Khub.info Learn TNPSC exam and online pratice

"தென் & வட துருவம், அண்டார்டிகா, பனிப்பாறை SOUTH POLE,NORTH POLE, ANTARCTICA AND GLACIER"

Q1.
புவியியல் ரீதியாக தென் துருவம் என்பது என்ன?
பூமியின் தரைப்பரப்பில் உள்ள தென் கோடி மையம்.

Q2. தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகளின் தோராயத் தடிமம் என்ன?
3000 மீ. ஆகவே, தென் துருவம் உயரமான இடத்திலுள்ளது. அண்டார்டிகா இங்கு அமைந்துள்ளது.
Q3. தென் துருவ மையத்தில் South Pole Point ஏற்படும் மாற்றங்கள் யாவை?
தென் துருவத்தில் அமைந்துள்ள பனிப் போர்வைப் பாறை வருடத்திற்கு சுமார் 10 மீ என்ற நிலையில் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அதனால் தென் துருவ மையம் மாற்றம் பெறுகிறது. ஆகவை, வருடந்-- தோறும் இந்த தென் துருவ மையப்புள்ளி யின் மாற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
Q4. தென் துருவத்தை அடைந்த முதல் மனிதர் யார்?
1911ல் நார்வே நாட்டின் ரொனால்ட் அமுண்ட்சென் என்பவர். Ronald Amundsen . இவருடன் வேறு நான்கு பேரும் சென்றிருந்தனர்.
Q5. தென் துருவத்தை அடைந்து, ரொனால்ட் அமுண்ட்சென் அமைத்த கூடாரம் பெயர் என்ன?
போல்ஹீம் -- Polheim.
Q6. தென் துருவத்தில் உள்ள பீடபூமியின் பெயர் என்ன?
HAKKON VII VIDDE -நார்வேயின் மன்னர் ஏழாவது ஹக்கோன் பெயிரிடப்பட்டுள்ளது.
Q7. தென் துருவத்துக்குச் சென்ற இரண்டாவது குழு எது, என்னவாயிற்று?
1912ல் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் மற்றும் ஐந்து பேர் கொண்ட குழு 17.1.1912ல் தென் துருவம் சென்று அடைந்தது. திரும்பி வரும் போது 29.1.1912ல் சோர்வு, தளர்ச்சி, பனியின் தாக்கம் தாங்கமுடியாமல் மொத்த குழுவும் மரணம் அடைந்தனர் என்பது துயரமான விவரம்.
Q8. 1914ல் தென் துருவத்துக்குப் பயணித்த “Endurance” என்ற கப்பல் க்கு ஏற்பட்டது என்ன?
பனியில் சிக்கி, இறுகி, 11 மாதங்களுக்குப் பிறகு பனியில் மூழ்கிவிட்டது.
Q9. தென் துருவத்தின் மேல் பறந்து சென்ற முதல் மனிதர் யார்?
ரிச்சர்டு எல்வின் பைர்ட் -- அமெரிக்காவின் கப்பற் படை அதிகாரி -- 29.11.1929.
Q10. தென் துருவத்தில் விமானத்தை இறக்கிய முதல் மனிதர் யார்?
ஜார்ஜ் டூஃபெக் -- அமெரிகா -- 31.10.1956.
Q11. தென் துருவத்தில் எந்த நாட்டின் நேரம் அனுசரிக்கப்படுகிறது?
நியூசிலாந்து.
Q12. தென் துருவத்துக்கு மிக வேகமாக நடந்து சென்று சாதனை புரிந்தவர் யார்?
டிம் ஜார்விஸ் மற்றும் பீட்டர் ட்ரெஸெடர் -- ஆஸ்திரேலியா -- 1999ல், சுமார் 200 கிலோ எடை பொருளையும் (ஸ்லெட்ஜ் என்ற இழு வண்டி மூலம்) எடுத்துச் சென்று, 47 நாட்களில் அடைந்தனர்.
Q13. சடங்கு தென் துருவம் -- ceremonial South Pole என்பது என்ன?
