Khub.info Learn TNPSC exam and online pratice

ஆங்கிலேயர் இந்தியா -- BRITISH IN INDIA

Q1. இந்தியாவுக்கு வருகை தந்த முதல் ஐரோப்பிய கடல் யாத்திரிகர் யார்?

ஜான் மில்டென்ஹால் 1539. அக்பர் அரசவைக்கு விஜயம் செய்து பேச்சு வார்த்தை நடத்தினவர்.

Q2. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் எப்போது யாரால் நிறுவப்பட்டது?
கடல் கடந்து வணிகம் செய்ய விரும்பிய வணிகர்கள் அடங்கிய குழுவால் 1599ல் நிறுவப் பட்டது.
Q3. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு உலகின் கிழக்குப் பகுதியில் வணிகம் செய்ய இங்கிலாந்து ராஜ வம்ச ஆட்சியின் ஆங்கீகாரம் கொடுக்கப்பட்டது?
31--12--1600. எலிசபெத் மகாராணி 1 ஆல். 1609ல் மன்னர் ஜேம்ஸ் 1 கிழக்கிந்திய நிறுவன வணிகத்தை இங்கிலாந்தின் ஏகபோக உரிமையாக்கி சாசனம் அறிவித்தார்.
Q4. எந்த ஆங்கிலேயர், எப்போது, இந்திய விஜயம் செய்து, எந்த மன்னரிடம், சூரத் நகரில் ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி பெற்றார்?
1608ல், கிழக்கிந்திய நிறுவனம் சூரத் நகரில் ஒரு தொழிற்சாலை துவங்க முடிவெடுத்தது. அதன் படி, கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவர் 1609ல் முகலாய மன்னர் ஜஹாங்கீர் அரசவைக்கு விஜயம் செய்து, அனுமதி கேட்டார். அனுமதி பெற்றும், அதை நடைமுறை படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. காரணம், போர்ச்சுகீசியர்கள் தலையீட்டினாலும் அரசியல் அழுத்தத்தினால் தாமதம் ஏற்பட்டது. அதனால், ஆங்கிலேயர்கள் போர்ச்சுகீசியர்களுடன் ஸ்வாலி (சூரத் அருகில்) 1612ல் ஒரு போர் நடத்தி, போர்ச்சுகீசியர்களை தோற்கடித்தனர். இதன் பிறகு மன்னர் ஜஹாங்கீர், ஆங்கிலேயர் சூரத் நகரில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்க அரசாங்க சட்ட அனுமதி கொடுத்தார். 1613ல் இந்த தொழிற்சாலை தொடங்கப் பட்டது.
Q5. கேப்டன் ஹாக்கின்ஸ் க்குப் பிறகு ஜஹாங்கீர் அரசவைக்கு விஜயம் செய்த ஆங்கிலேயர்கள் யார்?
1615ல் சர் தாமஸ் ரோ மன்னர் ஜேம்ஸ் 1 ன் அரசாங்க தூதுவர் ஆக விஜயம் செய்தார். மன்னர் ஜஹாங்கீரிடம் மேலும் சில தொழிற்சாலைகள் துவங்க அனுமதி பெற்றுக் கொடுத்து 1619ல் இங்கிலாந்து திரும்பினார்.
Q6. சர் தாமஸ் ரோ, மன்னர் ஜஹாங்கீரிடம் அனுபதி பெற்ற பிறகு, ஆங்கிலேயர்கள் எங்கெல்லாம் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவினர்?
மேற்கு பகுதி – ஆக்ரா, அஹமதாபாத், பரோடா, ப்ரோச் -- 1619ல்.
தென் கிழக்கு பகுதி – மசூலிப்பட்டினம் - 1611; அர்மகாவ்ன் (புலிகாட் அருகில்) - 1626.
கிழக்குப் பகுதி – ஹரிஹர்பூர், பாலசூர் (ஒடிசா) -- 1633; ஹூக்ளி -- 1651; பாட்னா, டாக்கா, காசிம் பஜார் -- வங்காளம்-ஓடிசா -- 1652.
Q7. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு, இந்தியாவில் நிலம் வாங்கவும், தங்கள் சுய ராணுவத்தை உருவாக்கவும், சுயமாக நாணயம் அச்சடிக்கவும், இங்கிலாந்து ராஜ வம்சம் எப்போது அனுமதியளித்தது?
1670ல் மன்னர் ஜேம்ஸ் 2 ஆல். இதுவே ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வலுப்பெற உதவியாக அமைந்தது.
Q8. ஆங்கிலேயர்கள் தொடக்கத்தில், எங்கெல்லாம் நிலம் கையகப்படுத்துவதில் வெற்றி கண்டனர்?

