்கப்பட்டு, துன்பத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக, உணவு தயாரித்து வழங்கும் அறை. இந்த முறையை குரு அமர்தாஸ் அறிமுகப்படுத்தினார்.
Q21. சீக்கியர்களின் மிக முக்கிய புனித தலம், மற்றும் உலகப் புகழ் பெற்ற கோவில் எது?
ஹர்மந்திர் சாஹிப் -- HARMANDIR SAHIB : ""பொற்கோவில்"" எனவும் அறியப்படும். அமிர்தசரஸ், பஞ்சாபில் உள்ளது. இந்த பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர், லாகூர் ன் சுஃபி துறவி ஹஸ்ரத் மியான் மிர். 1601ல் முடிவுபெற்ற இந்த கோவில், 5வது குரு அர்ஜன் தேவ் காலத்தில் முடிக்கப்பட்டது. ஆப்கான் மன்னர் அஹமத் ஷா அப்தாலி இக்கோவிலை தாக்கி முழுமையாக சிதிலமடையச் செய்தார். 1760ல், பஞ்சாப் மன்னர், ரஞ்சித் சிங் அவர்களின் பெரும் நன்கொடை மூலம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள குளம் ""அம்ரித் சரோவர்"" என அழைக்கப் படுகிறது. தலையை துணியால் கவர்ந்து, கால்களை சுத்தமாக கழுவி கோவிலுக்குள் செல்வது கட்டாயம்.
Q22. What is unusual or special about the Rikabganj Gurdwara?
இதன் பெயரில் உள்ள சிறப்பு. ரிகாப் என்பது இந்தி/உருதுவில் குதிரையில் காலின் அடி பாகத்தில் தேய்மானம் தவிர்க்க அடிக்கப்படும் லாடங்கள் எனப்படும். இந்த பெயர் வரக் காரணம், இந்த பகுதியில், இந்த பொருள் அதிகமாக விற்கப்பட்டது மட்டுமின்றி, குதிரை சவாரிக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் விற்கும் இடமாக இருந்தது. அதனால் இப்பெயர் பெற்றது. இங்குள்ள சீக்கிய ஆலயத்தை லக்கி பஞ்சாரா என்பவர் கட்டினார்.
Q23. அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடந்த இரண்டு அசம்பாவிதங்கள் யாவை?
(1) OPERATION BLUE STAR : 03.06.1984. பொற்கோவிலில், சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டுமென வன்முறையில் ஈடுபட்டுவந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலா என்ற தீவிர வாதியும் அவ்ரது சகாக்களும் இங்கு கோவிலுக்குள் தங்கி போராடி வந்தனர். அவர்களை தோற்கடித்துக் கைப்பற்ற வேண்டி, இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை.
(2) OPERATION OF BLACK THUNDER : 1988 – பொற்கோவிலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம்/ பகுதியை உருவாக்குவதற்காக சில தனியார் பகுதிகளும் கைப்பற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து இது நிறுத்தப்பட்டது. பிறகு 1993ல், இந்த நடவடிக்கை மீண்டும் எடுக்கப்பட்டு, பல இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழகான தோட்டங்களாக மாறுதல் செய்யப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. முதல் நிகழ்வின் போது இருந்த பிரதம மந்திரி, திருமதி இந்திரா காந்தி. இவரை, அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொண்றார்.
Q24. அமிர்தசரஸ் நகரை நிறுவியவர் யார்?
குரு ராம் தாஸ்.
Q25. சீக்கிய முதல் குரு குருநானக் நிறுவிய நகரம் எது?
கர்தார்பூர். Kartarpur.
Q26. சீக்கியர்களின் முதல் குரு யார்?
குரு நானக்.
Q27. சீக்கியர்களின் கடைசி குரு யார்?
குரு கோவிந்த் சிங்.
Q28. சீக்கியர்களின் திருமணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆனந்த் கரஜ்.
Q29. நிறுத்தாமல் குரு க்ரந்த் சாஹிப் புனித நூலைப் படிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகண்ட் பாத்.
Q30. சீக்கியத்தில் போர் முறைப் பற்றிய நூலின் பெயர் என்ன?
தசம் க்ரந்த்.
Q31. சீக்கியர்கள் தலையில் அணியும் முண்டாசு போன்ற துணி அணி turban எவ்வாறு அழைக்கப்படுகிறது.
தாஸ்தார்.
Q32. குருநானக் பிறந்த நாளை ஒட்டிய விழா ஊர்வலம் எவ்வாறு அழைக்கப் படுகிறது?
ப்ரபாத் ஃபேரிஸ்.
