Khub.info Learn TNPSC exam and online pratice

நடப்புச் செய்திகள்

Q1.
► ஜனவரி 2014
1 : * மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர்விலை ரூ.220 உயர்த்தப்பட்டது.
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி.மான கழக ஊழி யர்களுக்கு 7 சதவீதம் ஊதிய அறிவிப்பு.
* லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி ஒப்புதல்.
* ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து.
2 : * டெல்லி சட்டசபையில் நடைப்பெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது.
3 : * பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி இல்லை டெல்லியில் மனெமோகன்சிங் திட்டவட்ட அறிவிப்பு.
4 : * கட்சி கட்டுபாட்டை சீர்க்குலைக்கும் வகையில் செயல்பட்ட மதுரை மாநகர் தி.மு.க. அமைப்புக்களை கூண்டோடு கலைத்து தலைமை கழகம் அறிவிப்பு.
5 : * ஜி-சாட்-14 செயற்கை கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
6 : * சிதம்பரம் நடராஜன் கோவிலை தமிழக அரசு ஏற்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை.
* நடிகர் உதயகிரன் ஐதாராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை.
* பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி கங்குலி மேற்கு வங்காள மனித உரிமை ஆணையை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
8 : * மும்பையில் இருந்து டேராடுனுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பிடித்தில், தூங்கிக்கொண்டிருந்த 90பேர் கருகி இறந்தனர்.
9 : * அனுமதி பெறாமல் வீதியில் பேனர் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குத்தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
10 : * விசா முறைகேடு வழக்கில் அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்திய தூதர் தேவயானி அமெரிக்காவில் இருந்து வேளியேற்றப்ட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க தூதர் 48 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
* நிலாவுக்கு 2017 -ம் ஆண்டுக்குள் சந்திரயான் விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
12 : * வங்காளதேச புதிய பிதமராக ஷேக் ஹசீனா 3-வது முறையாக பதவியேற்றார்.
13 : * பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி (86) சென்னையில் மரணம் அடைந்தார்.
16 : * மத்திய மந்திரி சசிதருரை தன்னிடம் இருந்து பிரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மீது அவரது மனைவி சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டினார்.
17 : * மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
* தமிழ் நாட்டில் செயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
* வங்காள திரையுலகின் ராணி என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிலை சுமித்ரா சென்(82) கொல்கத்தாவில் மரணம் அடைந்தார்.
18 : * மும்பையில் மரணம் அடைந்த மூஸ்லீம் மதகுரு சையத்னா முகமது புர்கானுதீன் இறுதிச்சடங்கில் திரண்ட மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் இறந்தனர்.
21 : * வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. கருணை மனு மீது மூடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி இந்த உத்தரவை கோர்ட்டு பிறப்பித்தது.
22 : * தேவதாஸ் உள்பட 256 படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் நாகேஸ்வர்ராவ் மரணம்.
24 : * தி.மு.க. வில் இருந்து தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி தற்காலிக நீக்கம்.
25 : * மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. கமல்ஹாசன் ,வைரமுத்து, லியாண்டர்பெயஸ், கடம் வித்வான் விநாயக்ராம் உள்ளிட்டோர் பத்ம்பூஷன் விருது பெற்றனர்.
26 : * தே.மு.தி.வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ, பண்ரூட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது, சுலோச்சானா சம்பத்துக்கு தந்தை பெரியார் விருதுகளை தமிழக அரசு வழங்கியது.
27 : * அந்தமானில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்த்தில் 31 பேர் பலியானார்கள். இதில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற 32 பேரில் 17 பேர் பலியானார்கள்.
30 : * வீடுகளுக்கான மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 ஆக வழங்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
31 : * உத்தரகண்ட் மாநில முதல்-மந்திரி விஜய் பகுகுணா கட்சி கட்டளையை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
* டெல்லி மேல் சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துகருப்பன், விஜிலா சத்யானாந்த், சசிகலா புஷ்பா, ஏ,கே.செல்வராஜ் ஆகியோரும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவாவும், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜனும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
► பிப்ரவரி 2014
03 : * தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதமாக குறைத்து முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
04 : * முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.
07 : * ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
09 : * ஒடிசா மாநிலத்தில் ஹீராகுட் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 29 பேர் பலி.
12 : * பாராளுமன்ற தாக்கல் செய்யப்பட்ட மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 10 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.
* இயற்கை எரிவாயு நிர்ணய விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்பமொய்லி, முன்னாள் மந்திரி முரளிதியோரா மற்றும் ரிலைன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அகியோர் மீது டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு தொடர்ந்தது.
13 : * தமிழக அரசின் வரி இல்லாத புதிய பட்ஜெட் நிதி அமைச்சர் ௴.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
* தனி தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாரளுமன்றத்தில் வரலாறு காணாத அளவுக்கு அமளி ஏற்பட்டது. எம்.பி.க்கள் மீது மிளகு பொடி வீசப்பட்டது. மேலும் மைக் உடைக்கப்பட்டது.
* சினிமா டைரக்டர் பாலுமகேந்திரா (75) சென்னையில் மரணம்.
14 * டெல்லி சட்ட சபையில் நடந்த ஓட்டெடுப்பில் ஜனலோக்பால் மசோதா நிராகரிக்கப்பட்டதால் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
15 * கவர்னர் பரிந்துரையை ஏற்று டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரிசபை முடிவு.
* குளகிரியில் ஊருக்குள் புகுந்த காட்டுயாணை தனியார் நிறுவன ஊழியரை தந்தத்தால் குத்தி கொன்றது.
16 : * இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை தொடங்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு தலைவர் நவிப்பிள்ளை பரிந்துரை.
17 : * மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அரிசிக்கு விதிப்பட்டிருந்த சேவை வரி, கல்விக்கடன் வட்டி ரூ.2,600 கோடி ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
* டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தமட்டது.
* முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையோட்டி போக்குவரத்து துறை சார்பில் நடந்த சிறப்பு ரத்தான முகாமில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதற்கான சான்றிதழை கின்னஸ் அதிகாரி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் வழங்கினார்.
* எத்தியோப்பியாவில் இருந்து ஜெனீவா நகருக்கு 202 பயணிகளுடன் விமானம் கடத்தப்பட்டது.. சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கேட்டு இணை இமானியே இந்த நூதன செயலில் ஈடுப்பட்டார்.
18 * ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்டது.
19 * ராஜீவ்காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன் , பேறிவாளன், நளினி, ராபர்ட், பயாஸ், ரவிச்சந்திரன் ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 3 நாளில் விடுதலை செய்யப்படுவர்கள் என தமிழக முதல்-அமைச்சர் ஜெயல்லிதா சட்டசபையில் அறிவிப்பு.
* ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்-மந்திரி கிரண்குமார்ரெட்டி ராஜினாமா செய்தார். காங்கிரஸ் அருநுதும் அவர் விலகினார்.
20 * ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 3 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கைதிகள் விடுதலைக்கு இடைக்காலதடை விதித்தது.
* ஜெயலலிதா முன்னிலையில் பண்ருட்டி ராமசந்திரன் அ.தி.மு.க வில் இணைந்தார்.
* இந்தியாவின் 29-வது மாநிலமானது தெலுங்கானா டெல்லி மேல்-சபையிலும் மசோதா நிறைவேறியது.
* சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு காமாராஜர் பெயர் வைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
23 * நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்தது.
* முன்னாள் அமைச்சர் பூவராகன் மரணம்.
24 * பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.
* லாலுபிராசத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி 2 ஆக உடைந்தது. 22 எம்.எல்.ஏக்களில் 13பேர் நிதீஷ்குமாருக்கு ஆதரவு தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.
26 * மும்பை அருகே நீர்மூழ்கி போர்க்கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 கடற்படை அதிகாரிகள் சாவு, 7பேர் காயம். இந்த தீ விபத்தை தொடர்ந்து இந்திய கப்பல் படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
27 * ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி,ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
* சோனியகாந்தி முன்னிலையல் நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் இணைந்தார்.
28 * மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.
* சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சகாரா குழுமத்தலைவர் சுப்ரதா ராய் கைது.
* ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்.
► மார்ச் 2014
1 * தெலுங்கான மசோதாவுக்கு ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
* பா.ஜனாதா மூத்த தலைவர் பங்காரூ லட்சுமணன் மரணம். அவருக்கு வயது 73.
* முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பாரதீய ஜனாதா கட்சியில் சேர்ந்தார்.
2 * பாரளுமன்ற தேர்தல் பிராசாரத்தை ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் தொடங்கினார்.
4 * ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டது தோல்வி அடைந்தவர்கள் மேலும் இருதடவை தேர்வு எழுதவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
5 * 16-வது பாரளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டது. ஏப்ரல்7-ந்தேதி வரை 9 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு.
6 * அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய மார்க்சிஸ்ட்- இந்திய கமுயூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடப்போவதாக கூட்டமாக அறிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டது.
* மும்பையில் மஜ்காவ்ன் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். கொல்கத்தா ராக்கெட்டில் வாயு கசிவு ஏற்பட்டதில் அதிகாரி ஒருவர் பலியானார்.
8 * சென்னை பெண் உள்பட 239 பேருடன் சீனா சென்ற மலேசிய விமானம் கடலில் மூழ்கி அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
11 * சத்தீஷ்கர் மாநிலத்தில் ஜீரம்நல்லா அடர்ந்த காட்டுப்பகுதியில் சாலை ஆய்வு பணியில் ஈடுப்பட்ட போலீசார் மீது 100 மாவேயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 20 போலீசார் பலியானாகள்.
13 * டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் அக்ஷய தாகூர், வனய்சர்மா,பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
* அமெரிக்காவில் விசா மோசடியில் கைதான இந்திய பெண் துணைத்தூதர் தேவயாணி மீதான வழக்கை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
14 * பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 'ஜனசேனா' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
15 * விசா மோசடி வழக்கில் சிக்கிய இந்திய துணை தூதர் தேவயாணிக்கு புதிய வழக்கில் மீண்டும் கைது வாரண்டு பிறப்பித்து அமெரிக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
* உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார்.
17 * ரஷ்யாவுடன் இணைய நடந்த ஓட்டெடுப்பில் கிரிமியாவில் வசிக்கும் 97 சதவீத மக்கள் ஆதரவு அளித்து உள்ளனர். இந்த வாக்கெடுப்பை ஓபாமா நிராகரித்தார்.
18 * ஆம்.ஆத்மி கட்சி சார்பில் உதயகுமார் கன்னியாகுமாரி தொகுதியில் போட்டி.
20 * தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்ப்பட்டது. இதனை அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்தார். (தே.மு.தி.க 14, பா,ஜ.க.8, பா,மா.க.8. ம.தி.மு.க.7 கொங்குநாடு முன்னேற்ற கழகம் 1, ஐ.ஜே.கே.1). * 99 வயதான மூத்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங் காலாமானார்.
22 * இலங்கை ராணூவத்தினல் பயிற்சி பெறும் தமிழ் பெண்களை கொடூரமாக தாக்கும் ராணுவ அதிகாரிகளின் புதிய வீடியோ வெளியானது.
23 * மேற்கு ஆப்பிரிக்காவில் எபலோ நோய் தாக்கம் கண்டு அறியப்பட்டது. பல நாடுகளுக்கும் பரவிய இந்த நோய்க்கு ஏராளமானோர் பலியானர்கள்.
24 * பாரதீய ஜனாதாவின் டிக்கெட் கிடைக்காத ஜஸ்வந்த்சிங் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
25 * கட்சி தலைமையை இழிவுபடுத்தி விமர்சனம் செய்த மு.க.அழகிரி தி.மு.க. வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
27 * போர்க்குற்றங்களை பற்றி சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஐ.நா மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இந்திய உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளமால் புறக்கனித்தன.
* ராஜீகொலைகைதிகள் 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
28 * காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ உடையில் வந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீர்ர் உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
* கூடங்குளம் அணுமின் நிலைய போரட்டக்கார்ர்கள் யாரையும் கைது செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
* 2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது.
* இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சிபவல் பதவி விலகினார்.
► ஏப்ரல் 2014
1 * ராஜீவ் கொலை கைதிகள் முருகன்,சாந்தன், பேறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2 * சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 5 பேர் பலியானார்கள்.
3 * நாமக்கல் தொகுதியில் போட்டியிட மறுத்த தே.மு.தி.க. வேட்பாளார் மகேஷ்வரன் முதல்-அமைச்சர் ஜெயல்லிதா முன்னிலையில் அ.தி.மு.க வில் சேர்ந்தார்.
* அமெரிக்க ராணுவதளத்தில் ராணுவ வீர்ர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள்.
* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் மஷரப்பை குண்டு வைத்து கொல்ல நடந்த முயற்சியில் அவர் நூல் இழையில் உயிர் தப்பினார்.
4 * மும்பையில் பெண் புகைப்பட நிபுணர் கற்பழிப்பு வழக்கில் விஜய் யாதவ் (19), காசிம் பெங்காலி(21), சலீம் அன்சாரி(28) , அபிக்ஷேக் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
* விழுப்புரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயது மாணவி 14 மணி நேரம் போரட்டத்துக்கு பின் பிணமாக மீட்க்கப்பட்டார்.
7 * நீலகிரி தொகுதியில் வேட்புமனு மறு பரீசிலினையின் போது கட்சியின் அத்தாட்சி கடிதம் கொடுப்பதில் தாமதம் எனக்கூறி பாரதீய ஜனாதா கட்சி வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு மள்ளுபடி செய்யப்பட்டது.
* சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமக்கப்பட்டார்.
10 * முதல் முறையாக வேட்பு மனுவில் தனது மனைவி யசோதா பெயரை குறிப்பிட்டார். நரேந்திரமோடி
12 * தமிழகம் முழுவதும் ஓரே நாளில் நடந்த லோக் அதாலத்தில் 12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.696 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
* சத்திஷ்கர் மாநிலத்தில் நக்சலைடுகள் இரு இடங்களில் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 6 தேர்தல் ஊழியர்கள் உள்பட 14 பேர் பலியானவர்கள். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
14 * ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்தலில் 71 பேர் பலியானார்கள்.
15 * திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என அங்கிகரித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சம அந்தஸ்து வழங்கவும் உத்தரவிட்டது.
16 * தேசிய சினிமா விருதுகள். அறிவிக்கப்பட்டன. இதில் தங்க மீன்கள் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. தலைமுறை, வல்லினம் ஆகிய படங்களும் விருதை தட்டிச்சென்றன.
* தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணகளுடன் ஜெஊஇ என்ற சுற்றுலா தீவுக்கு சென்றது. இதில் பள்ளி மாணர்கள் சுற்றுலா சென்றனர். இந்த கப்பல் கடலில் மூழ்கியதில் 300 பேர் இறந்தனர்.
17 * சுடுகாட்டு மேறைகூரை அமைத்ததில் ஊழல் செய்து அரசுக்கு ரூ23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ கோர்ட்டு தீர்ப்பு.
18 * உத்திரபிரதேச மாநிலத்தில் வீசிய புழுதி புயலில் சிக்கி 27 பேர் பலியானார்கள்.
* ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் மேல்-சபை எம்.பி.பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் அமைச்சர் செல்கணபதி அறிவித்தார்.
19 * திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என மூத்த வக்கீல் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை அளித்து உள்ளார்.
24 * தமிழ்நாடு புதுச்சேரியில் ஓரே கட்டமாக பொதுத்தேர்தல் நடந்தது, இதில் 73 சதவீத ஓட்டு பதிவானது. தேர்தல் நாளில் விடுப்பு அளிக்காத 3 சாப்வேர் நிறுவனங்களுக்கு பூட்டு போடப்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
* பாகிஸ்தானில் போர் விமானங்கள் நடத்திய வான் தாக்குதலில் சிக்கி 24 தீவிரவாதிகள் பலியானார்கள்
25 * 2ஜி ஊழல் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200கோடி கைமீறிய விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி, எம்.பி தயாளு அம்மாள் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
26 * காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் வரதராஜர் (32) உள்பட 2 பேர் பலியானார்கள்.
27 * நடுவானில் எதிரி நாட்டு ஏவுகனைகளை வழிமறித்து அழிக்கும் அதிநவீன ஏவுகணையான பிரிதிவி சோதனை வெற்றி பெற்றது.
28 * டெல்லிமேல்-சபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 4 அ.தி.மு.க எம.பிக்கள் முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பீ செல்வராஜ், விஜிலா சத்யநாத் பதவி ஏற்றனர்.
* போலீசாரை கொன்ற வழக்கில் எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்க தலைவர் 683 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
30 * சென்னையில் இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி முகமது ஜாகீர் உசேன் கைது.
► மே 2014
2 * பாகிஸ்தான் நாட்டுக்கு உளவுபார்த்து கைதான முகமது ஜாகீர் உசேனின் நண்பர்களான இலங்கை சிவபாலன் (39) முகமது சலீம் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
4 * மாராட்டிய மாநிலம் மும்பை அருகே ராய்காட் மாவட்டத்தில் நாகோதானே சுரங்க பாதையில் பாசஞ்சர் ரெயில் சென்ற போது திடீரென தடம் புரண்டது இதில் 19 பேர் பலியானார்கள்.
* அசாம் மாநிலத்தில் வீடுபுகுந்து துப்பாக்கியால் 34 பேரை சுட்டுக்கொன்ற. தீவிரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த 2 வன இலாகாவினர் கைது செய்யப்பட்டனர்.
5 * உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த பத்ரிநாத் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது.
7 * முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக கேரள அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு.
தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
8 * கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வுசெய்ய கண்கானிப்பு குழு அமைக்க தேவையில்லை என்று கூறி அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
* சென்னைக்கு உளவாளியை அனுப்பிய நாசவேலைக்கு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
9 * தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்களை தமிழக சட்ட சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* புதிய ராணுவ தளபதியாக தல்பீரசிங் சுகாங்கை மத்திய அரசு நியமித்தது.
14 * துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 210 தொழிலாளர்கள் பலி.
15 * அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி மலைச்சாமியை நீக்கி ஜெயலலிதா உத்தரவு.
* காவிரி நடுவர் மன்ற தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.எஸ்,சவுகான் நியமனம்.
16 * தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.
18 * தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க. வில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்த்தாக வெளியான செய்தியை தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்தார்.
19 * தமிழக அமைச்சர்கள் தாமோதரன், பச்சைமால் , பி.வீ.ரமணா ஆகியோர் நீக்கப்பட்டனர். புதிய அமைச்சர்களாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி, வேலுமணி, கோகுல் இந்திரா நியம்னம். அ.தி.மு.க. பாரளுமன்ற குழு தலைவராக தம்பித்துரை நியமனம்.
* பீகார் முதல் -மந்திரியாக ஜிதன்ராம் மஞ்சி தேர்வு.
* காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட அருணாசலப் பிரதேசத்தில் முதல்-மந்திரியாக நபாம்துகி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
20 * தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கே.பி.முனுசாமி நீக்கப்பட்டார் அமைச்சர் மோகனுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.
* நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நீராவி குழாய் வெடித்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலி.
21 * குஜராத் முதல்-மந்திரியாக ஆனந்தி பென்படேல் தேர்வு செய்யப்பட்டார்.
* வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.. சென்னையிலும் பூமி அதிர்வு உணரப்பட்டது.
* மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மூத்த தலைவர்களுள் ஒருவரான உமாநாத் திருச்சியில் மரணம் அடைந்தார்.
* ஓடிசா முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் தொடர்ந்து 4-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
22 * நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
23 * ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது மனித வெடிகுண்டுகளாக வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
25 * நல்லெண்ண அடிப்படையில் இலங்கை -பாகிஸ்தான் சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
26 * உத்திரபிரதேசத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 11 பயணிகள் பலி. 100க்கும் மேற்பட்டவர்கள் காயம்.
* ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கைது.
27 * மோடி தலைமையிலான முதல்-மந்திரி சபை கூட்டத்தில் கருப்பு பணத்தை மீட்க சிறப்பு புலானாய்வு குழுவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
31 * மன்மோகன்சிங் ஆட்சியில் அமைக்கப்பட்ட மந்திரிகள் குழுக்களை கலைத்து பிரதமர் நரேந்திரமோடி அதிரடி நடவடிக்கை.
► ஜூன் 2014
1 * நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உதயமானது.
* மணிப்பூரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியான தமிழக ராணுவ வீர்ர் மோகன்குமாரின் உடல் கோவை புதூரில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
2 * ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் ராமாநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
3 * டெல்லியில் கார் விபத்தில் சிக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரிகோபிநாத் முண்டே மரணம் அடைந்தார்.
6 * பாரளுமன்ற சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7 * கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலை, தனது முழு உற்பத்தி அளவான 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
* ரோம் நகரில் மரணம் அடைந்த கார்டினல் சைமன் லூர்துசாமியின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது பின்னர் புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
8 * ஆந்திர முதல்-மந்திரியாக சந்திர பாபுநாயுடு பதவி ஏற்றார்.
9 * பாரளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஊழல் ஒழிக்கப்படும் என்றும், கருப்பு பணம் மீட்க்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
11 * தமிழகத்தில் அம்மா உப்பு விற்பனையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
14 * ரஷியாவிடம் இருந்து 1 ஆயிரம் கோடிக்கு வாங்கிய விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்கிரமாதித்யாவை, கோவாவில் நடந்த விழாவில் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
* விடுமுறை நாளில் நடந்த சிறப்பு விசாரணையில் ஓரேநாளில் 212 பேர் மீதான குண்டர்தடுப்பு காவல் உத்தரவுகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
15 * பிரதமராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்ற நரேந்திரமோடி அந்நாட்டின் மன்னர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசினார்.
16 * நடிகை குஷ்பு தி.மு.க. வில் இருதந்து விலகினார்.
17 * முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்களை பதவி விலகுமாறு மத்திய அரசு கேட்டுக்கோண்டது. அதை ஏற்று உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷி ராஜினாமா செய்தார்.
18 * ஈராக்கில் அரசு படைகளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக தீவிரவாதிகள் 40 இந்திய தொழிலாளர்களை கடத்திசெசென்றனர்.
* முல்லைபெரியாறு அணையை மேற்பார்வையிட மூவர் குழு அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
* திரூவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் (45) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
19 * சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் டெபாசீட் ரூ14ஆயிரம் கோடியை தாண்டியது என்று சுவிஸ்தேசிய வங்கியின் மத்திய குழு அறிவித்தது.
20 * மத்திய ரெயில்வே மந்திரி சதானந்தாகவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரெயில் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
* சமூக வளைதளங்களில் இந்தி மொழி பயன்படுத்த மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடும் எதிர்ப்பின் காரணமாக இந்தி பேசாத மாநிலங்களுக்கு அரசின் உத்தரவு பொருந்தாது என மத்திய அரசு விளக்கம் அளித்தது.
25 * இலங்கையில் நடைப்பெற்ற மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட ஐ.நா. விசாரணை குழு அமைக்கப்பட்டது.
26 * பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க தமிழகத்தில் 10 அம்மா மருந்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
* டெல்லி மேல்சபை உறுப்பினராக அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி வெற்றி.
30 * வெளிநாட்டு செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி 23 ராக்கேட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த்து. தமிழ்நாடு அரசு பணி வேர்வில் விதிமுறையை பின்பற்றாத 83குரூப்-1 அதிகாரிகள் நியமனத்தை ரத்து சென்னை ஐ கோர்ட்டு உறுதி செந்த்து. ஊழல் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டதால் மேற்கு வங்காள மாநில கவர்னர் எம.கே. நிரயணன் ராஜினாமா செய்தார்
► ஜூலை 2014
1 * கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்.
* மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு எழுதப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2 * கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் மனு அதிர்ச்சி அளிப்பதாகவும், திருத்தப்பட்ட பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்.
3 * சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்தில் 61 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
8 * பாரளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை மந்திரி சாதானந்த கவுடா தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டுக்கு 5 ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.
9 * ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்க மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
* பாரதீய ஜனதா அரசின் முதல் பட்ஜெட் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். அதில் ரூ.22,200 கோடிக்கு வரிச் சலுகைகளையும், ரூ7,525 கோடிக்கு புதிய வரிகளையும் அறிவித்தார்.
15 * காவிரி நடுவர் மன்றம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் கூடியது. இதில் காவிரியில் கூடுதல் நீரை திறந்து விடக்கோரும் தமிழக அரசின் மனு மீதான விசாரணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுகும்படி காவிரி நடுவர் மன்றம் ஆலோசனை வழங்கியது. வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
17 * மலேசிய பயணிகள் விமானம் ரஷியா அருகே பறந்தபோது ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியானார்கள்.
* சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி முல்லைபெரியாறு அணையில் நீர்மட்டம் 35 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியாக உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்காக அணையில் மதகுகள் இறக்கப்பட்டன.
19 * தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் நீக்கப்பட்டார்.
21 * காவிரி நடுவர் மன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் அரசு புதிய மனு தாக்கல் செய்தது.
23 * ராஜீவ் கொலைகைதிகள் 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு முன் தொடங்கியது.
26 * மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பொது மக்கள் ஆலோசனைகள் கூற தனி இனையதளத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
30 * கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004 ஆண்டு நடந்த தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில் பள்ளி நிறுவருக்கு ஆயுள் தண்டனையும், தலைமை ஆசிரியை உள்பட 8 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
► ஆகஸ்ட் 2014
1 * தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி முதல் -அமைச்சர் ஜெயல்லிதா கடிதம் எழுதுவதை கொச்சையாக குறிப்பிட்டு இலங்கை ராணுவ அமைச்சக அதிகாரபூர்வ இணைய தளத்தில் அவதூறு கட்டுரை வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இலங்கை பகிரங்க மன்னிப்பு கேட்டது.
2 * வங்கி விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்துக்கு கடன் கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுதிர்குமார் ஜெயினை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
3 * சீனாவில் ஏற்பட்ட பூரி அதிர்ச்சிக்கு 367 பேர் பலியானார்கள்.
6 * தனியார் கிளப், சினிமா தியேட்டர் மற்றும் உணவகங்களில் வேட்டிக்கு தடைவிதித்ததால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க வகை செய்யும் புதிய சட்டத்தை சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
* மிசோராம் மாநில கவர்னர் கமலா பெனிவாலை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது.
7 * மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் வேட்பாளாராக அறிவிக்ககோரிய தி.மு.க. அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம் தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டார்.
8 * காங்கிரஸூக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க கோரி தாக்கல் செய்யபட்ட பொது நல மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கூறியது.
10 * இந்தியாவில் வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டும் வரும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சம்பத் சென்னையில் கூறினார்.
12 * ஹாலிவுட் பட உலகின் கொடி கட்டி பறந்த நகைச்சுவை நடிகர் வில்லியம்ஸ் மர்மான முறையில் இறந்தார். அவரது மறைவுக்கு ஓபாமா இரங்கல் தெரிவித்தார்.
13 * அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை பாராளுமன்ற துணைசபாநாயகராக ஒருமனதாக தேர்வு.
* இந்திய சுதந்திரதினத்தையொட்டி இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
* இந்திய வம்சவளி பேராராசியரான மஞ்சுள் பார்கவாவுக்கு கணிதத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
14 * காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சென்னையை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
15 * ரூ.1 லட்சம் காப்பீட்டு திட்டத்துடன் ஏழைகளுக்கு வங்கி கணக்கு புதிய திட்டத்தை சுதந்திர விழாவில் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.
18 * அ.தி.மு.க. மருத்துவ அணி தலைவர் பொறுப்பில் இருந்து மைத்ரேயனை அதிரடியாக நீக்கி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
* திரைப்பட சான்றிதழ் வழங்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமாரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
* காஷ்மீர் மாநிலத்தில் எல்லை ஒட்டிய 20 இடங்களில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும் கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் நடத்தியது.
19 * பாரளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடியாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்ட வட்டமாக அறிவித்தார்.
* பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
* போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
20 * பிரதமர் பதவியில் இருந்த நவாஸ்ஷெரீப் விலகக்கோரி பாகிஸ்தான் பாரளுமன்றத்தை இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்
21 * கேராளாவில் 700-க்கும் மேற்ப்பட்ட மது பார்களை மூட காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்து உள்ளது. ஞாயிற் தோறும் மதுவுக்கு விடுமுறை விடவும் திட்டமிட்டுள்ளது.
23 * பாகிஸ்தான் ராணுவம் 23 இந்திய நிலைகள் மீது நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானார்கள் 7 பேர் காயம் அடைந்தார்கள்.
24 * மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மாராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் ராஜினாமா செய்தார்.
25 * முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. காந்திபடத்தை இயக்கிய பிரபல இயக்கனர் ரிச்சன் அட்டன் பீரோ(90) மரணம்.
26 * ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சென்னையில் கம்பெனிகள் பதிவாளர் டாக்டர் மனுநீதிசோழனை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
28 * ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வசதியுடன் 71/2 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தொடங்கிவைத்தார்.
29 * அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 7-வது முறையாக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
► செப்டம்பர் 2014
02 * முன்னாள் அட்டர்லி ஜெனரல் வாகன்வதி மரணம்.
* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. இயக்கனர் ரஞ்சித் சின்கா புதிய சர்ச்சையில் சிக்கினார். ஊழலில் தொடர்புடையவர்களை அவர் வீட்டில் சந்தித்தாக சுப்ரீம் கோர்ட்டில் புகார்.
03 * வெயிட்டேஜ் முறைக்கு எதிராக தொரப்பட்ட வழக்கில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமணம் செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு. விபசாரத்தில் ஈடுப்பட்டதாக பிரபல இந்தி நடிகை ஸ்வேதா பாசு போலீசில் சிக்கினார்.
05 * சினிமா பைனான்சியர் ரொனால்ட்பீட்டர் பிரின்சோ(36) கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த துனை நடிகை சுருதி சந்திரலேகா பெங்களூரில் கைது.
* சுப்ரீம் கோர்ட்டில் புதிய நீதிபதியாக கர்நாடகத்தை சேர்ந்த எச்.எல். தத்து நியமிக்கப்பட்டார்.
06 * பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி நீக்கப்பட்டு பி.வி ரமணா மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
* காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 180 பேர் பலியானார்கள்.
07 * காஷ்மீர் மழை சேதத்தை பார்வையிட்ட பிரதமர் அந்த மாநிலத்துக்கு வெள்ளநிவராண நிதியாக 1,000 கோடி வழங்கினார்.
* நீண்டகாலம் விசாரணைக்கைதியக இருப்பவர்கள் தண்டனை காலத்துக்குமேல் சிறையில் இருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து தமிழக சிறையில் உள்ள 2,500 கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.
10 * சென்னையில் பாகிஸ்தான் உளவாளியாக இலங்கையை சேர்ந்த அரூண் செல்வராசனை போலீசார் கைது செய்தனர்.
14 * சிரியாவில் பிணைக்கைதியாக இருந்த இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைத்துண்டித்து கொடூரமாக கொன்றனர்.
18 * பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் டெல்லியில் 90 நிமிடங்கள் சந்தித்து பேசினார்கள், அப்போது இந்தியா- சீன எல்லை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கானவேண்டும் என்று சீன அதிபரிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
* கிரானைட் முறைகேடு பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சாகாயம் நியமிக்கப்பட்டதற்கு எதிரான தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
19 * உடல் நலக்குறைவால் மாண்டலின் இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் (45) மரணம். அடைந்தார்.
* தனிநாடு குறித்த கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள் தங்களது பகுதி தொடர்ந்து இங்கிலாந்துடன் இணைந்து இருக்கவேண்டும் என்று ஓட்டு அளித்தனர்.
* இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ரிச்சர்ட் ராகுல் வர்மா என்ற இந்திய வம்சாவானியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார்.
22 * தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் நடந்த தேர்தலில் கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.
23 * மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா மற்றும் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 * செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.
* முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவு. பிறப்பித்தது.
25 * தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனளாகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் சலுகை மதிப்பெண் வழக்கில் அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
* மாராட்டிய சட்ட சபை தேர்தலில் தொகுதி பங்கீடு பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் பாரதீய ஜனாதா மற்றும் சிவசேனா கட்சிகளின் நீண்டநாள் கூட்டணி முறிந்தது.
26 * மாராட்டியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதைத் தொடர்ந்து முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ராஜினாமா செய்தார்.
* 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க புறப்பட்டு சென்றார்.
27 * சொத்துகுவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100கோடி அபாராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனால் முதல்-அமைச்சர் பதவியை இழந்த அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சசிகலா,சுதாகரன்,இளவரசி, ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பஸ்ஸூக்கு தீவைக்கப்பட்டது.
28 * அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்-அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் ஒரு மனதாக தேர்வு.
29 * பெங்களூர் தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
* தேசிய மகளிர் ஆணையத் தலைவராக லலிதாகுமாரமங்களம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
30 * ஜெயல்லிதாவுக்கு ஆதரவாக சென்னையில் நடிகர்கள்-டைரக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓபாமா விருந்து அளித்தார்.
* இலங்கை சிறையில் உள்ள 76 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார்.
► அக்டோபர் 2014
03 * தொழில் அதிபர் பொள்ளாச்சி மாகாலிங்கம் மரணம்.
* பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த தசரா விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியானார்கள்.
* திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் பேசிய பிரபல பாடகர் ஜேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்று கூறியதற்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
04 * ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கருப்பு அணிந்து அ.தி.மு.க. எம.எல்.ஏக்கள் சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர்.
* பிரதமர் நரேந்திரமோடியின் அமெரிக்க பயணத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த மாற்று விமானத்தில் கையெறி குண்டு கண்டுபிடிப்பு.
05 * தமிழ் நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தனியார் பஸ் உரிமையாளார்கள் போரட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.
07 * சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு.
08 * கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்க் குடியிருப்பில் மத்திய தொழில் பாதுகாப்புடன் வீர்ர் விஜய்பிரதாப்சிங் தனது துப்பாக்கியால், பணி ஒதுக்கீடு செய்யும் ஏட்டு மோகன் சிங்கை சுட்டுக்கொன்றார். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இனஸ்பெக்டர் கணேசன், ஏட்டு சுப்புராஜ் ஆகியோரையும் சுட்டுக்கொன்றார்.
09 * உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனுதாக்கல் செய்தார்.
* இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு நாவல் ஆசிரியர் பேட்ரிக் மோடியானோவுக்கு (69) கிடைத்தது.
11 * தென் இந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகாவும் செயலாளாராக குஷ்புவும் தேர்வு செய்யப்பட்டனர்.
12 * வங்க கடலில் மையம் கொண்ட ஹூட்ஹூட் புயல் ஆந்திராவை 195 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
13 * பிரதமர் நரேந்திரமோடியையும் அவரது திட்டங்கைளையும் பாராட்டி பேசிய முன்னாள் மந்திரி சசிதரூர் காங்கிரசின் செய்தி தொடர்பான பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
* இலங்கையில் யாழ்ப்பாணம்-கொழும்பு இடையே நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி ரெயில் சேவையை அதிபர் ராஜபக்சே மீண்டும் தொடங்கி வைத்தார்.