தெற்கு – 1639ல் ஆங்கிலேயர் ஃப்ரான்சிஸ் டே, சென்னபட்டினம் (பிற்காலத்தில் மெட்ராஸ், சென்னை) என்ற இடத்தை சந்திரகிரி ராஜா சென்னப்ப நாயக்கரிடமிருந்து பெற்று, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்ற ஒரு தொழிற்சாலையை நிறுவினர். இது 1678-1680 களில் முடிவடைந்து கிழக்கு பகுதிகளான வங்காளம், பீஹார் மற்றும் ஒடிசாவுக்கு தலைமையகம் ஆக இயங்கியது.
மேற்கு – 1668 – பம்பாயை சுற்றிய பெரும் பகுதி (இங்கிலாந்து சார்லஸ் 2 + கேத்தரின் போர்ச்சுகல் இளவரசி) திருமணப் பரிசாக கிடைத்தது. மீதமுள்ள பகுதியை, போர்ச்சுகீஸ் மற்றும் சார்லஸ் 2 இடமிருந்து குத்தகைக்குப் பெற்றனர். மேற்கு பகுதி தொழில் நடவடிக்கைகளுக்கு பம்பாய் தலைமையகமாக இயக்கப்பட்டது. ஜெரால்ட் ஆங்கியர் பம்பாய்க்கு முதல் கவர்னர் ஆக 1669 - 1677 வரை பணியாற்றினார்.
கிழக்கு – 1698ல், வங்காளத்தில் சுதானூதி என்ற இடத்தில் முதலில் தொழிற்சாலையை துவக்கினார். பிற்காலத்தில் இதை ஒரு கோட்டையாக (பிற்காலத்தில் வில்லியம் கோட்டை) மாற்றினர். பிறகு சுதானூதி, காளிகட்டா, மற்றும் கோவிந்த்பூர் ஆகிய ஊர்களை இணைத்து கல்கத்தா நகரம் உருவாக்கப்பட்டு, 1700ல் வங்காளம், பீஹார், ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு தலைமையகம் ஆனது. வில்லியம் கோட்டைக்கு சார்லஸ் அயர் என்பவர் முதல் தலைவர் ஆனார்.

Q9. எந்த முகலாய மன்னர் ஆங்கிலேயர்களுக்கு சுங்க வரி விலக்கு அளித்தார்?

1686-1689 களில், ஆங்கிலேயர்களுக்கும் முகலாயர்களுக்குமிடையுமான உறவு விரிசல் பெற்று விரோத நிலைக்கு சென்றது. இந்த விரோத போக்கு சர் ஜான் சைல்ட் என்ற ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கியது. கடைசியில், 1690ல் கிழக்கிந்திய நிறுவனம் சரணடைந்து அவுரங்கசீப் ஆல் மன்னிக்கப்பட்டு, 1691ல் சுங்க வரி விலக்கும் அளிக்கப்பட்டனர். இதற்கு பதிலாக, வங்காள வருவாயில் ஒரு பகுதி அவுரங்கசீப்புக்கு கொடுக்கப்பட்டது. இந்த சலுகை, 1717ல், குஜராத், டெக்கான் பகுதிகளிலும் ஃபரூக் சியார் ஆல் அளிக்கப்பட்டது. இதனால், ஆங்கிலேயர்களின் வணிகம் பெருகி, தங்களது ஆட்பலத்தை உயர்த்துவதற்கும் பெரிதும் உதவியது. 

Q10. இந்திய பகுதிகளை, ஆங்கிலேயர்களின் ராணுவ ரீதியாக கைப்பற்றுதல் எப்போது தொடங்கியது?
1745ல் கர்நாடிக் போர்கள் மூலமாக. (ஆற்காடு நவாப் பகுதிகள்)
Q11. எத்தனை கர்நாடிக் போர்கள் நடந்தன?
மூன்று
1. 1745-1748 -- ஆற்காடு நவாபுக்கும் ஃப்ரெஞ்சுக்கும் இடையில்
2. 1749-1754 -- ஆங்கிலேயர்களுக்கும் ஃப்ரெஞ்சுக்கும் இடையில்
3. 1758-1763 -- ஆங்கிலேயர்களுக்கும் ஃப்ரெஞ்சுக்கும் இடையில்.
Q12. 1745-1748 ல் முதல் கர்நாடிக் போர் நடக்க காரணிகள் யாவை?
1. 1745 – ஆங்கிலேய கப்பற்படை, ஃப்ரெஞ்ச் ன் சில கப்பல்களைக் கைப்பற்றியது.
2. 1746 – பதிலடியாக, டூப்ளெக்ஸ் தலைமையிலான ஃப்ரெஞ்ச் படை சென்னையைத் தாக்கி ராபர்ட் க்ளைவையும் சேர்த்து பல வீரர்களை சிறைபிடித்தனர்.
3. ஆங்கிலேயர்கள் மதராஸ் ஐ திரும்பப்பெற ஆற்காடு நவாப் உதவியை நாடினர். ஆற்காடு நவாபின் முயற்சியை ஃப்ரெஞ்ச் நிராகரித்தனர்.
