Khub.info Learn TNPSC exam and online pratice

தீவுகள் -- ISLANDS

Q1. தீவு என்பது என்ன?
ஒரு நிலப்பகுதி நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்டது. Island எனப்படுகிறது.

Q2. ஆங்கிலத்தில் Islet எனப்படுவது என்ன?
மிகச் சிறிய தீவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q3. ஆங்கிலத்தில் Key or Cay எனப்படுவது என்ன?
மிகச் சிறிய தீவுகள் இவ்வாறும் அழைக்கப்படுகிறது.
Q4. ஆங்கிலத்தில் Eyot எனப்படுவது என்ன?
ஒரு ஆற்றிலோ அல்லது, ஏரியிலோ அமைந்துள்ள தீவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q5. ஆங்கிலத்தில் Bar எனப்படுவது என்ன?
இதுவும் ஆறு அல்லது ஏரியில், நீரில் கொண்டுவரப்படும் வண்டல்களால் மேடுகள் போல் ஏற்பட்டு தீவு போல் உருவாகி, நீரின் போக்கை தடுப்பதாக அமைவதே இவ்வகை தீவுகள்.
Q6. தீவுக்கூட்டம் -- Archipelago என்பது என்ன?
ஒரு தீவுக் கூட்டத்தை ஒரு ஆங்கில வார்த்தையில் அழைக்கப்படுவதே Archipelago .
Q7. தீவுகளில் என்னென்ன வகைகள் உள்ளன?
1. கடல்சார் -- Oceanic island -- கடலின் அடிப்பாகத்திலிருந்து நீரின் மட்டத்திற்கு மேல் வெளிவந்திருக்கும் தீவுகள். உதாரணம் -- (1). ASCENSION மற்றும் TRISTAN DA CUNHA தீவுகள் கடல் மட்டத்திலிருந்து உருவானவை. (2). St HELENA மற்றும் TENERIFFE – கடல் மட்டத்திலிருந்து உருவான எரிமலைகள்.
2. கண்ட -- Continental island -- கடலின் ஆழக்குறைவான பகுதிகளில், நீரில் மூழ்காமல், நீரால் சூழப்பட்டு இருக்கும் தீவுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. உதாரணம் -- க்ரீன்லாந்து, ப்ரிட்டன்.
3. கண்டத்திட்டு -- Tectonic islands -- பொதுவாக ஒரு தீவுக்கூட்டத்தில், எரிமலை தீவுகள் ஒரு சங்கிலித் தொடரில் அமைந்து வில் போன்ற அமைப்பில் இரு கண்டத்திட்டுகள் இணையும் இடத்தில் அவற்றுக்கு இணையாக அமைந்திருப்பது. உதாரணம் -- (1) பார்பேடோஸ், மேற்கிந்திய தீவுகள். (2) கோடியக் தீவு, அலாஸ்கா, அமெரிக்கா.
4. பவள -- Coral islands. கடலில் உருவாகும் பவளப்பாறைகளாலும் மற்றும் கடல்சார் கரிமப் பொருட்களால் உருவாகும் தீவுகள்.
Q8. வட்டப்பவளத்திட்டு -- Atoll என்பது என்ன?
இவைகளும் தீவுகளே. ஆனால், இவைகளில் எங்கேனும் ஒரு இடத்தில் பிளவு இருந்து அதன் வழியாக கடல் நீர் உள்ளே புக வழி இருக்கும். இதன் வடிவம் பொதுவாக குதிரை லாடம் போல் இருக்கும். இதன் அமைப்பில் சில இடங்களில் அதிகமான தரையும், குறைவான நீரும், சில இடங்களில் மாறுபட்டிருக்கும். உதாரணம் -- KWAJELIN, மார்ஷல் தீவு – தரைப்பகுதி 2850 SQKM, நீர்ப்பகுதி 280 SQKM.
Q9. சிறு கண்ட தீவு -- Micro Continental island என்பது என்ன?
