Khub.info Learn TNPSC exam and online pratice

குகைகள் -- CAVES

Q1. குகை என்பது என்ன?
இயற்கையாகவே மலைப்பாறை பகுதிகளில், மனிதன் வசதியாக நுழையும் அளவுக்கு உருவாகி இருக்கும் வெற்றிடம் காணப்படுவதே குகை எனப்படுகிறது. இது, கடற்கரையோரங்களில் அதிகமாக காணப்படும். காரணம், நீரின் அரிப்பால் உருவாகிறது.

Q2. குகைகளைப் பற்றிய ஆய்வு/படிப்புக்கு என்ன பெயர்?
Speleology.
Q3. குகைகள் எவ்வாறு உருவாகின்றன?
புவியியல் ரீதியாக, வேதிப்பொருள்களாலும், நீர் மற்றும் காற்றினால் ஏற்படும் அரிப்பு, நுண்ணிய ஜீவராசிகளின் செயலாலும், கண்டத்தட்டு நகர்வால் ஏற்படும் வெற்றிடங்கள் என பல காரணங்கள். பெரும்பாலுமான குகைகள் சுண்ணாம்புக்கல்லால் (limestones) உருவானவையாக இருக்கும். சில, சுண்ணாம்பு, டோலோமைட், பாறை, உப்பு மற்றும் மணற்கல் போன்றவைகளால் உருவாக்கப் படுகின்றன.
Q4. குகைகளின் வகைகள் யாவை?
1. Solutional - திரவ (வேதி) செயற்கையால் உருவானவை -- சுண்ணாம்புக்கல் குகைகள்
2. Sea -- கடல் செயற்கையால் உருவானவை
3. Fractured -- மலைகள்/பாறைகளின் பிளவுகளால் உருவானவை
4. Anchihaline -- நீர்த்தேக்கத்துடன் கூடியவை
5. Man made -- மனிதனால் உருவாக்கப்பட்டவை.
Q5. எவ்வகையான குகைகள் அதிகமாக உருவாகின்றன?
திரவ செயற்கை குகைகள் -- Solutional caves -- சுண்ணாம்புக்கல் குகைகள்
Q6. குகைகள் உருவாகும் செயல் முறை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப் படுகிறது?
KRASTIFICATION – பாறைகள் திரவங்களின் செயற்கையால் கரைந்து உருவாவது. பெரும்பாலும் சுண்ணாம்புக்கல் குகைகள்.
Q7. முதன்மை குகைகள் எனப்படுபவை யாவை?
சுற்றுப்புறங்களிலும் பாறைகளால் சூழப்பட்ட குகைகள். உதாரணமாக, எரிமலை வெடிப்புகளில் உருவாகும் குகைகள், இவற்றுக்குள் அனல் குழம்புகள் புகுந்து நாளடைவில் பாறைகளாக இறுகி உருவாகியிருக்கும் குகைகள்.
Q8. கடற்குகைகள் என்பது என்ன?
கடற்கரை ஓரங்களில் உள்ள பாறைகளில் அலைகளின் செயற்கையால் (உப்பு நீரால் கரைவு ஏற்பட்டும்) உருவாகும் குகைகள்.
Q9. பனிப்பாறை குகைகள் என்பது என்ன?
பனிப் பாறைகளில்/போர்வைகளில், பனி உருகலால் ஏற்படும் குகைகள்.
Q10. பிளவு குகைகள் என்பது என்ன?
பாறைகளின் இடுக்குகளில், கரையும் தன்மை கொண்ட தனிமங்களால், உதாரணமாக ஜிப்சம், கரைவை ஏற்படுத்தி, நாளடைவில் உடைந்து/சிதைந்து, உருவாகும் குகைகள்.
Q11.
நீர்த்தேக்க குகைகள் -- Anchihaline Caves என்பது என்ன?
பொதுவாக கடற்கரையோரம் உருவாகும் குகைகள். இங்கு கடல் நீரும்/நன்னீரும் கலந்த நீர்த் தேக்கங்களும், சில அரிதான தாவர விலங்கு வகைகள் காணப்படும்.
Q12. மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகள் என்பது என்ன?
இவை பொதுவாக ஒரு கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட கோவில்கள், சிற்பங்கள், என பழங்காலம் முதல், இடைக்கால வரலாற்று காலத்தில், குறிப்பாக, இந்து, ஜைன, புத்த மத மன்னர்களால் உருவாக்கப் பட்டவை. இவ்வகை குகைகள் இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.
Q13.
கசிவுதுளிப் படிவு -- Stalagmite என்பது என்ன?
Stalagmite குகைகளில், நீரில் இருந்து வெளிவரும் தனிம கரைசல்கள் சொட்டு சொட்டாக ஒரு இடத்தில் விழுந்து, ஒன்று சேர்ந்து, ஒரு கூம்பு வடிவ, குகைகளின் தரையிலிருந்து மேல் நோக்கி எழும் அமைப்புகள். இவை பொதுவாக, சுண்ணாம்புக்கல் limestone குகைகளில் அதிகமாக காணப்படும். இவ்வகை அமைப்புகள் பொதுவாக கால்சியம் கார்பனேட் கசிவுத்துளிகளால் ஏற்படுபவை.
Q14.
கசிதுளி வீழ் -- Stalactite என்பது என்ன?
Stalactite கசிவுத்துளிவு படிவைப் போன்றவை. ஆனால், இவை குகைகளின் கூரையிலிருந்து (உச்சம்) மேலிருந்து கீழ் நோக்கி உருவாகும் அமைப்புகள்.
Q15. கற்பாறை செதுக்கு வேலைப்பாடுகள் -- Petroglyphs என்பது என்ன?
பாறையில், சில பகுதிகளை, பல வழிகளில், செதுக்கி நீக்கி, ஒரு வடிவத்தையோ, சிற்பத்தையோ உருவாக்குவது ஆங்கிலத்தில் Petroglyphs எனப்படுகிறது. இவை பொதுவாக கோவில்களாக இருக்கும். உதாரணம் -- எடக்கல் குகைகள், வயநாடு, கேரளா.
Q16. இந்தியாவின் புகழ் பெற்ற குகைக் கோவில்கள் யாவை?
1. அமர்நாத், ஜம்மு காஷ்மீர்.
2. அஜந்தா, அவுரங்காபாத், மகாராஷ்டிரா.
3. எலிஃபெண்டா, அரபிக்கடல், மும்பை கடல் பகுதி.
4. எல்லோரா, அவுரங்காபாதி, மகாராஷ்டிரா.
Q17.
அமர்நாத் குகைக் கோவில் எங்குள்ளது?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஸ்ரீநகரிலிருந்து 141 கி.மீ தூரத்தில், இமாலயத்தில் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக்கோவில். இங்கு இயற்கையாகவே உருவாகும் பனி லிங்கம், இந்து மக்களின் முக்கியமான புனித சுற்றுலாத்தலம்.
Q18.
கர்நாடகாவில் உள்ள நெல்லிதீர்த்த குகைக் கோவிலின் சிறப்பு அம்சம் என்ன?
15வது நூற்றாண்டு குகைக் கோவில். சோமநாதேஸ்வரா குகைக் கோவில். இங்குள்ள சிவபெருமானை தரிசிக்க, அருகில் உள்ள மற்றொரு குகை வழியாக சுமார் 200 மீ வரை தவழ்ந்தே செல்ல வேண்டும். சென்றடைந்தால், ஒரு அழகான நீர்த்தேக்கத்தையும், சிவபெருமானையும் கண்டு களிக்கலாம்.
Q19.
அஜந்தா குகைக்கோவில்கள் எங்குள்ளன?
அஜிந்தா கிராமம், அவுரங்காபாத் மாவட்டம், மகாராஷ்டிரா. சதவாகன மன்னர்களாலும் (கி.மு.230-220) வகடாகா வம்ச மன்னர்களாலும் கி.பி. 5 ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.
Q20. அஜந்தா குகைக் கோவில்களில் எத்தனை குகைகள் உள்ளன?
29 குகைகள் -- புத்த மதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவை -- ஜாடக கதைகளின் பின்னணியில் உருவாக்கப்பட்டவை.
Q21.
எலிஃபெண்டா குகைகள் எங்குள்ளன?
மகாராஷ்டிராவின் மும்பை கடற்கரைப் பகுதியில், சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள கராபூரி Gharapuri தீவுகளில் அமைந்துள்ளன. கி.பி. 9 முதல் 13ம் நூற்றாண்டுகளில், சிலாரா மற்றும் ராஷ்ட்ரகுட மன்னர்களால் உருவாக்கப்பட்டவை.
Q22. எலிஃபெண்டா குகைகள் எந்த இந்து கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?
சிவபெருமான் -- த்ரிமூர்த்தி வடிவத்தில் (3 வடிவங்கள் - சிவன், விஷ்ணு, ப்ரம்மா)
Q23.
எல்லோரா குகைக் கோவில்கள் எங்குள்ளன? Where are the Ellora Caves?
அவுரங்காபாத் மாவட்டம், மகாராஷ்டிரா.
Q24. எல்லோராவில் எத்தனை குகைகள் உள்ளன?
35 குகைகள் -- 12 புத்த மதம், 17 இந்து மதம், 6 ஜைன மதம் சார்ந்த கோவில்கள்.
Q25.
வராஹா குகைக் கோவில்கள் எங்குள்ளது?
மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் - சென்னை அருகில் -- பல்லவ மன்னர் நரசிம்ம வர்மன் மற்றும் இதர மன்னர்களால் உருவாக்கப்பட்டது.
Q26. தமிழ் நாட்டில் வேறு சில குகைக் கோவில்கள் யாவை?
1. கந்தன் குடைவறை -- முருகன் கோவில் - மதுரை - பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது.
2. சீவரமுடையார் குடைவறை -- சிவன் கோவில் - புதுக்கோட்டை - பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது.
3. பதினெண்பூமி விண்ணகரம் -- நார்த்தமலை, புதுக்கோட்டை - பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது.
Q27. உலகின் மிக நீளமான குகை எங்குள்ளது?
மேமோத் குகைகள் -- Mammoth Caves – கெண்டக்கி, அமெரிக்கா -- சுமார் 630 கீ.மீ நீளப் பாதை, சுமார் 52835 ஏக்கரில் பரவியுள்ளது.
Q28. உலகின் இரண்டாவது மிக நீளமான குகை எங்குள்ளது?
ஜ்வெல் குகை -- தென் டகோட்டா -- அமெரிக்கா -- சுமார் 225 கி.மீ.
Q29. உலகின் மிக ஆழமான குகை எங்குள்ளது?
வொரோன்யா குகை -- ஜியார்ஜியா நாடு -- சுமார் 2190 மீ ஆழமுடையது.
Q30. உலகின் மிகப்பெரிய குகை எங்குள்ளது?
மலேசியாவின் போர்னியோ பகுதியில் சரவாக் என்ற இடத்தில் உள்ளது. இது 600 மீ நீளமும், 400 மீ அகலமும் சுமார் 80 மீ உயரமும் கொண்டது.
Q31. குகையில் வாழும் மனிதனை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கின்றனர்?
ட்ராக்ளோடைட் -- Troglodyte.
Q32. குகைகளை ஆராய்வது ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்பெலங்கிங் -- SPELUNKING.