Khub.info Learn TNPSC exam and online pratice

கண்டத்தட்டு, நில நடுக்கம், சுனாமி -- PLATE TECTONICS, EARTHQUAKES AND TSUNAMI

Q1. கண்டத்தட்டு என்பது என்ன?
புவியியலின் ஒரு கோட்பாடு. பூமியின் மேற்பரப்பின் கீழுள்ள அடுக்குகளின் அசைவு/நகர்தலைப் பற்றி விளக்குவது. இதன் மூலம், கண்டங்கள் மட்டும் நகர்வில் இல்லை, கடல்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்று விளக்குகிறது.

Q2. தட்டு -- Plate என்பது புவியியலில் என்ன?
கருங்கல் (granite and basalt) , லின் பல அடுக்குகளைக் கொண்ட பூமியின் மேற்பகுதி.
Q3. மென்பாறைக் கோளம் என்பது என்ன, அதன் பயன் என்ன?
பூமியின் மேற்பகுதியின் கீழுள்ள அடர்த்தியான பகுதி. கண்டங்களையும் கடல்களையும் ஒரு மிதவை போல் தாங்கி உள்ளது.
Q4. தட்டுகளின் சராசரி தடிமன் என்ன?
100 கி.மீ.
Q5. தட்டுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
1. ஆக்க பூர்வ தட்டு -- Constructive அட்லாண்டிக் கடல் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும்.
2. அழிவு ஏற்படுத்தக்கூடிய தட்டு -- Destructive - பசிபிக் கடல் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும்.
3. பழமையான தட்டு -- Conservative. அருகில் உள்ள தட்டு நகர்வதால் அதிகமான அழிவை ஏற்படுத்தக் கூடிய தட்டு.
Q6. நில நடுக்கம் ஏற்படக்காரணம் என்ன?
கண்டத்தட்டுகள் நகர்வதால் ஏற்படுகிறது. இவ்வாறு நகரும் போது உராய்வு இல்லாமல் நகராது. இந்த உராய்வினால் ஏற்படும் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஆற்றலும் அதிகரிக்கும். இந்த ஆற்றல் வெளியேறும் போது ஏற்படுவதே நில நடுக்கம். எரிமலை போன்று கண்ணுக்குப் புலப்படாது. உணர மட்டுமே முடியும். இதனால் ஏற்படும் விளைவுகள் கண்ணுக்குப் புலப்படும்.
Q7. எவ்வகை நகர்வு மிகவும் அழிவை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்?
பழமை தட்டு நகர்வுகள் Conservative plate movements தான் அதிகமான அழிவை ஏற்படுத்தும்.
Q8. எளியதாகக் கூற வேண்டுமானால், நில நடுக்கம் என்பது என்ன?
நிலத்தில் நடுக்கம் ஏற்படுவது, அதனால் மண் சரிவு ஏற்படுவது, கட்டுமானங்கள் இடிபடுவது, மற்றும் பல அழிவுகள். அதாவது, பூமியின் மேற்பகுதியில், திடீரென ஆற்றல் வெளிப்பட்டு அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது.
Q9. அதிர்வு அலை Seismic Waves என்பது என்ன?
ஒரு ஆற்றல் அலை, நில நடுக்கத்தினால் அல்லது சக்தியான வெடிப்பினால் ஏற்பட்டு, பூமியில் பயணிக்கும் போது ஏற்படக்கூடியது.
Q10. அதிர்ச்சி மையம் -- “Hypocenter” or “Focus” என்பது என்ன?
பூமிக்கடியில் நிலநடுக்கத்தின் தொடக்க மையம்.
Q11. நில நடுக்க மையம் -- “Epicenter” என்பது என்ன?
பூமியின் மேற்பரப்பில் பூமிக்கடியில் இருந்து செங்குத்தாக எழும்பும் நில நடுக்க மையம்.
Q12. புவியியலில் ஆங்கிலத்தில் fault தவறான பிளவு என்பது என்ன?
பூமியின் மேல்பரப்பில் உள்ள பாறை பரப்பில் செங்குத்து/கிடைமட்ட நகர்வு ஏற்படுவதினால் ஏற்படக்கூடியது.
Q13. நில நடுக்கத்தைப் பற்றி ஆய்வு செய்யும் படிப்புக்கு என்ன பெயர்?
சீஸ்மாலஜி -- Seismology – இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் Seismologists என அறியப்படுகிறது.
