Khub.info Learn TNPSC exam and online pratice

போர்ச்சுகீசியர் இந்தியா -- PORTUGUESE IN INDIA

Q1. இந்திய மண்ணில் முதலில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள் யார்?

போர்ச்சுகீசியர்கள்.

Q2. இந்தியாவுக்கு வந்த முதல் போர்ச்சுகீசியர் யார், அவரை தொடர்ந்து வந்தவர்கள் யார், அவர்கள் எவ்வாறு, இந்திய பகுதிகளை கைப்பற்றினர்?
20.5.1498 அன்று, வாஸ்கோ டா காமா - காலிகட் கடற்கரையில் வந்திறங்கினார். அப்போது அந்த பகுதியை ஸாமோரின் மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆனால் அவர் நீண்ட நாள் இங்கு இருக்க முடியாமல் திரும்ப சென்றார். ஆனால், சில போர்ச்சுகீசியர்களை வணிகம் செய்ய விட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து, பெட்ரோஸ் ஆல்வாரஸ் கேப்ரால் 13.9.1500ல் வந்தார். 1502ல் புலிகாட் என்ற இடத்தில், விஜயநகர மன்னர் அனுமதியுடன் ஒரு கோட்டையை கட்டினர். 30.10.1502ல் வாஸ்கோடகாமா மீண்டும் ஒரு பெரிய குழுவுடன் வந்திறங்கினார். சில எதிர்ப்புகளுக்குப் பிறகு சில வணிக மையங்களை உருவாக்கி விட்டு நாடு திரும்பினார். போர்ச்சுகல் அரசால் நியமிக்கப்பட்ட வைஸ்ராய் ஃப்ரான்சிஸ்கோ அல்மேடா 13.9.1505ல் வந்து, கோவாவுக்கருகில் அஞ்சதீப், மற்றும் கன்னனூர் என்ற இடங்களில் கோட்டைகள் கட்டினர். 1509ல் அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ பீஜாப்பூர் சுல்தானைத் தோற்கடித்து கோவாவை கைப்பற்றி, போர்ச்சுகீசிய இந்திய தலநகர் ஆக்கினார்.
Q3. போர்ச்சுகல் அரசால் இந்திய பகுதிகளுக்கு முதல் வைஸ்ராயாக (ஆளுநர்) நியமிக்கப்பட்டவர் யார்?
போர்ச்சுகல் அரசால் நியமிக்கப்பட்ட வைஸ்ராய் ஃப்ரான்சிஸ்கோ அல்மேடா 13.9.1505ல் கொச்சின் வந்திறங்கி பிறகு கோவாவுக்கருகில் அஞ்சதீப், மற்றும் கன்னனூர் என்ற இடங்களில் கோட்டைகள் கட்டினர்.
Q4. ஃப்ரான்சிஸ்கோ அல்மேடா வுக்கு பதிலாக வைஸ்ராயாக நியமிக்கப்பட்டவர் யார், அதைத் தொடர்ந்தது நிகழ்ந்தது என்ன?
அஃபோன்ஸோ டி அல்புகெர்கூ -- இவர் 1508ல் ரகசியமாக வந்து சேர்ந்தார். அவருடைய நியமனத்தை ஏற்காத அல்மேடா, அல்புகெர்கூ வை கைது செய்து சிறையிட்டு, 1509ல் டையூ போரை நடத்தி, அந்த பகுதியை கைப்பற்றினார். பிறகு, அல்புகெர்கூ வை விடுவித்துவிட்டு, அல்மேடா சொந்த நாட்டுக்கு திரும்பினார்.
Q5. ஃப்ரான்சிஸ்கோ அல்மேடா சொந்த நாட்டுக்கு திரும்பும் போது அவருக்கு என்ன நடந்தது?
அல்மேடா, தென் ஆப்பிரிக்கவின் நன்னம்பிக்கை முனை யில் கொய் கொய் பழங்குடி இன மக்களால் 1510ல் கொலை செய்யப்பட்டார்.
Q6. அல்புகெர்கூ இந்திய பகுதிகளை கைப்பற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன?
