Khub.info Learn TNPSC exam and online pratice

Q1.
► 2015
► ஜனவரி 2015
01 ◘ தமிழகத்தில் கியாஸ்இனைப்புகளுக்கு நேரடி மானிய திட்டம் அமலுக்கு வந்தது.
◘ இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மத்துக்கு மாறி கீழக்கரையை சேர்ந்த ஜெபருன்னிசா வை திருமணம் செய்து கொண்டார்.
◘ மத்திய திட்ட கமிஷனுக்கு பதிலாக 'நிதி ஆயோக்' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரதமர் இதன் தலைவராக இருப்பார்.
◘ சீனாவின் ஷங்காய் நகரில் பத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி.
◘ சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்க்கும் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்கும் தனி நீதிபதியாக சி,ஆர் குமாரசாமியை நியமனம் செய்து கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்

02 ◘ மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் வந்த படகை நடுக்கடலில் கடலோர காவல் படையினர் மடக்கினர். தீவிரவாதிகள் தீ வைத்ததால் படகு வெடித்து சிதறி அதில் பயணம் செய்த 4 பேரும் பலியானர்கள்.
◘ இந்திய விண்வேளி ஆராய்ச்சி மைய தலைவர் ராதா கிருஷ்ணன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இடைக்கால தலைவாரக குஜராத்தை சேர்ந்த விஞ்ஞானி கைலேஷ் நாயக் நியமிக்கப்பட்டார்

04 ◘ நிதி ஆயோக் துணைத் தலைவராக அரவிந்த் பனகரியா நியமனம்.
05 ◘ போடி அருகே ரூ1.500 கோடி செலவிலான ந்யூட்ரினோ ஆராய்ச்சி மையத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
06 ◘ காங்கிரஸ் எம்,பி சசிதருரின் மனைவி கனந்தா புஷ்கர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக டெல்லி போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
◘ சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அன்பழகன் மனு
07 ◘ பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்நகரில் அந்நாட்டை சேர்ந்த சார்லி ஹெப்டோ என்ற வாரப்பத்திரிக்கை அலுவலகத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் ஈடுபட்ட அண்ணன் - தம்பியை சில யாட்களுக்கு பின்னர் போலிசார் சுட்டுக்கொன்றனர்.
08 ◘ வருமான வரித்துறை வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.
◘ எந்த கட்சியும் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை திரட்ட முடியாததால் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் வோரா சிபாரிசு செய்தார்.
09 ◘ தி.மு.க தலைவாரக கருணாநிதி 11-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
◘ காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தபட்டது
10 ◘ சென்னையில் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரி இணை கமிஷனர் ஷல்லாங் யாதோனை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர்.
11 ◘ பாகிஸ்தானில் பஸ்சும், டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 59 பயணிகள் உடல் கருகி பலி.
12 ◘ இலங்கை அதிபர் சிறிசேனா முன்னிலையில் 27பேர் கொண்ட மந்திரிசபை பதவி ஏற்றது.
16 ◘ உள்நாட்டிலேயே தயாரித்த தேஜாஸ் போர் விமானம் படையில் சேர்ப்பு.
◘ நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி பா.ஜனதாவில் இணைந்தார்
19 ◘ ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பாவனிசிங் நீடிக்க தடையில்லை என கர்நாடக ஐகோர்ட்டு அறிவித்தது
20 ◘ நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை. நிலக்கரி சுரங்க முறை கேட்டில் கைதாகி ஜெயில் இருந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டிக்கு 40 மாதங்களுக்கு பின் ஜாமீன் கிடைத்தது.
◘ தமிழர் பகுதிக்கு அதிகாரிப்பகிர்வு அளிக்க வகைசெய்யும் 13-வது அரசியல் சட்ட திருத்தம் பிரதமர் ரனில்விக்ரமசிங்கே அறிவித்தார்
22 ◘ கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் ஐ.பி.எல் அணியுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது
23 ◘ சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா உடல்நலக்குறைவால் மரணம்.
24 ◘ கிருஷ்ணகிரி மாவட்டம் ராம்புரம் கிராமத்தில் பரோடா வங்கிக்குள் முகமூடி கும்பல் புகுந்து லாக்கரை உடைத்து ரூ.12கோடி மதிப்புள்ள 6033 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
25 ◘ அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா 3 நாள் அரசு பயணமாக தனது மனைவி மிச்செல்லுடன் டெல்லி வந்தார்.
◘ டெல்லியில் ஓபாமா-மோடி பேச்சுவார்த்தையில் அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டது
26 ◘ மிஸ் யுனிவர்ஸ் அழகியாக கொலம்பியன் பவுலினா வேகா தேர்வு செய்யப்பட்டார்.
27 ◘ நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பெற்ற வாக்குமூலத்தை சி.பி.ஐ கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டை மறுத்து உள்ளார்
29 ◘ இந்திய வெளியுறவுத்துறை செயலாளாராக ஜெய் சங்கர் பதவி ஏற்றார்.
30 ◘ காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் விலகினார். அவர் ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
◘ பாகிஸ்தான் சிந்து மாகான மசூதியில் குண்டு வெடித்ததில் 50 பேர் பலி.
◘ ஜெயந்தி நடராஜனின் ராகுல் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்
31 ◘ ராணிப்பேட்டை சிப்காட்டில் கழிவுநீர் சேமிப்பு தொட்டி சுவர் இடிந்து விழுந்து வேளியேறிய தண்ணீரில் மூழ்கி 10 பேர் பலி.
◘ சாராதா நிதி நிறுவன மோசடியல் முன்னாள் மத்திய மந்திரி மாதாசிங்கை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
◘ அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி -5 ஏவுகனை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக நடந்தது
► பிப்ரவரி 2015
01 ◘ எனக்கு வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்தார்
04 ◘ சாரதா நிதி நிறுவன மோசடி பற்றிய சி.பி.ஐ. விசாராணையில் தலையிட்ட குற்றச்சாட்டில் மத்திய உள்துறை செயலாளர் அனில் கோசுவாமியை மத்திய அரசு பதவி நீக்கம் செய்து விட்டது.
◘ தைவான் நாட்டில் விமானம் ஆற்றில் விழந்ததில் 26 பயணிகள் பலியானர்கள்
05 ◘ ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இந்தியாவில் தேடப்படும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை விதித்து இலங்கை கோட்டு உத்தரவிட்டது.
◘ வேட்பாளர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை வைத்தால் அவர்கள் தேர்தலில் வேற்றி பெற்று இருந்தாலும் அந்த தேர்தல் முடிவு செல்லாததாக அறிவிக்கப்பட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
◘ சராதாநிதி நிறுவன மோசடியில் கைதான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிரிஞ்சாய் போஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்
06 ◘ ரஜினிகாந்த் பற்றி அவதுறாக சித்தரித்து எடுக்கப்பட்ட நான் தான் ரஜினிகாந்து என்ற இந்தி படத்தை வெளியிட நிரந்தரமாக தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
◘ பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளத்தில் மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. முதல் - மந்திரி பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மாஞ்சி திட்டவட்டமாக அறிவித்தார்
07 ◘ முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.பி.பி. சாமியின் மகன் இனியவன் தூக்குப்போட்டு தற்கொலை.
09 ◘ பீகாரில் முதல்மந்திரி மாஞ்சி ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
◘ சுவீஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் வெளியானது
11 ◘ பீகாரில் ஆட்சி அமைக்க 130 எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்தார் நிதிஷ்குமார்.
◘ ஜெயலலிதா அப்பீல் வழக்கில் அரசு வக்கீல் பாவானி சிங்கை நீக்க கோரிய அன்பழகனின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது
14 ◘ தமிழகம் முழுவதும் லோக் அதாலத் மூலம் 29 ஆயிரத்து 163 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.450 கோடிக்கு சமரசம் செய்யப்பட்டது.
15 ◘ இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இலங்கை அதிபர் சிறிசேனா டெல்லி வந்தார்.
16 ◘ ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி தி.மு.க வேட்பாளரைவிட 96 ஆயிரத்து 516 வாக்குகள்
வித்தியாசத்தில் அமோக வேற்றி பெற்றார். 5 ஆயிரம் ஓட்டு பெற்ற பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சி டெபாசிட்டை இழந்தது.
◘ எகிப்து நாட்டினை மரபு வழி கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவில் தலையை துண்டித்து கொலை செய்தனர்
18 ◘ பழம் பெரும் பட அதிபர் ராமா நாயுடு மரணம்.
19 ◘ டெல்லியில் பெட்ரோலிய அமைச்சக ஆவணங்களும் திருடப்பட்டதாக தெரியவந்தது. வழக்கில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் 5 பேர் கைதானார்கள்.
20 ◘ ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை ஆவணங்களுடன் திருடப்பட்டதாக தெரியவந்தது. இந்த வழக்கில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் 5 பேர் கைதானார்கள்.
◘ மத்திய அரசின் அனுமதி தாமாதமாவதால் நாளந்தா பல்கலைகழக வேந்தராக 2-வது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என்று அமர்தியாசென் கடிதம் அனுப்பினார்.
◘ சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீல் பாவனி சிங்கை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் மேல்முறையீடு செய்தார்.
◘ ஓபாமா வருகையின் போது மோடி அணிந்திருந்த சூட் ரூ.4.31 கோடிக்கு ஏலம்போனது. அதை குஜராத்தை சேர்ந்த வைரவியாபாரி வாங்கினார்.
22 ◘ ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சீனஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டார்.
◘ பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமீர் பதவியேற்றார். தேர்தலில் ஏற்ப்பட்ட தொடர் தோல்விகள் காராணமாக காங்கிரஸ் கட்சியில் துணைதலைவர் ராகுல்காந்தி சில வாரங்கள் அரசியலில் இருந்து விடுமுறை எடுப்பதாக அறிவிப்பு.
◘ சினிமா டைரக்டர் ஆர்.சி.சக்தி மாரடைப்பால் மரணம்
24 ◘ நாடுமுழுவதும் பாரம்பரியம் மற்றும் பழமையானகோவில்களில் தஞ்சை பிரகதீஸ்வரர் மற்றும் மாமல்லபுரம் கடற்கரைகோவில்கள் தேர்வு செய்யபட்டது
25 ◘ உழல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதவி செய்ததால் மத்திய அரசின் கட்டளையை ஏற்று மத்திய பிரதேச கவர்னர் ராம்நரேஷ் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
◘ ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் சென்னை வந்தார்.
◘ ஊழல் வழக்கில் ஆஜராகாத காரணத்தால் வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு டாக்கா தனிக்கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
26 ◘ ரெயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக உயர்த்தப்பட்டது. பாரளுமன்றத்தில் எதிர்கட்ச்சிகளை விமர்ச்சித்த்தற்காக மத்திய மந்திரி வெங்கையாநாடு மன்னிப்பு கேட்டார்
27 ◘ அரசு வழங்கும் மானியங்களை ஏழைகளைவிட வசதி படைத்தவர்கள் தான் அதிகம் பெறுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
◘ ஆக்ரா அருகே தமிழ்நாடு எக்பிரஸ் ரெயிலில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் பயணிகளை தாக்கி கொள்ளையடித்தனர்
28 ◘ கருப்புபணத்தை பதுக்கிவைப்பவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
◘ தி.மு.க.வை கட்டிக்காக்க வேண்டும். 6-வது முறையாக முதல் - அமைச்சராக வர விருப்பம் இல்லை என மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கருணாநிதி பேசினார்.
◘ ரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சனம் செய்து வந்த எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ட்சோல் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு ஓபாமா கண்டனம் தெரிவித்தார்.
◘ பிரபல அமெரிக்க நடிகர் லியனோர்டு நிமாய் மரணம்
► மார்ச் 2015
01 ◘ காஷ்மீர் முதல் மந்தியாக முப்திமுகமது சயீது பதவி ஏற்றார். விழாவில் பிரதமர் நரந்திரமோடி கலந்து கொண்டார்.
02 ◘ கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாந்த் பூஷன் போர்க்கொடி உயர்த்தியதால் ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
04 ◘ திகார் ஜெயிலில் மருத்துவ மாணவி கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி எடுக்க பி.பி.சி தொலைக்காட்சியை அனுமதித்தற்கு பாரளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து அந்த பேட்டியை ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு தடை விதித்தது
05 ◘ ஆசிரியர் தேர்வு ஊழல் தொடர்பாக அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிராகாஷ் சவுதாலாவுக்கு விசாரணை கோர்ட்டு வழக்கில் 10 ஆண்டு ஜெயிலில் தண்டனையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.
◘ டெல்லி கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை தடையை மீறி பி.பி.சி. ஒளிபரப்பியதால் அந்த நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது
06 ◘ கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டு தரமாட்டோம் என்று இலங்கை அதிபர் அறிவிப்பு.
◘ அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம். அவர் வகித்து வ.ந்த விவசாய இலாகா ஆர் வைத்தியலிங்கத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது
08 ◘ ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரக அருண் குமார் சிங் நியமனம்.
◘ எல்லைதாண்டும் மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே
◘ வருத்தம் தெரிவித்ததாக டெல்லி மேல்சபையில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் கூறினார்
10 ◘ நிலம் கையகப்படுத்தும் மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியது.
11 ◘ நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு சம்மன் அனுப்பியது.
12 ◘ ஆவண திருட்டு ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.
இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.60லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
◘ நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் முழு ஆதரவு தெரிவிக்க மன்மோகன்சிங் வீட்டிற்கு சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்றார்.
◘ டெல்லி மேல்-சபையில் காங்கிஸ் அ.தி.மு.க. ஆதரவுடன் காப்பீட்டு மசோதா நிறைவேறியது
13 ◘ கொழும்பு சென்ற பிரதமர் நரந்திரமோடி அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார்.
◘ காங்கிரஸ் மூத்த தலைவர் கிள்ளிவளவன் சென்னையில் மரணம்.
◘ கேரள சட்டசபையில் ஊழல் வழக்கில் சிக்கிய நிதி மந்திரி மணி பட்ஜெட்டை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதலில் ஈடுப்பட்டனர். இதில் 20 எம்.எல்ஏக்கள் காயம் அடைந்தனர்
14 ◘ மேற்கு வங்காளத்தில் ஒரு பள்ளிக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 75 வயது கன்னியாஸ்திரியை கற்பழித்து விட்டு ரூ.13 லட்சத்தை திருடி சென்றனர்.
◘ இங்கிலாந்து பாரளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் டேவிட் கேமரூன் திறந்து வைத்தார்
16 ◘ மத்திய-மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவதற்காக ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
17 ◘ நிலம் கையகப்படுத்தும் மசோதாவை தடுத்து நிறுத்தக்கோரி ஜனாதிபதி பிராண்ப் முகர்ஜியிடம் 14 கட்சியினர் மனு கொடுத்தனர்
18 ◘ ஓசூரில் தேர்வு மைய அறையில் இருந்து பிளஸ் +2 வினாத்தாளை வாட்ஸ் அப்பில் அனுப்பியது தொடர்பாக 4 ஆசிரியர்கள் கைது.
20 ◘ உத்தரகண்ட் மாநிலம் டோடூனில் இருந்து உ.பி. வாரணாசிக்கு சென்ற ஜனதா எக்பிரஸ் ரெயில் தடம் புரண்டத்தில் 38 பேர் பலியானார்கள்.
◘ கருப்புபண ஒழிப்பு மசோதா பாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
23 ◘ 91 வயதான சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான்யூ உடல் நலக்குறைவால் மரணம்.
