Khub.info Learn TNPSC exam and online pratice

எரிமலைகள் -- VOLCANOES

Q1.
எரிமலைகள் -- VOLCANOES

Q2. எரிமலை என்பது என்ன?
புவியின் மேற்பரப்பில் crust/surface இருக்கும் ஒரு திறப்பு மூலம், நெருப்புப் பாறை குழம்பு, சாம்பல், வாயு, இவை அனைத்தும் சேர்ந்து Lava எனப்படும் அனல் குழம்பு, பூமிக்குள் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக மிகுந்த வேகத்துடன் வெளி வந்து, சுற்றுப்புறங்களில் பரவி, அனைத்து ஜீவராசிகளையும் அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. இது பொதுவாக மலை உச்சிகளிலிருந்து ஏற்படுகிறது. இவ்வாறான மலைகள் ""எரிமலை volcano"" எனப்படுகிறது.
Q3. லாவா -- அனல் குழம்பு என்பது என்ன?
நெருப்புப் பாறை குழம்பு, சாம்பல், வாயு, இவை அனைத்தும் சேர்ந்து Lava எனப்படும் அனல் குழம்பு.
Q4. பாறைக்குழம்பு -- Magma என்பது என்ன?
நெருப்புப் பாறை குழம்பு, சாம்பல், வாயு, இவை அனைத்தும் சேர்ந்து பூமிக்கடியில் சேர்ந்து இருப்பது. இது வெளிவரும் போது Lava எனப்படுகிறது.
Q5. எரிமலைவாய்-- Crater என்பது என்ன?
புனல் வடிவில் மலை மீதுள்ள ஒரு திறப்பு. இதன் வழியாகவே அனல் குழம்பு வெளிப்படுகிறது.
Q6. புவியியல் ரீதியாக, பொதுவாக எரிமலைகள் எந்தப் பகுதிகளில் அதிகமாக காணப்படும்?
புவியில், பொதுவாக எங்கெல்லாம் கண்டத்தட்டு இழுவை நிலை அதிகமாக நீடிக்கிறதோ அல்லது செயல்பாட்டில் அதிகமாக் உள்ளதோ அங்கு எரிமலைகள் உருவாகக் காரணங்கள் அதிகமாகும்.
Q7. Hot Spots - எனப்படும் அதிவெப்பப் பகுதி என்பது என்ன?
பூமியின் எந்த பகுதியில், எரிமலை நடவடிக்கை அதிகமாக, நீண்ட நாட்களாக தொடர்கிறதோ அந்த இடங்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q8. எரிமலைத்துகள் பாறைகள் -- Pyroclastics என்பது என்ன?
அனல் குழம்பிலிருந்து வெளிப்படும், பாறை துகள்கள்.
Q9. எரிமலைகளின் வகைகள் யாவை?
எரிமலைகள் வெடிக்கும் விதம், வெடிக்கும் இடைவெளிகள், தொடர்ச்சி, என பல காரணங்களின் அடிப்படையில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை --
1. ஸ்ட்ராம்போலியன் -- Strambolian -- இது ஸ்ட்ராம்போலி என்ற இத்தாலிய எரிமலையின் பெயரில் அழைக்கப்படுகிறது. பொதுவாக, மிதமான உயரத்துக்கு குறைந்த இடைவெளிகளில் வெடிப்பது.
2. வல்கேனியன் -- vulcanian -- வெடித்துச் சிதறும் எரிமலை.
3. வெசுவியன் -- Vesuvian -- வெசுவியஸ் எரிமலையின் பெயர். நீண்ட நாள் அமைதியாக இருந்து திடீரென மிக வேகத்துடன் வெடித்து சிதறும் எரிமலை.
4. பேலியன் -- Palean -- வல்கேனியன் எரிமலைப் போன்றது. இதில், அனல் குழம்பு அதிகப்படியாக வெளியேறி சுற்றுபுறத்தில் வேகமாக பரவக்கூடியது.
5. ஹவாயன் -- Hawaiian -- குறைந்த உயர வெடிப்பில், அனல் குழம்பு குறைந்த வேகத்துடன் மெதுவாக பரவத் தொடங்கும்.
