Khub.info Learn TNPSC exam and online pratice

கூடைப்பந்து - BASKET BALL

Q1. கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தவர் யார்?
டாக்டர் ஜேம்ஸ் நாய்ஸ்மித் - 1891ல் - முதன் முதலில் ஸ்பீரிங்ஃபீல்டு, மாஸாசூசெட்ஸ், அமெரிக்கா - என்ற இடத்தில் விளையாடப்பட்ட து.
Q2. கூடைப்பந்து விளையாட்டு களத்தின் (COURT) அளவுகள் என்ன?
28 X 15 மீட்டர் - இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நடுவில் 12 அடி விட்டத்தில் ஒரு வட்டம்.
(அமெரிக்க தொழில் ரீதியான (PROFESSIONAL) களங்கள் சற்றே பெரியதாக - 28.65 X 15.14 மீ - இருக்கும்).
Q3. கூடைப்பந்தின் அளவு என்ன? நிறம் என்ன?
"பொதுவாக இளஞ்சிவப்பு நிறம். தோல் அல்லது செயற்கை ரப்பர்/தோலால் செய்யப்பட்ட து. ஆண் : சுற்றளவு - 29.5 - 30 அங்குலம் / 749 மி.மீ. - 780 மி.மீ. 567 - 650 கிராம் எடை (காற்றடைத்த).
பெண் : சுற்றளவு - 28.5 - 29 அங்குலம் / 715 மி.மீ - 730 மி.மீ. 511 - 568 கிராம் எடை (காற்றடைத்த)."
Q4. கூடைப்பந்தில் மிகவும் புகழ்பெற்றது எது?
ஸ்பால்டிங் (SPALDING).
Q5. கூடைப்பந்து குழுவில் எத்தனை பேர் இடம் பெறுவர்?
5 பேர்.
Q6. கூடை எவ்வளவு உயரத்தில் அமைக்கப்படும்?
களத்தின் வெளியே அமைக்கப்பட்ட ஒரு உயர கட்டுமானத்தில், களத்திற்குள் நான்கு அடி தூரம் நீண்டிருக்கும்படியாக, 10 அடி/3.05மீ உயரத்தில் பொருத்தப்படும். கூடையின் பின்புறம் பந்தை தட்டி கூடைக்குள் போடுவதற்கு வசதியாக ஒரு பலகை பொருத்தப்பட்டிருக்கும்.
Q7. கூடைப்பந்து விளையாட்டின் நேரம் என்ன?
மொத்தம் 80 நிமிடங்கள் - ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் 2 நிமிட ஓய்வும், 40 நிமிட த்திற்கு பிறகு 15 நிமிட ஓய்வும் அளிக்கப்படும்.
Q8. கூடைப்பந்து விளையாட்டு என்பது என்ன? புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
"கையால் மட்டுமே விளையாடப்படும் இந்த விளையாட்டில், பந்தை தட்டிச் சென்று, அல்லது தனது அணி வீரருடன்
பகிர்ந்து கொண்டு, எதிரணி வீரர் கையில் கிடைக்காமல், கூடைக்குள் போடுவதே இந்த விளையாட்டு. இவ்வாறு பந்தை கூடைக்குள் போடுவதற்கு பல விதிமுறைகளும் உள்ளன.
ஒவ்வொரு முறையும் பந்தை கூடைக்குள் போடுவதற்கு கீழ்க்கண்ட முறையில் புள்ளிகள் கணக்கிடப்படும்.
1. களத்தில், கூடைக்கு முன்பாக, சுமார் 22 முதல் 23.5 அடி நீளத்தில் ஒரு வளைவு (Arch) போடப்பட்டிருக்கும். அதன் வெளியிலிருந்து பந்தை கூடைக்குள் போட்டால் - 3 புள்ளிகள்.
2. வளைவுக்கு உள்ளிருந்து போட்டால் - 2 புள்ளிகள்.
3. விதி மீறல் அல்லது தவறான நடவடிக்கைக்காக அளிக்கப்படும் தண்டனை - ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தடையின்றி பந்தை கூடைக்குள் போடுவதற்கு ஒரு புள்ளி."
Q9. கூடைப்பந்து விளையாட்டு முக்கிய வழிமுறை வாக்கியங்கள் யாவை?
"1. DRIBBLING : பந்தை தொடர்ச்சியாக, அதிரணி வீரரிடம் கிடைக்காதவாறு, தட்டிச்சென்று, சொந்த அணிவீரர் மூலமாகவோ, அல்லது தானே பந்தை கூடைக்குள் போடுவது.
2. PASSING : பந்தை எதிரணி வீரரிடம் விட்டுக் கொடுக்காமல், தங்களணிக்குள் பல வழிகளில் பகிர்ந்து கொள்வது.
3. SLAM DUNK : ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஒரு தொடர். இதில், ஒரு வீரர், பந்தை தானே தட்டிச் சென்றோ, அல்லது சக வீரரிடமிருந்து பெற்றோ, கூடையின் உயரத்துக்கு மேலாக குதித்து, பந்தை மேலிருந்து கூடைக்குள் போடுவது. இம்முறை மிகவும் பிரபலமானது மட்டுமின்றி, வீரர்களின் பயிற்சி, உடல்திறன், புத்தி கூர்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது."
Q10. கூடைப்பந்தின் உலக விளையாட்டு சம்மேளனம் எது?
சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் - FIBA - International Basket Ball Federation - MIES, Switzerland - 1932ல் தொடங்கப்பட்டது. 215 அங்கத்தினர் நாடுகள்.