Khub.info Learn TNPSC exam and online pratice

மலைவழிப் பாதை (கணவாய்) -- MOUNTAIN PASS

Q1.

Q2. கணவாய் (மலை வழிப் பாதை) என்பது என்ன?
இரு மலைகளுக்கிடையில் இயற்கையாகவே அமைந்துள்ள இடைவெளி, பாதையாக இரு சமவெளிகளை இணைக்கும் வகையில் அமைந்திருப்பது.
Q3. இந்தியாவில் உள்ள சில கணவாய்களைக் கூறுக?
1. ரோட்டங் பாஸ் -- Rohtang Pass -- 3979 மீ உயரத்தில் பீர் பஞ்சால் மலைத் தொடரில், இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியிலிருந்து 51 கி.மீ தூரத்தில், குளு பள்ளத்தாக்கை லாஹூல் ஸ்பிட்டி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. லே-மணாலி நெடுஞ்சாலையிலுள்ளது.
2. நாதுலா பாஸ் -- Nathu La Pass -- 4310 மீ உயரத்தில், சிக்கிம் மாகாணத்தையும், திபெத் சுயநிர்வாகப் பகுதியையும் இணைக்கும் வகையில், இமாலய மலைத் தொடரில் அமைந்துள்ளது.
3. சோஜி லா பாஸ் -- Zoji La Pass -- 3528 மீ உயரத்தில், இமாலய மலைத்தொடரில், காஷ்மீரின் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
4. ஜெலெப் லா பாஸ் -- Jelep La Pass -- 4267 மீ உயரத்தில், இமாலய மலைத்தொடரில், கிழக்கு சிக்கிம் மற்றும் திபெத் நிர்வாகப் பகுதியை, லாசா நகரை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
5. கார்டுங் லா பாஸ் -- Khardung La Pass -- 5359 மீ - இமாலயத்தில், காஷ்மீரின் லடாக் பகுதியிலுள்ளது.
6. சாங் லா பாஸ் -- Chang La Pass -- 5360 மீ -- இமாலயத்தில், காஷ்மீரின் லடாக் பகுதியிலுள்ளது.
7. லிபுலேக் பாஸ் -- Lipulekh Pass -- 5334 மீ -- நேபாளத்தின் ப்யாஷ் பள்ளத்தாக்கையும் இந்தியாவின் உத்தராகாண்ட் மாகாணத்தையும் இணைக்கிறது.
8. பனிஹால் பாஸ்- Banihal Pass -- 2832 மீ உயரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கையும் புற இமாலயப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
9. ஷிப்கி லா பாஸ் -- Shipki La Pass -- இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ளது. சட்லஜ் நதி இந்த வழியில் தான் இந்தியாவுக்குள் நுழைகிறது.
10. பரா லச்சா லா பாஸ் -- Bara Lacha La Pass -- 4890 மீ -- இமாச்சலப் பிரதேசத்தில் லாஹூல் மாவட்டத்தையும் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியையும் இணைக்கிறது.
11. மனா பாஸ் -- Mana Pass -- 5545 மீ உயரத்தில் இமாலயத்தில் இந்தியா-திபெத் எல்லையிலுள்ளது.
12. பென்சி லா பாஸ் -- Pensi La Pass -- 4400 மீ -- திபெத்தில் சுரு பள்ளத்தாக்கையும், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கையும் இணைக்கிறது.
13. மார்சிமிக் லா பாஸ் -- Marsimik La Pass -- 5582 மீ உயரத்தில், லே பகுதியில் உள்ளது.
14. ட்ரெயில்ஸ் பாஸ் -- Traill's Pass -- 5212 மீ -- உத்தராகாண்ட் மாகாணத்தில் பித்தோர்கர் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களுக்கிடையில் உள்ளது.
15. ஃபோட்டு லா பாஸ் -- Fotu La Pass -- 4108 மீ -- ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ளது.
16. நமிகா லா பாஸ் -- Namika La Pass -- 3700 -- ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் உள்ளது.
17. லங் லா சா பாஸ் -- Lung La Cha Pass -- 5059மீ -- லே-மணாலி நெடுஞ்சாலையிலுள்ளது.
18. குன் ஸூம் பாஸ் -- Kun Zum Pass -- 4590 மீ -- இமாச்சல பிரதேசத்தின் குளு,லாஹூல் பள்ளத் தாக்கை ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கிறது.
19. பாலக்காடு இடைவெளி - Palghat Gap -- 140 மீ -- தமிழ் நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு க்கு இடையில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.
20. கோச்சா லா பாஸ் -- Goecha La Pass -- 4940 மீ -- சிக்கிம் மாகாணத்தில் இமாலயத்திலுள்ளது.
21. சன்ஷால் பாஸ் -- Chanshal Pass -- 3750 மீ -- இமாச்சலபிரதேசத்தின் சிம்லா மாவட்டத்திலுள்ளது.
22. கொங்கா பாஸ் -- Kongka Pass -- 5171 மீ -- இந்திய சீன கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைந்துள்ளது.
23. ஷிங்கோ பாஸ் -- Shingho Pass -- 5091 மீ -- ஜம்மு காஷ்மீர்-இமாச்சல பிரதேச எல்லையிலுள்ளது.
24. சாஸ்ஸெர் பாஸ் -- Sasser Pass -- 5411 மீ -- லே, லடாக் பகுதியிலுள்ள பனிப்பிரதேச கோடை வழி.
