Khub.info Learn TNPSC exam and online pratice

ஆங்கிலேய மராத்திய போர்கள் -- ANGLO MARATHA WARS

Q1. ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையில் எத்தனை போர்கள் நடந்தன?
மூன்று.
1. முதல் ஆங்கிலேய மராத்தா போர் -- 1775-1782;
2. இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போர் -- 1803-1805;
3. மூன்றாம் ஆங்கிலேய மராத்தா போர் -- 1817-1818.

Q2. முதல் ஆங்கிலேய மராத்தா - 1775-1782 - போருக்கான காரணங்கள் யாவை?
1. இந்தப் போருக்கு முக்கியமான காரணம் -- மராத்தியர்களுக்கிடையில் இருந்த ஆட்சியை பிடிக்க நடந்த உள் குழப்பங்கள் -- சவாய் மாதவ் ராவ் + நானா பட்னிஸ் ஒரு புறமும் மறு முனையில் ரகுநாத ராவ் + மாதவ் ராவ் (உறவினர்).
2. இந்த நிலையை பயன்படுத்தி, ஆங்கிலேயர்கள் ரகுநாதராவுக்கு உதவி புரிந்தனர். அதனால் ஆங்கிலேயர்கள் இந்த ராஜ்ய அரசியலில் தங்கள் அதிகாரத்தை பதித்தனர்.
Q3. முதல் ஆங்கிலேய மராத்தா போரில் ஏற்பட்ட நிகழ்வுகள் யாவை?
1. 1776 – மராத்தியர்கள் ஆங்கிலேயரை தாலேகாவ்ன் என்ற இடத்தில் தோற்கடித்தனர்.
2. 1779-1780 – ஆங்கிலேயர்கள் கல்கத்தாவிலிருந்து குஜராத் வரை கால் நடையாக படையெடுத்துச் சென்று, வழியில் மத்திய இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றினர். ராணுவ நடவடிக்கைகளில் இது ஒரு சரித்திர நிகழ்வு.
Q4. முதல் ஆங்கிலேய மராத்தா போர் 1775-1782 முடிவின் விளைவுகள் யாவை?
1. மராத்தியர்களுடன் சால்பாய் என்ற இடத்தில் ஆங்கிலேயர்கள் அமைதி உடன்படிக்கை.
2. மராத்தியர்களின் உதவியுடன், ஆங்கிலேயர்கள், மைசூர் ஹைதர் அலி மீது அழுத்தம் கொடுத்து, அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீண்டும் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க வைத்தனர்.
3. இங்கு தொடங்கியது ஆங்கிலேயர்களின் ""பிளவு படுத்தி ஆட்சியை கைப்பற்றும்"" முறை. அதாவது ஒரு பக்கம் ஆங்கிலேயர்கள் மராத்தியர்களை மைசூர் ஹைதர் அலி மீது அழுத்தம் கொடுக்க செய்து, மறு பக்கம் மராத்தியர்களுடன் நட்புறவு பாராட்டினர். இதனால், அவர்கள் பகுதி அவர்களுக்கு கிடைத்தது மட்டுமின்றி, இருவரையும் சேர விடாமல் செய்து, தங்களை எதிர்கால தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டனர்.
Q5. இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போர் என்ன காரணத்துக்காக எப்போது நடைபெற்றது?
1803-1805. காரணங்கள்:
1. வெல்லெஸ்லி மராத்தா நிர்வாகத்தில்/வம்ச விவகாரத்தில் தீவிரமாக தலையிட்டது;
2. மராத்தா ராஜ வம்ச பல அறிஞர்களின் மறைவு;
3. மராத்திய முக்கிய அதிகாரிகளுக்கிடையிலான உள் குழப்பங்கள்;
4. மராத்திய ஐக்கிய ராஜ்யத்தின் ஒரு அங்கமான பேஷ்வா பாஜி ராவ் 2 ஆங்கிலேயர்களுடன் 1802ல் பசீன் என்ற இடத்தில் ஒப்பந்தம்/உடன்படிக்கை செய்து கொண்டது.
Q6. இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போரின் விளைவுகள் யாவை?
1. 1803ல் ஆங்கிலேயர்கள், சிந்தியா மற்றும் போன்ஸ்லே சேர்ந்த படையை, அஸ்ஸாய் மற்றும் அரகாவ்ன் என்ற இடந்தில் நடந்த போரில் தோற்கடித்தனர்.
2. ஹோல்கர் ராஜ்ய வம்சத்தை தோற்கடிக்க முடியாததால், ஆங்கிலேயர்கள் அவர்களுடன் ராஜ்பூர்காட் என்ற இடத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டனர்.
3. மராத்தியர்களின் மேற்கில் பல பகுதிகளில் கைப்பற்றி தங்கள் நிலையை பலப்படுத்திக் கொண்டனர்.
4. இவ்வாறாக ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம், தெற்கிலிருந்து கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் மிகவும் சக்தி வாய்ந்த்வர்களாக திகழ்ந்தனர்.
Q7. மூன்றாம் ஆங்கிலேய மராத்தா போர் என்ன காரணத்துக்காக எப்போது நடந்தது?
1817-1818 –
1. மராத்தியர்களின் நிர்வாக சுதந்திரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
2. மராத்திய முக்கிய அதிகாரிகள் மீது ஆங்கிலேய குடியிருப்பு வாசிகளால் கொடுக்கப்பட்ட அதிகமான அழுத்தமும் அதிகாரமும்.
Q8. மூன்றாம் ஆங்கிலேய மராத்தா போரின் விளைவுகள் யாவை?
1. பேஷ்வா ஓய்வூதியத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
2. மராத்தா ராஜ்யம் முழுமையாக ஆங்கிலேயர் வசம் வந்து, பாம்பே மாகாணம் உருவாக்கப்பட்டது.
3. சதாராவில், மக்களை திருப்திபடுத்துவதர்காக ஒரு சிறு மன்னராட்சி உருவாக்கப்பட்டது.
4. மராத்தா முக்கிய அதிகாரிகள் ஆங்கிலேயர்களுடம் சேர்ந்து நிர்வாகம் செய்யத் தொடங்கினர். ஆனால் பல பகுதிகள் ஆங்கிலேயர்களுக்கு கை மாறியது.
Q9. 1775-1818 காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள், மராத்தியர்களுடன் போரிலும், உடன்படிக்கைகளிலும் ஈடுபட்டனர். அவ்வாறு ஏற்பட்ட உடன்படிக்கைகள் யாவை?
1. சூரத் உடன்படிக்கை 1775 : பேஷ்வா ஆக விரும்பிய ரகுநாத ராவ் அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான உடன்படிக்கை. இதன் படி-----
அ) ஆங்கிலேயர்கள் பாம்பே அருகில் உள்ள ராணுவ ரீதியாக முக்கியமாக கருதப்பட்ட சால்செட் மற்றும் பாசீன் பகுதிகளை ஆங்கிலேயர்கள் எப்படியாவது கைப்பற்ற விரும்பினர்.
ஆ) பேஷ்வா மாதவ ராவ் 1772ல் மரணம் அடையவே, ரகோபா மற்றும் நாராயண் ராவ் இருவருமே பேஷ்வா ஆவதற்கு போட்டி போட்டனர். இதன் பின்னணியில்
இ) ரகோப ராவ், நாராயண் ராவ் ஐ கொலை செய்து விட்டார்;
ஈ) நானா ஃப்ட்னிஸ் தலைமையிலான மராத்தா ராணுவ அதிகாரிகள், ரகோபா ராவ் மீது கோபம் கொண்டு, தாக்க முயற்சித்த போது, ரகோப ராவ் சூரத் க்கு தப்பிச்சென்று ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார்.
உ) இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு, ரகோபா ராவுடன் 6.3.1775 அன்று, கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டனர்:
a) இதற்கு முன்பு போடப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளும் உறுதியாக்கப்பட்டன.
b) ரகோபா ராவ் பேஷ்வா ஆவதற்கு உதவியாக, 2500 வீரர்கள் கொண்ட ஒரு ஆங்கிலேய படை, மாதம் 50000 ரூ கட்டணத்தில் நிறுத்தப்படும்.
c) ரகோப ராவ் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்களை ஆங்கிலேயர்களிடம் காப்பு ஈட்டாக ஒப்படைக்கவேண்டும்.
d) ரகோப ராவ் சால்செட், பசீன் மற்றும் வேறு நான்கு தீவுகளை ஆங்கிலேயர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
இந்த உடன்படிக்கை, முதல் மராத்தா ஆங்கிலேய போர் நடத்த ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அமைந்தது.
