Khub.info Learn TNPSC exam and online pratice

ஒலிம்பிக் போட்டிகள்

Q1. பழங்கால ஒலிம்பிக் போட்டிகள் எப்போது துவங்கின?
கி.மு. 776. இந்த போட்டிகள் ரோமர்களின் திருவிழாக்களில் ஒன்றாக இருந்தது.
Q2. ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்திய ரோம மன்னர் யார்?
தியோடோசியஸ் I - கி.பி. 394ல்.
Q3. ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் எப்போது துவங்கியது?
1896ல் க்ரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் துவங்கியது. இதிலிருந்து தான் ஒலிம்பிக் போட்டிகள் கணக்கெடுத்து தற்கால ஒலிம்பிக் - Modern Olympics - எனப்படுகிறது.
Q4. ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் தொடங்கக் காரணமாயிருந்தவர் யார்?
பியரி டி கூபெர்டின் (Pierre de Coubertin) - ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
Q5. ஒலிம்பிக் கொடி மற்றும் சின்னம் வடிவமைத்தவர் யார்?
பியரி டி கூபெர்டின், ஃப்ரான்ஸ்.
Q6. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கொடி எவ்வாறு அமைந்திருக்கும்?
வெள்ளை பின்னணியில், ஒன்றுக்கொன்று இணைந்து (பின்னி) இருக்கும் 5 வட்டங்கள் - 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில். 1913 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள து. 3 x 2 மீட்டர் அளவில் உள்ள கொடியின் நடுவில் இந்த சின்னம் பொருத்தப்பட்டிருக்கும்.
Q7. ஒலிம்பிக் சின்ன வட்டங்களின் நிறம் என்ன? அவை எதைக் குறிக்கும்?
நீலம் - ஐரோப்பா, மஞ்சள் - ஆசியா, கருப்பு - ஆப்பிரிக்கா, சிகப்பு - அமெரிக்கா, பச்சை - ஆஸ்திரேலியா.
Q8. ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் வாக்கியம் என்ன?
"CITIUS - SWIFTER - வேகம்
ALTIUS - HIGHER - உயரம்.
FORTIUS - STRONGER -
1897ல் கிறித்தவ பாதிரியார் டிடான் (DIDON) என்பவரால் முன் வைக்கப்பட்டு 1920 ஆன்ட்வெர்ப் (பெல்ஜியம்) ஒலிம்பிக் முதல் அனுசரிக்கப்படுகிறது. இவர் பியரி டி கூபெர்டின் நண்பர்."
Q9. ஒலிம்பிக் போட்டியின் பிரமாணத்தை எழுதியவர், எப்போது முதல் அறிமுகப்படுத்தப்பட்ட து?
பியரி டி கூபெர்டின் - 1928 ஆம்ஸ்டெர்டாம், நெதர்லாந்து ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டு வீரர் இந்த பிரமாணத்தை அனைத்து வீரர்கள் சார்பாக வாசிப்பார்.
Q10. ஒலிம்பிக் ஜோதி (தீபம்) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1936 - பெர்லின், ஜெர்மனி ஒலிம்பிக்.
Q11. ஒலிம்பிக் போட்டியின் பொம்மை தூதுவர் (MASCOT) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1972, முனிச், ஜெர்மனி - வால்டி (WALDI) என்ற ஒரு நாய் வடிவத்தில் அமைக்கப்பட்ட பொம்மை.
Q12. 1896 முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படாத ஆண்டுகள் எவை?
1916, 1940, 1944 - 3 போட்டிகள் - முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக.
Q13. ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பதக்கம் தவிர்த்து, வேறு என்ன விருதுகள் வழங்கப்படுகின்றன?
"1. ஒலிம்பிக் கோப்பை :
1906ல் இருந்து, விளையாட்டின் மேம்பாட்டுக்காக பாடுபடும் ஒரு அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
2. சர் தாமஸ் ஃபியர்ன்லி கோப்பை :
இதே பெயர் கொண்ட ஒலிம்பிக் குழு உறுப்பினரால் நிறுவப்பட்ட இந்த கோப்பை, 1950லிருந்து, ஒலிம்பிக் நட்த்தப்படும் நாட்டில், ஒலிம்பிக் விளையாட்டுக்கு சீரிய பணி ஆற்றிய ஒரு அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
3. மொஹமத் தோஹேர் கோப்பை :
இதே பெயர் கொண்ட ஒலிம்பிக் குழு உறுப்பினரால் நிறுவப்பட்ட இந்த கோப்பை, சிறந்த விளையாட்டு வீர ருக்கு அளிக்கப்படுகிறது.
4. கவுண்ட் ஆல்பெர்டோ போனகோசா விருது :
COUNT ALBERTO BONACOSSA TROPHY - இத்தாலிய தேசிய ஒலிம்பிக் கமிட்டியால், இதே பெயர் கொண்ட உறுப்பினர் ஞாபகார்த்தமாக, 1954 முதல், தேர்வு செய்யப்படும் நாட்டு ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு அளிக்கப்படுகிறது.
5. டோக்யோ விருது :
டோக்யோ நகர மக்களால், ஒலிம்பிக் போட்டியின் போது, நன்னடத்தையின் அடிப்படையின் பேரில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரருக்கு அளிக்கப்படும் விருது."
Q14. சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் எப்போது துவங்கப்பட்டது?
1894 பியரி டி கூபெர்டின் மற்றும் திமெத்ரியஸ் விக்கோலஸ் என்பவரால் தொடங்கப்பட்ட து. இதன் முதன் தலைவராக திமெத்ரியஸ் விக்கோலஸ் தேர்வு செய்யப்பட்டார்.
Q15. சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லுசான் (LUSANNE) ஸ்விட்சர்லாந்து.
Q16. சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் யார்?
எண் பெயர் நாடு வருடம்
1. திமெத்ரியஸ் விகோலாஸ் க்ரீஸ் 1894 - 1896
2. பியரி டி கூபெர்டின் ஃப்ரான்ஸ் 1896 - 1925
3. ஹென்றி டி பேலட் லட்டூர ் பெல்ஜியம் 1925 - 1942
4. ஸிக்ஃப்ரூட் எட்ஸ்ட் ரோம் ஸ்வீடன் 1946 - 1952
5. ஆவெரி ப்ரண்டேஜ் அமெரிக்கா 1952 - 1972
6. கில்லானின் பிரபு அயர்லாந்து 1972 - 1980
7. ஜூவான் அண்டோனியோ சமரஞ்ச் ஸ்பெயின் 1980 - 2001
8. ஜேக்கிஸ் ரெக்கி பெல்ஜியம் 2001 - 2013
9. தாமஸ் பாக் ஜெர்மனி 2013 - "
       

Q17. இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் (Indian Olympic Association) எப்போது யாரால் துவங்கப்பட்டது?
1920, J.R.D. டாடா அவர்களால் தொடங்கப்பட்டது.
Q18. இந்தியா ஒலிம்பிக்கில் முதன்முதல் எப்போது பங்கு பெற்றது?
1920, ஆன்ட் வெர்ப், பெல்ஜியம்.
Q19. உலகில் ஒலிம்பிக் பதக்கத்தை முதல் முதலாக வென்ற/பெற்ற ஆண்/பெண் வீரர்கள் யார்?
"ஆண் - ஜேம்ஸ் கானொலி - அமெரிக்கா - 1896 - மூன்று நிலை நீளம் தாண்டுதல்.
பெண் - ஹலினா கோனோபேக்கா - போலந்து - 1928 - வட்டு எறிதல்."
Q20. ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை எங்கெங்கு நடைபெற்றுள்ளது?