◘ ஓசூரில் வாட்ஸ் அப்பீல் வினாத்தாள் அனுப்பிய விவகாரத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 5 பேர் கைது
24 ◘ சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய வழி வகுக்கும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் 66 ஏ பிரிவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
◘ பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஜெர்மனி ஏர் பஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியானார்கள். இதில் விமானியே சதி செய்து விமானத்தை விபத்துக்குள்ளாக்கியதாக தகவல் வெளியானது.
◘ இலங்கை- தமிழக மீனவ பிரதநீதிகளில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது
26 ◘ காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தழிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
◘ தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெறும் வரை நியூட்ரினோ மைய ஆய்வு பணிக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது
27 ◘ காவிரியின் குறுக்கே மேகதாதுவின் அணை கட்ட நடவடிக்கை எடுக்க கூடாது. என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
28 ◘ தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் 55 பேர் டெல்லியில் குழுவாக சென்று பிரதமர் மோடியை சந்தித்து காவிரியில் குறுக்கே கர்நாடகம் அனை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
◘ ஐ ஆர் .என்.எஸ் . 1டி செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி.- சி27 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
◘ ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவிலிருந்து அதிருப்தி தலைவர்கள் பிராசாந்த்பூஷன், யோகேந்திரயாதவ் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர். அக்கட்சியில் இருந்து மேதாபட்கர் ராஜினாமா செய்தார்
30 ◘ மறைந்த தியாகி மதன் மோகன் மாளாயாவுக்கு பாரத ரத்னா விருது.
◘ அத்வானி, பிராகாஷ் சிங் பாதல் ஆகியோருக்கு பத்மபூஷன் விருது. தேர்தல் ஆணையர் கோபால்சாமி உள்பட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிராணாப்முகர்ஜி வழங்கினார்
► ஏப்ரல் 2015
01 ◘ நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு பிறப்பித்த சம்மனுக்கும் வழக்கின் விசாரனைக்கும் சுப்ரீம் கோர்ட்டு தடை.
◘ கேரள ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து கேரளாவில் இயங்கி வந்த 300 மதுபான பார்கள் மூடப்பட்டன.
◘ நைஜிரியிவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் முகமதுபுகாரி வெற்றி பெற்றார்
03 ◘ கோவாவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி கண்டுபிடித்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
◘ அணு சக்தி திட்டங்களை குறைக்க வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஒப்புதல் செய்து கொண்டது. இதனால் 12 ஆண்டுகால முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தது
05 ◘ உள் நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் சிக்கித் தவித்த 2,300 இந்தியர்கள் மீட்க்கப்பட்டனர்.
07 ◘ திருப்பதி மலைப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் ஆந்திரா போலிசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
08 ◘ ஞானபீட விருது பெற்ற பிரபல எழுத்தாளார் ஜெயகாந்தன் சென்னையில் மரணம் அடைந்தார்.
09 ◘ ஆந்திர போலீசாரின் துப்பாக்கி சூட்டின் போது தப்பி ஒடிய செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
◘ சத்யம் கம்ப்யூட்டர் மோசடி வழக்கில் நிறுவனர் ராமலிங்க ராஜூ உள்பட 10 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
◘ மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
◘ இந்திய தலமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜைதி நியமிக்கப்பட்டார்
11 ◘ சத்திஸ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
13 ◘ ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையர் உத்தரவு.
14 ◘ தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதற்கு முடிவு செய்து இருப்பதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்தார்
16 ◘ ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடன் பிரிவினைவாதிகள் ஊர்வலம் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு பிரிவினைவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காஷ்மீர் அரசுக்கு உத்தரவிட்டது.
◘ 56 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சி துனை தலைவர் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார்.
◘ அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகனை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது
17 ◘ பாகிஸ்தானில் குண்டு வைத்தபோது வெடித்ததில் ஐ.எஸ். தீவிரவாத தலைவர் ஹபீஸ் முகமது சயீத் பலியானார். இவர் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தில் இருந்து விலகி ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தவர் ஆவார்
19 ◘ மார்க்சிஸ் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளாராக சீதராம் யெச்சூரி போட்டியின்றி தேர்வு.
◘ திருச்சி சுங்க இலாகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் மாயாமானது பற்றி சி.பி.ஐ விசாராணை.
◘ லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 700 பேர் பலியானார்கள்
20 ◘ சோனியா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய மந்திரி கிரிராஜ்சிங், அதற்காக பாராளுமன்றத்தில் வருத்தம் தெரித்தார்.
21 ◘ பெருந்துறை சிப்காட்டில் கோக்கோலா நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
◘ ஒடிசா முன்னாள் முதல் மந்திரி ஜே.பி.பட்நாயக் திருப்பதியில் மாரடைப்பால் மரணம்
22 ◘ கொடிய குற்ற செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை இந்திய தண்டனை சட்டத்தில் விசாரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது
26 ◘ செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல இந்தி நடிகை நீது அகர்வால் கைது செய்யப்பட்டார்.
27 ◘ ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கீல் அரசு வக்கீலாக பவானி சிங்கை நியமித்தது செல்லாது. என்றும் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
◘ தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலமையில் தமிழகத்தில் பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க அவர்கள் வலியறுத்தினார்கள்
28 ◘ இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழரான மயூரான் சுகுமாரின் உள்பட 9 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
◘ நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்பெண் ராஜேஸ்வரி பதவியேற்றார்
► மே 2015
02 ◘ இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானாவின் மூத்த மகனான இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
04 ◘ கோவை அருகே கேரள மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ் உள்பட 5 தீவிரவாதிகளை துப்பாக்கி முனையில் போலிசார் மடக்கி பிடித்தனர்.
◘ மத்திய பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்துக்கு சென்ற தனியார் பஸ் பாலத்தில் தடுப்பு சுவரை மோதி உடைத்து கவிழ்ந்த்தில் பஸ் தீப்பிடித்து 35 பேர் உடற் கருகி பலி
06 ◘ குடிபோதையில் கார் ஓட்டி ஒருவர் பலியான விபத்தில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
07 ◘ காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இரா.அன்பரசு அவரது மனைவி கமலா அன்பரசு உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
◘ முல்லைபெரியாறு அணை கட்டும் நடவடிக்கை தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
◘ கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து பப்பு யாதவ் எம்.பி. நீக்கப்பட்டார்.
◘ கேரள மாநிலம் ஆலப்புழையில் இந்திய விளையாட்டு மைய ஆணையத்தில் பயிற்சியாளார்கள் கொடுமையால் 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றனர் இதில் ஒரு மாணவி உயிர் இழந்தார்
08 ◘ சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வழக்கில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது 11-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படுவதாக கர்நாடக ஐகோர்ட்டு அறிவித்தது.
◘ இங்கிலாந்து பாரளுமன்றதேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் பழமைவாத கட்சி தனிப்பெருபான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
◘ கார்விபத்து வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயிலில் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதைதொடர்ந்து அவர் செசன்சு கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.
◘ பாக்கிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் நார்வே பிலிப்பைன்ஸ் தூதர்கள் உள்பட 7 பேர் பலியானர்கள்.
◘ தலிபான்கள் குறியில் நவாஸ்ஷெரீப் உயிர் தப்பினார்
09 ◘ பிரதமர். நரேந்திரமோடியின் சத்தீஸ்கார் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 பேரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடத்தினர். அவர்களை மீட்க முயற்சி நடந்தது. இதில் ஒருவர் இறந்தார், மற்றவர்கள் மீட்கப்பட்டனர்
11 ◘ சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. என் மீது சுமத்தப் பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு என ஜெயலலிதா கருத்து. ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
◘ கருப்பு பண மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியது
13 ◘ அரசு விளம்பரங்களில் அரசியல் வாதிகள் படங்களை வெளியிட தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு. விளம்பரங்களில் ஜனாதிபதி பிரதமர், நீதிபதிகள் படம் மட்டுமே இடம் பெறலாம். என அதில் தெரிவிக்கப்பட்டது.
