Khub.info Learn TNPSC exam and online pratice

நிலச்சந்தி (பூசந்தி) -- ISTHMUS

Q1. நிலச்சந்தி என்பது என்ன?
ஒரு குறுகிய நிலப்பகுதி, இருபக்கம் நீரால் சூழப்பட்டு, இரு பெரிய நிலப்பகுதிகளை இணைப்பது.

Q2. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் முன் காலத்தில் நிலவிய நிலவிய நிலச்சந்தியின் பெயர் என்ன?
ஆடம் பாலம் -- Adam’s Bridge.
Q3. ஆடம் பாலத்தின் இந்தியப் பெயர் என்ன?
ராமர் சேது = ராமர் பாலம்.
Q4. இந்த ஆடம் பாலம் பகுதியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கால்வாய் திட்டம் (பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள) பெயர் என்ன?
சேது சமுத்திரம் கால்வாய் திட்டம்.
Q5. இரண்டு கண்டங்களை இணைக்கும் நிலச்சந்தி எது?
பனாமா -- தென் மற்றும் வட அமெரிக்காவை இணைக்கிறது.
Q6. எந்த நிலச்சந்தி ஸ்பெயின் நாட்டையும், ஜிப்ரால்டர் (இங்கிலாந்து) யும் இணைக்கிறது?
ஜிப்ரால்டர் நிலச்சந்தி.
Q7. சூயஸ் நிலச்சந்தி எங்குள்ளது?
வட ஆப்பிரிக்கா வுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ளது. இங்கு தான் சூயஸ் கால்வாய் உள்ளது.

பாறைகள் -- REEF

Q8. பாறைகள் என்பது Reef என்ன?
கடலடி மலைத்தொடர்கள் -- பவளப்பாறைகள் அல்லது மணற்பாறைகள், நீர்மட்டத்துக்கு அருகிலிருப்பது.
Q9. பவளப்பாறை -- Coral Reef என்பது என்ன?
கடலின் அடி மட்டத்தில் காணப்படும் பவளப் பூச்சிகள் Coral Polyps. கோடிக்கணக்கான இவ்வகைப் பூச்சிகளால் உருவாவதே பவளப்பாறைகள். இவற்றுள் நூற்றுக்கணக்கான பவளங்களும், ஆயிரக் கணக்கான மீன் வகைகளும் வாழுகின்றன. உலகின் முதல் பவளப்பாறை சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவானதாகத் தெரிகிறது.
Q10. கடலோர பவளப்பாறைகள் - Fringing Reef என்பது என்ன?
இவை பொதுவாக தீவுகளின் ஓரங்களில் உருவாகும். வெப்பப்பகுதி தீவுகளில் அதிகமாகக் காணப்படும். இவை தீவுகளை, கடல் அலைகளின் தாக்கத்திலிருந்துக் காப்பாற்றுகின்றன.
Q11. பவளப்பாறை அடுக்கு -- Barrier Reef என்பது என்ன?
தீவுகளின் ஓரத்தில் காணப்படும் பவளப்பாறைகள் சில சமயங்களில் மூழ்கத் தொடங்கும். அப்போது கடல் நீர் தீவுகளின் ஓரங்களில் புகுந்து, பவளப்பாறைகளை தீவிலிருந்து பிரித்துவிடும். இவ்வாறு ஏற்படும் தடுப்புகளே இப்பெயரால அழைக்கப்படுகிறது.
Q12. புகழ் பெற்ற பெரும் தடுப்புப் பாறை -- “Great Barrier Reef” எங்குள்ளது?
குவின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா -- சுமார் 2000 கி.மீ நீளமுள்ளது. உலகின் மிகப்பெரியது.
Q13. உலகின் இரண்டாவது மிகப் பெரிய தடுப்புப் பாறை Barrier Reef எங்குள்ளது?
பெலிஸ் --Belize.
Q14. ஆங்கிலத்தில் Rand என அழைக்கப்படுவது என்ன?
ஒரு தடுப்புப்பாறை -- தென் ஆப்பிரிக்காவின் ஜோஹென்னஸ்பர்க் அருகில் உள்ள தடுப்புப்பாறையான “Wit Water Rand” இப்பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் 75 கி.மீ நீளமுடையது. இந்த நகரை “Gold Reef City”, எனவும் அழைப்பர். இங்கு தான் உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது.
Q15. ஆஸ்திரேலியாவின் பெரும் தடுப்புப் பாறையைக் கண்டுபிடித்தவர் யார்?
1770ல் கேப்டன் ஜேம்ஸ் குக்.
Q16. ஆஸ்திரேலியாவின் பெரும் தடுப்புப் பாறையின் சிறப்பு என்ன?
உலகிலேயே மிகப்பெரிய ஜீவராசிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு. இதில் 600 தீவுகளும், 3400 தடுப்புப் பாறைகளும் அடங்கும். 1981 முதல் இது ஒரு உலகப் புராதனச் சின்னம்.

பீடபூமி -- PLATEAU

Q17. பீடபூமி என்பது என்ன?
சற்றே உயர்ந்த ஆனால் மட்டமான தரைப்பகுதி கொண்ட நிலப்பகுதி. பூமியின் மேல் பகுதி கண்ட திட்டுகளில் ஏற்படும் ஆர அல்லது செங்குத்து நகர்வினால் ஏற்படும் நிலப்பகுதி.
Q18. பீடபூமிகளில் என்னென்ன வகைகள் உண்டு?
1. துண்டாடிய பீடபூமி -- dissected Plateau -- தேய்மானம் அடைந்த பீடபூமி.
2. மேசை மட்ட பீடபூமி (மேட்டுச் சமவெளி) -- Table Land -- பீடபூமியின் முடிவில் ஒரு செங்குத்து இறக்கம் கொண்டது.
3. பைய்ட்மாண்ட் பீடபூமி (மலையடி மேட்டு நிலம்) -- Piedmont Plateau -- ஒரு மலைத் தொடருக்கும், மட்டத்தில் இருக்கும் ஒரு நிலப் பகுதி அல்லது கடலுக்கு இடையில் இருக்கும் பீடபூமி.
4. கண்ட பீடபூமி -- Continental Plateau -- மேசை மட்ட நிலம் அல்லது மட்டமான உச்சம் கொண்ட மலை, ஒரு கீழ் மட்ட நிலம் அல்லது கடல் மட்டத்திலிருந்து திடீரென்று உயர்ந்து நிற்கும் பகுதி.
Q19. இந்தியாவில் உள்ள பீடபூமிகள் யாவை?
1. சோட்டா நாகபுரி -- CHOTA NAGPUR – கிழக்கு இந்தியா -- பெரும்பகுதி ஜார்க்கண்ட் மாநிலத்திலும், ஒடிசா, பீஹார், சத்தீஸ்கர் மாநிலத்திலும் பரவியுள்ள பீடபூமி. 65000 ச.கி.மீ -- நிலக்கரி மற்றும் இலையுதிர் காடுகள் நிறைந்த பகுதி.
2. தக்காணம் -- டெக்கான் DECCAN - மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், விந்தியா மற்றும் சத்புரா மலைகளுக்கிடையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பகுதி.
3. மைசூர் -- MYSORE -- தென் கர்நாடக பீடபூமி -- பெங்களூரு, குடகு, கோலார், மாண்ட்யா, தும்கூரு மாவட்டங்களில் பரவியுள்ளது.