Khub.info Learn TNPSC exam and online pratice

பாலைவனம் -- DESERTS

Q1. பாலைவனம் என்பது என்ன?
மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற்குன்றுகளும் நிறைந்த பகுதி. ஜீவராசிகள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதி.

Q2. உலகின் தரைப்பகுதியில் எவ்வளவு பாலைவனத்தால் கவரப்பட்டுள்ளது?
மூன்றில் ஒரு பங்கு.
Q3. பாலைவனங்களின் புவியியல் ரீதியான அம்சங்கள் யாவை?
1. மிகப்பெரிய பரப்பளவில் மணல் பரவியிருப்பது.
2. மிகவும் குறைந்த மழை பெறும் பகுதி (250mm/10 inches குறைவாக)
3. மனித வாழவும், தாவரங்கள் வளர்ச்சிக்கும் லாயக்கற்றது.
4. அதிகமான வெப்பம் ஒரு சாதாரண நிகழ்வு.
5. பகலில் அதிக வெப்பம், இரவில் அதிக குளிர்.
6. மேகமில்லாத வானம்.
7. படிமங்களும் தனிமங்களும் நிறைந்திருக்கும்.
Q4. பாலைவனங்களின் வகைகள் யாவை?
1. குளிர் பாலைவனம். Cold deserts
2. மலைசார்ந்த பாலைவனம். Montane
3. மழை பெறா பாலைவனம். Rain Shadow.
Q5. குளிர் பாலைவனம் என்பது என்ன?
துருவ பாலைவனம் எனவும் அழைக்கப்படுகிறது. பனி மட்டுமே இந்த பகுதிகளின் பொழிவு. அண்டார்டிகா தான் மிகப்பெரிய குளிர் பாலைவனம் -- சுமார் 14 லட்சம் ச.கி.மீ. -- இதில் 96 சதவிகிதம் பனிப்பொழிவால் கவரப்பட்டிருக்கும். இந்த பனி படலத்தின் தடிமம் சராசரியாக 1.6 கி.மீ இருக்கும் -- சுமார் 2 முதல் 4 சதவிகிதம் மட்டுமே தரைப்பகுதியாக தென்படும்.
Q6. மலை சார்ந்த Montane பாலைவனம் என்பது என்ன?
மலைகளின் உயரமான பகுதிகளில் காணப்படும் வறண்ட பகுதிகள். உதாரணம் -- வட இமாலயத்தில் லடாக் பகுதி, திபெத்திய பீடபூமி.
Q7. மழை பெறா பாலைவனம் rain shadow என்பது என்ன?
உயரமான மலைகளின் ஒரு புறத்தில் மட்டும் உருவாகும் பாலைவனம். காரணம், மழை மேகங்கள் மலையின் ஒரு புறத்தால் தடுக்கப்பட்டு விடுவதால், மற்றொரு புறம் மழை பெய்யும் வாய்ப்பு தடை பெறுகிறது. இவ்வாறு மழை பெறும் மலைப்பகுதி “Windward” எனவும், மழைப்பெறா பகுதி “Leeward” எனவும் அழைக்கப்பட்டு rain shadow deserts எனப்படுகிறது.
Q8. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
சஹாரா -- Sahara – 90 லட்சம் ச.கி.மீ பரப்பளவில், அல்ஜீரியா, சாட், எகிப்து, லிப்யா, மாலி, மவுரிட்டானியா, மொராக்கோ, சூடான் மற்றும் துனீசியா (ஆப்பிரிக்க) நாடுகளில் பரவியுள்ளது.
Q9. அடகாமா பாலைவனம் எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் யாது?
சிலி, தென் அமெரிக்கா -- தனிமங்கள் நிறைந்த, குறிப்பாக சோடியம் நைட்ரேட் (வெடிமருந்து மற்றும் உரத்தயாரிப்பில் பயன்படுவது), பகுதி.
Q10. எந்த ஆப்பிரிக்க பாலைவனத்தில், உலகின் மிகப்பெரிய ஒராபா வைர சுரங்கம் அமைந்துள்ளது?
காலஹாரி பாலைவனம் -- Kalahari Desert – 9 லட்சம் ச.கி.மீ lakh SQKM – போட்ஸ்வானா, நமீபியா, மற்றும் தென் ஆப்பிரிக்க நாட்டின் காலஹாரி விளையாட்டு பூங்கா Kalahari Game Reserve ஆகிய இடங்களில் பரவியுள்ளது. ஒராபா என்பது வடகிழக்கு காலஹாரி பாலைவனத்தில் உள்ளது. இங்கு தான் உலகின் மிகப்பெரிய வைர சுரங்கம் அமைந்துள்ளது.