◘ பாகிஸ்தானில் பஸ்சை வழிமறித்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 47 பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
◘ வடகொரிய தலைநகரில் நடந்த கூட்டத்தில் ராணுவ மந்திரி யூன்யோங் தூங்கியதாக கைது செய்யப்பட்டு அவரை பீரங்கியால் சுட்டு மரணம் நிறைவேற்றப்பட்டது
14 ◘ சீனாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி ஷான்சி மாகாணத்தில் உள்ள அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கின் சொந்த ஊரான ஸியான் நகருக்கு சென்றார், அங்கு அவரை அதிபர் வரவேற்றார்.
◘ அனிதா ராதாகிருஷ்ணன், கருப்பு சாமி பாண்டியன் ஆகியோர் தி.மு.க. வில் இருந்து தற்காலிகமாக நீக்குப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்
17 ◘ சென்னை ஆர்.கே. நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
19 ◘ அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர் படத்தை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறு ஆய்வு மனுதாக்கல்.
20 ◘ மதுரை அருகே தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவரையும் அவரது குடும்பத்தினர் 6 பேரையும் இளம் பெண் பாண்டீஸ்வரி எரித்துக் கொலை செய்தார்.
◘ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தனி செயலாளர் வெற்றிச்செல்வனை அவரது உறவினர்களே கூலிப்படை உதவியுடன் மடிப்பாக்கத்தில் வெட்டிக் கொலை செய்தனர்
21 ◘ உத்திரபிரதேசத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் மிராஜ் 2000 என்ற போர் விமானத்தை முதல் முறையாக இறக்கி சாதனை படைத்தனர்
22 ◘ சட்டசபை அதி.மு.க.கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா தமிழக கவர்னரை சந்தித்து தனது அமைச்சரவை பட்டியலை வழங்கினார்
25 ◘ பாகிஸ்தான் ஜனாதிபதி மானூன் உசேனின் மகள் மனூசரை குறிவைத்து நடத்தபட்ட குண்டு வெடிப்பில் அவர் உயிர் தப்பினார். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
◘ டாடா நகரில் இருந்து ஜம்முதாவி செல்லும் மூரி எக்பிரஸ் ரெயில் உத்திரபிரதேச மாநிலம் அட்சரை ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டதில் 4 பேர் பலியானார்கள்
26 ◘ சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
◘ இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 65 நாட்களுக்கு மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது. 65 நாட்களுக்கு அல்ல 65 மணி நேரத்துக்கு கூட அணு மதிக்க முடியாது என்று இலங்கை மந்திரி கூறினார்
29 ◘ சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவார் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது
30 ◘ ஜப்பானில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது இது டெல்லியிலும் உணரப்பட்டது. குமரிமாவட்டத்தை சேர்ந்த மீனவர் மதிவளன் சவுதி அரேபியா கடலில் சக மீனவர்களுடன் மீண்டும் மீன் பிடித்த போது கடற்கொள்ளையர்கள் கூட்டத்தில் குண்டு பாய்ந்து பலியானார். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5.லட்சம் நிவாரண உதவி அளித்தது
31 ◘ நிலம் கையகப்படுத்த 3-வது முறையாக மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிராணப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
► ஜூன் 2015
02 ◘ சீனாவில் 450 பேருடன் சென்ற கப்பல் சூறாவளியில் சிக்கி ஆற்றில் மூழ்கியது. இதில் பலர் பலியானார்கள்.
◘ மேகிநூடுல்ஸ் விவகாரத்தில் நடிகர் அமிதாப் நடிகைகள் மாதூரிதீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசுக்கு பீகார் மாநில கோர்ட்டு உத்தரவிட்டது.
◘ இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்துவதாக பாகிஸ்தான் அறிவித்ததற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது.
◘ மேகி நூடுலசுக்கு ராணுவத்தில் தடைவிதிக்கப்பட்டது
04 ◘ கூகுள் தேர்தலில் குற்றவாளிகள் புகைப்படங்களுடன் பிரதமர் மோடி படம் வெளியானதற்கு கூகுள் இனையதளம் மன்னிப்பு கோரியது.
◘ அசல் எல்லை கட்டுபாட்டு கோடு விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கையை சீனா நிராகரித்து விட்டது
05 ◘ ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
◘ நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் திரும்பப்பெறுமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவு
06 ◘ உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் சுலோச்சனாசம்பத் மரணம்.
◘ காவிரி நதிநீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்கள்
07 ◘ சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்ட அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட அமைப்புக்கு விதிக்கப் பட்ட தடை நீக்கம்.
08 ◘ இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஜூலை 1ந்தேதி முதல் கட்டாயாமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது
09 ◘ நாகப்பட்டினம் வரை சென்றுவிட்டு சென்னைக்கு வந்த கடற்படை விமானம் மாயாமானது.
◘ வேட்புமனுவுடன் போலி கல்வி சான்றிதழை தாக்கல் செய்ததாக டெல்லி சட்டமந்திரி தோமரை போலீசார் கைது செய்தனர்.
◘ மணிப்பூரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய 100 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மியான்மர் நாட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிவாதிகள் மீது இந்திய ராணுவம் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
10 ◘ செம்மரக்கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் கைது.
11 ◘ டெல்லியின் உள்துறை செயலாளரை நீக்கம் செய்த முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உத்தரவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்தது
13 ◘ ஆந்திராவில் கோதாவரி ஆற்றின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு வேன் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 22 பேர் பலியானார்கள்
14 ◘ போலீசாரால் தேடப்படும் ஐ.பி.எல் . முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு உதவியதாக மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது
15 ◘ முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் எதிரொலியால் அகில இந்திய அளவில் 61/4 லட்சம் பேர் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
◘ லிபியாவில் தலைக்கு ரூ.30 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட அல் முரபிதுன் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் முக்தார், அமெரிக்க போர் விமான குண்டவீச்சில் கொல்லப்பட்டார்.
◘ அமெரிக்காவில் இந்தியாவில் பெங்களூரை சேர்ந்த பிரபல டாக்டர் சுரேஷ் கடாசல்லி(53) தனது நண்பனால் சுட்டுக்கொல்லப்பட்டார்
17 ◘ 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
18 ◘ கேரளாவில் சூரியசக்தி மின் கூரை மோசடி வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுஜெயில் தண்டனை விதித்து கேரள கோர்ட்டு உத்தரவு
21 ◘ சர்வதேச யோக தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் 36 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
23 ◘ ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்மூறையீடு செய்தது.
◘ டைட்டானிக் பட இசை அமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் அமெரிக்காவில் நடந்த விமானவிபத்தில் மரணம் அடைந்தார்
25 ◘ நாடு முழுவதும் 300 நகரங்களை மறுசீரமைப்பு, 100 நகரங்களை நவீன மயமாக்குவது, நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டிக்கொடுப்பது ஆகிய 3 புதிய திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
26 ◘ ஆம்பூரில் வித்ரா என்ற பெண் மாயாமான வழக்கில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற அகமது என்பவர் மர்மான முறையில் இறந்தது தொடர்பாக கலவரம் ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்தன
27 ◘ ஜெயலலிதா போட்டியிட்ட சென்னை ஆர்.கே நகர் தொகுதிகள் 74.4 சதவீத ஓட்டுகள் பதிவாயின.
28 ◘ திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் பா.ராமசந்திரா ஆதித்தனார் மணிமண்டபத்தை தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்ரமணியன் ஆதித்தன் திறந்து வைத்தார். 'தமிழ் தந்தை ' சி.பா.ஆதித்தனாரின் திருவருள் சிலையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்ன் திறந்து வைத்தார்
29 ◘ பலத்த பாதுகாப்பு நிறைந்த டெல்லி திகார் ஜெயிலில் சுரங்கப்பாதை அமைத்து 2 கைதிகள் தப்பினர்.
30 ◘ சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 1 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.
◘ இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் மேதன் நகரில் உள்ள தீவில் இருந்து புறப்பட்டு சென்ற விமானப்படை விமானம் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து 110 பேர் பலியானர்கள்
► ஜூலை 2015
01 ◘ டிஜட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் ரூ.45 லட்சம் கோடி முதலீட்டில் 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
◘ மேற்கு வங்காளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலியானார்கள்
02 ◘ விமானத்தில் இருந்து 3 பயணிகள் இறக்கி விடப்பட்ட சம்பவம் பற்றி பிரதமர் அலுவலகம் வாசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து மத்திய மந்திரி கிரண் ஜிஜூ மன்னிப்பு கேட்டார்
03 ◘ ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை விடுதலைப்புலிகள் தொடங்கினார்கள்.
05 ◘ மத்திய பிரதேசத்தில் நடந்த தொழில் நுழைவுத்தேர்வு வாரிய (வியாபம்) ஊழலில் தொடர்புடைய மருத்துக்கல்லூரி முதல்வர் அருண் சர்மா டெல்லி ஓட்டலில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
◘ ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பவித்ரா என்ற பெண் சென்னையில் மீட்கபட்டார்
07 ◘ மத்திய பிரதேச வியாபம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில முதல் மந்திரி சவுகான் சிபாரிசு.
09 ◘ மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் மற்றும் அது தொடர்பான மர்ம மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது
11 ◘ உடல் நலம் பாதிக்கப்பட்டு 6 மாத காலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் மரணம்.
15 ◘ ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ஜீப் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 6 பெண்கள் உடல் கருகி பலியானார்கள்.
◘ காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் பலியானர், பாதுகாப்பு படைவீரர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்
16 ◘ ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் மூறையீட்டு மனுக்களை சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
18 ◘ இந்தியாவிலேயே சாலை விபத்துக்களில் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்திலும், தற்கொலை எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையில் தெரிவித்து உள்ளது
20 ◘ தமிழ்நாட்டில் தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்
21 ◘ உச்சிப்புளியில் சயணைடு குப்பியுடன் கிருஷ்ணகுமார், ராஜேந்திரன், சசிகுமார் ஆகிய 3 பேரை பிடித்தனர். இதில் கிருஷ்ணகுரார் மறைந்த விடுதைப்புலிகளின் தலைவர் பிராபாகரின் உதவியாளர் ஆவார்
22 ◘ சினிமா பட அதிபர் இப்ராகீம் ராவுத்தர் மரணம்.
23 ◘ ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநிலங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதியை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. ஆனால் இது ராஜீவ் கொலை கைதிகளுக்கு பொருந்தாது என அறிவித்து உள்ளது
24 ◘ சென்னை சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட சி.மி தீவிரவாதிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும். என அறிவிக்கப்பட்டது
27 ◘ முன்னாள் ஜனாதிபதி அப்தூல் கலாம் காலமானார். மேகலாயா மாநில ஷில்லாங்கில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையற்றி கொண்டிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ராணுவ சீருடையல் பஞ்சாப் மாநிலத்துக்குள் நுழைந்த 3 பாக்கீஸ்தான் தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக்கொண்டது.
◘ தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தீடிரென மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
◘ ஜெயலலிதாவின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது
29 ◘ ராமேசுவரத்தில் அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
◘ ராஜீவ் கொலைகைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதற்கு எதிராக மத்திய மந்திரி அரசு தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவை சுப்ரீப் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
30 ◘ 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அப்தூல்கலாமின் மனோகர் பாரிக்கர், முதல்-மந்திரிகள் சந்திரபாபுநாயுடு, சித்திராமையா, உம்மன்சண்டி மற்றும் தமிழகத்தின் 7 அமைச்சர்கள் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்
31 ◘ அப்தூல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15-ந்தேதி இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அவரது பெயரில் ஆண்டு தோறும் ஒருவருக்கு தங்கப்பதக்கமும் ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
◘ குமரி மாவட்டம் மார்த்தண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென மரணம் அடைந்தார்.
◘ லிபியாவில் இருந்து நாடு திரும்ப முயன்ற இந்திய பேராசியர்கள் 4 பேரை கடத்தி சென்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களில் 2 பேரை விடுவித்தனர்
► ஆகஸ்ட் 2014
02 ◘ மேற்கு வங்காளம் ஒடிசா மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்த மழைக்கு 63 பேர் பலியானார்கள்.
◘ கலிங்கப்பட்டியில் வை.கோ. தலைமையில் நடந்த போராட்டத்தின்போது மதுக்கடை சூறையாடப்பட்டது. வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
◘ சேலத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சசிபெருமாள் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்
03 ◘ மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பதவி விலக கோரி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுப்பட்ட 25 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் 5 நாட்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தடைவிதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
◘ பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் நாகாலாந்து தீவிரவாத இயக்கங்கள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் 70 ஆண்டுகால பிரச்சினை முடிவுக்கு வந்தது.
◘ நாடு முழுவதும் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது.
◘ இளநிலை ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் மீது வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
◘ பாகிஸ்தான் பிரமர் நாவஸ்ஷெரீப் மீது காரை மோதி கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்
04 ◘ மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகத்தில் நடைப்பெற்ற முழுஅடைப்பு போராட்டத்தில் 34 பஸ்கள் சேதம் அடைந்தன.
◘ 166 பேர் கொன்று குவிக்கப்பட்ட மும்பை தாக்குதலுக்கு எங்கள் நாட்டில் தான் சதித்திட்டம் தீட்டப்பட்டது. என பாகிஸ்தான் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் தாரிக்கோசா பகிங்கிரங்கமாக ஒப்புக்கொண்டார்
06 ◘ ஆந்திராவில் துப்பாக்கி சூட்டில் பலியான 20 தமிழர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி நியமண ஆணையை ஜெயலலிதா வழங்கினார்.
◘ முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
◘ தமிழக அமைச்சரவை திரூப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ். எம்.ஆனந்தன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
◘ நடைமுறையில் இல்லாத 295 சட்டங்களை ஒழிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாரளுமன்னத்தில் மசோதா நிறைவேற்றியது.
◘ பாகிஸ்தானில் செசன்சு நீதிபதி தார்கன் நியாஜயை வீடு புகுந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்
07 ◘ சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த தேசிய கைத்தறி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
விழாவுக்கு பின்னர் அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
◘ மதுவிலக்கு போராட்டத்தில் மரணம் அடைந்த சசி பெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியை மு.க. ஸ்டாலின் வழங்கினார்
08 ◘ சென்னை அருகே மாயாமான டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த வித்யாசாகர், எம்.கே.சோனி,சுபாஷ்சுரேஷ் ஆகிய விமானிகள் பலியானது உறுதிசெய்யப்பட்டது.
◘ பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஒடிசாவை சேர்ந்த சாமியார் சாரதி பாபா கைது செய்யப்பட்டார்
11 ◘ அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு.
13 ◘ கழுத்தில் கயிறு இறுகியதால் சசிபெருமாள் மரணம் அடைந்தார் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
◘ மேகி நூடுல்ஸ் மீதான தடையை மும்பை ஐகோர்ட்டு நீக்கி உத்தரவிட்டது. அவற்றின் மாதிரிகளை புதிய சோதனைக்கு உட்படுத்தவும் கோர்ட்டு தெரிவித்தது
14 ◘ பாகிஸ்தான் பெஷாவர் ராணுவ பள்ளி தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
17 ◘ தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் மத்திய பகுதியில் சித்லோம் என்ற இடத்தில் உள்ள பிரம்மதேவன் கோவிலில் பக்தர்கள் திரண்டு இருந்த நேரத்தில் குண்டு வெடித்ததில் 27 பேர் பலியானார்கள்
18 ◘ இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதால் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆனார்.
