Khub.info Learn TNPSC exam and online pratice

வில்வித்தை - ARCHERY

Q1. வில்வித்தை எந்த நாட்டின் தேசிய விளையாட்டாகும்?
பூட்டான்.
Q2. வில்வித்தை விளையாட்டு என்பது என்ன?
வில் அம்பு பயன், வேட்டைகளுக்காகவும், போரிலும் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வந்தது. இன்றைய காலக் கட்டத்தில் இதன் பயன் விளையாட்டில் மட்டுமே அதிகமாக உள்ளது. வில்லும் அம்பும் விஞ்ஞான ரீதியில் பல முன்னேற்றங்கள் பெற்று, ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி, உள் அரங்கத்திலோ அல்லது வெளியிலோ, தனிநபராகவோ அல்லது அணியாகவோ, பங்கு பெற்று எய்துவதே இன்றைய விளையாட்டு.
Q3. வில்வித்தை வீரரையும் நிபுணரையும் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கின்றனர்?
வீரர் - ARCHER;
நிபுணர் - TOXOPHILLITE.
Q4. வில்வித்தை ஒலிம்பிக் போட்டியில் எப்போது சேர்க்கப்பட்டது?
"1900 - பாரீஸ் ஒலிம்பிக்கில் முதலில் சேர்க்கப்பட்ட து. அதற்குப் பிறகு 1972 முனிச் ஒலிம்பிக்கிலிருந்து தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன."
Q5. வில்வித்தை போட்டியின் இலக்கு எவ்வாறு அமைக்கப்படுகிறது?
பொதுவாக ஒரு சதுர பலகை (போர்டு) மர இழை, நார் போன்ற பொருட்களால் செய்யப்பட்டு, அதில் ஒரு வண்ண வட்டம். அந்த வட்ட த்துக்குள், சம இடைவெளியுள்ள 10 வட்டங்கள் வரையப் பட்டிருக்கும். எய்தப்படும் அம்பு எந்த வட்ட இலக்கில் பாய்கிறதோ, அதற்கேற்றவாறு 1 முதல் 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும். பொதுவாக இலக்குப்பலகைகள், உள் அரங்கத்தில் 18 - 25 மீட்டர் தூரத்திலும், வெளிப்புறத்தில் 37 முதல் 91 மீட்டர் தூரத்திலும் அமைக்கப்படும்.
Q6. வில்வித்தையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் யாவை?
"வில் : விஞ்ஞான முன்னேற்றத்தினால், இப்போது பயனில் உள்ள அம்புகள் கப்பிகள் (Pulleys) பொருத்தப்பட்ட இயந்திர கருவிகளாகி விட்டன.
அம்பு : மரம், இழை நார்கள் (Fibre), அலுமினியம், கார்பன் இழை நார் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது. பொதுவாக 2.5 முதல் 3 அடி நீளமுடையதாக இருக்கும்."
Q7. தற்கால வில்வித்தைப் போட்டி, வில் அம்பை வடிவமைத்து பதிவு செய்து கொண்டவர் யார்?
ஹாலிஸ் வில்பர் ஆலென் - அமெரிக்கா - 1969.