Khub.info Learn TNPSC exam and online pratice

பூமி -- ஒரு கிரகம்

Q1. பூமி என்பது என்ன?
சூரியனை சுற்றிவரும் ஒரு கிரகம்.

Q2. பூமி ஒரு கிரகமாக சூரியனிலிருந்து எந்த நிலையில் உள்ளது?
மூன்றாவது.
Q3. நிறையில் (mass), பூமி கிரகத்தின் நிலை என்ன?
5 வது பெரிய கிரகம்.
Q4. பூமி கிரகத்தின் வடிவம் என்ன?
தட்டை கோளவுருவு -- Oblate Spheroid.
Q5. பூமியின் வடிவத்தை முதல் முதலில் முன் வைத்தவர் யார்?
"ஃபெர்டினாண்ட் மேகல்லன் -- போர்ச்சுகல் -- 1480-1521 -- உலகின் புகழ்பெற்ற முதல் மாலுமி. "
Q6. பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் என்ன?
12755 கி.மீ.
Q7. துருவத்தில் பூமியின் விட்டம் என்ன?
12712 கி.மீ
Q8. பூமியின் சராசரி விட்டம் என்ன?
12734 கி.மீ
Q9. பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு என்ன?
40,075 கி.மீ
Q10. துருவத்தின் பூமியின் விட்டம் என்ன?
40024 கி.மீ
Q11. பூமியின் பூமத்திய ஆரம் என்ன?
6377 கி.மீ
Q12. பூமியின் மொத்த பரப்பளவு எவ்வளவு?
510,100,500 ச.கி.மீ (51,01,00,500)
Q13. பூமியின் மொத்த நிறை எவ்வளவு ?
5.972 × 10^24 kg
Q14. பூமியின் மொத்த பருமன் எவ்வளவு?
1083208840000 கன கி.மீ
Q15. சூரியனிலிருந்து பூமியின் சராசரி தூரம் என்ன?
149407000 கி.மீ
Q16. பூமி தன் சொந்த அச்சில் தன்னைத்தானே சுற்றுவதற்கு ஆகும் நேரம் …..
23 மணி 56 நிமிடம் 40.09 வினாடிகள் (ஒரு நாள்)
Q17. மீன்வழி நாள் -- Side Real Day என்பது என்ன?
பூமி தினமும் கிழக்கிலிருந்து மேற்காக சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்
Q18. சூரியனை பூமி ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 45.5 வினாடிகள். இது சூரிய ஆண்டு எனப்படும்.
Q19. பூமியில் மிக உயரமான இடம் எது?
எவரெஸ்ட் சிகரம் உச்சி -- கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரம்.
Q20. பூமியின் மிக தாழ்வான பகுதி எது?
"இஸ்ரேல் -- ஜோர்டான் நாடுகளுக்கிடையில் உள்ள கடற்கரை -- கடல் மட்டத்திலிருந்து 396 மீட்டர் கீழே உள்ளது. “Shores Of Dead Sea” எனப்படும் பகுதி. "
Q21. பூமி ஒரு மணி நேரத்தில் எத்தனை டிகிரி சுழலுகிறது?
15 டிகிரி
Q22. பூமியில் புதைந்திருக்கும் வேதிப்பொருளும், உலோகப் பொருளின் அளவு என்ன?
அதிகமாக உள்ளது மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
எண் பொருள் அளவு
1. ஆக்ஸிஜன் 46.5%
2. சிலிகான் 27.72%
3. அலுமினியம் 8.13%
4. இரும்பு 5.1%
5. கால்சியம் 3.63%
6. சோடியம் 2.85%
7. பொட்டாசியம் 2.62%
8. மேக்னீசியம் 2.09%
Q23. பூமியில் அதிகமாக கிடைக்கும் வாயு உறுப்பு (gaseous chemical element) எது?
ஆக்ஸிஜன் Oxygen 46.5%
Q24. பூமியில் அதிகமாக கிடைக்கும் வேதி உறுப்பு (chemical element) எது?
சிலிகான் Silicon 27.72%
Q25. பூமியில் அதிகமாக கிடைக்கும் உலோகப்பொருள் எது?
அலுமினியம் Aluminium 8.13%
Q26. பூமியில் கால்சியம் எந்த அளவு கிடைக்கிறது?
3.63%
Q27. பூமியில் எந்த அளவு இரும்பு கிடைக்கிறது?
5.10%
Q28. பூமியில் எந்த அளவு சோடியம் கிடைக்கிறது?
2.85%
Q29. பூமியில் பொட்டாசியம் எந்த அளவு பரவியுள்ளது?
2.62%
Q30. பூமியில் மாக்னீசியம் எந்த அளவு கிடைக்கிறது?
2.09%
Q31. பூமியின் "அச்சு" “Axis” என்பது என்ன?
பூமியின் மத்தியில் வடக்கு தெற்காக பாயும் ஒரு கற்பனைக் கோடு.
Q32. பூமியின் சாய்வு கோணம் -- angle of inclination என்ன?