புவியியல் ரீதியான தென் துருவ மையத்திலிருந்து சுமார் 2 மீ தூரத்தில் அமைந்திருக்கும் மையம். இந்த இடம் ரொனால்ட் அமுண்ட்சென்-ஸ்காட் மையம் எனவும், இந்த இடத்தில் ஒரு அடையாளச் சின்னமும், சர்வதேச அட்லாண்டிக் ஒப்பந்த நிறுவனத்தில் அங்கத்தினர் நாடுகளின் கொடிகள் நடப்பட்டுள்ள இடமும், புகைப்பட மையமாகவும் கருதப்படுகிறது. இந்த இடம் வருடந்தோறும் மாற்றத்துகுரியது.
Q14. புவிகாந்தவியல் மையம் -- Geomagnetic Pole என்பது என்ன?
தென் துருவத்தில் Southern Hemisphere எந்த இடத்தில் இருமுனை அச்சு dipole axis பூமியின் பரப்பை சந்திக்கிறதோ அந்த இடம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q15. தென் புவிகாந்தவியல் மையம் -- South Magnetic Pole என்பது என்ன?
பூமியின் பரப்பில் எந்த இடத்தில், காந்த புலம் செங்குத்தாக உயருகிறதோ அந்த இடம்.
Q16. சேர்ந்தடையமுடியாத தென் துருவம் Southern Pole of inaccessibility என்பது என்ன?
அண்டார்டிகா கண்டத்தின் ஒரு மையம், தென் கடலிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. இதுவே சேர்ந்து அடைய முடியாத தென் துருவம் எனப்படுகிறது.
Q17. வட துருவம் என்பது என்ன, எங்குள்ளது?
பூமியின் மேற்பரப்பில், வட கோடி மையம். இங்கு தான் பூமியின் அச்சு சுழற்சி பூமியின் தரைப் பரப்பை சந்திக்கும் இடம்.
Q18. வட காந்தத் துருவம் என்பது என்ன - North Magnetic Pole?
பூமியின் மேற்பரப்பில் எங்கு பூமியின் காந்தப் புலம் நேரடியாக கீழ் நோக்கிப் பாய்கிறது. இந்த மையம் கேனடாவில் உள்ளது. இதைக் கண்டு பிடித்துக் கூறியவர் ஜேம்ஸ் க்ளார்க் ரோஸ், இங்கிலாந்து கப்பற்படை அதிகாரி.
Q19. சேர்ந்தடையமுடியாத வட துருவ மையம் North Pole of inaccessibility என்பது என்ன?
ஆர்க்டிக் கடலின் வடகோடியில் தரைப் பகுதியிலிருந்து சேர்ந்தடையமுடியாத புள்ளி.
Q20. வடதுருவ சடங்கு மையம் என்பது என்ன North Celestial Pole?
வட வானில், பூமியின் சுழற்சி அச்சு பூமியை சந்திக்குமிடம். இது ஒரு கற்பனை மையம்.
Q21. வடதுருவத்தை முதன் முதலில் கண்டுபிடித்துக் கூறியவர் யார்?
நார்வே நாட்டின் ரொனால்ட் அமுண்ட்சென் -- 12.5.1926 அன்று ஒரு விமானம் (NORGE) மூலம்.
Q22. வட துருவத்தில் முதன் முதலாக ஒரு விமானத்தை இறக்கியவர் யார்?
பவெல் கார்டியெங்கோ -- ரஷ்யா - இவருடன் ஐந்து பேர் -- 23.4.1948 அன்று.
Q23. வட துருவத்தை அடைந்த முதல் கப்பல் எது?
USS SKATE -- 17.3.1959.
Q24. அணுசக்தியால் இயங்கும் பனிப் பாறையைப் பிளக்கும் கப்பல் வட துருவத்தை அடைவது எது?
ரஷ்யா கப்பல் "ஆர்க்டிக்கா" Aarktika of Russia -- 17.8.1977.
Q25. வட துருவத்தில் பகல் இரவு எவ்வாறு ஏற்படுகிறது?
