Khub.info Learn TNPSC exam and online pratice

பருவத் திருப்பநிலை -- SOLSTICE

Q1. பருவத் திருப்ப நிலை -- Solstice என்பது என்ன?
வருடத்தின் எந்த நாளில் பகல் நேரத்துக்கும் இரவு நேரத்துக்கும் இடையில் அதிகமான வித்தியாசம் உள்ளதோ அந்த காலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதில் கோடை மற்றும் குளிர் பருவ நிலை திருப்பங்கள் உள்ளன. அதாவது வருடத்துக்கு இரண்டு முறை நடைபெறும் -- பூமியின் அச்சு எப்போது அதிகமாக சூரியன் பக்கமும், எதிர்த்தும் அதிகமாக சாய்கிறதோ அப்போது சூரியன் உச்ச நேரத்தில் வடக்கு அல்லது தெற்குக்கு அதிக தூரத்தில் உள்ளதோ அப்போது.

Q2. கோடைப் பருவத் திருப்ப நிலை எந்த தேதியின் சமீபத்தில் நடக்கிறது?
கோடைப் பருவத் திருப்ப நிலை -- Summer Solstice -- June 20 -> 22. இந்த நாட்களில் சூரியன் கடக ரேகைக்கு நேர் உச்சியில் நிலை கொள்கிறது.
Q3. எந்த தேதி வாக்கில் குளிர் பருவத் திருப்ப நிலை ஏற்படுகிறது?
டிசம்பர் 22. இந்த நாளில் பூமி தனது சுழற்சியின் எதிர் முனையிலிருக்கும். தென் துருவம் சூரியனை நோக்கி சாயும் போது, வட துருவம சூரியனிலிருந்து நகர்ந்து செல்கிறது.
Q4. இந்த பருவத் திருப்ப நிலைகளால் வடதுருவத்தில் ஏற்படும் மாறுதல் என்ன?
1. கோடை பருவ திருப்ப நிலையில், பகல் நீண்டதாகவும், இரவு குறுகியதாகவும் இருக்கும்.
2. குளிர் பருவ திருப்ப நிலையில், பகல் குறுகியதாகவும், இரவு நீண்டதாகவும் இருக்கும்.
Q5. இந்த பருவத் திருப்ப நிலைகளால் தென் துருவத்தில் ஏற்படும் மாறுதல் என்ன?
1. கோடை பருவ திருப்ப நிலையில் பகல் குறுகியதாகவு, இரவு நீண்டதாகவும் இருக்கும்.
2. குளிர் பருவ திருப்ப நிலையில், பகல் நீண்டதாகவும், இரவு குறுகியதாகவும் இருக்கும்.
Q6. சம நிலை நாள் -- Equinoxes என்பது என்ன?
வருடத்தின் எந்த நாளில், பகலும் இரவும் சமமாக இருப்பதே. அன்றைய நாளில் சூரியன் பூமத்திய ரேகைக்கு நேர் செங்குத்தாக மையம் கொள்ளும்.
Q7. இளவேனிற் சம இரவுப்புள்ளி -- Vernal Equinox என்பது எப்போது நிகழ்கிறது?
மார்ச் 21 (Vernal = இளவேனில்).
Q8. இலையுதிற் சம இரவுப் புள்ளி -- Autumnal Equinox என்பது எப்போது நிகழ்கிறது?
செப்டம்பர் 23.
Q9. இந்தியாவில் எந்த மாதத்தில் நீண்ட பகலும், குறைந்த இரவுமாக இருக்கும்?
ஜூன்.
Q10. இந்தியாவில் எந்த மாதத்தில் குறைந்த பகலும் நீண்ட இரவுமாக இருக்கும்?
டிசம்பர்.
Q11. வட துருவத்தில் நீண்ட பகல் கொண்ட நாள் எது?
ஜூன் 22
Q12. தென் துருவத்தில் நீண்ட பகல் கொண்ட நாள் எது?
டிசம்பர் 22.
Q13. வட துருவத்தில் குறைந்த பகல் கொண்ட நாள் எது?
டிசம்பர் 21.
Q14. தென் துருவத்தில் குறைந்த பகல் கொண்ட நாள் எது?
ஜூன் 21.

