Khub.info Learn TNPSC exam and online pratice

கூடைப்பந்து - பாட்மிண்டன் - BADMINTON

Q1. பாட்மிண்டன் விளையாட்டைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
"1800ல் ப்ரிட்டிஷாரால், தங்கள் பொழுதுபோக்குக்காக பாட்மிண்டன் என்ற இடத்தில் விளையாடப்பட்டது. பறவை இறகுகளை கட்டி ஒரு மட்டையால் தட்டி விளையாடப்பட்டது. 1870களில் இந்த விளையாட்டு ஆங்கிலேயர்களால் இந்தியாவில் பிரபலமாக ஆடப்பட்டது. 1873 பூனே - யில் இந்த விளையாட்டுக்கொரு வடிவமும் விதிகளும் கொடுக்கப் பட்டது. அதற்குப் பிறகு பல மாற்றம் எற்பட்டு 1893ல் முழுவடிவம் பெற்றது. ஆங்கிலேயர்களால் தங்களுடைய மற்ற பகுதிகளுக்கும் பரவ 1934ல் சர்வதேச விளையாட்டு மற்றும் சம்மேளனம் என உருவெடுத்தது. இந்த விளையாட்டிற்கு முன்பு MINTONETTE எனவும், பிற்காலத்தில் SHUTTLE COCK எனவும் பெயர் பெற்றது."
Q2. பாட்மிண்டன் விளையாடு களம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அதன் அளவுகள் என்ன?
"கோர்ட் (COURT) என அழைக்கப்படுகிறது.
நீளம் - 13.4 மீ / 44 அடி - இரு சம பாதியாக பிரிக்கப்பட்டிருக்கும். அந்த இட்த்தில் 1.55 மீ/5'1"" உயரத்தில் அகலத்தில் ஒரு வலை (NET) தொங்கவிடப்படும். இதன் மைய உயரம் 5' யாக இருக்கும்.
அகலம் - 6.1 மீ / 20 அடி. ஒற்றையர் ஆட்ட த்திற்கு அகலம் 5.18 மீ/17 அடியாக குறைக்கப்படும்."
Q3. SHUTTLE COCK விளையாட்டு தமிழில் எவ்வாறு அறியப்படுகிறது?
இறகுப் பந்து.
Q4. SHUTTLE - இறகுப் பந்து என்பது என்ன?
மேல் பக்கம் திறந்த வெளியாக, ஒரு கூம்பு வடிவம் கொண்ட து. அடிப்பகுதியில் அரை வட்ட வடிவ ஒரு உருளை கார்க்கில் 16 சிறகுகள் (வாத்து) ஒன்றுக்கொன்று இணைத்தவாறு பொருத்தப்பட்டு இருக்கும். ஒலிம்பிக்கில் 16 சிறகுகள் கொண்ட பந்துகளே பயன்படுத்தப்படுகிறது.
Q5. பாட்மிண்டன் போட்டிகளில் எவ்வகையாக பங்கேற்கிறார்கள்?
"ஒற்றையர் - ஆண், பெண்.
இரட்டையர் - ஆண்கள், பெண்கள்.
கலப்பு இரட்டையர் - ஒரு ஆண் + 1 பெண்."
Q6. பாட்மிண்டன் போட்டியில் புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
14 புள்ளிகள் கொண்டது ஒரு ஆட்டம். சம நிலை ஏற்பட்டால், ஒரு அணி 2 புள்ளிகள் வித்தியாசம் பெறும் வரை ஆட்டம் தொடரும். ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கும் இதே விதிதான்.
Q7. குறுகிய பந்து போடும் கோடு (SHORT SERVICE LINE) என்பது என்ன?
விளையாட்டை தொடக்குவதற்கும், ஒரு புள்ளி முடிவில், மீண்டும் தொடங்கவும், ஒரு அணி வீர ர் பந்தை எதிரணிக்கு மட்டையால் தட்டி அனுப்புவது எனப்படுகிறது. இதை போடுவதற்கு உண்டான ஒரு விதிமுறைதான் இந்தக் கோடு. ஒரு அணி வீர ர் பந்தை தட்டி அனுப்பும்போது, எதிரணிக்கு, இந்த கோட்டை தாண்டி தான் பந்து செல்ல வேண்டும். இந்தக் கோடு, மையக் கோட்டில் இருந்து 1.98 மீ தூரத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.
