Khub.info Learn TNPSC exam and online pratice

தீபகற்பம் -- PENINSULA

Q1. தீபகற்பம் என்பது என்ன?
ஒரு நிலப்பகுதியின் விரிவு கடலுக்குள் செல்லுமாறு அமைந்திருப்பது, அதாவது அந்த நிலப்பகுதி மூன்று பக்கங்களில் நீரால் சூழப்பட்டிருக்கும்.

Q2. தீபகற்பம் உலகில் எவ்வளவு உள்ளன?
உலகில் தீபகற்பங்கள் நிறைய உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Q3. உலகின் சில முக்கியமான தீபகற்பங்களை கூறுக.
1. தென் இந்திய தீபகற்பம். தென் மாவட்டங்களும் இதில் அடங்கும்.
2. அரேபியன் தீபகற்பம் -- தென் மேற்கு ஆசியா -- சௌதி அரேபியா, யெமன், ஓமன், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு நாடுகள்
3. அலாஸ்கன் தீபகற்பம் -- அலாஸ்கா, அமெரிக்கா
4. ஸ்காண்டிநேவியன் பெனின்சுலா -- வடமேற்கு ஐரோப்பா-- ஸ்வீடன், நார்வே, டென்மார்க்
5. ஐபீரியன் தீபகற்பம் -- தென் மேற்கு ஐரோப்பா -- ஸ்பெயின், போர்ச்சுகல், அண்டோரா.,
6. லேப்ரடார் தீபகற்பம் -- கிழக்கு கேனடா
7. ஜட்லேண்ட் தீபகற்பம் -- டென்மார்க்.
8. மெல்வில்லி தீபகற்பம் -- கேனடியன் ஆர்க்டிக் பகுதி.
9. காம்சட்டாகா தீபகற்பம் -- ரஷ்யா.
Q4. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?
அரேபியன் தீபகற்பம் -- தென் மேற்கு ஆசியா -- 3250000 ச.கி.மீ – க்ரீஸ், பல்கேரியா, அல்பேனியா, க்ரோஷியா, செர்பியா ஆகிய நாடுகள் இங்குள்ளது.
Q5. எரிட்ரீயா, டிஜிபௌட்டி, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகள் எந்த தீபகற்பத்தில் அடங்கியுள்ளது?
ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் தீபகற்பத்தில் உள்ளது.

வளைகுடா -- GULF

Q6. வளைகுடா என்பது என்ன?
நிலத்துக்குள் கடல் நீர் மிகப்பெரிய அளவுக்கு, நல்ல தூரத்துக்கு உள் புகுந்திருக்கும் பகுதி.
Q7. உலகில் எவ்வளவு வளைகுடாக்கள் உள்ளன?
உலகின் பல பகுதிகளில் பல உள்ளன. அவற்றுள் சில முக்கியமானவை மற்றும் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது. அவை:
1. பாரசீக -- மேற்கு ஆசியாவில் உள்ளது. சுமார் 2,51,000 ச.கி.மீ
2. மெக்ஸிகன் -- அமெரிக்க மத்திய தரைக்கடல் -- 15, 50,000 ச.கி.மீ.
3. செயிண்ட் லாரன்ஸ் -- கேனடா -- 2,36,000 ச.கி.மீ
4. கலிஃபோர்னியன் -- கலிஃபோர்னியா -- 1,60,000 ச.கி.மீ
5. மன்னார் -- சுமார் 160 கி.மீ நீளம் கொண்டது. இந்திய எல்லைக்குட்பட்டது.
6. கச் -- அரபிக் கடல் -- குஜராத்-மகாராஷ்டிரா - சுமார் 160 கி.மீ நிலப்பகுதிக்குள் செல்கிறது.
7. ஒமான் -- பாகிஸ்தான், இரான், ஒமான், ஐக்கிய அரபு நாடுகள் ஓரம். Oman
8. ஏடென் -- சோமாலியா மற்றும் யெமனுக்கிடையில்.
9. கம்பாட் -- அரபிக்கடல், குஜராத் -- சுமார் 130 கி.மீ நிலப்பகுதிக்குள் செல்கிறது.
Q8. உலகின் வளைகுடாக்களில் பெரியது எது?
பாரசீக வளைகுடா -- மேற்கு ஆசியா -- 251, 000 ச.கி.மீ -- ஒமான் வளைகுடாவின் விரிவ– இரானுக்கும் அரேபிய தீபகற்பத்துக்கும் இடையில் உள்ளது.
Q9. இந்தியாவில் உள்ள வளைகுடாக்கள் யாவை?
1. மன்னார் வளைகுடா -- GULF OF MANNAR – இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் -- 32500 ச.கி.மீ.
2. கச் & (3) கம்பாட் வளைகுடா: KUTCH AND KHAMBHAT – அரபிக்கடல் - இரண்டுமே குஜராத் மாநிலத்தில் -- கச் சுமார் 160 கி.மீ, கம்பாட் சுமார் 130 கி.மீ க்கு குஜராத்தின் முக்கிய நிலப்பகுதிக்குள் செல்கிறது.
Q10. எந்த வளைகுடாவில் நர்மதா நதி கடலில் கலக்கிறது?
கம்பட், குஜராத்.
Q11. கார்பெண்டாரியா வளைகுடா -- Gulf Carpentaria எங்குள்ளது?
ஆஸ்திரேலியா.
Q12. சமீப காலத்தில் சோமாலியா கடற் கொள்ளையர்கள், சரக்குக் கப்பல்களை சிறைபிடித்து, பிணையம் பெறும் குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது எந்த வளைகுடாவில் நடைபெறுகிறது?
ஏடென் வளைகுடா -- ஏமெனுக்கும் அரேபிய தீபகற்பத்துக்குமிடையில் அமைந்துள்ளது.

