Khub.info Learn TNPSC exam and online pratice

பேஸ் பால் - BASE BALL

Q1. பேஸ் பால் விளையாட்டை தமிழில் எவ்வாறு கூறலாம்?
அடிப்பந்தாட்டம்.
Q2. பேஸ் பால் என்பது எவ்வகையான விளையாட்டு?
அடிப்படையில் கிரிக்கெட்டைப் போன்ற ஒரு விளையாட்டு - ஆனால் ஆடுகளம், மட்டை, பந்து, ஓட்டம் போன்றவைகளில் பல மாற்றங்களுடன் விளையாடப்படுகிறது. இவற்றை பற்றி பிறகு படிக்கலாம். இது ஒரு குழு விளையாட்டு (TEAM GAME).
Q3. பேஸ் பால் விளையாட்டு எப்போது உருவானது?
19ம் நூற்றாண்டின் நடுக்காலத்தில் வட அமெரிக்காவில் உருவானது. அதனால் இது ஐக்கிய அமெரிக்காவில் (மட்டும்) மிகவும் பிரபலமானது. வெளி நாடுகளுக்கு அதிகமாக பரவவில்லை. இருப்பினும் ஜப்பான் போன்ற ஒருசில நாடுகளில் விளையாடப்படுகிறது.
Q4. பேஸ் பால் விளையாட்டு களம் எவ்வாறு இருக்கும்?
முக்கோணம் போல், ஒரு வைர வடிவில் இருக்கும். அதனால் இந்த ஆடுகளத்தை "வைரம்(DIAMOND)" என்றே அழைப்பர்.
Q5. பேஸ் பால் விளையாட்டு குழுவில் எத்தனை பேர் இருப்பார்கள்?
ஒரு அணிக்கு 9 பேர்.
Q6. பேஸ் பால் மட்டை எவ்வாறு இருக்கும்?
சுமார் 42"/107 செ.மீ. நீளமுடைய உருளை வடிவக் கட்டை. பந்தை அடிக்கும் மட்டையின் முன்பகுதி கனமாகவும், மட்டையை பிடிக்கும் பகுதி கனம் குறைவாகவும் (பிடிப்பு வசதிக்காக) மட்டை வழுக்கி செல்லாமல் இருக்க, மட்டையின் முடிவில் ஒரு உருளைத் தடுப்பும் இருக்கும்.
Q7. பேஸ் பால் பந்தைப் பற்றி கூறுக.
உருண்டை வடிவ கார்க்கின் மீது நூல் சுற்றப் பட்டு அதன் மீது தோலால் கவரப்பட்டிருக்கும். சிகப்பு வண்ண நூலால் தைக்கப்பட்டிருக்கும். இதன் சுற்றளவு 9 - 9.25 அங்குலம். RAWLINGS வகை பந்துகள் மிகவும் புகழ் பெற்றவை.
Q8. பேஸ் பால் விளையாட்டு விளையாடும்பொழுது வீரர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
"கிரிக்கெட்டைப் போலவே ஒரு அணிப் பந்தை அடிக்க, மற்றொரு அணி அடிக்கப்பட்ட பந்தை பிடிப்பது என்பது தான் அடிப்படை முறை. இதில் பந்தை போடுவதிலும், அடிப்பதிலும், பிடித்து தன்னுடைய சக வீரருக்கு எறிந்து பந்து அடிக்கும் அணி வீரர்களை நீக்க (OUT) முயற்சிப்பதே இந்த விளையாட்டு.
BATTER - பந்தை அடிப்பவர் - ஆடுகளம் முக்கோண வடிவில் இருக்கும். இதன் கூர்முனையில் பந்தை அடிப்பவருக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கிருந்துதான் அவர் பந்தை அடிக்க வேண்டும்.
PITCHER - பந்து போடுபவர் - பந்து அடிப்பவரின் இரு பக்கமும் சம அளவில் நீண்டு ஆடுகளத்திற்குள் ஒரு சதுர வடிவ புல் தரை அமைப்பு இருக்கும். இதன் நடுவில், சற்றே உயர்த்தி ஒரு வட்டப்பகுதி இருக்கும். அங்கிருந்து தான் பந்து, பந்து அடிப்பவரை நோக்கி வீசப்படும்.
CATCHER - பந்து அடிப்பவர் - அடிக்காமல் விடும் பந்துகளை பிடித்து திருப்பி அனுப்புவது இவருடைய பங்கு.
இவர்களை தவிர்த்து, அடிக்கப்படும் பந்துகளை பிடித்துப் போடுபவர்கள் (7 பேர்) களத்தின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்."
Q9. பேஸ் பால் விளையாடுவது பற்றி கூறுக.
