Khub.info Learn TNPSC exam and online pratice

பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் -- OCEANS AND SEAS

Q1. பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் யாவை?
பெருங்கடல்கள் -- Oceans – 1. பசிபிக் 2. அட்லாண்டிக் 3. இந்தியன் 4. ஆர்க்டிக் மற்றும் 5. தென் கடல்.
கடல்கள் -- Seas – 1. அரேபியன் 2. கருங்கடல் 3. செங்கடல் 4. தென் சீன 5. வெண்கடல் 6. மரணக்கடல் Dead 7. பால்டிக் 8. கேஸ்பியன் 9. கோரல் 10. கரீபியன் 11. மத்தியத் தரை 12. பெரிங் 13. வங்காள விரிகுடா 14. ஒகோட்ஸ்க் 15. மெக்ஸிகன் 16. கினி வளைகுடா 17. பேரண்ட்ஸ் 18. நார்வேஜியன் 19. அலாஸ்கா வளைகுடா 20. ஹட்சன் பே 21. க்ரீன்லாந்து 22. அராஃபுரா 23. பிலிப்பைன் 24. ஜப்பான் 25. கிழக்கு சைபீரியன் மற்றும் 26. கரா -- மற்றும் சில கடல்கள்.

Q2. பெருங்கடல்களும் ocean கடல்களுக்கும் sea உள்ள வேறுபாடு என்ன?
பெருங்கடல்கள் என்பது பல நீர்நிலைகளின் ஒருங்கிணைந்த பெரும் பரப்பளவு கொண்டது. இது பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 71% கொண்டது. இதன் எல்லைகள் பெரும்பாலும் கண்டங்கள். கடல் என்பது சிறிய பரப்பளவுக் கொண்ட, பெருங்கடலின் ஒரு பகுதியாக, பெரும்பாலும், நாடுகளின் எல்லைகளைத் தழுவி அல்லது பெரும்பகுதி தரையால் கவரப்பட்ட நீர்ப்பகுதி.
Q3. பெருங்கடல்களில் பெரியது எது?
பசிபிகி -- Pacific – பெருங்கடல்களில் 45.7% , பூமியின் பரப்பளவில் 35% மும் கொண்டது. இதன் பரப்பளவு சுமார் 165257000 SQKM.
Q4. பெருங்கடல்களில் சிறியது எது?
ஆர்க்டிக் பெருங்கடல்.
Q5. கடல்களுள் பெரியது எது?
பிலிப்பைன் கடல் .
Q6. எந்த கடற்கரை பூமியின் தாழ்வான இடமாக lowest point of Earth கருதப்படுகிறது?
மரணக்கடல் Dead Sea – இஸ்ரேல்-ஜோர்டன் எல்லையில் உள்ளது.
Q7. பெருங்கடல்களை அதன் பரப்பளவின் அடிப்படையில் வரிசைப்படுத்துக?
1. பசிபிக் பெருங்கடல் Pacific Ocean - 1, 65, 25, 00,000 ச.கி.மீ
2. அட்லாண்டிக் பெருங்கடல் Atlantic Ocean - 10,64,00,000 ச.கி.மீ
3. இந்தியப் பெருங்கடல் Indian Ocean - 7, 05, 60, 000 ச.கி.மீ
4. தென் பெருங்கடல் -- 20, 33, 000 ச.கி.மீ
5. ஆர்க்டிக் பெருங்கடல் -- 14,06,000 ச.கி.மீ
Q8. கடல்களை பரப்பளவின் அடிப்படையில் முதல் பத்தை வரிசைப்படுத்துக.
1. பிலிப்பைன் கடல் -- Philippine Sea: -- 5177762 SQKM – கிழக்கு மற்றும் வடக்கு பிலிப்பைன்ஸ்
2. கோரல் கடல் -- Coral Sea : 4791000 SQKM – ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடல்.
3. அரேபியக் கடல் -- Arabian Sea: 3862000 SQKM – இந்தியாவின் மேற்குக் கடற்கரை.
4. தென் சீனக் கடல் -- South China Sea: 3500000 SQKM – சிங்கப்பூர், மலாக்கா மற்றும் தைவான்.
