Khub.info Learn TNPSC exam and online pratice

பாறையும் மண்ணும் -- ROCKS AND SOILS

Q1. பூமியின் பரப்பில் பாறையும் மண்ணும் எந்த அளவு பரவியுள்ளது?
மூன்றில் ஒரு பங்கு

Q2. பாறைகளின் வகைகள் யாவை?
1. அனற்பாறை -- Igneous rocks
2. வண்டல்மண் பாறை -- Sedimentary rocks
3. உருமாறிய பாறை -- Metamorphic rocks.
Q3. அனற்பாறைகள் என்பது என்ன?
"அதிக வெப்பத்தால் உருகிவிடும் மண் பூமியின் உட்பகுதியின் குளிர்ச்சியால் கடினமான பாறையாகும். "
Q4. பூமியின் எவ்வளவு பகுதி அனற்பாறைகளால் ஆனது?
95% .
Q5. அனற்பாறைகளை ------------ எனவும் அழைப்பார்கள்.
முதன்மை பாறை. ஏனெனில் இதிலிருந்து தான் மற்ற பாறைகள் உருவாகின்றன.
Q6. அனற்பாறைகளின் வகைகள் யாவை?
"கருங்கல் (க்ரானைட்) Granite – கண்டத்தில் அதிகமாக பரவியிருக்கும் பாறை. எரிமலை பாறை வகை -- Basalt – கடலின் ஆழ் பகுதியில் காணப்படுவது. எரிமலை பாறை -- எரிமலைகளால் வெளிவரும் வெப்பகுழம்புகள் குளிர்ச்சியால் கடினப்பட்டு பாறையாவது. பூமியின் வெளிப்பரப்பில் காணப்படுவது. "
Q7. ஆழ்கடலில் காணப்படும் பாறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பசால்ட் Basalt.
Q8. எரிமலைப் பாறைகள் Volcanic rocks எவ்வாறு ஏற்படுகிறது?
எரிமலைகளால் வெளிவரும் வெப்பகுழம்புகள் குளிர்ச்சியால் கடினப்பட்டு பாறையாவது
Q9. பூமியின் மேல்தட்டில் crust அதிகமாக காணப்படும் பாறை வகை எது?
கருங்கல் -- க்ரானைட் - Granite.
Q10. வண்டல்மண் பாறை -- Sedimentary rocks என்பது என்ன?
கடற்படுக்கையில் வண்டல்கள் கடினமாகி பாறையாக மாறுவது.
Q11. பூமியின் பரப்பில் வண்டல்மண் பாறை sedimentary rocks எந்த அளவுக்கு உள்ளது?
சுமார் 5% . ஆனால் பூமியின் நிறையில் இது 75% க்கு பரவியுள்ளது.
Q12. வண்டல் மண் பாறையின் உள்ளடக்கம் என்ன?
"வெப்பபாறையிலிருந்து வெளியேற்றப்பட்ட துகள்கள், தாவரக் கழிவுகள், கடல் சார் உயிரின கழிவுகள். "
Q13. வண்டல்மண் பாறை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடுக்குப் பாறை -- STRATIFIED ROCKS -- இவை கிடைமட்ட நிலையில் அமையும்.
Q14. வண்டல் மண் பாறையாக எடுத்துக்கொள்ளும் காலம் சுமாராக …..
மில்லியனுக்கு (10 லட்சம்) மேலான ஆண்டுகள்
Q15. வண்டல் மண் பாறைக்கு எடுத்துக்காட்டுகளை கூறுக
"1. ஜிப்சம் 2. சுண்ணாம்பு 3. சுண்ணாம்புக்கல் 4. கரி 5.பழுப்பு நிலக்கரி 6. ஆந்த்ராசைட் கரி 7. சரளை 8. கூழாங்கல் 9. மணற்கல் 10. களிமண் 11. களிமண் கற்கள். "
Q16. ஜிப்சம், சுண்ணாம்பு, சுண்ணாம்புக் கல் இவை எவ்வாறு அமைகின்றன?
வேதி மாற்றங்களால் ஏற்படும் வண்டல் சேர்க்கையால் ஏற்படுவது.
Q17. கரி, பழுப்பு நிலக்கரி, ஆந்த்ராசைட் கரி ஆகியவை எவ்வாறு அமைகின்றன?