"1. 1896 - ஏதென்ஸ் - க்ரீஸ் - 6.4.1896 - 15.4.1896 -
மன்னர் கான்ஸ்டாண்டின் தொடங்கி வைத்த இந்த போட்டியில் 13 நாடுகள் பங்கேற்றன.
2. 1900 - பாரீஸ் - ஃப்ரான்ஸ் - 14.5.1900 - 28.10.1900 -
முதன்முறையாக பெண்கள் பங்கேற்றனர். 24 நாடுகள் பங்கேற்பு.
3. 1904 - செயிண்ட் லூயிஸ் - அமெரிக்கா - 1.7.1904 - 23.11.1904 :
1. 12 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.
2. துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு உயிருள்ள புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.
3. முதல் முறையாக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் பரிசளிக்கப்பட்டன.
4. குத்துச் சண்டையும், டெக்கத்லான் (10 வகை போட்டிகள்) அறிமுகப்படுத்தப்பட்டது.
5. ஜார்ஜ் எய்ஸர் - இடது கால் கட்டையால் பொருத்தப்பட்டிருந்த போதிலும் 6 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
6. ஜார்ஜ் போஜ், அமெரிக்காவின் முதல் கருப்பு இன விளையாட்டு வீரர். 40 மீ ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார்.
4. 1908 - லண்டன் - 27.4.1908 - 31.10.1908.
1. 23 நாடுகள் பங்கேற்பு.
2. திறப்பு விழா நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
3. மராத்தான் ஓட்டத்தின் தூரம் 42.195கி.மீ-ஆக மாற்றி அமைக்கப்பட்டது.
4. அதிக நாட்கள் நீண்ட ஒலிம்பிக் - 187 நாட்கள்.
5. 1912 - ஸ்டாக்ஹோம் - ஸ்வீடன் - 6.7.1912 - 22.7.1912 :
1. 28 நாடுகள் பங்கேற்பு.
2. நாடுகளின் பெயர் கொண்ட பலகைகளுடன் வீரர்கள் அணிவகுப்பு.
3. முழுத் தங்க பதக்கங்கள் கடைசி முறையாக வழங்கப்பட்டது.
4. மின்னணு நேரங்காட்டி மற்றும் பொது மின் ஒலிபெருக்கி அறிமுகம்.
5. ஜார்ஜ் எஸ். பேட்டன் (இரண்டாம் உலகப் போரில் மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க தளபதி) பெண்டாத்லான் (5 போட்டிகளில்) பங்கேற்பு.
6. 1920 - ஆன்ட்வெர்ப், பெல்ஜியம் - 14.8.1920 - 12.9.1920 :
1. 29 நாடுகள் பங்கேற்பு.
2. ஒலிம்பிக் கொடியும், வீரர்களின் பிரமாணமும் அறிமுகம்.
3. இந்தியாவின் பங்கேற்பு.
7. 1924 - பாரீஸ், ஃப்ரான்ஸ் - 4.5.1924 - 27.7.1924 :
44 நாடுகள் பங்கேற்பு.
8. 1928 - ஆம்ஸ்டெர்டாம், நெதர்லாந்து - 28.7.1928 - 12.8.1928 :
1. 46 நாடுகள் பங்கேற்பு.
2. ஒலிம்பிக் தீபம் அறிமுகம்.
3. தடகள போட்டிகளில் முதன்முறையாக பெண்கள் பங்கேற்பு.
4. முதன்முதலாக விளம்பரம் (Advertisements ) அறிமுகம்.
5. இந்த ஒலிம்பிக்கிலிருந்து ""கோடை ஒலிம்பிக்"" என அழைக்கப்பட்டது.
6. இந்தியா முதல் தங்கப் பதக்கம் - ஹாக்கி வென்றது.
9. 1932 - லாஸ் ஏஞ்செல்ஸ் - அமெரிக்கா - 30.7.1932 - 8.1.1932 :
1. 37 நாடுகள் பங்கேற்பு.
2. தானியங்கி நேரப்பதிவு, புகைப்பட முடிவு கணித்தல் அறிமுகம்.
3. வெற்றி வீர ர்கள் மேடை, தேசிய கீதம் ஒலிபரப்பு அறிமுகம்.
4. ஒலிம்பிக் கிராமங்கள் கட்டுமான பணிகள் துவக்கம்.
10. 1936 - பெர்லின் - ஜெர்மனி - 1.8.1936 - 16.8.1936 :
1. 49 நாடுகள் பங்கேற்பு.
2. தொலைக்காட்சி ஒளிபரப்பு அறிமுகம்.
3. ஹிட்லர் போட்டிகளை துவக்கி வைத்தார்.
4. இந்த போட்டியின் சிறந்த வீரர் அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ் - 100, 200, 4 100 மீ தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் ( நான்கு) வென்றார்.
11. 1948 - லண்டன் - 29.7.1948 - 14.8.1948 :
1. 59 நாடுகள் பங்கேற்பு.
2. உலகப்போருக்கு காரணமான ஜெர்மனி மற்றும் ஜப்பான் அழைக்கப்படவில்லை.
3. கம்யூனிச நாடுகள் முதல் முறையாக பங்கேற்றன.
4. வேக ஓட்டத்துக்கு உதவும் உந்து கட்டைகள் (Starting blocks ) அறிமுகம்.
12. 1952 - ஹெல்சிங்கி - ஃபின்லாந்து - 19.7.1952 - 3.8.1952 :
1. 69 நாடுகள் பங்கேற்பு.
2. முதன் முறையாக ரஷ்யா பங்கு கொண்டது.
13. 1956 - மெல்போர்ன், ஆஸ்திரேலியா - 22.11.1956 - 8.12.1956 :
1. 67 நாடுகள் பங்கேற்பு.
2. முடிவு விழாவில், எல்லா நாட்டு வீரர்களும், வரிசைக் கிரமம் இல்லாமல், கலந்து அணி வகுப்பு நடத்தி, உலக ஒற்றுமையை அறிவுறுத்தும் வண்ணம் நடத்தினார். இந்த பழக்கம் தொடர்கிறது.
14. 1960 - ரோம், இத்தாலி - 25.08.1960 - 11.9.1960 :
1. 83 நாடுகள் பங்கேற்பு.
2. ஆப்பிரிக்காவின் முதல் கருப்பு இன வீரர் ஆபெப் பிக்கிலா, மராத்தான் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
15. 1964 - டோக்யா, ஜப்பான் - 10.10.1964 - 24.10.1964 :
1. 93 நாடுகள் பங்கேற்பு.
2. 6.8.1945 ஹிரோஷிமா நகரம் அணுகுண்டால் தாக்கப்பட்ட அன்று பிறந்த யொஷோ நோரி சக்காய் என்பவரால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
16. 1968 - மெக்ஸிகோ நகரம், மெக்ஸிகோ - 12.10.1968 - 27.10.1968 :
1. 112 நாடுகள் பங்கேற்பு.
2. ஒலிம்பிக் விளையாட்டு நடந்த இடங்களிலேயே இதுவே மிக உயரமான இடம் - 7349 அடி.
3. பெண்மை பரிசோதனை அறிமுகம்.
4. என்ரிகெட்டா பாஸிலியோ ENRIQUETA BASILIO, மெக்ஸிகோ. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய முதல் பெண்மணி.
5. உயரம் தாண்டுதலில் FOSBURY முறை அறிமுகம்.
6. ஊக்க மருந்து பிரயோக பரிசோதனை அறிமுகம்.
17. 1972 - முனிச், மேற்கு ஜெர்மனி - 26. 8. 1972 - 10.9.1972 :
1. 122 நாடுகள் பங்கேற்பு.