5. வெட்டெல் கடல் -- Weddell Sea: 2800000 SQKM – தென் பெருங்கடலில் ஒரு பகுதி. அண்டார்டிகா அருகில்.
6. கரீபியன் கடல் -- Caribbean Sea: 2754000 ச.கி.மீ – மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் பகுதியிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி.
7. மத்தியத் தரைக்கடல் -- Mediterranean Sea: 2500000 ச.கி.மீ – அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைந்து உள்ளது. இதன் பெரும்பகுதி தரைப்பகுதியால் கவரப்பட்டுள்ளது.
8. தஸ்மான் கடல் --Tasman Sea: 2330000 ச.கி.மீ – ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையில்
9. பெரிங் கடல் -- Bering Sea: 2260100 ச.கி.மீ – பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதி.
10. வங்காள விரிகுடா -- Bay of Bengal: 2172000 ச.கி.மீ – இந்திய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதி.
Q9. அதிகமான கடற்கரையோரம் coastline கொண்ட நாடு எது?
கேனடா -- Canada – 265523 கி.மீ.
Q10. இந்தியாவின் மொத்த கடற்கரையோரம் எவ்வளவு?
7517 கி.மீ
Q11. இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு அதிகமான கடற்கரையோரம் உள்ளது?
குஜராத் -- 1666 கி.மீ.
Q12. கடல்களுள் சிறியது எது?
கலிஃபோர்னியா வளைகுடா -- 153070 ச.கி.மீ
Q13. பசிபிக் கடலைக் கண்டுபிடித்தவர் யார்?
வாஸ்கோ நுனெஸ் டி பல்போ -- ஸ்பானிய கடற்பயணி.
Q14. உப்புத்தன்மை அதிகமுள்ளக் கடல் எது?
காஸ்பியன் கடல் -- Caspian Sea – அதனால் தான் இதை உப்பு ஏரி என அழைப்பர்.
Q15. ஆழம் அதிகமுள்ள பெருங்கடல்/கடல் எது?
பசிபிக் பெருங்கடல் -- மிக ஆழமான பகுதி 10,911 மீட்டர் -- மரியானா ட்ரெஞ்ச் பகுதியில் சேலஞ்சர் டீப் என்ற இடம்.
Q16. சராசரிக் கடல் மட்டம் -- Mean Sea Level என்பது என்ன?
சராசரி கடல் மட்டம், எங்கிருந்து ஒரு இடத்தின் உயரம் கணக்கிடப்படுகிறது.
Q17. உலகின் சராசரிக் கடல் மட்டம் எனக் கருதப்படும் இடம் எது?
லிவர்பூல், ஐக்கிய ராஜ்யம் (இங்கிலாந்து). இங்கிருந்து தான் உலகின் அனைத்து இடங்களின் உயரம் நிர்ணயிக்கப்படுகிறது.
Q18. ஆங்கிலத்தில் “Herring Pond” என அழைக்கப்படும் கடல் எது? (Herring = ஒருவகை மீன்; pond = குளம்)
அட்லாண்டிக் பெருங்கடல்.
Q19. கடல் நீரோட்டம் -- ocean currents என்பது என்ன?
நிலவும் காற்றோட்டத்துக்கு தகுந்தவாறு கடலின் நீரோட்டம்.
Q20. கடல் நீரோட்டம் பொதுவாக எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
வெப்ப நீரோட்டம் -- வெப்பப் பகுதியிலிருந்து குளிர் பகுதிக்கு பாய்வது. குளிர் நீரோட்டம் -- குளிர் பகுதியிலிருந்து வெப்பப் பகுதிக்கு பாய்வது.
Q21. இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரோட்டத்தின் பெயர் என்ன?
அகுலாஸ் நீரோட்டம். -- Agulhas Current.
Q22. கடல் நீரோட்டம் எவ்வாறு உதவுகிறது?
கடல் நீரோட்டத்தைப் பொருத்து அந்தந்த பகுதியின் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
Q23. கடல் நீரோட்டத்தின் வெவ்வேறு பெயர்கள் யாவை?