2. புரந்தர் உடன்படிக்கை 1776 -- இந்த உடன்படிக்கையில் கல்கத்தா மற்றும் பம்பாய் ஆங்கிலேய குழுவுகளுக்கிடையில் சிறிது கருத்து வேறுபாடுகளும் இருந்த போதிலும் முடிவில் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் கீழ் இந்த உடன்படிக்கை மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையில் ஏற்பட்டது:
அ) சால்செட் பகுதி ஆங்கிலேயரால் தக்கவைத்துக் கொள்ளப்பட்டது;
ஆ) போர் காப்புத் தொகையாக 12 லட்சம் பேஷ்வா ஆங்கிலேயர்களுக்கு வழங்க வேண்டும்;
இ) குஜராத்தில் ரகுநாதராவ் மற்றும் கேக்வாட் மன்னரால் ஆங்கிலேயர்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.
ஈ) இதற்கு முன் ரகோபா மற்றும் கேக்வாட் மன்னர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் 1739, 1756களில் பேஷ்வா உடன் போடப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் உறுதியாக்கப்பட்டன.
3. வடகாவ்ன் உடன்படிக்கை -- 1779 -- இந்த உடன்படிக்கை சிந்தியா மன்னர் மகத்ஜி சிந்தியா வுக்கும் பாம்பே ஆங்கிலேய தளபதி ஜான் கார்னாக் இடையில் ஏற்பட்டது. நிபந்தனைகள்:
அ) பாம்பே ஆங்கிலேய நிர்வாகம், மராத்திய ரகுநாத ராவு க்கும், ரகோபா வுக்கும் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்று, 1773 முதல் மராத்தியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை திரும்ப அளித்திட வேண்டும்;
ஆ) வங்காளத்திலிருந்து முன்னேறி வரும் ஆங்கிலேய படைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; இந்த நிபந்தனை நிறைவேற்றப்படும் வரை 41000 ரூபாய் காப்புத்தொகையும், இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் (வில்லியம் ஃபார்மர் மற்றும் சார்லஸ் ஸ்டூவர்ட்) பிணையாக மராத்தியர்கள் இடம் ஒப்படைக்க வேண்டும்;
இ) ப்ரோச் பகுதி மராத்திய சிந்தியா வம்சத்திடம் ஒப்படைக்க வேண்டும்;
ஈ) பாம்பே மற்றும் வங்காள ஆங்கிலேய நிர்வாகம் இந்த உடன்படிக்கையை, தளபதி ஜான் கார்னக் தனது அதிகார எல்லையை மீறி இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் என, நிராகரித்து விட்டனர்.
4. சால்பாய் உடன்படிக்கை -- 1782 -- சால்பாய் குவாலியரின் அருகில் உள்ள இடம். இந்த உடன்படிக்கை முதல் ஆங்கிலேய மராத்தா போர் முடிவு ஏற்பட உதவியது. நிபந்தனைகள்:
அ) ஆங்கிலயேர்களால் பிடிக்கப்பட்ட கேய்க்வாட் பகுதிகள் பேஷ்வா வுக்கு வழங்கப்பட வேண்டும்;
ஆ) சால்செட், அதைச் சுற்றியிருக்கும் மூன்று தீவுகள், மற்றும் ப்ரோச் நகரம் ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொள்ளவேண்டியது;
இ) ரகுநாத ராவுக்கு அளித்து வந்த ஆதரவை ஆங்கிலேயர்கள் திரும்பப் பெறவேண்டும்;
ஈ) ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை உடனே நிறுத்த வேண்டும்;
உ) ஆங்கிலேயர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் திரும்ப அளித்தல்;
ஊ) இந்த உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் தங்கள் நிலையையும் எதிர் காலத்தையும் வலுப்படுத்திக்கொண்டனர். ஒரு பக்கம் மராத்தியர்களுடன் நீண்ட கால அமைதி ஏற்படுத்திக்கொண்டனர். மறுபக்கம் மராத்திய கூட்டமைப்பு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சேராதவாறு பார்த்துக்கொண்டனர். இதனால் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் முக்கியத்துவத்தையும் இப்பகுதியில் அதிகப்படுத்தினர்.