◘ ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி கவ்ரா மரணம் அடைந்தார்
19 ◘ வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர்
20 ◘ சென்னை அடையாறு காந்திநகரில் நடைப்பெற்ற விழாவில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலையில் பெயர் பலகையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
◘ சிரியாவில் 2 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ரோமானிய கால கோவிலை ஐ.எஸ் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர்
26 ◘ நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
◘ பட்டேல் சமூகத்தினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி ஹார்திக் பட்டேல் தலைமையில் குஜராத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் 7 பேர் பலியானார்கள். கலவரத்தில் மந்திரிகள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 200 வாகனங்கள் எரிக்கப்பட்டன
31 ◘ தீவரவாதம் தேச துரோகம் தவிர்த்து பிற குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையில்லை என்று மத்திய அரசுக்கு சட்டகமிஷன் சிபாரிசு.
► செப்டம்பர் 2015
01 ◘ போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது என்று இலங்கை வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியது.
◘ வெனிசுலா நாட்டில் போக்குயட்டா நகரில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 கைதிகள் பலியானர்கள
03 ◘ இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு. ரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானார்.
◘ 2-ம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதில் 70-வது ஆண்டு விழாவையொட்டி பீஜிங்கில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்தி காட்டி உலகையே வியப்பில் ஆழ்த்தியது சீனா
04 ◘ சென்னையில் இருந்து மங்களூர் சென்ற ரெயில் விருத்தாச்சலம் அருகே தடம் புரண்டு கவிழ்ந்ததில் 39 பயணிகள் காயம் அடைந்தனர்.
◘ பிரதமர் மோடியுடன் நெல்லை பாளையங்கோட்டை சங்கர் காலனியை சேர்ந்த மாணவி விசாலினி (15) வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்தைரையாடினார்.
◘ ஒடிசாவில் ஏவுகனை பரிசோதனை தளமான வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது
05 ◘ முன்னாள் ராணுவனத்தினர் 42 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு. இதன் மூலம் 12 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்
06 ◘ 68 வயதான காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் டி.வி. நிகழச்சி தொகுப்பாளார் அம்ரிதாரையை திருமணம் செய்துகொண்டார்.
08 ◘ ஏமன் நாட்டு துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சீல் 20 இந்தியர்கள் பலியானார்கள்.
11 ◘ மெக்கா மசூதியில் கிரேன் விழுந்த விபத்தில் சிக்கி 107 பேர் பலியானார்கள்.
12 ◘ மத்திய பிரதேசத்தில் பெட்லிவாட் நகரில் தனியார் கட்டிடத்தில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 90 பேர் பலி.
◘ மதுரை கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதா? என சகாயம் முன்னிலையில் தோண்டப்பட்ட இடத்தில் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
◘ மும்பை -செகந்திராபாத் இடையே இயக்கப்படும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் கர்நாடக மாநிலம் மாத்தூர் அருகே தடம் புரண்டதில் 2 பெண்கள் பலியானார்கள்
15 ◘ டெல்லியில் பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே இடையே நடைப்பெற்ற பேச்சு வார்த்தையின் போது இருநாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
16 ◘ இலங்கையில் நடைப்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
◘ இலங்கையில் நடந்த போற்குற்றங்கள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் -- ஐ. நா. விசாராணைக் குழு பரிந்துரை.
◘ தென்காசியில் இருந்து கேரளாவிற்கு சென்ற அரசு பஸ்ஸில் இருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த ராஜபாளையத்தை சேர்ந்த சுவாதி (30) என்ற பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
18 ◘ நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.
19 ◘ புதுச்சேரி மேல்-சபை எம்.பி தேர்தலில் 4 சுயேச்சைகள் மனு வாபஸ் பெறப்பட்டதால் அ.தி.மு.க. வேட்பாளார் கோகுலகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
◘ அதிக வட்டி தருவதாக கூறி ரூ.150 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை நீலாங்கரை சேர்ந்த சுப்ரிமணியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்
20 ◘ திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் என்ஜினியரிங் கல்லூரியில் அவரது முழு உருவச்சிலையை மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
◘ தி.மு.க. பொருளார் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் பயணத்தை கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடங்கினார்
21 ◘ தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 2 1/2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி மும்பையில் கைது.
23 ◘ வாலாஜபாத் அருகே வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான பெரியசாமி (53) அர்ஜூன்ன்(43) ஆகியோரை பொதுமக்கள் அடித்துகொன்றனர்.
◘ சுவாமி தயானந்தசரஸ்வதி உடல் நலக்குறைவால் ரிஷிகேஷில் மரணம் அடைந்தார்.
◘ ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு அமெரிக்க ஆதரவு தெரிவித்து உள்ளது. சுஷ்மா சுவராஜ்-ஜான் கெர்ரி ஆகியோர் வெளீயிட்டுள்ள கூட்டறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது
24 ◘ மெக்காவில் உள்ள மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி நடந்த போது நெரிசலில் சிக்கி 1,000-த்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
25 ◘ சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாத கைதிகள் சிறை காவலர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 4 சிறை காவலர்கள் காயம் அடைந்தனர்
26 ◘ சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக இமாச்சலபிரதேச மாநில முதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்
28 ◘ மகளிர் சுயு உதவிக் குழுக்களின் செயல்பாடுக்காக 20 ஆயிரம் பெண்களுக்கு அம்மா கைபேசி வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.
◘ செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்து இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர்
29 ◘ தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மகளிர் இலக்கியங்களை படைக்கும் பெண் எழுத்தாளர்களுக்கு அம்மா இலக்கிய விருது வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
◘ மனைவி தொடர்ந்த கொலை முயற்சி வழக்கில் ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சோமநாத் கைது
30 ◘ நடிகர் விஜயா, நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
◘ சென்னை, கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 32 இடங்களில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100கோடி மதிப்புள்ள நகைகள் சொத்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
◘ நீதித்துறை எதிராக போராட்டம் நடத்திய மதுரை வக்கீல்கள் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. இந்த விசாரணையின் போது கோர்ட்டுக்குள் வக்கீல்கள் நுழைந்து ஆர்பாட்டம் நடத்துவதை தவிர்க்க வழக்கு விசாரணையின் போது யாரும் அனுமதிக்கப்படவில்லை. நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக ஐகோர்ட்டு வளாகத்தில் டி.வி. வைக்கப்பட்டு விசாரணை நேரடியாக ஒளிபரப்பானது
► அக்டோபர் 2015
01 ◘ போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு சாதகமாக அமெரிக்க தாக்கல் செய்த தீர்மானம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது
02 ◘ ஐ.நா. மனித உரிமை குழு தீர்மானம் ஏமாற்றம் அளிப்பதாகவும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் பயக்காது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். கருணாநிதி, ராமாதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
◘ தமிழ் நாட்டில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. 6 லட்சம் லாரிகள் ஓடவில்லை
04 ◘ மரண தண்டனையை ஒழிக்குமாறு ஆணையம் விடுத்த சிபாரிசை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.
06 ◘ அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டார்.
◘ தமிழகம் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல கெயில் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டது
07 ◘ சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடிக்கு தடைவிதிக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்தார்.
◘ சமையல் எரிவாயு, ரேஷன் தவிர எந்த திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயப் படுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
◘ அமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஐ.நா, பொது சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஸ்லே கைது செய்யப்பட்டார்
09 ◘ சென்னை போலீஸ் கமிஷனராக டி.கே. ராஜேந்திரன் நியமனம்.