தாவர கழிவு மற்றும் கடல்சார் உயிரின கழிவு வண்டல்களாலும் ஏற்படுவது.
Q18. சரளை, கூழாங்கல், மணற்கற்கள், களிமண் கற்கள் எவ்வாறு அமைகின்றன?
நீரில் கலந்து வரும் கழிவு வண்டல் சேர்ந்து ஏற்படுவது.
Q19. உரு மாற்றம் -- Metamorphism என்பது என்ன?
பாறைகளின் அமைப்பில், அழுத்தம், வெப்பம் ஆகியவைகளால் ஏற்படுவது.
Q20. உருமாற்ற பாறைகள் என்பது என்ன?
வெப்ப பாறைகள் அழுத்தம், உயர் வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் உருமாற்றம்.
Q21. உருமாற்ற பாறைகள் -- சில எடுத்துக்காட்டுகள் ………
ஸ்லேட் -- SLATE: GNEISS, QUARTZITE, MARBLE.
Q22. மண் எவ்வாறு ஏற்படுகிறது?
"இயற்கை காரணங்களான காற்று, மழை, சூரியன், பனி போன்றவைகளால் பாறை, கனிம மற்றும் இதர தாவர துகள்கள் கலந்த கலவையே மண். "
Q23. "மேல் மண் -- Top Soil " என்பது என்ன?
"மண்ணின் மேல் பகுதி - பொதுவாக 15 முதல் 20 செ.மீ வரை உள்ள பகுதி. இதில் உயிர்ம பொருட்களும், நுண்ணுயிரிகளும் நிறைந்ததாக இருப்பதால், தாவரங்கள் தங்கள் வேர்களை பரப்புவதற்கு உதவியாக இருக்கும். "
Q24. வண்டல் மண் -- Alluvial Soil என்பது என்ன?
வண்டல் அல்லது மண், ஆறு மற்றும் நீரோட்டத்தால் சேருவது.
Q25. கருப்பு மண் -- Black Soil என்பது என்ன?
Muck என ஆங்கிலத்தில் கூறுவர். சேற்றுமண்ணிலிருந்து வெளி வரும் உயிரின கழிவு.
Q26. மணல் என்பது என்ன, எவ்வாறு ஏற்படுகிறது?
"சிறுமணியான மணல். நீரோட்டம் மற்றும் இதர காரணங்களால் பாறைகள் ஒன்றுக்கு மோதிக்கொள்ளும் போது ஏற்படும் துகள்கள் தான். "
Q27. "பாறைப்படுக்கை -- Bed Rock என்பது என்ன?
"எந்த காரணங்களாலும் பாதிக்கப்படாமலும் அரிக்கப்படாமலும் முழு பாறையாக பூமிக்கடியில் இருக்கும் பாறைகள். "
Q28. "க்ராஃபைட் - கடுங்கரி -- Graphite " என்பது என்ன?
ஒரு மென்மையான கார்பன் நிறைந்த கனிமம்.
Q29. செந்நிற களிமண் -- Laterite என்பது என்ன?
"நுண்துளைகள் கொண்ட செவ்வண்ணம் சிறு பாறைக்கற்கள். இவை இயற்கை அரிப்பினால் வெப்பமும் ஈரப்பதமும் - humid Tropical - அதிகம் நிறைந்த பகுதிகளான இந்தியா, இந்தோனேசியா, சூடான், தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும். "
Q30. களிமண் -- Laterite பொதுவாக எதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது?
சிமெண்ட் -- Cement.
Q31. எவ்வகையான பாறைகள் ஈரப்பதத்தை அதிகம் தக்கவைக்கும்?
மணற்கற்கள் -- Sandstone.
Q32. சிராய்ப்பு -- Abrasion (புவியியல் தொடர்) எனப்படுவது என்ன?
"இயற்கை நடவடிக்கைகளான காற்று, நீர், பனி, மற்றும் சிதறல்களின் உரசல்களால் பூமியின் தரைப்பகுதியில் ஏற்படுவது. "
Q33. இயற்கையான திரள் வளர்ச்சி -- Accretion என்பது என்ன?