5. பசீன் உடன்படிக்கை -- 13.12.1802 -- 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே, மராத்தா ராஜ்யம் தங்களது உட்பூசல், பொறாமை காரணங்களால் வலுவிழக்கத் தொடங்கியது. பேஷ்வா அரசவையில் தௌலத் ராவ் சிந்தியாவும் யேஷ்வந்த் ராவ் ஹோல்கரும் தங்கள் முக்கியத்துவத்துக்காக பூசல், யேஷ்வந்த் ராவ் ஹோல்கர் மாதவ் ராவ் ஹோல்கரின் மகனை கொன்று அவருடைய மகன் கண்டே ராவ் ஐ சிறைப்படுத்தினார். பிறகு, பேஷ்வா பாஜி ராவ் 2, விட்டோஜிராவ் ஹோல்கர் என்பவரை கொன்றார். இதனால் யஷ்வந்த் ராவ் ஹோல்கர் பூனா நோக்கி படையெடுத்தார். சிந்தியா மன்னர் உதவி இருந்தும், பேஷ்வா தோற்கடிக்கப்பட்டார். பேஷ்வா பசீன் சென்று தான் மீண்டும் பதவியமர ஆங்கிலேய உதவி நாடினார். இதனால் ஏற்பட்டதே இந்த உடன்படிக்கை.
இந்த உடன்படிக்கை 13.12.1802அன்று ஏற்படுத்திக் கொண்டதின் மூலம், பேஷ்வா தனது பதவியை தக்க வைத்துக்கொண்ட போதிலும், இதன் மூலம், தனது அதிகாரம், நிர்வாக, மராத்தா மக்கள், மொத்தமாக இந்த ராஜ்யத்தை ஆங்கிலேயர் வசம் ஒப்படைத்து விட்டார். இந்த உடன் படிக்கையின் நிபந்தனைகள்:
அ) வருடம் சுமார் 25 லட்சம் செலவில், 6000 வீரர்கள் அடங்கிய ஒரு ஆங்கிலேய படையை பேஷ்வா பராமரிக்க வேண்டும்;
ஆ) பேஷ்வா எந்த ஒரு வெளிநாட்டவரையும் ஆங்கிலேயர்கள் அனுமதியின்றி பணியில் அமர்த்தக்கூடாது.
இ) பேஷ்வா சூரத் மீது எந்த உரிமையும் கோரக்கூடாது.
ஈ) பேஷ்வா மற்ற ராஜ்யங்களுடனும் எந்த வித உறவும் பேச்சு வார்த்தையும் ஆங்கிலேயர் அனுமதியின்றி நடத்தக்கூடாது.
உ) இந்த உடன்படிக்கைப்படி, பேஷ்வா, 16.12.1802 முதல் ஆங்கிலேய ராணுவத்துடன் தனது ஒரு குதிரைப் படையையும் நிறுத்த வேண்டும்.
ஊ) இந்த உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும், நிர்வாகத்தில் தலையீடும் அதிகமாகி, மேற்கு இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆனார்கள்.
6. ராஜ்பூர் உடன்படிக்கை - 24-12-1805 –
இந்த உடன்படிக்கை மராத்திய யஷ்வந்த் ராவ் ஹோல்கர் மற்றும் ஆங்கிலேயர் இடையில் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் கீழ் ஏற்பட்டது: அ) பண்டி மலைப்பகுதியின் வட பகுதிகள் மீது யஷ்வந்த் ராவ் எந்த உரிமையும் கோரக்கூடாது;
ஆ) எந்த ஐரோப்பியர்களையும் பணியில் அமர்த்தக்கூடாது;
இ) மேவார் மற்றும் மாளவா பகுதியில் ஹோல்கர் வம்சத்தின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் தடை ஏற்படுத்தக் கூடாது மற்றும் சம்பல் தெற்கு பகுதியில் எந்த விதத்திலும் தலையிடக்கூடாது;
ஈ) தபதி ஆற்றின் தென் பகுதி ஹோல்கர் வம்சத்திடம் ஒப்படைக்க வேண்டும்;
உ) 2.2.1806 அன்று ஆங்கிகிலேயர்கள் பண்டி மலைப்பகுதியின் வட பகுதியை ஒப்படைத்தனர்.