◘ டெல்லியில் கட்டிட உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் வாங்கிய உணவுத்துறை மந்திரியை, முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்
11 ◘ தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்க தடைவிதித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
◘ என்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த யுவராஜ் மாறுவேடத்தில் வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார்
13 ◘ ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த ஒய்.எஸ்.ஸர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் உடல் நிலை பாதிக்கபட்டதால் போலீசார் அவரை வலுக்கட்டாயாமாக கைது செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
14 ◘ சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
◘ பிரதமர் நரேந்நிர மோடியை, நேதாஜி குடும்பத்தினர் சந்தித்து பேசினர். அப்போது நேதாஜி தொடர்பான ரகசியங்களை வெளியிடும் பணி ஜனவரியில் தொடங்கும் என மோடி தெரிவித்தார்.
◘ சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய அமெரிக்க நாடுகள் மீது புனிதப் போர் தொடுப்பதற்கு 19 தீவிரவாதி அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளனர்
15 ◘ மாரட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவிட்டது.
16 ◘ நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த நீதிபதிகள் நியமன சட்டம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
17 ◘ துவரம் பருப்பு விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ.225ஐ தாண்டியது.
19 ◘ தமிழகத்திற்கு கூடுதலாக காவிரி நீரை திறந்து விட முடியாது என கர்நாடகம் திட்டவட்டமாக அறிவித்தது.
◘ காஷ்மீரில் மாட்டு இறைச்சி விருந்து கொடுத்த சுயேச்சை எம்,எல்ஏ, ரஷித் மீது டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் மை வீசி தாக்கினர்.
◘ இலங்கையில் தமிழினவிடுதலைப் புலி அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்
20 ◘ தமிழகம் உள்பட நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்ட்டு இருந்த பருப்புகளை பறிமுதல் செய்ய மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணாமாக 1 லட்சம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது
23 ◘ சகிப்புத்தன்மை பிரச்சினையில் எழுத்தாளார்கள் ஒப்படைத்த விருதுகளை மீண்டும் வாங்கி கொள்ள வேண்டும் என்று சாகித்ய அகாடாமி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
24 ◘ இந்திய விமானப்படையில் போர் விமானிகளாக பெண்களை நியமிக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
◘ மாலத்தீவில் அதிபர் அப்துல் கயூமை கொல்ல முயன்ற வழக்கில் தணை அதிபர் கபூர் கைது. செய்யப்பட்டார்.
25 ◘ மத்திய அரசின் பி,சி,டி அரசிதழ் சாராத பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
26 ◘ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 180 பேர் பலியானர்கள். பூமி அதிர்ச்சியின்போது இந்தியாவில் வடமாநிலங்களும் குலுஙுகின. சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
◘ பிரபல கடத்தல் கும்பல் தலைவனும் மும்பை நிழல் உலக தாதவுமான தாவூர் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியான சோட்டாரஜன்
◘ இந்தோனேஷியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டார்.
◘ பாகிஸ்தானுக்குள் தவறுதலாக சென்ற இந்திய பெண் கீதா 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பினார்.
◘ நீண்டகாலமாக பிரச்சினைக்கு உரியதாக இருந்துவரும் தென்சீனக்கடல் பகுதியில் அமெரிக்கா தனது ரோந்து கப்பலை அனுப்பி இருப்பது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது
28 ◘ தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவும் பயிற்சியும் அளித்தது என்று முன்னாள் அதிபர் முஷரப் ஒப்புகொண்டார்.
29 ◘ நடிகர் விவேக் மகன் பிரசன்னகுமார் (வயது13) மூளைக்காய்ச்சலால் மரணம் அடைந்தார்.
◘ காஷ்மீரில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து தாக்குதலில் ஈடுபட்ட லஸ்கர் -இ-தொய்பா இயக்க முக்கிய தளபதி அபுகாசிமை போலீசார் சுட்டுக்கொன்றனர். இவனது தலைக்கு ரூ20 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது
30 ◘ சென்னை ஐகோர்ட்டு மத்தியப்படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
◘ மது விலக்கை வலியறுத்தி அரசுக்கு எதிராக பிரசார பாடல் எழுதி பாடிய பாடகர் கோவன் தேசத்துரோக வழக்கில் செய்யப்பட்டார்
31 ◘ எகிப்தில் இருந்து ரஷியா சென்றபோது விமானம் விழுந்து நொறுங்கியதால் 224 பேர் பலியானார்கள் அந்த விமானத்தை நாங்கள் தான் கட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்தனர்
► நவம்பர் 2015
01 ◘ தினத்தந்தி இதழ் சார்பில் டி டி நெக்ஸ்ட் என்ற ஆங்கில பதிப்பு புதிதாக தொடங்கப்பட்டது. சென்னை பதிப்பு தினத்தந்தியுடன் ஆங்கில பதிப்பு வாசகர்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்படுகிறது
02 ◘ டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
03 ◘ எனக்கு வழங்கிய தேசிய விருதை திருப்பி தரமாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். கவனத்தை ஈர்க்க பல வழிகள் உள்ளன என்று அவர் கூறினார்.
◘ 2ஜி வழக்கில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யக்கோர தி.மு.க. எம்.பி . கனிமொழி, ஷாகித்பல்வா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
04 ◘ காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை என்று ஐகோர்ட்டு தீர்ப்பு. சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாரயணன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்
05 ◘ இந்தியாவில் முடங்கி கிடக்கும் 20 ஆயிரம் டன் தங்கத்தை பயன்படுத்தும் வகையில் 3 தங்க முதலீட்டு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
06 ◘ தூய்மை இந்தியா திட்டத்துக்காக மத்திய அரசு சேவை வரியை 1/2 சதவீதம் உயர்த்தியது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மரணம்
07 ◘ காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
◘ சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட தமிழக பெண் கஸ்தூரி (50) சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் அவருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா ரூ10 லட்சம் நிவாரணம் அளித்தார்
08 ◘ பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
11 ◘ கோவில் பட்டியில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு முன்னாள் எம்.பி.ராஜேந்திரன் தற்கொலை.
◘ கேரளாவில் மதுபார் ஊழல் வழக்கை தொடர்ந்து நிதி மந்திரி கே.எம்.மணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
◘ மியான்மரில் நடந்த பாரளுமன்ற தேர்தலில் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது
12 ◘ பெரம்பூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
13 ◘ பலத்த மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.
◘ ஏரளமான பினை கைதிகளை தலையைத் துண்டித்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி ஜான், சிரியாவில் காரில் சென்றபோது அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்
14 ◘ பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நுழைந்த தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியும் துப்பாக்கியால் சுட்டும் பல இடங்களில் நடத்திய தீடீர் தாக்குதலில் 128 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்புபேற்றனர்
15 ◘ விடியவிடிய கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
16 ◘ சென்னையில் மழை வெள்ள சேதத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும். என அறிவித்தார்.
◘ சென்னை ஐகோர்ட்டு மத்திய போலீஸ் (சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு வழங்கும் பணி அமலுக்கு வந்தது.
◘ இங்கிலாந்து குடிமகனாக தன்னை கூறிக்கொண்ட ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சுப்ரமணியசுவாமி கடிதம் எழுதினார்
17 ◘ சென்னை ஐகோர்ட்டு மழை வெள்ளப்பகுதியில் முப்படையினரும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
◘ ஆந்திராவில் தமிழக எல்லையையொட்டியுள்ள சித்தூர் மாநாகாரட்சியில் தெலுங்குதேச கட்சியை சேர்ந்த மேயர் அனுராதா கட்டாரி(50) அலுவலகத்தில் பணியாற்றிய போது மனு கொடுப்பது போல் பர்தா அனிந்து வந்த மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார்.
இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் கட்டார் மோகனையும் அவர்கள் சுட்டுக்கொன்றனர்.
◘ விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.
◘ பிரபல பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ் (97) சென்னையில் மரணம்
18 ◘ பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்தூல்ஹமீது அபாவத் உள்பட 7 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
◘ சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கர் நியமனம்.