6. ஃப்ரியாடிக் Phreatic -- இவ்வகை எரிமலையில் நீராவியால் உந்தப்பட்ட சுடுநீர் வெளிவரும்.
Q10. எரிமலை வெடிப்பு எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
வெடித்து வெளிவரும் அமைப்பைப் பொருத்து, வெவ்வேறு புவியியல் அமைப்பு, இடம் அடிப்படையில் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை:
1. பீறிட்டு வெளியேறும் வகை -- Effusive -- குறைந்த அடர்த்திக்கொண்ட அனல் குழம்பு -- Characterised by an outpouring of low viscosity lava which has a fairly volatile content. A gentle volcanic activity.
2. வெடித்து சிதறும் வகை -- Explosive -- நீராவி, வாயு கலந்த மிக வேகமாக வெடித்துச் சிதறும் வகை. இந்த வகையில், பாறை துகள்கள் பல கி.மீ தூரத்துக்கு எறியப்பட வாய்ப்புண்டு. வெளி வரும் அனல் குழம்பும் பல ஆயிரம் டன்களுக்கு மேலும் இருக்கும். குறைந்த நேரத்தில் மிக வேகமாக வெளி வந்து, பரவக்கூடிய வகை.
3. பனி/நீருக்கடியில் வெடிப்பது -- Subglacial -- பனிப்பாறைகளுக்கடியில், அல்லது, உறைந்த கடலுக்கு அடியில் வெடித்து, பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய வகை. இதில், அதிகமான சேற்று குழம்பு -- LAHAR வெளிவரும்.
Q11. கேடய எரிமலை Shield Volcano - எரிமலை என்பது என்ன?
இவ்வகை எரிமலைகள் அதிகமான பாறை நெருப்பு குழம்பை வெளித்தள்ளக் கூடியவை. அவ்வாறு வெளிப்படும் குழம்பு, ஒரு கேடயம் போல் குவிந்து மற்றொரு மலை ஏற்படக் காரணமாகக்கூடியது. இந்த எரிமலையிலிருந்து வெளிவரும் குழம்புகள் மிக அதிகமான வெப்பமுடையதாகவும், வெகு தூரம் வரை பரவக்கூடியதாகவும் இருக்கும்.
Q12. இன்றும் செயலில் இருக்கும் ஒரு கேடய எரிமலைக்கு உதாரணம் எது?
மௌன லோவா -- ஹவாய் தீவுகள், அமெரிக்கா. உலகிலேயே மிகப் பெரிய எரிமலை குழம்பு சுமார் 18000 கன மைல்/75000 கன கி.மீ.
Q13. பூமியை விட்டு வெளியில், (விண்ணில்) உள்ள கேடய எரிமலை எது?
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை.
Q14. சுழல் வடிவ எரிமலை “Strato volcanoes” என்பது என்ன?
இவை, உயரமான கூம்பு வடிவ, அனல் குழம்பால் ஆன மலைகள். இதன் ஒவ்வொரு மாற்று அடுக்கிலும் அனல் குழம்பு படிந்து கடினப்பாறையாகி விடும். அதனால் தான் இதற்கு இந்தப்பெயர்.
Q15. சுழல் வடிவ எரிமலைகளுக்கு Strato Volcanoes சில உதாரணங்கள் கூறுக?
மவுண்ட் ஃபுஜி, ஜப்பான்; மவுண்ட் மேயோன், பிலிப்பைன்ஸ்; மவுண்ட் வெசுவியஸ், இத்தாலி; மவுண்ட் ஸ்ட்ராம்போலி, இத்தாலி.
Q16. சூப்பர் எரிமலை Super Volcano என்பது என்ன?
மிகப்பெரிய எரிமலைவாய் கொண்டதும், இதன் குழம்பு வெளிப்பாடு, பெருத்த சேதமும் அடுத்தக் கண்டத்தையும் பாதிக்கக்கூடிய அளவில் உள்ளதாகவும் இருக்கும் எரிமலை.