நேரம், நேரங்காட்டி, நேர மண்டலம் -- TIME, TIME CLOCKS AND TIMEZONE

Q15. நேரத்தைக் கணக்கிட எந்த சமூக நாகரீகம் துவக்கியது?
சுமேரிய நாகரீகம் -- சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே.
Q16. இப்போது நேரம் கணக்கிடுவதற்கு எந்த முறையை அனுசரிக்கப்படுகிறது?
அறுபதினை அமைப்பு -- Sexagesimal System – எண் 60 ஐ அடிப்படையாகக் கொண்டது.
Q17. எந்த இரண்டு எண்கள், நேரம் மற்றும் நாள்/வருடத்தைக் கணக்கிட உதவுகிறது?
எண் 60 – 60 வினாடிகள், 60 நிமிடங்கள் = 1 மணி. 12 மணிநேர பகலும், இரவுமாக சேர்த்து ஒரு நாள். 30 நாட்கள் ஒரு மாதம் எனவும், 12 மாதங்கள் ஒரு வருடமாகவும் கணக்கிடப்படுகிறது.
Q18. ஒரு இடத்தின் நேரத்தை எந்த புவியியல் அமைப்பு முடிவு செய்கிறது?
தீர்க்க ரேகை இணைக் கோடுகள்.
Q19. ஒரு இடத்தின் உள்ளூர் நேரம் எனப்படுவது?
ஒரு இடத்தின் சூரிய உச்சம் பகல் 12 மணி எனக் கணக்கிடப்படுகிறது.
Q20. ஒரு இடத்தின் உள்ளூர் நேரம் க்ரீன்விச் நேரத்துடன் எவ்வாறு வேறுபடுகிறது?
க்ரீன் விச் நேரத்துடன் ஒப்பிடும் போது தீர்க்க ரேகையின் ஒவ்வொரு டிகிரிக்கும் 4 நிமிடங்கள் வேறுபடும்.
Q21. ஒரு இடத்தின் நேரம் எதைச் சார்ந்துள்ளது?
கிரீன்விச் ல் இருந்து அந்த இடம் கிழக்கா அல்லது மேற்கா என்பதைப் பொருத்து இது முடிவாகிறது. அதனால், ஒவ்வொரு நாட்டின் நேரமும் க்ரீன்விச் நேரத்துடன் வேறுபடும்.
Q22. திட்டப்பொது நேரம் -- Standard Time என்பது என்ன?
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நேரமிருக்கும். இது இடத்துக்கு இடம் வேறுபடக்கூடும். ஆகவே, ஒரு நாட்டில் ஒரு திட்டவட்ட நேரத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்பதால், அந்தந்த இடத்தில் பயணிக்கும் தீர்க்க ரேகையைக் கணக்கில் கொண்டு, ஒரு நேரம் நிர்ணயிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
Q23. நேரத்தின் பூஜ்ய நேரத்தை எங்கு நிர்ணயித்திருக்கிறார்கள்?
லண்டனுக்கு அருகில் உள்ள க்ரீன்விச் என்ற இடத்திலிருந்து இந்த பூஜ்ய நேரத்தை முடிவு செய்து அதையே க்ரீன்விச் நேரம் என அழைக்கிறார்கள். இதுவே ஐக்கிய ராஜ்யத்தின்(பொது நேரம் standard time) ஆகவும் கருதப்படுகிறது.
Q24. எப்போதிலிருந்து க்ரீன்விச் பிரதம நண்பகல் நேரம் Prime Meridian, முடிவு செய்யப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது?
1914க்கு முன்பு, பாரீஸ், ஃப்ரான்ஸ் மற்றும் க்ரீன்விச் இரண்டு இடத்து பிரதம நண்பகல் Prime Meridians பயன் படுத்தப்பட்டு வந்தது. பிறகு 1884ல் நடந்த ஒரு மாநாட்டில், க்ரீன்விச் நேரத்தைக் கடைப் பிடிப்பதாக முடிவு செய்யப்பட்டு, 1914 முதல், அமெரிக்க அதிபர் செஸ்டர் ஆர்தர் ன் பரிந்துரையின் பேரில், நடைமுறைக்கு வந்தது.
Q25. இந்தியாவின் பொது நேரம் Indian Standard Time, எங்கிருந்து முடிவு செய்யப்பட்டு உள்ளது?
கானாபூர் -- GANAPUR – உத்தரபிரதேசத்தின் மிர்ஸாபூர் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ள இடம். இது 82.5° தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் க்ரீன்விச் என அழைக்கப்படுகிறது.
Q26. நேர மண்டலம் -- Time Zone என்பது என்ன?
பூமி 24 தீர்க்கரேகை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் 15 டிகிரி அல்லது ஒரு மணி நேரத்தை பிரதிபலிக்கிறது. இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றும் அங்குள்ள உள்ளூர் பொது நேரத்தைக் கடைப்பிடிக்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு அடுத்த மண்டலமும் ஒரு மணி நேர வித்தியாசப்படுகிறது.
Q27. பன்னாட்டு நாள் கோடு -- International Date Line என்பது என்ன?
12வது மண்டல நேர கோடு, 18வது தீர்க்க ரேகையால் வகுபடும் இடம் இவ்வாறு அழைக்கப் படுகிறது. இந்த 12 வது மண்டலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மண்டலங்கள் ஒன்று முதல் பனிரெண்டு எண்கள் அளிக்கப்பட்டு அவைகளுக்கு முன்பாக (- கழிவு) முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தந்த இடங்கள், க்ரீன்விச் நேரத்திலிருந்து அந்த எண்ணை கழிக்கும் போது கிடைப்பதே க்ரீன்வீச் பொது நேரம்.
Q28. ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரம் -- UTC – Coordinated Universal Time என்பது என்ன?
மிக துல்லியமான அணு நேரம். இது 1972 முதல் பாரீஸ் நகரத்திலிருந்து இயங்கி வருகிறது. இதன் நேரம் மிக துல்லியமாக, பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு கணிக்கப் படுகிறது.
Q29. நாள் ஒளி சேமிப்பு நேரம் -- Day Light Saving Time (DST) என்பது என்ன?
இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். இளவேனிற் காலத் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் முன் படுத்துவது, பனிக்காலத் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் பின் படுத்தவும் செய்யப்படுகிறது. இது பகல் நேரத்தை அதிகப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக செய்யப்பட்டு வருகிறது.
Q30. நாள் ஒளி சேமிப்பு நேரத்தை Day Light Saving time முன் வைத்தவர் யார்?
நியூசிலாந்து நாட்டின் ஜார்ஜ் வெர்னான் ஹட்சன் என்பவர் 1895ல் முன் வைத்தார். அது முதல் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
Q31. எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன?
இருபத்திநான்கு.
Q32. எந்த நாடுகளில் அதிகமான நேர மண்டலங்கள் time zones உள்ளன?
ஃப்ரான்ஸ் - 12 ; அமெரிக்கா & ரஷ்யா -- 11 ; ஐக்கிய ராஜ்யம் - 9 ; ஆஸ்திரேலியா - 8 ;
Q33. எந்த மிகப்பெரிய பரப்பு கொண்ட நாடு, ஒரே ஒரு நேர மண்டலம் கொண்டது?
சீனா.
Q34. ஒரே எல்லையைப் பகிர்ந்துக்கொள்ளும் இரு நாடுகளுக்கிடையில் பெரிய நேர இடைவெளி உள்ளது?
சீனா-ஆப்கானிஸ்தான் - 3.5 மணி நேர இடைவெளி.
Q35. பன்னாட்டு நாள் கோடு -- International Date Line எங்கு அமைந்துள்ளது?
இது தோராயமாக கிழக்கு மேற்கு 180° தீர்க்க ரேகைக்கு இணையாக உள்ளது. க்ரீன் விச் மெரிடியன் தீர்க்க ரேகைக்கு எதிர் புறத்தில் உள்ளது.
Q36. பன்னாட்டு நாள் கோடு -- International Date Line எவ்வாறு அன்றாட நடைமுறைக்கு உதவுகிறது?
ஒருவர், இந்த கோட்டை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்கையில் தாண்டும் போது, தங்கள் கை நேரங்காட்டி மற்றும் இதர உபகரணங்களில் தேதியை ஒரு நாள் முன் தள்ள வேண்டும், அதே போல் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் போது ஒரு நாள் பின் தள்ள வேண்டும்.
