ஃப்ரெஞ்ச் இந்தியா -- FRENCH IN INDIA
Q1. ஃப்ரெஞ்ச் இந்தியா உருவான கால வரிசை என்ன?
1664 – ஃப்ரெஞ்ச் கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கப்பட்டது.
1668 - சூரத் ல் ஃப்ரெஞ்ச் ஃராங்காய்ஸ் கேரோன் என்பவரால் ஒரு தொழிற்சாலை
துவங்கப்பட்டது.
1669 - மர்க்காரா என்பவரால் ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சால நிறுவப்பட்டது.
1673 - வங்காள ஆளுநர் நவாப் சைஷ்டா கான் அனுமதியுடன் சந்திர நாகூர் நகரத்தை
உருவாக்கினார்.
1674 - பீஜாப்பூர் சுல்தானிடம் இருந்து பாண்டிச்சேரியை பெற்று தங்களது முழு
ஆதிக்கத்தையும் நிர்வாகத்தையும் உருவாக்கி, ஃப்ராங்காய்ஸ் மார்ட்டின் அவர்களை
முதல் ஆளுநராக நியமித்தனர். 1693 -1699 காலத்தில் டச் ஆட்சியைத் தவிர்த்து, தொடர்ந்து
இந்திய சுதந்திரம் வரை ஃப்ரான்ஸ் நாட்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தது. (1699ல் ரிஸ்விக்
உடன்படிக்கை மூலம் ஃப்ரான்ஸ் இப்பகுதியை மீண்டும் பெற்றது)
Q2. ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தால் இந்தியாவில் ஆளப்பட்டுவந்த பகுதிகள் பற்றி கூறுக.
18ம் நூற்றாண்டின் நடுக்காலத்திற்குள், ஃப்ரெஞ்ச் ஹைதராபாத் ல் இருந்து கன்னியாகுமரி
வரை பல பகுதிகளை கைப்பற்றி விட்டனர். இவற்றுள் பெரும் பகுதியை, 1760ல் நடந்த
வந்தவாசிப் போரில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். மேலும், 1761ல் பாண்டிச்சேரி ஆங்கிலேயர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு 1765 வரை ஆங்கிலேயர் வசம் இருந்தது.
1765ல் ஆங்கிலேயர்களுக்கும் ஃப்ரெஞ்ச் க்கும் ஏற்பட்ட உடன் படிக்கையின் படி
பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் இடம் திரும்ப கொடுக்கப்பட்டது. இருப்பினும் 1765 -1816 காலங்களில்
இப்பகுதி இரு நாடுகளுக்குமிடையில் மாறி மாறி இருந்து வந்தது. 1816ல் நெப்போலியன்
காலத்து புரட்சிகள், போர்கள் முடிவுற்ற நிலையில், பாண்டிச்சேரி முழுமையாக ஃப்ரெஞ்ச்
இடம் மாறி, இந்திய சுதந்திரம் வரை நீடித்தது.
Q3. ஃப்ரெஞ்ச் இந்தியாவின் முதல் ஆளுநர் யார்?
ஃப்ராங்காய்ஸ் மார்ட்டின் 1674
Q4. ஃப்ரெஞ்ச் ஆளுநர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?
ஜோசஃப் ஃப்ராங்காய்ஸ் டூப்ளெக்ஸ் -- 1742-1754 -- பாண்டிச்சேரியின் இன்றைய நிலைக்கு
இவரே காரணம். Joseph Francois Duplex – 1742-1754 –
Q5. பாண்டிச்சேரி ன் கடைசி ஃப்ரெஞ்ச் ஆளுநர் யார்?
சார்லஸ் ஃப்ராங்காய்ஸ் மாரி பேரோன் -- 20.8.1947 வரை.
Q6. இந்திய சுதந்திரத்தின் போது, ஃப்ரெஞ்ச் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய பகுதிகள் யாவை?
1. மசூலிப்பட்டினம், கோழிக்கோடு மற்றும் சூரத் நகரங்களில் இருந்த வணிக மையங்கள்
அக்டோபர் 1947ல் இந்தியாவுடன் இணைந்தன.
2. சந்தர் நாகூர் (இப்போது சந்தர் நகர்) இந்தியாவுடன் 1950லும், மேற்கு வங்காளத்துடன் 1955லும் இணைந்தது.
3. புதுச்சேரி, யாணம், மாஹே, காரைக்கால் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக
1.11.1954 முதல் அறிவிக்கப்பட்டன. ஃப்ரான்ஸ் இந்த இணைப்பை 1963ல் அங்கீகரித்தது.
4. யாணம் (ஆந்திரா), மாஹே (மலபார், கேரளா) ஆகியவை 1725 லும், காரைக்கால் (தமிழ்
நாடு) 1739 லும் ஃப்ரெஞ்ச் ஆளுநர்கள் லெனாய்ர் மற்றும் டூமாஸ் காலத்தில் கைப்பற்றப்
பட்ட பகுதி.
இந்த பகுதிகள் அனைத்தும், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நவம்பர் 1954ல் இந்தியாவுடன்
இணைந்தது.