கண்டத்தீவுகளில் இது ஒரு பிரத்தியேக வகை. ஒரு கண்டம் பிளந்து நகர்ந்து அதனால் உருவாகும் தீவு. உதாரணம் -- மடகாஸ்கர், ஆப்பிரிக்கா.
Q10. பாலைவனத்தீவு -- Desert Island என்பது என்ன?
மனிதர்கள் குடியேறாத தீவு.
Q11. தீவு நாடு என்பது என்ன, உதாரணம் கொடுக்கவும்?
ஒரு தீவு, நாடாக இயங்குவது. ஒரு தீவோ, அல்லது சில தீவுகள் சேர்ந்தோ இயங்குவது. உதாரணம்: ஆஸ்திரேலியா, க்யூபா, நியூசிலாந்து, ஸ்ரீலங்கா.
Q12. சுதந்திரமாக இயங்கும் தீவு நாடுகள் சுமார் எத்தனை உள்ளன?
48 சுதந்திர நாடுகள்
Q13. எந்த தீவு நாடு ஒரு கண்டமாகவும் உள்ளது?
ஆஸ்திரேலியா
Q14. எந்த தீவு நாட்டின் எல்லைக்குள் அதிகமான தீவுகள் உள்ளன?
இந்தோனேசியா -- சுமார் 17500 தீவுகள்.
Q15. சில தீவு நாடுகளையும், அதன் எல்லைக்குள் அதிகமான தீவுகளை கொண்ட நாடுகளின் பெயர்களைக் கூறுக?
1. பிலிப்பைன்ஸ் -- தெற்கு சீனக் கடல் -- சுமார் 7107 தீவுகள் கொண்டது.
2. ஜப்பான் -- பசிபிக் கடல் -- சுமார் 3000 தீவுகள் கொண்டது.
3. பஹாமா -- அட்லாண்டிக் கடல் -- சுமார் 700 தீவுகளைக் கொண்டது.
4. ஃபிஜி -- பசிபிக் கடல் -- சுமார் 322 தீவுகளைக் கொண்டது.
5. கிரிபாட்டி -- பசிபிக் கடல் -- சுமார் 33 பவழத்தீவுகள் Atolls கொண்டது.
6. சீஷெல்ஸ் -- இந்தியப் பெருங்கடல் -- சுமார் 158 தீவுகளைக் கொண்டது.
7. ட்ரினிடாட் & டொபேகோ -- கரீபியக் கடல் -- 23 தீவுகளைக் கொண்டது.
8. இந்தியா -- அந்தமான் & நிக்கோபார் -- இந்தியப்பெருங்கடல்/அந்தமான் கடல் -- 349 தீவுகள்.
9. ஆஸ்திரேலியா -- பசிபிக், தென், இந்தியப் பெருங்கடல் -- 8222 தீவுகள்.
Q16. எந்த தீவு நாடு, பாரசீக வளைகுடாவில் இருந்து, அரபு நாடுகளில் சிறியதுமாக உள்ளது?
பஹ்ரைன் -- Bahrain.
Q17. எந்த சுதந்திர தீவு நாடு, தனது எல்லையை, வேறு எந்த இரு சுதந்திர தீவு நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்கிறது?
ப்ரூணே -- போர்னியோ தீவில் உள்ள இந்த தீவு, இந்தோனேசியாவின் ஒரு மாகாணம் மற்றும் மலேசியாவின் ஒரு மாகாணத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
Q18. கரீபியக் கடலில் உள்ள ஒரு தீவு நாடு, ஞாயிற்றுக்கிழமையின் பெயரில் உள்ளது?
டொமினிகா -- DOMINICA -- லத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமையைக் குறிக்கிறது. கொலம்பஸ் இந்தத்தீவை ஞாயிற்றுக்கிழமையில் கண்டுபிடித்ததால் இந்த பெயர் சூட்டப்பட்டது.