Q33. சீக்கியர்களின் அன்றாட நடைமுறை கோட்பாட்டு நூலின் பெயர் என்ன?
ரெஹத் மர்யாதா.
Q34. சீக்கியர்கள் சாதாரணமாக வணக்கம் என்பதை எவ்வாறு அழைப்பர்?
சத்ஸ்ரீ அகால்.
Q35. சீக்கியர்களின் "வாஹே குரு" “Wahe Guru” என்ற தொடரின் பொருள் என்ன?
மேன்மையான கடவுள்.
Q36. அமிர்தசரஸ் பொற்கோவிலை தாக்கி முழுமையாக சேதப்படுத்திய ஆப்கான் மன்னர் யார்?
அஹமது ஷா அப்தாலி.
Q37. அமிர்தசரஸ் பொற்கோவில், யாருடைய உதவியால், எப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது?
1760ல், மன்னர் ரஞ்சித் சிங் உதவியுடன்.
Q38. "ஷேர் எ பஞ்சாப்" “Sher-e-Punjab” எனப்பட்டவர் யார்?
மகாராஜா ரஞ்சித் சிங்.
Q39. அமிர்தசரஸ் பொற்கோவிலில் உள்ள குளத்திற்கு என்ன பெயர்?
அம்ரித் சரோவர்.
Q40. சீக்கியர்களின் பல பண்டிகைகள் யாவை?
தீபாவளி, குருபார்ப், வைஷாகி, ஹோலி மொஹல்லா.
Q41. தீபாவளி சீக்கியர்களால் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
Q42. சீக்கியத்தில் குரு பூரப் எனப்படுவது என்ன பண்டிகை?
10 சீக்கிய மத குருக்களின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடுவது.
Q43. சீக்கியர்களின் வைஷாகி பண்டிகை என்பது என்ன?
புத்தாண்டு மற்றும் அறுவடை நாள். இந்து காலண்டரின் வைஷாக மாதத்தின் முதல் நாள்.
Q44. சீக்கியர்களின் "ஹோலி மொஹல்லா" என்பது என்ன பண்டிகை?
ஹோலி பண்டிகையின் அடுத்த நாள். ஆனந்த்பூர் என்ற இடத்தில் சீக்கியர்கள் ஒன்று கூடி, தங்களது சண்டை போடும் திறமைகளை வெளிப்படுத்துவது. சரன் கங்கா நதிக்கரையில், நைனா தேவி அம்மன் கோவிலில் நடத்தப்படும் விழா. இது ஒரு தேசிய விழாவாகக் கருதப்படுகிறது.
Q45. எந்த சீக்கிய மத குருவின் நான்கு மைந்தர்களும், முகலாயர்களால், உயிரோடு, சுவற்றில் நிறுத்தி, மேலே செங்கல் சுவர் எழுப்பிக் கொல்லப் பட்டார்கள்?
குரு கோவிந்த் சிங் -- அவுரங்க சீப் உத்தரவின் பேரில், சர் ஹிந்த் பகுதி நவாப் இந்தக் கொடுமையை நிகழ்த்தினார்.
Q46. சீக்கியர்கள் எந்த நாள்காட்டி (காலண்டர்) யை கடைப்பிடிக்கிறார்கள்?
நானக்க்ஷாஹி காலண்டர்.
Q47. சீக்கியர்கள் அணியும் அங்கியின் பெயர் என்ன?
சிரி பாவ் -- இது ஒரு மரியாதைக்குரிய அடையாளம்.
Q48. "பந்தி ச்சோர்" என்ற சீக்கிய பண்டிகை என்ன?
தீபாவளிக்கு அடுத்த நாள். 6 வது குரு ஹர் கோவிந்த், அமிர்தசரஸ் நகருக்கு, சிறைவாசத்திற்கு பிறகு (17வது நூற்றாண்டில், முகலாயர்களால்), திரும்பி வந்ததை, அனுசரிக்கும் நாள்.
Q49. 1699 வைஷாகி நாளில், எந்த சீக்கிய மத குரு, முதல் கல்சா வை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்?
தக்த் ஸ்ரீ தர்பார் சாஹிப் கேஸ்கர்ஹ் சாஹிப்.
Q50. சீக்கியத்தில் "கல்சா" “Khalsa” எனப்படுபவர் யார்?
எவர் ஒருவர், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தன்னைக் கடவுளின் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.
Q51. "கல்சா" இயக்கத்தை அறிமுகப்படுத்திய சீக்கிய மத குரு யார்?
10வது சீக்கிய மத குரு கோவிந்த் சிங் -- ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது.