Khub.info Learn TNPSC exam and online pratice

தடகளப்போட்டி - ATHLETICS

Q1. தடகள போட்டி என்பது என்ன?
ஓடுதல், தாண்டுதல், எறிதல் போன்ற வகை விளையாட்டுப் போட்டிகளைக் கொண்ட து.
Q2. ஓடுதல் போட்டி வகைகள் யாவை?
"1. வேக ஓட்டம் (SPRINT),
2. குறைவு தூரம் (MIDDLE DISTANCE),
3. வெகு தூரம் (LONG DISTANCE),
4. தொடர் ஓட்டம் (RELAY),
5. தடை ஓட்டம் (HURDLES),
6. பல இடர் ஓட்டம் (STEEPLE CHASE),
7. மாராத்தன் (MARATHON),
8. நடை (WALKING)."
Q3. வேக ஓட்ட போட்டிகளின் தூரங்கள் யாவை?
60,100,200 மற்றும் 400 மீட்டர் ஓட்டங்கள். இவற்றில் 60 மீட்டர் ஒரு காட்சி போட்டியாகவும், உள் அரங்கங்களிலும் நடத்தப்படுகிறது.
Q4. குறைவு தூர ஓட்டம் (MIDDLE DISTANCE) ஓட்டப்பந்தயங்கள் யாவை?
800, 1500, 3000 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள்.
Q5. வெகு தூர ஓட்டம் (LONG DISTANCE) பந்தயங்கள் யாவை?
5000, 10000 மீட்டர் மற்றும் மராத்தான் 42 கி.மீ. தடைகள் இல்லாத நேர் ஓட்டப் போட்டிகள்.
Q6. பல இடர் ஓட்டம் (STEEPLE CHASE) பந்தயம் என்பது என்ன?
இந்தப் பந்தயம் பொதுவாக 3000 மீட்டர். இதில் வீர ர்கள், ஓடுதளத்தின் குறுக்கே வைக்கப்பட்டு இருக்கும் தடைகளைத் தாண்டியும் (பொதுவாக மரத்தால் ஆனவை) நீர்த்தொட்டிகளில் ஓடியும் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க வேண்டும்.
Q7. தொடர் ஓட்டம் (RELAY) என்பது என்ன?
"ஒரு குறிப்பிட்ட தூரத்தை, ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் (பொதுவாக 4 பேர்) தொடராக ஓடி கடக்க வேண்டும்.
உதாரணமாக 400 மீட்டர் பந்தயத்தில் 4 பேர் பங்கு பெறுவார்கள். இந்த ஓட்டத்தொடர் துண்டிக்கப்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு வீர்ரும் ஒரு மரம் அல்லது நார் இழையால் செய்யப்பட்ட, சுமார் ஒரு அடி நீளம் கொண்ட உருளைக் கொம்பை கையில் கொண்டு, குறிப்பிட்ட தூரம் ஓடி, அதற்கு மேல் குறிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் (Exchange Zone) அடுத்த வீரரிடம் அந்த கொம்பை கொடுத்து ஓட வைக்க வேண்டும்.
இந்த ஓட்டம் பொதுவாக 4 x 100 (400 மீட்டர்); 4 x 200 (800 மீட்டர்) மற்றும் 4 x 400 (1600 மீட்டர்) பந்தயங்களாக நடத்தப்படுகிறது."
Q8. தடை ஓட்டம் (HURDLES RACE) என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட தூரத்தை, ஓடுகளத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் வைக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டி ஓடி இலக்கை அடைவார்கள். இந்த தடைகள் பொதுவாக 110, 200 மற்றும் 400 மீ ஓட்டமாக ஆண்களுக்கும், 100 மீ ஓட்டம் பெண்களுக்கும் நடத்தப்படுகிறது.