Q19. எந்தத் தீவுக் கூட்ட நாட்டில் அதிகமான இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர்?
ஃபிஜி -- Fiji.
Q20. அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு தீவு நாடு, பகுதி சுதந்திர நாடாகவும், பகுதி மற்றொரு நாட்டின் கீழும் இயங்கிக் கொண்டிருக்கிறது?
அயர்லாந்து. இதன் தென் பகுதி சுதந்திர நாடாகவும், வட பகுதி இங்கிலாந்து நாட்டின் கீழும் இயங்கி வருகிறது.
Q21. எந்த தீவுக்கூட்ட நாடு, அதிகமான பவழத்தீவுகளைக் atolls கொண்டுள்ளது?
கிரிபாட்டி.
Q22. இந்த தீவு நாடு, உலகிலேயே அதிகமான தாவர, விலங்கின வகைகளின் flora and fauna பங்கைக் கொண்டுள்ளது?
மடகாஸ்கர் -- MADAGASCAR – இங்கு உலகின் தாவர விலங்கின வகைகளில் 5 சதவிகித அரிதான வகைகள் உள்ளது. இந்த விலங்கின வகைகளில் சுமார் 80 சதவிகிதம் இந்த தீவு நாட்டில் மட்டுமே வாழக்கூடியது.
Q23. பசிபிக் கடலில் உள்ள ஒரு தீவு நாடு, தனக்கென்று ஒரு தலைநகர் இல்லாதது மற்றும் மிகச் சிறிய தீவுக் குடியரசு நாடு?
நௌரு -- Nauru.
Q24. சமோவா என்ற தீவுக்கூட்ட நாடு முன்பு எவ்வாறு அறியப்பட்டது?
ஜெர்மன் மற்றும் கிழக்கு சமோவா.
Q25. குடியரசு சீனா என்ற தீவு நாடு, வேறு எந்தப் பெயரில் அறியப்படுகிறது?
தைவான் மற்றும் சைனீஸ் தைப்பீ. Taiwan or Chinese Taipei.
Q26. இது ஒரு தீவு நாடு, ஆனால் மற்றொரு நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறது?
இந்தோனேசியா. Indonesia.
Q27. புகழ் பெற்ற சிங்கப்பூர் தீவு நாடு எங்குள்ளது?
இந்தியப் பெருங்கடலில், மலாய் தீபகற்பத்தின் தென் முனையில் உள்ளது.
Q28. அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு தீவு நாடு, ஒரு காலத்தில், அநேகமாக முழு உலகத்தையும் ஆண்டது. அது எது?
ஐரோப்பாவின் வட அட்லாண்டிக் கடலில் உள்ள ஐக்கிய ராஜ்யம் United Kingdom .
Q29. எந்த தீவு நாடு "தோழமைத் தீவு" “Friendly Islands” என அழைக்கப்படுகிறது. ஏன்?
டோங்கா -- TONGA – தெற்கு பசிபிக் கடலில், நீயூசிலாந்து மற்றும் ஹவாய்க்கு இடையில் உள்ளது. புகழ்பெற்ற கடல் வழியாய் உலகைச் சுற்றிய மாலுமி, கேப்டன் குக் இங்கு 1773ல் வந்த போது, அப்போது இங்கு வாழ்ந்த மக்கள், இவரை அன்போடு வரவேற்றதால், இப்பெயர் வைக்கப்பட்டது.
Q30. இரண்டு தீவுகளைக் கொண்ட ஒரு நாடு, வடக்கு, தெற்கு தீவுகள் என அழைக்கப்படுகிறது?
நியூசிலாந்து.
Q31. இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள தீவு நாடு எது, முன்பு எவ்வாறு அறியப்பட்டது, இரு நாடுகளையும் பிரிப்பது எது?
ஸ்ரீலங்கா -- முன்பு சிலோன் என அறியப்பட்டது. பாக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது.