Q8. பாட்மிண்டன் ஆட உதவும் மட்டை (RACQUET) பற்றிய சில விவரங்கள் :
"இந்த மட்டை பல கிராஃபைட் கலவைகளால் உருவாக்கப்படுகிறது. இது பொதுவாக முட்டை வடிவத்திலிருக்கும். நீளம் : 680 மிமீ/26.772 அங்குலம்/கைப்பிடி முடிவு வரை. அகலம் : 230 மிமீ/9.055 அங்குலம். முட்டை வடிவ பந்து அடிக்கும் பகுதி. நாளம்/நரம்பு - 21 கேஜ். நரம்பு இழுப்பு - 18-30 LBF (Unit of Force)."
Q9. பாட்மிண்டன் எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது?
1992 - பார்சிலோனா - ஸ்பெயின்.
Q10. பாட்மிண்டன் விளையாட்டின் உலக சம்மேளனம் எது?
சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் - இண்டர்நேஷனல் பாட்மிண்டன் ஃபெடரேஷன் - 1934 - கோலாலம்பூர் - மலேசியா.
Q11. பாட்மிண்டன் விளையாட்டில் பயன்படுத்தப்படும் தொடர்கள் யாவை? (ஆங்கிலத்தில்)
"1. SERVE
2. LOW SERVE
3. HIGH SERVE
4. FLICK SERVE
5. DRIVE SERVE
6. NET SHOT
7. NET KILL
8. LONG KILL
9. PUSH
10. CLEAR
11. SMASH
12. JUMP SMASH
13. DROP SHOT
14. SLICED DROP SHOT
15. SLICED SMASH
16. SPINNING NET SHOT
17. SLICED LOW SERVE
போல இன்னும் பல."
Q12. உலகில் பாட்மிண்டன் விளையாட்டில் வீரர்களின் தரவரிசைக்காக நடத்தப்படும் சில புகழ்பெற்ற போட்டிகள் யாவை?
"1. தாமஸ் கோப்பை (THOMAS CUP) : 1948 - 49 - இரண்டு வருடங்களுகொரு முறை - சர் ஜார்ஜ் ஆலன் தாமஸ் இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற வீரரின் பெயரால் நடத்தப்படுகிறது.
2. உபேர் கோப்பை (UBER CUP) : 1956 - 57 - இரண்டு வருடங்களுக்கொரு முறை பெண்களுக்கு மட்டும் - பெட்டி உபேர் என்ற இங்கிலாந்து வீராங்கனையின் பெயரால் நடத்தப்படுகிறது.
3. சுதிர்மான் கோப்பை (SUDIRMAN CUP) - 1989 - இரண்டு வருடங்களுக்கொரு முறை கலப்பு இரட்டையர் போட்டி மட்டும். டிக் சுதிர்மான் என்ற இந்தோனேசிய வீரர் பெயரால் நடத்தப்படுகிறது.
4. BWF உலக சாம்பியன்ஷிப் - 1977ல் தொடங்கப்பட்டு, முதலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாகவும், பிறகு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையாகவும், 2006 முதல் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. 2009ல் இந்தியாவில் ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.
இவை தவிர பல நாடுகளில் பரிசுத்தொகை கொண்ட போட்டிகள் உலகின் முன்னணி வீரர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இது வீரர்களின் தர வரிசையை பாதிக்காது."
Q13. பாட்மிண்டன் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு?
மலேசியா.
Q14. சிறகுப் பந்தை வேகமாக அடிப்பதில் எந்த வீரர் சாதனை படைத்துள்ளார்?
FU HAI FENG - சீனா - 3.6.205 அன்று சுதிர்மான் கோப்பை போட்டியில் இவர் அடித்த பந்தின் வேகம் - 332 கி.மீ.
Q15. நம் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற சமீப கால பாட்மிண்டன் வீரர்கள் யார்?
"1. ப்ரகாஷ் படுகோனே : 1970, 80 களில் புகழ்பெற்ற வீரர். 1978ல் எட்மண்டன், 1980ல் லண்டன், 1981ல் கோலாலம்பூர் உலகக்கோப்பை போட்டிகளின் தலைமை வீரர். இவருடைய மகள் தீபிகா புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
2. புல்லேலா கோபிசாந்த் : காமன்வெல்த் போட்டி 1998, 2001 லண்டன் போட்டிகளை வென்றவர்.
3. சாய்னா நெஹ்வால் : 2012 ஒலிம்பிக், 2010 காமன்வெல்த் போட்டிகள் மற்றும் உலகின் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களும் பரிசுத் தொகைகளும் வென்றவர்.
2016ல் பத்ம பூஷன், ராஜீவ் காந்தி கேல் ரத்னா 2009-2010, மற்றும் பல கௌரவங்களையும் பெற்றவர். நம் நாட்டில் மிகவும் புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை."