Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. நடப்பு செய்திகள் CURRENT AFFAIRS 2016
நடப்பு செய்திகள் CURRENT AFFAIRS 2016
ஜனவரி 2016:
1 -- ஏ. பி. பரதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டெல்லியில் மரணம்.
4 -- மும்பையின் இளைய கிரிக்கெட் வீரர் ப்ரணவ் தனவாடே, பள்ளிகளுக்கிடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில்
1009 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
6 -- பஞ்சாப் மாநிலம் பதான் கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்பு படை வீரர்களும் 6 தீவிர வாதிகளும் மரணம்.
7 -- ஜம்மு காஷ்மீர் முக்கிய மந்திரி முஃப்தி முகமது சையத் மரணம்.
14 -- உலக சுகாதார நிறுவனம், "எபோலா" நோய் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
16 -- "" Start up India "" & "" Stand up India "" என்ற இரண்டு திட்டங்களை பிரதம மந்திரி அறிமுகப்படுத்தினார்.
-- இரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கியது.
-- தைவான் நாட்டின் எதிர் கட்சித் தலைவர் Tsai Ing Wen அதிபர் பதவிக்கு தேர்வு.
20 -- இந்திய விண்வெளிக்கழகம், IRNSS-1E என்ற மண்டல வழிகாட்டி செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது.
24 -- பாரதீய ஜனதா கட்சியின் அமித் ஷா அக்கட்சியின் தேசிய தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு.
25 -- ரஃபேல் போர் விமானங்கள வாங்கும் ஒப்பந்தம் இந்தியா-ஃப்ரான்ஸ் நாட்டுடன் கையெழுத்திடப்பட்டது.
30 -- தமிழ் நாடு முக்கிய மந்திரி ""Greater Chennai Corporation"" ""விரிவு படுத்தப்பட்ட மாநகராட்சி"" யை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 42 உள்ளாட்சி பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
31 -- நோவக் டிகோவிக் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியை வென்றார்.
பிப்ரவரி 2016:
1 -- மியான்மார் வரலாற்றில் முதல் முறையாக தேசிய ஜனநாயக கட்சி பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு கொண்டது.
-- எல்லைப் பாதுகாப்பு ஆயுதப் படைப் பிரிவின் முதல் பெண் இயக்குநகராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்பு.
3 -- பலராம் ஜாக்கர், முன்னாள் மக்களவை சபாநாயகர், மூத்த காங்கிரஸ் தலைவர் டெல்லியில் மரணம்.
9 -- சுஷில் கொய்ராளா -- முன்னாள் நேபாள பிரதம மந்திரி காத்மண்டு வில் மரணம்.
15 -- ப்ரீதிகா யாஷினி - தமிழ் நாட்டின் ஒரு திருநங்கை -- இந்தியாவின் முதல் காவல் துறை துணை ஆய்வாளர் Sub-Inspector பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
16 -- புட்ரோஸ் புட்ரோஸ் காலி, முன்னாள் ஐ.நா.சபை செயலர், எகிப்து கெய்ரோ நகரில் மரணம்.
19 -- அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டு காலிகோ ஃபூல் முக்கிய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
20 -- 14வது தமிழ் நாடு சட்டமன்றம், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளில் மகளிருக்கான ஒதுக்கீட்டை 33 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி சட்டம் இயற்றியது.
25 -- மத்திய ரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பயணக்கட்டணம் மாற்றம் ஏதுமில்லாமல், விருப்ப காப்பீடு, உணவு ஆகிய வசதிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
28 -- மத்திய அரசாங்கம் "" Bank Board Bureau "" என்ற அமைப்பை, முன்னாள் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையின் கீழ் அமைத்து உத்தரவிட்டது.
29 -- மத்திய நிதி அறிக்கை, விவசாயிகள், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சலுகைகளுடன் சமர்ப்பிக்கப்பட்டது. புற நகர் வளர்ச்சிக்கு 87,765 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி H L தத்து Dattu, தேசிய மனித உரிமை கழகத்தின் தலைவராக பொறுப்பேற்பு.
மார்ச் 2016:
4 -- பூர்ணோ அகிடோக் சங்மா, முன்னாள் மக்களவை சபாநாயகர் புது டெல்லியில் மரணம்.
6 -- 2013 முஸாஃபர்நகர் வன்முறை (60 பேர் மரணம், 60000 பேர் குடியிழப்பு) க்கு உத்திர பிரதேச சமாஜ் வாடி அரசாங்கம் நேரடியாக காரணமில்லை என நீதிபதி விஷ்ணு சஹாய் குழு தீர்மானம்.
-- ஏர் இந்தியா நிறுவனம், உலகின் நீளமான நேரடி வான் பயணம் 17 மணி நேர -- டெல்லி --> சான் ஃப்ரான்சிஸ்கோ 14,500 கி.மீ -- அனைத்து மகளிர் இயக்கும் குழுவுடன் தொடக்கம்.
-- புகழ் பெற்ற மலையாள நடிகர் கலாபவன் மணி கொச்சியில் மரணம்.
9 -- எதிரிகள் சொத்து சட்டம் 1968, ன் சட்ட திருத்தங்களை இந்திய பாராளுமன்றம் இயக்கியது. The Enemy Property (Amendment and Validation) Bill, 2016, amending the Enemy Property Act, 1968.
-- ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தை ஒரு ""சாசன சட்டமன்றம்"" ஆக அறிவித்துள்ளது.
10 -- நிலச் சொத்து மசோதாவை மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது. Real Estate Bill.
-- இந்திய விண்வெளிக்கழகம், IRNSS - 1F வழிகாட்டி செயற்கைக்கோளை விண்சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியது.
11 -- ""ஆதார் (உரியோருக்கு நேரடி பண பட்டுவாடா) 2016 சட்டம் மக்களவையில் ஒரு பண மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது.
14 -- ராணுவத்தினருக்கான "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்" திட்டத்தை பிரதம மந்திரி அறிவித்தார்.
16 -- பாராளுமன்றம் ஆதார் மசோதா 2016 ஐ ஏற்றுக்கொண்டது.
27 -- உத்தராகாண்ட் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
28 -- இந்தியா முழுவதுக்குமான அவசர தொலைபேசி எண் "112" அறிமுகப்படுத்த தொலைபேசி கழகம் அனுமதி.
29 -- பாகிஸ்தானின் கூட்டு ஆய்வு குழு பதான் கோட் போர் விமான தளத்தை, தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பார்வையிட்டது.
30 -- பீஹார் சட்ட மன்றம், மாநிலம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்தியது. Bihar Excise (Amendment) Bill 2016
-- Htin Kyaw , மியான்மார் நாட்டின் அதிபராக (பொது மக்களிலிருந்து), இந்நாட்டின் 50 வருட சரித்திரத்தில், முதன் முறையாக பதவியேற்பு.
31 -- கொல்கத்தாவின் விவேகாநந்தா மேம்பால சரிவினால் 26 பேர் மரணம், 88 பேர் படுகாயம்.
ஏப்ரல் 2016
3 -- மேற்கு இந்திய தீவு ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி, 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
-- மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் உள்ள மகுந்த்பூரில் வெள்ளைப் புலிகளுக்கான சரணாலயம் திறக்கப்பட்டது.
4 -- ""பனாமா ரகசியங்கள்"" விவகாரத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசாங்கம் ஒரு தனி குழுவை நியமித்துள்ளது.
-- காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி முக்கிய மந்திரியாக பதவியேற்றார்.
5 -- ""கத்திமான் விரைவு ரயில்"" ""Gatiman Express"" -- இந்தியாவின் அதிவேக ரயில் டெல்லியில் துவங்கப்பட்டது.
-- ""Stand up India"" என்ற திட்டத்தை பிரதம மந்திரி துவக்கி வைத்தார்.
-- மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட 2016ஆம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில், பொறியியல் பிரிவில், சென்னை இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) தேர்வு செய்யப்பட்டது.
-- பீஹார் முழு மது விலக்கு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. மது உற்பத்தி, விற்பனை, அருந்துவது தடை செய்யப்படுகிறது.
8 -- மகாராஷ்டிரா மாநிலத்தின் சனி சிங்க்னாபூர் கோவிலின் உட்புறத்தில் பெண்கள் அனுமதி. சுமார் 400 வருடங்களாக பெண்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
10 -- கேரள மாநிலம், கொல்லம் அருகே புற்றிங்கல் தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 110 பக்தர்கள் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் காயமடைந்தனர்.
11 -- மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதிகாண் (நீட்) தேர்வை ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றது.
12 -- ஹரியானா மாவட்டத்தின் தொழில் நகரமான குர்காவ்ன், குருக்ராம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் மேவாத் மாவட்டம், நூ மாவட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
16 -- 7.8 ரிஸ்டர் அளவு கோல் பூகம்பம் இக்குவேடார் நாட்டை தாக்கியது.
20 -- இந்திய கப்பற்படையில் ஏழு பெண்களுக்கு முதல் முறையாக ""நிரந்தர அந்தஸ்து அதிகாரி"" permanent commission பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிரிவுகளிலும் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது.
21 -- சுற்றுச்சூழல் பிரபல ஆர்வலர் ஆர்.கே. பச்சௌரி, பாலியல் குற்றத்தின் அடிப்படையில், TERI என்ற அரசாங்க அமைப்பின் நிர்வாக குழுவிலிருந்து நீக்கம்.
28 -- பிரதம மந்திரி, இந்திய சுய வழிகாட்டி முறையை (own navigational system) யை ""NAVIC"" (Navigation with Indian Constellation) எனப் பெயரிட்டார். இது, இந்தியாவின் ஏழாவது சுய மண்டல வழி காட்டி செயற்கை கோள் IRNSS 1G விண்ணில் செலுத்தப்பட்டதின் பின்னணியாக நடத்தப்பட்ட நடவடிக்கை.
29 -- பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை பொது மக்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு - குஜராத் அரசாங்கம் அறிவிப்பு.
30 -- தேசிய தலைநகர் பகுதியில் டீசல் இயக்கி வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
மே 2016
1 -- ""பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா"" -- ""Pradhan Mantri Ujjwala Yojana"" -- இத்திட்டத்தின் மூலம் சுமார் 50000 ஏழை எளிய குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இதற்காக 8000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
-- மனை விற்பனை (ஒழுங்கு மற்றும் மேம்பாடு) சட்டம் 2016 தமிழ் நாட்டில் அமல் படுத்தப்பட்டது.
2 -- தொழிலதிபர் விஜய் மல்லையா மக்களவையிலிருந்து ராஜினாமா.
-- பாரதீய ஜன சங்க கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பல்ராஜ் மாதோக் டெல்லியில் மரணம்.
3 -- 63வது தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.
9 -- ""பனாமா ரகசியங்கள்"" என்ற ரகசிய கோப்புகள் வெளியீடு. இதில் வெளி நாட்டில் பண முதலீடு செய்திருக்கும் பல இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
10 -- உத்தராகாண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக உச்ச நீதி மன்றம் ஒப்புதல் அளித்தது.
13 -- அவதூறுகளை defamation குற்ற செயலாக criminalising கருதும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது.
-- மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரமில்லை என்று தேசியப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
16 -- தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் Han Kang தனது ""The Vegetarian"" என்ற புத்தகத்துக்காக மான் புக்கர் பரிசு வென்றார்.
17 -- மத்திய ஊரக வளர்ச்சி மந்திரி வெங்கையா நாயுடு அவர்கள், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை டெல்லியில் துவக்கி வைத்தார்.
19 -- தமிழ் நாட்டில் நடந்த சட்ட சபை தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றா கழகம் வெற்றி.
-- மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
-- கேரள சட்ட சபை தேர்தலில் இடது சார் கட்சிகளிடம் காங்கிரஸ் தோல்வி.
-- அஸ்ஸாம் சட்டசபையை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றியது.
-- புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி வெற்றி.
21 -- ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் அமெரிக்க ஏவுகணையால் கொல்லப்பட்டார்.
23 -- ஜெயலலிதா தமிநாட்டு முக்கிய மந்திரியாக பதவியேற்பு.
-- ஈரானில் உள்ள சாப்ஹார் துறைமுகத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் மேம்படுத்தும் ஒப்பந்தம், இந்தியா ஈரானுக்கிடையில் கையெழுத்தானது.
24 -- சர்பானந்தா சோனோவால் அஸ்ஸாம் மாநில முக்கிய மந்திரியாக பதவியேற்றார்.
25 -- பின்ராயி விஜயன் கேரள முக்கிய மந்திரியாக பதவியேற்பு.
26 -- அரியானா மாகாணத்தால், ஜாட் மற்றும் இதர சில இனத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை, பஞ்சாப்-அரியானா உயர் நீதி மன்றம் தடை விதித்தது.
27 -- திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மேற்கு வங்க முக்கிய மந்திரியாக பதவியேற்பு.
29 -- இத்தாலி நாட்டின் ""ஃபின்மெக்கானிகா"" Finmeccanica நிறுவனத்தால், இந்திய ராணுவ தளவாடங்கள் விநியோகம் செய்ய பெற்ற அனைத்து ஒப்பந்தங்களூம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.
-- புதுச்சேரி துணை ஆளுநராக Lt. Governor கிரண் பேடி அவர்கள் பதவியேற்றார்.
-- சன் ரைஸர்ஸ், ஹைதராபாத் அணி, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை வென்றது.
31 -- அட்மிரன் சுனில் லன்பா, இந்திய கப்பற்படையின் 23வது தலைமை தளபதியாக பதவியேற்பு.
ஜூன் 2016
1 -- உலகின் நீளமான ரயில் சுரங்கப்பாதை -- கோத்தார்டு பேஸ் சுரங்கப்பாதை -- Gotthard Base Tunnel -- 57 Km நீளம் -- ஸ்விட்சர்லாந்தின் ஆல்ப் மலைத்தொடர்களின் வழியாக வடக்கு-தெற்கு ஐரோப்பாவை இணைக்கும் வழி துவங்கி வைக்கப்பட்டது.
3 -- உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி மரணம்.
5 -- மனோகர் அய்ச் Manohar Aich (104), இந்தியாவின் பழமையான உடற்கட்டு வீரர், மற்றும் பிரபஞ்ச Mr. Universe பட்டத்தை வென்றவர், கொல்கத்தாவில் மரணம்.
6 -- புதுச்சேரி முக்கிய மந்திரியாக காங்கிரஸ் மூத்த தலைவர் வி. நாராயணசாமி பதவியேற்பு.
8 -- P. ராம மோகன ராவ் தமிழ் நாட்டின் தலைமை செயலாளராக பதவியேற்பு.
10 -- தொழிலதிபர் விஜய் மல்லையா, அவருடைய யுனைட்டெட் ப்ரூவரீஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு சொந்தமான ரூ.1411 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.
12 -- இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்ர் பாக்தாதி, அமெரிக்க கூட்டு ராணுவ நடவடிக்கையால், சிரியாவின் ராக்கா பகுதியில் கொல்லப்பட்டார்.
15 -- மத்திய அரசாங்கம், நாட்டின் முதல் தேசிய வான்வழி போக்குவரத்து திட்டத்தை அறிவித்தது.
17 -- இந்திய விமானப்படையில் முதல் முறையாக போர் விமானங்களில் 3 பெண் விமானிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கார் நியமித்தார். -- அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகிய மூன்று விமானிகள்.
20 -- பாதுகாப்பு உபகரணங்கள், பொது விமானத்துறை மற்றும் மருந்து தயாரிப்பு ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவிகிதமாக உயர்த்தி, மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
22 -- இந்திய விண்வெளிக்கழகம், PSLV C 34 செயற்கை கோள் மூலம், 1288 கிலோ எடை கொண்ட 20 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.
27 -- ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு கூட்டமைப்பு -- சர்வதேச அமைப்பில் 34வது அங்கத்தினராக இந்தியா இணைத்துக்கொண்டது.
-- மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்த மன்னர் யதூவீர் க்ரிஷ்ணதத்தா சாமராஜ உடையார், ராஜஸ்தான் துங்கார்பூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த த்ரிஷ்கா குமாரியை திருமணம் புரிந்தார்.
30 -- ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் மூன்றாம் பாலினமாக கருதப்பட முடியாது என உச்ச நீதிமன்றம் முடிவு.
ஜூலை 2016
1 -- இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான ""தேஜஸ்"" விமானப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Light Combat Aircraft ""Tejas"" designed and built in India joins the IAF squadron Flying Daggers at a ceremony in Bangalore.
2 -- மத்திய அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்களால், ப்ரகாஷ் ஜாவடேகர் காபினெட் அந்தஸ்து பெற்று மனிதவள மேம்பாடு துறையும், இத்துறையில் இருந்த ஸ்ம்ரிதி இரானி ஜவுளித்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். வெங்கையா நாயுடுவுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக பொருப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-- மெட்ராஸ், பாம்பே மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்றங்களின் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு ஒப்புதல்.
5 -- அமெரிக்க விண்வெளித்துறையின் நாஸா NASA வின் சூரிய சக்தியால் இயங்கும் விண்கலம் ""ஜூனோ"" வெற்றிகரமாக, ஐந்து வருட பயணத்துக்குப் பிறகு ஜூபிடர் சுற்று வட்டத்துக்கள் நுழைவு.
6 -- ஆந்திர பிரதேச முக்கிய மந்திரி சந்திர பாபு நாயுடு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளை இணைக்கும் பட்டிசீமா திட்டத்தை துவங்கி வைத்தார்.