கோடைக் காலத்தில் ஆறு மாதம் 24 மணி நேரமும் பகலாகவும், குளிர் காலத்தில், 6 மாதம், 24 மணி நேரமும் இரவாகவும் இருக்கும்.
Q26. வட துருவத்தில் சூரிய உதயம் மற்றும் மறைவு எவ்வாறு ஏற்படுகிறது?
இரண்டுமே 24 மணி நேர சுழற்சியில் ஏற்படுவதில்லை. இங்கு சூரிய உதயம் இளவேனிற் சம இரவுப் புள்ளியில் Vernal Equinox தொடங்கி பகல் உச்சியை அடைய 3 மாதங்கள் அதாவது கோடை திருப்ப நிலை Summer Solstice அன்று தொடங்கி, சூரிய மறைவும் அன்றே தொடங்கி, 3 மாதங்களுக்குப் பிறகு இளவேனிற் சம இரவுப் புள்ளி Autumnal Equinox அன்று முழுவதுமாக சூரியன் மறைகிறது. இதே போன்று தென் துருவத்திலும் ஆறு மாத இடைவெளியில் ஏற்படுகிறது. இந்த பகல் இரவு நிகழ்வு நில நடுக்கோட்டில் நடப்பதற்கு மாறாக நடைபெறுகிறது.
Q27. வட துருவத்தில் எந்த நேரம் அனுசரிக்கப்படுகிறது?
எந்த குறிப்பிட்ட நாட்டு நேரமும் அனுசரிக்கப்படுவதில்லை. வட துருவத்துக்கு பயணிக்கும் குழு தங்களுக்கு வசதியான நேரத்தை கடைப்பிடிக்கலாம் -- GMT அல்லது தங்களுது நாட்டு நேரம்.
Q28. அண்டார்டிகா எந்த துருவத்தில் அமைந்துள்ளது?
தென் துருவம்.
Q29. புவியியல் ரீதியாக அண்டார்டிகாவுக்கு என்ன அந்தஸ்து கொடுக்கப்பட்டு உள்ளது?
கண்டம்.
Q30. அண்டார்டிகா வின் மொத்த பரப்பளவு என்ன?
சுமார் 13600000 ச.கி.மீ -- 98% பனிப் போர்வை/பாறைகளாலும், 2% வறண்ட நிலப்பகுதி.
Q31. அண்டார்டிகா அமைப்பின் சிறப்பு அம்சம் என்ன?
மிகவும் குளிர் அதிகமான பிரதேசம். பனிப்பாறைகளும், போர்வைகளும் நிரந்தரமானது. பனிப் போர்வைகளின் தடிமம் சராசரியாக 1.6 கி.மீ.
Q32. அண்டார்டிகா என்பது பொதுவாக எதைக் குறிக்கிறது?
தென் துருவப் பகுதிகள். அண்டார்டிக் வட்டத்தில் அமைந்துள்ள பகுதியில் -- 66° தெற்கு அட்சரேகை.
Q33. அண்டார்டிகா வட்டம் என்பது என்ன?
தென் துருவத்திலிருந்து 23.5° ல் ஒரு கற்பனை வட்டம். இங்கு கோடையில் முழுவதும் பகலாகவும் குளிர் காலத்தில் முழுவதுமாக இரவாகவும் உள்ள ஒரு பகுதி.
Q34. ஆர்க்டிக் -- Arctic என்பது எதைக் குறிக்கிறது?
தென் துருவத்தின் அருகில் உள்ள பகுதி. வட அட்ச ரேகையில் 66° 32' .
Q35. ஆர்க்டிக் வட்டம் என்பது என்ன?
வட துருவத்திலிருந்து 23.5° யில் பூமியின் மீது ஒரு கற்பனை வட்டம்.
Q36. உறைபனி மண்டலம் -- Frigid zones என்பது என்ன?
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் வட்டத்தில் 23.5° க்குள் அடங்கியுள்ள பகுதி. நீண்ட குளிர்கால பகுதி.
Q37. பனிப்பிரதேசம் -- TUNDRA என்பது என்ன?
ஆர்க்டிக் பனிப் பாலைவனத்தின் தென் பகுதியில் உள்ள பகுதி. ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவின் ஆர்க்டிக் ஓரங்களில் இருந்து கணிசமான தூரம் மற்றும் ஆழத்திற்கு பனிப் பிரதேசமாக காணப்படுவது.
Q38. பனிப்பிரதேசத்தில் வாழும் இனத்தினரின் பெயர் என்ன?
எஸ்கிமோ. Eskimos.
Q39. எஸ்கிமோக்களின் இல்லங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இக்ளூ. Igloo.
Q40. எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் சக்கரமில்லாத வண்டிகள் பெயர் என்ன?
ஸ்லெட்ஜ் அல்லது காயக் எனப்படும். Sledge or Kayak.
Q41. பனிப்பிரதேசத்தில் வாழும் விலங்கின் பெயர் என்ன, அது எவ்வாறு அழைக்கப் படுகிறது?
ரெய்ண்டீர் -- REINDEER – இந்த விலங்குகள் இங்குள்ள மக்களுக்கு பால், மாமிசம், தோல் போன்ற பொருட்களைக் கொடுப்பது மட்டுமில்லாமல், பயணத்துக்கு மிகவும் பயன்படுகிறது.
Q42. அண்டார்டிகா சென்ற முதல் இந்திய மனிதர் யார்?
ராம் சரண் -- இந்திய கப்பற்படை அதிகாரி -- 1960ல் ஆஸ்திரேலிய குழுவுடன் சென்றார்.
Q43. இந்தியாவின் முதல் அண்டார்டிக் பயணம் எப்போது, எங்கிருந்து கிளம்பியது?
1981ல் கோவாவிலிருந்து.
Q44. அண்டார்டிகா சென்ற முதல் இந்திய குழுவின் தலைவர் யார்?
டாக்டர் சையத் ஸாஹூர் காஸிம்.
Q45. பனி போர்வை (தொப்பி) Ice Cap என்பது என்ன?
துருவப் பகுதிகளில் பெரும்பகுதி பனியால் கவரப்பட்டிருக்கும் பகுதி.
Q46. அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்போர்வை ice cap எது?
Dome A – 4093 மீட்டர் நீளம்.
Q47. பனியுகம் ice-age என்பது என்ன?
புவியியல் ரீதியான சமீபகால நிகழ்வின் போது, வடதுருவத்தின் பெரும் பகுதி பனியால கவரப்பட்டு இருந்தது. பூமியின் மேற்பரப்பின் வெப்பம் குறைந்து, பனிப் போர்வை, துருவ பனிப் போர்வை, ஆல்பைன் பனிப்பாறைகள் பரப்பு விரிவடையத் தொடங்கிய காலம்.
Q48. பனிப்பாறை ice-berg என்பது என்ன?
ஒரு மிகப்பெரிய பனிக்கட்டி, இன்னும் மிகப்பெரிய பனிப் பாறையிலிருந்து விலகி, ஒரு தனிப்பாறையாக நகர்ந்து செல்வது.
Q49. பனிப்பாறை என்பதும் அதன் அமைப்பும் என்பது என்ன?
பூமியில் ஒரு பெரும் பகுதி பனியால் தொடர்ச்சியாக கவரப்பட்டு இருப்பது பனிப்பாறை எனப் படுகிறது. இவ்வாறு ஒன்று சேருவதே ஆங்கிலத்தில் glaciation என்பர். இவ்வகைப் பனிப்பாறை பெரும் பாறையிலிருந்து விலகி, நகரத் தொடங்குவதே ஆங்கிலத்தில் glacier எனப்படுகிறது.
Q50. பனிப்படலப்பாறைகள் அதிகமாக உருவாகும் இடம் எது?
துருவப்பகுதிகள். Polar regions.
Q51. பனிப்படலப் பாறைகள் glacier அதிகமாக உள்ள இரண்டாவது இடம் எது?
சியாச்சென் -- Siachen – இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ளது.
Q52. உலகில் மிக நீளமான பனிப்படலப்பாறை எது, எங்குள்ளது?