4. இதனால், ஆற்காடு நவாபுக்கும் ஃப்ரெஞ்ச் க்குமிடையைல் முதல் கர்நாடிக் போர் நடந்து, நவாப் தோற்கடிக்கப்பட்டார்.
5. 1748- ல் ஐரோப்பாவில் அவ்வமயம் நடந்த வாரிசுச் சண்டை முடிவடைந்ததால், மதராஸ் ஆங்கிலேயர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டு, பதிலாக, ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட சில வட அமெரிக்க பகுதிகள், 1748 அய்க்ஸ்லா சேப்பல் உடன்படிக்கை படி ஃப்ரெஞ்சுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது.
Q13. 1749-1754 இரண்டாம் கர்நாடிக் போர் நடக்க காரணங்கள் யாவை?
1. முஸாஃபர் ஜங் (ஹைதராபாத்) மற்றும் சந்தா சாஹிப்(கர்நாடிக்) ஆகியோருக்கு வாரிசு போர்களில் ஃப்ரான்ஸ் ஆதரவு அளித்தது;
2. அதே சமயம் ஆங்கிலேயர்கள் அந்த வாரிசுப் போர்களில் எதிர் அணிக்கு - நாஸீர் ஜங், ஹைதராபாத் மற்றும் அன்வருத்தீன், முகமது அலி (கர்நாடிக்) க்கும் ஆதரவு அளித்தனர்.
3. 1749ல் ஃப்ரெஞ்ச் எதிரணி வாரிசுகளை கொன்று, தங்கள் ஆதரவு பெறுபவர்களை பதவியில் அமர்த்தினர்.
4. 1751, ஆற்காடு பகுதிகளை ராபர்ட் க்ளைவ் ஆற்காடு பகுதிகளை கைப்பற்றினார். அதே கால கட்டத்தில், ஃப்ரெஞ்ச் ஆளுநர் டூப்ளெக்ஸ், ஆங்கிலேயர்களிடம் இரண்டு தொடர் தோல்விகளைக் கண்டார்.
5. 1752ல், ஆற்காடு நவாப் சந்த சாகிப் ஒரு ஆங்கிலேய தளபதியால் கொல்லப்பட்டு, அன்வருத்தீன் நவாப் ஆக்கப்பட்டார்.
6. 1753-1754 காலக்கட்டத்தில், டூப்ளெக்ஸ் தனது தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சிகளில் தோல்வி கண்டதை அடுத்து, அவர் 1754ல் ஃப்ரான்ஸொக்கு திரும்ப அழைக்கப்பட்டார். இரண்டாம் கர்நாடிக் போர் இவ்வாறாக முடிவு பெற்றது.
Q14. மூன்றாம் கர்நாடிக் போர் 1758-1762நடக்க காரணம் யாவை?
1. 1756 -- இந்த காலக் கட்டத்தில் ஃப்ரான்ஸூக்கும் இங்கிலாந்துக்குமிடையில், ஆஸ்திரிய வாரிசு சண்டையில் பங்கு இருந்ததாலும், உலகின் பல இடங்களில் தங்கள் குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதில் இரு நாடுகளுக்குமிடையில் விரோதம் நீடித்ததாலும்;
2. 1757ல் வங்காளத்தில் சந்திரநாகூர் பகுதியை ராபர்ட் க்ளைவ் கைப்பற்றியது;
3. 1758 - ஃப்ரான்ஸின் ராஜ வம்ச பிரதிநிதி கௌண்ட் டி லாலி நிலைமையை சீர் செய்ய இந்தியா வருகை;
4. 1759 -- ஃப்ரான்ஸ் ஆங்கிலேயர்களுடன் மூன்று முறை கப்பற்படை போரில் தோல்வி கண்டது;
5. 1760 -- வந்தவாசி போரில் (22.1.1760) ஆங்கிலேய தளபதி அயர் கூட், ஃப்ரெஞ்ச் டி லாலி யைத் தோற்கடித்தார். வந்தவாசி கோட்டை கைப்பற்றப்பட்டது.
6. 1761 -- வந்தவாசி போருக்குப் பிறகு ஹைதராபாத் நிஸாமுக்கு ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாளர்கள் ஆனார்கள். பாண்டிச்சேரி மற்றும் இதர ஃப்ரெஞ்ச் குடியிருப்புகள் ஆங்கிலேயர் வசம் ஆனது.
7. 1763 -- ஆங்கிலேயர் - ஃப்ரெஞ்ச் க்கிடையில் பாரீஸ் உடன்படிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி, காரைக்கால், யாணம், மாஹே பகுதிகள் ஃப்ரெஞ்சுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் ஃப்ரெஞ்ச் வளர்ச்சி முடிவுற்றது.
Q15. ஆங்கிலேயர்களுக்கும் வங்காள நவாபுக்கும் இடையில், எங்கு நடந்த போர் மூலம், கிழக்கு இந்திய பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் ஆனது மட்டுமின்றி, இந்திய சரித்திரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது ?