Q9. மாராத்தான் ஓட்டம் என்பது என்ன? இதன் தூரம், தற்போது, எப்போது எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
வெகு தூர ஓட்டம், அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் 42+ கிமீ-ம், மற்ற போட்டிகளில் 21 கி.மீ, 10 கி.மீ என ஓட்டப்பந்தயம்.
இந்த போட்டி பொதுவாக, அரங்கத்தின் வெளியே சாலைகள் வழியாக நடத்தப்படுகிறது. 1908க்கு முன்பாக இது 25 மைலாக இருந்தது.
1908 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது இந்தப் போட்டி 26.218 மைல்/42.195 கி.மீ. என நிர்ணயிக்கப்பட்டது. காரணம், பந்தயம் முடியும் இடம் இங்கிலாந்து ராணியின் அரண்மனைக்கு எதிராக, ராணியும் அவரது குடும்பமும் பார்க்கும் வசதியாக அமைக்கப்பட்டது.
இதுவே, 1924 பாரீஸ் ஒலிம்பிக்கிலிருந்து தொடர்கிறது.
Q10. மாராத்தான் போட்டிகள் ஒலிம்பிக்கில் எப்போது சேர்க்கப்பட்டது?
" ஆண்கள் - 1896 - ஏதென்ஸ், க்ரீஸ்.
பெண்கள் - 1984 -லாஸ் எஞ்செல்ஸ், அமெரிக்கா."
Q11. மாராத்தன் போட்டியில் மிகவும் புகழ்பெற்றவர் யார்?
ஹெய்ல் கெப்ர் செலாஸ்ஸி, எத்தியோப்பியா.
Q12. மராத்தன் போட்டியில் மிகவும் பழமையானது எது?
பாஸ்டன் - 1897ல் தொடங்கி 119 வருடங்களாக நடைபெறுகிறது (2015 நிலையில்).
Q13. நடைப்போட்டிகள் நடத்தப்படும் தூரம் என்ன?
பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் 20 கி.மீ.
Q14. எறிதல் போட்டிகள் என்பது என்னென்ன?
குண்டு எறிதல், அம்புகோல் (ஈட்டி) எறிதல், வட்டு எறிதல், சுத்திகுண்டு எறிதல்.
Q15. குண்டு எறிதல் போட்டியில், குண்டு (இரும்பு) எடை என்ன?
"குண்டு எறிதல் : ஒரு வட்டத்துக்குள்ளிருந்து வட்டத்தின் விட்டம் - 2.135 மீ / 7 அடி.
இரும்பு குண்டு எடை - ஆண்கள் - 7.26 கி.கி / 16 பவுண்டு;
பெண்கள் - 4 கிகி/8.82 பவுண்டு."
Q16. சுத்தி குண்டு (HAMMER THROW) எறிதல் என்பது என்ன?
ஒரு இரும்பு குண்டு (ஆண் - 7.257 கிகி; பெண் - 4 கிகி) ஒரு இரும்பு நீள் கம்பி (3 அடி 11 ¾ அங்குலம் - ஆண்; 3 அடி 11 அங்குலம் - பெண்) யுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இதை வீரர்கள் ஒரு வட்டத்திற்குள்ளிருந்து, ஓரிரண்டு சுற்றுகள் எடுத்து எறிவதே இந்த விளையாட்டு.
Q17. சுத்தி குண்டு எறிதல் எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட து?
"ஆண் - 1900 - பாரீஸ், ஃப்ரான்ஸ்
பெண் - 2000 - சிட்னி, ஆஸ்திரேலியா."
Q18. ஈட்டி எறிதல் என்பது என்ன? அதன் அளவுகள் என்ன? (JAVELIN)
ஈட்டியைப் போன்ற ஒரு கூரான கொம்பு கார்பன் இழை நார் அல்லது இழை நார் (Fibre) உலோக கூரான முனையுடன் - ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து தூக்கி எறிதல்.
ஈட்டியின் அமைப்பு :
ஆண் - நீளம் - 270 செமீ;
எடை - 900 கிராம், பெண் -
Q19. வட்டு குண்டு (DISCUSS) எறிதல் என்பது என்ன?
ஒரு வட்ட வடிவிலான வட்டு (எடை - ஆண் ; 2கிகி; பெண் - 1 கிகி) சுமார் 8.2 அடி விட்டம் கொண்ட வட்ட்த்திலிருந்து எறிதல்.
Q20. தாண்டுதல் போட்டிகள் யாவை?
"1. உயரத் தாண்டுதல்
2. தடி ஊன்றி தாண்டுதல்,
3. நீளம் தாண்டுதல்,
4. மூன்று நிலை நீளம் தாண்டுதல்."
Q21. உயரத் தாண்டுதல் என்பது என்ன?
செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள இரண்டு கொம்புகளுக்கிடையில், கிடைமட்ட்த்தில் (Horizontal), ஒரு கொம்பு, தகுதி உயரத்தில் (Qualifying mark) வைக்கப்படும். அதை வீர ர்கள் தாண்ட, உயரம் 2 செமீ அளவில் உயர்த்தப்படும். இவ்வாறாக அதிக உயரம் தாண்டுபவரே வெற்றி அடைவார். சாதனைக்காக இந்த உயரம் 1செமீ அளவில் ஏற்றப்படும்.
Q22. உயரம் தாண்டுதலில் கடைப்பிடிக்கப்படும் மிகப்புகழ் பெற்ற தாண்டும் முறை என்ன?
"Fosbury Flop" - அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக் கழகத்தின் DICK FOSBURY என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, பிரபலமாகி, இன்று முழுமையாக பயனில் உள்ளது.
இந்த முறையில் உயரம் தாண்டும் வீர ர்களின் முதுகுப்புறம் கிடைமட்ட கொம்பின் மேல் படாமல் தாண்டி, வைக்கப்பட்டுள்ள மெத்தை மீது விழுவார்கள்.
Q23. நீளம் தாண்டுதல் என்பது என்ன?
ஒரு நீளமான ஓடு தடத்தில் ஓடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடி வைத்து (TAKE OFF BOARD) தாண்டி மண் அல்லது மரத்தூள் நிரப்ப்ப்பட்ட பள்ளத்தில் குதிக்க வேண்டும். தகுதி அளவைத் (QUALIFYING MARK) தாண்டக்கூடிய வீரர்கள் மட்டுமே பெரிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 3 வாய்ப்புகள் தாண்டுவதற்கு அனுமதிக்கப்படுவர்.
Q24. நீளம் தாண்டுதல் எப்போது ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டது?
"ஆண்கள் - 1896 - ஏதென்ஸ், க்ரீஸ்.
பெண்கள் - 1928 - ஆம்ஸ்டெர்டாம், நெதர்லாந்து."
Q25. நீளம் தாண்டுதலில் மிகப்பெரிய சாதனை புரிந்தவர் யார்?
பாப் பீமோன், அமெரிக்கா - 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்ஸில் 8.90 மீ தாண்டி உலக சாதனைப் படைத்தார். இந்த சாதனையை, 1991ல் ஜப்பான் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீர ர் மைக் பவெல் 8.95 மீ தாண்டி சாதனை படைத்த து இன்றும் நிலைத்துள்ளது.
8 மீ நிலையை முதலில் தாண்டியவர் ஜெஸ்ஸி ஓவென்ஸ் அமெரிக்கா 1935 - 8.13 மீ.
Q26. மூன்று நிலை நீளம் தாண்டுதல் (TRIPLE JUMP) என்பது என்ன?
இதுவும் நீளம் தாண்டுதலே. ஆனால், இதில் வீர ர்கள், இரு முறை ஒற்றைக் கால் ஊன்றி தாண்டி, மூன்றாவது நிலையில் இரட்டைக் கால்களாலும் குறிக்கப்பட்ட பள்ளத்தில் குதிப்பார்கள்.
Q27. மூன்று நிலை நீளம் தாண்டுதல் ஒலிம்பிக்கில் எப்போது சேர்க்கப்பட்டது?
"ஆண்கள் - 1896 - ஏதென்ஸ், க்ரீஸ்.
பெண்கள் - 1996 - அட்லாண்டா, அமெரிக்கா."
Q28. கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் (POLE VAULT) என்பது என்ன?
இழை நார் (FIBRE) ஆல் செய்யப்பட்டு, நன்கு வளைந்து கொடுக்கும் கொம்பின் உதவியால் மிக உயரம் தாண்டுதல். அந்த கொம்பு, உயர் ரக போட்டிகளில் பொதுவாக 15 முதல் 17.5 அடி நீளம் உடையதாக இருக்கும். உயரம் தாண்டுதலின் இதர விதிகள் இதற்கும் பொருந்தும்.
Q29. கோல் ஊன்றி தாண்டுதல் ஒலிம்பிக்கில் எப்போது சேர்க்கப்பட்டது?
"ஆண்கள் - 1896 - ஏதென்ஸ், க்ரீஸ்.
பெண்கள் - 2000 - சிட்னி, ஆஸ்திரேலியா."
Q30. கோல் ஊன்றி தாண்டுதலில் மிகவும் புகழ்பெற்ற வீரர் யார்?
செர்ஜி புப்கா, சோவியத் யூனியன் - 6 மீட்டருக்கு மேல் தாண்டிய முதல் வீர ர். 1993ல் உக்ரைனில் 6.15 மீட்டர் தாண்டி சாதனை படைத்தார். இந்த சாதனையை ஃப்ரான்ஸ் நாட்டு வீர ர் ரெனாடு லேவில்லெனி 6.16மீ தாண்டி உடைத்தார்.
Q31. கோல் ஊன்றி தாண்டுதலில் சாதனைகள் பல படைத்துள்ள புகழ்பெற்ற பெண் வீரர் யார்?
யெலனா இசின்பயேவா, ரஷ்யா.
Q32. பல தடகளப் போட்டிகள் கொண்ட போட்டிகள் யாவை?
"1. ட்ரையத்லான் (TRIATHLON) :
மூன்று போட்டிகள் - நீச்சல் (1500 மீ), சைக்கிள் (40கி.மீ) மற்றும் ஓட்டம் (10கி.மீ) தொடராக நடத்தக்கூடிய போட்டி. 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. ஹெப்டாத்லான் (HEPTATHLON) :
ஆண், பெண் இருபாலருக்கும் 7 போட்டிகள் - 1. 100மீ, 2. 200 மீ, 3. 800 மீ, 4. உயரம் தாண்டுதல், 5. நீளம் தாண்டுதல், 6. குண்டு எறிதல் மற்றும் 7. ஈட்டி எறிதல் - ஆகிய போட்டிகள் கொண்டவை. இந்த போட்டிகள் 2 நாட்களில், சிறிய இடைவெளிகளில், நட த்தி முடிக்கப்படும். இந்த போட்டி 1970ல் ஆண்களுக்கும், 1984ல் பெண்களுக்கும் ஒலிம்பிக்கில் சேர் க்கப்பட்டது. புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி வீரர் நிச்சயிக்கப்படுகிறார்.
3. டெக்கத்லான் (DECATHLON) :
ஆண்களுக்கு மட்டும் 10 போட்டிகள் கொண்ட ஒரு போட்டி.
முதல் நாள் : 100 மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் மற்றும் 400 மீ ஓட்டம்.
இரண்டாம் நாள் : 110 மீ தடை ஓட்டம், வட்டு எறிதல், கோல் ஊன்றி தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் 1500 மீ ஓட்டம்.
1912 ஸ்டாக் ஹோம், ஸ்வீடன் ஒலிம்பிக்ஸில் அறிமுகப்படுத்தப் பட்டது. புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிகள் நிச்சயப்படுத்தப் படுகின்றது."
Q33. டெக்கத்லான் போட்டியில் மிகவும் புகழ்பெற்ற வீரர் யார்?
டேலி தாம்சன், பிரிட்டன்.
Q34. தடகள போட்டிக்கு நடத்தப்படும் உலகின் முக்கியமான போட்டிகள் யாவை?
"1. கோடை ஒலிம்பிக் :
உலகின் மிகப் பழமையான போட்டி. தற்கால் ஒலிம்பிக் 1896ல் ஏதென்ஸ் (க்ரீஸ்) நகரில் தொடங்கி, 4 வருட இடைவெளியில் தொடர்ந்து (1916, 1940, 1944ல் உலகப் போரினால் நட்த்தப்படவில்லை) நட்த்தப்படுகிறது. 2016 போட்டிகள் டோக்யோ, ஜப்பானிலும் நடைபெற உள்ளது.
2. குளிர்கால ஒலிம்பிக் :
நான் கு வருடங்களுக்கு ஒரு முறை, பனிப் பிரதேசங்களில், பனியில் சில வீர தீர சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. 1924ல் சாமோனிக்ஸ், ஃப்ரான்ஸ் என்ற இடத்தில் தொடங்கியது. 2018ல் பியாங்சேங், தென் கொரியாவிலும், 2022ல் பெய்ஜிங், சீனா விலும் நடக்க உள்ளது.
3. உலக சாம்பியன்ஷிப் (WORLD CHAMPIONSHIP) :
ஒலிம்பிக் போட்டிகளுக்கடுத்த ஒரு மிகப்பெரிய தடகளப் போட்டி, 1983ல் ஹெல்சிங்கி, ஃபின்லாந்தில் தொடங்கிய இந்த போட்டி 2 வருடங்களுக்கு ஒரு முறை நட்த்தப்படுகிறது. 2017ல் லண்டனிலும், 2019ல் தோஹாவிலும், 2021ல் ஈகுவின், அமெரிக்காவிலும் நடக்க உள்ளது.
4. IAAF - கோல்டன் லீக் (GOLDEN LEAGUE) :
1998ல் தொடங்கப்பட்டு, வருடந்தோறும், உலகின் புகழ்பெற்ற வீரர்களுக்கிடையில் நட த்தப்படும் பரிசுத்தொகை போட்டி சர்வதேச தடகள சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது.
5. ஐரோப்பிய போட்டிகள் (EUROPEAN GAMES) :
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் தடகளப்போட்டி.
6. ஆசிய போட்டிகள் (ASIAN GAMES) :
நான் கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் ஒரு போட்டி.
7. ஆப்பிரிக்க போட்டிகள் (AFRICAN GAMES) :
1979 முதல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் போட்டி.
8. பான் அமெரிக்கன் போட்டி (PAN AMERICAN GAMES) : அமெரிக்க நாடுகளுக்கிடையில், 1979 முதல், நான் கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தடகளப் போட்டி.
9. காமன்வெல்த் போட்டிகள் (COMMON WEALTH):
நான்காண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் நாடுகளுக்கிடையில் நடத்தப்படும் தடகளபோட்டி.
10. சாஃப் போட்டிகள் (SOUTH ASIAN FEDERATION GAMES) :
SOUTH ASIAN GAMES என அழைக்கப்படுகிறது. தெற்கு ஆசிய நாடுகளுக்கிடையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நட த்தப்படும் ஒரு போட்டி."
Q35. ஆசியன் போட்டிகள் நடந்த இடங்கள் யாவை?
"1. 1951 - டெல்லி, இந்தியா.
2. 1954 - பிலிப்பைன்ஸ்.
3. 1958 - டோக்யோ, ஜப்பான்.
4. 1962 - ஜாகர்தா, இந்தோனேசியா.
5. 1966 - பாங்காங், தாய்லாந்து.
6. 1970 - பாங்காங், தாய்லாந்து.
7. 1974 - தெஹ்ரான், இரான்.
8. 1978 - பாங்காங், தாய்லாந்து.
9. 1982 - டெல்லி, இந்தியா.
10. 1986 - சியோல், தென்கொரியா.
11. 1990 - பெய்ஜிங், சீனா.
12. 1994 - ஹிரோஷிமா, ஜப்பான்.
13. 1998 - பாங்காங், தாய்லாந்து.
14. 2002 - பூசான், தென்கொரியா.
15. 2006 - தோஹா, கட்டார்.
16. 2010 - குவாங்ஸூ, சீனா.
17. 2014 - இன்சியான், தென்கொரியா.
18. 2018* - ஜாகர்தா, இந்தோனேசியா.
19. 2022* - ஹூவாங்ஸூ, சீனா.
* - நடக்க இருக்கும் இடங்கள்."
Q36. எந்த நாடு அதிகமுறை ஆசியப் போட்டிகளை நடத்தியுள்ளது?
தாய்லாந்து - பாங்காங் நகரத்தில், 1966, 1970, 1978, 1998.
Q37. இந்தியாவில் எத்தனை முறை ஆசிய போட்டிகள் நடைபெற்றது?
இருமுறை -யும் டெல்லி - 1951, 1982.
Q38. தெற்கு ஆசிய போட்டிகள் நடந்த இடங்கள் யாவை?
எண்ஆண்டுநடந்த இடம்
1.1984காத்மண்டு, நேபாளம்.
2.1985தாக்கா, வங்காள தேசம்.
3.1987கொல்கத்தா, இந்தியா.
4.1989இஸ்லாமாபாத், பாகிஸ்தான்.
5. 1991கொழும்பு, ஸ்ரீலங்கா.
6.1993தாக்கா, வங்காள தேசம்.
7.1995சென்னை, இந்தியா.
8.1999காத்மண்டு, நேபாளம்.
9.2004இஸ்லாமாபாத், பாகிஸ்தான்.
10.2006கொழும்பு, ஸ்ரீலங்கா.
11.2010தாக்கா, வங்காள தேசம்.
12.2016கவுஹாத்தி, இந்தியா.
13.2019காத்மண்டு, நேபாளம் - நடக்க உள்ளது.
அனைத்து போட்டிகளிலும் இந்தியாவே ஒட்டு மொத்த வெற்றி பெற்றுள்ளது.
Q39. காமன்வெல்த் போட்டிகள் எப்போது துவங்கியது?
1930 ல் தொடங்கி, "ப்ரிட்டிஷ் ராஜ்ய போட்டிகள்" என அழைக்கப்பட்ட து.
1954-1966 வரை "ப்ரிட்டிஷ் ராஜ்ய காமன்வெல்த் போட்டிகள்" என அழைக்கப்பட்டது.
பிறகு 1970, 1974ல் "ப்ரிட்டிஷ் காமன்வெல்த் போட்டிகள்" என அழைக்கப்பட்டு, 1978 முதல் "காமன்வெல்த் போட்டிகள்" என அழைக்கப்படுகிறது.
Q40. காமன்வெல்த் போட்டிகள் நடந்த இடங்கள் யாவை?
எண்ஆண்டுநடந்த இடம்
1.1978எட்மண்டன், கேனடா.
2.1982ப்ரிஸ்பேன், ஆஸ்திரேலியா.
3.1986எடின்பர்க், ஸ்காட்லாந்து.
4.1990ஆக்லாந்த், நியூசிலாந்து.
5.1994விக்டோரியா, கேனடா.
6.1998கோலாலம்பூர், மலேசியா.
7.2002மான்செஸ்டர், ஐக்கிய ராஜ்யம்.
8.2006மெல்போர்ன், ஆஸ்திரேலியா.
9. 2010டெல்லி, இந்தியா.
10.2014க்ளாஸ்கோ, ஸ்காட்லாந்து..
11.2018*கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா.
12.2022*டப்ளின், தென் ஆப்பிரிக்கா.