2. 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், அரபு பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
3. மார்க் ஸ்பிட்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர் ஏழு தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
18. 1976 - மான்ட்ரீல், கேனடா - 17.7.1976 - 1.8.1976 :
1. 92 நாடுகள் பங்கேற்பு.
2. இங்கிலாந்து ராணி எலிசபெத் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
3. நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட்டு தொடர்பு கொண்டிருந்ததால் 28 நாடுகள் போட்டிகளை நிராகரித்தன.
19. 1980 - மாஸ்கோ, ரஷ்யா - 19.7.1980 - 3.8.1980 :
1. 81 நாடுகள் பங்கேற்பு.
2. கம்யூனிச நாடுகளில் நடந்த முதல் ஒலிம்பிக்.
3. ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்ததை அடுத்து அமெரிக்கா உள்பட 63 நாடுகள் பங்கேற்கவில்லை.
4. இந்தியா ஹாக்கியில் தங்கம் வென்றது. இதற்கு பிறகு, ஹாக்கியில் எந்த பதக்கமும் ஒலிம்பிக்கில் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20. 1984 - லாஸ் ஏஞ்செலிஸ், அமெரிக்கா - 28.7.1984 - 12.8.1984 :
1. 141 நாடுகள் பங்கேற்பு.
2. 1980 ஒலிம்பிக் போட்டியை பல நாடுகள் நிராகரித்ததின் எதிரொலியாக ரஷ்யாவும் அதை சார்ந்த நாடுகள் மொத்தம் 13 - இந்த போட்டியை நிராகரித்தன.
3. பெண்களுக்கான மராத்தான் போட்டி அறிமுகம்.
21. 1988 சியோல், தென் கொரியா - 17.9.1988 - 2.10.1988 :
1. 159 நாடுகள் பங்கேற்பு.
2. வட கொரியா, க்யூபா, எத்தியோப்பிய நிராகரிப்பு,.
3. ஊக்க மருத்து பயன்படுத்தியதற்காக, முதல் முறையாக கேனடா நாட்டு வீரர் பென் ஜான்சன் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, இரண்டாவதாக வந்த அமெரிக்க வீரர் கார்ல் லூயிஸுக்கு அளிக்கப்பட்டது.
4. பெண்கள் ஜூடோ போட்டி அறிமுகம்.
22. 1992 - பார்சிலோனா, ஸ்பெயின் - 25.7.1992 - 9.8.1992 :
1. 172 நாடுகள் பங்கேற்பு.
2. உடல் ஊனமுற்ற ஒலிம்பிக் வீரர் அண்டோனியா ரெபெல்லோ, தீப்பந்தம் கொண்ட அம்பு செலுத்தி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
3. பாட்மிண்டன் - சிறகுப் பந்து விளையாட்டு அறிமுகம்.
3. 1996 - அட்லாண்டா -அமெரிக்கா - 19.7.1996 - 4.8.1996 :
1. 197 நாடுகள் பங்கேற்பு.
2. முகமது அலி (கோபியஸ் க்ளே) - உலகப் புகழ் பெற்ற குத்துசண்டை வீரர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார்.
24. 2000 - சிட்னி, ஆஸ்திரேலியா - 15.9.2000 - 1.10.2000 :
1. 200 நாடுகள் பங்கேற்பு.
2. கோல் ஊன்றி உயரத் தாண்டுதல், வாட்டர் போலோ, பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு.
3. ட்ராம்போலின், டேக் வான் டோ, மற்றும் சிங்க்ரனைஸ்டு டைவிங் போட்டிகள் சேர்க்கப்பட்டன.
4. இயன் தார்ப், ஆஸ்திரேலியா நீச்சல் போட்டிகளில் 5 தங்கப் பதக்கம் வென்றது.
25. 2004 - ஏதென்ஸ், க்ரீஸ் - 13.8.2004 - 29.8.2004 :
1. 201 நாடுகள் பங்கேற்பு.
2. இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்றார்.
26. 2008 - பெய்ஜிங், சீனா - 8.8.2008 - 24.8.2008 :
1. 204 நாடுகள் பங்கேற்பு.
2. சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
3. 3000 மீ தடை ஓட்டம் - ஸ்டீபிள் சேஸ் போட்டியின் முதன் முறையாக பெண்கள் பங்கேற்பு.
4. மைக்கேல் ஃபெல்ப்ஸ், அமெரிக்கா, நீச்சல் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றது பெரிய சாதனை. (இதற்கு முன்பாக மார்க் ஸ்பிட்ஸ் 7 தங்க பதக்கங்களை 1972 முனிச் ஒலிம்பிக்கில் வென்று சாதனை படைத்திருந்தார்).
27. 2012 - லண்டன், - 27.7.2012 - 12.8.2012 :
1. 204 நாடுகள் பங்கேற்பு.
2. எலிசபெத் ராணி போட்டிகளை துவக்கி வைத்தார்.
3. சவுதி அரேபியா, கட்டார் மற்றும் ப்ரூனே நாடுகளின் பெண் வீரர்கள் பங்கேற்பு - முதல் முறையாக.
4. பெண்கள் குத்துச் சண்டை முதன்முறையாக அறிமுகம்."
28. 2016-- ரியோ-டி-ஜெனீரோ -- ப்ரேசில் -- 5.8.2016 -- 21.5.2016
1.  கோடை ஒலிம்பிக்ஸின் மாஸ்காட் -- வினிசியஸ் - VINICIUS;  உடல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் மாஸ்காட் --  TOM - டாம். 
2.  207 ஒலிம்பிக் சங்கங்கள் பங்கேற்பு  -- 11000 வீரர்கள்  --  28 விளையாட்டுப் பிரிவுகள்  -- 306 பதக்கங்கள் தொகுப்பு --  33 விளையாட்டு அரங்கங்கள்  -- 5 நகரங்களில். 
3.  ஓலிம்பிக் ஜொதியை ஏற்றியவர் --  வாண்டர் லீ லிமா -- முன்னாள் மாராத்தன்  ஓட்ட வீரர் 
4.  இந்த போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் -- விர்ஜினியா த்ரேஷர் -- அமெரிக்கா -- துப்பாக்கி சுடுதல்.
5.  இந்த போட்டியின் உச்ச கட்டம்  
அ) ஜமைக்கா நாட்டின் தடகள வீரர் உசேன் போல்ட், 100மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்று, தனது 9வது தங்கப்பதக்கம் வென்று, 
      "உலகின் வேகமான வீரர்" என்ற பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். 
ஆ) அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ், நீச்சல் வீரர், இந்த போட்டியின் முடிவில், மொத்தம் 28 பதக்கங்களை வென்று (23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) 
      உலகிலேயே அதிகமான பதக்கங்களை வென்ற வீரர் என்ற பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். 
    உலகின் வேக வீரர் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.  
Q21. 2016 மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்/நாடுகள் எவை?
"2016 - ரியோ டி ஜெனிரோ, ப்ரேசில்,
2020 - டோக்யோ, ஜப்பான்."
Q22. ஒலிம்பிக் பதக்கங்கள் வடிவம், அளவு என்ன?
"வட்டம் - 3 மி.மீ கனம், 60 மி.மீ. விட்டம்,
தங்கம் : 92.5 சதவிகித வெள்ளி + 6 கிராம் தங்க முலாம்.
வெள்ளி : 92.5 சதவிகித வெள்ளி - மீதி வேறு உலோகம்.
வெண்கலம் : சுத்த வெண்கலம்."
Q23. எந்த ஒலிம்பிக் போட்டியில் குறைந்த எண்ணிக்கை நாடுகள் பங்கேற்றன?
1904 - செயிண்ட் லூயிஸ் - அமெரிக்கா - 12 நாடுகள்.
Q24. 1896 ஏதென்ஸ், க்ரீஸில் நடந்த முதல் ஒலிம்பிக் போட்டியை துவக்கி வைத்தவர் யார்?
மன்னர் கான்ஸ்டாண்டின்.
Q25. ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் கருப்பு இன வீரர் யார்?
ஜார்ஜ் போஜ், அமெரிக்கா - 1904, செயிண்ட் லூயிஸ்.
Q26. ஒரு கட்டைக் காலுடன் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களை வென்ற வீரர் யார்?
ஜார்ஜ் எய்சர் - அமெரிக்க - 1904 - செயிண்ட் லூயிஸ்.
Q27. எந்த ஒலிம்பிக்கில் கடைசி முறையாக முழு தங்கப் பதக்கம் பரிசு அளிக்கப்பட்ட து?
1912, ஸ்டாக் ஹோம், ஸ்வீடன்.
Q28. எந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக பெண் வீரர்கள் பங்கேற்றனர்?
1900, பாரீஸ், ஃப்ரான்ஸ்.
Q29. எந்த ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு, உயிருள்ள புறாக்கள், முதல் மற்றும் கடைசி முறையாக பயன்படுத்தப் பட்டது?
1904, செயிண்ட் லூயிஸ், அமெரிக்கா.
Q30. எந்த ஒலிம்பிக்கில், தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கல பதக்கம் பரிசளிப்பது தொடங்கியது?
1904, செயிண்ட் லூயிஸ், அமெரிக்கா.
Q31. எந்த ஒலிம்பிக்கில், விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பின் போது, அந்தந்த நாட்டுக் கொடி ஏந்திச் செல்லும் பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?
1908, லண்டன் - UK.
Q32. எந்த ஒலிம்பிக்கில் திறப்பு விழா நடத்தும் முறை தொடங்கியது?
1908, லண்டன் - UK.
Q33. எந்த ஒலிம்பிக்கிலிருந்து மாராத்தான் ஓட்ட தூரம் 42.195 கி.மீ. ஆக மாற்றப்பட்டது?
1908, லண்டன் - UK.
Q34. எந்த ஒலிம்பிக்கிலிருந்து நாட்டு பெயர்கள் பதித்த பலகை ஏந்திச் செல்லும் பழக்கம் தொடங்கியது?
1912, ஸ்டாக் ஹோம், ஸ்வீடன்.
Q35. 1912 ஸ்டாக் ஹோம் ஒலிம்பிக்கில் பங்கு பெற்ற இரண்டாம் உலகப்போரின் புகழ்பெற்ற அமெரிக்க தளபதி யார்?
ஜெனரல் ஜார்ஜ் எஸ். பேட்டன்.
Q36. எந்த ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடி மற்றும் வீரர்கள் பிரமாணம் ஏற்பு அறிமுகப்படுத்தப்பட்டது?
1920, ஆன்ட் வெர்ப், பெல்ஜியம்.
Q37. "பறக்கும் ஃபின்-FLYING FINN" என சிறப்பு பெயர் பெற்ற விளையாட்டு வீரர் யார், என்ன காரணம்?
பாவோ நுர்மி -PAAVO NURMI - ஃபின்லாந்து, ஒரு மணி நேரத்துக்குள், 1500, 5000 மீ. ஓட்டத்தில் பங்கேற்று இரண்டிலும் தங்கப் பதக்கம வென்றார். 1924 - பாரீஸ், ஃப்ரான்ஸ்.
Q38. ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு எப்போது தொடங்கியது?
1928, ஆம்ஸ்டெர்டாம், நெதர்லாந்து.
Q39. ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 2 தங்கப் பதக்கங்கள் வென்ற எந்த வீரர், டார்ஜான் (TARZAN) திரைப்படங்களில் (சுமார் 10) டார்ஜானாக நடித்துள்ளார்?
ஜானி வெய்ஸ்முல்லர், 1928, ஆம்ஸ்டெர்டாம் ஒலிம்பிக் நீச்சல் போட்டி - 2 தங்கம்.
Q40. ஒலிம்பிக்கில் பங்கேற்ற மூத்த மற்றும் இளைய விளையாட்டு வீரர்கள் யார்?
"மூத்தவர் : OSCAR SWAHN - ஸ்வீடன் - 72 வருடம், 281 நாட்கள் - 1920. ஆண்ட்வெர்ப் - துப்பாக்கி சுடுதல் - வெள்ளி பதக்கம். இவர் 1924 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றார். ஆனால் பங்கேற்கவில்லை.
இளையவர் : திமித்ரியஸ் லௌண்ட் ராஸ் (DIMITRIUS LOUNDRAS) - க்ரீஸ் - 1896 - ஏதென்ஸ் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் - வெண்கலம் (மூன்றாவது இடம்) 10 வயது 218 நாட்கள்."
Q41. எந்த ஒலிம்பிக்கிலிருந்து இந்தியா பங்கேற்க தொடங்கியது?
1920, ஆன்ட் வெர்ப், பெல்ஜியம்.
Q42. 1928 - ஆம்ஸ்டெர்டாம் ஒலிம்பிக் இந்தியாவுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
இந்தியா ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது.
Q43. இந்தியா ஹாக்கி போட்டியில் கடைசியாக தங்கம் எந்த ஒலிம்பிக்கில் வென்றது?
1980, மாஸ்கோ, ரஷ்யா.
Q44. ஒலிம்பிக் போட்டிகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு எப்போது தொடங்கியது?
1936, பெர்லின், ஜெர்மனி ஒலிம்பிக்.
Q45. ஹிட்லர் துவக்கி வைத்த ஒலிம்பிக் போட்டி எது?
1936 பெர்லின் ஒலிம்பிக் - ஜெர்மனி. அதனால் "ஹிட்லர் ஒலிம்பிக்ஸ்" என அழைக்கப்படுகிறது.
Q46. எந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்மை பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்ட து?
1968, மெக்ஸிகோ.
Q47. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய முதல் பெண் வீரர் யார்?
என்ரிகெட்டா பஸிலியோ - 1968 - மெக்ஸிகோ.
Q48. எந்த ஒலிம்பிக் போட்டியின் போது 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்?
1972 - முனிச், ஜெர்மனி (மேற்கு).
Q49. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் முதல்முறையாக யார் 10/10 முழு மதிப்பெண்கள் பெற்றார்?
NADIA COMANECI - ரொமேனியா - 1976 மான்ட்ரீஸ், கேனடா ஒலிம்பிக்.
Q50. கம்யூனிச நாட்டில் நடந்த முதல் ஒலிம்பிக் போட்டி எது?
1980, மாஸ்கோ, ரஷ்யா.
Q51. எந்த ஒலிம்பிக் போட்டி அதிகமான நாடுகளால் நிராகரிக்கப்பட்டது?
1980, மாஸ்கோ - 64 நாடுகள், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து ஆக்கிரமித்து செய்த தால்.
Q52. ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக வெற்றிப் பதக்கம் பறிக்கப்பட்ட முதல் விளையாட்டு வீரர் யார்?
பென் ஜான்சன் (கேனடா) - 1988 - சியோல் ஒலிம்பிக் பறிக்கப்பட்ட தங்கம், கார்ல் லூயிஸ், அமெரிக்க வீரருக்கு அளிக்கப்பட்டது.
Q53. எந்த ஒலிம்பிக் தீபம், உடல் ஊனமுற்ற ஒரு வீரரால், தீப்பந்தம் பொருத்திய அம்பு எய்தி, ஏற்றி வைத்தார்?
1992, பார்சிலோனா ஒலிம்பிக் - அன் டோனியோ ரெபெல்லா என்ற ஊனமுற்ற வீர ர்.
Q54. உலகப்புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி தொடங்கி வைத்த ஒலிம்பிக் எது?
அட்லாண்டா, அமெரிக்கா, 1996.
Q55. இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் எந்த விளையாட்டில் எப்போது வெள்ளிப்பதக்கம் வென்றார்?
2004, ஏதென்ஸ் - க்ரீஸ் - துப்பாக்கி சுடுதல்.
Q56. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் கருத்து கீதத்தை (THEME SONG) எழுதி இசையமைத்தவர் யார்?
ஜான் டௌனர் வில்லியம். இவர் ஹாலிவுட்டின் பல பிரபலங்களுக்கு இசை அமைத்தவர்.
Q57. விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பில் அனுசரிக்கப்படும் பழக்கம் என்ன?
1928, ஆம்ஸ்டெர்டாம், நெதர்லாந்து. ஒலிம்பிக் முதல் - முதலில் க்ரீஸ், பிறகு ஆங்கில வரிசையில் மற்ற நாடுகள், கடைசியில் அந்த சமயம் ஒலிம்பிக் போட்டியை நட த்தும் நாடு.
Q58. ஒலிம்பிக் போட்டியின் விளையாட்டு வீரர்களின் பிரமாணத்தை (OATH) எடுத்துக் கொண்ட முதல் வீரர் யார்?
விக்டர் பயான் (VICTOR BION) - பெல்ஜிய நாட்டு நீச்சல் வீரர் - 1920 ஆன்ட்வெர்ப், பெல்ஜியம்.
Q59. 1960 ரோம் ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் ஜெஃப் ஃபரேல் செய்த சாதனை என்ன?
குடல் வால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 நாட்களில் போட்டியில் பங்கேற்று 2 தங்கப் பதக்கங்கள் வென்றார்.
Q60. போதை பொருள் பயன்படுத்தியதற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தவர் யார்?
HANS GUNNAR LILIJEN WALL - ஸ்வீடன் 1968 - மெக்ஸிகோ - மது அருந்தியிருந்ததால்.
Q61. தந்தை - மகன் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றது யாவர்?
"தந்தை : IMRENEMETH - ஹங்கேரி - 1948 - லண்டன் - சுத்திகுண்டு (HAMMER THROW) - எறிதல்.
மகன் : MIKOLOS NEMETH - ஈட்டி எறிதல் - 1976 - மான்ட்ரீல் - கேனடா."
Q62. தடகள ஓடுதல் போட்டிகளில் எத்தனை தடங்கள் (LANES) இருக்கும்?
எட்டு, ஒரு தடத்தின் அகலம் 1.07 மீ.
Q63. எந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசிய கீதம் முதல் முறையாக ஒலிக்கப்பட்ட து?
1948, லண்டன்.
Q64. எந்த ஒலிம்பிக் போட்டி இயற்கை சீற்றத்தால் தடைபட்டது?
1908 - ரோம் ஒலிம்பிக் - வெசுவியஸ் எரிமலை வெடிப்பு காரணமாக.
Q65. ஒலிம்பிக் போட்டிகளில் அதிகமான பதக்கங்கள் வென்ற ஒலிம்பிக் வீரர் யார்?
"மைக்கேல் ஃபெல்ப்ஸ், அமெரிக்கா - நீச்சல் - 22 பதக்கங்கள் (18 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) "
Q66. இதுவரை நடந்த எல்லா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கு கொண்ட நாடுகள் எவை?
க்ரீஸ் மற்றும் ஆஸ்திரேலியா.
Q67. ஒலிம்பிக்கின் குறிக்கோள் வாக்கியங்களை முன் வைத்தவர் யார்?
CITIUS, ALTIUS, FORTIUS - இந்த வாக்கியங்களை முன் வைத்தவர் பாதிரியார் ஹென்றி டிடோன், ஃப்ரான்ஸ்.
Q68. எந்த ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக இந்திய பெண்கள் பங்கேற்றனர்? அவர்கள் யார்?
"1952. ஹெல்சிங்கி - ஃபின்லாந்து - 4 பெண்கள்.
1. நில்மா கோஷ் -- தட களம்.
2. மேரி டி சௌசா - தட களம்
3. டாலி நசீர் - தட களம்
4. ஆரத்தி சாஹா - நீச்சல்."
Q69. ஒலிம்பிக் கீதத்தை (OLYMPIC ANTHEM) எழுதியவரும் இசை அமைத்தவரும் யார்?
"எழுதியவர் - கோஸ்டின் பலாமாஸ் - க்ரீஸ்,
இசையமைத்தவர் - ஸ்பைரிடான் சமாரஸ்.
1896ல் எழுதி இசையமைக்கப்பட்ட இந்த கீதம், 1958ல் தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட து."
Q70. சர்வ தேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் முதல் மற்றும் தற்போதைய (2016) தலைவர் யார்?
"முதல் - திமெத்ரியாஸ் விகெலாஸ், க்ரீஸ் - 1894 - 1896.
தற்போது - தாமஸ் பாக், ஃப்ரான்ஸ் - 2013."
Q71. "SPORTS FOR ALL - அனைவருக்கும் விளையாட்டு" என்ற ஒலிம்பிக் கோஷத்தை கொடுத்தவர் யார்? அவருடைய சிறப்பு என்ன?
ஃபிலிப் நோயல் பேக்கர், இங்கிலாந்து - 1920 ஆன்ட்வெர்ப், பெல்ஜியம் ஒலிம்பிக்கில் 1500 மீ ஓட்ட பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இவருடைய சிறப்பு - 1959ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். உலகில் ஒலிம்பிக் பதக்கமும் நோபல் பரிசும் பெற்ற ஒரே மனிதர்.
Q72. ஆசிய கண்டத்தில் முதன் முதலாக ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடந்தது?
1964 - டோக்யோ, ஜப்பான்.
Q73. 2008 ஒலிம்பிக்கில் வீரர்களின் அணிவகுப்பு பழக்கத்தில் மாற்றம் இருந்தது. அது என்ன?
2008. பெய்ஜிங் - பொதுவாக, க்ரீஸ் அடுத்து ஆங்கில எழுத்து வரிசையில் இதர நாடுகள், கடைசியில் சீனா இருந்திருக்க வேண்டும். இதில், க்ரீஸிற்கு பிறகு கினி என வரிசை மாற்றமிருந்தது. காரணம் அணிவகுப்பு சீன எழுத்துக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு இருந்தது.
Q74. ஒலிம்பிக்கில் முதன்முதலாக பதக்கம் வென்ற வீராங்கனை யார்?
சார்லோட்டி கூப்பர் - இங்கிலாந்து - 1900 - பாரீஸ் - ஃப்ரான்ஸ் - டென்னிஸ் போட்டி.
Q75. தடகளப் போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை யார்?
ஹலினா கோனோபாக்கா, போலந்து - 1928 - ஆம்ஸ்டெர்டாம் ஒலிம்பிக் - வட்டு எறிதல்.
Q76. இந்தியாவின் எந்த வீராங்கனை ஒலிம்பிக் போட்டியில் 1/100 வினாடியால் ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்?
பி.டி. உஷா - 1984 - லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் - 400 மீ தடை ஓட்டம்.
Q77. பி.டி. உஷாவின் சிறப்புப் பெயர்கள் யாவை?
"பய்யோலி எக்ஸ்பிரஸ்", "தங்க மங்கை". பய்யோலி அவருடைய சொந்த ஊர்.
Q78. 1896ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தின் பெயர் என்ன?
பானதேனியன் ( ) அரங்கம்.
Q79. குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் எப்போது தொடங்கின? 
சாமோனிக்ஸ், ஃப்ரான்ஸ் - 1924. நான் கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
Q80. குளிர்கால ஒலிம்பிக் நடந்த இடங்கள் யாவை?
எண்வருடம்நடந்த இடம்/நாடு
1. 1924 சாமோனிக்ஸ், ஃப்ரான்ஸ்
2. 1928 செயிண்ட் மாரிட்ஸ், ஸ்விட்சர்லாந்து
3. 1932 ப்ளாசிட் லேக், அமெரிக்கா
4. 1936 கார்மிஷ்ச் பார்டென்கிர்சென், ஜெர்மனி
5. 1948 செயிண்ட் மாரிட்ஸ், ஸ்விட்சர்லாந்து
6. 1952 ஓஸ்லோ, நார்வே
7. 1956 கார்டினோ டி அம்பாஸா, இத்தாலி
8. 1960 ஸ்குவா வேலி, அமெரிக்கா
9. 1964 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
10. 1968 க்ரெனோபிள், ஃப்ரான்ஸ்
11. 1972 சப்போரா, ஜப்பான்
12. 1976 இன்ஸ்ப்ரக், ஆஸ்ரியா
13. 1980 ப்ளாசிட் லேக், அமெரிக்கா
14. 1984 சரயேவோ, யூகோஸ்லேவியா
15. 1988 கால்காரி, கேனடா
16. 1992 ஆல்பர்ட்வில், ஃப்ரான்ஸ்
17. 1994 லில்லிஹாமர், நார்வே
18. 1998 நகேனோ, ஜப்பான்
19. 2002 சால்ட் லேக் சிட்டி, அமெரிக்கா
20. 2006 மூரின், இத்தாலி
21. 2010 வான்குவர், கேனடா
22. 2014 ஸோச்சி, ரஷ்யா
Q81. 2018, 2022 குளிர்கால ஒலிம்பிக் எங்கு நடக்க உள்ளது?
"2018 - ப்யாங்சேங், தென் கொரியா
2022 - பெய்ஜிங், சீனா."
Q82. குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வென்றுள்ள நாடு எது?
நார்வே - 2014 நிலையில் 329 பதக்கங்கள் (தங்கம் - 118, வெள்ளி -111, வெண்கலம் - 100)
Q83. எந்த புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர், இனவெறியை எதிர்த்து, தன்னுடைய ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசினார்?
முகமது அலி, குத்துச் சண்டை வீரர். இவருடைய பழைய பெயர் - CLASSIUS CLAY.
Q84. 100 மீ ஓட்டப்பந்தயத்தில், அதிக வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஆண்/பெண் வீரர்கள் யார்?
ஆண் : லின்ஃபோர்டு க்றிஸ்டி - 32 வயது - 1992 பார்சிலோனா, ஸ்பெயின் ஒலிம்பிக் - தங்கம்.
பெண் : மெர்லின் ஓட்டே - 40 வயது - 2000 சிட்னி, ஆஸ்திரேலியா - வெண்கலம்.
Q85. கோடை இளைஞர்கள் ஒலிம்பிக் எப்போது தொடங்கியது? இதைப் பற்றி சில விவரங்கள் கூறுக.
சிங்கப்பூர் 2010. வயது வரம்பு - 14 முதல் 18. 2014ல் நான்ஜிங், சீனாவில் நடந்த து. 2018ல் ப்யூனஸ் எய்ரஸ், அர்ஜென்ட்டினாவில் நடக்க உள்ளது.
Q86. 1976, 1980, 1984களில் என்ன காரணங்களால் சில நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நிராகரித்தது?
"1. 1976 - நியூசிலாந்து ரக்பி குழு தென் ஆப்பிரிக்கா சென்று விளையாடியது.
2. 1980 - ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து சில பகுதிகளை கைப்பற்றியது.
3. 1984 - 1980 போட்டியை அமெரிக்காவும் இதர நாடுகளும் நிராகரித்ததால், இந்த போட்டியை ரஷ்யாவும் இதர நாடுகளும் நிராகரித்தன."
Q87. "ஒலிம்பிக்கில் அடையாள ஒற்றுமை பொம்மைகள் (Mascot) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? அதற்குப் பிறகு என்னென்ன பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டன?"
எண் வருடம் நடந்த இடம்  விளம்பர பொம்மை பெயர்
1. 1972 முனிச், ஜெர்மனி - ""WALDI"" - DASCHHUND நாய்
2. 1976 மான்ட்ரீல், கேனடா - ""AMIK"" - பறவை
3. 1980 மாஸ்கோ, ரஷ்யா - ""MISHA"" - கரடி
4. 1984 லாஸ் ஏஞ்செல்ஸ், அமெரிக்கா - ""SAM"" - கழுகு
5. 1988 சியோல், தென் கொரியா - ""HODORI"" - புலிக்குட்டி
6. 1992 பார்சிலோனா, ஸ்பெயின் - ""COBI"" - நாய்வகை
7. 1996 அட்லாண்டா, அமெரிக்கா - ""IZZY"" - கணினி வரைபடம்
8. 2000 சிட்னி, ஆஸ்திரேலியா - ""OLLY"" - பறவை; ""SYD"" - ப்ளாடிபஸ்; ""MILLI"" - எக்கிட்னா விலங்கு.
9. 2004 ஏதென்ஸ், க்ரீஸ் - ""PHEVOS"" ""ATHENA"" - கார்ட்டூன்
10. 2008 பெய்ஜிங், சீனா - ""BEI BEI"" - மீன்; ""JING JING"" - பாண்டா; ""HUAN HUAN"" - தீ; ""YING YING"" - மான்; ""NINI"" ப ை.
11. 2012 லண்டன் - ""WENLOCK"" இரும்பு சித்திர உருவம்.
12. 2016 ரியோ டி ஜெனீரோ, ப்ரேசில் - ""VINICIUS"" - ஒரு கற்பனை விலங்கு"

Q88. ஒலிம்பிக்கில் தனி நபர் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் யார்?
1. கஷாபா தாதா சாகேப் ஜாதவ் - 1952 - ஹெல்சிங்கி - ஃபின்லாந்து - மல்யுத்தம் - வெண்கலம்.
2. லியாண்டர் பயஸ் - 1996 - அட்லாண்டா - அமெரிக்கா - டென்னிஸ் - வெண்கலம்.
3. கர்ணம் மல்லேஸ்வரி - 2000 - சிட்னி - ஆஸ்திரேலியா - பளு தூக்குதல் - வெண்கலம்.
4. ராஜ்ய வர்தன் சிங் ராத்தோர் - 2004 - ஏதென்ஸ் - க்ரீஸ் - துப்பாக்கிச் சுடுதல் - வெள்ளி.
5. அபினவ் பிந்த்ரா - 2008 - பெய்ஜிங், சீனா - துப்பாக்கிச் சுடுதல் - தங்கம்
6. சுஷீல் குமார் - 2008 - பெய்ஜிங், சீனா - மல்யுத்தம் - வெண்கலம்.
7. விஜேந்தர் சிங் - 2008 - பெய்ஜிங், சீனா - குத்துச்சண்டை - வெண்கலம்.
8. விஜய்குமார் - 2012 - லண்டன் - துப்பாக்கி சுடுதல் - வெள்ளி.
9. சுஷில் குமார் - 2012 - லண்டன் - மல்யுத்தம் -வெள்ளி.
10. சாய்னா நெஹ்வால் - 2012 - லண்டன் - பேட்மிண்டன் - வெண்கலம்.
11. மேரி கோம் - 2012 - லண்டன் - குத்துச் சண்டை - வெண்கலம்.
12. ககன் நரங் - 2012 - லண்டன் - துப்பாக்கி சுடுதல் - வெண்கலம்.
13. யோகேஷ்வர் தத் - 2012 - லண்டன் - மல்யுத்தம் - வெண்கலம்.
14. சாக்ஷி மல்லீக் -- 2016 -- ரியோடி ஜெனீரோ - ப்ரேசில் -- மல்யுத்தம் -- வெண்கலம்.
15. பி.வி. சிந்து -- 2016 -- ரியோடி ஜெனீரோ -- ப்ரேசில் -- பாட்மிண்டன் -- வெள்ளி. (இவரே இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்களில் குறைந்த வயதுடையவர்) 
இவை சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1900, பாரீஸ், ஃப்ரான்ஸ் - ல் ஆங்கிலேய இந்தியா சார்பாக நார்மன் பிச்சர்டு என்பவர் பங்கு கொண்டு இரண்டு வெள்ளி பதக்கங்களை தடகளப் போட்டியில் வென்றிருக்கிறார்.
இதைத் தவிர்த்து, இந்திய ஹாக்கிக் குழு 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 மற்றும் 1980 போட்டிகளில் தங்கமும், 1960ல் வெள்ளியும், 1968, 1972ல் வெண்கல பதக்கமும் வென்றுள்ளது."
Q89. ஊனமுற்றோர் ஒலிம்பிக்கின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
லுட்விக் கட்மேன் -- Ludwik Guttman, ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்.
Q90. ஊனமுற்றோர் ஒலிம்பிக் எப்போது தொடங்கியது?
1960 -- ரோம் ஒலிம்பிக்குடன் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கோடை ஒலிம்பிக்கைத் தொடர்ந்து, அதே இடத்தில் நடத்தப்படுகிறது.
Q91. ஊனமுற்றோர் ஒலிம்பிக் இதுவரை நடந்த இடங்கள் யாவை?
எண் இடம் வருடம்
1. ரோம், இத்தாலி 1960
2. டோக்யோ, ஜப்பான் 1964
3. டெல் அவிவ், இஸ்ரேல் 1968
4. ஹெய்டெல்பெர்க், ஜெர்மனி 1972
5. டொராண்டோ, கேனடா 1976
6. ஆர்ன்ஹெம், நெதர்லாந்து 1980
7. நியூயார்க், அமெரிக்கா ஸ்டோக் மாண்ட்வில், UK 1984
8. சியோல், தென் கொரியா 1988
9. பார்சிலோனா, ஸ்பெயின் 1992
10. அட்லாண்ட்டா, அமெரிக்கா 1996
11. சிட்னி, ஆஸ்திரேலியா 2000
12. ஏதென்ஸ், க்ரீஸ் 2004
13. பெய்ஜிங், சீனா 2008
14. லண்டன், இங்கிலாந்து 2012
15. ரியோ டி ஜெனிரோ, ப்ரேசில் 2016
16. டோக்யோ, ஜப்பான் 2020 (நடக்க இருப்பது)
Q92. ஊனமுற்றோருக்கான குளிர்கால ஒலிம்பிக் எப்போது தொடங்கியது?
1976 -- ஸ்வீடன். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி 1992 வரை கோடை ஒலிம்பிக் ஆண்டிலேயே நடத்தப்பட்டது. 1994 முதல், கோடை ஒலிம்பிக் நடக்காத இரட்டைப்படை ஆண்டில் நடத்தப்பட துவங்கியது.
Q93. ஊனமுற்றோருக்கான குளிர்கால ஒலிம்பிக் நடந்த இடங்கள்/ஆண்டுகள் யாவை?
எண் இடம் ஆண்டு
1. ஆர்ம்ஸ்கோல்ட்ஸ்விக், ஸ்வீடன் 1976
2. கீலோ, நார்வே 1980
3. இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 1984
4. இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 1988
5. டிக்னஸ் ஆல்பெர்ட்வில், ஃப்ரான்ஸ் 1992
6. லில் ஹாமர், நார்வே 1994
7. நகானோ, ஜப்பான் 1998
8. சால்ட் லேக் நகரம், அமெரிக்கா 2002
9. டூரின், இத்தாலி 2006
10. வாங்குவர், கேனடா 2010
11. சோச்சி, ரஷ்யா 2014
12. ப்யாங் சாங், கொரியா 2018 **
13. பெய்ஜிங், சீனா 2022 **
14.
15.
16.
17.
18.
Q94. ஊனமுற்றோர் கோடை ஒலிம்பிக்கில் முதன் முறையாக இந்தியா எப்போது பங்குபெற்றது?
1968 -- டெல் அவிவ், இஸ்ரேல் கோடை ஊனமுற்றோர் ஒலிம்பிக்.
Q95. இந்தியாவுக்காக, ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
முரளிகாந்த் பேட்கர் -- நீச்சல் -- 1972 -- ஹெய்டெல்பெர்க், ஜெர்மனி.
Q96. ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்கள் யார்?
எண் வருடம் இடம் பெயர் விளையாட்டு பதக்கம்.
1. 1972 ஹெய்டல்பெர்க், ஜெர்மனி முரளிகாந்த் பேட்கர் நீச்சல் தங்கம்.
2. 1984 நியூயார், அமெரிக்கா பீம்ராவ் கேசர்கர் ஈட்டி எறிதல் வெள்ளி
3. --- ------------------ ஜோகிந்தர் சிங் பேடி குண்டு எறிதல் வெள்ளி
4. --- ------------------- ஜோகிந்தர் சிங் பேடி ஈட்டி எறிதல் வெண்கலம்
5. --- ------------------- ஜோகிந்தர் சிங் பேடி வட்டு எறிதல் வெண்கலம்.
6. 2004 ஏதென்ஸ், க்ரீஸ் தேவேந்திர ஜஜாரியா ஈட்டி எறிதல் தங்கம்.
7. ----- -------------------- ரஜிந்தசிங் ரஹேலூ பளு தூக்குதல் வெண்கலம்.
8. 2012 லண்டன், இங்கிலாந்து கிரிஷா நாகராஜ்கவுடா உயரம் தாண்டுதல் வெள்ளி
9. 2016 ரியோடி ஜெனிரோ,ப்ரேசில் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் தங்கம்.
10. ----- ----------------- தேவேந்திர ஜஜாரியா ஈட்டி எறிதல் தங்கம்.
11. ----- ------------------ தீபா மாலிக் குண்டு எறிதல் வெள்ளி.
12. ----- ------------------ வருண் பட்டி உயரம் தாண்டுதல் வெண்கலம்.
13.
14.
15.
16.
17.
Q97. ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில், ஜொகிந்தர் சிங் பேடி, தேவேந்திர ஜஜாரியா, மற்றும் தீபா மாலிக் ன் சாதனை என்ன?
1. ஜோகிந்தர் சிங் பேடி -- 1984 போட்டியில் 3 பதக்கங்கள் வென்றுள்ளார். 1 வெள்ளி, 2 வெண்கலம் -- ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல்.
2. தேவேந்திர ஜஜாரியா -- 2004, 2016 போட்டிகளில், ஈட்டி எறிதலில் 2 தங்கம் வென்றுள்ளார்.
3. தீபா மாலிக் -- 2016 போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை தனது 45+ வயதில் வென்றுள்ளார்.
