Khub.info Learn TNPSC exam and online pratice

மலைகள் -- இந்தியா மற்றும் வெளி நாடுகள் MOUNTAINS – INDIA AND ABROAD:

Q1. மலை என்பது என்ன?
பாறைப் பகுதிகள் தரையில் சமவெளியில் இருந்து உயரமான அளவிற்கு உயர்ந்திருக்கும் பகுதி.

Q2. மலை என்பது எவ்வாறு கணைக்கிடப்படுகிறது?
இது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. (1) தரை சமவெளியில் இருந்து 3000 மீ/10000 அடிக்கு மேல் உயர்ந்திருப்பது (2) 3000 மீ/10000 அடிக்கு குறைவாக இருப்பது என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இரண்டுமே மலை என கருதப்படுகிறது.
Q3. குன்று என்பது என்ன?
குறைவான உயரம் கொண்ட, பாறை அல்லது மண் மேடுகள்.
Q4. பூமியின் எவ்வளவு பகுதி மலைகளால் கவரப்பட்டுள்ளது?
சுமார் 24 சதவிகிதம்.
Q5. பூமியின் எந்த கண்டத்தில் அதிகமாக மலைப்பகுதி உள்ளது?
ஆசியா -- 54 சதவிகித மலைப்பகுதி இந்தக் கண்டத்தில் உள்ளது.
Q6. பூமியின் எந்த கண்டத்தில் குறைவான மலைப்பகுதி உள்ளது?
ஆப்பிரிக்கா -- மொத்த மலைப்பகுதியில் சுமார் 3 சதவிகிதம் மட்டுமே இங்குள்ளது.
Q7. மலைகளின் உதவியால் மனித குலத்துக்கி கிடைப்பது?
மழை, ஆறுகள், பனி உருகலின் மூலமாக ஆறுகளும் நீரும். பசுமை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
Q8. “Montane” என ஆங்கிலத்தில் கூறப்படுவது என்ன?
மலையும், மலை சார்ந்த அனைத்து இயற்கை வளமும்.
Q9. புவியியல் ரீதியாக மலைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன?
1. மடுப்பு -- Fold 2. தொகுதி -- Block and 3. எரி மலைகள் -- Volcanic.
Q10. மடுப்பு மலைகள் -- Fold Mountains என்பது என்ன?
சமவெளிக்கு மேலும், கடலுக்கு அடியிலும், பாறைகள் சிதைந்து மடிப்பு போல் ஆங்காங்கே சிறிய சுருக்கங்கள் போல் குவிந்திருப்பது.
Q11. மடுப்பு மலைகளுக்கு Fold Mountains சில உதாரணங்கள் --
இமாலயம், ஆல்ப்ஸ், ஆண்டிஸ், ராக்கிஸ். Himalayas, Alps, Andes, Rockies.
Q12. மடுப்பு மலைகள் Fold Mountains ஏற்பட முக்கிய காரணாமாக இருப்பது?
தொடர் நில நடுக்கங்களால் ஏற்படுவது?
Q13. தொகுதி/தொகுப்பு மலைகள் -- Block Mountains என்பது என்ன?
பொதுவாக உயரமான பகுதிகள், அழுத்தத்தின் காரணமாக பிளவு பட்டு, இரு உயரப் பகுதிகளாகவும் இடையில் ஒரு பள்ளத்தையும் (பள்ளத்தாக்கு) உருவாக்கி அமைவது. இவை பொதுவாக செங்குத்தாக அமையும். இவ்வகை மலைகளுக்கு உதாரணம் -- விந்திய - இந்தியா; வோஜெஸ் - ஃப்ரான்ஸ் மற்றும் கரும் வனம் -- ஜெர்மனி.
Q14. எரிமலைகள் என்பது என்ன?
மலைகள், உச்சியில் உள்ள துவாரங்கள் மூலமாக, உள்ளிருந்து அக்னி குழம்புகளை அழுத்தத்தின் உச்சியை எட்டும் போது, வெளியே தள்ளுவது எரிமலைகள். உதாரணம் -- வெசுவியஸ் மலை, இத்தாலி.
Q15. ஆங்கிலத்தில் "Summit" என்பது மலையின் எந்த பகுதியைக் குறிக்கிறது?
ஒரு மலையின் உச்சி.