14 * ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செய்யது என்ற வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சுவிதாஸ் சுட்டுக்கொன்றார்.
* சொத்து பிரச்சினை காரணமாக திரூவள்ளூர் அருகே அமைச்சர் ரமணாவின் சகோதர்ர் ரவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
* ஆந்திராவில் புயல் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி ரூ.1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்தார்.
16 * விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
17 * சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதாவை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைதண்டனை நிறுத்திவைத்தது,
19 * தேர்தல் நடந்த மாரட்டியம், அரியானா மாநிலங்களில் நடைப்பெற்ற ஓட்டு எண்ணிக்கையில் அரியானாவில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தது. மாராட்டியத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
* ஜெயலலிதவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால்அதிர்ச்சி அடைந்தவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் 219 பேர்களின் குடும்பங்களுக்கு தலாரூ.3லட்சம் வழங்கப்படும் என்றும், யாரும் உயிரை மாய்த்துகொள்ளும் செயலில் ஈடுபடவேண்டாம் என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
21 * தென் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பழனி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
* பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மரணம்.
* அரியானா முதல்-மந்திரியாக 60 வயது மனோகர்லால் கட்டார் தேர்வு.
23 * பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மரணம்
25 * உலகமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை(42) நியமிக்கப்பட்டார்.
27 * வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய தொழில் அதிபர்களில், தாபர் இந்திய குழுமத்தின் முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன், சுரங்க அதிபர் ராதா சதீஷ் டிம்லோ, குஜராத் தங்க வியாபாரி மதன்லால் லோதியா ஆகியோரது பெயர்களை மத்திய அரசு வெளியிட்டது.
28 * மும்பையில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மராட்டிய மாநில முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு.
29 * கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான வழக்கில் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 பேர் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
* தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பதவியேற்றார்.
* இலங்கை தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் சுமார் 200 பேர் பலியானார்கள்.
30 * தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்தார்.
31 * கடந்த 2010-ஆம் அண்டு பனாமா நாட்டு கப்பலை சிறைபிடித்த சோமாலிய கொள்ளையர்கள் 15 பேரை சிறைபிடித்தனர். அவர்களிடம் பினைக்கைதிகளாக இருந்து தூத்துக்குடி மாவட்ட மாலுமி உள்பட இந்திய மாலுமிகள் 7 பேரை விடுவித்தனர்.
* பல்லாயிரம் பேரை பலி வாங்கிய போபால் விஷ வாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் மரணம்.
► நவம்பர் 2014
01 * தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி புதிய தலைவராக ஈ.வி.கே .எஸ் இளங்கோவன் நியமனம்.
02 * பாகிஸ்தான் வாகா எல்லையில் நடந்த தற்கொலை படைதாக்குதலில் 61 பேர் பலியானார்கள்.
* கேரளாவில் மதுபார்களை திறக்க ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாக நிதி மந்திரி கே.எம் மணி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாராணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா அறிவித்தார்.
03 * புதிய கட்சி தொடங்குவதாக ஜி.கே.வாசன் அறிவித்ததால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி கே வாசனை நீக்கி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தது.
04 * கிராணைட் முறைகேடுகளை விசாரணை நடத்துவதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு.
06 * இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி சென்னை, திருவள்ளூர் ராமநாதபுரம் உள்பட 13 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம்.
* விசாகபட்டினத்தில் நடுக்கடலில் பயிற்சியில் ஈடுப்பட்ட இந்திய போர்க்கப்பல் கடலில் மூழ்கி ஒருவர் பலியானார். 4 பேர் மாயமானார்கள்.
08 * நடிகர் மீசை முருகேசன் மரணம்
* கோவா முதல் மந்திரியாக பால்சேகர் பதவி ஏற்றார்.
09 * பிரதமர் நரேந்திரமோடி புதிதாக 21 மந்திரிகளை நியமித்தார். தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு தரைவழிச்சாலை போக்குவரத்து கப்பல் போக்குவரத்துதறை அளிக்கப்பட்டது.
* ஜெயலலிதா பதவி இழந்ததால் ஸ்ரீரங்கம் தேர்தல் தொகுதி காலியாக உள்ளது என்று தமிழக தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலாளர் ஜமாலுதின் தகவல் அனுப்பினார்.
10 * தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்பது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் பேசினார்.
11 * இந்திய சினிமா நுற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
* 5 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை எதிர்த்து இலங்கை கோர்ட்டில் இந்திய மேல்முறையீடு செய்தது.
* சத்திஷ்கர் மாநிலம் பென்தாரி கிராமத்தில் நடந்த சிறப்பு முகாமில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக 4 டாக்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
* குடிநீர் திட்டத்துக்காக 45 டி.எம் சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகள் கட்டப்படும் என்ற கர்நாடக வளத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
12 * மாரட்டிய சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதால் பாரதீய ஜனாதா அரசு தப்பியது. சட்டசபையை புறக்கனித்து அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
* ஐரோப்பிய யூனியன் அனுப்பிய ரொசட்டா ராக்கெட்டில் உள்ள ஹீலே விண்கலம் ஒன்று எரிக்கல்லில் தரை இறங்கியது இதுவே முதல் தடவையாகும்.
13 * மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்த நடிகை மம்தாகுல்கர்னி (42) ஆப்பிரிக்க நாடான கென்யாவில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதானார்.
* காஷ்மீர் மாநிலம் மார்சிசில் போலி என் கவுண்டரில் 3 மாணவர்களை கொல்லப் பட்ட வழக்கில் 7 ராணுவ வீர்ர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
17 * ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் என் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை என முட்கல் கமிட்டி அறிக்கையில் தகவல் வெளியானது.
* முல்லைபெரியாறு அணைக்கு கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. பி.ஜிமோன் அத்துமீறி நுழைந்தார். அதிகாரி * மாதவன் தாக்கப்பட்டார்.
18 * காவிரியில் கர்நாடக அணை கட்ட தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த்து.
* தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 14-ந்தேதி முதல் 17- வரை அடுத்தடுத்து 12 குழந்தைகள் இறந்தன. இதுபற்றி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
* 5 மீனவர்கள்தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் இந்தியாவின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு திரும்ப பெறப்பட்டது.
* அரியானா மாநிலத்தில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற சாமியார் ராம்பாலை ஒரு வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கைது செய்ய சென்ற போலீசாருக்கும் அவரது ஆதரவாளார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 200 பேர் காயம் அடைந்தனர்.
19 * அரியானா ஆசிரமத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பிறகு சாமியார் ராம்பாலை கைது செய்தனர்
20 * 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையில் இருந்து விலகி இருக்குமாறு இயக்குனர் ரஞ்சித் சின்காவுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
* தமிழகத்தில் காமராஜர் பெயரை சொல்லி தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்ற கார்த்தி சிதம்பரத்தின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டது.
* 35 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக எட்டியது விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
* சென்னையல் ரூ.3.267 கோடியில் மோனோ ரெயில் கொண்டு வர மத்திய அரசு அனுமதி அளித்தது.
21 * அமெரிக்காவில் சட்டவிரோதோமாக குடியேறியவர்களில் 50 லட்சம் பேருக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்க ஜனாதிபதி ஒபாமா அதிரடி உத்தரவு.
24 * செக் மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து ஐதாரபாத் கோர்ட்டு உத்தரவிட்டது.
* காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான முரளி தியோரா மரணம் அடைந்தார்.
27 * காஷ்மீரில் ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியானார்கள்.
* ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டிகுன்கா இடமாற்றம் செய்யப்பட்டார்.
28 * தமிழகத்தை உளவு பார்த்த வழக்கில் ஐ.எஸ்.எஸ். உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
* திருவள்ளூவர், பாரதியார் எழுதிய நூல்கள் இந்திய முழுவதும் உள்ள பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.
* பயணிகளுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்த ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கபடும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
* மோடியை கடுமையாக விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று பா,ஜனதா தேசிய செயலாளர் எச் ராஜா எச்சரிக்கை விடுத்தார், இதற்க கருணாநிதி டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
► டிசம்பர் 2014b
01 * சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது நக்ஸலைடுகள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவத்தினர் பலியானார்கள்
02 * தமிழக அரசு தலைமைச்செயலாளர் மோகன் வர்க்கீஸ் மாற்றப்பட்டு புதிய தலைமை செயலாளாராக கே.ஞானதேசிகன் நியமனம்.
* மாரட்டிய முன்னாள் முதல் மந்திரி ஏ.ஆர்.அந்துலே மரணம்.
03 * முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
* எகிப்து நாட்டில் 13 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் 188 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
04 * சமீபத்தில் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர் மரணம்
05 * காஷ்மீரில் சட்ட சபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் திவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் உள்பட 23 பேர் பலி.
* கச்சத்தீவை மீட்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அனைத்து கட்சிகள் ஆதரவோடு நிறைவேறியது.
* இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் இருந்த நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
06 * தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 15 லட்சம் வழக்குகளும் தீர்வுகாணப்பட்டது.
07 * இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிசாட் 16 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
08 * பா.ஜனாதா கூட்டணியில் இருந்து அதிபர் ம.தி.மு.க விலக்குவதாக கட்சியின் உயர் நிலைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
09 * பாரதீய ஜனாதா கூட்டணியில் இருந்து பா.ம. க விலக வேண்டும் என்று சுப்ரமணிய சாமி கூறினார்.
* திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ம.தி.மு.க. வினர் கருப்பு கொடி காட்டினர்.
* இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருந்து மேலும் 2 தமிழ் மந்திரிகள் விலகினார்கள்.
10 * தற்கொலை முயற்சி இனி தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. அதற்கான சட்டபிரிவை நீக்க மத்திய அரசு முடிவு.
* இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
11 * தமிழ்நாட்டில் அனைத்து மின் நுகர்வோருக்கும் மின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.
* கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க டெல்லியில் மோடி-புதின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
12 * சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.4,479 கோடி கருப்பு பணம் பற்றிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
* சாராதா சிட்பண்ட் பல கோடி வழக்கில் மேற்கு போக்குவரத்து மந்திரி மதன்மித்ரா கைது செய்யப்பட்டார்.
13 * ஐ.எஸ் அமைப்புக்கு இணைய தள மூலம் ஆட்களை நிரப்பும் குற்றச்சாட்டின் பேரில் பெங்களூருவில் மெஹதி என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
15 * லண்டன் நகரில் நடந்த உலக அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த மருத்துவகல்லூரி மாணவி ரோலின் ஸ்டிராஸ் தேர்வு பெற்றார்.
18 * சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீடித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
* மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஜாகியுர் ரகுமான் லக்விக்கு பாகிஸ்தான் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
19 * லக்விக்கு ஜாமீன் வழங்கியதை கண்டித்து இந்திய பாரளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, லக்வியின் ஜாமீனை பாகிஸ்தான் அரசு ரத்து செய்து, மேலும் 3 மாதங்கள் சிறையில் அடைத்தது.
* பாகிஸ்தான் 2 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்ட்டது.
20 * சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனாதா தலைவர் அமித்ஷா முன்னிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நடிகை காயத்ரி ரகுராம், டாக்டர் லட்சுமி பாலாஜி ஆகியோர் பா ஜனாதாவில் இணைந்தனர்.
* நடிகர் நெப்போலியன் சென்னையில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.
23 * ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாயின. ஜார்கண்டில் பா.ஜாதா கூட்டணி ஆட்சியை பிடித்தது. காஷ்மீரில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை, பாஜனாதாவுக்கு 2-வது இடம் கிடைத்தது.
24 * முன்னாள் பிரதமர் போரட்ட தியாகி மதன்மோகன் மாளவியா ஆகியோர்க்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
26 * சுனாமி நினைவு அனுசரிக்கப்பட்டது. சுனாமி தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு கடற்கரையில் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
திருச்சி சிவாவும், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜனும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.