Khub.info Learn TNPSC exam and online pratice

"பூமியின் இயற்கையாக அமைந்துள்ள அமைப்புகள் EARTH’S PHYSICAL PROPERTIES:"

Q1. பூமியில் உள்ள இயற்கை அமைப்புகளை எவ்வாறு பொது வகைப் படுத்தப்பட்டுள்ளது?
1. கற்கோளம் - Lithosphere
2. நீர்க்கோளம் -- Hydrosphre
3. உயிர்க்கோளம் -- Biosphere.

Q2. "கற்கோளம் -- Lithosphere " என்பது என்ன?
பூமியின் மேலும் கீழுமாக அமைந்துள்ள கற்பாறைப் பகுதி - பூமியின் மேல்பகுதி.
Q3. பூமியின் எந்த ஆழம் வரை கற்கோளம் என அழைக்கப்படுகிறது?
தரைமட்டத்திலிருந்து 30 to 50 கி.மீக்கு கீழும், கடல் மட்டத்திலிருந்து 12 கி.மீ கீழும்.
Q4. மலைப்பகுதியில் கற்கோளம் என்பது ……
மலையின் அதிக கனப்பகுதி கடல் மட்டத்தின் கீழ் 12 கி.மீ வரை.
Q5. பூமியின் கொள்ளளவிலும் நிறையிலும், கற்கோளம் எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
கொள்ளளவில் 1 சதவிகிதமும், நிறையில் .4 சதவிகிதமும்.
Q6. பூமியின் பரப்பில் கற்கோளம் மற்றும் அதைச் சார்ந்த அமைப்பு எவ்வளவு உள்ளது?
மூன்றில் ஒரு பங்கு
Q7. நீர்க்கோளம் -- Hydrosphere என்பது என்ன?
ஒரு கிரகத்தில் பரவியுள்ள நீர்ப்பகுதி. பூமியில் இது மூன்றில் இரண்டு பகுதியாகும்.
Q8. உயிர்க்கோளம் -- Biosphere என்பது என்ன?
உலகில் கிரகங்களில் வாழும் அனைத்து உயிரினங்கள் -- தாவரங்கள், விலங்குகள்
Q9. பூமி எத்தனை அடுக்குகளாக -- layers வகைப்படுத்தப்பட்டுள்ளது?
நான்கு -- 1. மேல் தட்டு Crust 2. Mantle 3. வெளி மையம் Outer Core 4. உள் மையம் Inner Core.
Q10. பூமியின் மேல்தட்டின் Crust சராசரி ஆழம் என்ன?
30 to 35 கி.மீ சராசரியாக.
Q11. பூமியின் இரண்டாவது தட்டின் சராசரி ஆழம் என்ன?
Mantle – சராசரியாக 2900 கி.மீ
Q12. பூமியின் வெளிமையத்தின் Outer core ஆழம் மற்றும் அதன் உள்ளடக்கம் என்ன?
"சராசரியாக 2100 கி.மீ. உருகிய பொருள் -- இதில் பல தட்டுகள் உள்ளன. இங்கு மாக்னீசியம் நிறைந்த மிகவும் வெப்பமான பாறைகள் நிறைந்துள்ளது. "
Q13. பூமியின் உள் மையத்தின் inner core ஆழமும் உள்ளடக்கமும் என்ன?
சராசரியாக 13700 கி.மீ. இரும்பு மற்றும் நிக்கலை உள்ளடக்கிய பகுதி.
Q14. பூமியின் உள் மையம் பூமியுடன் எவ்வகையில் முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ளது?
பூமியின் காந்த சக்திக்கு இதுவே காரணமாயுள்ளது.
Q15. பூமியின் மையம் Core என்பது என்ன?
"பூமியின் மிகவும் அடர்த்தியான உள்பகுதி - இதன் விட்டம் சுமார் 6950 கி.மீ. இரும்பு மற்றும் நிக்கலை உள்ளடக்கிய பகுதி. "
Q16. "பூமிப் பெருங்குழி வளைவு -- Geosyncline என்பது என்ன?
பூமியின் மேல்தட்டில் உள்பக்க கீழ்நோக்கிய வளைவு.
Q17. தாழ்நிலம் -- Basin என்பது என்ன?
"பூமியின் மேல்தட்டில் அமைந்துள்ள பெரிய பரப்பிலான வெற்று இடம்/தொட்டி போன்ற அமைப்பு. இந்த இடம் கடல் நீரால் நிரம்பியிருந்தால் அது ocean basin எனவும் நிலக்கரியால் நிரம்பியிருந்தால் coal basin எனவும் அழக்கப்படுகிறது."
Q18. பூமியில் Bog என அழைக்கப்படுவது என்ன?
"நீர் நிரம்பிய, மென்மையான, அழுகிய தாவரங்கள் மேல் மிதக்கும் ஒரு பகுதி. இவையே நாளடைவில் கரியாக மாறுகிறது. "
Q19. பூமியின் "சுழலகற்சி விசை -- Corolis Force " என்பது என்ன?
"பூமியின் சுழற்சியால் வெளிவரும் விசை சாய்வு அழுத்தத்தினால் ஏற்படுத்தும் காற்று திசை மாற்றம். "
Q20. "மேற்பரப்பு நீக்கம் -- Denudation " என்பது என்ன?
"பூமியின் பரப்பில் பொதுவாக இயற்கையால் -- சூரிய வெளிச்சம், காற்று, மழை, பனி மற்றும் கடலால் ஏற்படும் தேய்மானம் (மேல்பரப்பு நீக்கம்). இந்த தேய்மானத்தால் கிடைக்கும் பொருள் வேறு இடத்தில் சேர்க்கப்படுகிறது. "
Q21. சராசரி மனிதனின் எண்ணத்தில், பூமியின் அமைப்பின் உள்ளடக்கம் என்ன?
மண், பாறை, நீர், தாவரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.