Q11. காலஹாரி பாலைவனத்துக்கும் திரைப்படத் துறைக்கும் உள்ள தொடர்பு என்ன?
இந்த பாலைவனத்தில் தான் மிகவும் புகழ் பெற்ற ஆங்கில நகைச்சுவைத் திரைப்படம் ‘GODS MUST BE CRAZY” (1980) முழுவதுமாக எடுக்கப்பட்டது.
Q12. நமீபிய பாலைவனம் எங்குள்ளது?
நமீபியா -- Namibia – 50000 ச.கி.மீ – தென் மேற்கு அங்கோலா விலும் பரவியுள்ளது. பழமையானது.
Q13. நமீபிய பாலைவனத்தில் அமைந்துள்ள தேசிய பூங்கா எது?
Namib Naukluft National Park – பழமையானதும், பெரியதும் ஆன பூங்கா.
Q14. கோபி பாலைவனம் எங்குள்ளது?
சீனா-மங்கோலியாவில் பரவியுள்ளது. 12,95,000 ச.கி.மீ -- குளிர் பாலைவனம்.
Q15. இந்தியாவில் உள்ள பெரிய பாலைவனம் எது, எங்குள்ளது?
தார் பாலைவனம் -- 2 லட்சம் ச.கி.மீ. ""இந்திய பெரும் பாலைவனம்"" எனப்படுகிறது. பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்திலும், எஞ்சியது ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்த் மாகாணங்களில் பரவியுள்ளது.
Q16. ராஜஸ்தானின் எந்த மாவட்டங்கள், தார் பாலைவனத்தால் கவரப்பட்டுள்ளது?
ஜோத்பூர், பிகானீர், சுரு, கங்காநகர், பார்மர், ஜெய்சல்மேர் மற்றும் ஜாலோர்.
Q17. ராஜஸ்தானின் இரு மாவட்டங்கள் முழுவதுமாக தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. அவை யாவை?
பிகானீர் மற்றும் ஜெய்சல்மேர்.
Q18. தார் பாலைவனத்தில் காணப்படும் வன விலங்குகள் யாவை?
Great Indian Bustard (கானமயில்), Black Buck (கலைமான்) , Indian Gazelle (இந்திய மான் வகை) , Indian Wild Ass (இந்திய காட்டுக் கழுதை).
Q19. குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியின் தார் பாலைவனப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட வன விலங்குக்காக ஒரு தேசிய பூங்கா ஒதுக்கப்பட்டுள்ளது. அது என்ன?
இந்திய காட்டுக் கழுதை -- The Indian Wild Ass
Q20. ஆஸ்திரேலியாவின் கிப்ஸன் பாலைவனம், இந்தப் பெயரிடப்பட்ட துயர பின்னணி என்ன?
மத்திய ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. 155000 ச.கி.மீ – 1874ல், ஆல்ஃப்ரெட் கிப்ஸன் என்பவர் இந்த பாலைவனத்தை கடக்க முயன்று மரணம் அடைந்ததினால் இந்த பெயர் சூட்டப்பட்டது.
Q21. அரேபிய பாலைவனம் எங்குள்ளது?
இந்த பாலைவனம், யெமென் நாட்டிலிருந்து பாராசீக வளைகுடா, ஒமான் முதல் ஜோர்டான், இராக் வரை சுமார் 23,30,000 ச.கி.மீ க்கு பரவியுள்ளது.
Q22. அரேபிய பாலைவனத்தில் “Empty Quarter” என்ற ஒரு குறிப்பிட்டப் பகுதி உள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன?
அரேபிய மொழியில் இதை “Rub-al-Kahli” (“Great Sandy Desert”) என அழைப்பர். உலகில் ஒரே தொடரில் அமைந்துள்ள பெரிய மணற்பரப்பு. உலகின் மிகப்பெரிய எண்ணெய்க் கிணறுகள் இப்பகுதியில் அமைந்துள்ளது.
Q23. உலகின் மிகப்பெரிய குளிர் பாலைவனம் எது?
அண்டார்டிகா.
Q24. உலகின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனம் எது?
சஹாரா.
Q25. எந்த பாலைவனம் மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது?
நமீப் பாலைவனம். (நமீபியா - அங்கோலா)
Q26. தார் பாலைவனத்தில் வாழும் மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்?
பிஷ்னோய் -- Bishnoi.
Q27. “Sahara Pump Theory” என்ற ஒரு கோட்பாடு எதைக் குறிக்கிறது?
இந்தக் கோட்பாடு, ஆப்பிரிக்க தாவர மற்றும் விலங்கு இனங்கள் எவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் சென்றன என்பதை விளக்குவது.