Q32. உலகின் மிகப்பெரிய தீவு நாடு எது?
க்ரீன்லாந்து -- டென்மார்க் நாட்டின் நிர்வாகப் பொருப்பில் உள்ளது.
Q33. தொலைத்தூரத்தில் remotest உள்ள தீவு எது?
தென் அட்லாண்டிக் கடலில் உள்ள பௌவெட் தீவு -- நார்வே நாட்டின் கீழ் உள்ளது.
Q34. தொலைதூரத்தில் உள்ள remotest தீவுக்கூட்டம் archipelago எது?
TRISTANA DA CUNHA - தென் அட்லாண்டிக் கடல்.
Q35. நன்னீர் ஏரியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு எது?
மேண்டௌலின் தீவு -- ஹ்யூரான் ஏரி, மிச்சிகன், அமெரிக்கா - ஆண்டேரியோ, கனடா.
Q36. உலகிலேயே முதலில் மகளிருக்கு ஓட்டுரிமை வழங்கிய தீவு நாடு எது?
நியூசிலாந்து.
Q37. ஆஸ்திரேலியா என்ற பெயரை இந்த தீவு நாட்டுக்கு சூட்டியவர் யார்?
இங்கிலாந்து கப்பற்படை அதிகாரி மேத்யூ ஃப்ளைண்டர்ஸ் Mathew Flinders.
Q38. மேற்கு இந்திய தீவுகள் எந்த மூன்று தீவுக் குழுவைச் சேர்ந்தது?
பஹாமாஸ், க்ரேட்டர் ஆண்டில்லஸ், லெஸ்ஸர் ஆண்டில்லஸ் -- Bahamas, Greater Antilles, and Lesser Antilles.
Q39. எந்தத் தீவை, சீனா, 1999ல் போர்ச்சுகலிடமிருந்து பெற்றது?
மகாவ் -- Macau.
Q40. எந்த தீவு நாடு, உணவு விடுதிகளிலும், மதுபானக் கடைகளிலும், புகைப் பிடிப்பதை முதலில் தடை செய்தது?
ஐஸ்லாந்து - Iceland.
Q41. எந்த தீவு நாட்டு மக்கள் ""பஜன்ஸ்"" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் படுகின்றனர்?
பார்பேடோஸ் -- Barbados.
Q42. எந்த தீவு நாடு, உலகப் புகழ் பெற்ற சதுரங்க வீரர்கள் பாபி ஃபிஷர் மற்றும் போரிஸ் ஸ்பாஸ்கி இடையே ""நூற்றாண்டின் போட்டி"" “Match of the Century”, என்ற புகழ் பெற்ற சதுரங்கப் போட்டியை 1972ல் நடத்தியது?
ஐஸ்லாந்து Iceland.
Q43. எந்த தீவை, அமெரிக்கா தனது, அணு சோதனைகளுக்கு, 20ம் நூற்றாண்டில் பயன்படுத்தியது?
மார்ஷல் தீவுகள் -- MARSHALL ISLANDS – இது இரண்டு தொடர் தீவுச் சங்கிலி. மேற்கு தொடர் ராலிக் எனவும், கிழக்குத் தொடர் ராடக் எனவும் அழைக்கப்படுகிறது.
Q44. நயாகரா நீர்வீழ்ச்சியில் அமைந்துள்ள தீவின் பெயர் என்ன?
ஆடு தீவு -- GOAT Island – இந்தத் தீவு, நயாகரா நீர்வீழ்ச்சியை, குதிரை லாட நீர்வீழ்ச்சி, கேனடா மற்றும் அமெரிக்க நீர்வீழ்ச்சி எனப் பிரிக்கிறது.
Q45. உலகின் இரண்டாவதுப் பெரிய ஏரித் தீவு எது?
ரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரியில் உள்ளத் தீவு.
Q46. ஆசியாவின் மிகப் பெரிய தீவு எது?
நியூ கினி -- பசிபிக் கடலில் உள்ளது.