1757 -- ப்ளாசி (மூர்ஷிதாபாத் அருகில் ஒரு கிராமம்) போர் -- வங்காள் நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கும் ஆங்கிலேயர் ராபர் க்ளைவுக்குமிடையில் நடந்த போரில், நவாபின் மந்திரி மீர் ஜாஃபர் செய்த சதி திட்டத்தால், நவாப் தோற்கடிக்கப்பட்டது மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டார். இதுவே இந்திய சொத்துக்கள் ஆங்கிலேயர்களால் கைப்பற்றும் வழக்கம் தொடங்கிய நிகழ்வு. இந்த போர் நிகழ்வில், ராபர்ட் க்ளைவும், தன் பங்குக்கு ஒரு சதித் திட்டம் தீட்டி, தன்னுடன் சதித் திட்டம் தீட்டிய ஒருவருக்கு எந்த பணமும் கொடுக்காதவாறு ஒரு உடன்படிக்கையை தயாரித்து அவர்களிடம் கையொப்பம் பெற்று, தனது கூட்டாளிகளையும் ஏமாற்றினார்.
Q16. ப்ளாசிப் போர் யாருக்கிடையில் எப்போது நடந்தது? முடிவு என்ன?
23 ஜூன் 1757 – ராபர்ட் க்ளைவ் தலைமையில் ஆங்கிலேயர்களுக்கும், வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவுக்கும் இடையில் நடந்த போர். இதில் நவாப் தோற்கடிக்கப்பட்டார்.
Q17. வங்காள நவாப் சிராஜ் உத் தௌலா தோல்விக்கு காரணமாயிருந்த அவரது அரசவை உறுப்பினர்கள் யாவர்?
முக்கியமாக மீர் ஜாஃபர், மற்றும் அவருக்கு உதவி புரிந்த யார் லுதூஃப் கான் மற்றும் ராய் துர்லாப். இவர்கள் ரகசியமாக ஆங்கிலேய அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த சதிச் செயலில் ஈடுபட்டனர்.
Q18. 1757 ப்ளாசிப் போர் ஏற்படக் காரணம் என்ன?
1. நவாப் அறிவித்த உத்தரவுகளை மீறியதாலும், அளிக்கப்பட்ட சலுகைகளை தவறாக பயன்படுத்தியதாலும்.
2. நவாபின் உத்தரவுக்கு எதிராக கல்கத்தா வணிக மையத்தை கோட்டையாக்கியது.
3. நவாபின் இளவயது, அனுபவின்மை, அவசர நடவடிக்கை.
Q19. பக்ஸார் போர் யாரிடையே, எப்போது நடந்தது?
22.10.1764 – பக்சார் -- பீஹார் பாட்னாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் -- இந்தப் போர் மேஜர் ஹெக்டர் மன்றோ, ஆங்கிலேய தளபதி படைகளுக்கும், வங்காள நவாப் மீர் காசிம், ஆவாத் நவாப் ஷூஜா உத் தௌலா மற்றும் முகலாய மன்னர் ஷா ஆலாம் 2 சேர்ந்த படைகளுக்குமிடை நடந்த போர்.
Q20. 1764 பக்ஸார் போர் நடக்க காரணிகள் யாவை?
1. வங்காள நவாப் மற்றும் ஆங்கிலேயர்களுக்கிடையில் தீவிர கருத்து வேறுபாடும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும்.
2. வங்காள் நவாபின் உத்தரவுகளை மீறுதல் மற்றும் வரி விலக்குகளும்.
3. உள்ளூர் மக்கள் மற்றும் நவாப் அதிகாரிகளை அவமதித்தல், மற்றும் அவமானப் படுத்துதல்.
Q21. பக்ஸார் போரில் மீர் காசிம் மற்றும் இதர படைகள் தோல்வியுறக் காரணம் என்ன?
1. மீர் காசிம் திறமையற்றவர்.
2. மீர் காசிம், தன்னிடம் தளபதியாக இருந்த ஐரோப்பியர்கள் மார்க்கர் மற்றும் சும்ரூ வை அதிகம் நம்பியிருந்ததும்.
3. மீர் காசிம் மற்றும் இதர படைகள் ஐரோப்பியர்களின் நவீன முறைகளுக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை.
Q22. பக்ஸார் போரின் முடிவினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
1. வங்காளம், பீஹார், ஒடிசா ஆகிய பகுதிகள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தது. வங்காளத்தில் நவாப் இருந்த போதிலும், ஆங்கிலேயர் ஆதிக்கமும் ஆட்சியும் நிலவியது.
2. ஆவாத் நவாப், பக்ஸார் போருக்குப் பிறகு, ஆங்கிலேயர் உதவியை எதிர்பார்த்து ஆட்சி நடத்தும் நிலைமை ஏற்பட்டது.