Q37. நேரத்தை அறிய பயன்படுத்தப்பட்ட மிகப்பழமையான முறை என்ன? Which is the oldest known clock/method of knowing time? How GNOMON is related to it?
சூரிய நேரங்காட்டி -- Sun Dial – சூரியனின் நிலையைப் பொருத்து நேரத்தைக் காட்டும்.
Q38. நீர் நேரங்காட்டி Water Clock எனப்படுவது என்ன?
இதுவும் ஒரு பழமையான நேரம் அறியும் முறை. இதை CLEPSYDRA எனவும் அழைப்பர். நீரை, இரண்டு பாத்திரங்களுக்கிடையில் சீராக பாயவைத்து, நேரத்தை அறிந்து வந்தனர்.
Q39. மணல் நேரங்காட்டி -- Hour Glass என்பது என்ன?
இதுவும் ஒரு பழமையான நேரங்காட்டும் உபகரணம். ஒரு கண்ணாடு குடுவைக்குள் இருந்து ஒரு சிறு துவாரம் வழியாக மற்றொரு உபகரணத்திற்கு மணல் சென்று அடையும் அளவைப் பொருத்து நேரத்தைக் கணக்கிடுவது. ஒரு குடுவை நிறைந்தவுடன் அதை அப்படியே தலைகீழாக மாற்றி நிறுத்துவர்.
Q40. மிகப்பழமையான இயந்திர mechanical நேரங்காட்டி எது?
ஐக்கிய ராஜ்யம் (இங்கிலாந்து) நாட்டில் சாலிஸ்பரி Salisbury என்ற இடத்தில் உள்ள கிறித்துவ தேவ ஆலயத்தில் உள்ள 14ம் நூற்றாண்டின் (1386) நேரங்காட்டியே.
Q41. எப்போது முதன் முதலாக ""நிமிடங்காட்டி முள்"" “minute hand” இயந்திர நேரம் காட்டியில் பயன்படுத்தப்பட்டது?
1475
Q42. இயந்திர நேரங்காட்டியில் எப்போது முதன் முதலாக வினாடி முள் “second hand” பயன்படுத்தப்பட்டது?
1560
Q43. ஊசல் குண்டு கடிகாரம் -- Pendulum Clock எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
க்றிஸ்டியன் ஹ்யூஜென்ஸ் -- நெதர்லாந்து -- 1657.
Q44. தாத்தா கடிகாரம் “Grand Father” என்று அழைக்கப்பட்ட, உயரமான பளபளப்பு ஏற்றப்பட்ட மரப்பெட்டி கடிகாரத்தை முதன் முதலில் வடிவமைத்தவர் யார்?
வில்லியம் க்ளெமெண்ட் -- ஐக்கிய ராஜ்யம் -- 1670.
Q45. கடிகாரத்தை முதலில் வடிவுப்பதிவு செய்தவர் யார்? Who was the first to patent a clock and considered to be the father of American clock industry?
எலி டெர்ரி -- கெனெக்டிகட், அமெரிக்கா -- இவர் அமெரிக்க கடிகாரத் தொழிலின் தந்தை எனப்படுகிறார்.
Q46. மின்சார கடிகாரத்தை முதலில் வடிவுப்பதிவு செய்தவர் யார்?
ஸ்காட்லாந்து நாட்டின் அலெக்ஸாண்டர் பெய்ன் என்பவர் 1840ல். இவரே 1841 ல் முதல் மின்காந்த ஊசல் குண்டு கடிகார வடிவத்தையும் பதிவு செய்தவர்.
Q47. 1847 ல், நேரத்தைச் சீர்படுத்தக்கூடிய, எழுப்பு மணி அடிக்கக்கூடிய கடிகாரம் யாரால் வடிவுப்பதிவு செய்யப்பட்டது? Adjustable alram clock
ஆண்டோய்ன் ரெடியர் -- ஃப்ரான்ஸ் -- 1847
Q48. வானியல் கடிகாரம் Astronomical Clock என்பது என்ன?
சிறப்பு இயந்திர அமைப்பு மற்றும் முகப்பு (dial) கொண்ட ஒரு கடிகாரம். இது, சூரியன், நிலவு, கிரகங்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் இணை அமைப்பை எடுத்துக்காட்டும் நிலையில் வடிவமைக்கப்பட்டது.
Q49. அணு கடிகாரம் -- Atomic Clock என்பது என்ன?
அணு அதிர்வு அலையைப் பயன்படுத்தி இயங்கும் ஒரு வகைக் கடிகாரம்.
Q50. அணு கடிகாரம் முதன் முதலில் எங்கு உருவாக்கப்பட்டது?
1949ல் அமெரிக்க தரக்கட்டுப்பாடு நிறுவனத்தில்.
Q51. Where was the second atomic clock built and how accurate it is?
1955ல் – தேசிய இயற்பியல் ஆய்வகம் -- ஐக்கிய ராஜ்யம் -- இது 300 வருடத்திற்கு ஒரு வினாடி வரை துல்லியமாக இருக்கும்.
Q52. இரும எண் -- Binary Clock என்பது என்ன?
பாரம்பரிய அறுபதினை அடிப்படையாகக் கொண்ட கடிகாரத்தை பைனரி அலகில் காட்டுவது.
Q53. மணி அடிக்கக்கூடிய கடிகாரம் என்பது என்ன?
நேரத்தை, அதாவது, மணி hour யை மணியடித்து காட்டும் கடிகாரம்.
Q54.
மணி அடிக்கக்கூடிய உலகின் புகழ்பெற்ற கடிகாரம் எது?
BIG BEN – இங்கிலாந்து. லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் West Minster நிறுவப்பட்டுள்ளது.
Q55. லண்டன் நகரின் Ben Clock ஐயும், அதன் முகப்பையும் வடிவமைத்தவர் யார்?
அகஸ்டஸ் பஜின், இங்கிலாந்தின் கட்டடக்கலை வல்லுனர்.
Q56. Big Ben கடிகாரம் எப்போதிலிருந்து இயங்கி வருகிறது?
07.9.1859.
Q57. Big Ben கடிகார வடிவமைப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன?
இரும்பால் ஆன கட்டுமானம் -- 6.7மீ/21 அடி விட்டம். மணி முள் 2.7 மீ/9 அடி நீளம். நிமிட முள் 4.3 மீ/14 அடி நீளம்.
Q58. இறங்குமுக கணிப்பு கடிகாரம் -- countdown clock , அது எங்கு பயன்படுத்தப் படுகிறது?
பின்னோக்கி எண்ணிக்கை காட்டும் கடிகாரம், அதாவது 10 --> 0 . இது செயற்கைக்கோள் ஏவுவதில் பயன்படுத்தப்படுகிறது.
Q59. ஆங்கிலத்தில் “Clock of the Long Now” என்று அழைக்கப்படும் கடிகாரம் என்ன?
இதை பத்து வருட கடிகாரம் 10000 Year clock என்றும் அழைப்பர். 10000 வருடத்திற்கு நேரத்தைப் பராமரிக்கும் நிலையில் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை டேனி ஹில்ஸ் என்பவர் 1986ல் வடிவமைத்து, Long Now Foundation என்ற அமைப்பின் உதவியுடன் நிறுவப்பட்டது. 31.12.1999 முதல் இயங்கி வருகிறது. இதன் மூல முன் மாதிரி, லண்டன் நகரின் அறிவியல் பொருட்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Q60. மின்சாரத்தால் இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
சர் ஃப்ரான்சிஸ் ரொனால்ட்ஸ், லண்டன் -- 1814ல்.
Q61. விளையாட்டு கடிகாரம் -- Game Clock என்பது என்ன?
இது ஒரு ஜோடியாக இருக்கும் - ஒன்றன் அருகில் ஒன்றாக. ஒன்றை இயக்கும் போது, மற்றொன்றை நிறுத்தும் வசதி கொண்டது. இது பொது சதுரங்கப் போட்டிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
Q62. நிறுத்து கடிகாரம் -- Stop Watch என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் தொடக்கத்தையும் முடிவையும் பதிவு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கடிகாரம். தொடங்கும் போதும், முடிவடையும் போதும், இதில் கொடுக்கப்பட்டுள்ள பொத்தானை அழுத்தி, அந்த நிகழ்வுக்கான நேரத்தைக் கணக்கிடலாம். பொதுவாக தடகள ஓட்டப்பந்தயங்களில், நீச்சல் போட்டிகளிலும் பயன் படுத்தப்படுகிறது. தற்போது, மின்னணு கடிகாரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
Q63. அலை கடிகாரம் -- Tide Clock என்பது என்ன?