Q16. “Cordillera” எனும் ஆங்கிலச் சொல் மலையை சார்ந்து எதைக் குறிக்கிறது?
உண்மையில் இது ஒரு ஸ்பானியா சொல் -- பொருள் -- சங்கிலி chain – தென் மற்றும் வட அமெரிக்கா ஆண்டிஸ் மலைத்தொடர் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q17. ஆங்கிலத்தில் “Cliff” எனப்படுபவது மலையின் எந்த பகுதியை குறிக்கிறது?
செங்குத்தான ஒரு மலைப்பகுதியின் முகப்பகுதி. இவை பொதுவாக அலைகளினால் ஏற்படும் தேய்மானத்தினால் உருவாகிறது.
Q18. மலைப்பகுதிகளில் காணப்படும் உதிரிக் கற்கள் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Scree.
Q19. பனிச்சரிவு = Avalanche எனப்படுவது என்ன?
திடீரென, மலைப்பகுதியில் உறைந்திருக்கும் பனி, சிதைந்து, மிக வேகமாக சரிந்து சமவெளியை நோக்கி, அழிவை ஏற்படுத்தும் வகையில், சரிந்து வருவதே. பொதுவாக இமாலயப் பகுதியில் ஏற்படுவது.
Q20. எவரெஸ்ட் சிகரத்திற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?
சர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவர், இந்த சிகரத்தின் உயரத்தையும் இருக்கும் இடத்தையும் சரியாக குறிப்பிட்டுக் கூறியதால், இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Q21. எவரெஸ்ட் சிகரம் என பெயரிட்டவர் யார்?
ஆன்ட்ரூ வாஹ், சர்வேயர் ஜெனரல் -- 1865. Andrew Waugh, Surveyor General of India in 1865.
Q22. எவரெஸ்ட் சிகரத்திற்கு முதன் முதலில் ஏறி சாதனை புரிந்தவர்கள் யாவர்?
29.5.1953. எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மற்றும் தென்சிங் நார்கே, இந்தியா.
Q23. எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறிய அணியின் தலைவராக இருந்தவர் யார்?
ஜான் ஹண்ட், இங்கிலாந்து. இவர் ராணுவத்தில் ப்ரிகேடியர் பதவி வகித்தவர்.
Q24. இமாலயம் -- Himalayas – என்ற பெயர் எவ்வாறு வந்தது?
ஹிமால் -- HIMAL என்பது ஒரு நேப்பாளிய மொழியில் மலையைக் குறிக்கிறது.
Q25. இமாலயம் எந்த கண்டத்தில் உள்ளது, அது எங்கெல்லாம் பரவியுள்ளது?
ஆசியா -- Asia -- இந்தியா, நேபாளம், மற்றும் திபெத்தில் அதிக பட்சமாக.
Q26. இமாலயம் எவ்வகை மலை?
Fold Mountains -- மடுப்பு மலை.
Q27. இமாலய அமைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை?
1. உலகின் உயரமான மலைகளில் 96 சதவிகிதம் இமாலயத் தொடரில் உள்ளது.
2. உலகின் உயரமான மலை - எவரெஸ்ட் சிகரம் -- 8848 மீட்டர் இங்குள்ளது.
3. உலகின் மிகப் பெரிய மலைத்தொடர் -- கரகோரம் மற்றும் இந்து குஷ் தொடர்களையும் சேர்த்து.
4. இத்தொடரில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைகள் 7200 மீ க்கு மேல் உள்ளவை.
5. இதனால் இதை "" Eight Thousanders"" என ஆங்கிலத்தில் அழைப்பர்.
Q28. இமாலய மலைக்குள்ள வேறு சிறப்புப் பெயர்கள் என்ன?
எய்ட் தௌசண்டர்ஸ் -- Eight Thousanders
சோகோரி மவுண்டன்ஸ் -- Chogori Mountains
சோகோரி காங்க்ரி -- Chogori Gangri
லம்பா பஹர் -- Lamba Pahar
தப்சாங் -- Dapsang
கெச் / கேத்து -- Kech or Ketu ( இதிலிருந்து வந்தது தான் K2 மவுண்ட்டன் பெயர்).
Q29. இமாலய மலைத்தொடர் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது?
பூட்டான், சீனா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்.
Q30. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
8848 மீட்டர்/29027 அடி.