8 -- கலவரப் பகுதிகளில், ஆயுதப்படைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த சட்ட ரீதியான பாதுகாப்பு immunity முறையை உச்ச நீதி மன்றம் நிறுத்தி வைத்தது.
-- ஹிஸ்புல் முஹைதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புரான் வானி காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டார். -- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வரலாற்றில் முதன் முறையாக இன்சாட் 3டி ஆர் செயற்கைக்கோள் தாங்கிச் சென்ற ஜி எஸ் எல் வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
9 -- பெஷாவர், பாகிஸ்தானில் உள்ள ராணுவப் பள்ளி 2014ல் தாக்குதல் நடத்த முக்கிய காரணமாக இருந்த உமர் மன்சூர், அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்.
10 -- கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலை மின் உற்பத்தி தொடங்கியது.
-- செரினா வில்லியம்ஸ் மற்றும் ஆண்டி மர்ரே, விம்பிள்டன் மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியை வென்றனர்.
12 -- நெதர்லாந்து நாட்டில் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதி மன்றம் தென் சீனக்கடலில் சீனா தன்னுடைய பகுதியாக கருதும் ""nine-dash line"" எல்லைக்கோட்டை நிராகரித்தது.
13 -- பிரிட்ட்ன் நாட்டின் பிரதம மந்திரியாக தெரெசா மே பதவியேற்றார்.
19 -- NEET தேர்வுக்கு வரும் கல்வி ஆண்டிலிருந்து, மக்களவை சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளது. மாகாணங்களூக்கான ஒதுக்கீடு காக்கப்படும்.
-- ரோஹித் காண்டேல்வால், ஹைதராபாத் நகர வணிக மாதிரி நடிகர் model , Mr.World பட்டம் வென்றார்.
21 -- பெட்ராபோல் -- பேனாபோல் இடையில் ஒருங்கிணைந்த தணிக்கை நிலையத்தை இந்திய பிரதமரும் வங்காளதேச பிரதமரும் துவக்கி வைத்தனர்.
22 -- இந்திய விமானப்படையின் AN 32 விமானம், 29 பயணிகளுடன், சென்னையிலிருந்து போர்ட் ப்ளேயர் செல்லும் போது வங்காள விரிகுடா கடலின் மீது பறக்கும் போது மாயமானது. இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
24 -- நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாகவே, நேபாள பிரதம மந்திரி K.P. ஷர்மா ஒலி ராஜினாமா.
26 -- சிறார் தொழிலாளி (தடுப்பு மற்றும் மாற்றம்) மசோதா 2016ன் படி, 14 வயதுக்குட்பட்ட சிறார்கள், குடும்ப வணிக சூழலில் பணி செய்யலாம் என மாற்றம் செய்யப்பட்டதை, மக்களவை ஏற்றுக்கொண்டுள்ளது.
-- ""சோலார் இம்பல்ஸ் 2"" -- Solar Impulse 2, ஸ்விட்சர்லாந்து விமானி பெர்ட்ராண்ட் பிக்கார்ட் என்பவரால் இயக்கப்படும் முழுவதுமான சூரிய சக்தி விமானம், தனது முதல் உலக சுற்றை (சுமார் 42000 கி.மீ பயணம்) அபு தாபியில் முடித்துக்கொண்டது.
27 -- மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களது நினைவாலய அடிக்கல் நாட்டு விழா, ராமேஸ்வரம் அருகில் பெய்கரும்பு கிராமத்தில் நடந்தேறியது.
-- பினாமி (அநாமதேய) பரிவர்த்தனை (தடுப்பு) மாற்ற மசோதா 2015ஐ மக்களவை ஏற்றுக்கொண்டது.
-- பெஸ்வாடா வில்சன், சமூக ஆர்வலர் மற்றும் டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசைக் கலைஞர், ராமன் மகாசஸே விருது, 2016க்கு தேர்வு.
-- சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா (மணிப்பூர்) தனது 16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவிப்பு.
31 -- திரிபுரா மாகாண அகர்தாலா மற்றும் டெல்லி க்கிடையிலான ரயில் போக்குவரத்தை ரயில்வே மந்திரி சுரேஷ் ப்ரபு துவக்கி வைத்தார்.
-- இந்தியா (அகர்தாலா) -வங்காள தேசத்துக்கிடையிலான (அகௌரா) அகலப்பாதை ரயில் போக்குவரத்து அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 2016
1 -- மதராஸ் உயர் நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யும் மசோதாவை தமிழ்நாடு சட்ட சபை ஏற்றுக்கொண்டது.
3 -- அரசியல் சட்ட திருத்த மசோதா -- பொருள் மற்றும் சேவைகள் வரி மசோதாவை மாநிலங்களவை ஏற்றுக் கொண்டதால், விரைவில் அமல் படுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
-- நேபாள கம்யூனிச கட்சி தலைவர் புஷ்பா கமல் தஹால் ""ப்ரசந்தா"" நேபாள பிரதம மந்திரியாக இரண்டாம் முறையாக தேர்வு.
4 -- டெல்லியின் (தலை நகரத்தின்) நிர்வாக அதிகாரி லெஃப்டினண்ட் கவர்னர் தான் மற்றும் அது ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும்.
7 -- குஜராத் மாகாணத்தின் முக்கிய மந்திரியாக விஜய் ரூபானி பதவியேற்றார்.(ஆனந்தி பென் ராஜினாமா).
-- கேரளா காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணியுடனான 35 வருட உறவை முறித்துக்கொண்டது.
8 -- அரசியல் சாசன 122வது திருத்த மசோதா -- பொருள் மற்றும் சேவை வரி மசோதா மக்களவையில், அஇஅதிமுக உறுப்பினர்களை தவிர்த்து, முழு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தற்கொலையை கிரிமினல் குற்றமாக கருதப்படாத -- மன நல காப்பு மசோதா 2013 ஐ மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது.
T.K.V. தேசிகாச்சார் Desikachar (78), யோகா குரு, சென்னையில் மரணம்.
9 -- அருணாச்சல பிரதேச முன்னாள் முக்கிய மந்திரி காலிகோ ஃபூல் இட்டாநகரில் தற்கொலை செய்துகொண்டார்.
10 -- இந்திய பிரதம மந்திரி, ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின் மற்றும் தமிழக முக்கிய மந்திரி, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையை, ஒளித் தோற்ற கலந்துரையாடல் முறையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
11 -- டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அதிக நேரம் விளையாடிய உலக சாதனைப் பெற்ற, பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்.
-- மகப்பேறு விடுமுறைக் காலத்தை 12 வாரங்களிலிருந்து, 26 வாரங்கள் என உயர்த்தி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
12 -- பொருள் மற்றும் சேவை வரி மசோதாவை முதலாவதாக அஸ்ஸாம் மாநிலம் ஏற்றுக்கொண்டது.
14 -- உசெய்ன் போல்ட் (ஜமைக்கா) ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டி 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெற்றி.
-- இந்தியாவின் தீபா கார்மகார், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் நான்காவது பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டுப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.
16 -- பொருள் மற்றும் சேவை வரி மசோதாவை பீஹார் சட்டசபை ஏற்றது.
17 -- நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமனம்.
-- வி.பி. சிங் பட்னோர், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம்.
-- பன்வாரிலால் புரோஹித், அஸ்ஸாம் மாநில ஆளுநராக நியமனம். 18 -- மச்லி உலகின் முதுமையான பெண்புலி, ரணதம்போர் (ராஜஸ்தான்) தேசிய பூங்காவில் மரணம்.
-- உசெய்ன் போல்ட், ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் வெற்றி.
19 -- பி.வி.சிந்து, இந்திய பாட்மிண்டன் வீராங்கனை, ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெற்றி -- முதல் இந்தியர் இந்நிலை பெற.
20 -- மகாராஷ்டிரா அரசாங்கம் ""மகாராஷ்டிரா உள் மாநில பாதுகாப்பு சட்டம்"" என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.
இவ்வாறான சட்டம் இயற்ற மகாராஷ்டிரா மாநிலமே முதலிடம். Maharashtra Protection of Internal Security Act.
-- ஜெர்மனியை வீழ்த்தி, ப்ரேசில் ஒலிம்பிக் கால்பந்து போட்டியை முதல் முறையாக வென்றது.
21 -- ஃப்ரான்ஸ் நாட்டு "செவாலியர்" விருதுக்கு தமிழ் திரைத்துறை பிரபல நடிகர் கமலஹாசன் தேர்வு.
22 -- S.R. நாதன் Nathan (96) முன்னாள் சிங்கப்பூர் அதிபர், சிங்கப்பூரில் மரணம்.
24 -- மத்திய அரசாங்கம், "" வாடகைத்தாய் (ஒழுங்கு படுத்துதல்) மசோதா 2016 அங்கீகரித்தது. இதன் மூலம், வணிக ரீதியாக இந்த செயலில் யாரும் ஈடுபடமுடியாது மற்றும் குழந்தைகள் இல்லாத இந்திய தம்பதிகள் மற்றுமே இம்முறையான குழந்தை பிறப்புக்கு தகுதியானவர்கள் ஆவர்.
6.2 ரிஸ்டர் அளவிலான பூகம்பம் இத்தாலியில் 250 பேர் மரணம், சுமார் 368 பேர் படுகாயம். Amatrice and Pescara del Tronto என்ற இரண்டு கிராமங்கள் முழுமையாக அழிந்தது.
26 -- மும்பையின் மிகப் புகழ் பெற்ற ஹாஜி அலி மசூதியின் உள்ளறையில் பெண்கள் அனுமதி -- மும்பை உயர் நீதி மன்ற உத்தரவு.
29 -- மியான்மாரில் 69 பாலங்கள் கட்டவும், Kalewa-Yagyi இடையிலான சாலைப் போக்குவரத்து மேம்பாடு செய்யவும் இந்தியா மியான்மாருக்கிடையில் ஒப்பந்தம்.
-- மேற்கு வங்காள சட்டசபை, மாகாணப் பெயரை Bengal என ஆங்கிலத்திலும், Bangla என பெங்காலியிலும் மாற்ற முடிவெடுத்துள்ளது.
-- இந்திய விளையாட்டு வீராங்கனைகள், பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கார்மாகர் மற்றும் ஜீத்து ராய் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதளிக்கப்பட்டது.
31 -- ப்ரேசில் நாட்டு பாராளுமன்றம் அதிபர் தில்மா ரூசெஃப் மீது குற்றப் பிரேரணை நடவடிக்கை எடுத்து பதவியிலிருந்து நீக்கி, உதவி அதிபர் மிச்சேல் டெமெர் ஐ அதிபராக ஏற்றுக்கொண்டது.
-- கர்நாடக இசைக்கலைஞர் T.M. கிருஷ்ணா மற்றும் சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் ராமன் மகசஸே விருதினைப் பெற்றனர்.
செப்டம்பர் 2016
1 -- அரசு அலுவல் மகளிருக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதங்களாக உயர்த்தி தமிழ் நாடு அரசாங்கம் அறிவித்தது.
2 -- Ch. வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு.
-- தேசிய பசுமை தீர்ப்பாயம், திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்துக்கு ஒப்புதல் அளித்தது.
3 -- அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை போற்றும் வகையில் இந்திய தபால் துறை அஞ்சல் தலை வெளியிட்டது.
4 -- போப்பாண்டவர் ஃப்ரான்சிஸ் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டத்தை வத்திகானில் பொதுமக்களுக்கு அறிவித்தார்.
6 -- உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்பு.
-- புதியதாக உருவாக்கப்பட்ட ஆந்திர பிரதேச மாநிலத்துக்கு 2020 வரையிலான சிறப்பு சலுகைகளை அறிவித்தது.
8 -- பொருள் மற்றும் சேவை வரி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
-- அண்டை நாடு (பாகிஸ்தான்) ஒன்று தீவிரவாதத்தை உருவாக்குவது மட்டுமின்றி, ஊக்குவித்தும் வருகிறது என்று பிரதம மந்திரி 14வது ஆசியான் உச்சி மகாநாட்டில் அறிவித்து, இதர நாடுகள் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
9 -- வட கொரிய மிகப்பெரிய அளவிலான அணு குண்டு சோதனை நடத்தியது.
10 -- இந்தியா/தமிழ் நாட்டைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன், உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
12 -- அருணாச்சால பிரதேச ஆளுநர் J.P. ராஜ்கோவா வை குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் செய்தார்.
-- பொருள் மற்றும் சேவை வரி அமல் படுத்துவதற்கான குழு மற்றும் செயலகத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு.
14 -- இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல் வாதியுமான நவ்ஜோத் சிங் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகினார்.
-- ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.
17 -- பாதை வகுக்கப்பட்ட ஏவுகணைகளை அழிக்கும் இந்திய ஏவுகணை "மர்முகோவா" அறிமுகப்படுத்தப்பட்டது.
21 -- 92 வருட பாரம்பரியம் கொண்ட தனி ரயில்வே நிதி அறிக்கையை, இந்த வருடம் முதல் பொது நிதி அறிக்கையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு.
-- சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் தொடர்பான Little Mount to Chennai airport பயணப் பாதை தொடக்கம்.
22 -- தமிழ் நாடு முக்கிய மந்திரி ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதி.
23 -- ஃப்ரான்ஸ் நாட்டு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஃப்ரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம்.
26 -- தீவிரவாத செயல்கள் முடிவுக்கு வரும் வரை, நிரந்தர இண்டஸ் கமிஷன் மீதான பேச்சுவார்த்த, நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் நிறுத்தி வைத்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக ஏவு தளம் PSLV யிலிருந்து, SCATSAT, PRATHAM, PISAT போன்ற கோள்கள் சேர்த்து 8 கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு சுற்றில் நிலை நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் தேசிய பாராளுமன்றம் அங்கு வாழும் இந்து மக்கள் தங்கள் திருமணங்களை பதிவு செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.
27 -- பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரில் நடக்க இருந்த 19வது சார்க் உச்சி மகாநாட்டில் பங்கு பெற போவதில்லை என இந்தியா முடிவெடுத்துள்ளது.
28 -- இஸ்ரேலின் முன்னாள் அதிபர் சைபன் பெரெஸ் டெல் அவிவ் நகரில் மரணம்.
29 -- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக நுழைந்து, இந்திய ராணுவம் அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை வேரோடு அழித்தது. இதில் 50 பேருக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
30 -- சார்க் உச்சி மகாநாடு கால நிர்ணயமின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு.
அக்டோபர் 2016
1 -- நம்நாட்டின் அலைமாலை telecom spectrum ஏலத்தின் முதல் நாள் சுமார் 53000 கோடி மதிப்பு ஏல முயற்சி அரசாங்கத்துக்கு கிடைத்ததாக அறிவிப்பு.
2 -- சுற்றுச் சூழல் மாறுதலுக்கான பாரீஸ் ஒப்பந்தத்தை இந்தியா ஏற்று கையெழுத்திட்டது.
3 -- ஜப்பான் நாட்டின் Yoshinori Ohsumi 2016க்கான மருத்துவ நோபல் பரிசு வென்றார்.
-- ரஷ்யாவுடன், சிரியா சார்ந்த பேச்சு வார்த்தையை நிறுத்திக்கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு.
4 -- காவேரி மேலாண்மை குழு அமைப்பதை Cauvery Management Board உச்ச நீதி மன்றம் தடை செய்து, ஒரு தொழில் நுட்ப குழுவை அமைக்க பரிந்துரைத்தது.
-- பிரிட்டன் நாட்டு விஞ்ஞானிகள் David Thouless, Duncan Haldane and Michael Kosterlitz ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
-- ஹைத்தி நாட்டில் ஏற்பட்ட ""மேத்யூ"" சூறாவளியால் சுமார் 877 பேர் மரணம்.
5 -- வேதியியல் நோபல் பரிசை, ஃப்ரான்ஸ் நாட்டு Jean Pierre Sauvage, பிரிட்டனின் J.Fraser Stoddart மற்றும் நெதர்லாந்து நாட்டின் Bernard Feringa ஆகியோர் வென்றனர்.
7 -- கொலம்பியா நாட்டு அதிபதி Juan Manuel Santos 2016க்கான அமைதி நோபல் பரிசை பெறுகிறார்.
-- மியான்மார் நாட்டுக்கெதிரான தடைகள அமெரிக்கா நீக்கியது.
10 -- தமிழ் நாட்டு முக்கிய மந்திரி ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருடைய இலாக்காக்கள் அனைத்தும் ஓ. பன்னீர் செல்வம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-- 2016 பெருளாதார நோபல் பரிசை, Harvard and MIT பல்கலைக்கழக பொருளாதார முனைவர்கள் Oliver Hart and Bengt Holmstrom ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.
13 -- அமெரிக்க பாடகர்/பாடலாசிரியர் Bob Dylan அவர்களுக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டது.
-- ஐ.நா பொது சபை, போர்ச்சுகல் நாட்டின் பிரதம மந்திரி Antonio Guterres அவர்களை ஐ.நா. பொது செயலாளராக தேர்வு செய்தது.
-- காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு நாடு விலகல்.
15 -- இந்தியா மற்றும் ரஷ்யா 16 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. அதில் முக்கியமானது, 39000 கோடி மதிப்புள்ள S 400 ஏவுகணை - விமான போர் தளவாடங்கள் வாங்குவது குறித்தது.
16 -- 8வது BRICS உச்சி மகாநாடு, கோவாவில் நடைபெற்றது. அதில் முக்கியமாக தீவிரவாதத்துக்கு எதிரான ""கோவா அறிக்கை"" ஏற்றுக்கொள்ளப்பட்டது.
18 -- மணிப்பூர் மாகாணத்தின் சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா தனது ""Peoples Resurgence and Justice Alliance"" என்ற அரசியல் கட்சியை துவங்கி வைத்தார்.
19 -- ராஜஸ்தான் மாநில OBC Commission (இதர பின் தங்கிய வகுப்பினர் கமிஷன்) உயர் நீதி மன்றத்தால் கலைக்கப்பட்டது.
20 -- காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் வாதி, உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ரீட்டா பகுகுணா பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
21 -- ராஜஸ்தான் அரசாங்கம், புதிய இதர பின் தங்கிய வகுப்பினர் கமிஷன் நியமனம் OBC Commission செய்ய முடிவெடுத்தது.
23 -- INS Viraat விராத், உலகின் பழமையான விமானம் தாங்கி கப்பல், வாபஸ் பெறப்பட்டது.
-- குர்காவ்ன் தொழில் நகரம், குருக்ராம் என பெயர் மாற்றம் பெற்றது.
24 -- டாடா சன்ஸ் நிறுவனம் தனது தலைவர் சைரஸ் மிஸ்திரியை நீக்கி, ரத்தன் டாடா அவர்களை தற்காலிக தலைவராக தேர்ந்தெடுத்தது.
25 -- அமெரிக்க எழுத்தாளர் Paul Beaty அவர்களின் ""The Sell Out"" என்ற புத்தகம், மான் புக்கர் விருதைப் பெற்றது. அமெரிக்க எழுத்தாளர் இந்த விருது பெறுவது இதுவே முதல் தடவை.
26 -- தமிழ் நாடு அரசாங்கத்தால் இயற்றப்பட்ட "" தனியார் சட்டக் கல்லூரிகள் தடுப்பு சட்டம் 2014"" ஐ Establishment of Private Law Colleges (Prohibition) Act, 2014 நிராகரித்து உத்தரவிட்டது.
27 -- பாகிஸ்தான் தூதரக அதிகாரி மகமூத் அக்தர், உளவு குற்றத்துக்காக இந்தியாவை விட்டு வெளியேற்றப் பட்டார்.
-- சீன அதிபர், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
29 -- இந்திய பண்டிகையன தீபாவளி முதல் முறையாக ஐ.நா.சபையில் கொண்டாடப்பட்டது.
நவம்பர் 2016
4 -- சுற்றுச்சூழல் மாற்றம் பற்றிய பாரீஸ் உடன்படிக்கை அமலுக்கு வந்தது.
7 -- இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்யம், வணிக சலுகைகள் மற்றும் அறிவு சார் சொத்து பற்றிய உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன.
-- 15 வருடங்களுக்கு மேலான தரை ஊர்திகளின் பதிவுகளை ரத்து செய்ய முடிவு.
8 -- ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து மத்திய அரசாங்கம் வாபஸ் பெற்றது. (பண மதிப்பை இழத்தல்)
9 -- அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
14 -- மாற்று திறனாளிகள் உரிமைகள் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
16 -- 2014ல் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு.
17 -- ஜன் தன் யோஜனா கணக்கு தவிர மற்ற எல்லா கணக்குகளுக்கும் PAN CARD அவசியம் என மத்திய அரசு அறிவிப்பு.
-- இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் விபின் ராவத் தேர்வு.
20 -- புகழ் பெற்ற திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவருக்கு 47வது சர்வதேச திரைப்பட விழாவில் நூற்றாண்டு பரிசு அளிக்கப்பட்டது. இந்த விழா, கோவாவின் பானாஜி நகரில் நடைபெற்றது.
21 -- ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் இணை உறுப்பினராக இந்தியா சேர்ந்தது. European Organization for Nuclear Research (CERN)
22 -- எம். பாலமுரளி கிருஷ்ணா, புகழ் பெற்ற கர்நாடக இசை மேதை, சென்னையில் மரணம்.
-- M G K மேனன் முன்னாள் இந்திய விண்வெளிக்கழக தலைவர் டெல்லியில் மரணம்.
-- டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ராஜினாமா.
23 -- அமெரிக்காவின் ஐ.நா சபை தூதராக நிக்கி ஹேலி நியமனம். (இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்)
24 -- பண மதிப்பீடு இழப்பு செய்யப்பட்ட ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் பெறுவது நிறுத்தப்பட்டது.
25 -- டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பட்டாசு வெடிப்பை உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை செய்தது.
-- ஃபிடெல் காஸ்ட்ரோ, க்யூபாவின் முன்னாள் அதிபர் மரணம்.
28 -- கொலம்பியாவில் ஒரு விமான விபத்தில், 75 பேர் மரணம். இதில் குறிப்பிட வேண்டியது, ப்ரேசில் நாட்டு உள் நாட்டு கால்பந்து குழு ""Chapecoense Real"" வின் 3 வீரர்களை தவிர்த்து, மற்ற அனைவரும் மரணம்.
30 -- எல்லா திரைப்பட அரங்குகளிலும் திரைப்படம் போடுவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு. ஒலிக்கப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
-- இந்திய வணிகப்போட்டிக் குழு Competition Commission of India, பாரதிய மஹிளா வங்கியை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல்.
DECEMBER 2016
1 -- தாய்லாந்து நாட்டின் மன்னராக இளவரசர் மகா வஜ்ரங்கோர்ன் பதவியேற்றார்.
4 -- ஆஸ்திரிய அதிபர் தேர்தலில் பசுமை கட்சி Greens தலைவர் அலெக்ஸாண்டர் வேன் பெல்லென் தேர்வு.
5 -- தமிழ்நாட்டின் முக்கிய மந்திரி ஜெயலலிதா மரணம். டிசம்பர் 6 ம் தேதி அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதியின் அருகில் அடக்கம்.
-- நியூசிலாந்து பிரதம மந்திரி ஜான் கீ ராஜினாமா.
7 -- இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் RESOURCESAT 2A என்ற தொலை உணர்வு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.
-- ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பீடு நடவடிக்கையின் பின்னணியில் கணக்கில் வராத கணிசமான தொகை வங்கிகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக மாறுதல் செய்யப்பட்டதாக் கணித்து, அமலாக்கப் பிரிவு நாடு முழுவதும் வங்கி கணைக்குகளை சோதனையிட தொடங்கியுள்ளது.
-- 6.5 ரிச்டர் அளவிலான பூகம்பம் இந்தோனேசியாவின் பிடி ஜேயா மாகாணத்தை தாக்கியதில் 97 பேர் மரணம்.
-- சோ. S. ராமசாம்ய் Ramasamy (82), தமிழ் மேடை, திரைப்பட நடிகர், மாநிலங்களவை உறுப்பினர், மற்றும் ""துக்ளக்"" பத்திரிகை ஆசிரியர் சென்னையில் மரணம்.
9 -- சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி S P Tyagi தியாகி உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது. அவருடைய வழக்கறிஞர் கைத்தான் ஐ அமலாக்கப் பிரிவு கைது செய்தது.
-- NEET தேர்வை மண்டல மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு.
11 -- இத்தாலி நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பாவ்லோ ஜெண்டிலியோனி பிரதம மந்திரியாக தேர்வு.
பிரதமராக இருந்த மாட்டியோ ரென்ஸி ராஜினாமா பின்னணியில் இந்த தேர்வு. v வெனிசுலா நாடு 100 பொலிவார் நோட்டுகளை பண மதிப்பு இழக்க உத்தரவிட்டுள்ளது.
12 -- ""வார்தா"" புயல் சென்னையை தாக்கியது. பலத்த பொருள் சேதம் ஏற்பட்டது.
-- பங்கஜ் அத்வானி உலக பில்லியார்ட்ஸ் சேம்பியன் பட்டத்தை வென்றார்.
-- போர்ச்சுகல் நாட்டின் க்றிஸ்டியானோ ரொனால்டோ 4 வது முறையாக ""Ballon d'Or"" Award விருதை வென்றார்.
14 -- மாநிலங்களவை, ஊனமுற்றோர் உரிமை மசோதா 2014ஐ ஏற்றது.
15 -- மத்திய அரசின் பண மதிப்பீடு இழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தடுக்க மறுத்தது.
-- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு.
16 -- நவம்பர் 8ந்தேதி உயர் ரூபாய் நோட்டுகளை பண மதிப்பீடு இழப்பு செய்ததிற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை ஏற்படுத்தி உத்தரவிட்டது.
-- ஊனமுற்றோர் உரிமை மசோதா 2014 மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-- குளிர் கால தொடர் பாராளுமன்றம் முழுவதுமாக எந்த முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் முடிவு.
-- அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஃபின்மெக்கானிக்கா அதிரிகாரிகள் மீது மீண்டும் விசாரணை நடத்த இத்தாலிய உயர் நீதிமன்றம் முடிவு.
-- லண்டன் நகரின் அடையாளச் சின்னமான Big Ben கடிகாரம், பழுது பார்த்தல் மற்றும் மேம்பாடு காரணமாக மக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 29 மில்லியன் பவுண்ட் செலவில், மூன்றாண்டுகளில் இந்தப் பணி முடியும் என தெரிகிறது.
19 -- நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 44வது தலைமை நீதிபதியாக நியமனம்.
21 -- தமிழ் நாட்டின் முக்கிய செயலர் P. ராம மோகன ராவ் இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை.
-- 2016 சாஸ்த்ரா பல்கலைகழகத்தின் ராமானுஜன் கணித விருது Maksym Radziwill, McGill University மற்றும் Kaiisa Matomaki, University of Turku, Finland ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
22 -- தமிழ் நாட்டின் முக்கிய செயலராக கிரிஜா வைத்யநாதன் நியமனம்.
-- டெல்லி யின் துணை இணை ஆளுநர் நஜீப் ஜங் ராஜினாமா.
-- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ன் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுகளைப் பெற்றார்.
31 -- டெல்லியின் துணை இணை ஆளுநராக அனில் பைஜால் பதவியேற்பு.
-- ஜெனரல் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவியேற்பு.
-- ஏர் சீஃப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா, இந்திய விமானப் படையின் தலைமை தளபதியாக பதவியேற்பு. ஆக அறிவித்துள்ளது.
10 -- நிலச் சொத்து மசோதாவை மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது. Real Estate Bill.
-- இந்திய விண்வெளிக்கழகம், IRNSS - 1F வழிகாட்டி செயற்கைக்கோளை விண்சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தியது.
11 -- ""ஆதார் (உரியோருக்கு நேரடி பண பட்டுவாடா) 2016 சட்டம் மக்களவையில் ஒரு பண மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது.
14 -- ராணுவத்தினருக்கான "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்" திட்டத்தை பிரதம மந்திரி அறிவித்தார்.
16 -- பாராளுமன்றம் ஆதார் மசோதா 2016 ஐ ஏற்றுக்கொண்டது.
27 -- உத்தராகாண்ட் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
28 -- இந்தியா முழுவதுக்குமான அவசர தொலைபேசி எண் "112" அறிமுகப்படுத்த தொலைபேசி கழகம் அனுமதி.
29 -- பாகிஸ்தானின் கூட்டு ஆய்வு குழு பதான் கோட் போர் விமான தளத்தை, தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பார்வையிட்டது.
30 -- பீஹார் சட்ட மன்றம், மாநிலம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்தியது. Bihar Excise (Amendment) Bill 2016
-- Htin Kyaw , மியான்மார் நாட்டின் அதிபராக (பொது மக்களிலிருந்து), இந்நாட்டின் 50 வருட சரித்திரத்தில், முதன் முறையாக பதவியேற்பு.