Q28. "மணற்குன்று" Sand Dune என்பது என்ன?
காற்றின் உந்தலால் குவிந்த மணல் மேடுகள். பொதுவாக நீள் வட்டம் அல்லது கூம்பு வடிவத்தில் அமைந்திருக்கும். காற்றின் போக்கினால்ஒரு புறம் சரிவாகவும், மறு புறம் சற்று செங்குத்தாகவும் அமைந்து இருக்கும்.
Q29. உலகிலேயே மிகப்பெரிய மணற் குன்று எது, எங்குள்ளது?
CERRO BLANCO – 2080 மீ/6791 அடி -- கடல் மட்டத்திலிருந்து -- செச்சுரா பாலைவனம், பெரு.
Q30. தூசிப் புயல் -- Dust Devil என்பது என்ன?
பொதுவாக வறண்ட தளர்வான மண் கொண்ட சமவெளியுடன் தொடர்புடையது. இது சுமார் 100 அடி உயரம் வரை செல்லக்கூடிய சுழல்காற்று நடுவில் குறைந்த அழுத்தம் கொண்டதாக, தூசி, மணல் கலந்ததாக இருக்கும்.
Q31. வெப்ப மண்டல பாலைவனம் என்பது எவை?
வெப்பம் அதிகமுள்ள பாலைவனங்கள் -- சஹாரா, அரேபியன், ஆஸ்திரேலியன் மற்றும் தார் பாலைவனங்கள் -- இங்கு வெப்பம் 58° C வரை, அதற்கு மேலும் செல்லக்கூடும்.
Q32. எந்த பாலைவனங்கள் மத்திய அட்ச ரேகை பாலைவனங்கள் என கருதப் படுகின்றன?
மித வெப்ப பாலைவனங்களான கோபி, மற்றும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துருக்கிஸ்தான் பகுதிகளில் உள்ள பாலைவனங்கள்.
Q33. மிக உயர பாலைவனங்கள் என்பது என்ன?
இவை பொதுவாக மிக உயர மலைகளின் உயர் பகுதிகளில் காணப்படுபவை.
Q34. மணற்புயல் - Sand Storm என்பது என்ன?
மணல் நிறைந்த பாலைவனங்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்வு. வலுவான காற்றினால் மணல் மிக உயரத்துக்கு தூக்கப்பட்டு, மணல் மேகமாக அதிக வேகத்துடன் எடுத்துச்செல்லப்படுவது.
Q35. Loo என்ற ஆங்கிலச் சொல் பாலைவனங்களுடன் தொடர்புடையது. அது என்ன?
ராஜஸ்தான் பாலைவனத்தில் கோடைக்காலத்தில் வீசும் மணற்புயல்.
Q36. பாலைவனச் சோலை -- Oasis என்பது என்ன?
பாலைவனத்தின் நடுவில், நீர் மற்றும் பசுமையான தாவரங்களுடன் கூடிய பகுதி.
Q37. எந்த கடற்கரையோர பாலைவனம், ""நரகத்தின் எல்லை"" மற்றும் ""எலும்புக்கூடு ஓரம்"" என்று அழைக்கப்படுகிறது?
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அட்லாண்டிக் கடற்கரையோர நமீபியன் பாலைவனம். காரணம், இங்குள்ள வெப்பம் மற்றும் வறண்ட ஈரப்பதத்தினால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q38. மொஜேவ் பாலைவனம் எங்குள்ளது?
கலிஃபோர்னியா, அமெரிக்கா.

உலகின் பெரிய பாலைவனங்கள் -- WORLD’S LARGEST DESERTS

Q39.
எண் பாலைவனப்பெயர் ச.கி.மீ பரவியுள்ள இடம்
1. சஹாரா 9000000 அல்ஜீரியா, சாட், எகிப்து, லிப்யா, மாலி, நிகர், மவுரிட்டானியா சூடான், துனிசியா.
2. அரேபியன் 2330000 சௌதி அரேபியா, ஜோர்டான், இராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள்
3. கோபி 1300000 மங்கோலியா, சீனா.
4. காலஹாரி 900000 அங்கோலா, போட்ஸ்வானா, நமீபியா, தென் ஆப்பிரிக்கா.
5. பேத்தகோனியன் 670000 அர்ஜெண்டினா, சிலி.
6. க்ரேட் விக்டோரியன் 647000 ஆஸ்திரேலியா
7. சிரியன் 520000 சிரியா, ஜோர்டான், இராக்.
8. க்ரேட் பேசின் 492000 அமெரிக்கா.
9. சிஹூவாஹுவான் 450000 மெக்ஸிகோ, அமெரிக்கா.