"நீரோட்டத்தால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் முக்கியமாக நீரால் பயணிக்கும் பொருட்கள் சேருவது. "
Q34. தேய்மானம் -- Attrition எனப்படுவது என்ன? ?
"தொடர்ச்சியாக இயற்கையின் காற்று, நீர், பனி போன்றவைகளால் பாறைகள் சிறு துகள்களாக மாற்றப்படுவது. "
Q35. புவியியல் ரீதியாக உச்சம் -- Altitude என்பது என்ன?
ஒரு இடத்தின் உயரம், கடல் மட்டத்தை அடிப்படையாக கொண்டு அளவிடப்படுகிறது.
Q36. "எந்த இடத்தின் கடல் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, வேறொரு இடத்தின் உயரம் நிர்ணயிக்கப்படுகிறது? "
"லிவர்பூல், இங்கிலாந்து. கடல் மட்டம் அடிக்கடி பல இடங்களில் மாறுபட்ட நிலையில் இருப்பதால், ஒரு சராசரி கடல்மட்ட இடம் தேர்வு செய்யும் நிலையில், லிவர்பூல் தேர்வு செய்யப்பட்டு, அதை பூஜ்ய மட்டமாகக் கொண்டு உலகின் மற்ற இடங்களின் உயரம் நிர்ணயிக்கப்படுகிறது. "
Q37. "ஆர்ட்டிசியன் பேசின் -- Artesian Basin என்பது என்ன?
"கிண்ணம் போன்ற அமைப்பில் நுண்துளைகள் கொண்ட பாறை, நுண்துளைகள் இல்லாத பாறைகளுக்கு இடையில் அமைந்து, அதில் நீர்த்தேக்கம் ஏற்படுவது. "
Q38. "ஆர்ட்டிசியன் கிணறு -- Artesian Well " என்பது என்ன?
"ஆர்ட்டிசியன் பேசினில் நிறைச்செறிவு பெற்ற பாறைத் தட்டில் துளைக்கிணறு மூலம் ஏற்படுத்தப்படும் கிணறு. "
Q39. "மென்பாறைக்கோளம் -- Astheosphere என்பது என்ன?
"மென்மையான குழை நீர்ம நிலையில் இருக்கும் திரவத்தின் மீது கண்டங்களும் கடல் அடிமட்ட தரைப் பகுதியும் சுழன்றுகொண்டிருக்கிறது. "
Q40. "ஒளி வட்டம் -- Aureole" என்பது என்ன?
"அனற்பாறையை சுற்றியுள்ள ஒரு பகுதி -- உயர் வெப்ப எரிமலை குழம்புகளின் வெப்பம் மற்றும் வேதி மாற்றங்களால் உரு மாற்றம் பெரும் பகுதி. "
Q41. "பெயர்ச்சி பிளவு -- Fault " என்பது என்ன?
ஒரு மட்ட நிலை பாறைப்பிளவு நகரக்கூடிய தன்மையைக் கொண்டதாக உடையது.
Q42. "புதைமணல் -- Quicksand " என்பது என்ன?
"ஈரப்பதம், தளர்வான, நிலையற்ற ஒரு மணல் குவியல். பொதுவாக ஒரு ஆற்றின் முகப்பு (கடலில் கலக்குமிடம்) பகுதியில் அமையக்கூடியது. "
Q43. "நிலச்சரிவு Land Slide" என்பது என்ன?
"பொதுவாக மலைப்பகுதிகளில் உயர் மட்டத்திலிருந்து கீழ்நோக்கி ஏற்படும் மண் சரிவு. இது பொதுவாக பூமி அதிர்ச்சியாலும், பெரு மழையாலும் ஏற்படக்கூடியது. "
Q44. கண்டங்களும், கடலின் தரைமட்டமும் எதன் மீது மிதப்பதாக கூறப்படுகிறது?
புவி மென்பாறைக்கோளம் -- Asthenosphere.
Q45. வண்டல் மண்ணில் இல்லாதது என்ன?
நைட்ரஜன் -- Nitrogenous content.
Q46. " Monolith " என்ற தொடர் பாறையைக் குறிக்கிறது. அது என்ன?
"மிகப்பெரிய தனி ஒரு பாறை. பொதுவாக பெரிய சிலைகள் செய்வதற்கு இவ்வகை பாறைகளை தேர்வு செய்வார்கள். "