காலிகட் பகுதியை கைப்பற்ற அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால், மேற்கு நோக்கி சென்று, திம்மய்யா என்றவர் உதவியுடன், பீஜாப்பூர் மன்னரை தோற்கடித்து, கோவாவை கைப்பற்றி தனது தலைநகராக்கினார்.
Q7. போர்ச்சுகீசியர்களால் கைப்பற்றப்பட்டு ஆண்ட பகுதிகள் யாவை?
கோவா -- GOA – 1510ல் அல்புகெர்கூ வால் கைப்பற்றப்பட்டு, போர்ச்சுகீசிய இந்தியாவின் தலைநகராக இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த பகுதியை பெறும் வரை இயங்கியது.
தாத்ரா நாகர் & ஹவேலி DADRA & NAGAR HAVELI – இந்த பகுதி 1779ல் குஜராத் சுல்தானிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என தெரிகிறது. 1954ல் இந்தப் பகுதி இந்தியாவால் கைப்பற்றப்பட்டு போர்ச்சுகீசியரிடமிருந்து விடுவிக்கப்பட்டது. இருப்பினும், 1961ல் போர்ச்சுகீசிய பகுதிகள் முழுமையாக கைப்பற்றப்பட்ட பிறகு தான் இந்திய பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த பகுதி 1961 ல் இந்தியாவுடன் மக்கள் விருப்பப்படி. இணைக்கப்பட்ட போது நடந்த ஒரு அரசியல் விநோதம். அரசியல் ரீதியான நடைமுறைகள் சட்ட ரீதியாக உடன்படிக்கை மூலம் நடக்க வேண்டும் என்ற அடிப்படையில், அப்போது அரசாங்க அதிகாரியாக இருந்த IAS அதிகாரி திரு பத்லானி அவர்கள் அந்த ஒரு நாள் அப்பகுதியின் பிரதம மந்திரி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு உடன் இணைப்பு உடன் படிக்கையில் கையொப்பமிட்டனர். இந்த அரசாங்க அதிகாரிகளின் வரலாற்றில் இது ஒரு சிறப்பு நிகழ்வு - குறிப்பாக திரு பத்லானி அவர்களுக்கு.
பாம்பே BOMBAY – முகலாயர்களின் வளர்ச்சிக்கு பயந்த குஜராத் சுல்தான், 1534ல் போர்ச்சுகீசியர்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு, அதற்கு பதிலாக, இந்த பகுதியை போர்ச்சுகீசியருக்கு விட்டுக் கொடுத்தார். இவ்வாறாக இந்த பகுதி போர்ச்சுகிசீயருக்கு கிடைத்து, பிற்காலத்தில், இந்தப் பகுதி இங்கிலாந்தின் சார்லஸ் 2 க்கு போர்ச்சுகீசிய இளவரசி கேத்தரின் உடன் நடந்த திருமணத்திற்கு பரிசாக மே 1661ல் அளிக்கப்பட்டது. எஞ்சியிருந்த பாம்பே பகுதியை ஆங்கிலேயருக்கு குத்தகையில் விட்டுச் சென்றனர்
தாமன் மற்றும் டையூ DAMAN & DIU – 1531ல் போர்ச்சுகீசியரால் கைப்பற்றப்பட்டு, 1961 ல் இந்திய ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்படும் வரை போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. போர்ச்சுகீசியரால் கைப்பற்றப்பட்ட, கோவா மற்றும் தாமன் & டையூ பகுதிகளை 1961 வரை இந்தியாவிடம் ஒப்படைக்க போர்ச்சுகல் மறுத்து வந்தது. இதனால், 1961ல் “Operation Vijay” என்ற ரகசிய குறி நடவடிக்கை மூலம் 12 டிசம்பர் 1961 அன்று கைப்பற்றியது. போர்ச்சுகல் அரசு இதை 1974ல் அங்கீகரித்தது.