Khub.info Learn TNPSC exam and online pratice

நிலநீர் அமைப்பு -- HYDROSPHERE AND TERMINOLOGIES

Q1. உலகின் பரப்பளவில் நீஎவ்வளவு பகுதி?
சுமார் மூன்றில் இரண்டு பங்கு. சுமார் 14, 60, 000 கன கி.மீ நீரால் சூழப்பட்டுள்ளது.

Q2. உலகின் நீர்பரப்பில் கடலால் சூழப்பட்டுள்ளது எவ்வளவு?
97.30%
Q3. உலகின் நீர்பரப்பில் நன்னீர் உள்ள பகுதி எவ்வளவு?
2.7%.
Q4. உலகின் நீர்பரப்பில், அதிகமான பரப்பளவு கொண்டது எது?
பசிபிக் கடல் -- இது உலகின் மொத்த பரப்பளவில், சுமார் 46% -- 165250000 ச.கி.மீ பகுதியை ஆக்கிரமித்து கொண்டுள்ளது.
Q5. உலகின் நீர்வளத்தின் சராசரி ஆழம் எவ்வளவு?
3.5 கி.மீ.
Q6. நீர்ப்பகுதியின் ஆழத்தை அளவிடும் அலகு என்ன?
Fathom = 5.90 அடி = 1.8 மீ.
Q7. உலகில் உள்ள பெருங்கடல்கள், கடல்கள் யாவை?
பெருங்கடல் -- Oceans:
1. பசிபிக் Pacific -- 165.25 மில்லியன் ச.கி.மீ -- உலகப் பரப்பளவில் சுமார் 46% -- மிக ஆழமான பகுதி 10,911 மீட்டர் -- மரியானா ட்ரெஞ்ச் பகுதியில் சேலஞ்சர் டீப் என்ற இடம்.
2. அட்லாண்டிக் -- Atlantic -- 10,64,00,000 ச.கி.மீ -- உலகப்பரப்பளவில் சுமார் 20% -- மிக ஆழமான பகுதி 8380 மீ -- மில்வாக்கி -- ப்யூரிட்டோ ரிக்கோவிலிருந்து 100 கி.மி. தூரத்தில் உள்ளது.
3. இந்தியப் பெருங்கடல் -- Indian -- 7,05,60,000 ச.கி.மீ -- உலக நீர்ப்பரப்பில் சுமார் 20% -- மிக ஆழமான பகுதி சுண்டா ட்ரெஞ்ச் -- 7725 மீ.
4. ஆர்க்டிக் -- Arctic.
5. தென் பெருங்கடல் -- Southern.
கடல்கள் Seas:
1. Arabian, 2.Black 3. Red, 4. South China, 5. White 6. Dead 7.Baltic 8. Caspian. 9. Bay of Bengal. 10.மத்திய தரைக்கடல்"
Q8. உலகிலேயே அதிக ஆழமான கடல் பகுதி எங்குள்ளது?
சேலஞ்சர் டீப் -- பசிபிக் கடல் -- மரியான ட்ரெஞ்ச் பகுதியில் (பிலிப்பைன்ஸ்) உள்ளது. சுமார் 10911 மீ ஆழம் கொண்டது.
Q9. நீர்ப்பிடிப்பு பகுதி -- Catchment என்பது என்ன?
எந்தப் பகுதியில் அதிகமான மழைப் பெற்று, நதிகளும் இதர நீர்த்தேக்கங்களும் நீரைப் பெறுகின்றன.
Q10. சங்கமம் -- Confluence என்பது என்ன?
எந்த இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நதிகள் இணைகிறதோ, அதுவே சங்கமம் எனப்படுகிறது. நம் நாட்டின் புகழ் பெற்ற சங்கமம் -- கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் அலஹாபாத் ல் உள்ளது. இந்துக்களின் புனிதத் தலம்.
Q11. அரிப்பு -- Corrosion என்பது என்ன?
நீர்ப்பகுதிகளின் கரையோரங்கள், கனப் பொருட்களால் அரித்து எடுக்கப்படுவது.
Q12. சிற்றோடை -- Creek என்பது என்ன?
ஒரு சிறிய அளவிலான நீரோட்டம்.
Q13. அணைக்கட்டு -- Dam என்பது என்ன?