10. க்ரேட் சாண்டி 400000 ஆஸ்திரேலியா
11. கரகும் 350000 துருக்மெனிஸ்தான்.
12. கொலராடோ ப்ளாட்யூ 337000 அமெரிக்கா
13. சொனோரன் 310000 மெக்ஸிகோ, அமெரிக்கா.
14. கிஸில்கும் 300000 கஸகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான்.
15. தக்லமகான் 270000 சீனா.
16. தார் 200000 இந்தியா, பாகிஸ்தான்.
17. கிப்ஸன் 155000 ஆஸ்திரேலியா.
18. சிம்ஸன் 145000 ஆஸ்திரேலியா
19. அடகாமா 140000 சிலி, பெரு.
20. நமீபிய 81000 நமீபியா, அங்கோலா.
21. தஷ்த் எ கவிர் 77000 இரான்
22. மொஜேவ் 65000 அமெரிக்கா
23. தஷ்த் எ லுட் 52000 இரான்.
24. நூபியன் 50000 சூடான்.
Q40. நன்னம்பிக்கை முனை என்பது எங்குள்ளது? Cape of Good Hope. கண்டுபிடித்தவர் யார்?
ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனை, அட்லாண்டிக் கடலுக்குள் செல்லுமாறு அமைந்திருக்கும். இது தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ளது. 1488ல் போர்ச்சுகீசிய மாலுமி/அரசவை உறுப்பினர் முதன் முதலாக இந்த முனையில் இறங்கி, ஆப்பிரிக்காவை கண்டுபிடித்தார்.
Q41. நன்னம்பிக்கை முனையின் முந்தைய பெயர் என்ன, யார் இதை நன்னம்பிக்கை முனை என்ற பெயரை பரிந்துரைத்தார், யார் பெயர் சூட்டினார்?
புயல் முனை என அழைக்கப்பட்டுள்ளது. CAPE OF STORMS – இதை நன்னம்பிக்கை முனை என 1488ல் போர்ச்சுகீசிய மாலுமி/அரசவை உறுப்பினர் முதன் முதலாக ஆப்பிரிக்காவை கண்டுபிடித்து இப்பெயரை பரிந்துரைத்தார். அதை ஏற்று, போர்ச்சுகல் மன்னர் ஜான் II இவ்வாறு பெயர் சூட்டினார்.
Q42. நன்னம்பிக்கை முனையில் இங்கு வந்த சில மாலுமிகளின் ஞாபகார்த்த பலகைகளும் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அவை யாவை?
டையஸ் க்ராஸ் DIAS CROSS (சிலுவை) என்பது பார்த்தொலோமியோ டையஸ் நினைவாகவும், டகாமா க்ராஸ் DAGAMA CROSS வாஸ்கோ ட காமா நினைவாகவும் வைக்கப்பட்டுள்ளது.
Q43. ராத் முனை -- Cape Wrath எங்குள்ளது?
க்ரேட் ப்ரிட்டன் தீவின் வடமேற்கு முனை. இது ஸ்காட்லாந்து பகுதியில் உள்ளது.
Q44. ஹார்ன் முனை -- Cape Horn எங்குள்ளது?
தென் அமெரிக்கா வின் தெற்கு முனை. டச்சு கிழக்கிந்திய நிறுவனம், தங்கள் நாட்டின் ஹூர்ன் நகரின் பெயரை இதற்கு சூட்டினர்.
Q45. அகுலாஸ் முனை -- Agulhas எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்காவின் தெற்கு முனை. அட்லாண்டிக் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் பிரிக்கும் முனை என்று கருதப்படுகிறது. இதை ஊசி முனை Cape of Needles என்றும் கூறுவர்.
Q46. குமரி முனை -- Cape Comorin எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன?
தென் இந்தியாவின் கன்னியாகுமரி என்ற இடத்தில், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. இந்தியாவின் தென் கோடி.
Q47. கார்ன்வால் முனை --Cape of Cornwall என்பது எங்குள்ளது?
இங்கிலாந்தின் கார்ன்வால் என்ற இடத்தில் கடலுக்குள் செல்லுமாறு ஒரு நிலப்பகுதி. இங்கு தான் அட்லாண்டிக் கடலின் நீரோட்ட அலை பிரிகிறது.
Q48. காட் முனை Cape Cod எங்குள்ளது, இதைக் கண்டுபிடித்தது யார்?
அமெரிக்காவின் மாஸாசூசெட்ஸ் என்ற இடத்தின் கிழக்கில் உள்ளது. இதைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து மாலுமி பார்த்தலோமியோ கோஸ்னால்ட்.