3. முகலாய மன்னர் ஓய்வூதியத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
4. ஆங்கிலேயர்களின் போர்த் திறமை, நவீன தளவாடங்கள் பயன்பாடு வெளிப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் சக்தியும் அதிகரித்தது.
Q23. வங்காளத்தை நவாப்பிடம் இருந்து கைப்பற்றிய போது, ப்ளாசிப் போர் ஆகிய நிகழ்வுகளின் போது வங்காள ஆளுநராக இருந்தவர் யார்?

ரோஜர் ட்ரேக் 1756-1758

Q24. வங்காளம், பீஹார், ஒடிசா ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தவுடன், இந்த பகுதிகளுக்கு வங்காள ஆளுநராக இருந்தவர்களுள் முக்கியமானவர்களும், அவர்களின் காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் குறிப்பிடுக.
ரோஜர் ட்ரேக் ROGER DRAKE – 1756-1758
1. கல்கத்தாவை சிராஜ் உத் தௌலா கைப்பற்றியது.
2. Black Hole Incident என்ற கோர நிகழ்வு;
3. கல்கத்தாவை ராபர்ட் க்ளைவ் மீட்டது.
4. ப்ளாசி போர் (போருக்கு பிறகு ராபர்ட் க்ளைவ் ஆளுநரானார்)
ராபர்ட் க்ளைவ் ROBERT CLIVE – 1758-1760
1. ப்ளாசிப் போரில் சிராஜ் உத் தௌலாவைத் தோற்கடித்து, மீர் ஜாஃபர் ஐ நவாப் ஆக்கியதால், கல்கத்தாவின் மீது ஆங்கிலேய ஆதிக்கம் அதிகரித்தது.
2. ""இரட்டை ஆட்சி"" “dual system of government” முறையை அறிமுகப்படுத்தியவர்.
3. 1760ல் இங்கிலாந்து திரும்பினார்.
வான்சிட்டார்ட் VANSITTART – 1760-1765
1. மீர் ஜாஃபருக்கு பதிலாக மீர் காசிம் வங்காள நவாப் ஆக்கப்பட்டார்.
2. 1763ல் மீர் ஜாஃபர் மீண்டும் நவாப் ஆக்கப்பட்டார்.
3. பக்ஸார் போர் -- 1764;
4. மீர் ஜாஃபர் மறைவு - நஜ்ம் உத் தௌலா வங்காள நவாப் ஆனார்.
5. நஜ்ம் உத் தௌலா உடன் 20.2.1765ல் ஆங்கிலேய உடன்படிக்கை. அதன் படி, ஒரு ஆங்கிலேய ராணுவ அதிகாரி நிரந்தரமாக நியமிக்கப்பட்டார். நவாபின் படைகள் பெருமளவு குறைக்கப்பட்டது.
ராபர்ட் க்ளைவ் ROBERT CLIVE – 1765-1767
1. மே 1765ல் ராபர்ட் க்ளைவ் மீண்டும் ஆளுநராக பதவியேற்றார்.
2. 1765ல் ராபர்ட் க்ளைவ், வங்காள நவாப் நஜ்ம் உத் தௌலா மற்றும் ஆவாத் நவாப் ஷூஜா உத் தௌலா வுக்கிடையில் மும்முனை உடன்படிக்கை.
3. அந்த மும்முனை உடன்படிக்கை உள்ளடக்கியது ----
அ) ஆவாத் பகுதி ஷூஜா உத் தௌலாவிடம் ஒப்படைக்கப்பட்டது;
ஆ) ஆவாத் பகுதியின் அலகாபாத் மற்றும் காரா பகுதிகள் முகலாய மன்னர் ஷா ஆலாமுக்கு கொடுக்கப்பட்டது;
இ) ஒவ்வொருவரும் மற்றவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்;
ஈ) போருக்கு ஈட்டு தொகையாக ஷூஜா உத் தௌலா 50 லட்சம் ஆங்கிலேயருக்குக் கொடுக்கவேண்டும்;
உ) பனாரஸ், காஸிப்பூர், மற்றும் இதர பகுதிகள் ராஜா பல்வந்த் சிங் இடம் தக்கவைக்கப் பட்டது.
ஊ) ஷூஜா உத் தௌலா தனது செலவில் ஒரு ஆங்கிலேய படையை பராமரிக்க வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு வங்காள பகுதி முழுவதும் சுதந்திரமாக வணிகம் புரிய அனுமதிக்கப்பட வேண்டும்.
எ) இந்த உடன்படிக்கைக்கு பிறகு வங்காள நவாப் வங்காளப் பகுதி முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டும், அதற்கு ஈடாக, நவாப்புக்கு 26 லட்சம் வர்டாந்திர ஈட்டுத் தொகை அளிக்கப்பட்டது.