Q4. நாதுலா மற்றும் ஜெலெப்லா மலைவழி (கணவாய்) எங்குள்ளது?
இந்தியா சீன எல்லைக்கருகில் உள்ளது. நாதுலா பாஸ் சிக்கிம் - திபெத் ஐ (Gangtok in Sikkim to Lhasa in Tibet Also connects Bhadgaon) இணைக்கிறது. ஜெலெப்லா பாஸ் சீன திபெத் பகுதியையும் கிழக்கு சிக்கிம் பகுதியையும் இணைக்கிறது. புராண காலத்து சில்க் வழியிலுள்ளது. (Nepal with Nylam in Tibet)
Q5. ரோட்டங் பாஸ் எந்த இடங்களை இணைக்கிறது?
இமாச்சலப் பிரதேசத்தையும் - காஷ்மீர் ஸ்ரீநகரையும் லே வழியாக இணைக்கிறது.
Q6. மோஹன் பாஸ் எங்குள்ளது, எந்த இடங்களை இணைக்கிறது?
ஷிவாலிக் மலையில் -- உத்திரபிரதேசத்தின் சஹாரன்பூர் -> தேரா -> உத்தராகாண்டின் முஸோரி கோடை வாசஸ்தலம் இணைக்கப்படுகிறது.
Q7. கைபர் கணவாய் (மலைவழி) எங்குள்ளது?
பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தருகில், ஆஃப்கானிஸ்தானை இணைக்கிறது.
Q8. இந்துகுஷ் மலையில் உள்ள எந்த மலைவழி பாகிஸ்தானின் சித்ரல் மற்றும் ஆப்கானிஸ்தானை இணைக்கிறது?
பரோகில் பாஸ் Baroghil Pass -- 3798 மீ/12460 அடி -- பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ளது.
Q9. எந்த மலைவழி யைக் கடந்து, மானசரோவர் என்ற இந்து புனிததலத்திற்கு செல்ல வேண்டும்?
லிபுலேக் பாஸ் -- Lipulekh Pass -- 5334 மீ -- நேபாளத்தின் ப்யாஷ் பள்ளத்தாக்கையும் இந்தியாவின் உத்தராகாண்ட் மாகாணத்தையும் இணைக்கிறது.
Q10. ஒபெர்லாப் பாஸ் எங்குள்ளது?
ஸ்விட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில், Graubunden மற்றும் Disentis, Andermatt மாகாணங்களை இணைக்கிறது.
Q11. உலகில் எந்த மலைத்தொடரில் மலைவழி (கணவாய்) அதிகமாகவுள்ளது?
வட அமெரிக்காவின் ராக்கி மலைத்தொடரில் தான் அதிகமாக உள்ளது.
Q12. மலை வழிப் பாதைகள்
எண் மலைவழிப்பாதை பெயர் உயரம்/மீ அமைந்துள்ள இடம்
1. ரோட்டங் ROHTANG PASS 3979 குளு பள்ளத்தாக்கை, லாஹொல்-ஸ்பிதி பள்ளத்தாக்குடன் இணைக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் லே-மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
2. நாத்துலா NATHULA PASS 4310 சிக்கிம் மற்றும் திபெத் சுதந்திர பகுதியை இணைக்கிறது.
3. ஸோஜி லா ZOJI LA PASS 3528 ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை
4. ஜெலெப்லா JELEPLA PASS 4267 கிழக்கு சிக்கிம் - திபெத்
5. கார்டுங் லா KHARDUNG LA PASS 5359 லடாக் - காஷ்மீர்
6. சாங் லா CHANG LA PASS 5360 லடாக் - காஷ்மீர்
7. லிபுலெக் LIPULEKH PASS 5334 ப்யாஷ் பள்ளத்தாக்கு, நேபாளம் - உத்தரகாண்ட்
8. பனிஹால் BANIHAL PASS 2832 காஷ்மீர் பள்ளத்தாக்கு -- வெளி இமாலாயம்
9. ஷிப்கி லா SHIPKI LA PASS 5669 இந்தியா - சீனா எல்லை
10. பரா லாச் லா BARA LACH LA PASS 4890 லஹௌல், இமாச்சல பிரதேசம் -- ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியை இணைக்கிறது.
11. மனா MANA PASS 5545 இந்தியா - திபெத் எல்லை
12. பென்சி லா PENSI LA PASS 4400 திபெத் -- சுரு மற்றும் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கை இணைக்கிறது.
13. மார்சிங்க் லா MARSINIK LA PASS 5582 லே
14. ட்ரெய்ல்ஸ் TRAIL'S PASS 5212 நந்தா தேவி - நந்தா கோட் மலைகளுக்கிடையில், உத்தராகாண்ட் பித்தோர்கர்-பாகேஷ்வர் மாவட்டங்களை இணைக்கிறது.
15. ஃபோட்டு லா FOTU LA PASS 4108 ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை.
16. நானிகா லா NANIKA LA PASS 3700 ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை
17. லுங் லா சா LUNG LA CHA PASS 5059 லே - மணாலி நெடுஞ்சாலை
18. குன் ஸாம் KUN ZUM PASS 4590 குளு -- லஹௌல் பள்ளத்தாக்கை, ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கிறது -- இமாச்சலப் பிரதேசம்.
19. பாலக்காடு இடைவெளி PALAKAD GAP 140 கோயம்புத்தூர் - பாலக்காடு பாதை - மேற்கு தொடர்ச்சி மலை.
20. கோச்சா லா GOECHA LA 4940 சிக்கிம்
21. சன்ஷால் CHANSHAL PASS 3750 சிம்லா மாவட்டம், இமாச்சல பிரதேசம்.
22. கோங்க்கா KONGKA PASS 5171 இந்தியா - சீனா எல்லை
23. ஷிங்கோ லா SHINGO LA 5091 ஜம்மு காஷ்மீர் - இமாச்சல பிரதேசம் எல்லை.
24. சஸ்ஸெர் லா SASSER LA PASS 5411 லே