1. Bengeula - ஆப்பிரிக்க கடலோரம்
2. Arctic - ஆர்க்டிக் பெருங்கடல்
3. Cold Labrador - க்ரீன்லாந்து கடலோரம்.
4. Peruvian - பசிபிக்
5. Kurusiwo - ஆஸ்திரேலிய கிழக்குக் கடற்கரை.
6. Black/Japani - ஆசியாவின் கிழக்குக் கடற்கரை.
Q24. அலை என்பது என்ன?
நீர் தனது மட்டத்திலிருந்து மேலெழுமி, கீழிறங்கி நகர்வதே அலை எனப்படுகிறது.
Q25. உயர அலைகள் -- High tide என்பது என்ன?
அலைகளின் உயரம் அதிகரிக்கும் போது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q26. அலை கீழிறங்குவதை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்.
Ebb or Low.
Q27. அலை ஏற்படக்காரணம் என்ன?
பூமியின் ஈர்ப்பு சக்தி நீரை இழுத்து நிறுத்தி வைக்கிறது. அதே சமயம், சூரியன் மற்றும் நிலவின் ஈர்ப்பு சக்தி, நீரை மேல் நோக்கி இழுக்கிறது. இந்த இயக்கம் மாறி மாறி நடப்பதால், அலை மேலே எழுவதும், கீழே இறங்குவதும் தொடர்ந்து நடக்கிறது.
Q28. ஆங்கிலத்தில் -- Tidal Wave எனப்படுவது என்ன?
சராசரிக்கும் மேலாக, மிக உயர்ந்த அளவிலான அலைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக பூகம்பம், புயல்,சுனாமி போன்றவைகளால் ஏற்படும் அலைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
Q29. பௌர்ணமி அன்று அலைகள் பொதுவாக மிகவும் சீற்றத்துடனும் உயரமாகவும் காணப்படும். காரணம் என்ன?
அன்றைய தினம் நீரின் மீது, சூரியன் மற்றும் நிலவின் ஈர்ப்பு சக்தி ஒன்றாக இயங்குவதால் இவ்வாறு ஏற்படுகிறது.
Q30. அலைகளின் உயரத்தை அறிய உதவும் கருவி எது?
Wave Height Scale -- இதில் 0 முதல் 9 வரை எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு உயர எல்லை கொடுக்கப்பட்டு, அதன் படி அலையின் உயரம் கணக்கிடப்படும்.
Q31. அலைகளின் உயரத்தைப் பொருத்து, அவை எவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன?
குறியீட்டு எண் பெயர் அலையின் உயரம்.
O கண்ணாடி Glassy O
1. அமைதி Calm O - .30 meter.
2. சிற்றலை Rippled O.30 மீ --> 0.60 மீ
3. மாறி மாறி Choppy O.60 to 1.2 meters.
4. வேகமாக மாறி மாறி Choppy 1.2 to 2.4 meters.
5. அதிவேக Rough 2.4 to 4 meters.
6. மிக மிக வேகம் Very Rough 4 to 6 meters.
7. உயரமான High 6 to 9 meters
8. மிக உயரமான Very High 9 to 14 meters.
9. அதி உயரமான Ultra High 14 meters and above.
Q32. Nautical mile என்பது என்ன?
நீர்ப்பகுதிகளிலும், வான பயணத்திலும் தூரத்தை அளக்கும் அலகு. ஒரு நாட்டிகல்/ஏர் மைல் என்பது 1852 மீ தூரமாகும்.
Q33. பதிவு செய்யப்பட்ட உயரமான அலை எங்கு ஏற்பட்டது?
1720 அடி -- 1958ல் அலாஸ்கா, அமெரிக்க கடலோரத்தில் -- ஒரு நில அதிர்வின் தாக்கம்.
Q34. எந்தக் கடல் "பள்ளம்" “Ditch” என அழைக்கப்படுகிறது?
தஸ்மான் கடல், ஆஸ்திரேலியா.
Q35. "பாலைவனக்கடல்" “Ocean of Desert” என அழைக்கப்படுவது எது?
சர்கோஸா கடல்.