Q14. நில நடுக்கத்தை அளக்கக்கூடிய உபகரணம் எது?
ரிச்டர் அளவு கோல் -- Richter Scale – சார்லஸ் ரிச்டர் என்பவரால் 1935ல் கண்டுபிடிக்கப்பட்டது.
மெர்கல்லி அளவு கோல் -- Mercalli Scale – கிஸெப்பி மெர்கல்லி, இத்தாலி இதை கண்டுபிடித்தார். சற்றே மேம்படுத்தப்பட்ட அளவுகோல். தற்போது அதிகமாக பயனில் உள்ள உபகரணம்.
Q15. ரிச்டர் மற்றும் மெர்கல்லி அளவு கோலில், அதிகபட்சமாக பதிவு செய்யக்கூடிய நில நடுக்க அளவு என்ன?
ரிச்டர் அளவு கோல் -- பத்து. இது வரை 9.0 வரை (சிலியில்) என்பது பதிவாகியுள்ளது. மெர்கல்லி அளவு கோல் -- பனிரெண்டு --
Q16. உலகின் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி பதிவு செய்யப்பட்ட நில நடுக்கம் எது?
ஷான் க்ஷி -- SHAN XI -- சீனா -- 1556 -- சுமார் 8 லட்சம் பேர் மரணம்.
Q17. நவீன காலத்தின் மிகப்பெரிய நில நடுக்கம் எது?
28.7.1976 -- TANG SHAN, சீனா – 2.25 லட்சம் பேர் மரணம்.
Q18. இந்தியாவிலும், இந்திய-பாகிஸ்தானிலும் சமீபத்தில் நடந்த பெரும் அழிவை ஏற்படுத்திய நில நடுக்கங்கள் எது?
1. 30.9.1993 – லட்டூர், மகாராஷ்டிரா -- 7600 பேர் மரணம்.
2. 26.1.2001 – பூஜ் மாவட்டம், குஜராத் -- 30000 பேர் மரணம்.
3. 08.10.2005- ஜம்மு காஷ்மீரின் வட மேற்கு பகுதி -- சுமார் 79000 பேர் மரணம். இதில் பெருத்த மரணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது.
Q19. சமீப காலங்களில் அதிகமான நில நடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டுருக்கும் நாடு எது?
சிலி -- Chile. 2000த்திலிருந்து இது வரை சுமார் 25 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2014ல் மட்டும் 7 முறை ஏற்பட்டுள்ளது.
Q20. சுனாமி என்பது என்ன?
இது ஒரு ஜப்பானிய மொழி வார்த்தை. இதை இரு பிரிவாக -- TSU- துறைமுகம் மற்றும் NAMI – அலை எனவும் பொருள் கொள்ள வேண்டும். இது ஆழமான நீருக்கடியில் ஏற்படும் நில நடுக்கம், இதனால் அலைகள் முதலில் உள் வாங்கி பிறகு பெருத்த அளவில் கடலின் கரையை நோக்கி வெளிவரும்.
Q21. சமீப காலத்தில் நடந்த சுனாமி எது?
26.12.2004 – இந்திய பெருங்கடலில், இந்தோனேசியாவின் சுமத்ரா என்ற இடத்தில் உருவான சுனாமி, இந்தியாவை பெருமளவில், குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், சென்னை மற்றும் அந்தமான் பகுதிகளை மிகவும் பாதித்தது. பல நூறு மரணமும், பெருத்த பொருள் சேதமும் ஏற்பட்டது. இதைத் தவிர்த்து, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளையும் பாதித்து மொத்தமாக சுமார் 2.5 லட்சம் மரணம் ஏற்பட்டது துயரமானது.
Q22. 2004 சுனாமியில் தாய்லாந்தின் எந்த மாகாணம் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டது?
ஆஸெ மாகாணம். Aceh Province.
Q23. 2004க்கு முன்பாக நடந்த சுனாமி காலங்கள் யாவை?
எண் வருடம் நாடு மரணம்
1. 1703 ஜப்பான் -- 5233 deaths.
2. 1707 ஜப்பான் -- 30000 deaths.
3. 1771 ஜப்பான் -- 13846 deaths.
4. 1782 தென் சீன கடல் (சீனா) -- 40000 deaths.
5. 1792 ஜப்பான் -- 15030 deaths.
6. 1826 ஜப்பான் -- 27000 deaths.
7. 1868 சிலி -- 25674 deaths.
8. 1883 க்ரகடோவா,இந்தோனேசியா  -- 36000 deaths.
9. 1896 ஜப்பான் -- 22070 deaths.