Q31. எவரெஸ்ட் சிகரம் என்று முதன் முதலாக மனிதனால் கைப்பிடிக்கப்பட்டது?
29.5.1953
Q32. நேப்பாளிய மக்கள் இமாலல்யத்தை எவ்வாறு அழைப்பார்கள்?
சாகர் மாதா. Sagar Matha.
Q33. எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய மூத்த வயதானவர் யார்?
யுய்சிரோ மியுரா, ஜப்பான் -- 80 வயது -- May 20, 2013. அடுத்ததாக மிர் பகதூர் செர்ச்சான் -- நேபாளம் -- 76 + வருடங்கள்.
Q34. எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக ஏறிய தாய் மகள் ஜோடி யார்?
செர்ரில் மற்றும் நிக்கி பார்ட் -- ஆஸ்திரேலியா -- மே 2008.
Q35. எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறிய மனிதர் யார்?
அபா ஷெர்ப்பா -- Apa Sherpa – 21 முறை. இவருடன், ஃபூர்பா டாஷி யும், இந்த சாதனைக்குரியவர்.
Q36. இமாலயத்தில் உருவாகி இந்திய சமவெளிக்குப் பாயும் முக்கிய நதிகள் யாவை?
கங்கை, ப்ரம்மபுத்ரா, சிந்து. Ganges, Brahmaputra, Indus. ( சீனாவுக்கு யாங்ட்ஸே நதி)
Q37. இமாலயத்தின் எந்த பகுதியில் இந்திய காண்டாமிருகம் அதிகம் காணப்படும்?
தெராய் புல்வெளிமண்டலம். Terai Grasslands belt in the Himalayas.
Q38. பெரிய இமாலயப் பகுதி Greater Himalayas எனக் கூறப்படுவது எது?
ஹிமாத்ரி என்றும் அழைக்கப்படும். வட இமாலயப் பகுதியில் 6000 மீட்டருக்கு மேல் உள்ள மலைப் பகுதிகள். இதில் கஞ்சன் ஜங்கா என்பது 8598 மீ உயரம் கொண்டது உயரமான பகுதி. இது நேபாளம் பகுதி வரை செல்லுகிறது.
Q39. மத்திய இமாலயப் பகுதி -- Middle or Lesser என்பது என்ன?
இமாச்சல் என அழைக்கப்படுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, குளு, கங்ரா ஆகிய பகுதிகள் அடங்கும். இதன் சராசரி உயரம் 3700 முதல் 4500 மீட்டர் கொண்டது.
Q40. கீழ் இமாலயப்பகுதி -- Lower Himalayas என்பது என்ன?
இப்பகுதி ஷிவாலிக் எனவும் அழைக்கப்படுகிறது. இமாலயத்தின் அடிப்பகுதியில் தொடங்குகிறது. இதன் சராசரி உயரம் 600 மீட்டர்.
Q41. எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய, இரண்டு கால்களையும் இழந்த ஒரே மற்றும் முதல் மனிதர் யார்?
மார்க் இங்க்லிஸ் -- நியூசிலாந்து -- 15.5.2006. Mark Inglis, Newzealand on 15.5.2006.
Q42. எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண்மணி யார்?
ஜங்கோ தபீ, ஜப்பான் -- 16.5.1975 -- Junko Tabei, Japan on 16.5.1975.
Q43. குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்தியர் யார்?
அருண் வாஜ்பேயீ -- 17 வருடம் 11 மாதம் -- நொய்டா -- 21/22 மே 2010.
Q44. உலகிலேயே மிகச் சிறிய வயதில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவர் யார்?
ஜோர்டான் டேவிட் ரொமேரோ -- அமெரிக்கா -- 13 வயது 10 மாதம் -- 22.5.2010.
Q45. எவரெஸ்ட் சிகரத்தை கண் பார்வை இல்லாத ஒருவர் ஏறியது யார்?
எரிக் வெயென்மேயர் -- அமெரிக்கா -- 25.5.2001
Q46. பிராணவாயு உதவியில்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் மனிதர் யார்?
ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர் -- இத்தாலி மற்றும் பீட்டர் ஹேப்லர், ஆஸ்திரியா -- 8.5.1978. இவர்களுள் ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர், 8000 மீ மேலுள்ள 14 சிகரங்களையும் ஏறி சாதனை புரிந்துள்ளார்.
Q47. இமாலயத்தின் இரண்டாவது மிக உயர சிகரம் எது?
K2 கோட்வின் ஆஸ்டின் -- Godwin Austen – 8611 மீ / 28251 அடி. கரக்கோரம் தொடரில், பாகிஸ்தான்--சீனா எல்லையில் அமைந்துள்ளது.
Q48. மூன்றாவது உயரமான சிகரம் எது?
கஞ்சன் ஜங்கா -- 8586 மீ.
Q49. கஞ்சன் ஜங்கா -- என்பதின் பொருள் என்ன?
இதற்கு, தங்கத் தொடை என்றும், பனியின் ஐந்து செல்வங்கள் என்றும் பொருள்படும்.
Q50. கஞ்சன் ஜங்கா பகுதியில் காணப்படும் கரடி வகை எது?
சிகப்பு பாண்டா = Red Panda.
Q51. கஞ்சன் ஜங்கா சிகரம் முதலில் மனிதனால் எப்போது ஏறப்பட்டது?
25.5.1955 -- ஜோ ப்ரவுன் மற்றும் ஜார்ஜ் பேண்ட் -- இங்கிலாந்து.
Q52. உலகின் நான்காவது உயரமான சிகரம் எது?
லோட்ஸே -- LHOTSE – நேபாளம் – சீனா – 8516 மீட்டர். 18.5.1956 அன்று மனிதன் முதலில் இந்த சிகரத்தை அடைந்தனர்.
Q53. உலகின் ஐந்தாவது உயரமான சிகரம் எது?
மகாளு -- MAKALU -- 8481மீ/27765 அடி– திபெத் – நேபாளம் – 15.5.1955 அன்று மனிதன் முதலில் இந்த சிகரத்தை அடைந்தனர்.
Q54. உலகின் ஆறாவது உயரமான சிகரம் எது?
சோ ஒயு -- 8201 மீ/26906 அடி
Q55. தௌலகிரி -- ‘Daulagiri’ மலை எங்குள்ளது?
நேபாளம் -- Nepal – 8167 மீ/26764 அடி – 7 வது உயரமான சிகரம் – 13.5.1960 அன்று மனிதன் முதலில் இந்த சிகரத்தை அடைந்தனர். ""வெள்ளை மலை"" ‘ White Mountain’ எனவும் அழைக்கப்படுகிறது.
Q56. நங்கா பர்பத் எங்குள்ளது?
ஆடையில்லா மலை எனப் பொருள். இந்தியா-பாகிஸ்தானுக்கிடையில் உள்ளது – 8123 மீ/26658 அடி -- 9வது உயரமான சிகரம் -- 3.7.1953 அன்று மனிதன் முதலில் இந்த சிகரத்தை அடைந்தனர்.
Q57. அன்னபூர்ணா மலை எங்குள்ளது?
நேபாளம் -- 8091 மீ/26545 அடி – 11 வது உயரமான சிகரம். “Goddess of the Harvests” எனப் பொருள்.
Q58. 8000 மீட்டருக்கு மேலுள்ள மலைகளில் அன்னபூர்ணாவும் ஒன்று. இந்த மலைக்கு ஒரு துரதிருஷ்டவசமான பதிவு உள்ளது. அது என்ன?
இந்த மலையே எறுவது மிக கடினம். அதனால் உயிரிழப்புகள் அதிகம். இந்த மலையேறும் முயற்சியில் சுமார் 35% உயிரிழப்புகளில் முடிவது ஒரு துயரமான சம்பவப் பதிவு.
Q59. நந்த தேவி மலை சிகரம் எங்குள்ளது?
உத்தரகாண்ட் - இந்தியா -- 7817 மீ/25645 அடி – . இதன் பொருள் " வரம் அளிக்கும் பெண்கடவுள்".  (It means “Bliss Giving Goddess”).
Q60. கரகோரம் மலைத்தொடர் எங்குள்ளது?
கில்ஜித், லடாக், பல்திஸ்தான் பகுதிகளில், பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவில் பரவியுள்ளது.
Q61. கரகோரம் மலைத்தொடரின் அமைப்பில் உள்ள முக்கிய அம்சம் என்ன?