Q47. உலகின் மிகப் பெரிய எரிமலைத் தீவு எது?
சுமத்ரா -- இந்தோனேசியா.
Q48. சார்லஸ் டார்வின் ஆய்வுடன் தொடர்பு கொண்ட தீவு எது?
இக்குவேடார் நாட்டில் உள்ள கலபேகோஸ் தீவு Galapagos island – இங்கு தான் சார்லஸ் டார்வின் தனது ஆய்வின் பெரும் பகுதியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவு இக்குவேடார் நாட்டின் ஒரு மாகாணம்.
Q49. "சாண்ட்விச் தீவு" “Sandwich Islands” என அழைக்கப்பட்ட தீவு எது?
ஹவாய் தீவுகள் Hawai’i islands, அமெரிக்கா.
Q50. "கிறிஸ்துமஸ் தீவு" “Christmas Island” என்பது எங்குள்ளது?
இந்தியப் பெருங்கடல் -- Indian Ocean – ஆஸ்திரேலிய எல்லைக்குட்பட்டது. பெர்த் நகரத்திலிருந்து சுமார் 2600 கி.மீ வட மேற்கில் உள்ளது.
Q51. உலகிலேயே மிகப்பெரிய நதி சார்ந்த தீவு எது, அதன் முக்கியத்துவம் என்ன?
மஜோலி தீவு -- பிரம்மபுத்ரா நதியில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளது. இந்தியாவின் முதல் தீவு மாவட்டம், மற்றும் இங்குள்ள வைஷ்ணவ மடங்களும் இதன் முக்கியத்துவம் ஆகும்.
Q52. Silhoutte, Conception, Cousin, Long, Round, Anonyme, Beacon, Booby இப்பெயர் கொண்ட தீவுகள் எங்குள்ளன?
சீஷெல்ஸ் ல் உள்ள தீவுகள். (ஆப்பிரிக்க நாடு).
Q53. அமெரிக்காவில் சுதந்திர சிலை Liberty Statue அமைந்துள்ள சிறிய தீவின் இன்றைய பெயர் சுதந்திர தீவு. முந்தைய பெயர் என்ன?
பெட்லோ தீவு -- Bedloe island. (நியூயார்க் நகரம்)
Q54. எந்த தீவு மீன் தூண்டில் வடிவத்தில் அமைந்துள்ளது?
பெர்முடா. Bermuda.
Q55. பசிபிக் கடலில் உள்ள எந்த தீவின் ஒரு பகுதி அர்ஜெண்டினா, மற்றொரு பகுதி சிலி நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது?
டியரா டெல் ஃப்யூகோ -- Tierra Del Fiugo – தென் அமெரிக்க முக்கிய நிலப்பகுதியின் தென் முனையில் மகெல்லன் ஜலசந்தியை தாண்டி உள்ளது.
Q56. உலகின் மிகப்பெரிய கடல் மட்டத்திற்கு மேலே எழும்பியுள்ள பவளத்தீவு எது?
NIUE நியூசிலாந்து எல்லைக்குட்பட்டது.
Q57. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவு எது?
நியூ கினி -- New Guinea.
Q58. நெப்போலியன் பிறந்த தீவின் பெயர் என்ன?
கார்ஸிகா -- Corsica -- ஃப்ரான்ஸ்.
Q59. பூமியின் வடகோடியில் உள்ள தீவுகள் எது?
நார்தர்ன் மரியானா தீவுகள் -- Northern Mariana Islands
Q60. உலகின் மிகச்சிறிய தீவு எனக்கருதப்படுவது எது?
பிஷப் ராக் -- Bishop Rock – ஐக்கிய ராஜ்யத்தின் UK தென் மேற்கில் உள்ளது.
Q61. மத்திய தரைக்கடலில் Mediterranean Sea உள்ள மிகப்பெரிய தீவு எது?
சிசிலி -- Sicily.