◘ தமிழ் நாட்டில் இருந்து கடத்தப்பட்ட 1,000 ஆண்டு பழமையான சிவன்-பார்வதி சிலைகள் அமெரிக்க போலீசாரிடம் முறைப்படி ஒப்படைக்கபட்டன. அவற்றை இந்தியவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது
19 ◘ குடியுரிமை விவகாரம் தொடர்பாக என்மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பகிரங்க சவால் எடுத்தார்
20 ◘ பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் 5-வது முறையாக பதவி ஏற்றார். லாலுபிரசாத் துணை முதல் மந்திரியானார்.
◘ ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்தியர்கள் உள்பட 170 பேரை சிறைபிடித்தனர்.
பல மணி நேரத்துக்கு பின்னர் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்
23 ◘ தமிழகத்தில் வெள்ள நிவாரண உதவிக்கு ரூ8,481 கோடி தேவை என மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக ரூ.940 கோடியை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
◘ சென்னையில் ஒரே நாளில் 19 செ.மீ மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
◘ மதுரையில் கிரானைட் வெட்டி எடுத்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
◘ தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி -நெல்லை நான்கு வழிச்சாலையில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டது
25 ◘ தமிழக வெள்ளசேதங்களை பார்வையிட மத்திய குழு சென்னை வந்தது.
◘ காஷ்மீரில் ராணுவ முகாம் மற்றும் எண்ணெய் கிடங்குமீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
◘ பீகாரில் முழு மதுவிலக்கை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த போவதாக முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்தார்
27 ◘ சரக்கு சேவை வரி மசோதாவை நிறைவேறியது.
◘ காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது தமிழக காங்கிரஸ் துணை தலைவி போலீசில் புகார் அளித்தார். அதில் விஜயதரணி எம்.எல். ஏ வை தரக்குறைவாக பேசிய இளங்கோவன் அவரை அடிக்க பாய்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து விஜயதரணி, சோனியா ராகுல்காந்திக்கு கடிதம் எழுதினார்.
◘ திருவள்ளூர் மாவட்டத்தில் கனகம்மாசத்திரத்தில்-திருவல்லங்காடு சாலையில் உள்ள கொசஸ்தலை ஆற்று மேம்பாலம் மழையால் இடிந்து விழுந்தது
30 ◘ பாரீஸ் நகரில் ஒபாமா, நாவாஸ் ஷெரீப் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
► டிசம்பர் 2015
01 ◘ சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் முதல் நாள் இரவு விடிய விடிய இடைவிடாமல் கொட்டிய மழை பகல் முழுவதும் பெய்ததால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது, செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். சென்னையில் இருந்து செல்லும் விமானம், ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் ரத்துச் செய்யபட்டது.
◘ ராஜீவ்காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன் ,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.
◘ தமிழக வெள்ள சேதம் குறித்த பிரதமர் நரேந்திரமோடி மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக வெங்கையாநாயுடு கூறினார்.
◘ பாரளுமன்றத்திலும் தமிழக வெள்ள நிவராணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்க்கள் கோரிக்கை விடுத்தனர்.
◘ பாகிஸ்தான் பெஷாவர் பள்ளிகூட தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
◘ செட்டிநாடு அரசரும் பிரபலதொழில் அதிபருமான எம்.ஏ.எம் ராமசாமி மரணம்
02 ◘ சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீர்ர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர். நிவாரண நடவடிக்கைக்கு போர்க்கப்பல்களும் வந்தன
03 ◘ தமிழகத்துக்கு வெள்ள நிவாரண உடனடி நிதியாக ரூ.1000 கோடியை பிரதமர் மோடி அறிவித்தார். வெள்ளசேதம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
◘ அமெரிக்காவில் தொண்டு நிறுவன ஊழியிர்கள் மீது கணவன்-மனைவி நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியானார்கள்
04 ◘ சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட மின் தடையால் சுவாச கருவி செயல் இழந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் பலியானதாக தகவல் வெளியானது.
◘ ரெயில்வே துறை முன்பதிவு செய்து பயணிப்போருக்கு அரை டிக்கெட்டு முறை ஒழிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2016 ஏப்ரல் முதல் இது அமலுக்கு வருகிறது
05 ◘ முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்தது.
07 ◘ தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
08 ◘ பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் உச்சிமாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் சென்றார்.
◘ சென்னையில் பாதிப்பு பகுதிகளை காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார்
10 ◘ முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழக வெள்ளசேதம் கடுமையான பாதிப்பு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
◘ குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கீழ்க்கோர்ட்டு விதித்த 5 ஆண்டு சிறை தன்டணையில் இருந்து இந்தி நடிகர் சல்மான்கானை விடுதலை செய்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது
12 ◘ ஜப்பான் உதவியுடன் மும்பை ஆமதாபாத் இடையே ரூ.98 ஆயிரம் கோடியில் புல்லட் ரெயிலுக்கான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் அபேயும் கையெழுத்திட்டனர்
13 ◘ புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்க பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
◘ பழம்பெரும் இந்தி நடிகர் தீலீப் குமாருக்கு பத்மபூஷன் விருதை மத்திய ராஜ்நாத் சிங் அவரது வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினார்
14 ◘ சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைவெள்ளம் காரணமாக ஒரு மாத கால தொடர் இடைவெளிக்கு பின்னர் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
◘ ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஜோயல்(தூத்துக்குடி) சரவணன்(நெல்லை புறநகர்),பெருமாள் (மாநகர்), தில்லை செல்வம் (கன்னியாகுமாரி) ஆகிய 4 பேர் கருணாநிதி தி.மு.க.வில் இணைந்தனர்
15 ◘ முதல்-மந்திரி கெஜ்ரிவால் செயலாளர் மீதான ஊழல் புகார் தொடர்பாக டெல்லி தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை.
◘ பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளி தாக்குதல் நடந்து ஓராண்டு ஆன நிலையில் ஓரே நாளில் 8 பேர் தூக்கிலிடப்பட்டனர்
16 ◘ மும்பை விமான நிலையத்தில் ஐதராபாத் புறப்பட இருந்த விமானத்தில் என்ஜினில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவி சுப்ரமணியன் என்ற ஊழியர் பலியானார்.
◘ தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு ஆகம விதிப்படி கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
◘ ம.தி.மு.க முன்னாள் மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
17 ◘ சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் அகற்ற ஐகோர்ட்டு தீர்ப்பு.
18 ◘ டெல்லி துணை மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளியை விடுதலை செய்ய தடை விதிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு.
◘ தமிழ்நாட்டில் நீர் நிலைகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அரசுக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.
◘ அன்னை தெராசவுக்கு 'புனிதர்' பட்டம் வழங்கப்டும் என்று அறிவிப்பு.
◘ ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடிகை ரோஜா ஆந்திர சட்டசபையில் இருந்து ஓர் ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்
19 ◘ நேஷனல் ஹெரால்டு தொடர்பாக சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில் சோனியாகாந்தி ஆகியோர் டெல்லி கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த்து
22 ◘ இளம் குற்றவாளிகளின் வயது வரம்பை 16 ஆக குறைக்க வகை செய்யும் மசோதா டெல்லி மேல்-சபையில் நிறைவேறியது.
24 ◘ மாஸ்கோவில் பிரதமர் மோடி- அதிபர் புதின் நடத்திய பேச்சு வாத்தையில் இந்தியா ரஷியா கூட்டாக ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்க ஒப்பந்தம்
25 ◘ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
◘ ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில் பாகிஸ்தான் சென்ற மோடி அந்த நாட்டின் பிரதமர் நவாஸ்ஷெரீப்பை சந்தித்து பேசினார் தேர்தல் முறையை மீண்டும் கொண்டும் வரும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி சம்பத் சென்னையில் கூறினார்