பூமியின் சுழற்சியின் மட்டத்துக்கு 66.5 டிகிரி சாய்வாக உள்ளது.
Q33. பூமியின் சுழற்சியால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன?
1. பகல் இரவு ஏற்படுவது.
2. காற்று மற்றும் கடல் நீரோட்ட மாற்றங்கள்
3. பூமியில் ஒரு இடத்தை நிர்ணயிக்க முடியும்.
Q34. பூமி, விண்ணில் எதை, எந்த வடிவத்தில் சுற்றி வருகிறது?
"சூரியனை சுற்றி நீள் வட்டத்தில் சுற்றுகிறது. அதே சமயம் தன் அச்சில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது. "
Q35. சூரிய ஆண்டு என்பது என்ன?
சூரியனைச் சுற்றி வர பூமி எடுத்துக்கொள்ளும் காலம்.
Q36. பூமி சுழலுவதால் ஏற்படுவது …..
பருவ மாற்றம்
Q37. பூமியில் தரைப்பகுதி எவ்வளவு?
148950500 ச.கி.மீ – பூமியின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு
Q38. பூமியில் நீர்ப்பகுதி எவ்வளவு?
361149700 ச.கி.மீ -- பூமியின் மொத்த பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு.
Q39. பூமியின் வெளிப்புற வெப்ப இயக்கியை எந்த சக்தி இயக்குகிறது?
சூரியன்
Q40. "புவியியல் நிபுணர்கள் பூமியின் மிக அதிக பரிமாணமுள்ள பகுதியை எவ்வாறு அழைக்கிறார்கள் ? "
மேண்டில் -- Mantle.
Q41. "Circumnavigation என்ற ஆங்கில வார்த்தை புவியியலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? (இது ஒரு பொதுவான ஆங்கில வார்த்தை = சுற்றி வருவது எனப் பொருள்) "
பூமியை கடற்பகுதியாக சுற்றி வருவது.
Q42. பூமியை கடற்பகுதியாக முதலில் சுற்றி வந்த மாலுமி யார்?
ஃபெர்டினாண்ட் மெகல்லன் -- போர்ச்சுகல் -- 1480 - 1521
Q43. "அரிப்பு" - " Erosion " என்பது என்ன?
"பூமியின் தரைப்பகுதி தொடர்ச்சியாக இயற்கையின் பல காரணங்களால் -- மழை, ஆறு, பனி, காற்று -- அரிக்கப்படுவது. "
Q44. "படிமங்கள்" -- " Fossils " என்பது என்ன?
"அழிவுக்குப் பிறகு, பூமியின் உயிரினங்களின் பாகங்கள் பல காலங்களுக்கு தரையில் புதையுண்டு படிமங்களாக மாறுகின்றன. பொதுவாக இவை எலும்புகளும், கடினமான பாகங்களுமாக இருக்கும். "
Q45. " Hinterland " என்பது என்ன?
"வணிக ரீதியாக பயன்படக்கூடிய கடலோர (துறைமுகங்களை சார்ந்து) நிலப்பகுதிகள். "
Q46. "அடிவானம்" -- " Horizon " என்பது என்ன?
"கண்ணுக்கு புலப்படும் பூமியின் (தரையின்) கடைசி எல்லை -- எங்கு பூமி, கடல் மற்றும் வானம் சந்திப்பதாக தோன்றுமிடம். "
Q47. " கரி" "Peat" என்பது என்ன?
"பல காலங்களுக்கு தரையில் புதையுண்டு அரக்கு/கருப்பு நிறத்தில் காணப்படும் கரிமச்சேர்மானம். இவை பொதுவாக மரம்/செடி/கொடிகளுடையது ஈரப்பதம் மிகுந்த சதுப்பு நிலங்களில் காணப்படும். இவை எரி பொருளாகவும் பயன்படக்கூடியது. "
Q48. "Terrain" "நிலப்பரப்பு" என்பது என்ன?
எந்த ஒரு நாட்டின் இயற்கை வளங்களுடன் பரந்து கிடக்கும் நிலப்பரப்பு.
Q49. "அந்திப்பொழுது" " Twilight " என்பது என்ன?
"சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவுக்கு முன் தோன்றும் வானத்தில் ஏற்படும் அதிக வெளிச்சமில்லாத நிலை. "
Q50. "கண்டத்திட்டு" " Continental Shelf " என்பது என்ன?
தரைமட்டத்தை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதி (600 அடி ஆழத்துக்கு கீழுள்ள பகுதி)
Q51. " கண்ட சாய்வு" " Continental Slope " என்பது என்ன?
"தரையை ஒட்டிய கண்டத்திட்டு கடலுக்குள் இறங்கி சுமார் 12000 அடியை எட்டும் பகுதி கண்டசாய்வு எனப்படுகிறது. "
Q52. "கரையோரப்பகுதி" " Littoral " என்பது என்ன? ?
ஒரு நாட்டின் கடலை ஒட்டிய கரையோரப் பகுதி.