கிரிக்கெட்டைப் போலவே இந்த விளையாட்டிலும் இன்னிங்ஸ் (INNINGS)- முறை, ஒரு அணியின் ஆட்டம் என்ற பகுதியும் உண்டு. ஆனால் இந்த விளையாட்டு 9 இன்னிங்ஸ் கொண்ட து. இதில் ஒரு இன்னிங்ஸ் என்பது இரு அணிகளும் ஒரு முறை விளையாடி முடிக்க வேண்டும். இவ்வாறாக ஒன்பது இன்னிங்ஸ் முடிவில் எந்த அணி அதிகமான ரன்கள் (ஓட்டங்கள்) எடுக்கிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாகிறது.
Q10. பேஸ் பால் விளையாட்டில் ஒரு ரன் (ஓட்டம்) என்பது என்ன?
"பந்து அடிப்பவர் நிற்கும் இட த்திலிருந்து களத்தின் உள்பக்கமாக ஒரு சதுரமிருக்கும். அந்த சதுரத்தின் நடுவில் ஒரு வட்டம் இருக்கும். அந்த வட்ட த்திலிருந்து பந்து போடப்படும் (எறியப்படும்). அந்த சதுரத்தின் மூலையிலும் ஒரு சிறிய சதுரம் இருக்கும். எறியப்படும் பந்தை அடித்துவிட்டு, அடிக்கப்பட்ட பந்து, பிடிக்கப்பட்டு எறியப்படுவதற்கு முன், பந்தை அடித்தவர், ஒவ்வொரு சிறிய சதுர (பெரிய சதுரத்தின் மூலை)ங்களையும் தொட்டு கடந்து, பந்து அடிக்கப்பட்ட இட த்திற்கு திரும்பி வந்து சேர்ந்தால், அது ஒரு ஓட்டம் என கணக்கிடப்படும். குறிப்பாக, பந்தை அடித்து விட்டு ஓடும்போது, மட்டையை கீழே போட்டு விட்டு ஓட வேண்டும். இவ்வாறாக, அடிக்கப்பட்ட பந்து, தரையில் பட்டு, பிடிக்கப்பட்டு, உள் நோக்கி எறியப்படும் போது, பந்து அடித்தவர் ""அவுட்"" ஆகாமல் இருக்க, அந்த சிறு சதுர மூலைகளில் நின்று கொள்ளலாம். அவ்வாறு நின்று வரும்போது, ஒரு முழுச் சுற்று முடித்தால் தான், ஒரு ஓட்டமாக கணக்கிடப்படும்."
Q11. பேஸ் பால் விளையாட்டில் பந்தடிக்கும் ஒருவர் அவுட் ஆகும் முறைகள் என்ன?
"1. IN THE AIR/FLYOUT : ஒருவரால் அடிக்கப்படும் பந்து தரையில் விழுவதற்கு முன், ஆடுகளத்திற்குள் பிடிக்கப்படுவது. கிரிக்கெட்டில் CATCH போல.
2. TAG OUTS : பந்தை அடித்தவர், மட்டையை கீழே போட்டுவிட்டு, சதுரத்தின் அடுத்த மூலையை நோக்கி ஓடத் தொடங்குவார். இந்நிலையில், அடிக்கப்பட்ட பந்தை தரை மார்க்கமாக பிடித்து அடுத்த வீரரிடம் வீச, அவர் பந்தை கையில் பிடித்துக் கோண்டே, ஓடிக் கொண்டிருக்கும் வீரரை, ஒரு மூலைக்கு சென்றடையும் முன், அவரைத் தொட்டு விட்டால் அவர் அவுட். கிரிக்கெட்டில் ரன் அவுட் போல.
3. FORCE OUT : இதுவும் மேலே குறிப்பிட்டது போலவே ஆனால் இந்த அவுட்டாகும் முறை, பெரிய சதுரத்தின் மூன்று சதுரங்களிலும், இதற்கு முன் பந்தை அடித்தவர்கள் ஏற்கெனவே நின்று கொண்டிருக்கும் போது, நான்காவதாக வந்து பந்தை அடித்து ஓடும் நபரை பற்றிய ஒரு அவுட்டாக்கும் முறை. இது அனுபவ பூர்வமாக மட்டுமே நன்கு புரியும்.
4. STRIKE OUT : பந்தை அடிப்பதற்கு போடப்படும் பந்தை அடிக்காமல் விடுவதினால் ஏற்படக்கூடிய அவுட் முறை. இதற்குள் சில விதிமுறைகள் உள்ளன. இதுவும் அனுபவ பூர்வமாக நன்கு புரிந்து கொள்ளலாம்."
Q12. தற்கால பேஸ் பால் விளையாட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அலெக்ஸாண்டர் கார்ட் ரைட், அமெரிக்கா.
Q13. பேஸ் பால் விளையாட்டின் விதிமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
KNICKER BOCKER RULES.