லாம்பெர்ட் ஃபிஷர் -- அண்டார்டிகா -- சுமார் 515 கி.மீ நீளம். Lambert Fisher.
Q53. பனிப்பாறைகளின் சிறப்பு அம்சம் என்ன?
இவற்றுள் சுமார் 75% நன்னீர் உள்ளடக்கியது. இந்த பனிப்பாறைகள் எல்லாம் ஒரே சமயத்தில் உருகினால், கடல் மட்டம் சுமார் 70 மீட்டர் உயருவதற்கான வாய்ப்புண்டு.
Q54. பனிப்பரப்பு -- snow field என்பது என்ன?
நிரந்தரமாக பனியால் மூடப்பட்டுள்ள ஒரு பகுதி. உயரமான பலைப்பகுதிகளில் கிண்ணம் போன்ற அமைப்பில் இவை ஒன்று சேர்ந்து நிரந்தரமாக பனிப்பரப்பாகவும் காணமுடியும்.
Q55. பனி எல்லை -- Snow Line என்பது என்ன?
ஒரு மலையின் உயரமான பகுதி, எங்கு பனி நிரந்தரமாக திடமாக காணப்படும்.
Q56. அண்டார்டிகாவில் இந்தியாவின் ஆய்வுக்கூடங்கள் யாவை?
1. தக்ஷின் கங்கோத்ரி -- DAKSHIN GANGOTRI : 1983-1984ல் இந்திய விஞ்ஞானிகளின் முதல் பயணத்தின் போது உருவாக்கப்பட்டது. தற்சமயம் ஒரு கிடங்காக பயன்படுத்தப்படுகிறது.
2. மைத்ரி -- MAITRI – 1989ல் உருவாக்கப்பட்டு, “Shirmacher Oasis” என்ற இடத்தில் உள்ளது.
3. பாரதி -- Bharati -- மார்ச் 8, 2012 முதல் இந்திய அண்டார்டிகா ஆய்வுக்கூடமாக இயங்குகிறது. லார்ஸ்மென் ஹில் என்ற இடத்தில் உள்ளது.
Q57. ஒட்டு மொத்தமாக அண்டார்டிகாவின் புவியியல் ரீதியான சிறப்பு அம்சம் என்ன?
காற்றின் வீச்சு அதிகமுள்ள, அதிகமான குளிருள்ள, மிகுந்த வறண்ட பகுதி.
Q58. பனிப்பாறையின் நகர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அங்குலம்/நாள்.
Q59. ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள நீளமான, மிகப்பெரிய பனிப்பாறை எது?
அலெஷ் -- Aletsh -- சுமார் 23 கி.மீ நீளமும் 81.7 ச.கி.மீ பரப்பளவும் கொண்டது.
Q60. அண்டார்டிகாவை, தனியாக, எந்த உதவி உபகரணமும் இல்லாமல், கடந்த முதல் மனிதர் யார்?
நார்வே நாட்டின் Boerge Ousland என்பவர். மே 1990ல்.
Q61. தனியாக சுதந்திரமாக மிதந்துக் கொண்டிருந்த மிகப்பெரிய பனிப்பாறை எது?
B 15A -- அண்டார்டிகா. 2003ல் பிரிந்து தனியாக மிதந்து 2005ல் சிதைந்தது.
Q62. மிகவும் குளிர்பகுதியாக பதிவு செய்யப்பட்ட இடம் எது?
வோஸ்டாக் (ரஷ்ய ஆய்வு நிலையம்) அண்டார்டிகா.
Q63. அண்டார்டிகாவைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜேம்ஸ் ப்ரான்ஸ்ஃபீல்ட் & வில்லியம் ஸ்மித், இங்கிலாந்து. இவர்களே முதன் முதலாக 1821ல் அண்டார்டிகா தீபகற்பத்தை அடையாளம் கண்டுபிடித்து கூறினர். பிறகு பிப்ரவரி 1821ல் ஏழு பேர் கொண்ட அண்டார்டிகாவை சென்றடைந்தது. அதில் அண்டார்டிகாவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தவர், ஜான் டேவிஸ், அமெரிக்கா.