Khub.info Learn TNPSC exam and online pratice

டச் இந்தியா -- DUTCH IN INDIA

Q1. டச் கிழக்கிந்திய நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?
மார்ச் 1602ல்.

Q2. டச் எப்போது தனது முதல் குடியிருப்பு பகுதியை (காலனி) உருவாக்கியது? அவர்களது தலைநகரம் எது?
1608ல் கொச்சின், மலபார், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வங்காளம் பகுதிகளில் சில சிறு பகுதிகளில் மட்டுமே இவர்களது குடியிருப்பு பகுதிகள் மட்டும் இவர்கள் வசம் இருந்தன.
Q3. சிறு சிறு பகுதிகளாக இருந்த போதிலும், டச் பிடியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் (காலனி) யாவை?
1608 முதல் 1825 வரை பல சிறு பகுதிகளை டச் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தது. பிறகு சிறிது சிறிதாக ஆங்கிலேயர்களிடம் இழக்கத் தொடங்கினர். அவை: கேரளா – கொடுங்கல்லூர் (1662) ; கொச்சின் (1663); கொல்லம் (1661); கண்ணனூர் (1663-1790); குந்தாபுரா (1667-1682); காயங்குளம் (1645); மற்றும் பொன்னானி (1663).
ஆந்திரபிரதேசம் – கோல்கொண்டா (1662-1773); பிமிலிபட்டினம் (1687-1795 and 1818-1825); காக்கிநாடா (1734 -1795 & 1818-1825); தாத்ஸெரம் (காக்கிநாடா அருகில்) (1663-1730); நஜெல் வான்ஸே (1669-1687); பாலக்கொள்ளு (1631-1781; 1785-1795 and 1818-1825); மசூலிப்பட்டினம் (1605-1676); நிஸாம்பட்டினம் (1606-1668);
தமிழ்நாடு – சத்ராஸ் (சதுரங்கப்பட்டினம்) கல்பாக்கம் அருகில் Sadras (1654-1757; 1785-1795 and 1818-1825); திருப்பாபுலியூர் (1608-1625); கடலூர் (1647-1658); போர்ட்டனோவா, தரங்கம்பாடி, பரங்கிப்பேட்டை 1608-1625; நாகப்பட்டினம் (1658-1781); மற்றும் தூத்துக்குடி (1658-1825).
வங்காளம் – சின்ஸூரா, பண்டேல் (1625-1825). இவற்றுள் சில பகுதிகள் போர்கள் மூலமாகவும், 1824ல் ஆங்கிலேய ஃப்ரெஞ்ச் உடன் படிக்கை ஏற்பட்டதால், அநேகமாக அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசம் வந்தது.
Q4. டச் நிர்வாகத்தில் எந்தெந்த இடங்களில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன?
மசூலிப்பட்டினம் --1605; புலிகாட்– 1610; சூரத் – 1616; பிமிலிபட்டினம் – 1641; காரைக்கால் – 1645; சின்ஸூரா -- 1653; காசிம்பஜார், பரநாகூர், பாட்னா, பாலசூர், நாகப்பட்டினம் -- 1658 மற்றும் கொச்சின் -- 1663.
Q5. டச் கிழக்கிந்திய நிறுவனத்தின் முக்கிய வணிக மையம் ஆக இருந்தது எது?
புலிகாட் -- பிற்காலத்தில் இது நாகப்பட்டினத்திற்கு மாற்றம் பெற்றது. (1690க்கு பிறகு)
Q6. டச் கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வளர்ச்சி, எந்தப் போரின் மூலம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது?
1759 -- பெடெரா (வங்காளம்) போரில் டச் முழுமையாக தோற்கடிக்கப்பட்டனர்.
Q7. டச் கிழக்கிந்திய நிறுவனம் முழுவதுமாக இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டது?
1795ல். இருப்பினும் சில சிறிய பகுதிகள் 1825 வரை நீடித்தது. 1845ல் டச் நிர்வாகம், தங்கள் பகுதிகளை முழுமையாக ஆங்கிலேயர்களுக்கு விற்றுச் சென்று விட்டனர்.