Q98. 2016 ரியோடி ஜெனிரோ நிலையில்  ஒலிம்பிக் போட்டிகளின் தடகள சாதனைகள்:   
ஆண்கள்:
விளையாட்டு  பெயர்/நாடு  சாதனை  நிகழ்த்தப்பட்ட இடம் 
100 மீ   உசைன் போல்ட்/ஜமைக்கா  9.63 வினாடி  2012--லண்டன்
200 மீ   உசைன் போல்ட்/ஜமைக்கா  19.30 வினாடி  2008--பெய்ஜிங்
400 மீ   வெய்டி வேன் நீகெர்க் தென் ஆப்பிரிக்கா   43.03 வினாடி  1996--அட்லாண்டா 
800 மீ   டேவிட் ருடிஷா, கென்யா   1:40.91 நிமிடம்  2012--லண்டன்
1500 மீ   நோவா ங்கெனி, கென்யா   3:32.07 நிமிடம் 2000--லண்டன்
5000 மீ   கெனெனிசா பெக்கெலெ, எத்தியோப்பியா  12:57.82 நிமிடம் 2008--பெய்ஜிங்
10000 மீ   கெனெனிசா பெக்க்கெலெ, எத்தியோப்பியா   27:01.17 நிமிடம்  2008--பெய்ஜிங் 
மராத்தான்   சாமுவேல் வஞ்சிரு, கென்யா   2.06.32 நிமிடம்  2008--பெய்ஜிங் 
110 மீ. தடை ஓட்டம்  ல்யூ க்ஸியாங், சீனா   12.91 வினாடி   2004--ஏதென்ஸ்
400 மீ. தடை ஓட்டம்  கெவின் யங்,  அமெரிக்கா.    46.78 வினாடி  1992--பார்சிலோனா
3000 மீ. நீர்த்தடை ஓட்டம்   கான்ஸெஸ்லஸ் Conseslus Kriputo, Kenya   8:03.28 mts  2016 - ரியோ டி ஜெனீரோ 
4 X 100 மீ தொடர் ஓட்டம்   ஜமைக்கா   36.84 வினாடி  2012--லண்டன் 
4 X 400 மீ தொடர் ஓட்டம்   அமெரிக்கா   2:55.39 நிமிடம்   2008--பெய்ஜிங் 
20 கி.மீ நடை   சென் டிங், சீனா   1:18:46 மணி   2012--லண்டன் 
50 கி.மீ நடை   செர்ஜி கிர்த்யாப்கின், ரஷ்யா   3:35:59 மணி   2012--லண்டன் 
உயரம் தாண்டுதல்   சார்லஸ் ஆஸ்டின், அமெரிக்கா   2.39 மீ  1996--அட்லாண்டா 
நீளம் தாண்டுதல்   பாப் பீமோன்,   அமெரிக்கா  8.90 மீ   1968--மெக்ஸிகோ 
தடியூன்றித் தாண்டுதல்   தியாகோ ப்ராஸ் டா சில்வா, ப்ரேசில்   6.03 மீ   2016 - ரியோ டி ஜெனீரோ
மும்முறை நீளம் தாண்டுதல்   கென்னி ஹாரிசன், அமெரிக்கா   18.09 மீ   1996--அட்லாண்டா 
குண்டு எறிதல்   உல்ஃப் டிம்மர்மான், கிழக்கு ஜெர்மனி   22.47 மீ   1988--சியோல், தென் கொரியா
வட்டு எறிதல்   விர்ஜிலின் அலோக்னா, லித்துவேனியா   69.89 மீ   2004--ஏதென்ஸ், க்ரீஸ் 
சுத்திக்குண்டு எறிதல்   செர்ஜி லித்வினோவ், ரஷ்யா   84.80 மீ   1988--சியோல், தென் கொரியா
ஈட்டி எறிதல்   ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென், நார்வே.    90.57 மீ   2008--பெய்ஜிங், சீனா. 
10 தடகளப் போட்டி   ரோமன் செப்ரீ, செக் குடியரசு 
 ஆஷ்டன் ஈட்டன், அமெரிக்கா  
8893 புள்ளிகள்   2004--ஏதென்ஸ், க்ரீஸ்
 2016--ரியோ டி ஜெனீரா.
       
       
       


பெண்கள் :
100 மீ   ஃப்ளாரென்ஸ் ஜி. ஜாய்னர், அமெரிக்கா   10.62 வினாடி  1988--சியோல், தென் கொரியா
200 மீ   ஃப்ளாரென்ஸ் ஜி. ஜாய்னர், அமெரிக்கா   21.34 வினாடி  1988--சியோல், தென் கொரியா
400 மீ   மேரி ஜோஸ் பெரெக், ஃப்ரான்ஸ்   48.25 வினாடி   1996--அட்லாண்டா, அமெரிக்கா
800 மீ   நாட்ஸெடா ஒலிஸரங்கோ, ரஷ்யா   1:54.43 நிமிடம்  1980--மாஸ்கோ, ரஷ்யா 
1500 மீ   பௌலா ஐவான், ரோமானியா   3:53.96 நிமிடம்  1988--தென் கொரியா 
5000 மீ   விவியன் செரியூட், கென்யா    14:26.17 நிமிடம்  2016-ரியோ டி ஜெனீரோ, ப்ரேசில் 
10000 மீ   அல்மாஸ் அயானா, எத்தியோப்பியா    29:17.45 நிமிடம்  2016-ரியோ டி ஜெனீரோ, ப்ரேசில்  
மராத்தான்   டிக்கி கெலீனா, எத்தியோப்பியா   2:23:07 மணி   2012--லண்டன் 
100 மீ தடை ஓட்டம்   சாலி பியர்சன், ஆஸ்திரேலியா   12:35 வினாடி    2012--லண்டன் 
400 மீ தடை ஓட்டம்   மெலெய்ன் வாக்கர், ஜமைக்கா   52.64 வினாடி   2008--பெய்ஜிங், சீனா 
3000 மீ நீர்த்தடை ஓட்டம்   குலுவாரா கால்கினா சானிடோவா, ரஷ்யா   8:58.85 நிமிடம்   2008--பெய்ஜிங், சீனா 
4 X 100 மீ தொடர் ஓட்டம்  கிழக்கு ஜெர்மனி   41.60 வினாடி   1980--மாஸ்கோ, ரஷ்யா 
4 X 400 மீ தொடர் ஓட்டம்   சோவியத் யூனியன்   3:15.27 நிமிடம்   1988--சியோல், தென் கொரியா 
20  கி.மீ நடை   எலெனா லஷ்மனோவா, ரஷ்யா   1.25.02 மணி   2012-லண்டன் 
உயரம் தாண்டுதல்   எலெனா ஸ்லாசெரெங்கோ, ரஷ்யா    2.06 மீ   2004--ஏதென்ஸ், க்ரீஸ் 
நீளம் தாண்டுதல்   ஜாக்கி ஜாய்ன்ர் கெர்ஸி, அமெரிக்கா    7.40 மீ   1988--சியோல், தென் கொரியா 
தடியூன்றி தாண்டுதல்   எலெனா இசின்பயேவா, ரஷ்யா    5.05 மீ   2008--பெய்ஜிங், சீனா
மும்முறை நீளம் தாண்டுதல்   ஃப்ராங்காய்ஸ் பாங்கோ எடோன், கேமரூன்   15.39 மீ   2008--பெய்ஜிங், சீனா 
குண்டு எறிதல்   இலோனா ஸ்லுபியோனக், கிழக்கு ஜெர்மனி   22.41 மீ   1980--மாஸ்கோ, ரஷ்யா 
வட்டு எறிதல்   மார்ட்டினா ஹெல்மேன், கிழக்கு ஜெர்மனி   72.30 மீ   1988--சியோல், தென் கொரியா 
 சுத்திகுண்டு எறிதல்   அனிதா வொடார்சிக், போலந்து   82.29 மீ   2016-ரியோ டி ஜெனீரோ, ப்ரேசில் 
 7 தடகளப் போட்டி   ஜாக்கி ஜாய்னர் கெர்ஸி, அமெரிக்கா   7291 புள்ளிகள்   1988--சியோல், தென் கொரியா 
 ஈட்டி எறிதல்   ஓஸ்லெடிஸ் மெனெண்டிஸ், க்யூபா   71.53 மீ   2004--ஏதென்ஸ், க்ரீஸ்