Q17. சூப்பர் எரிமலைக்கு Super Volcanoes சில உதாரணங்கள் கூறுக?
1. Yellow Stone Caldera, Yellow Stone National Park, USA.
2. Lake Tanpo, New Zealand.
3. Lake Toba, Sumatra, Indonesia.
Q18. கடலடி எரிமலை submarine volcano என்பது என்ன?
கடல் ஆழத்தின் தரை மட்டத்தில் இருக்கும் எரிமலைகள். பொதுவாக ஆழம் குறைவான பகுதிகளில் வெளிவரும். அவ்வாறு வெளிப்படும் போது, போது புதிய தீவுகள் உருவாக வாய்ப்புண்டு.
Q19. தலையணை எரிமலைக்குழம்பு -- Pillow Lava என்பது என்ன?
கடலுக்கடியில் ஏற்படும் எரிமலை வெடிப்பில் ஏற்படும் அனல் குழம்பு வெளிப்பாடு.
Q20. உறங்கு எரிமலை -- Dormant Volcano என்பது என்ன?
பழங்காலத்தில் எரிமலைகளாக இருந்து, இப்போது உறங்கிக்கொண்டிருப்பவை.
Q21. இந்திய எல்லைக்குள் இருக்கும், உறங்கு (ஒரே) எரிமலை, எது?
பேரன் தீவு -- Barren Island, Andamans. இது சமீபத்தில் 2010/11ல் தனது நடவடிக்கையை வெளிப்படுத்தியது.
Q22. இப்போது செயலிலிருக்கும் எரிமலைகள் யாவை?
1. Archantsky, Kamchatka, ரஷ்யா
2. Colima, மெக்ஸிகோ
3. Mount Etna, சிசிலி
4. Galeras, கொலம்பியா
5. Mauna Loa, ஹவாய், அமெரிக்கா
6. Merapi, இந்தோனேசியா Indonesia.,
7. Nyirgango, காங்கோ ஜனநாயக குடியரசு.
8. Sakuramajimo, ஜப்பான்
9. Santa Maria, கௌத்தமாலா
10. Santonini, க்ரீஸ்
11. Taal, பிலிப்பைன்ஸ்
12. Teide, கேனரி தீவு, ஸ்பெயின்
13. Ulawaun, பப்புவா நியூ கினி
14. Mount Unzen, ஜப்பான்
15. Mount Vesuvius, இத்தாலி
Q23. தீ வளையம் -- Ring of Fire என்பது என்ன?
பசிபிக் பெருங்கடலின் கடற்கரை ஓரங்களில் நூற்றுக்கணக்கான எரிமலைகள் கூட்டம் அமைந்து இருப்பதே இவ்வாறு அழைக்கப்படுகிறது. வட மற்றும் தெற்கு அமெரிக்காவின் மேற்கு ஓரங்களில் சிலி நாட்டின் முனையிலிருந்து அலாஸ்கா (அமெரிக்கா) வரை பரவியுள்ளது. இவை ஆசியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில், காம்சட்டகா வில் தொடங்கி, ஆஸ்திரேலியாவின் கடல் தாண்டி பரவியுள்ளது.
Q24. திரட்டு -- Agglomerate என்பது என்ன?
எரிமலையால் வீசப்பட்ட பாறைத் துகள்களும், அனல் குழம்புகளும் ஒன்று சேர்ந்து நாளடைவில் அவை சாம்பலாக மாறி குவிந்திருப்பது.
Q25. நீராவித் துளை -- Fumarole என்பது என்ன?
எரிமலைப்பகுதிகளில், தரைப்பகுதிகளில் உள்ள ஒரு துளை மூலம் நெருப்பு, சூடான வாயு மற்றும் சுடுநீர் வெளிவருவது.
Q26. எரிமலையைப்பற்றிய படிப்பு ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வால்கேனாலஜி -- Volcanology.
Q27. கருங்கல் -- Basalt என்பது என்ன?