இத்தொடரில் 7000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 60 சிகரங்களுக்கு மேல், அனைத்தும் பாகிஸ்தானில் உள்ளது.
Q62. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
ஆரவல்லி -- ராஜஸ்தான் -- 482 கி.மீ நீளம் -- உலகிலேயே மிகப் பழமையான மடுப்பு மலைகள்.
Q63. ஆரவல்லி மலைத்தொடரில் உயரமான சிகரம் எது?
குரு ஷிக்கார் -- மவுண்ட் அபு -- ராஜஸ்தான். கடல் மட்டத்திலிருந்து 5653 அடி – ஒரு புகழ்பெற்ற மலை வாசஸ்தலம் -- ஜைன மத கோவில்களும், முக்கியமாக தில்வாரா கோவில் உள்ளது.
Q64. ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள முக்கியமான நகரம் எது?
அஜ்மீர்.
Q65. சஹ்யாத்ரி என்று அழைக்கப்படும் மலைத் தொடர் எது?
மேற்கு தொடர்ச்சி மலை. The Western Ghats.
Q66. மேற்கு தொடர்ச்சி மலை எவ்வளவு தூரம் பரவியுள்ளது?
சுமார் 1600 கி.மீ நீளம் கொண்டு, குஜராத்தில் தொடங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா வழியாக கன்னியாகுமரியில் முடிவு பெறுகிறது.
Q67. மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி எந்த இந்திய மாநிலத்திலுள்ளது?
கர்நாடகா.
Q68. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புகழ் பெற்ற கோடை வாசஸ்தலங்கள் யாவை?
மகாபலேஷ்வர், லோனாவாலா -- மகாராஷ்டிரா, தமிழ் நாட்டில் உதகமண்டலமும்.
Q69. மேற்கு தொடர்ச்சி மலையின் உயரமான சிகரம் எது?
ஆனைமுடி, தமிழ்நாடு – 2698 மீ/8842 அடி.
Q70. மேற்கு தொடர்ச்சி மலை, மாநிலங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சஹ்யாத்ரி -- மகாராஷ்டிரா.
நீலகிரி -- தமிழ்நாடு.
சஹ்யமலா -- கேரளா.
Q71. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ் பெற்ற மலைகள் யாவை?
ஏலகிரி, நீலகிரி, ஆனைமலை, அகஸ்தியா, வெள்ளரி போன்றவை.
Q72. கிழக்குத் தொடர்ச்சி மலை எந்த மாநிலங்கள் வழியாக செல்கிறது?
மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு. இரண்டு தொடர் மலைகளும் நீலகிரியில் சந்திக்கின்றன.
Q73. கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியில், இடைவெளிகள் உள்ளதா?
உண்டு. இந்த தொடர், கோதாவரி, கிருஷ்ணா, மஹாநதி, மற்றும் காவேரி நதிகளால் தொடர்ச்சி தடை பட்டுள்ளது.
Q74. கிழக்குத் தொடர்ச்சி மலை ஆந்திரபிரதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெளிக்கொண்டா. Velikonda.
Q75. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கியமான மலைகள் யாவை?
கொள்ளி, பச்சை, ஷேவராய், கல்ராயன்.
Q76. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கியமான கோடைவாசஸ்தலம் எது?
ஏற்காடு, சேலம் மாவட்டம், தமிழ்நாடு.
Q77. கிழக்குத் தொடர்ச்சி மலையில் முக்கியமான வனவிலங்கு எது?
காட்டு யானைகள், தேக்கடி, தமிழ்நாடு-கேரளா எல்லை.
Q78. சத்புரா தொடர் மலைகள் எங்குள்ளது?
கிழக்கு குஜராத்தில் தொடங்கி, மகாராஷ்டிரா, மத்யபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாகாணங்களில் பரவியுள்ளது.
Q79. விந்தியா மலைத் தொடர் எங்குள்ளது?
மத்திய இந்தியா. குஜராத்தில் தொடங்கி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பரவியுள்ளது. Central India. Rising in Gujarat and runs through Rajasthan and Madhya Pradesh.
Q80. எந்த மலைத்தொடர், இந்தியாவை, தெற்கு வடக்காக பிரிக்கிறது?
விந்திய மலைத் தொடர். Vindhya Ranges.