WARREN HASTINGS - 1772-1773 அ) இரட்டை ஆட்சி முறையை நீக்கி, நவாப் ஐ ஓய்வூதியத்தில் நீக்கப்பட்டார்;
ஆ) வங்காள நிர்வாகத்தை முழுமையாக ஏற்றார்;
இ) 1773ல் ஆவாத் நவாப்புடன் உடன்படிக்கை -- கீழ்க்கண்ட நிபந்தனைகளின் கீழ் --
i) முகலாய ஷா ஆலாம் தனது அலகாபாத், காரா மாவட்டங்களை நவாப் வாஸீருக்கு விற்றுவிடவேண்டும்.
ii) முகலாய மன்னர் ஷா ஆலாம் மராத்தியருக்கு துணை புரிந்ததால், ஆங்கிலேயர்களின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டு, அவருடைய பகுதிகள் முழுவதும் ஆவாத் நவாபுக்கு விற்கப்பட வேண்டும், மாறாக, ஆங்கிலெயர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்;
iii) நவாபின் உதவிக்காக நிறுத்தப்பட்டுள்ள படையின் பராமரிப்பு செலவை நவாப் ஏற்க வேண்டும்; பிறகு ராணுவ உதவி தேவைப்படும் போது, அனுப்பப்படும் படைச் செலவுக்கு மாதம் 2.1 லட்சம் நவாப் கொடுக்க வேண்டும்.
Q25. தென் இந்தியாவில் தங்களது வணிகம்/ஆதிக்கத்தை வலுப்படுத்தி ஸ்திரப்படுத்திக்கொள்ள ஆங்கிலேயர்கள மைசூரை நிர்வகித்த இஸ்லாமியர்களுடன் எத்தனை போர்கள் நடத்தினர்?
நான்கு ஆங்கிலேய மைசூர் போர்கள். அவை --
1. முதல் ஆங்கிலேய மைசூர் போர் -- 1766-1769 -- ஹைதர் அலியுடன்;
2. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் -- 1780-1784;ஹைதர் அலியுடன்.
3. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் -- 1790-1792; திப்பு சுல்தானுடன்.
4. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் -- 1799. திப்பு சுல்தானுடன்.
Q26. முதல் ஆங்கிலேய மைசூர் போர் நடக்கக் காரணம் என்ன?
1. ஹைதர் அலி ஆங்கிலேயர்கள இந்தியாவை விட்டு அனுப்பவேண்டினார்;
2. ஆங்கிலேயர்கள் ஹைதர் அலி திறமையையும் அச்சுறுத்தலையும் புரிந்துக்கொண்டு தங்களது ஆட்சிக்கு ஆபத்து என்பதை எதிர் நோக்கினர்.
3. ஆங்கிலேயர்கள், நிஸாம் மற்றும் மராத்தா தங்களுக்கு உள்ள அச்சுறுத்தலை எதிர் நோக்கி கூட்டணி அமைத்து எதிர்த்தனர்.
4. ஹைதர் அலி இந்த கூட்டணியை தகர்த்து, போர் நடத்த துவங்கினார்.
Q27. முதல் ஆங்கிலேய மைசூர் போர் முடிவின் விளைவுகள் என்ன?
1. ஹைதர் அலி தமிழ்நாட்டில் பல பகுதிகளை கைப்பற்றியது மட்டுமின்றி சென்னைக்கு அருகில் 5 கி.மீ வரை வந்தடைந்தார்.
2. ஏப்ரல் 1769ல், ஹைதர் அலிக்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கீழ்க்கண்ட நிபந்தனைகளௌடன் ஏற்பட்டது.
i) இருவரும் போருக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்ப ஒத்துக்கொண்டனர். ஆனால் கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஹைதர் அலி தக்கவைத்துக் கொண்டார்.
ii) வெளி அச்சுறுத்தல்களின் போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது.
iii) கைப்பற்றப்பட்ட மதராஸ் ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
iv) தஞ்சாவூர் மன்னர் ஹைதர் அலியின் நட்பு ராஜ்யமாக நடத்தப்பட வேண்டும்
v) ஆங்கிலேயர்களின் வணிக சலுகைகள் திரும்ப கொடுக்கப்பட வேண்டும்.
Q28. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780-1784) நடக்கக் காரணம் என்ன?
1. இருவருக்கிடையே நிலவிய நம்பிக்கை இல்லாத நிலை மற்றும் மராத்தியர்கள் 1771ல் ஹைதர் அலியைத் தாக்கிய போது ஆங்கிலேயர்கள் உதவி புரியாதது;
2. அமெரிக்க சுதந்திரப் போர் பின்னணியில் ஆங்கிலேயர் மற்றும் ஃப்ரெஞ்ச் இடையே ஏற்பட்ட விரோதப் போக்கு.
3. ஹைதர் அலி எல்லைக்குட்பட்ட, ஃப்ரெஞ்ச் குடியிருப்பு பகுதியான மாஹே வை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியது; British capture of Mahe, a French settlement, within Haider’s territory;
4. 1773ல் ஹைதர் அலி, ஹைதராபாத் நிஸாம் மற்றும் மராத்தியர்களுடன் ஆங்கிலேயர்- களுக்கு எதிராக நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டது.
