Khub.info Learn TNPSC exam and online pratice

பள்ளத்தாக்கு -- VALLEY

Q1.
பள்ளத்தாக்கு -- VALLEY

Q2. பள்ளத்தாக்கு என்பது என்ன?
இரு மலைகளுக்கிடையில் உள்ள ஆழமான பகுதி, பொதுவாக ஒரு நதி, அதையொட்டிய சிறிய அளவிலான சமவெளிப்பகுதியும்.
Q3. நெடுக்குப் பள்ளத்தாக்கு -- Longitudinal Valley என்பது என்ன?
மலைத்தொடருக்கு இணையாக அமைந்திருக்கும் பள்ளத்தாக்கு. பொதுவாக ‘V’ or ‘U’ வடிவிலிருக்கும்.
Q4. பனிப்பள்ளத்தாக்கு glacial valley என்பது என்ன?
பனிப்பாறைகளின் அதிகமான சக்தியினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்குகள். பனிப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
Q5. பிளவுப்பள்ளத்தாக்கு -- rift valley என்பது என்ன?
பூமியின் மேல் பரப்பில் கண்டத்தட்டுகளின் செயலால் ஏற்படும் விரிவால் அமையும் பள்ளத்தாக்கு.
Q6. உலகின் மிகப்பெரிய பிளவுப்பள்ளத்தாக்கு எங்குள்ளது, அதன் அளவு என்ன?
சிரியாவில் தொடங்கி, மத்திய மொஸாம்பிக் வரை, சுமார் 5000 கி.மீ நீளமானது. இந்த பெயரை இங்கிலாந்தின் ஜான் வால்ட்டர் க்ரெகரி என்ற புகழ் பெற்ற புவியியல் நிபுணர் வைத்தார்.
Q7. செங்குத்துப் பள்ளத்தாக்கு -- Canyon எனப்படுவது யாது?
ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கு, பொதுவாக நதி மற்றும் பெருமழையின் அரிப்பினால் உருவாவது.
Q8. பள்ளத்தாக்குகள் உருவாக வேறு என்ன வாய்ப்புண்டு?
சில நேரங்களில் கண்டத்திட்டு நகர்வு மூலம் பீடபூமிகளில் விரிசல்கள் faults (cracks) ஏற்பட்டு பூமியில் இறக்கம் ஏற்பட்டு அதனால் பள்ளத்தாக்குகள் உருவாக வாய்ப்புண்டு. இவ்வாறு ஏற்பட்டதற்கு உதாரணம் -- ஸ்காட்லாந்து நாட்டின் தாழ்வு நிலப் பகுதிகள். Low lands of Scotland.
Q9. பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்கு -- Grand Canyon என்ற புகழ்பெற்ற பள்ளத்தாக்கு எங்குள்ளது, அதன் சிறப்பு என்ன?
கொலராடோ, அமெரிக்கா -- Colorado, USA – கொலராடோ நதியால் உருவானது. சுமார் 446 கி.மீ நீளமும், சுமார் முக்கால் கி.மீ முதல் சில இடங்களில் 24 கி.மீஅகலமும், ஒரு கி.மீ க்கு மேலான ஆழம் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கு.
Q10. Gorge என்பது என்ன?
குறைவான ஆழம் கொண்ட செங்குத்துப் பள்ளத்தாக்கு. அதிகமான செங்குத்துப் பள்ளத்தாக்கு canyon என அழைக்கப்படுகிறது.
Q11. ஆம்பி பள்ளத்தாக்கு எங்குள்ளது?
மகாராஷ்டிராவின் லோனாவாலா வுக்கு அருகில் உள்ளது. (பூனே - பாம்பே வழியில்)
Q12. அலக்நந்தா பள்ளத்தாக்கு எங்குள்ளது?
உத்தராகாண்ட் மாகாணத்தில் ஒரு இமாலய பள்ளத்தாக்கு.
Q13. அரக்கு பள்ளத்தாக்கு எங்குள்ளது, அங்குள்ள முக்கிய அம்சம் என்ன?
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற கோடை வாசத்தலம். இங்குள்ள போரா குகைகள் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம்.
Q14. பாகீரதி பள்ளத்தாக்கு எங்குள்ளது?
உத்தராகாண்ட், இமாலயம்.
Q15. பக்ராநங்கல் பள்ளத்தாக்கு எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன?
இமாச்சலப் பிரதேசம் -- பஞ்சாப் எல்லை. இங்கு தான் சட்லஜ் நதியின் குறுக்கே பக்ரா அணை கட்டப்பட்டுள்ளது.
Q16. தாமோதர் பள்ளத்தாக்கு எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன?
ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் மாகாணங்களில் பரவியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு தான் இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனமான தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பொரேஷன் The Damodar Valley Corporation ஜூலை 1948ல் தொடங்கப்பட்டது.
Q17. தாமோதர் பள்ளத்தாக்கு வேறு எதற்கு முக்கியத்துவம் பெறுகிறது?
நிலக்கரி மற்றும் மைக்கா வைப்பு/சுரங்கங்கள் அதிகமாக உள்ளது.
Q18. டூன் பள்ளத்தாக்கு எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன?
டெஹ்ராடூன், உத்தராகாண்ட். புகழ் பெற்ற டூன் பொதுப்பள்ளி “Doon Public School” இங்கு தான் உள்ளது. இந்த பள்ளியில் இருந்து இந்தியா மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் படித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Q19. ரிஷி பள்ளத்தாக்கு எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன?
ஆந்திர பிரதேசத்தின் மதனப்பள்ளி அருகில் உள்ளது. இந்திய தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி என்பவரால் நிறுவப்பட்ட ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி, Rishi Valley Public School இங்குள்ளது.
Q20. மலர்களின் பள்ளத்தாக்கு - valley of flowers என்பது எங்குள்ளது?
உத்தராகாண்ட். மலர்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா -- உலகப் புராதன சின்னம் - அங்குள்ளது.
Q21. இந்தியாவின் வேறு முக்கியமான பள்ளத்தாக்குகள் யாவை?
1. காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு காஷ்மீர்.
2. குளு பள்ளத்தாக்கு, இமாச்சலப் பிரதேசம்.
3. கங்ரா பள்ளத்தாக்கு, இமாச்சலப் பிரதேசம்.
4. நர்மதா பள்ளத்தாக்கு, மத்யப்பிரதேசம்.
5. யும் தாங் பள்ளத்தாக்கு, சிக்கிம்.
6. அமைதிப் பள்ளத்தாக்கு, கேரளா.