நீர்ச்சந்திகள் -- STRAIT

Q13. நீர்ச்சந்திகள்--Strait என்பது என்ன?
ஒரு குறுகிய நீர் தடம் இரண்டு பெரிய நீர் பரப்புகளை இணைக்கும் விதமாக அமைவது. அதாவது, இரண்டு பெரிய நிலப்பரப்புகளை பிரிக்கும் விதமாக இருக்கும் ஒரு குறுகிய நீர் வழி. இவ்வாறு உலகில் பல இடங்களில் உள்ளன. ஒரு சில முக்கியமானவை மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Q14. எந்த நீர்ச்சந்தி துருக்கி நாட்டை, ஐரோப்பிய மற்றும் ஆசிய துருக்கி எனப் பிரிக்கிறது?
போஸ்ஃபோரஸ் நீர்ச்சந்தி. Bhosphorous Strait.
Q15. ஆஸ்திரேலியாவுக்கும் அதன் தஸ்மானிய மாகாணத்திற்குமிடையில் உள்ள நீர்ச்சந்தி எது?
பாஸ் நீர்ச்சந்தி -- Bass Strait.
Q16. நியூசிலாந்து நாட்டின் இரு தீவுகளை, வடக்கு தெற்கு என பிரிப்பது எந்த நீர்ச்சந்தி ?
குக் நீர்ச்சந்தி -- 1770 ல் கேப்டன் குக் இவ்வழியாக பயணித்ததால், இப்பெயர் பெற்றது.
Q17. ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் நீர்ச்சந்தி எது?
டார்டெனில்லிஸ் நீர்ச்சந்தி -- Dardenelles strait.
Q18. எந்த நீர்ச்சந்தி, இங்கிலாந்து நாட்டை, ஐரோப்பாவிலிருந்து பிரிக்கிறது?
டோவர் நீர்ச்சந்தி -- வட கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கிறது -- இது ஆங்கில கால்வாய் English channel எனவும் அழைக்கப்படுகிறது.
Q19. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்தி எது?
பாக் ஜலசந்தி -- 1755-1763 காலத்தில் மதராஸ் மாகாணத்தை ஆண்ட ராபர்ட் பாக் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Q20. எந்த நீர்ச்சந்தி சிங்கப்பூர் இந்தோனேசியாவைப் பிரிக்கிறது?
சிங்கப்பூர் நீர்ச்சந்தி.
Q21. எந்த நீர்ச்சந்தி ஜப்பான்-கொரியாவைப் பிரிக்கிறது?
கொரியன் நீர்ச்சந்தி
Q22. ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமிடையில் உள்ள நீர்ச்சந்தி எது?
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
Q23. வட மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடையில் உள்ள நீர்ச்சந்தி எது? அது புகழ் பெற்ற கப்பல் போக்குவரத்து வழியும் கூட?
பனாமா நீர்ச்சந்தி மற்றும் கால்வாய்.
Q24. மகெல்லன் நீர்ச்சந்தி எங்குள்ளது?
சிலி நாட்டுக்கும் டியரா டெல் ஃப்யூகோ தீவுகளுக்கிடையில் உள்ளது.
Q25. ஆசியாவையும் வட அமெரிக்காவையும் பிரிக்கும் நீர்ச்சந்தி எது?
பெர்ரிங்க் நீர்ச்சந்தி.