Q29. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது 1780-1784 ஏற்பட்ட நிகழ்வுகள் யாவை?
1. 1780ல் - ஆங்கிலேய தளபதி பெய்லியை தோற்கடித்து ஆற்காட்டை ஹைதர் அலி கைப்பற்றியது;
2. 1781ல் – போர்ட்டொநோவா என்ற இடத்தில் ஆங்கிலேய தளபதி சர் அயர் கூட் என்பவரால் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்டார்.
3. 1782ல் – ஹைதர் அலி ஆங்கிலேய தளபதி ப்ரெத்வெய்ட் ஐ தஞ்சாவூர் அருகில் தோற்கடித்தார்;
4. 1783ல் – திப்பு சுல்தான், ஆங்கிலேய தளபதி மேத்யூஸ் மற்றும் அவருடைய ஆட்களை பெட்நோர் என்ற இடத்தில் சிறைபிடித்து, ஸ்ரீரங்கப்பட்டினம் அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டனர்.
5. 1784ல் – மங்களூர் உடன்படிக்கை மூலம் போர் நிறுத்தப்பட்டது.
Q30. 1784ல் மங்களூர் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது, உள்ளடக்கம் என்ன?
11 மார்ச் 1784 அன்று திப்பு சுல்தான் மற்றும் மதராஸ் ஆளுநர் மெக் கார்ட்னி ப்ரபு வுக்கு இடையில் கையொப்பமான இந்த உடன் படிக்கைபடி ----
i) இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் போரிடுவதை நிறுத்திக்கொண்டு மற்ற போர்களின் போது உதவி அளிப்பது;
ii) 1770ல் ஹைதர் அலி அளித்த வணிக சலுகைகள் ஆங்கிலேயர்களுக்கு திரும்ப அளித்தல்;
iii) தங்களது பழைய பகுதி நிலைக்கு இரு அணியும் திரும்புதல்;
iv) திப்பு சுல்தான் மீண்டும் கர்நாட்டிக் பகுதியை கேட்காதிருத்தல்;
v) அனைத்து போர் கைதிகளையும் விடுவிக்க திப்பு சுல்தான் ஒப்புக்கொள்ளுதல்;
vi) 1779 வரை காலிகட் பகுதியில் ஆங்கிலேயர்கள் பெற்றுவந்த தொழிற்சாலை சலுகைகள் திரும்ப அளித்தல்.
Q31. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் 1790-1792 நடக்கக் காரணம் என்ன?
இந்தப் போர் திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேய கார்ன் வாலிஸ் ப்ரபுவுக்குமிடையில் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நடைப்பெற்றது:
i) திப்பு சுல்தான் தனது நிர்வாகத்தில் ஏற்படுத்திய நிர்வாக சீர்திருத்தங்களால் ஏற்பட்ட முன்னேற்றங்களை கவனித்து பயந்தனர் ஆங்கிலேயர்கள், நிஸாம் மற்றும் மராத்தா.
ii) திப்பு சுல்தான் தன் எல்லைப் பகுதியை விரிவாக்கம் செய்தது, குறிப்பாக திருவாங்கூர் பகுதியில்.
iii) 1790 ஆங்கிலேயர்கள் ஹைதராபாத் நிஸாம் மற்றும் மராத்தியர்களுடன் திப்பு சுல்தானுக்கு எதிராக நட்புறவு ஏற்படுத்திக் கொண்டது.
Q32. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் 1790-1792 முடிவின் விளைவுகள் யாவை?
1. 1790ல் – திப்பு சுல்தான் ஆங்கிலேய தளபதி மெடோஸ் ஐ தோற்கடித்த போதிலும், ஆங்கிலேயர்களின் போர் நுணுக்கம், அதிக படை வரவு ஆகியவற்றின் காரணத்தால் நிலைமையை ஆங்கிலேயர்கள் சமாளித்தனர். இதற்கிடையில் மலபார் கடற்கரை பகுதிகளில் காலிகட் முதல் மங்களூர் வரை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
2. 1791ல் – கார்ன் வாலிஸ் ராணுவ தலைவராக பொறுப்பேற்றார்.
3. 1792ல் – கார்ன் வாலிஸ் ஸ்ரீரங்கப்பட்டினத்தை, சில தடங்கல்களுக்குப் பிறகு, சூழ்ந்து கொண்டார். இதனால்,
4. 1792ல் – மார்ச் 18, 1792ல் அன்று போர் முடிவில் ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை ஏற்பட்டது.
Q33. 1792 ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின் உள்ளடக்கம் என்ன?
1) இந்த உடன்படிக்கை ஆங்கிலேயர், நிஸாம் மற்றும் மராத்தியர் ஒரு புறமும், எதிர் புறத்தில் திப்பு சுல்தானுக்குமிடையில் ஏற்பட்டது.
2) இதற்கு முன்பு போடப்பட்ட உடன்படிக்கைகள் உறுதிபடுத்தப்பட்டது.