* - நடக்கவுள்ள போட்டிகள்.
Q41. ஆசிய போட்டிகள் எப்போதாவது நிராகரிக்கப்பட்டுள்ளதா?
"இரண்டு முறை - 1. 1978ல் நைஜீரியா.
2. 1982ல் பிரிட்டனின் தென் ஆப்பிரிக்க தொடர்பை எதிர்த்து 36 நாடுகள் நிராகரித்தது."
Q42. ஐரோப்பிய போட்டிகள் எப்போது தொடங்கி எங்கெல்லாம் நடந்துள்ளன?
எண்ஆண்டுநடந்த இடம்
1.1934டூரின், இத்தாலி.
2.1938 பாரீஸ், ஃப்ரான்ஸ்.
3. 1946 ஆஸ்லோ, நார்வே.
4. 1950 ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்.
5. 1954 பெர்ன், ஸ்விட்சர்லாந்து.
6. 1958 ஸ்டாக் ஹோம், ஸ்வீடன்.
7. 1962 பெல்க்ரேட், யூகோஸ்லெவியா.
8. 1966 புடாபெஸ்ட், ஹங்கேரி.
9. 1970 ஹெல்சிங்கி, ஃபின்லாந்து
10. 1974 ரோம், இத்தாலி.
11. 1978 ப்ரேக், செக்கோஸ்லோவாக்கியா.
12. 1982 ஏதென்ஸ், க்ரீஸ்.
13. 1986 ஸ்டட்கர்ட், மேற்கு ஜெர்மனி.
14. 1990 ஸ்ப்லிட், யூகோஸ்லேவியா.
15. 1994 ஹெல்சிங்கி, ஃபின்லாந்து
16. 1998 புடாபெஸ்ட், ஹங்கேரி.
17. 2002 முனிச், ஜெர்மனி.
18. 2006 காத்தென்பர்க், ஸ்வீடன்.
19. 2010 பார்ஸிலோனா, ஸ்பெயின்.
20. 2014 ஹெல்சிங்கி, ஃபின்லாந்து
21. 2018 பெர்லின், ஜெர்மனி. (நடக்கவுள்ளது)"
Q43. உலக தடகளப் போட்டியில் - WORLD CHAMPIONSHIP OF ATHLETICS - பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் யார்?
அஞ்சு பாபி ஜார்ஜ் - 2003 உலக தடகள போட்டி. செயின் டெனிஸ், ஃப்ரான்ஸ் - நீளம் தாண்டுதல் - 6.7 மீ - வெண்கலப் பதக்கம்.
Q44. வேக ஓட்டத்திற்கு (SPRINT) உதவும் வகையில், ஓட்டத்தை வேகமாகத் துவக்க உதவும் ஒரு கருவி என்ன, எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1929ல் ஆஸ்திரேலியாவின் சார்லி பூத் என்பவரால் (அவருடைய தந்தையின் உதவியுடன்) கண்டுபிடிக்கப்பட்ட STARTING BLOCK என்ற உபகரணம். இதன் மூலம் வேக ஓட்ட வீரர்களுக்குத் தேவையான உந்து (PUSH) கிடைக்கிறது.
Q45. காமன் வெல்த் போட்டிகள் தொடங்கக் காரணமாயிருந்தவர் யார்?
ஆஸ்ட்லி கூப்பர் (கிறித்தவ மத போதகர்), ஐக்கிய ராஜ்யம், இவர் 1891லேயே இந்த போட்டி நட த்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்தார். இருப்பினும் 1930ல் தான் தொடங்கியது.
Q46. காமன்வெல்த் போட்டியில் "சிறந்த வீரர்" விருதின் பெயர் என்ன?
டேவிட் நிக்ஸன் விருது.
Q47. காமன்வெல்த் போட்டியில் இடைவெளி இல்லாது பங்கேற்ற நாடுகள் எவை?
ஆஸ்திரேலியா, கேனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ்.