கருநிற எரிமலைக் கற்கள், தூளாக்கப்பட்டு, அனல் குழம்புடன் சேர்ந்து, ஒரு தடிமனான நீண்ட கம்பளம் போல் பரந்திருக்கும், ஒரு பெரிய அளவிலான எரிமலைக் கல்.
Q28. சுடுநீரூற்று -- Geyser என்பது என்ன?
இதுவும் ஒரு வகையான எரிமலை நடவடிக்கை. ஆனால் இது தரை நிலையிலும் நடக்கக்கூடியது. தரையில் ஒரு சிறு துளை மூலம், நிலத்தடி நீர், வெப்ப அழுத்தத்தின் காரணமாக சூடேறி, பீறிட்டு நல்ல உயரத்துக்கு வெளி வருவது.
Q29. ஒலிம்பஸ் மான் எரிமலையைத் தவிர்த்து, செவ்வாய் கிரகத்தில் உள்ள இதர கேடய எரிமலைகள் யாவை?
(1) Arsia Mons (2) Ascaraeus Mons (3) Hectes Tholus (4) Pavonis Mons.
Q30. சூரிய குடும்பத்தில், எரிமலை நடவடிக்கைக் கொண்ட விண்பொருள் எது?
ஜூபிடரின் நிலவு "லோ" “LO”.
Q31. மவுண்ட் எட்னா என்ற எரிமலை எங்குள்ளது அதன் சிறப்பம்சம் என்ன?
மிகப்பெரிய எரிமலை மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலை. சிசிலி யின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் MONGIBELLO எனவும் அழைப்பர்.
Q32. உலகின் உயரமான எரிமலை எது?
Anto Falla, அர்ஜெண்டினா – 6450 மீ.
Q33. எந்த மலைத்தொடரில் அதிகமான எரிமலைகள் உள்ளன?
ஆண்டிஸ், தென் அமெரிக்கா.
Q34. எந்த நாட்டில், வெறும் சேற்றை மட்டும் (நெருப்போ அல்லது பாறையோ அல்லாமல்) வாரி இறைக்கும் எரிமலை உள்ளது?
ப்ரூணே -- Brunei.
Q35. இன்றும் செயலில் இருக்கும் உயரமான எரிமலை எங்குள்ளது?
கோட்டோபாக்ஸி, இக்குவேடார்.
Q36. Popocatepeti என்ற பெயர் கொண்ட எரிமலை எங்குள்ளது?
மெக்ஸிகோ.
Q37. கிளிமாஞ்சாரோ என்ற புகழ்பெற்ற மலை (எரிமலை) எங்குள்ளது?
தன்ஸானியா.
Q38. வெசுவியஸ் எரிமலை எங்குள்ளது?
இத்தாலி (சிசிலி யின் கிழக்கு கடற்கரையில்)
Q39. Monogenetic volcano என அழைக்கப்படுவது என்ன?
ஒரு குறிப்பிட்ட பகுதியில் எரிமலைகள் போல் ஆங்காங்கே காணப்படும் சிறிய துவாரங்கள் மூலம் சிறு அளவிலான வெடிப்புகள் மூலம் அனல் குழம்புகள் வெளி வருவது.
Q40. வரலாற்றின் படி, எந்த எரிமலை வெடிப்பு மிகவும் மோசமானது?
1) மவுண்ட் தம்போரா, இந்தோனேசியா -- ஏப்ரல் 1815 -- சுமார் 71000 பேர் மரணம்.
2) க்ரகடோவா தீவு, இந்தோனேசியா -- ஏப்ரல் 26/27, 1883 -- சுமார் 34000 பேர் மரணம்.
Q41. ஒரு மலை உச்சி, எரிமலை வெடிப்பினால், ஒரு கிண்ணம் போன்ற முகத் துவாரத்தை ஏற்படுத்தும். அது ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கால்டெரா -- Caldera.
Q42. உலகின் சிறிய எரிமலை எங்குள்ளது?
டால், லுசான் தீவு, பிலிப்பைன்ஸ். Taal in Luzon Island, Phillippines.
Q43. எந்த எரிமலை, தொடர்ந்து அனல் குழம்பை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது?
ஸ்ட்ராம்போலி, இத்தாலி.