நீரோட்டத்தைத் தடுத்து, நீரை சேமித்து, விவசாயம், மின் உற்பத்தி, குடி நீருக்காக கட்டப்படும் ஒரு கட்டுமானம்.
Q14. கழிமுகம் -- Delta என்பது என்ன?
ஒரு நதியின் முகத்துவாரத்தில், நதியின் ஓட்டத்தில் வந்து சேரும் வண்டல் ஒன்று சேர்ந்து ஒரு முக்கோண வடிவ நிலப்பகுதி. உதாரணம்: சுந்தரவன டெல்டா -- சுமார் 75000 ச.கி.மீ -- உலகிலேயே பெரிய டெல்டா. காவேரி டெல்டா--தமிழ் நாடு -- வளமான விவசாயப் பகுதி.
Q15. கால்வாய் “Aqueduct” என்பது?
செயற்கை முறையில், நீரின் போக்கை திசை திருப்புவதற்கோ, போக்கிலிருந்து ஒரு சிறு திருப்பம் ஏற்படுத்தி, நீர் பாய்ச்சலை ஏற்படுவதற்கோ உருவாக்கப்படும் ஒரு நீரோட்டம்.
Q16. ஆவியாதல் -- Evaporation என்பது?
நீர் வெப்பத்தின் காரணமாக வாயு நிலையை அடைவது. இது நீர்ப்பரப்பில் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. (நீரை கொதிக்கவைத்து வாயு நிலைக்கு மாற்றுவது இதனுடன் சம்பந்தப்பட்டது அல்ல)
Q17. அலையேற்றம், அலைகளின் துவாரம் -- Tidal Bores என்பது என்ன, அவை எங்கு ஏற்படுகிறது?
திறமான அலையின் போக்கு, திறமான நீர்ப்போக்கும் சந்திக்குமிடத்தில் ஏற்படுகிறது. இது ஒரு புனல் போன்ற அமைப்பில் உருவாகும்.
Q18. நீர் சுழற்சி -- Water Cycle என்பது என்ன?
பூமியில் உருவாகும் நீர் பல பகுதிகளுக்கு சுழன்று வருவது.
Q19. Weir என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன?
சிறிய அணை. இந்த தடுப்பணையைத் தாண்டி நீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்படுவது. இவ்வகைத் தடுப்புகள், அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பெரும் உதவியாக இருக்கும்.
Q20. வரப்பு -- Bund என்பது என்ன?
ஒரு செயற்கை மண் தடுப்பு.
Q21. ஊறு -- Spring என்பது என்ன?
இது பொதுவாக துளைக்கமுடியாத (துளைகள் இல்லாத impervious rock) கடின பாறைகள் மீது, நுண்துளைகள் உள்ள பாறைகள் (porous rock) படிந்திருக்கும் இடத்தில் ஏற்படும். மழை நீர் இந்த கடின பாறைகள் வரை சென்று பரவி, பிறகு நுண்துளை பாறைகள் மூலம் வெளி வருவதே ஊற்று எனப்படுகிறது.
Q22. நில நீர் மட்டம் -- Water Table என்பது என்ன?
நிலத்தின் மண்/பாறைகளுக்குகளுக்கு அடியில் நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவில் இருப்பது. இது குறையாமல் இருப்பதற்காகத் தான் நீர்த்தேக்கங்களில் அதிகமான நீரை சேமிப்பதும் மழை நீரை பூமிக்குள் செலுத்துவதும் பரிந்துரைக்கப்படுகிறது.
Q23. அலைமுறி/நீர்த்தடை -- Break Water என்பது என்ன?
கடலோரங்களில் இயற்கையாகவே அமைந்துள்ள (பாறை) தடைகள். இவை அலைகளின் சீற்றத்தை கணிசமாக குறைத்து, கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கின்றன.