Q81. தென் இந்தியாவின் உயரமான சிகரம் எது?
ஆனைமுடி -- இடுக்கி மாவட்டம், கேரளா -- 2698 மீ/8842 அடி.
Q82. மகாதேவ் மலைகள் எந்த மாகாணத்தில் உள்ளது?
மத்திய பிரதேசம்.
Q83. மைக்காலா தொடர் மலைகள் எங்குள்ளன?
மத்திய பிரதேசம்.
Q84. ஆஸ்திரேலியாவின் உயரமான மலை எது?
மவுண்ட் கோசியுஸ்கோ -- Mount Kosciuszko-7310 அடி/2228 மீ- ஹியர்ட் தீவு, தென் கடல் பகுதியில் அண்டார்டிகாவின் அருகில்
Q85. மேசை மலை" Table Mountain என்பது எங்குள்ளது?
கேப் டவுன், தென் ஆப்பிரிக்கா. இதன் உச்சிப்பகுதி மட்டமாக இருப்பதால், இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q86. Great Smoky Mountains என்ற மலைப்பகுதி எங்குள்ளது?
அமெரிக்கா. இது அப்லாச்சியன் மலையுடன் சேர்ந்தது. 2015 மீ. உயரம்.
Q87. உலகின் எந்த மலை சூரிய உதயத்தின் போது, மறைவின் போதும், அதன் வண்ணம், இளஞ்சிவப்பிலிருந்து, ஆரஞ்சு பிறகு சிகப்பாக மாறும் தன்மையுடையது?
மவுண்ட் அகஸ்டஸ், மேற்கு ஆஸ்திரேலியா.
Q88. உலகின் எந்த இடத்தில், ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய பாறை எங்குள்ளது?
ஆஸ்திரேலியா -- இந்த கல்லுக்கு “Uluru” or “Ayera Rock” என அழைக்கப்படுகிறது.
Q89. இமாலயத்தின் எந்தக் கரடி, பனிச்சிறுத்தை கோடைக்காலத்தில் வந்து தங்கும்?
Alpine Meadows -- ஆல்பைன் பசும்புல் பகுதி.
Q90. உலகின் மிக நீளமான மலைத் தொடர் எது?
ஆண்டிஸ் மலைத்தொடர் -- தென் அமெரிக்க கடற்கரையோர பகுதியில் வடக்கிலிருந்து கிழக்காக சுமார் 7000 கி.மீ தூரத்துக்குப் பரவியுள்ளது.
Q91. ஆண்டிஸ் மலைத்தொடர் பரவியுள்ள நாடுகள் எவை?
அர்ஜெண்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, இக்குவேடார், பெரு மற்றும் வெனிசுலா நாடுகள் வரை பரவியுள்ளது.
Q92. ஆண்டிஸ் மலைத்தொடரில் உயரமான சிகரம் எது?
அக்கங்குவா -- Aconcagua – 6962 மீ – அர்ஜெண்டினா.
Q93. ஐரோப்பியாவின் பெரிய மலைத்தொடர் எது?
ஆல்ப்ஸ் -- Alps.
Q94. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பரவியுள்ள பகுதிகள் யாவை?
ஸ்லோவேனியாவில் தொடங்கி, கிழக்கில் ஆஸ்திரியா முதல் மேற்கில் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் வரையிலும் பரந்து, வியன்னாவில் முடிவடைகிறது.
Q95. ஆல்ப் மலைத்தொடரில் உயரமான சிகரம் எது?
மாண்ட் ப்ளாங்க் -- Mont Blanc – 4808 மீ – ஃப்ரான்ஸ் - இத்தாலி எல்லை.
Q96. காகஸ் மலைத்தொடர் எங்குள்ளது?
கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கு இடையில் உள்ளது இந்த மலைத்தொடர்.
Q97. காகஸ் மலைத்தொடரில் உயரமான சிகரம் எது?
மவுண்ட் அராரத் -- Mount Ararat – 5156 மீட்டர். துருக்கியில் உள்ள இது, மிக உயரமானது.
Q98. மாத்ரிஸ்ஸா மலைகள் எங்குள்ளன?
ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது.
Q99. ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனியைப் பிரிக்கும் மலைத்தொடர் எது?
பைரெனீஸ் மலைகள் -- ஐபீரியன் தீபகற்பத்தில் -- தென் மேற்கு ஐரோப்பியாவில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாட்டிடையே உள்ளது.