இந்த உடன்படிக்கை மூலம் இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போர் முடிவடைந்து, ஹோல்கர் ஆங்கிலேயர் வசம் முழுவதுமாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
7. தேவ்காவ்ன் உடன்படிக்கை -- 17.12.1803 – மராத்திய ரகுஜி போன்ஸ்லே மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையில், இரண்டாம் ஆங்கிலேய மராத்தா போரின் இடையில் (1803-1805) ஏற்பட்டது. இதன் உள்ளடக்க நிபந்தனைகள்:
அ) ஒரிஸ்ஸாவின் கட்டாக் மற்றும் பாலசூர் பகுதிகளை ஆங்கிலேயருக்கு ஒப்படைக்க வேண்டும். இதனால் ஆங்கிலேயர்கள் கிழக்கு கடற்கரையின் மொத்த பகுதியையும் -- மதராஸ் முதல் கல்கத்தா வரை -- தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
ஆ) ரகுஜி போன்ஸ்லே தனது அரசாங்கத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டவரையும் பணியிலிருந்து நீக்கவேண்டும்;
இ) ஆங்கிலேயர் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டோனை தங்கள் அரசவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஈ) மராத்திய ஐக்கிய கூட்டணியில் இருக்கும் அனைத்து சக மன்னராட்சிகளுடன் போடப்பட்ட உடன்படிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
உ) ஆங்கிலேய நிர்வாகம் மட்டுமே அனைத்து சர்ச்சைகளிலும் தலையிட்டு தீர்த்து வைக்கும்;
ஊ) ரகுஜி போன்ஸ்லே மற்றும் அவருடைய வாரிசுகள் மற்ற ஐக்கிய மராத்திய மன்னர்களுடன் உறவை துண்டிக்க வேண்டும்.
8. சூர்ஜி அர்ஜன்காவ்ன் உடன்படிக்கை – 30.12.1803 – தௌலத் ராவ் சிந்தியா மன்னர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கிடையில், கீழ்க்கண்ட நிபந்தனைகள் கீழ் ஏற்பட்டது:
அ) யமுனா விலிருந்து கங்கை வரை அனைத்து பகுதிகளையும் ஆங்கிலேயருக்கு ஒப்படைக்கவேண்டும்;
ஆ) டெல்லி, ஆக்ரா மற்றும் ராஜபுத்திர பகுதிகள் மீது தங்கள் ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்;
இ) ஆங்கிலேயர் ஜான் மால்கம் ஐ தனது அரசவையில் மந்திரி அந்தஸ்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்;
ஈ) பேஸ்வா உடன் போட்ட பசீன் உடன்படிக்கையே ஏற்க வேண்டும்;
உ) ஆங்கிலேய ஆதிக்கத்தை பூரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்;
ஊ) எந்த வெளி நாட்டவரையும் பணியில் அமர்த்தக்கூடாது;
எ) இந்த நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், ஆங்கிலேயர்கள் சிந்தியா ராஜ்யத்துக்கு பாதுகாப்பு அளிக்கவெண்டும், மற்றும் அவருடைய பகுதிகளை திரும்ப கொடுக்க வேண்டும்.
ஏ) சிந்தியா ஆங்கிலேயரின் ஆறு படைகளை தன் செலவில் பராமரிக்கவேண்டும்.
9. பூனா உடன்படிக்கை - 1817 – இந்த உடன்படிக்கை ஆங்கிலேயருக்கும் (ஹேஸ்டிங்ஸ் பிரபு) சிந்தியாவுக்கும் இடையில், குஜராத்தின் மேற்கு பகுதியில் புரட்சி மேற்கொண்டுவரும் பிந்தாரி இனத்தவரை அடக்குவதற்காக முக்கியமாக போடப்பட்டது. இந்த உடன்படிக்கை உள்ளடக்கியது:
1. சிந்தியா மன்னர், பிந்தாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆங்கிலேயருக்கு உதவ வேண்டும் மற்றும் அவர்களுடன் இனி எந்த உறவும் ஏற்கக்கூடாது.