நிலவு பூமியைச் சுற்றி வருவதை பதிவு செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது.
Q64. டிஜிட்டல் (இலக்கமுறை) கடிகாரம் Digital Clock என்பது என்ன?
மின்னணு டிஜிட்டல் முறைகள் மூலம் நேரத்தைப் பராமரிக்கும் கடிகாரம்.
Q65. நேரப்பதிவு கடிகாரம் -- Time Clock என்பது என்ன?
நேரப் பதிவு இயந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, ஒரு தொழிற்சாலை, அல்லது கணிசமான தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களில், அவர்கள் பணிக்கு வரும் நேரமும் பணியில் இருந்து செல்லும் நேரமும் பதிவு செய்யப்பட்டு, அவருடைய பணி நேரம் கணக்கிடப் படுகிறது. தற்சமயம் மின்னணு, ரேகைப்பதிவு போன்ற பல மேம்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Q66. பாக்கெட் கடிகாரத்தை முதலில் உருவாக்கியவர் யார்?
பீட்டர் ஹென்லீன் -- Peter Henlein -- ஜெர்மனி -- 1524.
Q67. தானியங்கி கடிகாரம் -- “Automatic Watch” கண்டுபிடித்தவர் யார்?
1923 -- ஜான் ஹார்வுட் -- இங்கிலாந்து.
Q68. எந்த நிறுவனம், முதன் முதலில், மின்சார கடிகாரத்தை வியாபார ரீதியாக தயாரிக்கத் தொடங்கினர்?
ஹேமில்டன் எலக்ட்ரிக் 500 கடிகாரம் -- ஹாமில்டன் வாட்ச் நிறுவனம், இங்கிலாந்து. 1957ல்.
Q69. நேரத்தையும், நேரங்காட்டிகளையும் ஆய்வு செய்யும் படிப்புக்கு என்ன பெயர்?
ஹோராலஜி -- Horology.
Q70. கடிகார விற்பனை மையங்களில் உள்ள அனைத்து கடிகாரங்களிலும் நேரம் 10.10 காட்டுமாறு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். காரணம் என்ன?
காரணம் அந்த நிலை, ஒரு புன்னகையைப் போல் தெரிவதால், இவ்வாறு நிலைநிறுத்தப்படுகிறது. இம்முறை எல்லா இடங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.
Q71. ஆங்கிலத்தில் Jiffy எனப்படுவது நேரத்தில் எதைக் குறிக்கிறது. ?
ஒரு வினாடியின் நூறில் ஒரு பங்கு 1/100 வினாடி. 1/100th of a second.
Q72. இந்திய பொது நேரம் -- Indian Standard Time எப்போதிலிருந்து அனுசரிக்கப் படுகிறது?
1.9.1947.
Q73. இந்திய பொது நேரத்தை பயனுக்குக் கொண்டு வர காரணமாயிருந்தவர் யார்?
Lord Curzon.
Q74. “Cesium Atom” எனப்படுவது என்ன?
இது ஒரு அணுசக்தி கடிகாரம். ஒரு வினாடியில் சுமார் ஒன்பது பில்லியன் முறை துடிக்கிறது என்பது ஒரு அறிவியல் ஆச்சரியம்.
Q75. ஒரு வினாடியில் எத்தனை nano வினாடிகள் உள்ளன?
ஒரு பில்லியன் -- one billion.== நூறு கோடி.
Q76. உலகின் மிகப்பெரிய ""குருவி கடிகாரம்"" “Cuckoo Clock”? (மணியடிக்கும் நேரத்தில் ஒரு குருவி, கூண்டிலிருந்து வெளி வந்து ஒலி எழுப்பும்)
ஃப்ரண்டன்ஸ்டாட், ஜெர்மனி. Freundenstadt, Germany.