Q100. இந்துகுஷ் மலைத் தொடர் -- Hindkush range of mountains எங்குள்ளது?
இந்தியாவின் வட மேற்கில், ஆஃகானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
Q101. க்ரீஸ் நாட்டில் உள்ள எந்த மலை, கிரேக்க புராணத்துடன் தொடர்புடையது?
மவுண்ட் ஒலிம்பஸ்.
Q102. வட அமெரிக்காவின் உயரமான மலை எது?
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள மவுண்ட் கின்லி -- 6190 மீ.
Q103. "மட்டமான மலை" “Meanest Mountain on Earth” என அழைக்கப்படும் மலை எது?
எய்கர் மலை, ஸ்விட்சர்லாந்த். Eiger Mountain, Switzerland.
Q104. இங்கிலாந்தின் உயரமான மலை எது?
ஸ்காஃபெல் பைக் -- Scaffel Pike - கம்ப்ரியா -- Cumbria, இங்கிலாந்து -- 3210 அடி.
Q105. டாரஸ் மலைகள் -- Taurus Mountains எங்குள்ளது?
துருக்கி. Turkey.
Q106. ட்ரான்ஸ் - அட்லாண்டிக் மலைகள் எங்குள்ளது?
கிழக்கு அண்டார்டிகாவில் கோட் தீவுக்கும் அடாரே முனைக்கும் இடையில் உள்ளது.
Q107. கனுக்கு மலை எங்குள்ளது?
கையானா -- Guyana.
Q108. ஐரோப்பியாவையும், ஆசியாவையும் பிரிக்கும் மலைத்தொடர் எது?
உரால் மலைகள். Ural mountains.
Q109. "இந்து ராஜ்" “Hindu Raj” மலை எனப் பெயர் கொண்ட மலை எங்குள்ளது?
பாகிஸ்தான்.
Q110. சூரிய குடும்பத்தில் உள்ள உயரமான மலை எது?
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மான்ஸ் என்ற மலை.
Q111. கண்டப்பிளவு/நகர்வுக்கு முன்பே இருந்த மலைத்தொடர் எது?
இமாலயா -- ஆசியா; ஆண்டிஸ் & ராக்கிஸ் -- அமெரிக்க கண்டங்கள்; மற்றும் ஆல்ப்ஸ் -- ஐரோப்பா.
Q112. இளம்பு மலை எங்குள்ளது?
பொலிவியா, தென் அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைத்தொடரில் -- 7014 மீ.
Q113. மவுண்ட் கின்லி மலை எங்குள்ளது?
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ராக்கீஸ் தொடரில் -- 6194 மீ.
Q114. மவுண்ட் எலியாஸ் மலை எங்குள்ளது?
ராக்கீஸ் தொடரில் -- அமெரிக்கா - கனடா எல்லைப்பகுதியில் -- 5944 மீ.
Q115. மவுண்ட் லோகன் மலை எங்குள்ளது?
ராக்கீஸ் தொடர், வட அமெரிக்கா -- 6050 மீ -- கனடாவின் உயரமான மலை.
Q116. மாண்ட்டி ரோஸா மலை எங்குள்ளது?
இத்தாலியின் பைய்ட் மாண்ட் தொடரில் -- 4565 மீ.
Q117. ஜெர்மனியின் உயரமான மலை எது?
ஸூக்ஸ்பிட்ஸி -- Zugspitze -- இந்த மலை ஆஸ்திரியா-ஜெர்மனி நாடுகளுக்கிடையிலுள்ளது. 2962 மீ.
Q118. இயற்கையாகவே மலைப்பாறைகளால் வளைவுகள் (மாலை போன்ற) அமைவது மிகவும் அரிது. அவ்வாறு உலகில் மூன்று இடங்களில் உள்ளது. அவை யாவை?
1. வானவில் வளைவு, உத்தா மாகாணம், அமெரிக்கா --Rainbow Arch, Utah, USA.

2. டால்தேடியன் பனிக்குகை, இங்கிலாந்து -- Dalradian Quartzite, UK

3. சிலா தோரணம், திருப்பதி, ஆந்திரபிரதேசம் -- Sila Thoranam, Tirupathi, Andhra Pradesh, India.