3) திப்பு சுல்தான் தனது பகுதியில் பாதி சரணடைக்க வேண்டும். அது ஆங்கிலேயர், நிஸாம் மற்றும் மராத்தியர் மத்தியில் பங்கு செய்து கொள்ளப்படும். இதனால், திப்பு சுல்தானுக்கு காவேரியின் மேற்கு தெற்கு பகுதியில் சிறிய பகுதிகளே மிகுதியிருந்தது.
4) உடன்படிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள 3.6 கோடி நஷ்ட ஈட்டில், 1.6 கோடியை உடனடியாக திப்பு சுல்தான் கொடுக்கவேண்டும், மீதித்தொகையை மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும்.
5) திப்பு சுல்தானால் கைப்பற்றப்பட்ட அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
6) இந்த நிபந்தனைகள் முடியும் வரை, திப்பு சுல்தானின் இரண்டு மகன்களும் ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
Q34. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் எப்போது, என்ன காரணங்களுக்காக நடைபெற்றது?
மார்ச் 1799 – மைசூரின் திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேய வெல்லெஸ்லி ப்ரபுவுக்கும் இடையில் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நடைபெற்றது:
i) முன்பு நடந்த தோல்விகளுக்காக திப்பு சுல்தான் பழி வாங்க நினைத்தது.
ii) திப்பு சுல்தான் ஃப்ரான்ஸ், அரேபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து உதவிகளை கோரியது;
iii) 1798ல் மங்களூரில் ஃப்ரெஞ்ச் படைகள் வந்திறங்கியது;
iv) திப்பு சுல்தானை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற வெல்லெஸ்லி பிரபுவின் உறுதி.
Q35. நான்காம் ஆங்கிலேய மைசூர் போரின் முடிவின் விளைவுகள் என்ன?
1) திப்பு சுல்தான், ஆங்கிலேய ஸ்டூவர்ட் என்பவரால் செடசீர் என்ற இடத்தில் 1799ல் தோற்கடிக்கப்பட்டார்;
2) 27.3.1799 அன்று மால்வெள்ளி என்ற இடத்தில் ஜெனரல் ஹாரிஸ் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.
3) திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு தப்பிச் சென்று போரைத் தொடர்ந்தார். ஆனால், இந்தப் போரில் தோல்வி கண்டது மட்டுமின்றி அவர் கொல்லவும் பட்டார். இங்கும் அவருடைய தளபடி மீர் சாதிக் மற்றும் பூர்னைய்யா என்ற உதவியாளரும் செய்த சதியும் காரணமாயிருந்தது. மேலும் ஆங்கிலேய கூட்டணிப் படை எண்ணிக்கையில் திப்பு சுல்தானின் படையை விட பல மடங்கு பெரியதாக இருந்தது. திப்பு சுல்தான் மே 4, 1799 அன்று கொலையுண்டார்.
4) இந்தப் போரில் வெல்லெஸ்லி பிரபுவின் தனயன் ஆர்தர் வெல்லெஸ்லியும் பங்கு கொண்டார்.
5) மைசூரின் பெரும் பகுதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. 5 வயதான கிருஷ்ணராஜ உடையார் 3 மன்னராக பதவியேற்கப்பட்டார்.
6) 1831ல் உடையாரின் திறமையற்ற ஆட்சியின் காரணமாக, பெண்டிக் பிரபு நிர்வாகத்தை கெயெடுத்தார்.
7) 1881ல் ரிப்பன் பிரபு ஆட்சியை மீண்டும் உடையார் வம்ச மன்னரிடம் ஒப்படைத்தார். இவ்வாறாக, ப்ளாசி (1757), பக்ஸார் (1764), கர்நாடிக் போர்கள் (1746-1754) மற்றும் நான்கு ஆங்கிலேய போர்களின் முடிவில், வங்காளத்திலிருந்து கிழக்கு கடற்கரையோரம் தொடங்கி மேற்கில் மலபார் கடற்கரைப் பகுதி வரை முழுவதுமாக ஆங்கிலேயர் வசம் ஆயிற்று.
Q36. திப்பு சுல்தானை போரில் தோற்கடிக்க சதி செய்தவர் யார், அவர் செய்த துரோகச் செயல் என்ன?
மீர் சாதிக் -- MIR SADIQ – திப்பு சுல்தானின் ராணுவ தளபதி. போரின் போது, கோட்டையில் ஒரு திறப்பு (உடைப்பு) மூலம் ஆங்கிலேயர்கள் உள்ளே வருவதை தடுக்க செல்லும் போது, இந்த தளபதி தனது பெரும் பகுதியை வழி மாற்றி ஊதியம் பெற அனுப்பிவிட்டார். இதனால் திப்பு சுல்தான் போர் நடத்த படையின்றி, ஆங்கிலேயர்களிடம் தோல்வி கண்டு கொலையும் செய்யப்பட்டார்.