2. சிந்தியா 5000 குதிரைப்படை வீரர்களை, பிந்தார்களுக்கு எதிராக போராட, கொடுத்து உதவ வேண்டும். மேலும் ஆங்கிலேயர்களின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டும்.
3. ஹண்டி மற்றும் ஆசிர்கார் கோட்டைகளுள் ஆங்கிலேயர்கள் எளிதில் சென்று வரவும் உதய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா மற்றும் பந்தி ஆட்சியாளர்களுடன் சுதந்திரமாக பேச்சு வார்த்தை நடத்த உரிமை ஆங்கிலேயர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்த உடன் படிக்கையால் சிந்தியா வம்சம் ஆங்கிலேயர் முன் ஒரு பார்வையாளர், வேடிக்கையாளர் நிலையில், மூன்றாம் ஆங்கிலேய மராத்தா போரில் ஈடுபட்டனர்.
10. மாண்ட்சார் உடன்படிக்கை – 1818 – 6.1.1818 – மராத்திய மன்னர் மல்ஹர் ராவ் ஹோல்கர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கிடையில் மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போரின் போது கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் ஏற்பட்டது:
அ) மல்ஹர் ராவ் ஹோல்கர், ஆங்கிலேயர்கள் பிந்தாரி தலைவர் நவாப் அமீர் கான் உடன் பகுதிகள் கொடுப்பதைப்பற்றிய ஒப்புதலை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆ) கோட்டா மன்னர் ராஜா ஸாலிம் சிங் க்கு வாடகைக்கு விடப்பட்ட நான்கு பகுதிகளை (பர்கானா) அவருக்கே கொடுக்க வேண்டும்.
இ) உதய்ப்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, பண்டி மற்றும் கரௌலி பகுதி வருவாயகள ஆங்கிலேயருக்கு கொடுக்கவேண்டும்.
ஈ) பண்டி மலையின் வட பகுதியில் உள்ள பகுதிகளை ஆங்கிலேயருக்கு ஒப்படைக்க வேண்டும்.
உ) சத்புரா மலைகளின் தெற்கு பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஊ) ஹோல்கருக்கு உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒரு ஆங்கிலேய படை நிறுத்தப்படும்;
எ) ஆங்கிலேயர் அனுமதியின்றி எந்த ஐரோப்பியரையும் பணியில் அமர்த்தக்கூடாது.
ஏ) அரசவையில் ஒரு ஆங்கிலேய மந்திரி நியமிக்கப்படுவார்.
இந்த நிபந்தனைகளுக்கு பதிலாக, ஆங்கிலேயர்கள், பேஷ்வா மற்றும் அவருடைய வாரிசு எவரும், மல்ஹர் ராவ் மற்றும் அவருடைய வாரிசுகளுக்கு எதிராக எந்த தீங்கும் விளைவிக்காத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
Q10. பிந்தார் போர் - 1817-1818 என்பது என்ன?

1817-1818 காலத்தில், ஆப்கானிஸ்தானின் பிந்தார் பழங்குடி இன தலைவர்களுக்கும், (இவர்கள் பத்தான் இனத்தவருடன் நட்பு கொண்டவர்களாக இருந்தனர்) ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போர். பிந்தாரிகள் மெதுவாக பல பகுதிகளை கைப்பற்றி, ஆங்கிலேயர்- களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தனர். கரீம் கான், வாசில் முகம்மது மற்றும் சிட்டு என்ற தலைவர்களால் ஆளப்பட்டு வந்தனர் இந்த இனத்தவர். பிந்தாரிகளுக்கு எதிரான இந்த போரே, பிறகு ஆங்கிலேய மராத்தா போர் 3 என அழைக்கப் பட்டது, காரணம் பேஷ்வா, ஹோல்கர் மற்றும் போன்ஸ்லே மன்னர்கள் பிந்தாரிகளுக்காக போரில் ஈடுபட்டனர். இந்த போரில் அனைவரும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகள் முழுவதும் ஆங்கிலேயர்கள் வசம்  எதிர்ப்பு இல்லாத பகுதியானது. ஆங்கிலேயர்களுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமை ஏற்று, ஒரு வருட காலத்தில் இந்த போரை முடித்து அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார்.