Q119. கடல் மட்டத்திலிருந்து தரையில் உயரமான சிகரம் எவரெஸ்ட். ஆனால், கடல் ஆழத்திலிருந்து, பூமியின் மத்தியிலிருந்து கணக்கிடும் போது எது உயரமான சிகரம்?
1. மௌனா கீ, ஹவாய், அமெரிக்கா Mount Mauna Kea, Hawai’i -- கடல் உள்ளிருந்து.
2. சிம்பராஸோ, இக்குவேடார். Mount Chimborazo, Ecuador – இது நில நடுக்கோட்டின் அருகில் உள்ளது. இங்கு, புவியின் விட்டம் அதிகம். அந்த இடத்தில் இதன் உயரம், புவியின் மையத்திலிருந்து 6384 கி.மீ. இது, புவியின் மத்தியிலிருந்து நோக்கும்போது, எவரெஸ்ட் சிகரத்தை விட சுமார் 2 கி.மீ உயரமானது.
Q120. எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் உடல் ஊனமுற்ற நபர் யார்?
டாம் விட்டேகர், இங்கிலாந்து -- 27.5.1998 அன்று தனது மூன்றாவது முயற்சியில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இவர் வலது காலை ஒரு விபத்தில் இழந்தவர்.
Q121. எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்திய பெண்மணி யார்?
பச்சேந்திரி பால், உத்தராகண்ட் -- தனது 30வது வயதில், 23.5. 1984 ல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
Q122. மூத்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்திய பெண்மணி யார்?
ப்ரேமலதா அகர்வால் -- Premalata Agarwal -- 48 வயது -- 20.5.2011 அன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
Q123. விண்ணிற்கு அருகாமையில் உள்ள மலைச் சிகரம் எது?
சிம்பராஸோ, இக்குவேடார். Mount Chimborazo, Ecuador – இது நில நடுக்கோட்டின் அருகில் உள்ளது. இங்கு, புவியின் விட்டம் அதிகம். அந்த இடத்தில் இதன் உயரம், புவியின் மையத்திலிருந்து 6384 கி.மீ. இது, புவியின் மத்தியிலிருந்து நோக்கும்போது, எவரெஸ்ட் சிகரத்தை விட சுமார் 2 கி.மீ உயரமானது. அதாவது, இந்த மலையானது, நில நடுக்கோட்டில், இக்குவேடார் நாட்டில், மையத்தில் ஒரு மேட்டின் மீது இருப்பதால், (Equator bulge) இது எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமாக விண்ணிற்கு அருகிலுள்ளது.
Q124. நாடுகளும் உயரமான மலைகளும்
எண் நாட்டின் பெயர் உயரமான மலையின் பெயர்
1. ஸ்ரீலங்கா Pidurutalagala (Mount Pedro) -- 2524 mtr -- Nuwara Elup Dt.,
2. பாகிஸ்தான் K2 -- 8611 mtrs
3. ஆப்கானிஸ்தான் Noshaq -- Hindukush -- 7492 mtr.
4. மியான்மார் Hrakaborazi -- 5881 mtr
5. நேபாளம்/சீனா Mt.Everest -- 8840 mtr
6. இத்தாலி Monte Rosa -- 4565 mtr
7. கேனடா Mount Logan -- 6050 mtr
8. அமெரிக்கா Mount Kinley -- 6194 mtr
9. பொலிவியா Mount Ilampu -- 7014 mtr
10.ஜெர்மனி/ஆஸ்திரியா Zugspitze -- 2562 mtr
11. ரஷ்யா Elbrus -- 5642 mtr
12. இக்குவேடார் Chimborozo -- 6263 mtr.
13. ப்ரேசில் Pico Da Niblina -- 2995 mtr
14. அர்ஜெண்டினா Aconcagua -- 6962 mtr
15. இங்கிலாந்து Scaffel Pike -- 978 mtr
16. நியூசிலாந்து Mt.Cook -- 3724 mtr
17. ஸ்பெயின் Mount Teide -- 3718 mtr
18. உக்ரெய்ன் Mount Hoverla -- 2061 mtr
19. கரீபிய தீவுகள் Pico Duarte -- 3098 mtr (Dominican Rebpulic)
20. அரபு நாடுகள் Toubkal -- 4165 mtr -- Morocco.